புனர் ஜென்மம் 22
எத்தனை மணி நேரம் பேசினார்களோ, பேசிக்கொண்டே இருந்தார்கள். ஸ்ரீ கொட்டாவி விடுவதைப் பார்த்து, “படுத்துக் கொள்” என்று அவன் கூற, தலையாட்டியவள், எங்கே படுப்பது என்று சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள்.
“ஹலோ ஹலோ, இது உன்னோட ரூம். இனிமே உன்னுடையது என்னுடையதுன்னு எதுவும் இல்லைதான். எல்லாமே நம்மளுடையதுதான். ஆனா அது வழக்கத்துல வர்றதுக்குக் கொஞ்சம் டைம் எடுக்கும். அதுவரைக்கும் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம்னு எல்லாம் சொல்லாத. இங்க என்னை பெட்டுல படுக்கச் சொல்லிட்டு, நீ கீழ படுக்கறது, இல்ல என்னை கீழ படுக்கச் சொல்றது... இதெல்லாம் தயவுசெஞ்சு பண்ணாத. என் மேல நம்பிக்கை வச்சுதான் என்னை கல்யாணம் பண்ணியிருக்க. அதே நம்பிக்கையோடு படு” என்று அவள் அமர்ந்திருந்த இடத்தையே சுட்டிக்காட்டினான்.
அவள் புன்னகைத்தபடி தலையாட்டினாள். அவளுக்கா அவன் மீது நம்பிக்கை இல்லை? அதெல்லாம் பொட்டலம் பொட்டலமாக இருந்தது. அதை இப்போதைக்கு அவனிடம் சொல்ல முடியாதல்லவா? அதனால் புன்னகையை பதிலாக அளித்தாள். இருவரும் படுக்கும்போதே விடிந்துவிட்டிருந்தது.
ஒரு பெண்ணுடனான தனிமைப் பேச்சுக்கள் இனிமையாக இருக்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்னால், ஏன் ஒரு நாளுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் கூட அவன் நம்பியிருக்க மாட்டான். ஆனால் இன்று, உணர்வுபூர்வமாக அதை உணர்ந்து கொண்டிருந்தான். அவளுடைய அறையல்லவா? படுத்ததும் உறங்கிவிட்டாள்.
அவனுக்குத்தான் உறக்கம் வர மறுத்தது. புது இடம் என்பதால் மட்டுமல்ல, அவளுடைய அருகாமையும் வாசமும் கூட அவனை ஏதோ செய்துகொண்டிருந்தது. அதை ஒப்புக்கொண்டால் அவனுடைய தலைக்கனம் என்னாவது? ‘மனைவியிடம் தலைக்கனம் பிடித்தால், வாழ்க்கை நிலைக்காது’ என்ற நிதர்சனம் அவனுக்குத் தெரிந்தேயிருந்தது.
அவனுக்கு வலப்பக்கமாகப் படுத்துக்கொண்டிருந்த ஸ்ரீ, இப்போது அவனைச் சோதிக்கவென்று அவன் புறம் திரும்பிப் படுத்தாள். அவளுடைய வெள்ளை நிறக் காட்டன் புடவை மென்மையான பிரதேசத்தில் வழுக்கி, சரிந்து, அவளுடைய வழவழப்பான இடுப்பை அவனுக்குத் தரிசனமாக்கியது. அத்தனை வருடப் பிரம்மச்சரியத்தைக் கலைந்து அதில் கை வைத்து விளையாட எண்ணம் தோன்றியது ராஜுக்கு.
‘இதுதான் நீ கல்யாணம் வேணாம் வேணாம்னு சொன்ன ஆளா?? உன்னோட பொண்டாட்டிதான், உரிமை இருக்குதான். ஆனால், இவ்வளவு நேரம் இருந்த கண்ணியம் இப்ப எங்க போச்சு? இவளை டிரஸ் மாத்திக்கச் சொல்லியிருக்கலாமோ?’ காலம் கடந்து பல கேள்விகள் அவனுக்குள் எழுந்தன. ‘தெரியாமல் தூக்கத்துல கை போடுற மாதிரி போட்டுடலாமா?’ என்று கூட வில்லத்தனமாக அவன் மூளை அவனுக்கு ஆலோசனை கூறியது.
‘ச்சேச்சே, ஏற்கனவே பயந்த சுபாவம் உள்ள பொண்ணு. நம்ம மேல நம்பிக்கை வச்சிருக்கு. அதைக்குறைச்சுக்காதடா ராஜ். பேசாமல் உன்னால முடியலைனா, நீ திரும்பிப் படுத்துடு’ என்று அவனுக்கு அவனே கட்டளை விதித்துக்கொண்டு, அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துவிட்டான். ஆனால், மனம் மீண்டும் அவள் புறம் திரும்பிப் பார்க்கச் சண்டித்தனம் செய்துகொண்டிருந்தது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு மனதிடம் தோல்வியடைந்து அவன் திரும்பிப் படுக்கும்போது, அவளும் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள். ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டான்.
ஆனால், இம்முறை தலைமுடி சரிந்து அவளுடைய முதுகுப் பிரதேசத்தை அவனுக்குக் காட்டிக்கொண்டிருந்தது. ‘டேய், நீ இவ்வளவு கேவலமா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்கலைடா. தூக்கத்துல சரிந்து விழற புடவையை, தலைமுடியைப் பார்த்து ரசிக்கிற அளவுக்கா நீ காஞ்சுப்போயிருக்க? உனக்கு பக்கத்துல இருக்கிறது உன் பொண்டாட்டி. காலம் முழுக்க வரப்போற உறவு. மனசை மட்டுமில்லை, உடம்பையும் பாதுகாப்பது உன்னுடைய பொறுப்பு’ என்று மூளை அறிவுரை கூறியது. ‘நான் புடவையையும் முடியையும் ரசிக்கலையே’ என்று மனம் வேறு கவுண்டர் கொடுத்தது. இது வேலைக்கு ஆகாது என்று நினைத்தவன், மெல்ல எழுந்துவிட்டான்; பால்கனியை நோக்கி நடந்தான்.
“சீனியர்...” என்ற அந்த குரலில் திரும்பிப் பார்த்தான். கலைந்த ஓவியமாக அவள் கட்டிலிலிருந்து இறங்குவது தெரிந்தது. அவன் அசைவில் அவள் விழித்திருக்கிறாள் என்று தோன்றியது. இம்முறை அவளுடைய புடவை எதுவுமே அவள் பேச்சைக் கேட்டிருக்கவில்லை; அவன் மனதும் அவன் பேச்சைக் கேட்க மறுத்தது. ‘அசைவில்லாமல் மெல்லத்தானே எழுந்தோம்? பிறகு இவள் எப்படி விழித்தாள்?’ என்று தனக்குள் சொல்லித்தான்.
“என்னாச்சு, தூக்கம் வரலையா? இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமா, இல்லை புத்தகம் ஏதாவது எடுத்துக் கொடுக்கவா?” என்று கேட்டபடி அவன் முன்னால் வந்து நின்றாள்.
தறி கெட்டு அலைந்த மனதை அடக்கிக்கொண்டு, “நீ தூங்கிட்டுதானே இருந்த? எதுக்கு எழுந்த? போய் தூங்கு” என்று தனக்குள் அடக்க முடியாத அழுத்தத்தை அவன் குரலில் காட்டிக் கூறினான். அவள் உடல்மொழியில் பதற்றம் தெரிந்தது. அவனுக்கு அது கூடப் புரிந்து தொலைத்தது.
“இல்லை, நீங்க எழுந்ததுனால என்னவோ ஏதோனு நினைச்சேன். உங்களுக்குத் தூக்கம் வரலைனா நான் ஏதாவது உதவி பண்றேன்” தூக்கக் கலக்கத்தில் அவள் எதையோ கூறி வைக்க,
“அப்படியா? உன்னால என்ன உதவி பண்ண முடியும்னு நினைக்கிற?” கைகளைக் கட்டிக்கொண்டு அவளை வம்பிழுக்கவென்று கேட்டான்.
“கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம். உங்ககிட்ட பேசுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்ஃபேக்ட், இந்த ஏக்கம் எனக்கு ரொம்ப வருஷமா...” என்று கூறியவள், தன் நுனி நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவன் புருவம் இறுகியது. “வந்து சீனியர், உங்க காலை அமுக்கி விடட்டுமா? அப்ப நல்லா தூக்கம் வரும். தலையைக் கோதிவிட்டா கூடத் தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வரலனா? வேற ஏதாவது பண்ணலாம்” அவசரமாக மொழிந்தாள்.
‘அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாமா’? என்று கேட்கத்தான் அவன் மனம் பரபரத்தது.’ ஆனால் மூளையோ, அவள் கூறிய முதல் வாக்கியத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது. “நீ என்கிட்ட எதையாவது மறைக்கிறியா ஸ்ரீ?” அவனுக்குத்தான் எதையும் மறைத்துப் பழக்கம் இல்லையே, நேரடியாகக் கேட்டுவிட்டான்.
அவள் பரிதவிப்போடு அவனைப் பார்ப்பது தெரிந்தது. ஆனால், அவன் உடல்மொழியில் மட்டுமல்லாமல் பார்வையிலும் கூர்மையை ஏற்றியிருந்தான். அந்தப் பார்வை, ‘எனக்கு பொய் வேண்டாம், உண்மைதான் வேண்டும்’ என்று அவளுக்குச் சொல்லாமல் சொன்னது. எச்சிலை உள் கூட்டி விழுங்கினாள். அந்த இரவு விளக்கொளியிலும் அவள் தொண்டை ஏறி இறங்குவது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அதுவும் ரசனையாக இருக்க, நாடி நரம்புகள் எல்லாம் உணர்வுகள் ஓடி அவனை இம்சை செய்தது.
அவன் பதிலுக்குக் காத்துக் கொண்டிருப்பது புரிந்தது. பொய் சொன்னால் அவனுக்குப் பிடிக்காது என்பதும் தெரிந்தது. “வந்து சீனியர், அதைச் சொல்றதுக்குத்தான் நான் கொஞ்சம் டைம் கேட்டேனே? மறந்துட்டீங்களா?” என்றாள் தடுமாற்றத்தோடு.
“எஸ் கேட்ட. பட் யூ நோ, எனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. ஆனாலும் உனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ரொம்ப டைம் எடுத்துக்காதே, முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரமா சொல்லிடு. நாம வாழ ஆரம்பிச்சதுக்கப்புறம் நீ எதையாவது சொல்லி எனக்கு டென்ஷன் ஆகக்கூடாது. இன்னொரு ஏமாற்றத்தை என்னால ஏத்துக்க முடியாது” என்றான்.
சடாரென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். ‘ஒரே வரியில் உன்னை எனக்கு அப்போதிலிருந்தே பிடிக்கும்’ என்று அவளால் சொல்லிவிட முடியும். மனதில் இருக்கும் அனைத்தையும் உணர்வுபூர்வமாக அவனுக்கு உணர்த்த நினைத்தாள். இத்தனை வருடங்கள் சொல்லாத காதலை அவள் சொல்லும்போது அவன் கண்களிலும் காதலை எதிர்பார்த்தாள். காதல் தோல்வியின் விரக்தியில், ஏமாற்றத்தில் இருப்பவரிடம் சென்று தானும் காதலைச் சொன்னால், அது அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்தும் என்றுதான் பொறுமை காத்தாள். இப்போது அவனுடைய அழுத்தமான வார்த்தைகளில் சொல்லவா வேண்டாமா என்று மனம் பரிதவித்தது. அவள் உணர்வுகளைப் புரிந்துகொண்டானோ என்னவோ, பேச்சை அவனே மாற்றினான். உரிமையாக அவளிடம் பேச விழைந்தான்.
“சரி, என்னோட தலைமுடியைக் கோதிவிடு, தூக்கம் வருதான்னு பார்க்கலாம்” என்றபடி அவளைத் தாண்டிக்கொண்டு சென்று, அவன் படுத்திருந்த இடத்தில் படுத்துவிட்டான். உதடுகளை மடித்துக் கடித்துத் தன்னைத் கட்டுப்படுத்திக்கொண்டவள், அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவளைப் பார்த்தபடியே அவன் கண்களை மூடினான். அவளும் தன் வலது கரம் கொண்டு அவன் தலையை மெல்ல வருடிக்கொடுக்க ஆரம்பித்தாள்.
அவ்வளவு சுகமாக இருந்தது ராஜ்க்கு. என்றோ தாய்மடியில் இதுபோல அனுபவித்த சுகம் நினைவில் நிழலாடியது. அவன் பக்கமாக அமர்ந்தபடி அவள் வருடிக்கொண்டிருப்பது புரிய, கண்களைத் திறந்தவன், அவளுடைய தலையணையை எடுத்து, கட்டிலில் சாய்ந்துகொள்வதற்கு வாகாக வைத்தான். “சாய்ஞ்சுட்டே செய். ரொம்ப நல்லா இருக்கு. தூக்கம் வரும்னு நினைக்கிறேன். நான் தூங்கிட்டேனா நீயும் தூங்கிடு” என்றவன் கண்களை மூடிவிட்டான்.
அவளுக்காகத்தான் பார்க்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. மெல்லிய புன்னகை அவளிடம். இந்தக் கரிசனை போதும் அவள் வாழ்நாள் முழுவதற்கும் என்று நினைத்தபடி தலை வருட ஆரம்பித்தவள், பிறகு கோத ஆரம்பித்துவிட்டாள். அது இன்னும் சுகமாக இருக்க, கன்னத்தில் இரு கைகளையும் கொடுத்தபடி, அவள் பக்கமாகப் புரண்டு படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டான் ராஜ்.
“இது போதும் எனக்கு இது போதுமே, வேறென்ன வேண்டும்? நீ போதுமே...” அவளுடைய மனம் பாடல் படிக்க ஆரம்பித்தது. எத்தனை வருட ஆசை, எத்தனை வருட தவம், கைக்குக் கிட்டி, அவள் கை வருடலில் உறங்கிக் கொண்டிருக்கிறது! திருமணமான அந்த நாளிலேயே அவனை ஸ்பரிசிக்க முடியும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய கோபமான முகத்தையும், ரௌத்திரமான வார்த்தைகளையும் எதிர்பார்த்துதான் அவள் அந்த அறைக்குள் நுழைந்தாள்.
ஆனால், அவளுக்கே தெரியாத அவனுடைய மறுபக்கமாக, மெல்லிய தென்றலாய் அவளுக்குக் காட்சியளித்தான். அவ்வபோது அவனுடைய குறும்புத்தனம் தலைதூக்கினாலும் அவளுக்காகவே அதை அடக்கிக்கொண்டிருக்கிறான் என்று அவளுக்குமே புரிந்தது. அவனை அப்படியே ஏற்றுக்கொண்டவள், இந்த மென்காற்றை ரசித்தாள், சுவாசித்தாள்.
ஒருவேளை அவளைப் பற்றித் தெரிந்தால்? சூறாவளியாக மாறி அவளைச் சுருட்டிக்கொள்வானோ என்ற பயம் அவளுக்குள் இருந்தது. ‘வேண்டாம், எதையும் சிந்திக்காதே, இந்த நொடியை அனுபவி. கைசேர முடியாத பொக்கிஷம் கைசேர்ந்திருக்கிறது. தவறவிடாமல் அதைக்கெட்டியாகப் பிடித்துக்கொள்.’ மனம் கூறிய அறிவுரையை அவள் சிரம் தாழ்ந்து ஏற்றாள்.
அத்தனை சந்தோஷத்தில் அதற்கு மேல் அவளுக்கு உறக்கம் வரவில்லை. அவள் பக்கமாக ஒருக்களித்துச் சாய்ந்தவள், இடது கையால் அவன் சிகையைக் கோதியபடியே அமர்ந்திருந்தாள். கைக் கெட்டாத வெண்ணிலவு அவள் அருகில் பிரகாசமாக ஒளிர்விட்டுக் கொண்டிருக்க, அந்த வெண்ணிலவை மனதிற்குள் பொக்கிஷமாகக் காத்துக்கொள்ள நினைத்தவள், அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.