புது மங்கள சௌபாக்யம் - 22 (எபிலாக்)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 50

New member
Staff member
May 13, 2026
21
40
3
மண்டபம் முழுவதும் மஞ்சள், பச்சை நிற அலங்காரங்கள். கண்ணாடி வளையல்களின் சிணுங்கல் சத்தமும், பெண்களின் சிரிப்பும், நாதஸ்வர இசை என அந்த இடம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. ஏழாம் மாத கர்ப்பிணியாக வெண்ணிலா அடர் மெரூன் பட்டிப்புடவையில் அவள் பால் நிற மேனிக்கு அழகாக பொருந்தியிருந்தது.. தலை முதல் பாதம் வரை ஆபாரங்கள் பூட்டி இது வளைகாப்பா இல்லை திருமண விழாவா என்று யோசிக்கும் அளவு சிறப்பாக இருந்தது ஏற்பாடு..

அங்குமிங்கும் பிஸியாக ஓடும் தன் பெற்றோர்கள்.. பக்கத்திலிருந்து பார்த்து பார்த்து செய்யும் சாருலதாவின் பெற்றோர்கள்.. அனைத்தையும் முன்னிருக்கையில் அமர்ந்து பார்க்கும் தன் மாமியார்.. இதோ அபி, சரண் கூட காதல் பார்வையில் ஒருவரை ஒருவர் தீண்டிக்கொள்ள, சாரு போனில் தன் கொரியன் பாய் பிரண்ட்க்கு நடப்பதை எல்லாம் லைவ் டெலீகாஸ்ட் செய்து கொண்டிருக்க ஆனால் எங்கு தேடியும் இந்த நன்னாளுக்கு சொந்தக்காரனை மட்டும் காணவில்லை..

"எங்க போனாரு இவரு?" என்று சுற்றி பார்த்தாள் வெண்ணிலா..

"என்னடி தேடிகிட்டுருக்க??"

"எங்க டி நித்திக் சார்??"

"ஏண்டி இன்னமும் இந்த சார விட மாட்டியா??"

"ப்ச்!! போன் போட்டு குடு.."

வளைகாப்பு என்பதால் பெண் தோழியாக சரண்யா அவளின் பக்கத்திலே இருக்க, நிலா போன் கூட அவளிடம் தான் இருந்தது.. இன்னும் நலுங்கு வைக்க பத்து நிமிடங்களே இருக்க, முதல் மாலை மாமன் என்ற முறையில் நித்திக் தான் அணிவித்து முதல் வளையல் பூட்டி ஆரம்பிக்க வேண்டும் ஆவலாக எல்லாரும் நித்திக் எங்கு என்று பார்க்க, இவளோ வாசலில் வந்த நித்திக் ஆடை பார்த்து உறைந்து விட்டாள்..

காலையில் தானே சொன்னாள்,

"ப்பா!! எனக்கு உங்கள வேஷ்டி சட்டைல பார்க்கணும் போல இருக்கு.."

"அடியே நான் போட்டுருக்க இந்த கட்டைக்கால் ஷூவுக்கு வேஷ்டி சட்டைல ரொம்ப வியர்ட்டா தெரியும்டி."

"ப்ச் அப்படியா?! சரி பரவால்ல விடுங்க.. அட்லீஸ்ட் மெரூன் கலர் ஷர்ட் போட்டுக்கோங்கப்பா.."

என்று அவள் கிளம்ப அப்போதுவரை சாதாரண பாண்ட் சட்டையில் இருந்தவன் இப்போது பட்டூ வேஷ்டி மெரூன் சட்டையில் ஆறடி உயரம் தான் அழகா என்பதுபோல கட்டையான உடல் வாக்கில் வயது பெண்கள் நின்று ஜொள்ளு விடும் அழகில் கம்பீரமாக நடந்து வந்தான் நித்திக் சரண்.. மற்ற பெண்கள் பார்ப்பதை பொருட்படுத்தாதவன் தன் மனைவி திறந்த வாயை மூடாமல் தன்னை பார்ப்பதை கண்டு ஒரு ஆணாக கர்வமும் அதே சமயம் வெட்கமும் கொண்டான்..

"ஐக்யூ!!"

"நிலா.."

"அடியேய்.."

"ப்ச் என்னாடி??"

"ஏய்ய் லூசு இப்படி பச்சையா சைட் அடிச்சு மானத்த வாங்காத டி.. மொத்த கூட்டமும் உன்ன தான் பாக்குது.."

"யார் பார்த்தா என்ன?? என் புருஷன் நான் சைட் அடிக்குறேன்.."

என்றவள் வெளிப்படையான பேச்சிலும், அவள் பார்வையிலும் வெட்கம் கொண்ட ஆணோ தலையை கோதி தன் முக சிவப்பை புன்னகையில் மறைத்தான்..

"டேய்ய் மாப்பி!! இந்த சந்தனம், குங்குமம் வச்சுவிட்டு வளையல நிலா கைல போட்டுவிட்டு மாலையும் போட்டு ஆரம்பி!!"

நித்திகின் மாமன் சந்திரமோகன் தான் கூறினார்.. இன்னும் லாவண்யா நித்திகை முறைத்துக்கொண்டு தான் இருக்கிறாள். தன் மகளை மணம் முடிக்கவில்லை என்று அல்ல, தன் மகளை கொரியன் காரனுக்காக பேசி சம்மதம் வாங்கியதால் தான்..

லாவண்யா ஊருக்கு தன் மகளை அனுப்பும்பொழுதே சொல்லி தான் அனுப்பியிருந்தாள்.. 'உன் மாமன் நித்திக் செய்வது அவ்வளவு ஒன்றும் ஏற்புடையதல்ல ஒரு பெண்ணின் சாபத்தில் உங்கள் வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம் ஆனால் எது விதியோ அதுபடி நடக்கட்டும் கொஞ்ச நாள் விலகி இருந்து பாரு!' என்று ஒரு தாயாக நல்வழிப்படுத்தி தான் அனுப்பினாள். ஆனால் இப்படி தன்மகள் கொரியன் காரனை காதலித்து வந்து இருப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை..

சில மாதங்களுக்கு முன்பு தான் இன்னும் ஆறு மாதத்தில் சாரு படிப்பு முடிக்க போகிறது என்பதனால் மேம்போக்காக தன் மாமனிடம் சாருலதாவின் காதலை பற்றி கூற அவரும் சற்று யோசித்து விட்டு பின்பு பெற்ற பிள்ளைகள் சந்தோஷமே தங்கள் சந்தோஷம் என்று ஏற்றுக்கொண்டார். என்னதான் லாவண்யாவிற்கு சாருலதாவின் காதலனை பிடித்து இருந்தாலும் பணம் அழகு செல்வாக்கு எல்லாவற்றிலும் பிடித்திருந்தாலும் தன் மகள் தங்களின் பாரம்பரியத்தை விட்டுவிட்டு கொரியன் காரனிடம் இப்படி காதலில் சிக்கிக் கொண்டாளே என்றும் அதை தன் புருஷன் இடம் நயமாக பேசி சம்மதம் வாங்கியது நித்திக் என்று தெரிந்ததும் மேலும் அவனை முறைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.. ஆனாலும் நிலாவை பிடிக்கும் அவளின் வளைகாப்பிற்கு ஒரு அன்னையாக தன் மூத்த பெண்ணிற்கு எப்படி செய்வாளோ அப்படி தான் எடுத்துக்கட்டி செய்கிறார். ஆனால் இன்னும் நித்திக்கு இடம் வாய்க்கால் தகராறு ஓய்ந்தபாடில்லை அதனால் அவள் அவனிடம் பேச மறுக்கிறாள்..

தன் மாமன் சொல்ல சொல்ல ஒவ்வொன்றாக செய்தான் நித்திக்.. வெண்ணிலா பட்டு கன்னத்தில் குளிர்ந்த சந்தனம் பூச அவள் பூனை மயிர்கள் நட்டுக்கொண்டதை இவன் விரல்கள் உணர்ந்தது. அடுத்து குங்குமம் எடுத்து வைக்க அதன் திண்ணம் தாண்டி வெண்ணிலா உடல் வெப்பத்தால் தகித்தது.. அவளுக்காகவே செய்து வாங்கிருந்த தங்க வளையலில் 'வெண்ணி நித்திக்' என்று பதித்திருக்க அதை அவள் கண்ணை பார்த்துக்கொண்டே அவளுக்கு பூட்டினான்.. அடுத்து ரோஜாப்பூ மாலை எடுத்து அவள் கழுத்தில் அணிய பூவின் வாசனையும் தன்னவன் வாசனையும் வெண்ணிலாவை என்னவோ செய்ய இப்போதே அணைக்க துடித்த கரங்களை கட்டுப்படுத்தி பாவமாக முழியை உருட்டி அவனை பார்க்க அவனோ நமட்டு சிரிப்புடன் அவளை தோளோடு அணைத்து விடுவித்தான்..

அவன் அணைப்பில் மொத்தமாக தோய்ந்தவள் யார் கண்ணுக்கும் உறுத்தாமல் வாயசைத்து வெண்ணிலா எதோ கேட்க அவனோ தலையில் அடித்துக்கொண்டு, "மானத்த வாங்காத டி கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ!" என்றான்..

அடுத்து அடுத்து பெண்கள் வளையல் பூட்டி சோறு ஊட்டி விழா சிறப்பாக செல்ல, நேரமாக நேரமாக நிலா கண்கள் பச்சையாக கணவனை நாடியத்தை கண்டுகொண்ட யசோதா, "நிலா!! ரொம்ப நேரம் உக்காந்திருந்தா கால் வீங்கிக்கும் போய் உன் அறைல நடந்துக்குடு.. நான் உன் புருஷன்கிட்ட ஜூஸ் குடுத்து விடறேன்.." என்றவர் மருமகளை சரியாக புரிந்துகொள்ள, "ஓகே அத்தை!!" என்று வேகமாக எழுந்து ஓடாத குறையாக நடந்து சென்றாள் அங்கு இருந்த ஒரு அறைக்குள்..

"டேய்ய் தம்பி!!"

"ம்ம்மா.. புரியுது.. உங்க ரெண்டு பேர் தொல்ல தாங்கல.. கண்ணு பற்றும்னு சொன்னா புரிஞ்சுக்குறிங்களா??"

"அட யார்டா இவன்!! எப்படியும் சாயந்திரம் வீட்டுக்கு போனதும் சுத்தி தான போடுவோம் அப்ப எல்லா திருஷ்டியும் ஒன்னா போய்க்கும்.. புள்ளத்தாச்சி புள்ள உன்ன தேடுறா அப்படியே விட முடியுமா ஏங்கி போய்டுவா செத்த நேரம் போய் இருந்துட்டு தான் வாயேன்டா கூட.."

"உன்னால தான் அவ இப்புடி அடம் பண்றா.."

என்று வாய் சண்டை போட்டாலும் அவளுக்காக வாங்கிய பழ கூழை எடுத்துக்கொண்டு அறையை திறந்து உள்ளே செல்ல அடுத்த நொடி அவன் நெஞ்சில் முட்டினாள் வெண்ணிலா..

"ஹே இரு இரு கதவ சாதிக்குறேன்.." என்றவன் விவரமாக தாழிட்டான்..

"மிஸ் யூ ப்பா!!"

"என் குட்டி பொண்ணு இப்போல்லாம் என்கிட்ட ரொம்ப ஒட்டுறாங்களே ஏன்?? பிரசவம் நினைச்சு பயமா இருக்கா??"

"நீ இருக்கப்போ எனக்கு என்ன பயம்?? ஹார்மோனல் சேஞ்சஸ் போல.. உன்ன ஒட்டிகிட்டே இருக்க தோணுது.."

"ஹாஹாஹா!! என் சட்டக்குள்ள வச்சு தச்சுக்கவாடி உன்ன??"

"இல்ல.. உன் இன்னர்ஸ்குள்ள வச்சு தச்சுக்கோ.. உன் ஒடம்போட ஒட்டிகிட்டே இருக்கணும் நானு.."

என்றவர்கள் கட்டிப்பிடித்து அமைதியாக அன்று நடந்த நிகழ்வை அசைப்போட்டார்கள்..


யசோதா வந்து பேசி சென்று இரண்டு நாட்கள் ஆகிறது நித்திக் வந்து அழைத்து போவான் என்று காத்திருக்க ஆனால் அவன் வந்த பாடும் இல்லை.. ஏன் வெட்கத்தை விட்டு ஒரு முறை வெண்ணிலா அவன் கைபேசிக்கு அழைத்தும் விட்டாள் அப்பொழுதும் அழைப்பு ஏற்கவில்லை.. வங்கியிலிருந்து சரண்யா அழைத்து ஒரு வாரம் விடுப்பு உங்கள் இருவருக்குமாக நித்திக் சார் வாங்கிருக்கிறார்.. ஏன் என்று கேட்க என்ன காரணம் சொல்வாள் நிலா அவளுக்கே தெரியவில்லையே..

"இந்த சிடுவன் என்னதான் நினைச்சுட்டு இருக்காரு.. எந்த தகவலும் கொடுக்காமல் எனக்கும் சேர்த்து ஒரு வாரம் லீவ் அப்ளை பண்ண இவரு யாரு? நம்ம பேசாம நம்ம லீவ கேன்சல் பண்ணிடலாமா?? புருஷனாச்சேன்னு அபிஷியல் மெயில் பாஸ்வேர்ட் கொடுத்தது தப்பா போச்சு." என்ற தீவிர யோசனையில் அமர்ந்திருந்த வெண்ணிலா அறை கதவு தட்டப்பட்டது..

"ம்மா!! திறந்து தான் இருக்கு வாங்க.."

என்றவள் தலை முடியை சுற்றி கொண்டையிட்டு திரும்ப உள்ளே அமைதியாக நித்திக் நின்றிருந்தான்.. இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக்கொள்ள முதலில் நலம் விசாரித்தது, பின்பு மன்னிப்பை யாசித்தது அடுத்து வீஞ்சிக்கொண்டு நின்றது என்று அந்த கண்கள் காட்டிய பாவனை தான் என்ன என்ன??!!!

சில நேரங்களில் வார்த்தைகள் சொல்லாததை பார்வைகள் சொல்லிக்கொள்ளும் அப்படி தான் இருவரும் வெகு நேரம் இமைக்க மறந்து பார்வையில் தின்றார்கள்.. அடுத்த நொடி சொல்லி வைத்தது போல இருவரும் ஒரு அடி முன்னே நகர்ந்து ஒரே நேரத்தில் தங்களின் இணையை கட்டிக்கொண்டார்கள்.. அங்கு பேச எதுவுமேயில்லை.. பேச தேவையுமில்லை!!

இருவரும் ஒரே போல விலகி ஒருவர் முகத்தை ஒருவர் கைகளில் தாங்கி அதே போல ஆக்ரோசமாக இதழை கொய்தார்கள்..

"ஏன் உங்க மனசுல நான் இருந்தத என்கிட்ட சொல்லல??" என்று வெண்ணிலா அவன் கீழ் உதட்டை கடித்து சுவைக்க,

"நான் சொல்லாட்டி என் மனசு உனக்கு புரியாதா?? அதெப்படி நீ என்ன விட்டுட்டு போகலாம்??" என்று நித்திக் அவளின் மேல் உதட்டை இழுத்து சப்ப அங்கே இதழ் போர் அரங்கேரியது..

இரவு உணவு சாப்பிட அழைக்க வந்த சாந்தி இவர்கள் இருந்த நிலை பார்த்து கூசி சிவந்து சத்தமே இல்லாமல் கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தவள் கணவனிடம் சொல்லி சந்தோஷப்பட அவருக்குமே மகிழ்வு தான்..

இருவரும் தங்கள் இதழில் காட்டிய வன்மையில் மூச்சுக்கு ஏங்க நித்திக் ஒரு நிமிடம் வெண்ணிலாவை தன்னை விட்டு நகர்த்த அடுத்த நொடி நித்திக் சட்டை காலரை இழுத்துக்கொண்டு அப்படியே பெட்டில் சரிந்தாள்.. அவளுக்கு இதற்காக கூச்சம், வெட்கம் எதுவும் இல்லை.. நான் ஏங்கி தவித்த என் நித்திக் இப்போது எனக்காய் கிடைத்தவனை நான் கொண்டாடுகிறேன் என்றவள் அடாவடியில் நித்திக் மிரண்டு தான் போனான்..

அவனை கீழே தள்ளி மேலே ஏறி நெஞ்சில் அமர்ந்து கன்னத்தை மாறி மாறி வலிக்காமல் அடித்து, தலையை பிடித்து இழுத்து மூக்கு, தோள், கை கால்கள் என்று கடித்து வைத்து செல்ல இம்சைகள் செய்ய, 'என்னவோ செய் உன்னை தாங்குவதே என் பிறவி பயன்!' என்று அத்தனையும் தாங்கினான்..

வெண்ணிலா சற்று நேரத்திர்க்கெல்லாம் மூச்சு வாங்க சரிந்து நித்திக் அருகில் படுத்து சுற்றும் மின்விசிரியை பார்க்க இப்போது அவனோ வேகமாக அவள் மேல் ஏறினான் ஆனால் அடாவடியாக இல்லை ஆசையாக தனக்காக என்னவும் செய்ய ஒருத்தி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலை கொட்டி குடுக்க ஒருத்தி அவளை நோக விடுவானோ??!

நித்திக் தன் ட்ரிம் செய்த தாடி, மீசையை அவள் முகத்தில் கீறல் செய்ய மெல்ல ஊர்வலம் சென்றான்..

"என்ன தேடி வர ரெண்டு நாள் ஆச்சா??"

மனைவி தோரணையாக கேள்வி கேட்க, சாரு லதா காதல் பற்றியும், அதை வீட்டில் பேசி சம்மதம் வாங்கிகுடுத்துவிட்டு உன்னை காண வந்ததாகவும் சொல்ல இவ்ளோ முகத்தை திருப்பினாள்..

திருப்பிய அவள் முகத்தின் நாடி பிடித்து தன்னை பார்க்க வைத்தவன்,

"ஏண்டி சொல்லல??"

என்னது?? " உதட்டை சுழித்தாள்..

சுழித்த அவள் இதழை தன் இதழால் உரசியவன், "உனக்கு என் மேல பைத்தியமாம்.. உன் பிரண்ட்கிட்ட சொல்லிருக்க.. நீ என்கிட்ட சொன்னியா??"

"நீங்க கூட தான் பல வருசமா என்ன தேடி என்ன காதலிச்சிருக்கீங்கன்னு எங்க அப்பா சொல்றாரு.. நீங்க என்கிட்ட சொன்னிங்களா??"

ஒற்றை புருவம் தூக்கி அவனை சீண்ட, "வச்ச கண்ணு வாங்காம பாப்பியே நாயே என் கண்ணுல உனக்கான காதலை பார்த்ததே இல்லையாக்கும்!"

"ஹ்க்கும்!! எப்போ பாரு எண்ணெய் சட்டிக்குள்ள போட்ட கடுகு மாதிரி மூஞ்சிய சிடு சிடுன்னு வச்சிருந்தா என்னத்த புரியுமாம்?"

"இந்த வாய்! இந்தா வாய் தான் டி.. உன்ன திரும்பி பார்க்க வச்சுது.. இந்த வாய் தான் டி உன் கூட வாழ ஆசை கொடுத்துச்சு.. இந்த வாய் பேச்சு இல்லாம இருந்த ரெண்டு நாள் தான் இந்த வாயாடிய விட்டுட்டு என்னால இருக்கவே முடியாதுன்னு என் மண்டைல தட்டி எனக்கு புரிய வச்சுது.."

என்றதும் நித்திக் கழுத்தில் வெண்ணிலா புதைய இருவரின் அணைப்பும் சற்று அதிகமாக உணர்ச்சிகள் தூண்டப்பட, "வெண்ணி ஷால் ஐ.." என்றான் கரகரப்பான குரலில்..

"உங்களுக்கு வேற ஆப்ஷனே இல்ல சிடுவா கோ அஹெட்!" என்றவள் கண்ணடிக்க, இருவரும் இனிமையான தாம்பத்தியத்தில் அடியெடுத்து வைத்தார்கள்..

அன்று ஆரம்பித்த இணக்கம் தான் வெண்ணிலா எப்போதும் கூடுதலாகவே அவனை நாடுவாள் இல்லறத்தில், அவனுமே அவள் தேவை உணர்ந்து செய்வான் இதில் இருவருக்கும் எந்த பிணக்கும் வந்ததே இல்லை.. அயராத உழைப்பில் நாற்பது நாட்களில் வெண்ணிலாவை வாந்தி எடுக்க வைத்துவிட்டான்.. இதோ இப்போது ஏழு மாத கரு அவள் வயிற்றில் ஃபுட்பால் ஆடுகிறது..

வளைகாப்பு முடிந்து அவரவர் அவர்கள் வீட்டிற்கு செல்ல, வெண்ணிலா தாயிடம் வாரத்தில் ஒரு நாள் வந்து செல்கிறேன் என்று கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து புருஷன் கை பிடித்து சென்றுவிட்டாள்..

அறைக்குள் வந்த நித்திக் தன் உடை மாற்ற உள்ளே செல்ல அவன் முதுகில் பஞ்சு பொதி வந்து மோத மனைவியின் செல்ல சேட்டையில் முறுவலித்தான்..

"வெண்ணி என்னடா??"

"இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்கப்பா.. கொஞ்ச நேரம்.. ப்ளீஸ்.."

முதுகில் கைகுடுத்து அவளை முன் பக்கம் இழுத்தவன் நெஞ்சோடு கட்டிக்கொண்டு,

"ரொம்ப டெம்ட் பண்ற டி.. குழந்தை பிறந்ததும் டீல்ல விற்ற மாட்டியே?"

"எத்தன குழந்தை பிறந்தாலும், எத்தன பேர் கூட இருந்தாலும் உன் மூச்சு காற்ற சுவாசிச்சா தான் என் இதயம் இயங்கும்!!"

"ஐ லவ் யூ டி தொல்ல.. காலம் முழுசும் இந்த தொல்ல எனக்கு வேணும்.."

"ஹாஹா கண்டிப்பா!! ஐ லவ் யூயூயூ டூ த்ரீ ஃபோர் டா என் அழகான சிடுவாஆஆஆஆ!!"

அட்டகாசமாக சிரித்தவன், அவளை விலக்கி தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு நகை பெட்டியை எடுக்க அவள் யோசனையாக அவனை பார்த்தாள்.. அவள் பாதத்தில் அமர்ந்தவன் அந்த பெட்டியை திறந்து இரு மெட்டிகளை எடுத்து அவள் பாத்ததை கையில் ஏந்தி அணிவித்து அவள் வெண் பிஞ்சு விரலுக்கு முத்தமிட்டான்..

இது மன்மத சாம்ராஜ்யம்.

புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.

தினம் கூடும் கூடும் ஆனந்தம்!!

வெண்ணிலா நித்திக் ஜோடிகள் போல தங்கள் துணையாக வரும் இணைகளை குற்றம் குறை இல்லாமல் அள்ளி அள்ளி பருகும் பிடித்த பதார்த்தம் போல திகட்டாமல் காதலிப்போம்.. காதலை கொண்டாடுவோம்!!

சுபம்!

நன்றி!
வணக்கம்!
 

Author: STN - 50
Article Title: புது மங்கள சௌபாக்யம் - 22 (எபிலாக்)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thanga then mozhi

Active member
May 6, 2026
159
130
43
Cheyyar
சூப்பர் வெண்ணிலா தாம்பத்யத்தில் ஆண் என்ன பெண் என்ன குறையாத காதல் இருந்தால் போதும் ❤️ 🧡 🧡 🥰
 
  • Love
Reactions: STN - 50

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
618
478
63
Pondicherry
நித்திக் குறையை பற்றி துளி அளவும் நினைக்காமல் நிலா அவனை காதலிப்பது 👌..💕💕💕💕💕

வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
  • Love
Reactions: STN - 50

STN - 50

New member
Staff member
May 13, 2026
21
40
3
சூப்பர் வெண்ணிலா தாம்பத்யத்தில் ஆண் என்ன பெண் என்ன குறையாத காதல் இருந்தால் போதும் ❤ 🧡 🧡 🥰
ஆமா சகி 😍
 

STN - 50

New member
Staff member
May 13, 2026
21
40
3
நித்திக் குறையை பற்றி துளி அளவும் நினைக்காமல் நிலா அவனை காதலிப்பது 👌..💕💕💕💕💕

வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
நன்றிகள் சகி 😍
 

EswariSasikumar

Active member
Nov 21, 2018
409
236
43
Chennai
அருமையான கதை 💞 💞.. நிலையான முடிவு 💞 💞 💞
வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 💞 💕
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online