• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 21

Vishakini

Moderator
Staff member
புனர் ஜென்மம் 21

“பிசினஸ் பண்றோமில்ல?, பேச்சு தானே பிசினஸ்க்கு மூலதனம், அதுவும் இவ்வளவு பெரிய மால்ல ஷாப் வச்சிருக்கறதுனா, சும்மா கிடையாது. நீங்க கோவபட்டிங்களே? அந்தப் பொண்ணு வேலைக்கு புதுசு. ரெண்டு மாசம் முன்னாடிதான் கஷ்டப்படுறேன்னு வந்து நின்னாள். நானும் வேலை போட்டு கொடுத்திருக்கேன். நீங்க கத்தின கத்துல பாவம் பொண்ணு பயந்திடப் போறானுதான் நான் உங்களை காம்ப்ரமைஸ் பண்ண வந்தேன். ஆனா வந்தது நல்லதாப் போச்சு” அவனைப் பார்த்தபடி பேசினாள்.

அவள் பேசும் போது அவள் வாய் மட்டுமல்ல, கண்களும் பேசியது. முகமும் அத்தனை பாவனைகளைக் கொண்டு வந்தது. சில வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே முகம்தான். சற்று தெளிவாக, இன்னும் பொலிவாக இருந்தது. இன்னுமே அழகு கூடி இருந்தது. அவளை ஆழமாக அவன் பார்ப்பதைப் புரிந்து கொண்டவளின் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை.

“உங்க அக்காவைப் பார்த்து கண்டிப்பா நான் மன்னிப்பு கேட்கணும். கவலைப்படாத. இந்தப் பெயருக்காக சண்டை போட மாட்டேன். இந்தப் பெயர் புராதானமான சமஸ்கிருதப் பெயர். இதிகாசங்கள்ல இருக்கு. பல அர்த்தங்களும் இருக்கிற பெயர். யார் வேணா, யாருக்கு வேணா வைக்கலாம். நான் கேள்வி கேட்க முடியாது. கேட்கவும் மாட்டேன். நான் பழைய அர்ஜுன் இல்லை” என்று புன்னகை முகமாகக் கூறினான்.

“உங்க புன்னகையே அதை எனக்கு சொல்லுது சார். அர்ஜுன்ற பெயருக்கு என்ன அர்த்தம் இருக்குன்னு நான் சொல்லவா?” என்று கேட்டாள்.

அவன் புன்னகையோடு சொல் என்று கண் ஜாடை காட்டினான்.

“பிரகாசமானவன், தூய்மையானவன், வெண்மையானவன், தெளிவானவன்னு அர்த்தம். வெள்ளிக்கும் மின்னலோட நிறத்திற்கும் இந்தப் பெயரை ஒப்பிட்டு சொல்லுவாங்க. அப்புறம் இந்தப் பெயரை வச்சவங்க தைரியமா, நேர்மையா, தன்னுடைய இலக்கு எதுன்றதுல தன்னம்பிக்கையா, படைப்பாற்றல் மிக்கவங்களா இருப்பாங்க.”

“போதும் போதும். என் பெயருக்கு இத்தனை அர்த்தம் இருக்கறது எனக்கே தெரியாது. மகாபாரதத்தில் இந்தப் பெயர் வரும். எங்க அம்மா சொல்லுவாங்க. அர்ஜுன்ற பெயரை சிறந்த வில்லாளனுக்கு ஒப்பிட்டுச் சொல்லுவாங்க. நீயும் அதுபோல திகழனும்னு உனக்குப் பெயர் வச்சேன்னு. அதனாலயோ என்னமோ? எனக்கு ஸ்போர்ட்ஸ்ல இன்ட்ரஸ்ட் இருந்தது. ஆனா அந்த ராஜா அர்ஜுனன் மாதிரி வில் பயிற்சியில் இல்லை. மத்த ஸ்போர்ட்ஸ்லதான் இருந்தது. ஸ்கூல், காலேஜ்ன்னு நிறைய பிரைஸ் வாங்கி இருக்கேன். அதுக்கப்புறம் எல்லாம் போயிடுச்சு. ஆனா என் பேருக்கு இத்தனை அர்த்தம் இருக்குன்னு இப்ப நீ சொல்லும்போதுதான் தெரியுது” என்றான்.

அந்தப் பெயருக்கான அர்த்தத்தை அவள் மனப்பாடமே செய்து வைத்திருந்தாளே. அத்தனையும் அவள் நினைவுகளில் நன்றாகவே இருந்தது. அவனை மறந்தால்தானே அந்தப் பெயரின் அர்த்தங்களை மறப்பதற்கு. இருவரும் அவள் நினைவுகளில் எப்போதும் இருப்பவர்கள்தான். அதுதான் அவள் கண்களும் அவளையும் அறியாமல் அவனுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அவன் அதை புரிந்துகொள்ள நாட்களாகுமோ அல்லது வருடங்கள் ஆகுமோ?

“அந்தப் பெயர்ல ஒரு கெத்து இருக்கு சார். அதனால மறக்க முடியல. அப்புறம் அக்கா அவள் பையனுக்கும் பெயர் வச்சவுடனே இதெல்லாம் அலசி ஆராய்ச்சி தெரிஞ்சுக்கிட்டேன்” அவனுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று அவள் சாதாரணமாகக் காட்டிக் கொண்டாள்.

“அதென்ன சாரு சாருன்னு கூப்பிடுற?” ஒரு பெண்ணிடம் இப்படி அமர்ந்து தானா பேச்சை வளர்த்துக் கொண்டிருப்பது என்று அவனுக்குத் தோன்றினாலும், கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை அவனால்.

“அண்ணான்னு கூப்பிட்டா உங்களுக்கு கோபம் வராது. ஆனா எனக்கு அப்படி கூப்பிடப் பிடிக்கல. மாமானு கூப்பிட்டா அடிச்சிருவீங்க. அதான் சார்ன்னு காமனா கூப்பிடுறேன். என்னை விட வயசுல பெரியவர் இல்லையா?” கன்னத்தில் மீண்டும் கையை வைத்துக் கொண்டவள், அவனைப் போலவே கைகளை உயர்த்தி பெரியவன் என்று சுட்டிக்காட்டிக் கூறினாள்.

“நான் உன்னை அடிக்கவே இல்லை. எதுக்கு சும்மா சும்மா உன் கன்னத்துல கைய வச்சிக்கிற?” என்று கேட்டான்.

“அன்னைக்கு விட்ட அடி அதுபோல சார். அக்காவை அடிச்சது என் கன்னம் வரைக்கும் எக்கோ கேட்டுச்சு. அங்க அடிச்சதோட ரிப்ளக்ஷன் என் கன்னத்துல நான் அப்பவே உணர்ந்தேன். அக்காவுக்கு ரெண்டு நாள் சாப்பிட முடியல. காது வேற சரியா கேட்கலைன்னு சொன்னாள். ஆனா சத்தியமா அதோட அதிர்வலைய என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. அதனாலதான் ஜாக்கிரதையா கூப்பிடுறேன்.”

“நான் என்ன ப்ரொபசரா, இல்ல டீச்சரா, சாருனு கூப்பிடுற?” என்று அவன் கேட்க,

“வேற எப்படி கூப்பிடுறது?” என்று கேட்டவள்.

‘மாமான்னு கூப்பிட எனக்கு ஓகேதான். ஆனா உங்களுக்குப் பிடிக்காதே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அவள் பேசவில்லை என்றாலும் அவள் கண்கள் ஏதோ பேசியது.

“என் பேருதான் உனக்கு தெரியுமே? அர்ஜுன்னு கூப்பிடு” என்றான். அண்ணாவென்று கூப்பிடுவது அவனுக்கும் ஏனோ பிடிக்கவில்லை. அதை அவள் கூறும் போதே மனது அசௌகரியமாக உணர்ந்தது. ஆனால் ஏன் என்று தெரியவில்லை.

“ஐயோ, நீங்கதான் என்னை விட பெரியவராச்சே? எப்படி அப்படி கூப்பிட முடியும்?” என்று மீண்டும் பாவனை பிடித்தாள்.

“எவ்வளவு பெரியவங்களா இருந்தாலும், சின்னவங்களா இருந்தாலும் பெயர் சொல்லி கூப்பிடுவது இப்பல்லாம் ரொம்ப காமனாயிடுச்சு. அறிமுகம் இல்லாதவங்கள நாம வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவோம். நீ சின்ன பொண்ணுங்கறதுக்காக நான் ஒருமையில பேசல. எனக்குத் தெரிஞ்ச பொண்ணுங்கறதுக்காக ஒருமையில பேசுறேன். சோ, நீ என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம். எனக்கு எந்த இஷ்யூவும் இல்லை” என்றான் தோள்களைக் குலுக்கியபடியே.

அப்பொழுது அவன் அலைபேசி ஒலித்தது. அவனுடைய தோழர்கள்தான் அழைத்திருந்தார்கள். நெற்றியை கட்டைவிரலால் தேய்த்துக் கொண்டவன் நேரத்தைப் பார்த்தபடி எழுந்து நின்றான்.

“டைம் ஆயிடுச்சு அனன்யா. உன்னைப் பார்த்ததும் நான் பாட்டுக்கு எல்லாத்தையும் மறந்து பேச ஆரம்பிச்சுட்டேன். ஐ திங்க் அவங்க எல்லாம் சத்திரத்துக்கே வந்துட்டாங்க போல. அதனாலதான் கால் பண்றாங்க. இன்னொரு நாள் மீட் பண்ணலாம் அனன்யா. எனக்கு இப்ப டைம் ஆச்சு” என்றபடி குலுக்குவதற்காக கையை நீட்டினான்.

அவனையும் அவன் கைகளையும் பார்த்துவிட்டு, அவன் கையோடு தன் கைகளைப் பிணைத்துக் கொண்டவள், “கண்டிப்பா இன்னொரு வாட்டி மீட் பண்ணலாம்ல?” என்று தலையாட்டி புன்னகையுடன் கேட்டாள்.

இதழ்களை லேசாகச் சுளித்தபடி, “கண்டிப்பா மீட் பண்ணலாம்” என்று புன்னகைத்தான்.

“அப்புறம் நீங்க கேட்கிற அந்த பொக்கேவை நான் உங்களுக்கு கொடுத்துடுறேன். என்னோட கஸ்டமருக்கு வேற ஏதாவது சொல்லிக்கிறேன்” என்றாள்.

“எனக்கு முன்னாடி அவங்கதானே புக் பண்ணியிருக்காங்க. நியாயமா அவங்களுக்குத்தான் அது போகணும். எனக்காக எதுக்கு இந்தக் கரிசனை?” என்று முகம் மலரக் கேட்டான்.

“எனிதிங் ஃபார் யூ” என்று அவள் இரண்டு கைகளையும் தோளுக்கு மேல் விரித்துக் காட்டினாள். அவன் இரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கினான்.

‘ஐயோ, கொல்லுறானே?’ என்று அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“இப்பதானே அர்ஜுன் என்ற பெயருக்கு விளக்கம் சொன்ன? நானும் நேர்மையானவன்தான். நியாயப்படி முன்னாடி புக் பண்ணவங்களுக்குத்தான் போய்ச் சேரணும். என்னோட கேள்வி, புக் பண்ணதுக்கு அப்புறமும் ஏன் அதை ஷோகேஸ்ல வச்சிருக்கீங்கன்றதுதான். அதுதான் வேணுன்ற பிடிவாதம் என்கிட்ட இல்லை. ஏன்னா, அதை நான் எனக்காக வாங்கல. திருமணத்திற்கு கிப்ட் பண்றதுக்காக வாங்கினேன். நார்மலா எல்லாரும் கொடுக்கிற மாதிரி இல்லாமல் டிஃபரண்டா இருக்கணும்னு நினைச்சேன். அது ஹார்டின் ஷேப்பில் இருந்ததினால் யூனிக்காவும் தெரிஞ்சது. அதனால வாங்கலாம்னு நினைச்சேன். மத்தபடி அதுதான் வேணும்னு இல்லை. வாழ்க்கையோட நிதர்சனம் எனக்குத் தெரியும். அட்ஜஸ்ட் பண்ணிக்கவும் எனக்குத் தெரியும். வேற பொக்கேவை வாங்கிக்கிறேன்” என்று கூறினான்.

அவனுடைய பேச்சு அவளுக்குப் புரிந்தது. அவனுடைய கடந்த காலத்தைப் பற்றித்தான் சூட்சமமாகக் கூறுகிறான் என்பதும் புரிந்தது.

அவள் முகத்தில் புன்னகை மலர, “தேங்க்யூ சோ மச். இன்னொரு யூனிக்கான ஃபிளவர் இருக்கு. அதை நான் உங்களுக்கு காட்டுறேன். தூரத்தில் இருந்து பார்க்கும்போது ரோஜா மாதிரி இருக்கும். ஆனா அதுவும் ரொம்ப வித்தியாசமாத்தான் இருக்கும். நானே அதை உங்களுக்கு காட்டுறேன். ஐ திங்க் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்” என்று கூறினாள்.

அவன் சம்மதமாகத் தலையாட்ட, வெளியில் வந்தவள் அங்கு அழகாக அடுக்கப்பட்டிருந்த பூக்களுக்கு நடுவே அவள் சொன்ன அந்த மலருக்கு அருகில் சென்று நின்றாள்.

“இதோ இந்தப் பூவுக்கு பேரு பியோனி (Peonies). ‘பியோனியாசியே’ (Paeoniaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.

ரொம்ப பிரபலமான பிளவர் இது. இதோட தோற்றம், நறுமணம், அழகு எல்லாமே உலக அளவில இதுக்கு பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு. அண்ட் முக்கியமா இதுல நிறைய வண்ணங்கள் இருந்தாலும், வெள்ளைப் பூவோட வேர்கள் மருந்தாகவும் பயன்படுது. ஏழு நாளைக்கு வாடாம இருக்கும். உங்களுக்கு பிடிச்சிருக்கானு சொல்லுங்க. இல்லன்னா வேற சொல்றேன்” என்றாள் அனன்யா.

அந்த மலரை அவனுக்குப் பிடித்ததோ இல்லையோ, அவள் கூறிய விளக்கங்கள் பிடித்தது.

“இங்க இருக்க எல்லா ஃப்ளவருக்குமே உனக்கு இதுபோல எக்ஸ்ப்ளனேஷன் தெரியுமா?” என்று கேட்டான்.

“நான் படிச்சது பிளான்ட் பயாலஜி. பிளான்ட்ஸ் பத்தி எனக்கு ரொம்ப ஆர்வம் அதிகம். பூவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களைப் போலத்தான். வித்தியாசமான செடிகளையும் மலர்களையும் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு எனக்கு ஆவல் அதிகம். அதனால படிக்கும் போதே தனியா பிசினஸ் பண்ணனும், அதுவும் பொக்கே ஷாப் மாதிரி வைக்கணும்னு பிளான் பண்ணேன். இங்க இருக்க ஒவ்வொரு பிளான்ட்டோட டீடெயிலும் தெரியும். உங்களுக்கு டைம் இல்லாததுனால ரொம்ப ஷார்ட்டா சொன்னேன். இன்னொரு நாள் மீட் பண்ணும்போது எலாபரேட்டா சொல்றேன்” என்றாள்.

“அப்போ மீட் பண்றதா முடிவு பண்ணிட்டியா?” அந்தப் பூவை வாங்கிக் கொண்டே கேட்டான்.

“நீங்கதான சொன்னீங்க? நீங்கதான் நேர்மையானவராச்சே. வாக்கு கொடுத்தா அதை காப்பாத்துவீங்க தானே? எங்க மீட் பண்ணலாம்?” என்று கேட்டாள்.

“அதை நீயே டிசைட் பண்ணு” என்று கூறியவன் தன் பர்சிலிருந்து விசிட்டிங் கார்டையும் டெபிட் கார்டையும் எடுத்து நீட்டினான்.

விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டவள், டெபிட் கார்டை அவனிடம் நீட்டினாள். “ரொம்ப நாள் கழிச்சு பார்த்த ஒரு ஃப்ரெண்டுக்கு இது என்னோட ஸ்மால் கிப்ட்” என்றபடி கண்களை மூடித் திறந்தாள்.

“நெக்ஸ்ட் டைம் என்னை மீட் பண்ண வரும்போது உன்னோட கிப்ட்டை வாங்கிக்கிறேன். இந்தப் பூவை நான் இன்னொருத்தருக்காக வாங்குறேன். அதனால இந்த கிப்ட்டை என்னால ஏத்துக்க முடியாது. அண்ட் பிசினஸ்ல இதுபோல பார்க்கக் கூடாது. சோ, நான் பே பண்ணிட்டு போறேன்” என்று புன்னகையோடு கூற.

அவன் சொன்ன வியாக்கியானங்கள் அவளுக்கும் சரி என்று தோன்ற, சம்மதமாக தலையாட்டினாள்.

“உங்களுக்கு எந்த டைம் ஃப்ரீயா இருக்கும்?” அவன் பணத்தைச் செலுத்தும் போது கேட்டாள்.

“உனக்கு எப்ப ஃப்ரீயா இருக்கோ அப்ப கூப்பிடு. நோ இஷ்யூஸ்” என்றான் அர்ஜுன்.

“உங்கள பாக்கணும்னா, நான் எப்ப வேணாலும் என்னை ஃப்ரீ பண்ணிப்பேன். ஆனா கார்டைப் பார்த்தா பயங்கர வெய்ட்டா இருக்கே. அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன்” என்று டெபிட் கார்டைத் தூக்கிக் காட்டியபடி கூறினாள்.

அவன் அந்த கார்டைப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்தான். “வெயிட் எல்லாம் இல்ல. இப்பதான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். ஒரு டூ இயர்ஸ் ஆகுது. முதல்ல அப்பாவோட கம்பெனியிலேயே டெம்பரவரியா ஒர்க் பண்ணேன். அதுக்கப்புறம் வேலை தேடி இன்னொரு ஆஃபீஸ்க்கு போனேன். மூணு வருஷம் நாலேஜ் கெயின் பண்ணிட்ட பிறகு தனியா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணேன். ரெண்டு வருஷத்துல ஒன்னும் பெருசா லாபம் இல்லை. ஆனா நஷ்டம் இல்லாம போகுது. தெரிஞ்ச பிசினஸ்ன்றதனால நல்லா போகுது. நம்ம கம்பெனின்றதுனால நமக்கு தேவையான போது பிரீடைம் எடுத்துக்கலாம். உன் கையில என் கார்ட் இருக்கு. நீ கால் பண்ணு. டைம் அண்ட் டேட் சொல்லு. பிக்ஸ் பண்ணிக்கலாம்.” ‘உனக்கான என்னுடைய நேரமும் எப்போது வேண்டுமென்றாலும் தயாராக இருக்கிறது’ என்று அவன் சொல்லாமல் சொன்னான்.

அவள் முகத்திலும் அழகான புன்னகை படர்ந்தது.

“சரி, நான் கிளம்புறேன்” சிறு தலையசைப்போடு அவள் கண்களைப் பார்த்து நேராகக் கேட்டான். அவளும் மென்புன்னகையோடு வழி அனுப்பி வைத்தாள்.


 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom