புனர்ஜென்மம் 28
மாலை மறைந்து இரவு தொடங்கும் நேரத்தில்தான் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
பிணைந்திருந்த கைகளைப் பார்த்த அஷ்டலட்சுமிக்கு மனம் நிறைந்து போனது. “கோயிலுக்குப் போனீங்களாப்பா?” என்று கேட்டார்.
“போனோம்மா” என்றாள் ஸ்ரீலீலா. கணவனைப் பார்த்துப் கண்களை உருட்டினாள்.
அங்கு தெய்வத்தை பார்த்து வணங்கினார்கள் அல்லவா? அவளுடைய விழிகள் அத்தனை மொழிகளைப் பேசின.
“ஆமா ஆமா, கோயிலுக்குப் போனோம். சாமியைக் கும்பிட்டோம். அங்கேயே உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தோம்” என்றான் ராஜ்.
“ரொம்ப சந்தோஷம்பா. எங்க ஸ்ரீயை ஏத்துக்க ரொம்ப நாள் ஆகிடுமோன்னு பயந்து போயிட்டேன். லீலா ரொம்ப நல்ல பொண்ணு. நீ அவளைப் புரிஞ்சுகிட்டு ஏத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார் அஷ்டலட்சுமி.
அவன் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான். அவள் அவனிடமிருந்து விலகிச் சென்று தன் மாமியாரைக் கட்டிக்கொண்டாள்.
“என்ன நடக்குது இங்க? மாமியார் மருமகள்னா, சண்டை போட்டுக்கிட்டு இருக்கணும். நாத்தனார் வந்து அதைச் சமாதானப்படுத்தணும். கணவன் மண்டையை உருட்டணும். அதெல்லாம் விட்டுட்டு, இப்படி இருந்தீங்கன்னா எனக்கு இங்க வர வேண்டிய வேலையே இருக்காது போலயே?” என்று கேட்டபடி வந்து நின்றாள் ராஜுடைய தமக்கை தனலட்சுமி.
“இது உங்க வீடு அண்ணி. நீங்க எப்ப வேணாலும் வரலாம். ஆனா கண்டிப்பா நான் சண்டை போட மாட்டேன். ஏன்னா எனக்குச் சண்டை போடத் தெரியாது” என்றாள் ஸ்ரீ. அவள் பேச்சு அங்கு அனைவரின் முகத்திலும் பெரிதாகப் புன்னகை மலர வைத்தது.
இவளால் மட்டும்தான் இந்த வீட்டையும் இந்த மனிதர்களையும் இப்படிப் பார்த்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு.
“அதுக்கு நீ பிரேமாவுக்கும் பிரசாத்துக்கும் நன்றி சொல்லணும் இல்லையா?” என்று கேள்வி கேட்க,
“அதுக்கென்ன, நேர்ல பார்த்தா சொல்லிட்டுப் போறேன்” என்று அவன் கூறிச் சமாதானப்படுத்தினான். அவன் மனதில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை, ஸ்ரீலீலா என்ற பெண் காதலெனும் நீரை ஊற்றி அணைத்திருந்தாள்.
இதையெல்லாம் சாத்தியமாக்கிக் கொடுத்த மூன்று பெண்களை, மூன்று தேவியர்களாகப் பார்த்தான் அவன். அவன் தோள் மீது கைப்படத் திரும்பிப் பார்த்தான். தமக்கையின் கணவன் சேகர் நின்று கொண்டிருந்தார்.
அவர் புறம் திரும்பி, கட்டி அணைத்து விடுவித்தவன், “ரொம்ப தேங்க்ஸ் மாமா. முன்ன நின்னு, எல்லாத்தையும் சீரும் சிறப்புமா செய்து கொடுத்துட்டீங்க. அப்பா இல்லாத எனக்கு, அப்பா ஸ்தானத்துல நின்னதுக்கு நான் உங்களுக்குக் கண்டிப்பா நன்றி சொல்லணும். எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு. அதுக்கு எத்தனை தேங்க்ஸ் சொன்னாலும் நிறைவாகாது” என்றான்.
“அதுக்குத்தான் யார் கால்லயும் விழாத நீ, உன் அம்மாவுக்கு அப்புறமா எங்க ரெண்டு பேர் கால்ல விழுந்திருக்க. அதுவே பெரிய விஷயம் தான். எல்லாத்துக்கும் மேல அதே அப்பா ஸ்தானத்துல நின்னு, உன் அக்கா கல்யாணத்தையே பண்ணிவச்சிருக்க. அதுக்கு நாங்களும் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று கூறினான் சேகர்.
அவர்களின் செல்லக் குழந்தை நிர்மலா வந்து அவன் கையில் தொற்றிக்கொள்ள, அவனும் அவளை தூக்கிக்கொண்டான்.
பிறகு அனைவருமாக பேசிக்கொண்டே சிரித்தபடி சாப்பிட்டார்கள். எத்தனையோ நாட்களாக இருந்த வெறுமை நீங்கி, அந்த வீட்டில் மகிழ்ச்சி மீண்டிருந்தது.
ஆசையாக மனைவியின் கரம் பிடித்தவன், படிகளில் ஏறும் போது அஷ்டலட்சுமி அவள் பெயரைச் சொல்லி அழைக்க, அவனும் அவளை விட்டுவிட்டு அறைக்கு வந்துவிட்டான்.
ஆனால் இன்னும் வராமல் தன்னைத் தவிக்க வைத்துக்கொண்டிருந்த தன் மனைவியைப் பற்றி மனதில் நினைத்துக்கொண்டிருந்தான்.
முதல் நாள் இரவு காத்திருந்தது வேறு விஷயம். ஆனால் இப்பொழுது, மனம் முழுவதும் காதலிருக்க, காத்துக்கொண்டிருப்பது கஷ்டமாக இருந்தது. காமம் முதல் நாளிலேயே துளிர்த்துவிட்டது அல்லவா? அதை அடக்கத்தான் அவனும் வழி தேடிக்கொண்டிருக்கிறான்.
அவள் கையில் பாலுடன் வந்தாள்.
“இது எதுக்கு? அதுதான் வயிறு ஃபுல்லா சாப்பிட்டோமே?” என்றான்.
“இது அம்மா கொடுத்து அனுப்பினாங்க சீனியர்” என்றாள்.
அவளிடமிருந்து அதை வாங்கி ஓரம் வைத்தவன், அவளைக் கட்டிலில் அமர்த்திக்கொண்டான். “இப்ப சொல்லு, இன்னும் நேரம் உனக்குத் தேவையா?” காதலாகப் பார்த்துக்கொண்டுக் கேட்டான்.
“நான் எதுக்காக நேரம் கேட்டேனோ, அதை நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்க. ஸோ, நீங்க கேட்கிற நேரம்?” என்று இழுத்தாள்.
“டு பி பிராங்க், முந்தாநேத்து அந்த காரிடார்ல உன்கிட்ட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் எனக்கு ஒரு தெளிவு கிடைச்சது. நேத்து உன்னோட ரூம்ல உன்கிட்ட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் உன்னை ரொம்ப பிடிச்சிருச்சு. ‘நான் நானாகவே இருக்கலாம்னு, நீ சொன்ன வார்த்தைல என்னை நீ கட்டிப்போட்டுட்ட. இந்த வார்த்தைன்னு மட்டும் இல்லாம, உண்மையிலேயே ரொம்ப பிடிச்சிருச்சு. நீ தூங்கிட்ட, ஆனா எனக்குத் தூக்கம் வரல. புரண்டு புரண்டு படுத்து என் மனசையும் சேர்த்துச் சாய்ச்சிட்ட. இத்தனை வருஷம் கடைபிடிச்ச பிரம்மச்சரியத்தை மேனகையாக் கலைச்சுப் பார்த்துட்ட. விசுவாமித்திரராயிருந்த நானும் என்னோட தவத்தை கலைச்சிட்டேன். நல்லவேளை உன்னை மிஸ் பண்ணலன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனாலும் உன்னை அணைப்பதில் தயக்கம் இருந்தது. மனைவியோட மனசுல இடம் பிடிச்சதுக்கப்புறம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்னு யோசிச்சு வச்சிருந்தேன்”.
“ஆனா நீ உன் மனசுல என்னை எப்பயோ நிறுத்திட்ட. உன்னளவுக்கு நான் சீனியர் இல்ல; அதுவும் நம்மளோட காதல் விஷயத்துல நான் உனக்கு ஜூனியர் தான். உன் போட்டோவைப் பார்த்ததுக்கப்புறம்தான் நீ என் மனைவியாய் என் மனசுல நின்ன. அப்பயும் எனக்குத் தயக்கங்கள் இருந்தது. ஆனா அந்தத் தயக்கங்கள் எல்லாம் நீ பேசின பேச்சுல மறைஞ்சு காணாம போயிடுச்சு. இன்னைக்கு உன் காதலைச் சொன்னதுக்கப்புறம், இனிமேல் இந்த விசுவாமித்திரர் தவம் இருக்கணுமா? பிரம்மச்சரியத்தைக் கலைச்சிடலாமேன்னு முடிவு எடுத்துட்டேன். ஆனா அந்த முடிவை நான் மட்டும் தனியா எடுக்க முடியாது, நீயும் சேர்ந்துதான் எடுக்க முடியும். என்ன கலைச்சிடலாமா?” என்று கேட்டான்.
பெண்ணவள் நாணிக் கோணித் தலை குனிந்து, தலையசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். அதற்கு மேல் தனித்திருக்கவில்லை காளையவன். அதற்காக அவள் மீது பாய்ந்துவிடவும் இல்லை. மெல்ல தன் ஸ்பரிசத்தை அவளுக்கு உணர்த்தி, அவள் ஸ்பரிசத்தை அவன் உணர்ந்துகொண்டு முன்னேற ஆரம்பித்தான். அவர்களின் கலவி தொடர்ந்து கொண்டே சென்றது. முடிவடையும் நிலையில் அவள் மூச்சு வாங்க, அவளுக்குச் சுவாசம் கொடுக்கும் ஆக்சிஜன் சிலிண்டராக அவனே மாறினான்.
காதலுக்காக ஆண்மகன் தான் போராட வேண்டும் என்றில்லையே? உண்மையான காதலுக்காகப் பெண்களும் போராடலாம். பெண்ணவளும் போராடி தன் காதலைப் பெற்றுவிட்டாள்.
காதல் கணவனோடு சேர்ந்து காமனையும் தோற்கடித்துவிட்டாள். அவளின் காதல் போராட்டத்திற்கு முடிவாக அவன் கணவன் மாறினான். அவர்களின் இந்த கட்டில் யுத்தத்திற்கு முடிவாக அவனே மாறினான்.
அவர்கள் இயற்றிய இலக்கணத்திற்குப் புத்தகமாகக் கிடைத்ததுதான் இரண்டு முத்தான செல்வங்கள்.
முதல் குழந்தை பெண்ணாய்ப் பிறந்ததில் அத்தனை சந்தோஷம் தம்பதியினருக்கு. சீரும் சிறப்புமாக அவளை வளர்க்க வேண்டும் என்று அப்பொழுதே கனவுகள் கண்டார்கள். அவளுக்கு ஆராதனா என்ற பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்கள்.
அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் பிறந்தான். அவர்களின் சந்தோஷத்திற்கு எல்லையில்லாமல் போனது. ‘ஆசைக்கொன்று, ஆஸ்திக்கு ஒன்று’ என்று வாரிசுப் பெருக்கத்தை நிறுத்திக்கொண்டார்கள்.
ஆனால் அவர்களின் கலவி யுத்தம் மட்டும் நீண்டு கொண்டே காதலோடு சென்றது. காதல் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
திருமணமான புதிதில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதை விட, வருடங்கள் செல்லச் செல்ல அவர்கள் இருவரும் தத்தமது துணையைப் புரிந்துகொண்டது ஏராளம். முதலில் காதலில் திளைத்திருந்தது ஸ்ரீலீலாவாக இருக்கலாம், ஆனால் இப்பொழுது காதலை இரட்டிப்பாகக் கூட்டிக் கொடுத்துக்கொண்டிருப்பது ராஜ்குமார் என்கின்ற ராஜேந்திர பிரசாத்தான்.
அவன் வீட்டில் அழைக்கும் பெயர் ராஜ்குமார். ஆனால் எழுத்து வடிவமாக எல்லா இடங்களிலும் இருப்பது ராஜேந்திர பிரசாத் என்று அவனுடைய தந்தை வைத்த பெயர்தான். அதை மாற்றிக்கொள்ளத்தான் அவன் நினைத்தான், ஆனால் அவன் தாய் விடவில்லை. மற்ற அனைத்திலும் பிடிவாதம் பிடித்தவன், பெயரில் மட்டும் விட்டுக்கொடுத்துவிட்டான் தன் தாய்க்காக.
திருமண விஷயத்திலும் தாய்க்காகத்தான் விட்டுக்கொடுத்தான். ஆனால் தாய் தேவதையைக் கொண்டுவந்து அவன் கையில் சேர்த்துவிட்டார். அவன் வாழ்க்கை இப்பொழுது சொர்க்கமாக மாறியது.
தன்னைப்போலத் தன் மகளும் காதல் என்று வந்து நிற்க, அவள் எந்த விதத்திலும் தோற்கக் கூடாது என்று சிந்தித்தவர், அவனைப் பற்றி ஆராய்ந்தார். ஆனால் ராகேஷைப் பற்றி அவர் கேள்விப்பட்ட விதத்தில் எல்லாம் நியாயமாக இருக்க, அவரே முன்நின்று திருமணம் செய்துவைத்தார்.
அதன்பிறகு அர்ஜுன் காதல் தோல்வியில் அவரைப் போலவே வந்து நின்றான். மகளாவது நல்லவனைத் தேர்ந்தெடுத்துக் காதலித்தாள்; ஆனால் மகன்? தன்னைப்போலவே ஏமாந்துவிட்டு வந்து நிற்கும்போது அவ்வளவு வேதனையாக இருந்தது ராஜேந்திர பிரசாத்திற்கு.
இரண்டு நாட்கள் அர்ஜுன் பட்ட வேதனையை விட, அவர் பட்ட வேதனை அதிகம். அப்போதும் ஸ்ரீலீலா தான் அவரைத் தேற்றினார். கணவனை அவர் தேற்ற, மகனைத் தேற்றும் பொறுப்பை மகளிடம் விட்டுவிட்டாள்; மருமகனையும் உதவிக்கு நாடினாள்.
அவர்கள் தங்கள் வேலையைச் செவ்வனே செய்தனர். ஊர்ப் பயணம் அவனுக்கு ஒரு சிறந்த மாற்றமாகத்தான் அமைந்தது. வந்ததும் அவன் தெளிவான முடிவை எடுத்தான். அதற்குப் பெற்றவர்களாக அவர்களும் துணை புரிந்தார்கள்.
இதோ காலங்கள் கடந்துவிட்டது. மகனுக்கும் திருமணம் செய்யும் நிலை வந்துவிட்டது. மகனுக்காகப் பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மகனுக்கு ஏற்ற துணை தானாகத் தேடி வந்தது. இன்முகமாக அதற்குச் சம்மதித்துவிட்டார்கள். மகனின் சம்மதத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பார்க்கலாம் அவர்களின் திருமணத்தை……