புனர்ஜென்மம் 13
அன்று இரவில் புடவையைத் தூக்கி சொருகிக் கொண்டு வந்து நின்றாள் ஆராதனா. “ஏன்டா வந்த இடத்துல சும்மா இருக்க மாட்டியா?? எதுக்கு உனக்குத் தேவை இல்லாத வேலை?? அந்தப் பொண்ண அடிச்சு வச்சிருக்க?? அந்தப் பொண்ண அடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது? நான் மனசுக்குள்ள என்னென்னமோ கோட்டை கட்டி வச்சிருந்தேன். ஆரம்பிக்கும்போதே அதுல சுடுதண்ணி ஊத்திட்டு வந்துட்ட” என்று ஆராதனா பொரிந்து தள்ளிக் கொண்டிருக்க.
அவன் காதைக் குடைந்து கொண்டு அசட்டையாக அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
அவன் கையைத் தட்டி விட்டவள். “கேட்கிறேன்ல, பதில் சொல்லு?? அந்தப் பொண்ண எதுக்கு அடிச்ச?? யார் மேலையோ இருக்க கோபத்தை யார் மேலயோ காட்டுற?” என்றாள்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. என்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ண வந்தாள். அதான் அடிச்சேன்” என்றான்.
“இதை நீ நிஷா கிட்ட பண்ணியிருக்கணும். நிரோஷா கிட்டயில்ல. உனக்குப் பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்லணுமே தவிர, அடிக்கக் கூடாது”.
“ஆமா, அதுதான் என்னுடைய எண்ணத்திலேயும் இருந்துச்சு. ஆனா இந்தப் பொண்ணு இன்னொரு நிஷாவா மாறிட கூடாதுல. அதான் இப்பவே கண்டிச்சேன்” என்றான்.
“கண்டிஷன் பண்றதுக்கு உனக்கு என்னடா உரிமை இருக்கு?? அது அவங்க அப்பா அம்மா பாத்துப்பாங்க. நீதான் அந்தப் பொண்ண காதலிக்கல இல்ல?? அப்புறம் உனக்கேன் அந்தப் பொண்ண பத்தி கவலை?? அவங்க உன் மாமாவுக்குச் சொந்தக்காரங்க தான். அவங்க வீட்டுலயும் லவ் மேரேஜ் தானாம். அந்தப் பொண்ணோட அம்மாவும் தமிழ் பொண்ணுதான். எல்லாத்தையும் நல்லா தீர விசாரிச்சிட்டேன். சுத்தி வளைச்சு நமக்குச் சொந்தம் தான் ஆகுது. அதாவது உனக்கு முறையும் வருது. அந்தப் பொண்ணு உன்னை விரும்புச்சுன்னா நல்லா இருக்கும்னு நானும் கற்பனை கோட்டை கட்டிக்கிட்டு இருந்தா?? அதை அப்படியே புல்டவுசர் வச்சி இடிச்சிட்டு வர” என்று பொறுமினாள்.
“இதோ பாரு அக்கா?? என்னைப் பத்தின கற்பனையை எல்லாம் நீ காணாத. நான் கண்டதுக்கே ஊத்திக்கிச்சு. இப்ப நீ புதுசா கற்பனை கண்டு என்னை டென்ஷனாக்காத. இந்தப் பேச்சை இத்தோட விட்டுடு”.
“அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இருந்திருக்கலாமில்ல??” அப்பொழுதும் விடாது பேசினாள் ஆராதனா.
“இருந்துட்டு போகட்டும். அதனால எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் நான் இன்னொரு வாட்டி ஒரு பொண்ண நம்ப தயாரா இல்லை” என்றான்.
“ஏண்டா இப்படி எல்லாம் பேசுற??’ என்று ஆராதனா இறங்கி வந்தாள்.
“பின்ன என்ன அக்கா?? அந்தப் பொண்ணுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும் சொல்லுங்க?? எதுவுமே தெரியாம என் முகத்தை மட்டும் பாத்து எப்படி என்னைக் காதலிக்கிறேனு சொல்லுவாள்??” காட்டமாகக் கேட்டான்.
“ஒருவேளை நான் யோசிச்சா மாதிரி, அவளும் யோசிச்சு இருக்கலாம். சொந்தம் தானே காதலிச்சாலும் தப்பாகாது கல்யாணத்துல முடிஞ்சுரும். அப்படி இப்படின்னு ஏதாவது பாசிட்டிவா சிந்திச்சு இருக்கலாம்ல?? அவங்க அப்பா அம்மாவும் லவ் மேரேஜ் தான் பண்ணி இருக்காங்க. சோ லவ் மேரேஜை அவங்க வீட்டுலயும் அக்சப்ட் பண்ணிக்க வாய்ப்பு இருக்கு. நம்மளும் தமிழ்நாட்டு ஆளுங்க தானே??. ஒரு வகையில மாமாவுக்குச் சொந்தக்காரங்க. தாய்வழின்னு பார்த்தா நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவங்க அதனால எப்படி பார்த்தாலும் முடிச்சிடலாம்னு நினைச்சேன்” என்று ஆராதனா பேசிக் கொண்டிருக்க.
“நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உனக்கு யார் சொன்னது?? எனக்குக் கல்யாணமே வேண்டாம். பார்க்கக் கூடாதுன்னு சொன்னிங்க?? ட்ரிங் பண்ண கூடாது, சிகரெட் புடிக்க கூடாதுன்னு எல்லாம் கண்டிஷன் போட்டீங்க, ஓகே! நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்காதீங்க? நீங்கச் சொன்னாலும் நான் அதை கேட்கமாட்டேன்” என்றான் திடமாக.
“அப்பக் காலம் முழுக்க இப்படியே தேவதாஸ் மாதிரி இருக்க போறியா?? அதுவும் யாரோ ஒருத்தனோட பொண்டாட்டியை நினைச்சுட்டு”.
“நான் அவளை நினைச்சுக்கிட்டு இருக்க மாட்டேன். கண்டிப்பா முயற்சி பண்ணி என் மனசுல இருந்து அவளை முழுசா விளக்கிடுவேன். என் லைஃப்ல, இனி எந்தப் பொண்ணும் வேண்டாம்” என்றான் அழுத்தமாக.
“ஏன்டா இப்படி எல்லாம் பேசுற?? காலத்துக்கும் அப்படி எல்லாம் இருக்க முடியாது டா?? புரிஞ்சுக்கோடா?” ஒரு தமக்கையாகத் தன் தம்பியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“அக்கா அதை நான் பாத்துக்குறேன். நீங்க என் மனச மாத்துறதுக்காகத் தான் இங்க கூட்டிட்டு வந்தீங்க. வேற ஒரு பொண்ணு கூடக் கோத்து விடுவதற்காக இல்லை. காதல் தோல்வியில் முடிஞ்சு, ஒரு வாரம் கூட ஆகல?? அதுக்குள்ள இன்னொருத்திய பாத்துட்டு போவேனா?? நான் ஒன்னும் அந்த நிஷா மாதிரி கேவலமானவள் இல்லை. காதல் ஒருத்தருக்கு ஒரு முறை தான் வரும் அது எனக்கு வந்து போயிடுச்சு. அவ்வளவுதான்” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியில் செல்லப் போக.
அங்குப் பாவாடையை அழுத்தமாக இரண்டு கைகளிலும் பிடித்தபடி நின்றிருந்தாள் நிரோஷாவின் தங்கை அனன்யா.
“நீ இங்க என்ன பண்ற?? நாங்க பேசிட்டு இருக்கறதை ஒட்டு கேக்குறியா??” என்று கோவமாகக் கேட்டான் அர்ஜுன்.
இல்லையென்று அவள் தலையாட்டினாள்.
“அப்ப இங்க என்ன பண்ற??” என்றவன் அழுத்தமாகக் கேட்க.
அதற்குள் ஆராதனா வேகமாக அங்கு வந்து நின்றாள்.
“போதும்டா ஒருத்தியை அடிச்சது பத்தாதுன்னு இன்னொருத்தி மேல வேற கைய வைக்காத?? ஏற்கனவே ஏழரையை கூட்டி வச்சிருக்க. அது எப்ப வெடிக்கும்னு தெரியல? அங்க ஏழரை சனி புடிச்சிருக்குன்னு, இங்க கூட்டிட்டு வந்தா, இங்கேயும் பிரச்சனை ஏற்படுத்துவ போல இருக்கு?? இது உன் மாமா ஊரு. தயவு செஞ்சு உன் கையு, காலு, வாய்யுன்னு எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு” என்று தம்பியை கோபமாகக் கண்டித்தவள்.
அனன்யாவின் புறம் திரும்பிச் சிரித்தபடியே “என்னமா என்ன வேணும்?” என்று கேட்டாள்.
“பெரியம்மா வீட்ல வாழை மரம் குலைத்தள்ளி இருக்கு. அதைக் கொடுக்குறதுக்காக வந்தேன். அப்போதான் கீழ இருக்க ராசாத்தி அக்கா, மேல இருக்க உங்கள கூட்டிட்டு வரச் சொன்னாங்க. முக்கியமா பாப்பாவை. அதான் கூப்பிடலான்னு வந்தேன். அதுக்குள்ள நீங்க இவங்க ரூமுக்குள்ள வந்துட்டீங்க. ரெண்டு பேரும் பேசி முடிஞ்சதுக்கப்புறம் கூப்பிடலாம்னு வெயிட் பண்ணேன்” என்று ஆராதனாவிடம் பேசிக் கொண்டே, கடைசி வார்த்தையில் அவனைப் பார்த்துக் கூறினாள் அனன்யா.
அவன் அமைதியாக கைகளைக் கட்டிக்கொண்டு திரும்பி நின்று விட்டான்.
“அவன் பேசினதை எதுவும் மனசுல வச்சுக்காதம்மா. அப்புறம் நீ எதையும் உங்க வீட்டுல சொல்லல்ல??” என்று ஆராதனா கேட்க.
அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
“ரெண்டு குடும்பமும் ரொம்ப வருஷமா தோழமையா இருக்காங்க. ஒருவேளை நான் சொன்னா கண்டிப்பா பிரச்சினையாகும். அக்காவும் சொல்லக் கூடாதுன்னு தான் சொன்னாங்க. இதோ இந்த மாமாவும்” என்று அவள் ஆரம்பிக்க அவன் அவளை திரும்பிப் பார்த்து முறைத்தான் . சொல்ல வந்த கடைசி வார்த்தையை விழுங்கிக் கொண்டவள். “பெரியப்பாவுக்கு அக்கானா உசுரு.அவங்களுக்கு அடிபட்டது தெரிஞ்சுதுனா கண்டிப்பா இவங்க மேல கோபப்படுவாங்க. அதனால நானும் சொல்லல! மீண்டும் ஆராதனாவிடம்
தொடங்கியவள் அர்ஜுனிடம் வந்து முடித்தாள்.
“கீழ வந்துருங்க அக்கா” என்று கூறிவிட்டு அவள் நடக்க ஆரம்பித்துவிட.
போகும் அவளை பார்த்துவிட்டுத் திரும்பினான் அர்ஜுன்.
“பாரு, அந்த சின்னப் பிள்ளைக்கு இருக்கிற தெளிவு கூட உனக்கு இல்லை” என்றாள்
“அது சின்னப் பிள்ளையா??” அர்ஜுன் நக்கலாகக் கேட்டான்.
“இல்லையா பின்ன?? ஸ்கூல் தான் படிக்கிறாள். பிளஸ் ஒன்னோ, பிளஸ் டூவோ சொன்னாங்க” என்றாள் ஆராதனா.
“ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணு உங்களுக்குச் சின்ன பொண்ணா?” என்று கேட்டவன். காலையில் அவளை அப்படித்தான் நினைத்தான். சிறு பெண் என்று. ஆனால் இப்பொழுது தமக்கையிடம் தர்க்கம் செய்தான்.
“உன்னை விட சின்னப் பொண்ணு தானே?” என்று கேட்டு வைக்க. அவன் கண்களை மூடித் திறந்தான்.
“சரி அர்ஜுன், இனிமே எந்தப் பிரச்சனையும் வேண்டாம். நாங்களே திருமணத்துக்குப் பிறகு இப்ப தான் இங்க வரோம். நாம வந்து இங்குப் பிரச்சனை ஆனா அது பெரியவர்களுக்கு மனசு கஷ்டமா இருக்கும். உங்க மாமாவால வந்த மாதிரி ஆயிடும். மாமாவுக்காகவாவது கொஞ்சம் பொறுத்துப்போ” என்று கூறிவிட்டு தமக்கை செல்ல.
அவள் சொல்ல வருவது அவனுக்குப் புரிந்தது. இனிமேல் கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தவன். தன் மாமனுக்காக எது வேண்டுமென்றாலும் செய்வான்.
அதன் பிறகு நிரோஷா அவன் கண்களில் படவே இல்லை. அவ்வபோது அனன்யா தான் பட்டுக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்து அவள் சிநேகமாகச் சிரிக்க முயன்றாள். ஆனால் அவன் சிரிக்க வேண்டும் அல்லவா??
கடுவன் பூனைபோல முகத்தை வைத்துக் கொண்டு அவளை முறைத்து வைத்தான். ‘நான் நெருப்பு என்னிடம் நெருங்காதே’ என்று அந்தப் பார்வை அவளுக்கு உணர்த்தியது. ஏனோ அவளுக்கு அது பிடித்திருந்தது.
அவள் ஒன்றும் சிறு பெண் இல்லை தான். பார்வைகளுக்கான அர்த்தம் புரிந்தவள் தான். அவளும் பல பார்வைகளை கடந்து வந்தவன் தான். அதனால் அவனுடைய பார்வையின் அர்த்தமும் புரிந்தது.
இதுவரை அசடு வழியும் ஆண்களைத் தான் பார்த்து இருக்கிறாள். அவளுக்குத் தெரிந்த எல்லா ஆண்களும் அதிகமாகச் சைட் அடிப்பாங்க. அவளின் இரு அண்ணன்கள் உட்பட. ஆனால் இவன் வித்தியாசமாகத் தோன்றினான். அவன் தமக்கையிடம் பேசிக் கொண்டிருந்த எல்லாவற்றையும் அவள் ஒன்று விடாமல் கேட்டுவிட்டாள்.
அவன் நல்லவன் என்ற பிம்பத்தோடு கூட அவன் பாவம் என்ற அடைமொழியும் சேர்ந்து கொண்டது.
......
ஊர் விழா கோலாக்கலமாகக் காணப்பட்டது. அவனும் தன் தமக்கையோடு சேர்ந்து மனதை அதன் தொலைக்க எண்ணினான். அதில் வெற்றியும் கண்டான்.
அலைச்சல், சுத்தி பார்த்தது, கூட்டம், திருவிழா, ஜன நெரிச்சல், பொடிசுகளுடன் விளையாட்டு என்று சோர்வாக இருந்தது.
இரவு அறைக்கு வந்தபிறகு மீண்டும் நிஷாவின் எண்ணம் தலை தூக்கியது.
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். இல்லை, அவள் இப்பொழுது இன்னொருவனின் மனைவி. அவளைப் பற்றி இப்படி நினைப்பது தவறு. அவனுக்கு அவனே ஆயிரம் முறை சொல்லிக் கொண்டான்.
அவன் இந்த நிலையில் இருப்பான் என்று யூகித்தது போல, ஆராதனா வந்து நின்றாள்.
“நினைச்சேன் டா,
தேவதாசு போல இப்படித்தான் உட்கார்ந்துட்டு இருப்பேன்னு. இந்தா மாடு கண்ணு போட்டு இருக்காம். திருவிழா அதுவுமா சீம்பால் கிடைச்சிருக்கு. நாம சாப்பிட்டு இருக்க மாட்டோன்னு நமக்குக் கொடுத்து அனுப்புனாங்க” என்றாள்.
“நீ முதல்ல சாப்பிட்டு கொடு. நான் சாப்பிட்டு அப்படியே தானியாவுக்கும் கொடுக்கிறேன்” என்று கூறினாள் ஆராதனா.
“எனக்குச் சாப்பிடற மூடே இல்லகா. ப்ளீஸ் நீயே சாப்பிடுட்டு. இல்ல என் பங்கையும் சேர்த்து தானியாவுக்கு கொடுத்துடு”.
“நீ நைட் சாப்பாட்டையும் சரியா சாப்பிடல. காலையில சாப்பாட்டை சாப்பிடவே இல்ல. அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு வருத்தப்படுறாங்க தெரியுமா?? எனக்காகக் கொஞ்சம் எடுத்துக்கோ” என்று ஸ்பூனை எடுத்து நீட்டிக்கொண்டிருந்தாள்.
தமக்கைக்காகக் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டான். சுவை வித்தியாசமாகத்தான் இருந்தது.
அதன்பிறகு கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு. அவனுடன் ஏதேதோ கதைக்க ஆரம்பித்து விட்டாள்.
அவன் மனநிலையை மாற்றத்தான் தமக்கை நினைக்கிறாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
தமக்கை தன் மனநிலையை மாற்றத்தான் முயற்சிக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவனும் அதிலிருந்து மீளத்தான் சிரமப்பட்டு கொண்டிருந்தான். அதனால் தமக்கையின் பேச்சுக்கு அசைந்து கொடுத்தான்.
சிறிது நேரத்தில் கணவன் மகள் என்று அங்கே வந்துவிட. நால்வர் கூட்டணியில் வலுப்பெற்றுப் பேச்சுக்கள் தொடர்ந்தது.
“அம்மா இது டேஸ்டா இருக்கு” என்று கூறினாள் தானியதா.
“அப்படியாமா, பேசாம நம்ம வீட்டிலேயே ஒரு மாடு வாங்கி கட்டலாமா?? உங்க அம்மா சாணி அல்லுறாளானு கேளு?” என்றான் ராகேஷ்.
“அம்மா தான் சாணிய அல்லனுமா? அப்பா அல்லுனா சாணி வராதா என்ன?? உன் அப்பா கிளீன் பண்றதா இருந்தா, ஒன்னு என்ன?? நூறு கூட வாங்கி கட்ட சொல்லு” என்று கூறினாளே பார்க்கலாம்.
“அம்பேல், உங்க அக்கா கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. எப்படி எல்லாத்துக்கும் கவுண்டர் கொடுக்குறாள் பாத்தியா?? பொண்ணையும் அதே போல வளர்த்து வச்சிருக்காள். இதுக்கு உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்காம இருக்கலாம்” என்று கூறிவிட்டு மனைவியிடமிருந்து அடியையும் பெற்றுக் கொண்டான்.
“என்னடா மச்சான் அப்படியே இருக்க?? உன் அக்கா அடிக்கிறாள் கேள்வி கேட்க மாட்டியா??” என்று ராகேஷ் கேட்டு வைக்க.
எப்பொழுதுமே அவன் மாமனுக்கு துணைக்கு வருபவன். இம்முறை அமைதியாக எழுந்தான்.
“புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள மூணாவது மனுசங்க தலையிடக் கூடாது மாமா” என்று கூறியவன். சிறியவளை தூக்கிக்கொண்டு ஜன்னலின் அருகில் சென்று நின்று கொண்டான்.