பூவிழி வாசம்
முல்லைப்பூ பந்தல் வெள்ளைப்பூக்களால் நிறைந்து கொள்ளை அழகுடன் நின்றது. சில் என்று வீசிய காற்று பூமரங்களைத் தழுவிச் சென்றதில் புதுவித வாசம் அந்த இடத்தை நிறைத்தது.
பூமரங்களை தொட்டுத்தொட்டு வந்த காற்று மெல்ல வீட்டு முகப்பில் உள்நுழைந்து வாசனையைப் பரப்பியது வீடெங்கும்.
பூவாசத்தில் திழைத்தபடி, வாசலில் இருந்த பூக்குவளைக்குள் அன்று மலர்ந்த மலர்களை அழகுற அடுக்கிவைத்துவிட்டு, சற்றே தள்ளி நின்று அந்தப் பூக்களின் மெல்லிய அழகை ரசித்தவளாக சமையல் அறைக்குள் நுழைந்த பூவிழியை பெரியவரின் குரல் வெளியே இழுத்தது.
பூவிழி.... பூவிழி ...... பூவிழியம்மா....| அந்த வீட்டுப் பெரியவரான பரமானந்தரின், மகிழ்ச்சியான குரலில் சமையல் கூடத்திலிருந்து எட்டிப் பார்த்தாள் பூவிழி.
என்னப்பா.....?| என்று வெளியே வந்து கேட்ட பூவிழியிடம், அம்மாடி, சின்னனுகள் ரெண்டும் எங்கயம்மா, ஒரு சந்தோசமான விசயம் சொல்லவேணும்,| என்றார்.
என்னப்பா....ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறீங்கள், அப்பிடி என்ன விசயம்?| என்று கேட்டவளிடம்,
அது ஒண்டுமில்லையம்மா, பெரியவன், ஊருக்கு வாறானாம், இப்பதான் போனில சொன்னவன், எவ்வளவு காலமாச்சு, அவனைப் பாத்து, படத்தில பாக்கிறதும் வீடியோ கோல் கதைக்கிறதும் போதும் எண்டு சொல்லுவான், என்ர ஏக்கம் அவனுக்கு எங்க புரியப்போகுது, போனதுக்கு தாயின்ரை கடைசி சடங்குக்கு கூட அவன் வரேல்லை, மகன் வசதியா இருக்கிறான் என்ற சந்தோசத்திலையே அவ போய்ச்சேந்திட்டா|
எனச்சொல்லியபடியே சின்னமகன், மகள் இருவரையும் அழைத்து விசயத்தை சொல்வதற்காக மாடிக்கு விரைந்தார்.
அவளுக்குள் ஒரு படபடப்பு ஓடியது, இந்த வீட்டிற்கு வந்து இதுவரை காலமும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் அவளது காலம் ஓடிவிட்டது, மூன்று வருசமாச்சு, இப்ப பெரியவன், வரப்போகிறான்|, என்ற வீட்டுப் பெரியவரின் வார்த்தைகள் அவளுக்குள் இனம்புரியாத ஒரு பயஉணர்வை உண்டுபண்ணியது. அவனைப்பற்றி தகப்பனார் சொல்லக்கேட்டதுமே அவளது முகம் வெளுத்துப்போனது.
பெரியவன்.....ஆமாம்.... அவன் எல்லாவற்றிலும் பெரியவன் தான், காதலிப்பதில், அதைக்கற்றுக்கொடுப்பதில,; விட்டுக்கொடுப்பதில் என எல்லாவற்றிலையும் பெரியவனே தான். எண்ணங்கள் தன்பாட்டில் என்னவோ சொல்லிக்கொண்டது.
தன் நினைவுகளை உலுக்கி கலைத்தவள், மீண்டும் சமையலறைக்குத் திரும்பினாள்.
காலைப்பொழுது பொலபொலவென புலர்ந்துவர, சமையலறையில் நின்று, சமையல் வேலை செய்யும் பத்மினியம்மாவிற்கு, உதவி செய்தபடியே பெரியவருக்கான உணவுத் தயாரிப்பையும் செய்து கொண்டிருந்தாள் பூவிழி.
சிறிது நேரத்தில் மாடியிலிருந்து இளஞ்செழியனும் வண்ணமதியும் தகப்பனாருடன் கீழே வந்தனர், மூன்று கப்புகளில் பால் கலந்த தேநீரை வார்த்தவள், பெரியவருக்கான கிறீன் ரீயையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து மூவருக்குமாய் பரிமாறியபடியே தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு பெரியவரின் அருகிலேயே அமர்ந்தாள்.
அவளது மனம், இரண்டு விதமான உணர்விற்குள் ஆட்பட்டுக் கிடந்தது. முகம் இருவேறு சிந்தனைகளில் சிக்கியதால் புதிதாய் ஒருவித நிலையில் நின்று தத்தளித்தது. அவனைப் பார்கத்துடித்த மனதை அடக்கவும் முடியாமல், பார்க்காமலே இருந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை செயலாக்கவும் தெரியாது தவித்தாள்.
தேநீரைத் தந்த பூவிழியை உற்றுப் பார்த்த பெரியவருக்குள், பெருமை படர்ந்தது, ~பெரியவன் வரப்போகிறான்| என அவர் சொன்ன செய்தி, அவரைப் போலவே அவளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது, அவனை ஒருநாளும் கண்டதில்லையெனினும், தங்கள் சந்தோசம் அவளையும் சந்தோசப்படுத்தியிருக்கிறதே, என எண்ணிக் கொண்டார்., அந்த மகிழ்ச்சியில் அவளது தலையைத் தடவி ஆசுவாசமாய் புன்னகைத்தார்.
அவரைப் பார்த்துப் புன்னகைத்த அவளுக்குள் எண்ணங்கள் அலையடித்தன. பூவிழி அந்த வீட்டில் பணிசெய்பவளாக இருந்தாலும், அவளை அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் பெரியவர், பரமானந்தம் ஐயாவும் பிள்ளைகளும், ஏன், அந்த வீட்டின் பணியாளர்களும்கூட பார்த்துக்கொண்டனர். அவளுக்கும் அந்த வீட்டிற்குமான உறவு தொடங்கியது அவளது நினைவில் வந்துநின்றது.
மூன்று வருடங்களுக்குப் முன்னர், ஒரு நாள் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவசரமாக அவரை அவள் பணிசெய்த மருத்துவமனையில் சேர்த்திருந்தனர், அங்கே தாதியாகவும் உணவு பராமரிப்பு தொடர்பான ஆலோசகராகவும் உளநல ஆலோசகராகவும் வேலை பார்த்த பூவிழி, எல்லா நோயாளர்களையும் கவனித்து அவர்களுக்கான உணவு சார்ந்த பழக்கவழக்கங்களை வினவியபடி வந்தவள், கட்டிலில் சோர்ந்து படுத்திருந்த பரமானந்தம் ஐயாவைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துவிட்டாள்.
அந்த முகம், அவளது வாழ்நாளில் மறக்கமுடியாது மனதிலே பதிந்துவிட்ட முகம். மூப்பை தவிர இரண்டு முகஅமைப்பிலும் வேறெந்த வித்தியாசமும் இருக்கவில்லை. உடனேயே அவரைப்பற்றி அந்த விடுதிக்குப் பொறுப்பான வைத்தியரிடம் விசாரித்தாள்.
அந்த வைத்தியரும் பரமானந்தம் ஐயா வீட்டிற்கு குடும்ப வைத்தியர் என்பதால், அவரைப் பற்றிய விபரங்களை அப்படியே சொல்லிவிட்டார். அத்தோடு அவரது, மனதிற்குள் இருந்த யோசனையும் துக்கமும்தான், இரத்த அழுத்தத்தை அதிகரித்துள்ளது எனவும் அதுவே அவரது திடீர் நெஞ்சுவலிக்கு காரணம் என்பதையும் அவருக்கு நிறைய ஓய்வும், அமைதியும் சந்தோசமும் அவசியம் என்பதையும் சேர்த்தே சொன்னார்.
பூவிழி, முடிவுசெய்துவிட்டாள், அவரை அருகில் இருந்தே கவனிக்கவேண்டும் என்பதை. அதுவே தன்னுடைய வாழ்விற்கு ஒரு அர்த்தத்தை தரும் என்பதை.
அதன் பின்னர் அடிக்கடி அவரைப் பார்க்கச் சென்றாள், அவரோடு உரையாடினாள், மெல்ல மெல்ல அவரே, பேச்சுத் துணைக்காக அவளை எதிர்பார்க்கும் அளவிற்கு அவரது மனதில் இடம்பிடித்துவிட்டாள். காலையில் சின்ன மகன் இளஞ்செழியனும், மாலையில் மகள் வண்ணமதியும் அவரைப் பார்க்க வந்து செல்லும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் தன் பணியையும் கவனித்தபடியே அவரோடு பேசிக்கொண்டிருப்பாள்.
அவள், உறவினரைப் போல காட்டிய அன்பும் அக்கறையும் பரமானந்தம் ஐயாவிற்கு, மனபாரத்தைக் குறைத்தது, தனது குடும்பம் பற்றியும் பிள்ளைகள் பற்றியும், மூத்த மகன் அமெரிக்காவில் வைத்தியராகப் பணியாற்றுவதையும், தங்களுக்காக தங்கள் விருப்பத்திற்காக அவன் பிடிக்காத திருமணம் செய்துகொண்டதையும், எப்போதாவது வரும் அவனது அலைபேசி அழைப்புகள் பற்றியும் அவளோடு பகிர்ந்துகொண்டார்.
தனது முகமாற்றத்தை பெரியவர் கவனித்துவிடாதபடி, மிக அவதானமாய் கீழே குனிந்து கொட்டிய நீர் முத்துக்களை துடைத்துக் கொண்டாள் பூவிழி. அந்த துயரெல்லாம் தானே பட்டது போல வலித்தது அவளுக்கு, மனதில் அவனைச் சுமப்பவள் ஆயிற்றே, வலிக்காமல் இருக்குமா?
அவர் வைத்தியசாலையில் இருந்த இருபது நாட்களில் அவருக்கு மிக நெருக்கமாகிவிட்ட அவளை, அவரே, ~பகுதி நேரமாக தன்னிடம் பணிசெய்ய முடியுமா,| எனக்கேட்க, அதற்காகவே காத்திருந்த அவளும் சரியென்று சொல்லிவிட்டாள்.
அன்று காலையில் தகப்பனாரை அழைத்துச் செல்ல வந்திருந்த, மகனிடமும் மகளிடமும் அவளை அறிமுகம் செய்துவைத்தவர், பூவிழி, தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டிற்கு வந்து தன்னுடைய உணவு சார்ந்த விடயங்களைக் கவனித்துக் கொள்வாள் என்பதையும் சொன்னார்.
சிநேகிதமாய் புன்னகைத்தனர், இளஞ்செழியனும் வண்ணமதியும், ஏனோ, அவருடைய இரண்டு பிள்ளைகளையும் பார்த்ததும் அவளுக்கும் பிடித்துப் போயிற்று. அதன் பின்னர் காலையும் மாலையும் அந்த வீட்டிற்குச் செல்வதும் அவருக்கான உணவு விடயங்களை; சொல்லி செய்வித்து கொடுப்பதோடு, அவரோடு உரையாடிவிட்டு வருவதையும் வழக்கமாக்கினாள்.
அதன் பிறகு அவரது வாய்வழியாக அறிந்த ஒரு விடயத்திற்குப் பின்னர் தான் பத்மினியம்மாவை அந்த வீட்டிற்கு பணிக்கு அழைத்து வந்திருந்தாள்.
மூன்று மாதங்களாக இவ்வாறு நடந்துகொண்டிருக்க, ஒருநாள், பெரியவர், அவளிடம், ஏனம்மா, உன்னுடைய சொந்த ஊரே இதுதானா, உன் அம்மா அப்பா, உறவுகள் எல்லாம் இங்கதான் இருக்கிறாங்களா?| எனக்கேட்டார்.
பிறக்கும் போதே தாயையும் அதன் பின்னரான பத்தே நாளில் தந்தையையும் இழந்துவிட்ட அவள், வளர்ந்ததெல்லாம் தாய் வழி தாத்தா பாட்டியிடம் தானே, வெறுமையான சிரிப்பினை உதிர்த்தவள், ~என் விதியை எழுதும் போது, எழுதியவர் ரொம்ப தூங்கிட்டாரா, அதனால கிறுக்கலாவே எழுதி வைச்சிட்டார் அப்பா| என்றாள்.
என்னம்மா சொல்றாய்?| பரிவோடு கேட்டவரிடம்,
பாலைமோட்டை என்கிற பின்தங்கிய கிராமம் எங்களுடையது. அப்ப வறுமையும் வாழ்க்கையும் பின்னிப்பிணைஞ்சு கிடந்தது, நான் பிறக்கும் போது அடைமழைக்காலமாம், அம்மாவுக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்;லாததாலை ஜன்னி வந்து அம்மா இறந்திட்டா, அடுத்த பத்தாவது நாளில அப்பா... காடுவெட்டும் போது, விசம் தீண்டி இறந்துபோனார். பிறந்த உடனேயே இருவரையும் இழந்திட்டன், என்ர ராசிதான் இப்பிடி அவர்களுடைய உயிரை எடுத்திட்டதாகச் சொல்லி, இவ துர்ராசி பிடிச்சவ என்று அப்பாவின்ரை உறவுகள் என்னைத் தூக்கிப் போட்டுட்டினம், அம்மாவின்ரை அம்மாதான், என்னை வளத்தது, எல்லாரும் என்னை துரதிஸ்டசாலி என்று சொன்னாலும், அம்மம்மா மட்டும் எப்பவும் அப்பிடிச் சொன்னதில்லை, நான் அவவை பாட்டி என்றுதான் சொல்லுவன், மத்தவங்களோட கதையை அலட்சியமா எடுத்திட்டு வாழச்சொல்லிக் கொடுத்ததும் பாட்டிதான், எல்லாரிட்டயும் அக்கறையா அனுசரணையா நடக்கிறதுக்கும் எல்லாரையும் நேசிக்கவும் பாட்டிதான் சொல்லிக்குடுத்தா| என்றவள்,
காசா, பணமா, அன்புதானே, அதைக் காட்டுறதுக்கு யோசிக்கவேகூடாது என்று பாட்டி எப்பவும் சொல்லுவா, சின்ன வயசில இருந்து விடுதி வாழ்க்கைதான், விடுமுறைகளில மட்டும் பாட்டி வீட்டுக்குப் போவன், மற்றபடி, இங்கயேதான்| என்றவளை வியப்பாய் பார்த்தார்.
இந்தச் சின்ன வயதில் இத்தனை பக்குவமா| என ஆச்சரியமாக இருந்தது அவருக்கு.
அடுத்துவந்த சில நாட்களில், என்ன நினைத்தாரோ, தன் பிள்ளைகள் இருவரையும் அழைத்தவர், பூவிழியை அந்த வீட்டில் தங்கவைப்பது தொடர்பாக அவர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் இருவருக்கும் அவளது எளிமையும், அன்பும், அதிகமாகப் பிடித்திருந்ததால் உடனேயே சம்மதம் சொல்லிவிட்டனர்.
'அண்ணனிடம் ஒரு தடவை கேளுங்கள்,' எனப் பிள்ளைகளிடம் சொல்ல, அவர்களும் உடனடியாக அண்ணனுக்கு அழைப்பை எடுத்தனர்,
ஆனால் வழமை போல அது தவறிய அழைப்பாக அவனுக்குப் பதிவாகிவிட்டது. அவன் அழைப்பை எடுக்கவேயில்லை. என்ன செய்வதெனத் தெரியாது. அண்ணனுக்கு குறுந்தகவலை அனுப்பினான் இளஞ்செழியன்.
அவனும் இதற்கெல்லாம் என்னைக் கேட்பானேன், நீங்கள் பார்த்துச் செய்யுங்கள் அப்பா, அதுவும் உங்களுக்குப் பிடித்திருந்தால், எனக்கு ஆட்சேபனை இல்லை,| எனப் பதில் அனுப்பியிருந்தான்.
சந்தோசத்தில் துள்ளிக்குதித்தாள் வண்ணமதி. அவளைவிட ஐந்து வருடங்களேனும் மூத்தவளாக இருந்த பூவிழி மீது வண்ணமதிக்கு மதிப்பும் மரியாதையும் நேசமும் இருந்தது. அதேதான், இளஞ்செழியனுக்கும். அவனைவிட இரண்டு ஆண்டுகள் மூத்தவளாக இருந்த பூவிழி மீது அவனுக்கு தனிப்பட்ட பாசம் என்பதைக் கடந்து, அப்பாவை நன்றாக கவனித்துக் கொள்கின்ற பாங்கு பிடித்திருந்தது.
ஒரு மகிழ்வான நாளில், அந்த வீட்டில் தங்குவதற்காக கால் பதித்தாள் பூவிழி. அவள் அங்கு வந்த பிறகுதான், அந்த வீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன, முக்கியமாக பரமானந்தத்தாருக்கு எந்த வியாதியும் வரவேயில்லை. அவரவருக்கான அனைத்து தேவைகளையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டாள். விருந்தாளியாக வந்தவள். அந்த வீட்டின் உறவாகிப்போனாள். மற்ற இருவருக்கும், தாயைப் போல இருந்தது அவளது கவனிப்பு.
ஆண்டுகள் மூன்று இப்படி ஓடிக்கடந்துவிட்டிருக்க,
அந்த வீட்டின் மூத்தவன், அந்தக் குடும்பத்தின் முதல் வாரிசு, அதுவும் நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்ந்தவன், ஊருக்கு வருகிறான், என்பதில் வீடு களை கட்டியது. வீட்டிற்கு அவனுக்குப் பிடித்த மெல்லிய நீல நிறத்தில் வண்ணப்பூச்சு பூசவைத்தார் பெரியவர், பொறியியலாளனாக பணியில் இருக்கும் இளஞ்செழியனோ, வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தை இன்னும் அழகுபடுத்தி உள்ளேயும் அண்ணனுக்குப் பிடித்த விதமாக அனைத்தையும் மாற்றியமைத்தான்.
பல்கலைக்கழக மாணவியான தங்கை வண்ணமதியும் தன் பங்கிற்கு, திரைச்சீலைகளையும், மேசை விரிப்புகளையும் பூச்சாடிகளையும் அழகழகாய் மாற்றிவைத்தாள். சமையல்கார பத்மினியம்மாவோ, அவனுக்காக விதவிதமான பலகார வகைகளை செய்து கொடுப்பதற்காக லிஸ்ற் போட்டுக் கொடுத்தார். பூவிழிக்கு மட்டும், அவனுக்காக என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவளது மனதில் அமைத்துவைத்திருந்த சிம்மாசனத்தில் அவன், சட்டகம் போட்டு அமர்ந்திருந்தான். மனைவியோடு வருகிற அவனது அந்த இடத்தை எடுத்துவிடவேண்டும் என அவள் நினைத்தாலும் அவளால் அது முடியவில்லை. கழுத்தை தொட்டுப் பார்த்தாள், பத்து வருடங்களுக்கு முன்னர், வாலிபத்தின் வனப்பான காலத்தில், பருவத்தின் உந்துதலில் அவளது கழுத்தில் அவன் அணிவித்த கறுப்பு மணிமாலை விரல்களை உரசியது.
இந்த மாலையை நான் கட்டின தாலியா நினைச்சுக்கொள், எப்ப இருந்தாலும் நீதான் என் மனைவி.| அவன் சொன்ன வார்த்தைகள் ஓங்காரமாய் ஒலித்தது அவளுக்குள். இருபது வயதுப் பாவையான அவளுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரியாது என நினைத்தானோ என்னவோ, சொல்லிச் சென்றுவிட்டான் என எண்ணிக்கொண்டாள்.
மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல கடந்தகாலத்தை உதிர்த்துவிட்டு நடப்பிற்கு வந்தாள்.
வீட்டில் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள் பூவிழி. இங்கே, தன் வீட்டில், கண்டதும் அவன் என்ன செய்வான், அதிர்ச்சியடைவானா, ஏங்கிப் போய்விடுவானா, அல்லது மனைவிக்காக காணாதது போலவே கடந்து சென்றுவிடுவானா, அல்லது உண்மையில் அவளை மறந்தே இருப்பானோ, கேள்விகள் அவளைத் துளைத்து எடுத்தன.
மாதமொன்று என்பது பத்து நாட்கள் என்றாகி, அதுவே, வாரம் ஒன்றாகி அவன் வருவதற்கு இரண்டு நாட்களே என்ற நிலையில் ஏதேதோ எண்ணங்கள் அலைக்கழித்தது பூவிழியை. அவன் வீட்டில் நிற்கும் வரை, வைத்தியசாலையில், தோழிகளோடு விடுதியில் தங்கிவிடலாமா என எண்ணினாள்.
நின்று அவனைப் பார|; என்று ஒருபக்க மனம் வாதாடினாலும், யாரோ போல அவனைப் பார்க்கும் திறன் இல்லையே| என மறுபக்க மனம் மறுத்தது.