பாகம் 16.
சூரியச் செவ்வொளியில், பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தான் பரிபூரணன். பார்த்தீபன் கனா, அவனை தனக்குள் இழுத்துப் புரட்டிக்கொண்டிருந்தது. ஒருவாறாக முடிவுப் பகுதிக்கு வந்துவிட்டான்.
அவன் புத்தகம் வாசிப்பதை விட்டு, எத்தனை வருடங்களாகிவிட்டன.....அதன் சுவாரஸ்யம் மறைந்துவிட்டதாகத்தான் இதுவரை நினைத்திருந்தான். ஆனால் அந்த நினைப்பு, அவள் கைபட்டு பார்த்திபன் கனா, அவனுடைய கரத்தில் கிட்டும் வரைதான் இருந்தது.
அந்தப் புத்தகத்திலிருந்த ஒவ்வொரு எழுத்துகளிலும் அவனுக்கு அவளின் பூமுகம் தான் தெரிந்தது. வாசிக்க, வாசிக்க, அவனுக்குள் கற்பனையில் விரிந்த உருவம், பெண்ணோவியமாய் நளினம் காட்டியவள், பருதி தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, ~நீ காதலிப்பாய், அவளுக்காக ஏங்கித்தவிப்பாய்| என்று யாராவது சொல்லியிருந்தால் அவன் நம்பியிருக்கவேமாட்டான்.
வெளியே போகவேண்டும், எப்படியாவது ஒரு வேலையில் இணைந்துவிடவேண்டும் என மனதில் பலவாறான சிந்தனைகள் போட்டிபோட்டன.
~உலகத்தின் பலவீனங்களில் மிக நல்ல பலவீனம் காதல|; என்று யாரோ எழுதியதை அவன் வாசித்திருக்கிறான், அந்தப் பலவீனம் அவனுக்குள்ளும் பரவிக்கொண்டுவிட்டதே,
~இது கைகூடுமா?| என்கிற ஒரு கேள்வி இந்த இரண்டு நாளில் பல முறை அவனுக்குள் வந்து சென்றுவிட்டது.
கைகூடாவிட்டால் என்ன, அவன் காதலிக்கிறான், காதலித்துக்கொண்டே இருப்பான்..அவ்வளவுதானே...
அன்னைக்கு நிகராக அவனுடைய மனதில் இடம்பிடித்தது பூவிழிதான்...அது தாய்ப்பாசம்...ஆனால் பருதி...?
அவன் பிறந்து வளர்ந்த இந்த முப்பது வருட வாழ்க்கையின், அர்த்தமானவள், ஒரு ஆணுக்கு, அவன் நேசிக்கிற நல்ல பெண்ணொருத்தி மனைவியாகிவிட்டால், அவனைப்போலவே அவளும் நேசித்துவிட்டால் போதும்....அவளுக்கு தாயாகி, சேயாகி, யாதுமாகி...வாழ்ந்து, வாழ்க்கையை அழகாக்கிவிடலாம்...
அப்படி ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டால் அந்த இல்லறம், வரம்தான்...அந்த வரம் அவனுக்கு கிட்டுமோ...உள்ளம் பலவாறாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தது.
காலை உணவிற்காக எல்லோரும் வரிசையில் சென்றுகொண்டிருந்தனர். இவனுக்குப் பசிக்கவில்லை..என்னவோ தெரியவில்லை..பருதியைப்பற்றி நினைத்துக்கொண்டு, அவளுடைய நினைவுகளை மன அடுக்கில் சேமித்துக்கொண்டு இருந்துவிட்டால் போதும் போல இருந்தது. நேற்று வரை அவள் யாரென்றே தெரியாது, இன்று அவனுடைய எண்ணமெல்லாம் நிறைந்தவளாகிவிட்டாள்...இந்த விந்தையைத்தான் காதல் என்பார்கள் போல என நினைத்தான்...
சில திருமணங்களில், மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்கும் போதும், கைகளில் மோதிரம் மாற்றும் போதும் மணமக்கள் கண்களில் கண்ணீர், துளிர்ப்பதைப் பார்த்திருக்கிறான், ~இதென்ன நடிப்பு| என்றுதான் அவன் இதுவரை நினைப்பதுண்டு,
ஆனால், ~பருதிக்கு, தான் பொருத்தமானவன் இல்லை| என்று நினைத்ததுமே தன் கண்களில் கருக்கட்டிய நீர் முத்துக்கள், அவனுக்கு உண்மை அன்பின் ஆழத்தை எடுத்துச்சொன்னது. நினைத்ததும் கண்ணீர் வருமளவிற்கா அவன் பருதியை நேசிக்கிறான்...?
அவள் தந்து சென்ற புத்தகத்தை நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டான்...
~பருதி.....என்னுடைய பருதி....| மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டவனின் மனச்சிம்மாசனத்தில் இன்னும் இன்னும் ஆழமாக உறுதியாக அமர்ந்துகொண்டது அவளுடைய நினைவுகள்.
மாற்றிக்கொள்ள வேண்டும்.. நிறைய விடயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்..அவனுடைய பருதிக்காக அவன் மாறியே ஆகவேண்டும்...சிந்தனைகளின் ஆக்கிரமிப்பில் திணறிப்போய் அமர்ந்திருந்தவன், முகத்தில் பட்டுத்தெறித்த வெய்யோனின் கதிர்களால் சுயநினைவுக்கு வந்தான்.
புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி, தன்னிடத்திற்கு வந்தவன், தனது பிரத்தியேக பொருட்களுடன் அதையும் வைத்துவிட்டு, திரும்பினான்.
அப்போது, தூரத்தில் யாரோ அலறி அழும் ஒலி கேட்டது. புத்தகத்தை வைத்துவிட்டு, என்னவென்று பார்ப்பதற்காக விரைந்து நடந்தான்.
புதிதாக நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டிருந்த ஒருவன், போதைப் பொருட்கள் இல்லாததால், அதனைத் தருமாறு கேட்டு கத்திக் கதறிக்கொண்டிருந்தான்.
மற்றவர்கள் சுற்றி நின்று பரிதாபத்தோடு அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
தான் எவ்வளவுதான் கதறினாலும் போதைமாத்திரை கிடைக்காது என்பது புரிந்ததால், அங்கும் இங்கும் பார்த்து யோசித்தவன், தனக்கு சற்று தள்ளியிருந்த கதிரையில் வைக்கப்பட்டிருந்த, தகரப்பட்டை ஒன்றை எடுத்து, கையில் வைத்துக்கொண்டே,
~குளிசையைத் தாங்கோ....இல்லாட்டி என்ரை கையைக் கிழிச்சுப்போடுவன்...| என்று சத்தமிட்டான்.
இஞ்சை அப்பிடி ஒன்றும் இல்லை, நாங்கள் தரவும் மாட்டம், நீ தகரத்தைக் கீழ போடு...| என்று கத்தினார் பொறுப்பதிகாரி.
அவனுடைய செவிகளில் அவர் சொன்னது ஏறுவதாக இல்லை.
அங்கு நின்ற ஒவ்வொருத்தரையும் பார்த்தான். அவனுடைய வயதை ஒத்தவர்கள் மிகவும் குறைவாகவே நின்றனர்.
அதுவும் அவனுக்குள் ஒருவித அவமான உணர்வை ஏற்படுத்தி விட, கையைக் கிழிக்கப்போனவன், கழுத்தில் தகரத்துண்டை வைத்துவிட்டான்.
அங்கு சுற்றி நின்றவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர்.
அதனைப் பார்த்துக்கொண்டு நின்ற பரிபூரணன், ஓடிப்பாய்ந்து தகரத்தை அவனுடைய கையில் இருந்து பறித்தெடுத்தான். பறித்த வேகத்தில், தகரம் இவனுடைய கையில் ஒரு பகுதியைக் கிழித்துவிட, வெயில் ஏறிய பொழுதில் இரத்தம் குபீரென்று பாய்ந்தது.
இவனுடைய கையில் குருதியைப் பார்த்ததும் அவன் அமைதியாகிவிட்டான்.
அச்சமும் அழுகையுமாக பரிபூரணனையே பார்த்தான் அந்த பதினேழு வயதுச்சிறுவன்.
இவன் வலியில் கையை உதறி கண்களை மூடி, வலியை தாங்கிக்கொள்ள முனைந்தான். காயத்தின் ஆழமோ, வெயிலின் தகிப்போ, பரிபூரணனுக்கு மயக்கம் வந்துவிட, மற்றவர்கள் தாங்கிக்கொண்டனர்.
அதிகாரி ஓடிவந்து, இவனுடைய கையைப்பிடித்துக்கொண்டார். சுற்றி நின்றவர்கள் அவசரமாக, துணியால் கையைக் கட்டிவிட்டு, கைத்தாங்கலாக அழைத்துச் செல்ல, முன்னால் சென்ற அதிகாரி, உடனடியாக வைத்தியரை வரவழைத்து விட முதலுதவி வழங்கப்பட்டது.
காயம் சற்று ஆழமானதாக இருந்ததால், ~மருத்துவமனை கொண்டு செல்லவேண்டும|; என வைத்தியர் தெரிவித்துவிட, காப்பகத்தின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான் பரிபூரணன்.
அவனுடைய அன்னைக்கு தகவல் சொல்லப்பட்டது.
அரக்கப் பரக்க வெளியே செல்ல ஆயத்தமான பத்மினி அம்மாவிடம், பரமானந்தத்தார் எதுவும் கேட்கவில்லை. என்ன ஏதென்று தெரியாமல் அமர்ந்திருந்தவரிடம் அவரும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.
இங்கு வந்து இத்தனை நாட்களில், இதுவரை பரமானந்தத்தாரின் முகம் பார்த்து அவர் கதைத்ததே இல்லை,
அன்று வீட்டிலும் யாரும் நிற்கவில்லை.
பூவிழிக்கு அழைப்பு எடுத்து, அவசரமாக வெளியே செல்வதாகவும் வந்து மற்றைய விபரங்கள் சொல்வதாகவும் கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார்.
மனதில் ஏற்பட்டிருந்த பயத்திலும் பதற்றத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தவர்,
பேருந்து எதுவும் வரவில்லையே என்கிற தவிப்பில், வீதியின் இருபக்கங்களையும் பார்த்தபடி நின்றுகொண்டிருக்க, வீட்டிற்கு வந்துகொண்டிருந்த பொற்செழியன், வீதியில் நின்ற பத்மினியம்மாவைக் கண்டுவிட்டு, காரை ஓரமாக நிறுத்தியபடி இறங்கிவந்தான்.
~பத்மினியம்மா...|அவனது அழைப்பிற்கு பதிலேதும் இருக்கவில்லை.
மீண்டும் உரக்க அழைத்தபோதுதான், அவர் திரும்பிப்பார்த்தார்.
~என்ன பத்மினியம்மா...ஏன் இஞ்சை நிக்கிறீங்கள்....?|
~அ...அது...தம்பி...பூரணன்...என்ர மகன்..பூரணன்...|
~என்னம்மா....எங்கயாவது போகவேணுமா?|
மகனுக்கு என்னவோ ஏதோவென்ற பதற்றத்தில் இத்தனை வருசமாக கட்டிக்காத்த இரகசியத்தை மறந்துவிட்டு தலையை மட்டும் ஆட்டினார்.
~சரி..வாங்கோ...நான் கூட்டிக்கொண்டு போறன்...|
அப்போதும் ஏதோ ஒரு யோசனை வந்து தடைபோட, வேண்...டாம் தம்பி...நான் போறன்...| மெல்லச் சொன்னவரிடம்,
~அம்மா..நானும் உங்களுக்கு மகன் மாதிரித்தானே...என்னோடை வாறதிலை என்ன தயக்கம்...வாங்கோ...நான் கூட்டிக்கொண்டு போறன்...| என்றவனிடம் மறுக்கத்தோன்றாது, கண்களில் நிறைந்த கண்ணீருடன் அவனுடைய மகிழுந்தில் ஏறினார்.
எந்த வைத்தியசாலை என்று கேட்பதற்காக, அலைபேசியில் அழைப்பை எடுத்து, பொற்செழியனிடம் கொடுத்தவர், அதன் பின்னர் எதுவும் பேசாமல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டார்.
~சில மாதங்களாக...மிகவும் அமைதியாக இருந்த மகன், திடீரென்று என்ன செய்தான்...| என்கிற கேள்வியே அவருக்குள் வண்டாக குடைந்து கொண்டிருந்தது.
பனித்துளிகளை உடம்பில் கொட்டியது போன்றதொரு நடுக்கம் அவரைப்பிடித்துக்கொண்டது.
முப்பது நிமிட ஓட்டத்தில் அந்த அரசவைத்தியசாலையில் வந்து நின்றது மகிழுந்து. அவசரமாக இறங்க முற்பட்ட பத்மினியம்மாவை கையில் பிடித்து, ~பொறுங்கோ அம்மா..நானும் வாறன்...அவசரப்படாதேங்கோ| என்றவனிடம்
~இல்லை ஐயா..இனி நான் பாக்கிறன்...நீங்கள் போங்கோ..|என்றார்.
~அம்மாவை கூட்டிவந்திட்டு, பாதி வழியிலை விட்டிட்டுப்போறது சரியா...பேசாமல் வாங்கோ அம்மா..நானும் வாறன்..|என்றபடி
மகிழுந்தை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
9ம் இலக்க விடுதி அறையில், உள்ளே சென்றதும், பொற்செழியனிடம் இரந்து கையை விலக்கிக்கொண்டு அவசரமாய் உள்ளே சென்றவரின் கண்கள் அங்குமிங்குமாக தேடி, கடைசியாக இருந்த கட்டிலில் படுத்திருந்த தன் மகனைக் கண்டுகொண்டது.
அருகில் விரைந்து சென்று,
~பூரணா....என்னப்பா...என்ன நடந்தது?| அருகில் கேட்ட தாயின் குரலில் விதிர்த்துத் திரும்பிய பரிபூரணன்,
அன்னையோடு அருகில் நின்றவனைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்தான்.
ஏனெனில் அவன் இவனைப் போலவே இருந்தான்.
பொற்செழியனுக்கும் அதே திகைப்புத்தான்...
இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் பத்மினியம்மா இருக்கவில்லை..மகனைத் தொட்டுத்தடவி...அவனுடைய கையில் போடப்பட்டிருந்த கட்டை மெல்ல தூக்கிப் பார்த்தவர்,
~என்னப்பா...நடந்தது?| என்றார் வலிக்காத குரலில்;;.
அப்போது, அருகில் நின்ற காப்பக பொறுப்பாளர், நடந்ததைச் சொல்லவும் தாய்மனம் குளிர்ந்தது. மகனின் தலையைத் தடவியவர், மெல்ல அவனது நெற்றியில் முத்தமிட்டார்.
~நான் வளர்த்த வளர்ப்பு பிழைக்கேல்லை...அது போதும்..அது போதும்...|என்றபடி, கண்களில் திரண்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
~ஏனம்மா...அழுகிறியள்? அழாதேங்கோ...அழாதேங்கோ..அம்மா..| என்றான் பரிபூரணன்.
பார்த்துக்கொண்டிருந்த பொற்செழியனுக்கு தாயின் நினைவும், பாசத்தகிப்பும் வந்துவிட,
~நான் வெளியிலை நிக்கிறன் அம்மா...| என்றுவிட்டு வெளியே சென்றான்.