புனர்ஜென்மம் 14
அவன் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான். பிறகு தன் தமக்கைக்கு அழைப்பு விடுத்தான்.
அவளும் அவசரமாக அவன் அழைப்பிற்கு வந்து அவன் முன்பாக நின்றாள்.
“பொண்ணுகிட்ட நான் தனியா பேசணும் யாருக்கும் தெரியாம தனியா அழைச்சிட்டு வரியா??” என்று கேட்டான்.
“என்னடா இவ்வளவு பெரிய குண்டை தூக்கி போடுற?? இப்போ எதுக்குடா அவள் கிட்ட பேசணும்?? உனக்கு நிச்சயம் தான் நடந்திருக்கு? கல்யாணம் இன்னும் முடியல?? நாளைக்கு காலையில தான் முடியும். இதுக்குள்ள எல்லாம் பேசக் கூடாது. கல்யாணத்தை நிறுத்துற ஐடியா ஏதாவது இருந்தா, தயவு செஞ்சு உன் மனச மாத்திக்கோ. ஏற்கனவே அப்பாவை நீ அவமதிச்சேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இதுல கல்யாணம் வேற நின்னுச்சுன்னா அவ்வளவுதான். அவங்களுக்கு பிபி இருக்கு மறந்துடாத?” என்று படபடத்துக்கொண்டே அவன் பிபியை எகிர வைத்துக் கொண்டு இருந்தாள்.
“உன் தம்பி என்ன அவ்வளவு மோசமானவனா?? என்னைப் பத்தி நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதானா?? இத்தனை தூரம் கொண்டு வந்துட்டு கல்யாணத்தை நிறுத்துவேனா?? இத்தனை செலவு பண்ணது கல்யாணத்தை நிறுத்துறதுக்கா?? பாவம் பொண்ண பெத்தவங்களும் அத்தனை செலவு பண்ணி இருப்பாங்க. இப்ப நான் கல்யாணத்தை நிறுத்துனா, அந்தப் பொண்ணுக்கு மட்டுமில்ல, ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் எவ்வளவு பிரச்சனைகள் வரும்னு எனக்குத் தெரியும். ஆனா மண்டை காயுது என்னால நிம்மதியா இருக்க முடியல. அந்தப் பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசிட்டா நல்லா இருக்கும். தெளிவு கிடைக்கும்னு தோணுது. புரிஞ்சுக்கோ அக்கா” என்றான்.
கோபமாக ஆரம்பித்தவன் பொறுமையாகத் தான் முடித்திருந்தான்.
“டேய் இன்னும் ஒரு நாள் பொறுத்துக்கோடா. நாளைக்கு திருமணம் முடிஞ்சதுக்கப்புறம் கூட நீ அவள் கிட்ட பேசிக்கோ. தனியா கூப்பிட்டு வந்து கூடப் பேசிக்கோ. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். பாலும் பழமும் குடுக்குறேன்னு சொல்லி ரெண்டு பேரையும் தனியா நானே அனுப்பி வைக்கிறேன்டா” என்று அவள் படபடக்க.
“அப்போ உன்னோட பர்மிஷன் எனக்கு எதுக்கு??” என்றான் அசட்டையாக.
“ராஜ்” என்று தமக்கை கெஞ்சலாக இழுத்தாள்.
“இப்போ உன்னால கூட்டிட்டு வர முடியுமா முடியாதா?? இல்ல நானே நேரா பொண்ணு ரூமுக்கு போய் அவங்க அப்பா முன்னாடி நின்னு உங்க பொண்ணு கிட்ட நான் பேசணும். கொஞ்சம் அனுப்பி வைங்கன்னு கேட்டிடுவேன்” என்று அசால்டாகக் கூறினான்.
அவள் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
“ஏன்டா இப்படி பண்ணி தொலைக்குற??” என்று தலையில் கையை வைத்து அப்படியே நின்றிருந்தாள்.
“என்ன நம்பி தானே பொண்ணு குடுக்குறாங்க? என்னை நம்பி கொஞ்ச நேரம் பேசறதுக்கு அனுப்ப மாட்டாங்களா?” என்று அவன் வியக்கானம் பேசினான்.
“தெய்வமே உன்கிட்ட பேசி யாரும் ஜெயிக்க முடியாது. இரு நானே ஏதாவது ஒன்னு பண்ணி கூட்டிட்டு வரப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு நடந்தவள். மீண்டும் தம்பியின் புறம் வந்து நின்றாள்.
“இப்ப என்ன??” என்று அவன் கேட்க.
“இல்ல உண்மையாவே கூட்டிட்டு வரணுமா?? உளலாய்க்கு சொல்றியா?” என்று கேட்டாள்.
“உன் தம்பி முகத்தைப் பார்த்தா உனக்கு விளையாடுற மாதிரி தெரியுதா?? என்று அவன் அழுத்தமாக கேட்டான்.
“இல்ல, ஆனா எல்லாரும் படுக்கப் போயிருப்பாங்க. கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பாங்க. நான் ஒன்னும் அவ்வளவு பெரியவங்க இல்ல, அவங்க கிட்ட போய்க் கேட்டு பர்மிஷன் வாங்கி கூட்டிட்டு வரதுக்கு. நான் கேட்டாலும் அவங்க அனுப்புவாங்களானு தெரியலையே?? அனுப்ப மாட்டாங்கன்னு தான்டா தோணுது” என்று அவள் சிறு குரலில் பேசினாள்.
“பேசாம, நீ இங்கேயே இரு. நான் அந்தப் பொண்ணு ரூமுக்கு போய் அங்கேயே பேசிட்டு வரேன்” என்று அவன் அவளை தாண்டிக் கொண்டு செல்லப் பார்க்க.
அவன் கையை பிடித்துத் தடுத்து நிறுத்தியவள். “சரி, ரூமுக்கு எல்லாம் கூட்டிட்டு வர முடியாது. தப்பா போயிடும். வெளியே வந்து காரிடார்ல நில்லு. நான் கூட்டிட்டு வரேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
‘இவங்களுக்கெல்லாம் பொறுமையா பேசினா மண்டையில் ஏறவே மாட்டேங்குது. என்னோட அழுத்தமான டோனை இறக்கினால் மட்டும்தான் புரியுது’ நினைத்துக் கொண்டே தலையைக் கோதியவன். இன்னுமே வேட்டி சட்டையில் தான் இருந்தான்.
தமக்கையின் பின்னோடு வந்தவன். அந்த நீண்ட காரீடாரில் பால்கனியின் ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு, அவளை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.
சற்று நேரம் பிடித்தது. பிறகு மணமகள் அறையிலிருந்து அவர்கள் இருவரும் மட்டும் வெளியில் வருவது தெரிந்தது. அவள் இப்போது சுடிதாருக்கு மாறி இருந்தாள். துப்பட்டாவை போட்டுக்கொண்டு தலை குனிந்து சங்கடத்துடன் வருவது தெரிந்தது.
இமைக்காமல் அவளையே தான் பார்த்திருந்தான்.
தமக்கையிடம் சகஜமாகப் பேசிக்கொண்டே வந்தவள். அவனைக் கண்டதும் ஜெர்க்காகி நின்றாள்.
அவனைப் பார்த்ததும் திகைத்து நின்றவள். பிறகு நாத்தனாரை திரும்பிப் பார்த்தாள்.
“சாரி ஸ்ரீ, உங்க அம்மா அப்பா கிட்ட பொய் தான் சொன்னேன். அவன் உன்கிட்ட பேசணும்னு சொன்னான். நான் அவனுக்கு எவ்வளவோ புரிய வைக்க முயற்சி பண்ணேன். ஆனா கொஞ்சம் அடம் அவன். அதனால கேட்கவே இல்லை. மத்தபடி நல்லவன் தான். நீ எதுவும் பயப்படாதே” என்று சர்டிபிகேட் வேறு கொடுத்தாள்.
அவளுக்குத்தான் அவனைப் பற்றித் தெரியுமே??. ஆனாலும் கால்கள் தடுமாறியது. கைகள் அவள் சுடிதாரை இறுக்கிப்பிடித்து திருகியது. அவளுடைய பதட்டத்தை அவனுக்கும் சேர்த்து உணர்த்தியது.
அவன் தன் கட்டை விரல் நகத்தைக் கடித்தபடியே யோசனையோடு அவளைப் பார்த்தான்.
பிறகு அவள் கையைப் பிடித்துத் தமக்கை இழுத்து வருவது தெரிய. அவன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான்.
அவளை அருகில் இழுத்து வந்து நிறுத்திவிட்டு. “நீங்கப் பேசுங்க. நான் காதைப் பொத்திகிட்டு அப்படி தூரமா இருக்கேன்” என்றாள்.
ராஜ் தமக்கையை ஊடுருவும் பார்வை பார்த்தான்.
“விட்டுட்டு எல்லாம் போக முடியாது டா. அவங்க அம்மா அப்பா யாராவது சந்தேகப்பட்டு வெளிய வந்து பார்த்தாங்கனா அவ்வளவுதான்?. இதுல பொண்ணு வீட்டுக்காரங்க யாராவது பாத்துட்டா சோலி முடிஞ்சுடும். நம்மள தான் தப்பா நினைப்பாங்க. அதனால நான் இங்கேயே நிற்கிறேன்னு சொல்றேன். உன் மேல சந்தேகப்பட்டெல்லாம் இல்ல. என் தம்பியை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” என்று கூறினாள்.
“உன்னை போகச் சொல்லி நான் சொல்லவே இல்லையே??” என்று தமக்கையிடம் பேசினாலும், பார்வை ஸ்ரீயின் மீது தான் இருந்தது.
‘ஆத்தாடி, இவன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது’ என்று மனதுக்குள் நினைத்தவள்.
“இல்ல நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பர்சனலா பேசுவீங்கள்ள?” என்று தயக்கத்தோடு கேட்டாள்.
“நான் என்ன ரொமான்ஸ் பண்றதுக்காகவா கூப்பிட்டிருக்கேன்?? இல்ல கிஸ்ஸடிக்க கூப்பிட்டு இருக்கேனா?? உன்னை ஓரம் நிறுத்தி வைக்கிறதுக்கு, இங்கேயே நில்லு. அப்படி உனக்குத் தெரியாத எந்த விஷயமும் இல்லை” என்று காட்டமாகக் கூறினான்.
அவன் தமக்கை வாயில் கையை வைத்துக் கொள்ள.
ஸ்ரீ தடுமாற்றத்தை குறைப்பதற்காக நாத்தனாரை தான் பிடித்துக் கொண்டாள். அதையும் அவன் அவதானித்தான்.
‘அப்ப எப்படி இருந்தாளோ, அதே மாதிரி இருக்காள். உருவத்தில் மட்டும் இல்லை. பயத்துலையும் அப்படியே தான் இருக்காள்” என்று மனதிலும் நினைத்துக் கொண்டவன்.
“நான் என்ன பேயா பிசாசா என்னை பார்த்துப் பயப்படுறதுக்கு??” என்று அழுத்தமாகக் கேட்க.
இதே அழுத்தம்,
இதே குரல்,
இதே வார்த்தையை அச்சுப் பிசகாமல் அவன் அவளை பார்த்துக் கேட்டது ஞாபகம் வர, விழுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் உள்ளமும் ‘இதே பார்வை’ என்று எண்ணிக்கொண்டது. தலையை உலுக்கி கொண்டான்.
“சரி நான் விஷயத்துக்கு வரேன். உனக்கு இந்தக் கல்யாணத்துல முழு சம்மதமா?? ஐ மீன் உன்னை யாரும் போர்ஸ் பண்ணலையே??” என்று கேட்டான்.
பேச வருவதை சரியாகப் பேசவில்லை என்றால், அது அவளைப் பாதித்துவிடும். அதனால் மிக கவனமாகப் பேசினான்.
அவள் செதுக்கி வைத்த சிலைபோல அப்படியே நின்றிருந்தாள்.
“உன்னைத் தான் கேட்கிறேன்?? யாராவது இந்தக் கல்யாணத்துக்கு வற்புறுத்துனாங்களா?? என்று மிக அழுத்தமாகக் கேட்டான்.
அந்தக் கர்ஜனை அவளுக்கு இன்னும் பீதியை கிளப்பியது.
‘இல்லை’ என்று தலையாட்டினாள்.
“உனக்கு பேசத் தெரியும்னு எனக்குத் தெரியும். இப்படி தலையாட்டினா என்ன அர்த்தம்?? மரியாதை குறைவுன்னு நினைச்சுக்கவா? இல்ல பதில் சொல்ல விருப்பம் இல்லன்னு நினைக்கவா?” மீண்டும் அழுத்தமான வார்த்தைகள்.
“இல்ல, என்னை யாரும் வற்புறுத்தல” என்றாள் அவசரமாக.
“ராஜ் ஏன்டா இப்படி பயமுறுத்துற??” என்று தமக்கை பேச வர.
தன் உதட்டில் கையை வைத்து ‘ஹுஷ்’ என்றான்.
அதில் அவளுக்குச் சர்வமும் நடுங்கியது.
“உன்னை நான் என் கூட நிக்க தான் சொன்னேன். எங்க ரெண்டு பேருக்கு நடுவுல பேசச் சொல்லல?? நாங்க ரெண்டு பேரும் பேசுவோம். நீ அமைதியா கேக்கணும். அவ்வளவுதான். யாராவது பார்த்தா தப்பா ஆய்ட கூடாதுன்றதுக்காகத் தான் உன்னை நிறுத்தி வச்சிருக்கேன். பட் என்னோட கேள்வி இவள் கிட்ட தான். உன் கிட்ட இல்ல, அதனால நீ அமைதியா இரு” என்றான் அழுத்தமாக.
அவளுக்கும் மரியாதை இல்லை, அவன் தமக்கைக்கும் மரியாதை இல்லை. ஒருமையில் தான் பேசினான். ஆனால் அதை அவள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவனுடைய மேனரிசமே அப்படித்தான். ஆளுமை, ஒருமை, தைரியம், அசட்டை இது எல்லாம் அவனைக் கல்லூரியில் பார்க்கும் போதே அவனிடம் தென்பட்ட ஒன்றுதான்.
ஆனால் ஏனோ இந்தப் பெண்களுக்கு அப்படிப்பட்டவனை தான் பிடித்துத் தொலைகிறது. அவளுக்குமே அப்படித்தான் பிடித்துத் தொலைத்தது.
“உனக்கு நான் தான் மாப்பிள்ளைனு தெரியுமா??” என்று கேட்டான்.
இம்முறை தலையாட்டினால் கண்டிப்பாகத் திட்டுவான் என்று நினைத்தவள்.
“தெரியும்” என்று வாய்மொழியாகக் கூறிக்கொண்டே தலையாட்டினாள்.
“உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமா??” என்று மீண்டும் கேட்டான்.
“சம்மதம்” என்று தலையாட்டினாள்.
“எல்லாத்துக்கும் நீ ஒரே மாதிரி தலையாட்டுனா எனக்கு என்னனு புரியும்?? அதென்ன க்விஸ் காம்படிஷனா நடத்துறேன். ஒத்த வார்த்தையில் பதில் சொல்ற?? வாயைத் திறந்து ஃபுல்லா சொல்லு. எனக்குத் தெளிவு வேணும்” என்று கேட்டான்.
“எதுக்குடா அவளைப் புடிச்சு கத்துற?? அவள் தான் தெளிவா சொல்றாள்ல?? இதுக்கு மேல அவள் என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்குற?? வரவேற்பு முடிஞ்சிருச்சு, நாளைக்கு காலையில கல்யாணம். இப்ப ஒக்காந்து பொண்ணு கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்க?? பொண்ணு பார்க்க வர சொல்லும்போது வேண்டாம்னு முறுக்கிக்க வேண்டியது. இப்ப வந்து நிக்க வச்சு கேள்வி கேட்க வேண்டியது?? அன்னைக்கு எவ்வளவு கெஞ்சினேன். பொண்ணு பார்க்க வாடான்னு. அப்ப வர வேண்டியதுதானே?? நாளைக்கு கல்யாணத்தை வெச்சுக்கிட்டு இன்னைக்கு பொண்ணு கிட்ட கேக்குற கேள்வியாடா இது??” தைரியத்தை வளர்த்துக் கொண்டு, நான் உனக்கு அக்கா என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தாள்.
“சரி கூட்டிட்டு போயிடு. மீதியை நான் நாளைக்கு நைட்டு பேசிக்கிறேன்” என்றானே பார்க்கலாம்.
அவளுக்கு இன்னும் வயிற்றில் புளியை கரைத்தது. எச்சிலை உள்க்கூட்டி விழுங்கினாள்.
அவள் முகத்தையே அவதானித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளுடைய பதட்டம் தெரிந்தது. அவள் எச்சிலை விழுங்குவது கூடத் தெரிந்தது.
‘அவளை அணு அணுவா பார்க்கிற மாதிரி இருக்கு?’ என்று மூளை கேள்வி கேட்க.
கண்களை மூடித் தலையை உழுக்கிக் கொண்டான்.
‘திரும்பி நடப்பதா வேண்டாமா??’ என்று தயக்கத்தோடு நின்றிருந்தாள்.
“நீ வா ஸ்ரீ” என்று தமக்கை அவள் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல.
போகும் அவள் முதுகையை பார்த்திருந்தான். ஊசி ஒன்று பின்னால் துளைப்பது போல இருக்க. அவள் அறையின் பக்கம் சென்றவள். அவனை திரும்பிப் பார்த்தாள்.
பார்வைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு நின்றது. ஆனால் இரண்டு பார்வைகளிலும் கேள்விகள் இருந்தது பதில்கள் இல்லை.
‘இவன் நாளை என்ன கேட்கப் போகிறான்??’ என்ற கேள்வி அவளிடம் இருக்க.
‘இவள் எல்லாம் தெரிந்து எதற்காக என்னைத் திருமணம் செய்கிறாள்” என்ற கேள்வி அவனிடமும் இருந்தது.
ஆனால் நாளை இரவுக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவள் தன் மனதில் உருப்போட்டுக் கொண்டு இரவு முழுவதும் அவன் என்ன கேள்வி கேட்பான். தான் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனும் அவள் மனது கோனாதபடி அவளிடம் என்ன பேசுவது? எப்படி புரிய வைப்பது? என்று ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தான்.