பாகம் 21.
நாட்கள் இறக்கை கட்டிப் பறந்துகொண்டிருந்தன. பயண நாட்கள் நெருங்க நெருங்க, பொற்செழியனுக்குள் பூவிழி மீதான நேசம் கொஞ்சம் கொஞ்சமாய் தலைகாட்டத் தொடங்கியது, ~தன் வாழ்க்கையில் நடந்துவிட்ட எல்லாவற்றையும் அவளிடம் கொட்டிவிட்டால் போதும் போல| மனதில் தோன்றியது,
~அவளை விட்டு மீண்டும் செல்லப்போகிறேன|; என்கிற தவிப்பில் இதயத்தில் வித்தியாசமான ஒரு உணர்வு தோன்றி வதைத்தது.
அழுகை கூட வந்து தொலைத்தது.
ஆண் பிள்ளை என்றால் என்ன, அழுகை வராதா, ஆணென்ன, பெண்ணென்ன, உணர்வென்பது பொதுவானது தானே...
ஆனால், அவளுக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை போல, சாதாரணமாகவே நடமாடினாள். அப்படிக் காட்டிக்கொண்டாள்.
பொற்செழியன் புறப்படுவதற்கான நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒருநாள் காலை வேளை உணவின் போது, தங்கை தம்பியிடம், 'இருவருக்கும் என்ன வாங்கித் தருவது' எனக்கேட்டான். அப்போது பூவிழியும் இசைநிலாவும் பத்மினியம்மாவும் கூட அங்குதான் நின்றனர்.
~உங்களுக்குப் பிடிச்சது எதுவோ அதை வாங்கித் தாங்கோ அண்ணா|, இருவரும் ஒரே மாதிரிச் சொல்லி முடித்துவிட்டனர். தகப்பனாரின் பார்வை பூவிழியைக் காண்பித்தது,
'அப்பா....அவளுக்காக இந்த உலகத்தையே வேண்டுமென்றாலும் வாங்கி கொடுத்துவிட நான் தயார்தான், ஆனால் அவள் வாங்கிக்கொள்ள மாட்டாளே.....' மனதில் நினைத்ததை வெளியே சொல்லமுடியாது மௌனமாய் தலை அசைத்தான்.
மாலையில் தம்பியை அழைத்துச் சென்றவன், அவனுக்குப் பிடித்த மகிழுந்து ஒன்றை வாங்கிக்கொடுத்தான், அவன் வரும் போது, கொழும்பில் வாடகைக்கு எடுத்துவந்த மகிழுந்துதான், தற்போது வீட்டில் நின்றது.
பத்மினியம்மாவிற்கு தங்கத்தில் சங்கிலி ஒன்றையும் வண்ணமதிக்கும் இசைநிலாவிற்கும் ஒவ்வொரு சோடி தங்க வளையல்களையும் வாங்கிக்கொண்டான்.
~பூவிழிக்காக என்ன வாங்குவது| என்று அவனுக்குத் தெரியவில்லை. யோசித்து யோசித்து கடைசியாக அவளுக்கென்று ஒன்றைத் தேர்வுசெய்து வாங்கிக்கொண்டான்.
மாலையில் அவன் கொடுத்த பரிசைப் பார்த்ததும் பத்மினியம்மா மிரண்டு, ~வேண்டாம்..| என மறுத்துவிட, பூவிழிதான் ஒருவாறு சமாதானப்படுத்தி வாங்கச் செய்தாள்.
இசைநிலாவிற்கும் அதேதான், அனால் தனக்கும் வண்ணமதிக்கும் ஒரே மாதிரியான வளையல்கள் இருப்பதைக்கண்டபோது கண்கள் பனிக்க பொற்செழியனை நன்றியோடு பார்த்தபடி வளையல்களைப் போட்டுக் கொண்டாள். பேதம் காட்டாத அவனது பாசத்தில் மனம் பூரித்தது பூவிழிக்கு.
எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, அண்ணன் மாடியேறியதைக் கண்ட வண்ணமதிக்கு, கோபம் தாங்கவில்லை, "அண்ணா....பூவிழியம்மாவுக்கு?" என்றாள்.
~உன் பூவிழியம்மாவுக்கு என்ன வாங்கிறதெண்டு தெரியாமல் வாங்காமல் வந்திட்டன், நாளைக்கு அவவை கூட்டிக்கொண்டுபோய் வாங்கிக் குடுக்கிறன், அண்ணி போனுக்கு மேல போன் எடுத்திட்டா.....இப்ப மேல போறன்| என்றுவிட்டு விரைந்து சென்றுவிட்டான்.
பூவிழிக்கு கண்ணைக் கரித்தது, சட்டென்று, தான் அநாதை என்ற உணர்வு தலைதூக்கியதில் மனம் கனத்தது. மற்றவர்கள் பார்த்துவிடாதபடி மெல்லிய புன்னகை ஒன்றைப் பூசிக்கொண்டாள். அத்தனை பேருக்கும் பார்த்துப் பார்த்து வாங்கியவன், 500 ரூபாவில் ஒரு மணிக்கூட்டையாவது வாங்கிவந்து தந்திருக்கலாமே, அங்கலாய்த்தது உள்ளம்.
~இவ்வளவு நாளும் கதைக்காத அண்ணி இன்றைக்குத்தான் அழைப்பிற்கு மேல் அழைப்பு எடுத்துவிட்டாவாம்...| வண்ணமதி, கொஞ்சம் சத்தமாகவே சொல்லிக்கொண்டு மாடிப்படியேற முற்பட மறுபக்க மாடியில் இருந்து எட்டிப் பார்த்தவன், "வண்ணமதி......சும்மா உன்னோட விளையாடத்தான் அப்பிடிச் சொன்னன், உன் பூவிழியம்மாவை வெளிய கூட்டிக்கொண்டுபோய் பார், அங்கதான் இருக்கு, அவங்களுக்கான என் பரிசு" என்றான்.
அவசரமாய் பூவிழியையும் இழுத்துக்கொண்டு ஓடிய வண்ணமதி, அடர்நீல நிறத்தில் அதே நிற தலைக்கவசத்துடன் நின்ற ஈருரளியைக் கண்டதும் "ஓவ்......."என்று கூச்சலிட்டாள். அதே வேகத்தில் "அண்ணாண்டா ...அண்ணாதான்" என்றாள் சிறு பெண்ணின் குதூகலிப்போடு.
தூரத்தில் நின்று பூவிழியையும் வண்ணமதியையும் பார்த்த பொற்செழியன் தலையைச் சரித்து விரிந்த புன்னகையுடன் விரைந்து நடந்தான்.
அந்த இருசக்கர வண்டியை தனது கைகளால் தடவிப்பார்த்தாள் பூவிழி. அவள், ஆசையில் அப்படிச் செய்வதாக மற்றவர்கள் எண்ணிக்கொண்டனர்.
மனதில் இதமான இசையொன்று உலாப்போவது போல கண்களை மூடியபடி அப்படியே நின்றுவிட்டாள்.
அவளுக்காக என்று அவன், பார்த்துப் பார்த்து வாங்கிய பொருள், அதுவும் அவளுக்குப் பிடித்த நிறத்தில்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவள் சொல்லியிருக்கிறாள், இந்த நிறத்தில் வாகனம் பிடிக்கும் என்று, அவன் மறக்கவில்லை,
அவளுடைய சந்தோச மனம் இறக்கை கட்டிக்கொண்டு வானில் உலாப்போக ஆரம்பித்தது,
அவள் எவ்வளவு பாக்கியசாலி, காதலித்த வாழ்க்கை கைகூடாவிட்டாலும் அவனுடைய களங்கமற்ற அன்பிற்குச் சொந்தக்காரியாய் இருக்கிறாளே, அவனுடைய குடும்பத்திற்கு மிக நெருங்கிய உறவாக மாறிவிட்டாளே, எத்தனை பெண்களுக்கு இப்படி ஒரு இன்பம் கிட்டும்...
மாலையில் அவன் புறப்பட்ட போதுதான், பூவிழி, தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தாள், அவன் ஒவ்வொருவரிடமாய் விடைபெற்றுக்கொண்டிருந்தான்.
தகப்பனாரிடம் சென்றவன், "அப்பா....." என்று தழுதழுத்தான்...அந்த அழைப்பில் உருகிப்போன பரமானந்தத்தார், மகனின் தலைதடவி அணைத்துக்கொண்டார், "நான் கெதியில திரும்ப வருவன் அப்பா" என்றான்.
"அண்ணா....." வண்ணமதிதான் விம்மி விம்மி அழுதாள், கண்கள் நிறைந்தாலும் துடைத்து சமாளித்துக்கொண்டான் பொற்செழியன். பத்மினியம்மா.....இசைநிலா...கடைசியாக பூவிழியிடம் வந்தான், அவள் விழிகளையே பார்த்தவனிடம் இருந்து பார்வையை நீக்கிக்கொண்டவள், கவிஞர் கோபிகையின் கவிதைப் புத்தகம் ஒன்றை அவனிடம் பரிசாகத் தந்தாள். அவளுக்குத் தெரியும், புத்தகங்கள் என்றால் அதிலும் கவிதைப் புத்தகங்கள் என்றால் அவனுக்கு கொள்ளைப்பிரியம் என்பது.
கையில் வாங்காமலே, பேனாவை எடுத்துக்கொடுத்து, பெயரை எழுதச் சொல்லிவிட்டு காத்துநின்றான். அவள், பூவிழி என எழுதப்போக சோகமாய் ஒரு பார்வை பார்த்துவைத்தான். அவள், ~சுரபி..| என எழுதிக்கொடுத்த பின்னரே வாங்கிக்கொண்டான். வண்ணமதியும் இளஞ்செழியனும், ஏன் பரமானந்தத்தாரும் கூட விசித்திரமாகப் பார்த்தனர்.
மருத்துவத்துறையை தெரிவுசெய்து கல்வி கற்ற பொற்செழியனுக்குள் ஒரு கவித்துவமான இரசனை இருப்பது அவனது வீட்டில் யாருக்குமே தெரியாது.
ஆனால் பூவிழியுடனான பல பொழுதுகளில் அவர்கள் இருவரும் அதிகமாக கவிதைகளைப் பற்றியே பேசியிருக்கின்றனர், கவிதைகளை அவன் ஆழந்து உணர்ந்து ரசனையுடன் வாசிக்கும் போது அவள் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருப்பாள். அவனுடைய கவித்துவத்திற்கு அவள்தான் முதல் ரசிகை என்பான்.
இருவரும் அதிகமாக கவிதைகளைப்பற்றியே கதைத்தனர் என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று.
கவிதைகளில் காதலை வளர்ப்பதென்பது மிக மிக உன்னதமான ஒரு விசயம்..அந்தகையதொரு உன்னதத்தை அவர்கள் இருவரும் உணர்ந்து அறிந்திருக்கிறார்களே..அனுபவித்திருக்கிறார்களே...
மனதில் ஒரு வித குதூகலம் பிறந்தது.
~அவள் எதையும் மறக்கவில்லை| என்ற எண்ணம் மனதில் நிறைவைத்தர விழிகளில் ஒரு தெளிவோடு புறப்பட்டான் பொற்செழியன்.
கடந்த காலத்தின் மனம் நிறைத்த வாழ்க்கையை நினைத்துக்கொள்வதே மகா சந்தோசம் தானே...அந்த சந்தோசத்தையாவது இனிமேல் சங்கடமில்லாமல் அனுபவிக்கமுடியும் என நினைத்தது அவனுடைய மனம்.