• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புது மங்கள சௌபாக்யம் - 20

STN - 50

New member
Staff member
இப்பொழுதெல்லாம் அடிக்கடி வாக்குவாதம் என்ற பெயரில் வேலைக்கு தனியே வந்து செல்வது வாடிக்கையாக்கி போனது வெண்ணிலாவிற்கு அதனால் அவள் வந்ததும் தெரியவில்லை மதிய நேரம் விடுப்பு எடுத்து வீட்டிற்கு திரும்ப வந்ததும் தெரியவில்லை. மாலை நித்திக் வேலை முடிந்து வீட்டிற்கு வர வாசலில் ஏற்கனவே வெண்ணிலா ஸ்கூட்டி நிற்பதை கண்டவன் யோசனையாகவே உள்ளே சென்றான்..

அப்பொழுது வீடே ரெண்டாக இருந்தது போல பொருள்கள் எல்லாம் திக்குக்கு ஒன்றாக சிதறிக்கிடக்க நித்திகை பார்த்த யசோதா,

"தம்பி இவ உனக்கு வேண்டாம் டா.. தயவுசெஞ்சு வெளில போக சொல்லு!!"

என்று அழுகையுடே சொல்ல, தாயின் அழுகையை கண்டவனுக்கு நெஞ்சேமெல்லாம் கொதித்தது.. என்ன நடந்தது என்று விசாரிக்கும் மனநிலை கூட அவனுக்கு இல்லை.. என்ன பண்ணாலும் விட்டுக் கொடுத்து போ அவ சின்ன புள்ள அப்படித்தான் இருப்பாள் என்று சொல்லும் அன்னை இன்று அவர்களாகவே இப்படி ஒரு வார்த்தை சொல்கிறார்கள் அதுவும் அழுது கொண்டே என்றால் என்னதான் நாடகமாகவே இருந்தாலும் எப்படி இவளால் இப்படி ஒரு காரியத்தை செய்ய முடிந்தது என்று ஆதங்கமாக இருந்தது..

"அம்ம்மா!! அழுகாதம்மா.. உன் அழுகைய பார்க்கவா நான் இன்னுமும் உயிரோட இருக்கேன்.." என்றவன் அன்னை கண்ணை துடைத்து வெண்ணிலாவை நிமிர்ந்து பார்க்க அவளோ தன் பெட்டியுடன் வெளியே வந்தாள்.. கண்கள் முழுக்க திமிரும், ஆணவமும் கொண்டு யசோதாவை ஒரு புழு போல பார்த்துவிட்டு வெளியே செல்ல ஒரு மில்லி மீட்டர் அளவு வெண்ணிலா கண்கள் நித்திக் சரண் கண்களை தீண்டி மீண்டது.. அந்த பார்வையில் இருந்தது பெயர் தான் காதலா?? தீராத நேசமா?? இல்லை பிரிவின் துயரா??

அவள் வெளியே கிளம்ப உணர்வற்று வந்து அமர்ந்த நித்திக்கின் கைகளை பிடித்துக்கொண்ட யசோதா,

"அவ என்னை ஏதாச்சும் பேசிருந்தா பரவால்லப்பா. உன்ன பேசிட்டா.. ஒரு அம்மாவா தான் பையன பத்தி தெரிஞ்சுக்க கூடாத அத்தனையும் பேசிட்டா.. அதான் கோவத்துல.."

"ப்ச்!! அப்புடி என்ன பேசுனா??" வெண்ணிலா வெளியே போனதும் உயிரின் பாதி சென்ற நிலை தான் அவனுக்கும்..

"அது... உன் ஆண்மைல எதோ குறைவாம்.. அதான் கூடவே இருந்த மாமன் பொண்ணு சாருவ விட்டுட்டு வெளியில நான் பொண்ணு தேடுனேனாம் அதெல்லாம் மறைச்சு நீ லவ் பண்ணியாம்.. நான் உடம்பு முடியாத நாடகம் ஆடி அவங்க வீட்லேர்ந்து அவள பிரிச்சு உன்ன கல்யாணம் பண்ண வச்சோமாம்.."

வெண்ணிலா மதியம் கடுப்பாக வீட்டிற்கு வந்தது சாப்பிடுகிறாயா என்று கேட்ட தன்னை இஷ்டத்திற்கு வார்த்தைகளால் வெளுத்து வாங்கியது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி உடைத்தது கையில் ஏதோ மருத்துவ ரிப்போர்ட்டை வைத்து எனக்கு முன்னாடியே உன்னை பற்றி அசிங்கமாக அவதூறாக பேசியது திட்டம் போட்டு அவள் வாழ்க்கையை கெடுத்ததாக கூறிய பலி போட்டது என்று ஒன்று விடாமல் அத்தனையும் கூறிவிட்டு அவன் முகத்தை பார்க்க, அவனோ விரக்தியாக சிரித்தான்..

"தம்பி.." இந்த துயரத்தில் கூட புன்னகைக்க முடியுது எனில் மகன் மனநிலைக்கு எதுவும் ஆகிவிட்டதோ என்று பதறியவரை..

"நீங்க சொன்னிங்களேமா! நான் சாருவ கல்யாணம் பண்ணிக்கிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் எங்க குழந்தை ஊனமா பிறந்திட்டா இவங்க அப்பன் ரத்தம் தான இவனுக்கும் ஓடுது கண்டிப்பா சாருவ கஷ்டப்படுத்துவான் அதனால சொந்தத்துக்குள்ள கல்யாணம் வேணாம்னு சொன்னீங்களே அத விட என் பொண்டாட்டி நான் ஆம்பளையே இல்லன்னு சொல்லிட்டு போனது எனக்கு வலிகலம்மா.."

என்றவன் யசோதாவை பார்க்க அவரோ அமைதியாக நித்திகை பார்த்தார்..

"தம்பிஈஈஈ..."

இப்போதும் யசோதாவுக்கு வார்த்தை வர மறுத்தது அன்று தான் பேசிய வார்த்தையின் வீரியமும் அதனால் பாதிக்கப்பட்ட மகனின் மனதும் புரிந்தது.. இப்போது கூட தான் அவசரப்பட்டு விட்டோமோ, மருமகளை வெளியே அனுப்பி விட்டோமோ இதை வேறுவிதமாக பேசி இருக்கலாமோ என்று யோசித்தவருக்கு தானே போய் அவளை கூட்டி வரலாமா என்ற எண்ணம் தான்..

"பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்கம்மா.."

என்றவன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்..

நித்திக் அறைக்குள் வந்ததுமே அவனின் நினைவுகள் இன்று காலை தனக்கு வந்த போன் காலுக்கு சென்றது..

"ஹலோ!!" புது எண்ணிலிருந்து வந்த விடாத அழைப்பில் சலிப்பாக எடுத்து காதில் வைத்தான் நித்திக்.. ஒரு பெண்ணின் குரல் கேட்டதும் அது யாரென்று தெரிய பதறிவிட்டான்..

"பப்பூ என்னாச்சுடா?? புது நம்பரில் இருந்து கூப்பிட்டிருக்க உன் நம்பர் என்ன ஆச்சு??"

"ஹாஹா மாமா!! நீங்கதான் ஒரு வாரமா என் நம்பர்ல இருந்து கூப்பிட்டா எடுக்க மாட்டேங்கிறீங்களே??"

"அது.. சாரி டா.. வேல டென்ஷன்.."

"வேல டென்ஷனா இல்ல வேற டென்ஷனா மாமா??"

"அதெல்லாம் ஒன்னுலடா.."

"பக்கத்து வீட்ல தான் மாமா எங்க அப்பாவும் அம்மாவும் இருக்காங்க உங்க வீட்டு சத்தம் தெருவுக்கே கேக்குது அந்த அளவுக்கு பிரச்சினையா போயிட்டு இருக்குன்னு சொன்னாங்க.."

"ஆமாடா!! அதானே நம்ம பிளான்.. அவ பிரச்சனை பண்ணி வீட்டை விட்டு போயிட்டா அடுத்து நம்ம கல்யா..." முழுதாக முடிப்பதற்குள் நித்தித் தொண்டையில் எதுவோ அடைக்க,

"சொல்லு மாமா நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமா அந்த வார்த்தையே உன்னால சொல்ல முடியல எப்படி மாமா என்னை கல்யாணம் பண்ணிப்ப?? "

"பப்பூஉ.." அதிர்ந்தான் நித்திக்..

"சொல்லு மாமா!! அத்தைக்காக மட்டும் தான் நீ அவங்கள கல்யாணம் பண்ணியா??"

"ஆ.. ஆமா."

"என் மாமாக்கு பொய் சொல்ல கூட தெரியுமா??"

"ப்ச்!! நான் வைக்குறேன்.."

"எனக்கு வெண்ணிலா புருஷன் நித்திக் வேண்டாம் மாமா.."

பலத்த அமைதி இருபுறமும்,

"நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதிலே சொல்லலையே மாமா.. அத்த எடுத்த அதே ஆயுதத்தை நான் எடுக்கிறேன்னு சொன்னப்ப நீ என்னை தடுத்தியே மாமா ஏன்??"

"அது..."

"சொல்லு மாமா விஷம் போட்ட ஒரு பாட்டில்ல தேனை ஊத்தி வச்சு நான் வாயில குடிச்சிட்டு சாகுற மாதிரி நடிக்கிறேன் நீ என்னை கொண்டு ஹாஸ்பிடல் சேர்த்து உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி அத்தைய சரிகட்டி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.. அப்புறம் நமக்கு ஒரு குழந்தை நல்லபடியா பிறந்து நம்ம சந்தோஷமா வாழ்வதை பார்த்தாங்கன்னா அத்தை படிப்படியா மனசு இறங்கிடுவாங்க இதுதான மாமா நான் சொன்னேன்.. அப்போ நீ என்ன சொன்ன மாமா??"

"பப்பூ.."

"ஹான்!! அப்போ நீ அம்மாவை ஏமாத்த என்னால முடியாதுன்னு சொன்ன?? அப்போ அந்த ஒப்பந்தத்து பேருல வெண்ணிலாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இப்ப சண்டை போடுற மாதிரி நடிச்சு உங்க அம்மாவை வெறுக்க வச்சு அவங்கள வீட்ட விட்டு அனுப்பி புரியவைக்கலாம்னு நீங்க போட்ட திட்டத்தில் மட்டும் உங்க அம்மாவ ஏமாத்தலையா மாமா??"

சில பல நாட்களாக அழுது அழுது கரைந்த சாருலதா இன்று அழுகாமல் திடகாத்திரமாக தெளிவாக கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவனால் பதில் சொல்லவே முடியவில்லை..

"உன்னை கேள்வி கேட்க எனக்கு தகுதியே இல்ல மாமா இப்ப நான் கேக்குற கேள்வி எதுவும் உனக்கில்ல உன் மனசுக்கு.. உன் மனச தொட்டு சொல்லு.. உன் மனசுல தோழியா, காதலியா, பொண்டாட்டியா யார் இருக்கான்னு??"

"பப்பூ ப்ளீஸ்.."

"எனக்கு பேசணும் மாமா!! நான் என்னோட நித்திக் மாமா வாழ்க்கைக்காக பேசுறேன்.. பேசுவேன்.. கூட பொறந்த தங்கச்சி, பெத்த பொண்ணு, பேத்தியா பார்க்க வேண்டிய குழந்தைய கூட இருக்கிறவங்களே பாலியல் துன்பம் படுத்துற காலத்துல எத்தனையோ நாள் உன் கூட நான் தனியா இருந்திருக்கேன் என்னைக்காவது பாதுகாப்பு இல்லாத மாதிரி என்னை உணர வச்சுருக்கியா மாமா நீனு??. என்னைக்காச்சும் மாமா பொண்ணு தானே கட்டிக்க போறவ தானேன்னு அட்வான்டேஜ் எடுத்திருப்பியா இல்ல அசிங்கமா ஒரு வார்த்தை பேசி இருப்பியா?? நீ நல்லவன் மாமா நீ நல்லாருக்கனும்.. நீ ஆசைப்பட்ட எல்லாமே கிடைக்கணும்.."

நித்திக் அந்த பக்கம் சற்று விசும்பவே ஆரம்பித்துவிட்டான்.. உண்மை தானே வெண்ணிலா தன் ஆழ் மனதில் வந்து தங்கியத்தை அவன் அறிவானே!! பதின் வயது பையனாக கல்லூரி சென்று வருகையில் கொட்டும் மழை இரவில் ஒரு காபி ஷாப்பில் இவன் மழைக்காக ஒதுங்க அங்கு ஒருத்தி சிரிக்கும் சிம்போனி இசையில் இவன் கண்கள் அந்த பக்கம் பார்க்க மின்னல் வெட்டும் ஒளியில் தேவதையாக நித்திக் கண்ணை ஈர்த்தாள் முதல் பார்வையில் வெண்ணிலா..

மழை சற்று மட்டுப்பட தோழிகளுடன் கிளம்பிய அவளை எங்கு சென்று தேடுவது என்று புரியாத நாளில் மீண்டும் இதேபோல கொட்டும் மழையில் சேற்றுக்குள் நித்திக் வண்டி சிக்கிக்கொள்ள அந்த பக்கம் வந்தார்கள் வெண்ணிலா, சரண்யா, அபிஷேக்..

"ஹே!! அங்க பாருடி வண்டி மாட்டிக்கிச்சு.. ஹெல்ப் பண்ணுவோம் வா.."

" நமக்கு எதுக்கு நிலா தேவையில்லாத வேலை அதுவும் யாருமே இல்லாத இடத்தில் இந்த மாதிரி ஹெல்ப் பண்றதெல்லாம் ரிஸ்க்.. "

" ஏய் அபி எரும ஒரு பொண்ணு நானே ஹெல்ப் பண்ணலாங்கறேன் பையன் நீ இப்படி சொல்ற?? "

" அடியே பையன் நான் மட்டும் தனியா வந்து இருந்தா என் பணம் மட்டும்தான் போகணும் ஆசால்டா நின்னு அவனுக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேன் பொண்ணுங்க நீங்க வேற இருக்கீங்களா உங்கள வச்சுட்டு எப்படி ஹெல்ப் பண்றது?? "

" இவன் தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டுப் போயிட்டான்னு நினைக்கிறேன் அவ்வளவு சீன் எல்லாம் இல்ல வாடா.. "

என்றவர்கள் ஹெல்ப் பண்ண நித்திக், அபிஷேகிற்கு நன்றி கூறி வண்டியை எடுக்க,

"என்னவோ சொன்ன அவரு பாரு நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல இருக்குறத கூட கண்டுக்கல சச் அ ஜெம்ல.."

என்ற வெண்ணிலாவின் குரல் அன்று போல இன்றும் நித்திகிற்கு நன்றாக அடையாளம் தெரிய சைடு மிரரில் போகும் வெண்ணிலவை பார்த்துக் கொண்டே தன் வீட்டிற்கு சென்றான்..

முதல் நாள் அழகாக தெரிந்தவள் இன்று நல்ல குணமாகவும் நித்திக் மனதை கவர்ந்தாள்.. இப்படியாக நாட்கள் செல்ல இவன் புதிதாக சேர்ந்திருக்கும் வங்கிக்கு இன்டெர்வியூக்கு மூன்று பேரும் வர, நித்திக்கிற்கு இவர்கள் மூவரையும் நன்றாக அடையாளம் தெரிந்தது மூவரில் வெண்ணிலா மட்டுமே முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க,

"இதுக்குதான் ஒழுங்கா படிங்க கொரியன் சீரிஸ் பாக்காம.. அப்புடின்னு சொன்னேன்.. இப்ப நீங்க மட்டும் இதுல பாஸ் ஆகல நானும் இங்க வேலைக்கு சேர மாட்டேன்.."

என்றவள் குரல் நித்திக் கேட்க அடித்துப்பிடித்து அதே சமயம் வெளியே காட்டிக்கொள்ளாமல் அடுத்த கட்ட தேர்வில் வென்றதாக மூவரையும் கொத்தாக தூக்கி பணியில் அமர்த்தினான்.. அன்றிலிருந்து வெண்ணிலா பார்க்காத நேரம் பார்வையில் அவளை திருட எங்கே தன் மனம் அவளின் பாதத்தில் மண்டியிட்டு விடுமோ என்ற பயத்தில் அவளை முறைத்துக்கொண்டே திரிந்தவன் அவளின் செல்ல சிடுவன் ஆனான்..

"ஹலோ மாமா லைன்ல இருக்கீங்களா??"

"இ.. இருக்கேன் டா.."

"உங்க மனசுல வெண்ணிலா இருக்குறது எனக்கு எப்புடி தெரியும்ன்னு யோசிக்குறீங்களா??"

அந்த பக்கம் பதிலே வரவில்லை..

"சின்னபிள்ளையிலிருந்து உங்களை சுத்தி நடக்குற எல்லாத்தையும் வந்து என்கிட்ட சொல்லுவீங்களே அப்படித்தான் பார்க்ல வச்சு நம்ம காதலிச்சதா ஒரு பெரிய கட்டுக் கதையை வெண்ணிலா கிட்ட சொன்னேன்னு வந்து சொன்னீங்கல.. அப்போ தான் மாட்டுனீங்க.. "

என்றவள் கிளுக்கி சிரிக்க இப்போது எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கடந்த காலங்களை நினைக்கும் வாலிப நித்திகாக தன் காதலை அவனே ரீவின் செய்து பார்த்துக்கொண்டிருந்தான்..

"நம்ம ரெண்டு பேரும் கிஸ் பண்ண வந்தோம்னு சொன்னதுக்கே அவ மூஞ்சில ஈ ஆடல எவ்வளோ பொசசிவானா தெரியுமானு நீங்க அவ்வளவு சந்தோஷமா குதிச்சு குதிச்சு சொன்னிங்களே அப்போ அந்த நிமிஷம் உங்க கண்ணுல நான் வெண்ணிலாவுக்கு வெண்ணிலாவோட பொசசிவ் தாண்டி உங்களுக்கும் அவளுக்குமான காதல தான் மாமா பார்த்தேன்.. "

அந்த நாளை நினைத்தவன் இன்றும் அதேபோல முறுவலிக்க,

"என்னைக்கு மொத மொதல்ல ஆஸ்பத்திரில உங்களோடு சேர்த்து வச்சு நான் பார்த்தேனோ அன்னைக்கே எனக்கு ஏதோ தப்பா தான் தெரிஞ்சுச்சு ஏன்னா அவங்க பார்வைல எந்த கள்ளம் கபடமும் இல்லை ஆனால் உங்க பார்வை முழுக்க முழுக்க அவங்க மேல கள்ளத்தனமா காதலா பதிஞ்சத நான் பார்த்தேன் அதுக்கப்புறம் உங்களுக்குள்ள நடக்குறதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லி நீங்க எக்ஸ்சைட் ஆனது எல்லாத்தையும் கணக்கு போட்டா கன்ஃபார்மா உங்க மனசு உங்ககிட்ட இல்ல அவங்க கிட்ட இருக்குன்னு எனக்கு தெளிவா புரிஞ்சுது மாமா.."

"சாரி டா பப்பூ!!" உள்ளே போன குரலில் நித்திக் பேச,

"எதுக்கு மாமா??"

"உன்ன ஏமாத்துனதுக்கு??"

"என்னை ஏமாத்துனீங்களா என்னது கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி வாக்கு கொடுத்து இருக்கீங்களா இல்ல காதலிக்கிறேன்னு என்னைக்காவது என்கிட்ட சொல்லி இருக்கீங்களா இல்ல மத்த காதலர்கள் மாதிரி கண்டதும் பேசி இருக்கீங்களா??"

"என்ன இருந்தாலும் உன்னோட ஆசைய என்னால நிறைவேற்ற முடிலையேடா.."

"பாத்தீங்களா இதுதான் என் நித்திக் மாமா அவருக்கு அவரோட செல்ல சாரு பப்பூ கேட்ட அத்தனையும் கை மேல கொடுத்தே ஆகணும்.. வயசுக்கு வந்த காலத்துல உங்களை விரும்புகிறேன் மாமா என்று வந்து நிக்கிறா அவளை எந்த விதத்திலும் சங்கடப்படுத்தாம நான் என் மனசுல யாரு இருந்தா என்ன எதுவும் நினைக்காம என்னைய தூக்கி அப்படியே அவகிட்ட கொடுத்தாகணும் அவ்வளவுதானே மாமா.. "

அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் நித்திக்..

"உங்களுக்கு என் மேல இருந்ததுக்கு பேரு காதல் இல்லை எனக்கு உங்க மேல வந்ததுக்கு பேரும் காதல் இல்லை அம்மா அப்பாவே செய்ய யோசிக்கிற எந்த விஷயத்தையும் தயங்காம எனக்காக என் நித்திக் மாமா செய்வார் எனக்காக அவர் இருக்காரு நான் யோசிச்சது உரிமை அதை ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் செய்யணும் இல்ல ஒரு மாமனா நீங்க காலத்துக்கும் எனக்கு செய்வீங்க இது அப்போ புரில ஆனா இப்போ புரியுது மாமா.."

"சாரும்மா!!"

"இந்த உலகத்திலேயே அதிக நாட்கள் கூடவே இருக்கிற ரிலேஷன்ஷிப் எதுன்னு கேட்டா எல்லாரும் கண்ணை மூடிக்கிட்டு ஒன்னு அம்மா அப்பான்னு சொல்லுவாங்க இல்லனா அவங்க லைஃப் பார்ட்னர் சொல்லுவாங்க ஆனா இது ரெண்டுத்தையும் தாண்டி இன்னொரு ரிலேஷன்ஷிப் அனாமத்தா லைப் முழுசும் நம்ம கூடவே வரும் அது யாருன்னு தெரியுமா மாமா?? "

"இல்ல டா.."

"அதுதான் கூட பிறந்தவங்க.. நான் அந்த ஸ்தானத்தில் தான் உன்னை நினைத்து இருப்பேன் போல மாமா நமக்கு முறைன்னு இருக்கறதுனால கல்யாணம் தீர்வுன்னு நினைச்சுட்டோம்.. உன் கையால என் கழுத்துக்கு தாலி ஏறி இருந்தாலும் உன்னை நான் புருஷனா நினைச்சு பார்த்திருப்பேன்னான்னு தெரில மாமா.. நம்ம இப்புடியே இருந்துடுவோம் மாமா.. எனக்கு என் மாமனா மட்டுமே நீ போதும்.."

என்றவள் குரல் இப்போது கமுற,

"என் பப்பூ காதலன் பேர் என்னவோ?"

குறும்பாக நித்திக் கேட்க,

"மாமா!!" இப்போது அதிர்வது சாருலதா முறையாயிற்று..

" உன் மனசுல நான் இருந்தது ஒரு கூட பிறந்த சகோதரனா மாமாங்குற உறவா மட்டும் தான் அப்படிங்கிறத நீ யோசிச்சு இருக்கணும்னா அப்போ உன் மனசுக்குள்ள வேற யாரோ வந்து காதலனுகான இடத்தை சுட்டி காட்டிருக்கணும்னு தானே அர்த்தம் பப்பூ.. "

"ஹ்ம்ம் மாமா.." செல்லமாக சிணுங்கினாள்..

"பாருடா என் புள்ள வெட்க படுத்து.. சொல்லு யாருன்னு.."

" அது நான் இங்கே காலேஜ் படிக்கும்போது என்கூட படித்த பையன் தான் பிரண்டா தான் பழகுனோம்.. திடீர்னு வந்து ஒரு நாள் ப்ரொபோஸ் பண்ணாரு நான் உன்ன அப்படி பாக்கல அப்படின்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் அவர்கிட்ட பிரண்டா பேசுவதை கூட நிப்பாட்டிட்டேன் ஆனா இப்ப நான் இங்க காலேஜ்க்கு இங்க ஊரு மாத்தி வந்ததும் எனக்காக அவரும் இந்த காலேஜ் வந்து சேர்ந்திருக்காரு அது என் மனச கொஞ்சமே கொஞ்சமா அசச்சிருச்சு மாமா.. "

"கொஞ்சமே கொஞ்சமா அசச்சதுக்கே இவ்ளோ தெளிவா??"

" அது... எனக்காக தான் வந்தாரு ஆனாலும் மறுபடியும் காதல்னு எந்த தொந்தரமும் பண்ணல நான் அன்னைக்கு சொன்னதுல இருந்து அதனால அவரோட கண்ணியத்துக்காக அவர் காதலை ஏற்றுக்கிறதுல தப்பு இல்லன்னு நினைக்கிறேன் மாமா.. "

"அப்போ முடிவே பண்ணிடீங்க??"

" மாமா நான் என்னைக்கு நானா முடிவெடுத்து இருக்கேன் நான் பையனோட விவரம் எல்லாம் உன்கிட்ட சொல்றேன் நீ விசாரிச்சுட்டு உனக்கு ஓகேன்னு சொன்னாதான் நான் சம்மதம் கூட சொல்லுவேன் மாமா.."

" பப்பூ முன்னாடி எப்படியோ ஆனா இந்த பப்பூ இன்னைக்கு பேசுன பேச்சு பார்த்து எனக்கு முழு நம்பிக்கை இருக்குது உன்மேல. நீ ஒரு பையன தேர்ந்தெடுத்துற அப்படின்னா அவன் கண்டிப்பா நல்லவனா தான் இருப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு உனக்கு அந்த நம்பிக்கை இருந்தா முதல்ல சம்மதம் சொல்லிட்டு வா அதுக்கப்புறம் அவன பத்தி விசாரிக்கிறேன்.. "

"அம்மாவ நினச்சா தான் பயமா இருக்கு மாமா??"

" அத்தை கிட்ட நான் பேசிக்கிறேன் ஒன்னு சொல்ல மாட்டாங்க.. "

"யோவ் மாமா இவன் நம்ம நாடு இல்லையா கொரியன் காரன்.."

சாருலதா சொல்ல, "எதே!!" என்ற நித்திக் அலறி எழுந்துவிட்டான் நாற்காலியிலிருந்து..


தொடரும்...
 
Top Bottom