புனர் ஜென்மம் 18
அவனும் அவன் கல்லூரித் தோழன் பீட்டரும், அலுவலகத் தோழர்களும் மட்டுமே அவன் அருகில் அமர்ந்துகொண்டிருந்தான். பாலும் பழமும் கொடுத்து, மற்ற சடங்குகள் முடிவடைந்த பிறகு. புகைப்படங்கள் எல்லாம் எடுத்து முடித்தவுடன் அமைதியாக வந்து இங்கு அமர்ந்துவிட்டான்.
இப்பொழுது சத்திரத்திற்குச் செட்டில் செய்ய வேண்டிய பண விவகாரங்களை எல்லாம் அவனுடைய மாமனும் மாமனாரும் கவனித்துக் கொண்டிருக்க, அவன் அமைதியாகத்தான் அமர்ந்திருந்தான். தமக்கையின் திருமணத்தை அவன்தான் முன்னின்று நடத்தினான். இதில் முதலில் அவனுக்கு ஈடுபாடு இல்லை என்பதால் ஒதுங்கி நின்றான்; பிறகு தந்தை ஸ்தானத்தில் இருந்து மாமா செய்யும்போது, அதற்கு மரியாதை கொடுத்து அவன் அமைதியாக இருந்துவிட்டான்.
ஆனால் சும்மா சொல்லக்கூடாது; அவன் தகப்பன்தான் சரியில்லையே தவிர, தமக்கை, தமக்கையின் கணவன் என்று எல்லோரும் நல்லவிதமாகத்தான் அமைந்திருந்தார்கள். இதோ இப்பொழுது மனைவி; அவள் எப்படி இருக்கிறாள் என்று இனிமேல்தான் தெரியும். அவளைப் பற்றி அவனுக்குத் தெரிந்தவரை எல்லாம் நல்லவிதமாகத்தான் இருந்தது. ஆனால், அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பந்தம் என்பதுதான் அங்கு கேள்விக்குறியாக இருந்தது. பெரிதாகத் தங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வராது என்று அவனுக்குத் தோன்றினாலும் — அதுவும் தன் துணைவி இவள்தான் என்று தெரிந்த பிறகு தோன்றினாலும் — அவளிடம் தெளிவு பெற வேண்டிய விஷயங்கள் இன்னும் இருந்தன.
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வந்தவர்கள் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கிளம்பலாம்” என்றார்கள். “எங்கு கிளம்ப வேண்டும்?” என்று அவன் கேட்க, “முதலில் நம் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றிவிட்டு, பிறகு பெண் வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்றார்கள்.
“என்ன, பொண்ணு வீட்டுக்கா? அங்க போய் என்ன பண்ணனும்?” என்று கேட்டுவிட்டான்.
அவன் மாமனாரும் அருகில் இருக்க, அவன் கையை அழுத்தமாகப் பிடித்தார் சேகர் (திவ்யாவின் கணவர்).
உடனே நிலைமையை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டவன், “இல்ல, எனக்கு ஃபார்மாலிட்டீஸ் சரியா தெரியல, அதனாலதான் கேட்டேன். பொண்ணு வீட்டுக்குப்போய் அடுத்து என்ன பண்ணனும்?” என்று குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்.
அவரால் அதற்கு எப்படிப் பதில் சொல்ல முடியும்? “உங்க மாமா சொல்லுவார்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவன் திரும்பிச் சேகரைப் பார்த்தான்.
“ஏன்டா, நான் உங்க வீட்டுக்கு வரும்போது என்ன பண்ணேனோ, அதைத்தாண்டா பண்ணணும்” என்று கூறிய சேகருக்குமே சங்கடம்தான். அவன் நெற்றியிலேயே தட்டிக்கொண்டு, அப்படியே கைகளைக் கண்களுக்கு இறக்கியவன், கண்களை மூடிக்கொண்டான்.
…………
அவளுடைய அறை.
படத்தில் வருவது போல, ஆடம்பர அலங்காரம் இல்லை. மிதமான, அழகான அலங்காரம். அதுவே அவனுக்கு ரசனையைக் கொடுத்தது. கண்டிப்பாக அவள் செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இப்படித்தான் வேண்டும் என்று கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டான்.
அந்த அறை முழுவதும் அவளின் வாசம் வீசுவது போல ஒரு உணர்வு. காலையில் தாலியைக் கட்டும் போதுதான் அவளின் வாசத்தை அவன் முதன்முதலாக உணர்ந்தது. அவனையும் அறியாமல் இன்னொரு பெண்ணின் வாசமும் அவன் நாசியில் வீசிச் சென்றது. தலையை உலுக்கிக் கொண்டான். அவளை எதிர்கொள்ள இன்னும் பதட்டம் மீதம் இருந்தது.
‘இது தவறு. இனி அவளின் நினைவுகள் தனக்கு வரவே கூடாது. ஒருவேளை வேறு ஒரு பெண்ணை மணந்திருந்தால், பழைய கசடுகள் நினைவில் வராமல் இருந்திருக்குமோ?’ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. இது காலம் கடந்த யோசனை.
‘பழைய நினைவுகள் என்பது கசப்பான நினைவுகள் தானே? அதனால் இது எந்த வகையிலும் உன் வாழ்க்கையைப் பாதிக்காது’ அவனது மனம் அறிவுரை கூறியது.
எப்படி தான், முற்றிலும் அறிமுகமில்லாதவரின் அறையில் தங்குவது என்று தெரியவில்லை. அதுவும் ஒரு பெண்ணின் அறையில். அது அவனுக்கு முற்றிலும் பழக்கம் இல்லாத ஒன்று. தமக்கையின் அறையில் கூட அவன் தங்கியதில்லை. ஆண் நண்பர்களின் வீட்டிற்கு அவர்களுடன் சுற்றுலாவிற்கு என்று சென்றதில்லை. அதனால் இன்னொருவரின் அறையில் தங்குவதே அவனுக்கு விசித்திரமாகத்தான் இருந்தது.
எப்படித்தான் பெண்கள் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வந்து இன்னொரு வீட்டில் தங்குகிறார்களோ? நினைக்கும் போதே மலைப்பாக இருந்தது.
ஜன்னலின் வழியாகச் சிலுசிலுவென்று காற்று அடித்துக் கொண்டிருந்தது. மேல்மாடி என்பதால் அந்தக் காற்று அறையையே முழுமையாக்கி இருந்தது. அதன் அருகில் சென்று நின்றான். இரவின் இருளைக் கிழித்துக்கொண்டு மின்விளக்குகள் அலங்கார விளக்குகளைப் போலக் காட்சியளித்தன. இதழ்களின் ஓரத்தில் மெல்லிய புன்னகை.
கதவு திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்த்தான். கிண்டல்களுக்கு மத்தியில் அவள் உள்ளே வருவது தெரிந்தது. ஸ்ரீலீலா, அவனுக்கு அவளை லீலாவாகத்தான் தெரியும். ஆனால், அவர்கள் வீட்டில் ஸ்ரீ என்று அழைப்பதை அவன் கவனித்திருக்கிறான். அவளை ஆழ்ந்து பார்த்தான். வெள்ளை நிறக் காட்டன் புடவையில் ஒப்பனை இல்லாத அழகுடன் நின்றிருந்தாள்.
“அங்கேயே எவ்வளவு நேரம் நிக்கப் போற? உள்ள வரப் போறியா? இல்ல நான் வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா?” என்றதும் துணுக்குற்று நிமிர்ந்து பார்த்தாள். கல்லூரியில் அவன் கிண்டல் செய்த அதே வார்த்தைகள்.
“நான் தூக்கிட்டு வந்தாதான் உள்ள வர்ற ஐடியாவில் இருக்குறீயா? எனக்குப் பிரச்சனை இல்ல, ஐ அம் ரெடி டு பிக்கப் யூ” என்றான் கிண்டல் தொனியில்.
இல்லை என்று அவசரமாகத் தலையாட்டியபடி, வேகமாக அவன் அருகில் வந்து நின்றாள். குளுமையான அந்த அறையிலும் வியர்வை முத்துக்கள் ‘கோர்க்கவா, சேர்க்கவா?’ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்க, அவள் கையில் இருப்பதை வாங்கி டேபிளின் மீது வைத்தான்.
“என்னைப் பார்த்து பயப்படுறியா?” என்று கேட்டான் ராஜ்.
“இல்ல சீனியர்” அவசரமாகக் கூறினாள்.
“சீனியர்?” என்று அவன் ஆழ்ந்து உச்சரிக்க, அவள் நாக்கை பற்களால் கடித்துத் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு யாசித்தாள்.
“அடிக்கடி இந்த வார்த்தையைக் கேட்க வேண்டி இருக்கும் போல? பரவால்ல எனக்குப் பிரச்சனை இல்ல, இங்க வந்து உட்காரு” என்று கட்டிலைக் காட்டினான்.
வேகமாகச் சென்று அவன் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவளுக்கு முன்பாகக் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான். அவள் உதடுகளை மடித்துக் கடித்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
“என் போட்டோவைப் பார்த்த, என்னை ஞாபகமும் வந்துருச்சு. அப்படி இருந்தும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஏன் நினைச்ச?” என்று கேட்டான்.
அவள் எதிர்நோக்கிய கேள்விதான். எச்சிலை விழுங்கிக் கொண்டாள். “அப்பா காட்டும் போது, எனக்கு அப்ஜெக்ஷன் சொல்ல காரணம் இல்ல சீனியர்” என்றாள்.
மீண்டும் நாக்கைக் கடித்துக் கொண்டவள், “சாரி, உங்களை எப்படிக் கூப்பிடுறதுன்னு தெரியல?” என்றாள்.
“நிமிர்ந்து பார்த்துப் பேசப் பழகு ஸ்ரீ. நீ பேசும் போது உன் பார்வையை நான் பாக்கணும். இனி வாழ்க்கை முழுக்க இதே வார்த்தையை என்னை ரிப்பீட் பண்ண வைக்காத” என்றான் அழுத்தமான குரலில்.
சடார் என்று எழுந்து நின்றவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உட்கார்ந்துட்டே பாரு. எனக்கு இவ்வளவு மரியாதை அவசியமில்லை” என்றான்.
‘நான் நின்று கொண்டிருந்தாலே இவன் உயரத்திற்குப் பாதிதான் இருப்பேன். அமர்ந்து கொண்டிருந்தால், பனை மரத்தைப் பார்ப்பது போல் அல்லவா பார்க்க வேண்டும்?’ மனதிற்குள் அவள் நினைத்ததை அவன் வாய்விட்டுக் கூறினான். அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.
“அது என்னமோ தெரியல? நேத்து நைட்ல இருந்து உன் மனசுல தோன்றுவதெல்லாம் எனக்குத் தெரியுது. நான் சொன்னதுதானே நினைச்ச?” கேள்வியாக நிறுத்தினான். அவள் ஆமாம் என்று தலையை ஆட்டிவிட்டு, பின் தன்னையே நொந்து கொண்டாள்.
அதில் அவனது இதழ்களின் ஓரத்தில் மெல்லிய புன்னகை.
‘அப்போது போலத்தான் இப்போதும் இருக்கிறாள். மனதில் இருப்பதை மறைக்கத் தெரியாது. திறந்த புத்தகம்தான் இவள்’ என்று நினைத்துக் கொண்டான்.
“நம்ம ரெண்டு பேரோட காஸ்ட் வேற. எங்க வீட்ல என்னாலதான் எங்க அம்மா காஸ்ட் மாத்திப் பெண் தேடினாங்க. அவங்களைப் பொறுத்த வரைக்கும் எனக்குக் கல்யாணம் ஆகணும், என்னுடைய எதிர்பார்ப்புக்குப் பெண் இருக்கணும், அது எந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லைனு யோசிச்சாங்க. எனக்கு அது தெரியும். ஆனா உங்க வீட்ல, காஸ்ட் மாத்தி மாப்பிள்ளை பார்க்கறதுக்கு ரீசன் என்ன?”.
இதற்கு அவள் என்ன பதில் சொல்வது? இந்தக் கேள்வியை அவள் யோசிக்கவே இல்லையே? அவன் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“தெரியல, அப்பாகிட்டதான் கேட்கணும்” ‘சீனியர்’ என்ற வார்த்தையைக் கவனமாகத் தவிர்த்துவிட்டுப் பேசினாள். அவனுக்குச் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற படத்தில் இப்படி கேட்டது ஞாபகம் வந்தது.
“நீ டாடியோட லிட்டில் பிரின்சஸா?” என்று கேட்டான்.
ஆமாம் என்று தலையாட்டிவிட்டுப் பிறகு இல்லை என்று அவசரமாகத் தலையாட்டினாள். அவள் தந்தைக்குச் செல்லம்தான், ஆனால் இந்த வார்த்தைக்கு வேறு அர்த்தத்தை அல்லவா இந்தச் சமூகம் வகுத்து வைத்திருக்கிறது?
ஏனோ, அந்த மொழிகூட அவனுக்குப் புரிந்தது.
“அப்படின்னா உனக்குச் சமைக்கத் தெரியும், வீட்டு வேலைகள் எல்லாம் செய்யத் தெரியும், அடம்பிடிக்காம சொல்றதைக் கேட்டுக்கத் தெரியும். அம் ஐ ரைட்?” என்று கேட்டான்.
அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்.
“என்னைப் பார்த்துப் பேசுறது மட்டும் இல்ல, நான் கேட்கிற கேள்விக்கு வாயைத் திறந்து பதில் சொல்லணும். இந்த ரெண்டு வார்த்தையையும் என்னைத் திருப்பிச் சொல்ல வைக்காத” என்றான்.
தலையாட்டச் சென்றவள், “ஓகே சீனியர்” என்று கூறிவிட்டாள்.
“என் பெயர் தெரியும் தானே? என்னை நீ பெயர் சொல்லியே கூப்பிடலாம். இல்ல அத்தான், மாமா, அத்திம்பேர், வேறு ஏதாவது செல்லப் பெயர் நீ வைக்கணும்னு நினைச்சா அதை வச்சுக் கூப்பிடலாம்” என்றான்.
அவளால் அவன் கூறிய வார்த்தைகளைச் சொல்லி அவனை அழைக்க முடியுமா? ஏனோ அவள் மனதில் அவன் சீனியராகத்தான் பதிந்திருந்தான். அதனால்தான் அவளையும் மீறி அந்த வார்த்தை வந்துகொண்டே இருக்கிறது. தலையாட்டினால் அவனுக்குப் பிடிக்காது; அவனுக்குப் பிடிக்காததைச் செய்ய அவள் எப்போதும் விரும்புவதில்லை.
“எனக்கு டக்குனு இப்படி எல்லாம் கூப்பிட வரல. ஒரு நாள் டைம் கொடுத்தீங்கன்னா யோசிச்சு முடிவெடுக்கிறேன்” என்றாள்.
மெச்சுதலாக உதட்டைச் சுளித்தான்.
“ஓகே, நான் சொல்ற வார்த்தைகளை நீ உடனே கேட்ச்சப் பண்ணிக்குற. ஐ அம் இம்ப்ரெஸ்ட். எனக்கு நீ இது போல ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம். என்கிட்ட வேறு ஏதாவது கேள்வி கேட்கணும்னாலும் கேட்கலாம்” என்றான்.
“எதுவும் இல்ல சீனியர்” மீண்டும் மூக்கைச் சுருக்கி நாக்கைக் கடித்தாள்.
“அவ்வளவு எல்லாம் ஸ்ட்ரெஷாகாத, எனக்குப் பிரச்சினை இல்லைன்னு நான் சொல்லிட்டேன். சும்மா சும்மா நாக்கைக் கடிக்காத. நாளைக்கு அது சிவந்து போயிருந்தா, நான் தான் கடிச்சேன்னு தப்புத் தப்பா நினைச்சிடுவாங்க பெரியவங்க” என்று கூறி அவள் முகத்தைச் செம்மையுற வைத்திருந்தான்.
அந்த வெட்கத்தை, முகச்சிவப்பை, உரிமை உணர்வோடு முதல் முறையாக ரசித்தான்.
“வேறு யாராவது பொண்ணா இருந்தா என்னோட பாஸ்ட்டைப் பத்தி நான் சொல்லி இருப்பேன். உன்கிட்ட அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன். நான் திரும்பிப் பார்க்க விரும்பாத என்னுடைய பாஸ்ட், இன்ஃபேக்ட் அதைப் பற்றிப் பேசக்கூட விரும்பல. ஆனா உனக்கு அதுல ஏதாவது சந்தேகம் இருந்தா என்கிட்ட நீ கேட்கலாம்” என்றான்.
“எதுவும் இல்ல” என்றாள்.
“எதுவுமே இல்லையா? கமான் லீலா, நீ என்னுடைய மனைவி. என்னைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கிற உரிமை உனக்கு இருக்கு”. அந்த வார்த்தைகளில் அவள் மனதில் குற்ற உணர்வு ஏற்பட்டது.
“உனக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் சான்ஸ். இன்னையோட இதைப் பத்திப் பேச நான் விருப்பப்படல. சோ, என்னோட பாஸ்ட்டைப் பத்தி நீ எந்தக் கேள்வி வேணாலும் கேட்கலாம், பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன். இன்னைக்கு நான் கொடுக்கிற சான்ஸை நீ வேஸ்ட் பண்ணிட்டு, நம்ம லைஃபை லீட் பண்ணி வாழ்ந்துட்டு இருக்கும் போது என்னைச் சந்தேகப்படுறதோ, இல்ல வேறு ஏதாவது என்னைப் பத்தி நினைக்குறதையோ, நான் விரும்பல. சோ, நீ இன்னைக்கு எது கேட்கிறதா இருந்தாலும் கேட்டிரு” என்றான் அழுத்தமாக.
ஆனால் அவனைப் போல அவளுக்கும் அதைப் பற்றிப் பேச விருப்பமில்லை. அவள் மனதில் இருப்பதைச் சொல்ல வேண்டும், ஆனால் இதற்குள் சொன்னால் அவன் தவறாக எடுத்துக் கொள்வானோ என்ற பயமும் இருந்தது. அவளுடைய தடுமாற்றத்தை உணர்ந்தான், ஆனால் அது எதனால் என்று தெரியவில்லை.
“வாட்? நான் பழைய ராஜ் இல்ல. என்னைப் பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். நானும் நிறைய கத்துக்கிட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கேன். உன்னோட தயக்கம் எனக்குப் புரியுது. என்கிட்ட உன்னோட சந்தேகங்களைக் கேட்கிறதுக்கு உனக்கு நேரம் வேணும்னா சொல்லு” என்றான்.
“இல்ல, எனக்கு உங்களுடைய கடந்த காலத்தைப் பத்தின எந்தக் கேள்வியும் இல்லை. அதெல்லாம் எனக்கே தெரியும். உங்களைப் போல நானும் அதைப் பத்திப் பேச விரும்பல. ஆனா என் மனசுல சில விஷயங்கள் இருக்கு, அதை என்னால உங்ககிட்ட உடனே சொல்ல முடியல. எனக்கு அதைச் சொல்றதுக்குத்தான் நேரம் வேணும்” என்றாள்.
அவளுக்குத் தயக்கமாக இருந்தபோதும் அவன் சொன்ன ஒரே காரணத்திற்காக அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டுதான் பேசினாள். அந்த விழிகளின் பதட்டமும் படபடப்பும் அவனுக்குப் புரிந்தது. என்னவாக இருக்கும் என்று குழப்பம் மிகுந்தது.
அவள் நேரம் கேட்கிறாள், ஆனால் அவனுக்கு அதை இப்போதே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்தது. எதையும் மூடி மறைத்து, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் ரகம் இல்லை அவன். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் ரகம். ஆனால், அவளையும் அதே போல எதிர்பார்க்க முடியாது. இதுவரை தன்னை எதிர்நோக்கிப் பேசாதவள், தான் சொன்ன ஒரே காரணத்திற்காகத் தன்னை நிமிர்ந்து பார்த்துப் பேசுகிறாள் என்பது அவனுக்கும் புரிந்தது.
அவளைப் பற்றியும் அவனுக்குச் சிறிதே தெரியும். அவள் குணாதிசயங்கள், படபடப்பு, பயம் என்று எல்லாவற்றையும் அவனும் அவதானித்திருக்கிறான் . கடந்த இந்த வருடங்களில், அவளுக்குள் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம், தனக்குள் நிகழ்ந்தது போல. ஆனால், அது எந்த அளவிற்கு என்று தெரியாமல் அவனால் அவளை வற்புறுத்த முடியாது. அவனுக்குத் தெரிந்த லீலா இவ்வளவு பேசியதே அதிகம்தான்.
“நேரம், உன் மனசுல இருக்குறதைச் சொல்றதுக்கு மட்டும் தான் வேணுமா? இல்ல வேறு எதுக்கும் வேணுமா?” என்று கேட்டான்.
அவள் ஒவ்வொரு கேள்விக்கும் அவனைப் பார்த்துப் பதிலளித்துவிட்டு, மீண்டும் தலையைக் குனிந்து கொள்வது அவனுக்குச் சுவாரசியத்தைத்தான் கொடுத்திருந்தது.
அவன் எதைக் கேட்க வருகிறான் என்று புரியாத அளவிற்கு அவள் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை. ஆனால், அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை??
மனது முழுவதும் அவன் மீது காதல் இருக்கிறது, திருமணமும் செய்து கொண்டாகிவிட்டது. ஆனால், அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டுமென்றால் அதற்கு அவள் தயாராக இருக்கிறாளா இல்லையா என்று அவளுக்கே தெரியாத நிலைதான். அப்படியிருக்க, அவனிடம் என்ன சொல்வாள்??

Author: நிதனிபிரபு
Article Title: புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.