• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 22

Vishakini

Moderator
Staff member
பாகம் 22.
இரவும் பகலும் மாறிமாறி வந்துபோனது. மணித்தியாலங்கள், ~இனிமேல் தாம் வரமாட்டோம்| என்கிற சோகத்தில் இருப்பது போல, மிகவும் மெதுவாக ஓடிமறைந்தன.
வாழ்க்கைத் தேர் பல வண்ணங்களை இறைத்து நகர்ந்தது இளஞ்செழியனுக்கு. தான் நேசிப்பவள் தன் இருகிலேயே இருப்பதில் ஒரு பேரானந்தம் அவனுக்குள் நிறைந்திருந்தது.
இசைநிலா இங்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது, வேலைக்கும் சென்று வந்துகொண்டிருந்தாள், காலையில் தான் அலுவலகம் செல்லும்போது, வண்ணமதியோடு அவளையும் ஏற்றிச்சென்று விடுவது இளஞ்செழியனின் வேலையானது, வண்ணமதியும் இப்போது அண்ணனுடன் மகிழுந்தில்தான் பல்கலைக்கழகம் சென்று வந்தாள். அது மூத்த அண்ணனின் விருப்பம் என்பதாலும் இசைநிலாவிற்கும் அவள் சென்றால் போக்குவரத்து சிரமமாக இருக்காது என்பதாலும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
இசைநிலா பேருந்தில் செல்வதாகத்தான் சொன்னாள், வண்ணமதிதான், விடவில்லை, தானும் அங்குதானே வேலை செய்யப்போகிறேன், ஒரே பக்கமாகத்தானே போகிறோம், அண்ணா போகிற வழியில்தானே இறக்கிவிடப்போகிறார், எனப் பலவற்றையும் சொல்லி, இசைநிலாவைச் சம்மதிக்க வைத்திருந்தாள்,
அவர்கள் இருவருக்குமிடையே வளர்ந்துவந்த நட்பு, ஒருபக்கம் இன்பத்தையும் ஒரு பக்கம் துன்னபத்தையும் கொடுத்தது இளஞ்செழியனுக்கு.
மைத்துனிமார் ஆகிறபோது, அந்த நட்பு உறவின் பாசமாக மாறிவிடும் என்றாலும், ஒருவேளை, ~நண்பியின் தமையன் தன்னிடம் இப்படி கேட்டுவிட்டானே| என இசைநிலா நினைத்துக்கொண்டாலும் என்கிற எண்ணமும் தோன்றாமல் இல்லை.
இன்னும் அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் தானும் பங்குதாரர் என்பதை அவன் சொல்லவில்லை, நண்பன் ஒருவரின் மாமனார் முற்றுமுழுதாக நிர்வாகப் பொறுப்பை கவனித்துக் கொண்டதால் இவர்கள் அடிக்கடி அங்கு செல்லவேண்டிய தேவையும் ஏற்படவில்லை. அதனாலேயே இசைநிலாவிற்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. இளஞ்செழியனை பார்ப்பதைக்கூட மிக அவதானமாகத் தவிர்த்து வந்தாள்.
எப்போதாவது அவனை நேரில் சந்தித்தால் கூட, சடாரென தலையைக் குனிந்துகொண்டோ, மறுபுறம் திரும்பியோ சென்றுவிடுவாள்.
~அவ்வளவு பயமா, தேவியாருக்கு என் மீது| எனத் தனக்குள்ளேயே நினைத்துக்கொள்பவன், சின்னச் சிரிப்போடு தானும் நகர்ந்துவிடுவான்,
~காலம் கனியாமலா போய்விடும், அப்போது கதைக்கலாம்..| என நினைத்துக்கொள்வான்.
அதிகாலையிலேயே எழுந்துவிடும் இசைநிலா, பத்மினி அம்மா. பூவிழியோடு சமையலறையில் நின்று தேவையான உதவிகளைச் செய்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்வாள்.
பூவிழி எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்பதாகவே இல்லை, பரமானந்தத்தாருக்கான உணவுகளை பூவிழியோடு சேர்ந்து தானும் தயாரித்து உதவுவாள்.
குரக்கன்மா கஞ்சி, தினைமாவு கொழுக்கட்டை, ஊதுமா கூழ், உழுத்தங்கஞ்சி என அவருக்கேற்ற உணவுகளை பூவிழியைப்போலவே அக்கறையோடு தயாரிப்பாள்.
மற்றவர்களுக்கும் கீரைப்பிட்டு, உளுத்தங்களி, தோசை, இட்லி, இடியப்பம் என்று விதவிதமாகச் செய்வதில் பத்மினியம்மாவைப் போலவே கெட்டிக்காரியாக இருந்தாள். வந்த சில நாட்களிலேயே அந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் பிடித்தமான உறவாகிவிட்டிருந்தாள்.
இசைநிலா, நாளுக்குநாள் விதவிதமான ஆச்சரியமாகவே இளஞ்செழியனுக்குத்; தோன்றினாள்.
அதிகாலையில், தனது நீண்ட தலைமுடியை உயரத்தூக்கி கொண்டைபோட்டுவிட்டு, முகம் கழுவி, புன்னகையோடு சமையலறைக்குள் செல்லும் அவளைப் பார்ப்பதற்காகவே இளஞ்செழியன் அதிகாலையில் எழுந்து வெளியே வந்து நிற்பான்.
~ப| வடிவ கழுத்து வைத்த, நீண்ட கவுணைத்தான் இரவில் அணிந்திருப்பாள், வண்ணமதியோ அரைக்காற்சட்டையும் ரீசேட்டுமாகத்தான் இரவில் நிற்பாள், அதைப்போல அணிந்துகொள்ளுமாறு ஒரு நாள் வண்ணமதி இசைநிலாவிடம் சொன்னபோது, இளஞ்செழியனும் சற்று தள்ளித்தான் நின்றிருந்தான்.
வேகமாக தலையை ஆட்டி அவள் மறுத்த விதத்தில் அவளுடைய கூச்சசுபாவம் அவனுக்குத் தௌ;ளத்தெளிவாகப் புரிந்தது.
இவன் மெல்லச் சிரித்துவிட்டு நின்றான்.
தோட்டத்தில் காய்கறிகள் இருந்தால், தானே, அதிகாலையில் கூடையோடு சென்று பிடுங்கிக்கொண்டுவந்து வைப்பாள், தோட்டவேலை செய்யும் தேவறஞ்சன், தான் பிடுங்கிக்கொண்டுவந்து தருவதாகச் சொன்னாலும் கேட்கமாட்டாள். தானே பிடுங்குவதாக சைகையில் காட்டிவிட்டுச் சென்றுவிடுவாள், தேவறஞ்சனுக்கும் ஒரு ஆண்பிள்ளை வாய்பேசாமல் இருப்பதால், இசைநிலாவின் சைகை மொழி அவருக்கு நன்றாகவே புரிந்தது.
அவரோடு அவள் இயல்பாகவும் நளினமாகவும் பேசும்போது, இளஞ்செழியன் பலமுறை பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் தன் சைகை மொழியை அவள் குறையாகவே கருதவில்லை என்பது இவனுக்குப் புரியும்.
வேலையால் வந்ததும் வீடு துப்பரவு செய்வது, இரவு உணவு தயாரிக்க மாமியாருக்கு உதவுவது என ஒரு பம்பரம் போல சுழன்றுகொண்டிருக்கும் அவளை பரமானந்தத்தாருக்கும் நிறையவே பிடித்துவிட்டது.
அலங்காரமற்ற அவளுடைய எளிமையான அழகும் மற்றவர்கள் மீது அவள் காட்டுகிற கரிசனையும் பெரியவர்களிடம் அவளுக்கு இருக்கிற பணிவும் எப்போதும் மாறாத அவளுடைய புன்னகையும் அவள் மீது மற்றவர்கள் பாசம் கொள்ள காரணமாகிவிட்டன.
தோட்டவேலைக்கு வரும் தேவறஞ்சனின் மகனுக்கு சைகை மொழியில் அவள் பாடம் சொல்லிக் கொடுக்கிறபோது, ஆசிரியரின் கண்டிப்பும் தாயின் கனிவும் அவளிடம் ஒன்றாக இருப்பதை இளஞ்செழியன் கண்டிருக்கிறான்.
எளிமையும் இயல்புமாக அந்த வீட்டோடு பொருந்திப்போனவள், அவனுடைய வாழ்க்கையிலும் வந்து சேருவாளா என்பது இளஞ்செழியனுக்குள் எப்போதும் ஒரு கேள்வியாகவே இருந்தது.

பொற்செழியன் நின்றவரைக்கும் அந்த வீட்டில் இருந்த கலகலப்பு அவனோடு போய்விட்டது போல, சில நாட்கள் அமைதியாகவே இருந்தது வீடு.
நாளடைவில் வண்ணமதிதான் கலகலப்பாக இருந்து அந்த நிலையைக் கொஞ்சம் மாற்றினாள்.
மகனின் மணவாழ்வின் தோல்வி ஓரளவுக்கு பரமானந்தத்தாருக்குப் புரியவே செய்தது, தன்னைப்போலவே மகனுக்கும் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் அவரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது.
முன்னரைப் போல அல்லாது, பொற்செழியன் தகப்பனாரோடு அடிக்கடி தொலைபேசியில் கதைப்பதை வழக்கமாக்கியிருந்தான். அப்பாவின் மீதான அக்கறை ஒருபுறம் என்றால், அந்த வீட்டில் இருந்து வரும் அலைபேசி அழைப்பின் ஒலித்துணிக்கைகளில் பூவிழியின் வாசமும் கலந்து வருவதாக உள்ளுணர்வு சொல்ல, அந்த ஆனந்தத்திற்காகவும் அவன் அடிக்கடி அழைப்பு எடுத்தான்.
தம்பியாரிடம் கூட ~வீட்டுக்குப் போய் அழைப்பு எடு| என்றுதான் சொல்லுவான்.
மகனின் வெறுமையான இல்லற வாழ்க்கை பற்றி ஓரளவு தெரிந்ததனால் மகனைப்பற்றிய யோசனை பரமானந்தத்தாரை வாட்டிக்கொண்டிருந்தது. அதனாலேயே மகனிடம் அதிகமான நேரம் கதைப்பதை மிகவும் விரும்பினார். அவனோடு கதைப்பதில் தனக்கும் மனஅமைதி ஏற்படுவதை உணர்ந்தார். தன்னால் இயன்ற ஆறுதலை மகனுக்கு கொடுக்க விரும்பினார், தன் மனைவியினால் பாழ்பட்டுவிட்ட அவனுடைய வாழ்க்கையில் வசந்தங்கள் பூக்கவேண்டும் என்று மனதார கடவுளிடம் மன்றாடினார்.
தன்னுடைய மனதில் தோன்றியவற்றை அவர் பூவிழியிடம் சொல்ல, அவளுக்குள்ளும் ஒரு யோசனை ஓடத்தான் செய்தது. ~பொற்செழியனின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வலி இருக்கிறதுதான் போல| என நினைத்ததும் ஒருபக்கம் வேதனையாகவும் மறுபக்கம் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தவள், ~சீ..என்ன மனம் இது, ஒரு கணமேனும் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்றால், ஆசைகொண்ட மனம் அலைபாயத்தானே செய்கிறது| என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன்னையே கடிந்துகொண்டாள்.
அவனும், பூவிழியைப் பற்றி அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதோடு சரி, தம்பியிடம் அதிகம் கதைப்பான், தங்கையிடம் அப்பப்ப கதைத்துக்கொள்ளுவான். வண்ணமதியிடம் கதைக்கும் போது மறக்காமல் இசைநிலாவைப் பற்றியும் பத்மினியம்மாவைப் பற்றியும் கேட்பான்.
வண்ணமதியோடு கதைக்கும் போது, அவள் எல்லோருக்கும் கேட்பது போல கதைக்க, பொற்செழியனும் எல்லோருடனும் சில நிமிடங்கள் கதைப்பான்.
பெரும்பாலும் அந்த நேரத்தில் பூவிழி வீட்டில் நிற்பதில்லை. அதனால் அவனுடைய இந்த உரையாடல் பூவிழிக்குத் தெரிவதுமில்லை.
அவள் வந்தபிறகு, பத்மினியம்மா பொற்செழியனைப் புகழுகிற விதத்தில் தான், அந்தச் சம்பவம் அவளுக்குத் தெரியவரும்.
சே..நின்றிருந்தால் குரலையாவது கேட்டிருக்கலாம் என மனதில் ஒரு எண்ணம் ஓடும். அப்போது அவளை அறியாமலே கண்கள் கரித்து கண்ணீர் விழிகளில் நிறையும், சமையலறையின் புகைக் கோலத்தில் அவளுடைய கண்ணீரும் கலந்து மறைந்துபோகும்.
பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டு அவளை ஆசுவாசப்படுத்தும்.
நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன, முதல் மாத சம்பளத்தை பெற்றிருந்த இசைநிலா, அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றும் என்ன வாங்கிகொடுப்பது என்பது தெரியவில்லை என்றும் தனது ஆசையை பூவிழியிடம் சொல்ல, ஒவ்வொருத்தருக்காய் வாங்கி கொடுப்பது தேவையில்லை எனக்கூறிய பூவிழி, அந்த வீட்டிற்கு பொதுவாக ஏதோ ஒன்றை வாங்கி கொடுக்கலாம் எனக்கூற அதற்குச் சம்மதித்த இசைநிலாவும், என்ன வாங்குவது எனத் தீவிர யோசனையில் ஆழ்ந்தாள்.
மறுநாள் காலையில் அந்த வீட்டின் முன் வாசலில் அழகான பெரிய பூக்குவளை ஒன்று நிறைய பலவர்ண இயற்கைப்பூக்களுடன் சிரித்துக்கொண்டிருந்தது.
மஞ்சளும் சிவப்பும் வெள்ளையுமான அழகிய கோலம் போல பூக்கள் அடுக்கப்பட்டிருந்தன.
காலையில் எழுந்து வெளியே வந்த இளஞ்செழியன் பூக்களுடன் சிரித்த பூக்குவளையைப் பார்த்ததும் ஆச்சரியமாய் விழிகளை விரித்தபடி அதனை தனது அலைபேசியில் படமாக்கிக் கொண்டான். அதை வாங்கி வைத்தது யாரென்று தெரிந்துகொள்ள மனம் ஆவல் கொண்டது.
"பத்மினியம்மா.....பத்மினியம்மா....யார் இந்த பூக்குவளையை வைச்சது? பூவிழியம்மாதானே....ரொம்ப அழகா இருக்கு" என்றான் தானே.
'அது ...இல்லை தம்பி...' பத்மினியம்மா சொல்ல ஆரம்பிக்கவே,
"அதெல்லாம் இல்லை இளா, அதை இந்த வீட்டுக்கான அன்பான பரிசா நினைச்சு வாங்கிவந்து வைச்சது, இசைநிலாதான், உன்னுடைய பாராட்டெல்லாம் இசைக்குத்தான் சொந்தம், அதோ அவளே வந்திட்டா, நீயே பாராட்டு" என்றாள் பூவிழி.
இசைநிலாவை மென்மையாய் பார்த்தான் இளஞ்செழியன். அவளோ அவசரமாய் தலைகவிழ்ந்து கொண்டாள். கையில் பெரிய பை சகிதம் வந்தவள், போய்விட்டு வருவதாக பூவிழியிடம் தலையசைக்க, விழிகளாலேயே பூவிழியிடம், 'எங்கே?' என்றான் இளஞ்செழியன்.
'வீட்டுக்கு போய் வரப்போறா' பூவிழி சொல்லவும்
இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டதாக, நண்பர்கள் சொன்னது அப்போதுதான் நினைவில் வந்தது அவனுக்கு. அவள் போவது மனதிற்கு சின்ன வருத்தம் என்றாலும் அவள் வீட்டிற்குப்போய் வருவது அவளது கடமையாயிற்றே என எண்ணினான்.
'தனியாவா' மீண்டும் கேட்டவனிடம், தயாராகி நின்ற பத்மினியம்மாவைக் காட்டினாள் பூவிழி.
மெல்லிய முறுவல் ஒன்று அரும்பியது அவளது உதடுகளில்.
~பத்மினியம்மா..நான் கொண்டுபோய் பேருந்துக்கு விட்டிட்டு வாறன்,| என்ற படி இவன் அறைக்குத் திரும்பவும்,
~இல்லை..இளாத்தம்பி, நிலா, முச்சக்கரவண்டிக்குச் சொல்லிப்போட்டா...இப்ப வந்திடும், நீங்கள் சிரமப்படாதேங்கோ ஐயா| என்றார்.
இவன் இசைநிலாவைப் பார்க்க, அவள் பூவிழியோடு சிரத்தையாக ஏதோ கதைத்துக்கொண்டிருந்தாள்.
பொங்கித்ததும்பிய நுரைப்பூ மெல்ல அழுங்கியது போல இருந்தது இவனுக்கு,
~சரியான ஆள்தான்...|
தனக்குள் சொல்லிக்கொண்டான்.
~தம்பி...வீட்டைப் பாத்துக்கொள்ளுங்கோ...| இவனிடம் சொன்ன பத்மினியம்மா, பரமானந்தத்தாரிடம் சிறு தலை அசைபப்புடன் புறப்பட்டார்.
இசைநிலா எல்லோரிடமும் விடைபெற்றாள், ஆனால் இவனருகில் நின்றும் கவனிக்காத மாதிரி, திரும்பிவிட்டாள்.
பெருத்த அவமானம் இளஞ்செழியனை ஆட்கொண்டது. அப்படி என்ன செய்தான் அவளுக்கு...
மீண்டும் அதே கேள்வி மனதில் மாறிமாறி உருண்டது.
சிறிது தூரம் சென்றவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திரும்பினாள், ஏதோ ஒரு மன உந்துதலில் இவனும் திரும்பிவிட, தலையை அசைத்து விடைபெற்றாள். இவனுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்றாகத் தோன்றியது.
இவ்வளவு நேரம் காணாதது மாதிரி நின்றவள், இப்போது பார்க்கிற பார்வையும் விழிகளின் அசைவும்...அவனை என்னவோ செய்வதைப் போல இருக்கவே, தலையைத் திருப்பி தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான்.
ஏதேதோ சொல்லமுடியாத சோகங்கள் இவளுக்குள் இருக்கிறது, அதையெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும், இப்படி ஒரு இறுக்கமான முகமூடியை ஏன் போட்டிருக்கிறாள் என்று தெரிந்துகொண்டால், பிறகு அதைக் கழற்றச்செய்வது பெரிய காரியமில்லை, தனக்குத்தானே நினைத்தவனாய் திரும்பினால் அவளைக் காணவில்லை.
அவசரமாக வெளியே வந்தான்,
~கெதியில வாங்கோ நிலா...| வண்ணமதி சொல்ல தலையை ஆட்டிச்சிரித்துக்கொண்டே பூவிழிக்கும் வண்ணமதிக்கும் கையசைத்தபடி முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்டிருந்தாள்.
 
Top Bottom