• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 10

Vishakini

Moderator
Staff member
பாகம் 10.

காலையில் தோட்டத்தில் நின்ற பூவிழியைக் கண்ட, இளஞ்செழியன், ~காலை வணக்கம், பூவிழி| என்றான்.
அவ்வேளை அவனுக்குப் பின்னால் வந்துகொண்டே ~டேய் இளா, என்னதிது, மரியாதை இல்லாம பெயரெல்லாம் சொல்லுறாய்?| என்ற அண்ணனை விசித்திரமாய் பார்த்தான் இளஞ்செழியன்.
~என்னண்ணா, நீங்கள், நான் வழமையாவே அப்பிடித்தானே சொல்லுறது, நீங்கள் ....|
~அதுக்கில்லையடா, நீயும் வண்ணமதி மாதிரி, பூவிழியம்மா என்றே சொல்லன்| என்றான்.
ஏனோ, பூவிழியை இளஞ்செழியன் அப்படி அழைப்பது பொற்செழியனுக்குப் பிடிக்கவில்லை. உணர்வுகளால் அவனோடு ஒன்றிப்போனவளை, அவனுடைய நினைவுகளைச் சுமந்தபடி வாழ்ந்துகொண்டிருப்பவளை தம்பி பெயர் சொல்லி அழைப்பது இவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது.
~அண்ணா, அவங்களுக்கு என்னைவிட ரெண்டு வயசுதான் அதிகம், அதுக்காக அவங்களை கிழவியாக்கி கூப்பிட்டா அடிக்கமாட்டாங்களா?|
என்ற இளஞ்செழியனிடம், ~நான் அடிக்க எல்லாம் மாட்டன், உங்களுக்குப் பிடிச்சா நீங்கள் அப்பிடியே கூப்பிடலாம்| என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் பூவிழி.
இளஞ்செழியன் தன் விழிகளை விரித்து அண்ணனைப் பார்த்தான்.
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் பொற்செழியன், முன்னர் இருந்ததற்கு தோற்றத்தில் அவளிடம் அதிக வித்தியாசம் இல்லையென்றாலும் எப்போதும் அவளிடம் இருக்கும் துறுதுறுப்பு மட்டும் காணாமல் போயிருந்ததும் பளிச்சென்ற அவள் விழிகளுக்குள் ஒரு நிராசை இருப்பதும், அவனுக்குப் புரிந்தது.
தேநீருக்காக எல்லோரும் சுற்றி அமர்ந்திருந்தனர்.
அறையில் இருந்து வெளியே வந்த பூவிழி, அங்கே செல்லவா, வேண்டாமா என்ற எண்ணத்தில் நின்றுகொண்டிருக்க, பெரியவர், கைகாட்டி அழைத்து ~இங்கே வாம்மா பூவிழி| என்றார்.
அண்ணனும் தம்பியும் அருகருகாக அமர்ந்திருக்க, வண்ணமதி போனில் ஏதோ செய்துகொண்டிருந்தாள், மெல்ல நடந்து, வண்ணமதிக்கும், பரமானந்தத்தாருக்கும் நடுவில் அமர நினைத்த பூவிழி அப்படியே திரும்பி, சமையலறைக்குச் சென்றாள். பத்மினியம்மா தயார் செய்திருந்த முறுக்குகளை ஒரு தட்டில் பரப்பியவள், தேநீர்க் குவளைகளைக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.
அவளுக்குத் தெரியும், பொற்செழியனுக்கு முறுக்கு என்றால், கொள்ளை விருப்பம், அந்தச் சின்னவயதில், அவளிடம் கேட்டு, அவள் பாட்டியிடம் கேட்டு ஓரளவான சுவையோடு செய்துகொண்டு சென்றதை அவன் ருசித்துச் சாப்பிட்டிருக்கிறான். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு தட்டை அவன் பக்கத்தில் வைத்தாள். அவனும் அவளை ஆவலாய் நிமிர்ந்து பார்த்தான், பார்க்காதது போல அவள் தன்னிடத்தில் அமர்ந்துகொள்ள,
~பத்மினியம்மா...| என்றான்.
~என்ன தம்பி?| அன்பும் ஆர்வமுமாய் வந்தது அவரது வார்த்தைகள்.
~எனக்கு முறுக்கு ரொம்ப விருப்பம், யார் அப்பா சொன்னாரா?| என்றான்.
~இல்ல ஐயா...பூவிழிதான் சொன்னா...| என்றவரைச் சங்கடமாகப் பார்த்தாள் பூவிழி.
'ஐயோடா...பத்மினியம்மா இப்பிடியா மாட்டிவிடுவாங்க...| என நினைத்தபடி, குறும்பு கொப்பளிக்க பார்த்த பொற்செழியனுக்கும் கேலியோடு பார்த்த மற்ற வாலுகளுக்கும் பதில் சொல்லத்தெரியாது விழித்தவள்,
~அது...அப்பா....நீங்கள்தானே ஒருநாள் சொன்னனீங்கள், அதைத்தான் நானும் பத்மினியம்மாவிடம் சொன்னன்| என்றாள்.
~நானா.....நான் எப்பம்மா சொன்னன், எனக்கு நினைவே இல்லையே| என்றவரைப் பார்த்து,
~அது நிறைய நாளுக்கு முதல்ல சொன்னது, மறந்திருப்பீங்கள் அப்பா| என்றாள் பூவிழி.
அவரும் தலையை ஆட்டிவைத்தார்.
அவளின் கள்ளத்தனம் கண்டுபிடிக்கப்பட்டதில் பொற்செழியனுக்கு ஏகப்பட்ட சந்தோசம், நிமிர்ந்து அவளைப் பார்க்க, அவளோ ஒன்றும் தெரியாதது போல தேநீரை மும்முரமாக அருந்திக்கொண்டிருந்தாள்.
அவனைப் பொறுத்தவரை, வாழ்க்கை, அவளை, இன்னும் இன்னும் அருகில் அழைத்து வருவதாகத்தான் தோன்றியது.
அப்படி இல்லையௌ;றால், அவனுடைய வீட்டிற்கு அவனுடைய உறவுகளுடன் அவள் தங்கவேண்டிய அவசியம் என்ன, இந்தக் குடும்பத்தின் மீது அவள் கொண்டிருக்கிற2 அப்பழுக்கற்ற பாசத்திற்கு என்ன காரணம்? சிந்தனைகள் எங்கெங்கோ தொலைந்து மீண்டது.
அப்போது அவனுடைய சிந்தனையைக் கலைத்தான் இளஞ்செழியன். ~அண்ணா, விருந்து பொறுப்பை பூவிழியம்மாவிடமே கொடுத்துவிடுவமே?|
அவங்களுக்கு சிரமத்தை கொடுக்கிறமாதிரி இருக்காதோ? என்று கேட்ட பொற்செழியனை, கனவாகப் பார்த்த பூவிழி, ~என்ன இளா, என்ன விருந்து?| என்றாள்.
~அண்ணா, கனகாலத்துக்குப் பிறகு வந்ததிலை, நண்பர்கள் எல்லாம் விருந்து வைக்கச்சொல்லி ஒரே கரைச்சலாம், சிலருக்கு கடைச்சாப்பாடு ஒத்துவராது, அதோடை, வீட்டிலை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நடந்தும் நிறைய காலம் ஆச்சு, அண்ணா வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கு, அதை, ஒரு விழாவாக கொண்டாடலாம் என்றுதான்...நாளைக்கு சின்னதா ஒரு உணவு விருந்துவைப்பம் என்று...|
~அதுக்கென்ன, செய்வம், எனக்கு உங்கட இப்பத்தைய சாப்பாட்டு முறை எல்லாம் தெரியாது. அதனாலை, என்னாலை முடிஞ்சதை நான் செய்துதாறன்,| என்றாள்.
~இப்பத்தைய சாப்பாடு ஒண்டும் வேண்டாம்,..இயற்கையான ஆரோக்கியமான உணவு வகைகள் இருந்தால் போதும்| என்றான் பொற்செழியன்.
~ஓமோம்...அதுதான் நல்லதையா| என்றார் பரமானந்தத்தார்.
சரிசரி...சாப்பாட்டு வகைகளைச் சொல்லுங்கோ, நான் போனிலை குறிச்சு வைக்கிறன்| என்று வண்ணமதி ஆர்ப்பரிக்க,
~சைவம், அசைவம் எண்டு வைப்பம், விரும்பின மாதிரி அவரவரே சாப்பிடட்டும்| என்றான் இளஞ்செழியன்.
இடியப்பம், றொட்டி, சோறு, பிட்டு எல்லாமே செய்வம், தேங்காயின்ரை இளநீரும் வழுக்கலும் சேர்த்து பாயாசம் வைப்பம்,| பூவிழி சொல்ல,
~வந்த உடனே குடிக்கிறதுக்கு, ஏலக்காய், சேர்த்த பால் தேநீர் குடுக்கலாம்..என்றார் பத்மினி அம்மா.
இறச்சியிலை மூன்று நாலு வகை செய்யுங்கோ, அதோடை பன்னீர் கிரேவியும் கத்தரிக்காய் பொரிச்ச பிரட்டலும் செய்யுங்கோ என்றார் பரமானந்தத்தார்.
~பூவிழியம்மா..ஐஸ்கிறீமும்| என்றாள் வண்ணமதி.
~உனக்கு எப்ப பாத்தாலும் இது ஒரு பாடம்....|தகப்பனார் சொல்ல, செல்ல முறைப்பு ஒன்றை காட்டிவிட்டு அண்ணனிடம் திரும்பி,
~பழங்கள் வெட்டி வைப்பம், தேலையானவை எடுத்துச் சாப்பிடட்டும்..| என்றவள், ~நான் சொன்னது சரிதானே பூவிழியம்மா| என்றாள்.
~கேசரியும் வைக்கலாம்| இடையிட்ட பொற்செழியன், ~சிறப்பா இருக்கிறதோடை இனிப்பான சுவை நாக்கில தங்கியிருக்கட்டும்...வர்றவங்களுக்கு| என்றான்.
அண்ணா..பூவிழியம்மாட்ட சொல்லிட்டீங்கள் தானே, இனி விருந்து எப்பிடி களைகட்டும் என்று பாருங்கோ, ஒரு விசயத்தை எடுத்தா சிறப்பா முடிக்கிறதிலை அவங்க, கெட்டிக்காரி...என்ற தங்கைக்கு, ஆமோதிப்பாக தலையை அசைத்தான் பொற்செழியன்.
~ஐயோ..வண்ணமதி....கேக்கிறவங்களுக்கு அலுக்கப்போகுது, பேசாமல் இரம்மா..| என்றாள் பூவிழி.
~வேலை எல்லாம் எப்பிடி போகுது பூவிழி?| என்ற பொற்செழியனிடம்,
தலையை ஆட்டி பதிலுரைத்தாள் பூவிழி.
சட்டென பூவிழிக்கு நேற்று, தான் மறுவாழ்வு மையத்தில் சந்தித்த நபரின் நினைவு வந்தது.
~ம்ம்...மனதிற்கு பிடித்த வேலை, சந்தோசமாகத்தான் போகிறது, நேற்று நாங்கள், ஒரு இடத்திற்குப் போயிருந்தம், அங்க வித்தியாசமான ஒரு மனிதரையும் சந்தித்தேன்| என்றாள்.
~ஓ....எங்க போனீங்க பூவிழியம்மா?| முந்திக்கொண்டு கேட்டாள் வண்ணமதி.
~போதை மறுவாழ்வுமையம் ஒன்றுக்குப் போனம், நல்ல அறிவாளியான, பெரிய பதவியில் இருந்த ஒருத்தர், போதைக்கு அடிமையாகி, இப்ப ஓரளவுக்கு மீண்டு, அங்கேயே இருக்கிறார், ரொம்ப நல்லவர், வாழ்க்கை மீது அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, வாழுறதிலை பிடிப்பில்லாமல் இருக்கிறார், அவரை எப்பிடியாவது வெளியிலை கூட்டிவந்து, இந்த உலகத்தின்ரை பார்வையை எதிர்த்து வாழவைக்கவேணும்| என்றாள் மிகத்தீவிரமாக.
அவளுடைய தீவிரம் பொற்செழியனுக்கு ஏதோ ஒரு புதுவிதமான செய்தியைச் சொல்லியது.
~ஒரு நாளைக்கு நாங்கள் எல்லாரும் போய் அங்க பாப்பமே?| வண்ணமதிதான் கேட்டாள்.
~உங்களுக்கு விருப்பம் என்றால் போகலாம்....| இவள் சொன்னதும்
~அண்ணா..அண்ணா...போவமே?| குழந்தை போல கெஞ்சிய தங்கைக்கு சரியென்று தலை அசைத்தான் பொற்செழியன்.
~சின்னண்ணா நீயும்?| இளஞ்செழியனிடமும் வண்ணமதி கேட்டுவிட, அவனும் சரியென்று தலை அசைத்துவிட்டு, ~பூவிழியம்மாவிற்கு முதலே தெரிஞ்சவரோ?| என்றான் கேள்வியாக.
‘சீச்சீ...எனக்கு முதல் தெரியாது, மாதம், ஒருமுறை சேவைக்காக நாங்கள், போறது வழமைதானே, அப்பிடி போனது தான், நேற்றுத்தான் ~முதல் முதலா கண்டனான், அறிவுத்திறன் கொண்ட ஒருத்தர், அநியாயமாக ஐந்து வருச வாழ்க்கையை இழந்திருக்கிறார் என்று நினைக்க, கவலையாக இருந்தது| மனதறிந்து பொய் சொன்னாள்.
கேட்டுக்கொண்டிருந்த பத்மினியம்மாவிற்கு மனதிற்குள் படபடப்பு. அவருடைய மகனும் அப்படி ஒரு இடத்தில்தானே இருக்கிறான்,அவனைத்தான் பூவிழி சொல்லுகிறாவோ, கடவுளே, பூவிழி எதையாவது இவர்களிடம் சொல்லிவிட்டால்....நெஞ்சை மெல்ல நீவிவிட்டுக்கொண்டார்.
அவனை, பரிபூரணனை இவர்களோடு கற்பனை செய்து ஒட்டிவைத்துப் பார்த்தாள் பூவிழி.
 
Top Bottom