புனர்ஜென்மம் 2
“அம்மா உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது?? எனக்கு கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு. நான் இப்படியே இருக்கேன். நான் இப்படி இருக்கறதுனால உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துர போகுது?” என்று காட்டுக் கத்தலாக கத்தினான் ராஜ்.
“ராஜ் சொன்னா கேளுப்பா?? எத்தனை நாளைக்கு நீ இப்படி தனி மரமா இருக்க போற?” அவன் தாய் பரிதவிப்பாகக் கேட்டார்.
“அதுதான் நீங்க எல்லாம் இருக்கீங்கல்ல?? நீங்க மட்டும் எனக்கு போதும்” என்றான் அழுத்தமாக.
“யாரோ ஏதோ பண்ணிட்டாங்கன்றதுக்காக வாழ்க்கை முழுக்க இப்படி தனியாவே இருக்கணும்னு சொல்றது சரியா வருமா??. நான் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழலையா?? இல்ல உன் அக்கா கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழலையா?. இல்ல நாங்க ரெண்டு பேரும் பொண்ணுங்க இல்லன்னு சொல்ல வரியா??” அவன் தாய் அஷ்டலட்சுமி வருத்தமாக கூறினார்.
எங்கே தன் மகன் இப்படியே இருந்து விடுவானோ என்ற ஆதங்கம் அவர் பேச்சில் அப்பட்டமாக தெரிந்தது.
அஷ்டலட்சுமியும் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அவருடைய தந்தை அஷ்டலட்சுமி என்ற பெயரை வைத்தாரோ என்னவோ?? அழகில் அவர் குறைந்தவர் இல்லை. ஆனால் அஷ்டலட்சுமிகள் அவருக்குக் கிடைத்தனவா என்று தெரியாது?. கல்வி, வெற்றி, குழந்தை பாக்கியம், பணம்,பொருள், உணவு, ஆன்மீகம் என்று அனைத்திலும் சிறந்து விளங்குபவர்.
தைரியத்தில் மட்டும் சற்று பின்தங்கித் தான் இருந்தார். ஆளுமையான கணவனுக்கு அடி பணிந்து தான் தன் வாழ்க்கையை கடந்தார்.
டிராக் சூட்டில் இருந்தவன். இடுப்பில் இரண்டு கைகளையும் கொடுத்தபடி அவரைப் பார்த்தான்.
“நீங்க வாழ்றதுக்கு பேரு ஒரு நல்ல வாழ்க்கையா?? எப்படிம்மா நீங்க சந்தோஷமா வாழ்றீங்கன்னு என்கிட்டயே பொய் சொல்றீங்க??” என்று அவன் கேட்ட கேள்விக்கு. அவர் சிரசு தானாக கவிழ்ந்தது.
அதற்கு மேல் எதையும் பேசி அவர் மனதைக் காயப்படுத்த விரும்பாதவன். அங்கிருந்து கடக்க எண்ணினான்.
ஆனால் அவன் கரம் பிடித்துத் தடுத்து நிறுத்தினார் அஷ்டலட்சுமி.
‘இப்ப என்ன??’ என்பது போல் மகன் பார்த்து வைக்க.
“எனக்காக டா ராஜ் ப்ளீஸ். எனக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை இருக்கணும்னு நினைக்கிறேன். நீ இப்படி தனியா நிக்க கூடாதுன்னு யோசிக்கிறேன். எல்லாரும் ஒன்னு இல்ல. அதுதான் உனக்கு புரியவைக்க நினைக்கிறேன்” என்று கலக்கமாக பேசினார்.
நாக்கை ஈரமாக்கியவன்.
‘ஊப்ப்’ என்று காற்றை வெளியேற்றினான். தன் தாயின் இரண்டு கரங்களையும் பற்றி அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்துவிட்டு, அவருக்கு முன்பாக அமர்ந்தான்.
தன் கட்டை விரல்களால் அவர் புறங்கைகளை தடவி கொடுத்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.
“அம்மா உங்களுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாதுமா? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. எனக்கு மனசு முழுக்க பெண்கள் மேல கோபம் தான் இருக்கு. பெண்கள்னாலே ஏமாத்துக்காரங்கன்ற எண்ணம் தான் இருக்கு. இந்த மனநிலையோட ஒரு பொண்ண எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்னு நினைக்கிறீங்க??”.
“அந்த எண்ணம் சரி கிடையாது ராஜ். எல்லா பெண்களும் அப்படி கிடையாது” அவனுக்கு எப்படியாவது உணர்த்தி விடும் எண்ணம் அவருக்கு.
“எப்படிம்மா உங்களால இப்படி பேச முடியுது?? என்னை ஏமாத்துனது மட்டுமில்ல, உங்களை ஏமாத்துனதும் ஒரு பொண்ணு தான்” என்றான் அழுத்தமாக.
“ஏன் எல்லா பழியையும் ஒரு பொண்ணு மேல தூக்கி போடுறீங்க?? உங்க அப்பா தப்பு பண்ணலன்னு சொல்ல வரியா?? அந்த பொண்ணு எனக்கு யாரோ, ஆனா எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணது உங்க அப்பா தான்” என்றார்.
“அம்மா, நான் அப்படி கண்டிப்பா சொல்ல மாட்டேன். அப்பா மேல தப்பு இருக்கிறதுனால தான். நான் அவர் கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கேன். அவர் கிட்ட பேசாம இருக்கேன். ஆனா ஒரு பொண்ணு குறுக்குல வரலனா இதெல்லாம் நடந்திருக்காதுல??” என்றான்.
“பணம் பறிக்கனும்னு நினைக்கிறவங்க வராங்க. ஆனா அதுக்கு வழி விட்டது உங்க அப்பா தான். நான் இங்க யார் மேல தப்புன்னு கோடிட்டு காட்றதுக்காக சொல்ல வரல. ஒவ்வொருத்தர் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தப்பு செய்ய தூண்டுது. இதுல பெண்களை மட்டும் காரணம் காட்டாதன்னு தான் சொல்றேன். உன் விஷயத்திலும் அப்படித்தான். அந்தப் பெண்ணை மட்டும் குற்றம் சொல்லாத?? அது உன் வாழ்க்கையில கடந்து போயிடுச்சு. ஒரு வேளை அவங்க அப்பா சம்மதிச்சிருந்தா அந்த பெண் உன்னை கல்யாணம் பண்ணியிருந்திருப்பாள்ல??” என்று கேட்ட தன் அப்பாவி அன்னையை பாதூரமாக பார்த்தான்.
“அம்மா அம்மா, நீங்க ரொம்ப வெகுளி. உங்கள போலவே எல்லாரையும் நினைக்கிறீங்க. அதனாலதான் எல்லாரும் உங்களை சீக்கிரமா ஏமாத்திடுறாங்க. நான் உங்களை ஏமாத்த விரும்பல. உங்க கிட்ட அவ்வளவு அன்பு கொட்டிக் கிடக்குது. அதை புரிஞ்சுக்காம விட்டுட்டாங்க. ஆனா நான் அப்படி இல்ல, உங்களோட அன்பை தெளிவா புரிஞ்சு வச்சிருக்கேன். எனக்கு காலம் முழுக்க நீங்க வேணும். உங்கள பத்தி சிந்திக்காதவங்களை தூர போட்டுடுங்க. நான் உங்களுக்காக இருக்கேன்” என்று அவர் கரங்கள் இரண்டையும் ஒருங்கே பிடித்து அழுத்தமாக பற்றியபடி உதட்டருகே கொண்டு சென்று, முத்தம் கொடுத்தபடி கூறினான்.
“எனக்கு நீயும் வேணும், உன் குழந்தைகளும் வேணும். அதுக்கு நீ கல்யாணம் பண்ணிக்கணும். நான் ஆசைப்பட்ட எதையும் உங்க அப்பா நிறைவேத்தல. நீயாவது நிறைவேத்துவன்னு நம்புறேன்” என்றார்.
“உங்களுக்கு என்னோட குழந்தை தான் வேணும்னா?? அதுக்கு கல்யாணம் அவசியமில்லையே. சரகேசி மதரே போதும். அவங்க மூலமா ஒரு குழந்தையை பெத்துக்கலாம். ஆனா அது எந்த குழந்தையா இருக்கும்னு சொல்ல முடியாது?. எதுவா இருந்தாலும் நீங்க அதை அக்சப்ட் பண்ணிக்கணும் ஓக்கேவா??” என்று அவன் கேட்டு வைத்தான்.
அவர் முகம் சுருங்கி விட்டது. “நான் முறையா எல்லாத்தையும் பண்ணனும்னு கேட்கிறேன். நீயும் உங்க அப்பா மாதிரி முறை இல்லாமல் சொல்ற. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல?” என்று பேசும் போதே அவர் கண்கள் கலங்கிவிட்டது.
அவனிடமிருந்து தன் கைகளை உருவி கொண்டவர். தன் முந்தானையால் கண்களை துடைத்தார்.
அவன் தந்தையையும் அவனையும் ஒப்பிட்டு பேசுவது அவனுக்கு பிடிக்காது. அது அவருக்கும் தெரியும் ஆனாலும் வெளிப்படுத்தி விட்டார். அந்தப் வார்த்தை அவனுக்கு ரௌத்திரத்தை அதிகப்படுத்தியது. ஆனால் தாயின் நிலையறிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்.
“அவரையும் என்னையும் கம்பேர் பண்ணி பேசாதீங்க அம்மா ப்ளீஸ். அவரைப் போல ரெண்டு மூணு கல்யாணம் பண்ணிக்க நான் ஆசைப்படல. எனக்கு ஒரு கல்யாணமே வேணாம்னு சொல்றேன். இந்தக் கல்யாண வாழ்க்கைனால யாருக்கும் எதுவும் பெருசா கிடைச்சிட போறதில்ல?? துக்கமும், வேதனையும், கஷ்டமும் மட்டும் தான் கிடைக்கப் போகுது. குழந்தை தான் இந்த கல்யாணத்தோட தேவைனா?? அதை பெத்துக்கறதுக்கு நிறைய வழி இருக்குன்னு தான் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். சரி விடுங்க. இந்த டாபிக்கை எடுத்தாலே நம்ம ரெண்டு பேருக்கும் முட்டிக்குது. நான் ஏதாவது பேசிடுறேன். நீங்க அழறீங்க. நமக்குள்ள பேசுறதுக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது. எதுக்கு அம்மா இந்த டாபிக்கை எடுக்குறீங்க?” என்று தன் தாயை ஒரு பக்கமாக கட்டிக் கொண்டவன். அவர் முகம் இன்னும் வாடி இருப்பதை பார்த்தான்.
“சரி உங்களுக்காக நான் இதைப் பத்தி யோசிக்கிறேன்” அவரை சமாதானப்படுத்துவதற்காக கூறினான். ஆனால் அவரின் முகமோ 1000 வாட்ஸ் பல்பை போல பிரகாசமாக எரிந்தது.
“நான் யோசிக்கிறேன்னு மட்டும் தான் சொன்னேன். ஓகேன்னு சொல்லல, அதுக்குள்ள, நீங்க கற்பனை கோட்டையை கட்ட ஆரம்பிச்சிடாதீங்க?” என்று அவரின் சந்தோஷத்திற்கு தடை விதித்தான்.
அடுத்த நிமிடம் அவர் முகம் வாடிவிட்டது. ஆனால் அவர் முகத்தை தன் நெஞ்சோடு அழுத்தி அவர் தலையில் முத்தம் பதித்தான். அவர் கன்னத்தை இழுத்து பிடித்து சிரிப்பது போல வைத்தவன்.
“என் அம்மா எப்பயும் சிரிச்சுட்டே இருக்கணும். சரியா?” என்று கேட்டுவிட்டு தன் நடை பயணத்தை தொடர சென்றான் ராஜ்.
அவருக்கு கணவன் சரியாக அமையாமல் இருக்கலாம். ஆனால் இரண்டு பிள்ளைகளும், அன்பான பிள்ளைகள். அதில் அவரால் ஒரு குறையும் சொல்லி விட முடியாது. அவர்கள் இருவருக்காகவே எதை வேண்டுமென்றாலும் துறக்கலாம் என்று தோன்றியது அஷ்டலட்சுமிக்கு.
மகனின் மனம் மாற வேண்டும் என்று ஆயிரம் வேண்டுதல்களுடன் அவர் தன் வேலையை தொடர்ந்தார்.
……
“மாப்பிள்ளைப் பையன் போட்டோவ பாத்தியா?? ரொம்ப லட்சணமா இருக்குறான். இப்படியே வர வரனைத் எல்லாம் வேணா வேணான்னு நீ தட்டி கழிச்சுக்கிட்டே இருந்தா, சரி இருக்காதுமா” கல்பனா கெஞ்சிக் கொண்டிருந்தார் தன் மகளிடம்.
“மனசுக்கு பிடிக்கனும் இல்லையாமா?? உங்க காலம் மாதிரி யாரோ என்னமோ பெத்தவங்க பாத்துட்டாங்கன்னு கழுத்தை நீட்ட முடியுமா?? எங்க கனவுகளுக்கு கற்பனைகளுக்கு எங்கள் லட்சியங்களுக்கு எல்லாம் உணர்வு கொடுத்தால் தான் நாங்கள் கல்யாணம் பண்ணிக்க முடியும்??” பெண்ணியம் பேசி இது நாள் வரை தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறாள் மகள்.
வரன்களை பார்த்து பார்த்து சோர்ந்து போய்விட்டார் கல்பனா.
இந்த முறை வரன் பார்த்து எடுத்து வந்தது அவருடைய கணவன் சுந்தரம் தான். மகளுக்காக தானே அலசி ஆராய்ந்து கொண்டு வந்திருப்பதாக கூறினார்.
மணமகனின் புகைப்படத்தை பார்த்த உடனே கல்பனாவிற்கு பிடித்து விட்டது. பிறகு அடுத்த கட்ட ஆய்வுகளில் இறங்கினார். மாப்பிள்ளையின் பின்புலத்தை பற்றி எல்லாம் தீர விசாரித்து விட்டதாக கூறினார் சுந்தரம்.
அழகு, படிப்பு, உத்தியோகம், சம்பளம், வீடு வாசல் இப்படி எல்லாமே திருப்திகரமாக இருந்தது. யோசனையாக இருந்தது ஒன்றே ஒன்றுதான். அது மணமகனாக பார்த்திருக்கும் ராஜின் தந்தை விஷயங்கள் தான்.
அதையெல்லாம் அவர்கள் பயோடேட்டாவில் கொடுக்கவில்லை தான். அலசி ஆராய்ந்து தான் சுந்தரம் கண்டறிந்து இருந்தார். அதை மட்டும் மனைவியிடமும் மறைக்காமல் வெளிப்படுத்தினார். ஏனென்றால் அது மறைக்கக் கூடிய விஷயம் இல்லை. பின்னாலில் தெரிந்தால் மனைவி கோபப்படுவாள் அதற்கு இப்பொழுதே சொல்லிவிடலாம் என்ற எண்ணம் அவருக்கு.
“ஏங்க தகப்பனைப் போல பிள்ளையும் இருப்பானு சொல்லுவாங்கல்ல?? நாளபின்ன அவங்க அப்பாவ மாதிரியே அவனும் ஆயிட்டானா என்னங்க பண்றது?” என்று சங்கடமாக கேட்டார்.
“தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலைன்னு சொல்லுவாங்க’. அப்படி தகப்பனுக்கும் சொல்லுவாங்க தான். நான் இல்லைன்னு சொல்லல? ஆனா என்னை பொறுத்த வரைக்கும். தாயோட கஷ்ட நஷ்டத்தை பார்த்து வளர பிள்ளைங்க, கண்டிப்பா தகப்பன போல ஒரு ஈனச் செயலை செய்ய மாட்டாங்கன்னு தான் எனக்கு தோணுது. இது ஒரு குறையே தவிர, வேற எந்த குறையும் சொல்ல முடியாது. ஒரே அக்கா அவங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. அம்மா மகன்னு வீட்டுல ரெண்டே பேர் தான் இருக்காங்க. அப்பா எப்பயாச்சும் தான் வந்துட்டு போவாராம். மகனுக்கும் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை சரி இல்லன்னு தான் கேள்விப்பட்டேன். அப்படினா என்ன அர்த்தம்??” என்று சுந்தரம் கேட்டார்.
“என்ன அர்த்தம்? அதையும் நீங்களே சொல்லிடுங்க?” என்றார் கல்பனா.
“தகப்பனோட செயல் பிடிக்காம தானே? தகப்பனோட சண்டையிட்டிருக்காரு. அப்படினா தாய்க்கு துணையா இருக்கிறாரு. தாயோட கஷ்ட நஷ்டத்தை பார்த்தவர். கண்டிப்பா தன் மனைவிக்கு அதுபோல ஒரு கஷ்டத்தை கொடுக்க மாட்டாரு” மணமகனுக்கு ‘ஏ’ கிரேட் கொடுத்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.
முதலில் யோசித்தாலும், கணவன் கூறுவதும் சரி என்று தோன்றி விட்டது கல்பனாவிற்கு. இதோ புகைப்படத்தை எடுத்துக் கொண்டு மகளை சமாதானப்படுத்த வந்திருந்தார். ஆனால் மகள் ஒத்துக் கொண்டால் தானே??
கடந்த இரண்டு வருடங்களாக இதே பிடியில் தான் நிற்கிறாள். இறங்கி வர மறுக்கிறாள்??
‘இவளுக்கு மாப்பிள்ளையை உருவாக்கி தான் கொண்டு வர வேண்டும் போல??’ என்று சலித்துக் கொண்டவர். மேலும் மகளை சமாதானப்படுத்த விளைந்தார்.
தாய் கூறுவதற்கு எல்லாம் பார்வையை மேல் நோக்கி சீலிங்கை பார்த்தபடியே அசட்டையாக தான் அமர்ந்திருந்தாள் ஸ்ரீ.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.