• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 11

Vishakini

Moderator
Staff member
புனர்ஜென்மம் 11

அப்படியே அடுத்தடுத்த நாட்களும் அவர்களுக்கு நன்றாகவே சென்றது. ஆனால், நிரோஷாவின் வரவு அந்த வீட்டில் அதிகரித்தது. அவ்வப்போது பேசுகிறேன் என்று வருவது, அல்லது எதையாவது தின்பண்டங்களைக் கொடுக்கிறேன் என்று வருவது.

அது மட்டுமல்லாமல் மொட்டை மாடியில் அமர்ந்தபடி எதிர் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பது. ஜன்னல் வழியாக அர்ஜுன் எங்காவது தென்படுகிறானா என்று பார்ப்பது. இது எல்லாம் தொடர்ந்து கொண்டே சென்றது.

“அக்கா என்ன பண்றீங்க?” என்று கேட்டபடி வந்தாள். அவளுடைய சித்தி பெண் அனன்யா.

திருடிவிட்டு மாட்டியதைப் போலப் பேய் விழி விழித்தாள் நிரோஷா.

“இல்லையே, ஒன்னும் இல்லையே?” என்றாள்.

“இல்ல, ரொம்ப நேரமா ஜன்னல் வழியாவே பாத்துட்டிருக்கீங்க?? மொட்டை மாடியில் போயும் அதைத் தான் பண்றீங்க. எதிர் வீட்ல புதுசா வந்திருக்க அண்ணனைத் தானே பார்க்குறீங்க??” என்றாள்.

“அவரை அண்ணன்னு சொல்லாத?? மாமான்னு சொல்லு” என்று திருத்தினாள் நிரோஷா.

“சரி சரி, நடக்கட்டும் நடக்கட்டும்” என்றவள். தன் பெரியம்மா வீட்டிற்கு திருவிழாவிற்காகத் தான் வந்திருந்தாள்.


அவர்கள் வருடா வருடம் குடும்பமாக வரும் பழக்கம் உடையவர்கள் தான். ஆனால் இந்த முறை அவளை மட்டுமே அனுப்பி வைத்திருந்தார் அவளுடைய தாயார். நிரோஷா வருவதற்கு இரண்டு நாள் முன்பு தான் அவளும் வந்திருந்தாள். அவளுடைய தாய் வந்து விட்டு விட்டுச் சென்று விட்டார். மகனுக்குப் பரிட்சையும் இருக்க. கணவனுக்கும் வேலை இருக்க, அவர்களால் குடும்பமாக வர முடியவில்லை. ஆனாலும் மகளை அனுப்பி வைத்திருந்தனர்.

தமக்கை வந்ததிலிருந்து அவளிடம் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அதைத்தான் அனன்யா அவதானித்துக் கொண்டிருக்கிறாள். சிறியவள் தான். வயதிற்கு வந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டது. பள்ளி தான் படித்துக்கொண்டிருந்தாள். ஆனால் பள்ளியிலும் இதுபோல நிறைய பார்த்திருக்கிறாள். அதனால் தமக்கையின் பார்வையின் அர்த்தம் புரிந்தது.

எதிர் வீட்டுக்கு வந்தவர் அழகாகத் தான் இருந்தார். அவரைத் தன் தமக்கை ஆர்வமாகப் பார்ப்பது பதினோராம் வகுப்பு படிக்கும் அந்தப் பெண்ணிற்கு தெளிவாகப் புரிந்தது. இதுபோலத் தொடர் பார்வைகளை அவளும் அனுபவித்திருக்கிறாள். ஆனால் காதலிக்க அழகு மட்டும் போதுமா?? என்ற கேள்விக்கு அவளுக்கு விடை தெரியவில்லை.

அர்ஜுனின் உதாசீனத்தை கண்டும் காணாமலும் சென்றாள் நிரோஷா. ஆனால் இப்பொழுது அது தொடர்ந்து கொண்டே இருக்க. மனது வலிக்க ஆரம்பித்தது. சிறியவள் வேறு தன்னை கண்டு கொண்டாளே என்று முதலில் பதறியவள். பிறகு அவளையே தனக்கு துணையாக நிறுத்திக் கொண்டாள்

எப்பொழுது அங்கு வந்தாலும் பெண்கள் இருவரும் தான் சேர்ந்து கொட்டமடிப்பார்கள். அனன்யா மற்றும் நிரோஷாவின் அண்ணன்கள் ஒரு கூட்டு என்றால், இவர்கள் இருவரும் ஒரு கூட்டு தான். அதனால் தன் தங்கையிடம் மறைக்காமல் மனதில் இருப்பதை கூறிவிட்டாள் நிரோஷா


“மாமா நல்லா தான் இருக்காரு” தமக்கைக்காக உடனே தன் பேச்சையும் மாற்றிக் கொண்டாள் அனன்யா. உடனே நிரோஷாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பெரிந்தது.

……

நாற்பது அடி உயர ஒற்றைக்கல் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரமாண்டமாகக் காணப்பட்டது.

பிரசித்தி பெற்ற அந்தக் கோயில் அங்கு மிகவும் விசேஷமானது. அந்த ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லாலானது.

அங்கு வேண்டுவது எல்லாம் நிறைவேறும் என்று ஐதீகம் இருக்கிறது. ஆனந்தன் சிறந்த கைடு போல அவர்களுக்கு விளக்கம் கூறிக் கொண்டிருந்தான்.

அர்ஜுனுக்கு மனம் எதிலும் லயிக்கவில்லை. கடமைக்கென்று மற்றவர்களோடு சுற்றிக் கொண்டிருந்தான். அவனின் ஆறுதல் தானியதா மட்டுமே.

திருவிழாவிற்கு மறுநாள் காப்பு கட்டுகிறார்கள் அதன் பிறகு ஊரிலிருந்து யாரும் வெளியில் செல்லக் கூடாது, உள்ளேயும் வரக் கூடாது. அதனால் அன்றே விசேஷமான அந்த கோயிலுக்குச் சென்று விட்டு வந்துவிடலாம் என்று பெரியவர்கள் தீர்மானித்தனர்.

குடும்பமாக மூன்று வாகனங்களில் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

அர்ஜுனின் மனம் மாற்றத்திற்காகத் தான் அவ்வளவு தூரம் வந்தது. ஆனால் அவன் மனம் மாறியதா என்று தெரியவில்லை? இரவில் தனிமையில் வெகுவாக அவன் மனம் ரணப்பட்டுக் கொண்டிருந்தது. மற்ற நேரங்களில் மற்றவர்களுடன் சலசலத்துக் கொண்டிருப்பதால் நேரம் கடந்து கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது நிரோஷா வேறு அவனுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்க. அது அவனுக்கு அக்னி ஜூவாலையை தான் கிளப்பியது.

‘ஆஞ்சநேயருக்கு அஞ்சு தலை இருக்கு?? அது ஒவ்வொன்னும் என்ன தலைனு சரியா எனக்குத் தெரியலையே?” என்று ஆராதனா கேட்க

“அதுவாம்மா?? ஆஞ்சநேயர் ஹயக்ரீவர், நரசிம்மர், கருடன், வராகன், அனுமன் இப்படி அஞ்சு அவதாரத்தோட முகங்கள்தான் இந்தச் சொரூபத்துக்கு அமைச்சிருக்காங்க. இந்தக் கோயில் 2004-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ரொம்ப வருஷம் எல்லாம் ஆகல, ஆனா ரொம்ப விசேஷமானது. இங்க வந்து வேண்டினா வேண்டினதெல்லாம் நடக்கும்னு ஒரு ஐதீகம் இருக்கு. நீங்களும் மனமார வேண்டிக்கோங்க. அது நடந்து முடிஞ்சுதுனா அடுத்த வருஷம் வந்து இவருக்கு அபிஷேகம் பண்ணுங்க” என்று ஆனந்தன் கூறிக் கொண்டிருக்க.

அவளும் கண்களை மூடி மனமுருக தன் தம்பிக்காக வேண்டிக்கொண்டாள் . ‘அவன் மனம் மாற வேண்டும் அவனுக்கு வாழ்க்கையில் நல்ல துணை கிடைக்க வேண்டும். தன்னை போல அவனும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்’.

ஒரு தமக்கையின் வேண்டுதல் எப்போதும் அப்படித்தான் இருக்கும். அதுவரை அசட்டையாக இருந்தவன். இப்போது தமக்கைக்காக வேண்டினான். தமக்கைக்கு, அவள் மகளுக்கு, மாமனுக்காகவும் சேர்த்து வேண்டினான். தாயின் உடல் நிலை காகமும் வேண்டினான்.

நீண்ட பயணம் தான். திரும்பி வரும்போது அவர்கள் ஊர் கோயிலுக்கும் சென்று விட்டு வந்தார்கள்.

“திருவிழாக்கு டெக்கரேஷன் ஆரம்பிச்சிட்டாங்கன்னா கலை கட்டும். அதுக்கப்புறம் தெய்வத்தை இதுபோலப் பார்க்க முடியாது. இது சாதாரண தரிசனம் அதுக்கப்புறம், தெய்வம் மட்டும் இல்லாம ஊரும் விழாக்கோலம் மாதிரிக் காட்சி அளிக்கும்”. இப்பொழுதும் ஆனந்தன் தான் பேசிக்கொண்டிருந்தான். ஊர் பெருமை பேசுவது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான் அவரும் அதையே தான் செய்தார்..

அர்ஜுனுக்குள் பெரிதாக மாற்றங்கள் வந்ததா என்று தெளிவாக அவனுக்கே தெரியவில்லை?? நிஷாவின் நினைவுகள் மட்டுப்பட்டு இருந்தது. முக்கியமாக அவளுக்குத் திருமணம் நடக்கும்போது அவன் ஊரில் இருக்கக் கூடாது என்று அவனும் நினைத்தான். அதற்கு இந்த இடம் ஒரு மாறுதலாக இருக்கும் என்றும் நம்பினான்.

சரியாக நிஷாவிற்கு திருமணம் நடக்கும் நாள் திருவிழாவும் கலைக்கட்ட ஆரம்பித்திருந்து. ஆனால் காலையில் எழும்போதே, இன்று அவளுக்குத் திருமணம் என்ற செய்தி அவன் நெஞ்சை அடைத்தது. அதில் தேங்கி நிற்கவிடாமல் அவன் தமக்கை தானியத்தாவை கூட்டி வந்து அவன் கையில் கொடுத்து விட்டாள்.

பிறகு என்ன?? சிறியவளை பார்த்ததும் எல்லாம் மறந்து விட்டது.

அன்று எல்லோருமே சைவம் தான் சாப்பிட வேண்டும் அசைவம் சாப்பிடவே கூடாது. திருவிழா முடிந்து மஞ்சள் தண்ணீர் தெளிக்கும் நாலு முடிந்த பிறகு தான். அசைவம் சாப்பிட வேண்டும் என்பது அந்த ஊரின் சட்ட திட்டம்.

அசைவம் இல்லாமல் அவனுக்கு உணவு சரியாக இறங்காது. ஆனால் அவர்கள் வீட்டில் சமையல் நன்றாக இருந்தது. வந்திருக்கும் இடத்தில் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்க முடியாது. அதனால் அவனும் அமைதியாகச் சாப்பிட்டான். அது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்து விடவில்லை.

திருவிழா அன்று ஊரே கலை கட்டி இருக்க. புது உடையில் மற்றவர்களும் ஜொலித்துக் கொண்டிருக்க. இவன் மட்டும் சிறியவளை அழைத்துக் கொண்டு ஊரை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தான்.

அங்கிருக்கும் ஏரிக்கரை சுகந்தமான காற்றை வெளிப்படுத்திக் கொண்டிருக்க. “மாமா இந்த ஆத்துல குளிக்கலாமா?? என்று கேட்டாள் சிறியவள்.

“ஆனா உங்க அப்பா அம்மாவுக்குத் தெரியாம நாம இந்த ஆத்துல இறங்க கூடாது. ஊரு கட்டுப்பாடுனால மீன் பிடிக்கிறவங்க கூட இதுல இல்ல. இங்க கூட்டமும் இல்ல. திருவிழா முடியட்டும். அப்புறம் வீட்ல இருக்கவங்க கிட்ட கேட்டுட்டு அவங்களையும் துணைக்கு கூட்டிட்டு இங்க வந்து குளிக்கலாம். சரியா?” சிறு குழந்தைக்குப் புரிய வைக்கும் விதமாகக் கூறினான்.

சற்று தூரம் நடந்து வர, அவன் எதிரில் நடந்து வந்துகொண்டிருந்தாள் நிரோஷா. அவளைக் கண்டுகொள்ளாமல் அவன் கடக்க பார்க்க, அவள் அவள் முன்னாள் வந்து நின்றாள்.

அவன் அவளைத் தாண்டிக் கொண்டு செல்லப் பார்க்க. அவளோ கைகளை நீட்டித் தடுத்து நிறுத்தினாள். அவனும் அவளை முறைத்து விட்டு வேகமாகத் தானியாவுடன் சென்று விட்டான்.

காலை உதறி கொண்டு அவளும் வேகமாக அவனைப் பின் தொடர்ந்தாள்.

ஏரி ஓரமாக ஒத்தையடி பாதை தான் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஆள் நடமாட்டம் இல்லை. இதுதான் அவனிடம் பேசுவதற்கான சரியான சந்தர்ப்பம். அவனுடன் குழந்தை மட்டுமே இருக்கிறாள். அவனுக்குத் தன் மனதை எடுத்துக் கூறுவதற்கு இதுதான் சிறந்த இடம் என்று நினைத்தவள். அனன்யாவை நைசாகக் கழட்டி விட்டுவிட்டு, அவனிடம் பேசுவதற்காக அவன் முன்பு வந்து நின்று விட்டாள்.

“என்னங்க வேணும் உங்களுக்கு?? எதுக்காக வழி மறிக்கிறீங்க?” அவன் தன் முகத்தைச் சுருக்கி வைத்துக் கொண்டு கேட்டான்.

“இல்ல உங்க கிட்ட தனியா பேசணும்னு நினைச்சேன். இங்க யாரும் இல்ல. இதுபோல ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது” அவள் பேசிக் கொண்டிருக்க.

“நீங்க எதுக்குங்க என்கிட்ட தனியா பேசணும்?” என்று காட்டமாகவே கேட்டான் அர்ஜுன்.


“வந்து வந்து உங்களைப் பார்த்த உடனே” எதையோ கூற வர.

அவன் வலக்கையை நீட்டி வேண்டாம் என்று கூறினான்.

“இல்லங்க, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் உங்கள லவ் பண்றேன்னு நினைக்கிறேன்?” என்று கூறிய நொடி.

பலார் என்று அவள் செவிப்பறையில் அறைந்திருந்தாள். அவன் அரைந்த அரையில் அவள் மட்டும் கன்னத்தில் கையை வைத்துக் கொள்ளவில்லை. அவளுக்குச் சற்று தொலைவில் வந்த அனன்யாவும் தன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு நின்றாள்.


‘ஹப்பா என்ன அரை?? அங்க அடிச்சது, இங்க வலிக்குது. செம சவுண்டு. அக்காவுக்கு காது கேட்குமா கேட்காதான்னு தெரியலையே??” என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க.

“இன்னொரு வாட்டி எதையாவது பேசிக்கிட்டு முன்னாடி வந்து நின்னா சாவடிச்சு போட்டுருவேன். வந்துட்டாளுங்க, நல்லா இளிச்சவாயனா பார்த்து அவன் கிட்ட காதலை சொல்ல வேண்டியது. அப்புறம் சுத்தி சுத்தி வர வேண்டியது. நீ இல்லனா செத்துருவேன்னு டயலாக் விட வேண்டியது. அப்புறம் நம்மளை சுத்த வைக்க வேண்டியது. கடைசில அப்பா சொன்னான், ஆட்டுக்குட்டி சொன்னன்னு நம்மல கழட்டி விட்டுட்டு போக வேண்டியது. இன்னொரு வாட்டி என் கண்ணு முன்னாடி வந்தேனா அவ்வளவுதான்?? கொலையே பண்ணாலும் பண்ணிடுவேன். ஏற்கனவே ஒருத்தி ஏமாத்துன காண்டுல இருக்கேன், நீ வந்து சிக்கிகாத” என்று காட்டமாகக் கூறிவிட்டு, வேகமாக நடக்க அங்கிருந்து விட்டான்.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நின்றிருந்த அனன்யாவை பார்த்தவன். திரும்பி நிரோஷாவையும் பார்த்தான். அவள் நின்ற இடத்தில் அப்படியே நின்றிருந்தாள்.

“நீ யாரு அவள் தங்கச்சியா??” என்று கேட்டான்.

அவள் ‘ஆமாம்’ என்று மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.

“நீ எதுக்கு கன்னத்துல கை வச்சிருக்க??” என்று கேட்க.

அவள் இல்லை என்று தலையாட்டினாள். “உங்க அக்காவுக்குப் புத்தியில் உறைக்கணுன்றதுக்காக அடிச்சேன். உன்னைக் கண்டிப்பா அடிக்கமாட்டேன். அப்புறம் இங்க நடந்ததை யாருகிட்டயும் சொல்லாத. சொன்னனா உங்க அக்காவுக்குத் தான் அசிங்கம். அப்புறம் என்னை நம்பி கூட்டிட்டு வந்திருக்க எங்க மாமாவும் தலை குனிச்சு நிக்குற மாதிரி ஆயிடும். நான் சொல்ல வரது புரியுதுல்ல?? யாருகிட்டயும் சொல்ல மாட்டத் தானே?? உனக்கு வேணா சாக்லேட் வாங்கி தரவா?” சிறு பெண் என்று நயமாக பேசிக்கொண்டிருந்தான்.

படப் பட என்று கண்களைப் பட்டாம்பூச்சி போல அடித்தவள். “வேண்டாம்” என்று கூறிவிட்டு தமக்கையை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டாள்.

அவன் தோள்களைக் குலுக்கி விட்டு நடக்க ஆரம்பித்தான்.

“மாமா நானும் இதை யார்கிட்டயும் சொல்லக் கூடாதா??” என்று தானியதா கேட்க.

“ஆமாம்” என்று அவளுக்கு அறிவுரை கூறிக் கொண்டே சென்றான்.

அவளுக்குத்தான் மாமனின் பேச்சு வேத வாக்காயிற்றே?? அதனால் அவள் தட்ட மாட்டாள் என்பது வேறு விஷயம். அப்படியே சொன்னாலும் அவள் தன் தாயிடம் மட்டும் தான் சொல்வாள். அதனால் பிரச்சனை இல்லை அர்ஜுனுக்கு.

ஆனால் அடி வாங்கியவளின் நிலை???



 

EswariSasikumar

Active member
அவனே நொந்து நூடுல்ஸா இருக்கான்... அவன் கிட்ட போய் காதல் கத்தரிக்காய்னா...
 

Gowri Karthikeyan

Active member
அடியே நிரோ அவனே இப்ப தான் நொந்து வந்து இருக்கான்...இப்ப திரும்ப வந்து அதையே சொன்ன🤦🤦🤦🤦🤦
அப்ப nirovum sriyum ஒன்னு தான் இல்லையா.....
 
Top Bottom