27.
காலைச்சூரியன் தன் பட்டுக்கதிர்களை எங்கும் வாரி இறைத்தபடி, வானவீதியில் உலாவந்துகொண்டிருந்தான், நேரம் காலை எட்டு முப்பதைத் தாண்டியிருந்தது.
காற்றைக் கிழித்தபடி விரைந்துகொண்டிருந்தது பச்சை நிறத்திலான அந்த முச்சக்கரவண்டி. பின் இருக்கைகளில் பூவிழியும் பருதியும் சற்றுப் படபடப்புடன் அமர்ந்திருந்தனர். வாகனம், வளைந்து வளைந்து ஓடியதில் ஏற்கனவே இருந்த படபடப்பு இன்னும் அதிகமாகியது.
முச்சக்கரவண்டி ஓட்டுநர் அவர்களின் வைத்தியசாலைத் தரிப்பிடத்தில் நிற்கின்ற தம்பிதான், இருபது வயதைக்கடந்துவிட்ட அவன், தன் இளமையின் வேகத்தை ஓடுகின்ற வாகனத்திலும் காட்டினான்,
~தம்பி..கொஞ்சம் மெதுவா ஓடடா...நீ ஓடுறதைப்பார்க்க பயமாக்கிடக்கு....| பருதி சொல்லவும்தான், சற்றே வேகத்தைக் குறைத்தான்.
~பூவிழி அக்கா, நேரம் போட்டுது எண்டு சொன்ன மாதிரிக்கிடந்தது, அதனாலைதான்..வேகமா ஓடினனான் அக்கா...| என்றான் அவன்.
~சரி..சரி..கொஞ்சம் மெதுவாவே போ...| பூவிழி சொன்னதும் தலையை ஆட்டிவிட்டு சற்றே வேகத்தைக் குறைத்திருந்தான்.
பக்கத்தில் இருந்த பருதியைத் திரும்பிப்பார்த்தாள் பூவிழி.
கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து விரல்களைப் பிசைந்தபடி, பரீட்சைக்குச் செல்லும் மாணவியைப் போல இருந்த பருதியைப் பார்க்க, பூவிழிக்கு பாவமாக இருந்தது.
~பாவம் பருதி, என்னுடைய வேண்டுகோளுக்காக இவள் பரிதவிக்கிறாளே| என்ற குற்ற உணர்ச்சி பூவிழியை சற்றே யோசிக்கவைத்தது.
பரிபூரணன் என்ன சொல்லப்போகிறானோ, என்கிற யோசனையுடன் பத்மினியம்மா சற்று நேரத்தில் வந்துவிடுவா, அவா, வருவதற்குள், பரிபூரணனிடம் கதைத்து, ஒரு நல்ல முடிவாக எடுக்கவேண்டும் என மனதிற்குள் திட்டமிட்டாள்.
தான் நினைத்தபடி, நடந்துவிடவேண்டும், எனவும் எந்தச் சிக்கலும் வந்துவிடக்கூடாது என்றும் திரும்பத் திரும்ப, கடவுளை வேண்டிக்கொண்டாள்.
கடிகாரம், முப்பது நிமிடங்களைக் கடந்துவிட, அந்த மறுவாழ்வு மையத்தின் வாசலில் இருவரும் இறங்கிக்கொண்டனர்.
இறங்கும் போNது, சற்று தள்ளாடிய பருதியை, கையைப்பிடித்து ஆசுவாசப்படுத்திய பூவிழி,
முச்சக்கரவண்டியை அனுப்பிவிட்டு,
~என்ன பருதி, என்ன செய்யிது?| என்றாள்.
~ஒண்டும் இல்லை..கொஞ்சம் பயமாகவும் பதற்றமாகவும் இருக்கு பூவிழி, அவர் என்ன சொல்வாரோ என்று..|
~எல்லாம் நல்லதுதான் நடக்கும், நீ யோசிக்காதை, அவர் அப்பிடி மறுக்கமாட்டார், அவர் வேண்டாம் எண்டு சொல்லுறதுக்கு உன்னட்டை ஒரு குறையும் இல்லை...நீ அவருக்கு கிடைக்கிற வரம்தான்..அது அவருக்கும் புரியும்...|
~எனக்கென்னவோ....|
~சீச்சீ..உனக்கென்ன பைத்தியமா....ஒன்று நடக்க முதலே நாங்கள் ஏன் அப்பிடி இப்பிடி எண்டு கண்டதையும் யோசிப்பான்...நல்லதே நடக்கும் என்று நம்புவம்...வா...| என்று பருதியை கைபற்றியபடி உள்ளே நடந்தாள் பூவிழி.
அவளுக்குமே சற்றுப் பதற்றம்தான்...ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
வழமையாக இருக்கும் உற்சாகம் இருவரிடமுமே இருக்கவில்லை.. இருவரும் மெல்ல மெல்ல நடந்துஉள்ளே சென்றனர்.
வெளியில் இருந்து வருபவர்கள், அலுவலக அறைக்குச் சென்று விபரங்களைக் கூறிவிட்டு, பதிவேட்டில் பதிவிட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்பது அங்கிருந்த விதிமுறை.
தாங்களும் விதிமுறைப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டு, கட்டடத்தைக் கடந்து சென்றால், வழமையாக இருக்கும் இடத்தில் பரிபூரணனைக் காணவில்லை.
~இதென்னடா..சோதனை,| என எண்ணியவாறு, சின்னவனையும் தேடினால், அவனையும் காணோம்...
பத்மினி அம்மா வரமுதல் தாங்கள் கதைத்துவிடவேணும் என்பதே இருவரினதும் எண்ணமாக இருந்தது. யோசனையுடன் பின்பக்கமாக நடந்து சென்றனர்.
அப்போது இவர்கள் கண்ட காட்சி, இருவரையுமே சற்று அதிர வைத்தது.
அந்த மறுவாழ்வு மையத்தின் ஒரு பக்கமாக, சிறு பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவில் தாயோடு சிரித்துக் கதைத்தபடி அமர்ந்திருந்தான் பரிபூரணன். சற்றுத்தள்ளி, புத்தகம் ஒன்றில் ஆழந்து போனவனாக அமர்ந்திருந்தான் சின்னவன்.
இவர்கள் சொல்லப்போகும் விடயத்தை பரிபூரணன் எப்படி எடுத்துக்கொள்வானோ? பத்மினி அம்மா என்ன சொல்லப்போகிறாவோ என்கிற சிந்தனையில் இருவரும் மெல்ல மெல்ல நடந்தனர்.
தூரத்திலேயே இவர்கள் இருவரையும் கண்டுவிட்ட பத்மினியம்மாவும் பரிபூரணனும் ஏதோ கதைத்தவாறு இவர்களையே பார்த்தனர். பரிபூரணன், கையை ஆட்டிக்காட்டி தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
~பூவிழி, இப்ப ஒண்டும் சொல்லாதை, பத்மினியம்மா சொல்லுறதைக் கேள், பிறகு ஆறதலா வந்து கதைப்பம்,| என்றாள் பருதி.
~நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்..ஆனால்...என்னாலை...
~பூவிழி, அப்பிடிச் சொல்லுறதிலை இப்ப என்ன நடந்திடப்போகுது? குடியே மூழ்கிப்போகும்..இல்லைத்தானே..தேவையில்லாமல் நாங்கள் திடீரெண்டு சொல்ல, இந்த நல்ல மனநிலை உடைஞ்சுபோடும், நான் சொல்லுறதைக் கேள்..|
ஒருநாளும் பூவிழியிடம் கோபப்படாத பருதி கோபத்துடன் இப்படிச் சொன்னாள்.
பூவிழியும் தலையை ஆட்டிச் சம்மதித்தாள்.
~சரி..வா..| இருவரும் பத்மினியம்மாவின் அருகில் வந்ததும் மன இறுக்கத்தை மறைத்து புன்னகையை நன்றாகவே பூசிக்கொண்டனர்.
~வாங்கோ..| பொதுவாகச் சொன்ன பரிபூரணன்,
~எப்படி இருக்கிறீங்கள் பூவிழி?| என்றான் ஓரக்கண்ணால் பருதியைப் பார்த்துக்கொண்டே.
தலையை ஆட்டியபடியே,
~நீங்கள் வந்து நிறைய நேரமோ அம்மா?| என்றாள் பத்மினியம்மாவிடம்...
~இல்லையடா..இப்ப கொஞ்சம் முதல்தான் வந்தனான்,|
பத்மினியம்மா, தான் சுடுநீர்ப்போத்தலில் கொண்டு வந்திருந்த இஞ்சித் தேநீரை எல்லோருக்கும் வார்த்துக் கொடுத்தார்.
~ஆ..அக்காக்கள்...|
என்றுவிட்டு தேநீரை வாங்கிக்கொண்டு மிண்டும் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டான் சின்னவன்.
மற்றவர்யாரும் எதுவும் பேசாமல் தேநீரைக் குடித்தனர். பருதி தான் தாங்கள் வாங்கி வந்திருந்த வடையை எடுத்து பரிபூரணனிடம் கொடுத்தாள்.
வாங்கும்போது, அவனுடைய விரல் நுனி பருதியில் விரலைத் தொட்டு விலகியது.
இருவருமே ஆனந்த அதிர்வில் சற்று உழன்று நிமிர்ந்தனர்.
தொண்டையைச் சற்று செருமிய பத்மினியம்மா,
~பூவிழியம்மா...இண்டைக்கு எல்லாத்தையும் கதைப்பம் என்றுதானே வரச்சொன்னன், அதைப்பற்றித்தான் பூரணனிட்டைக் கதைச்சுக்கொண்டு இருந்தனான|; என்றார்.
நெஞ்சு படபடக்க, தலையை ஆட்டிவைத்தாள் பூவிழி.
~என்னடாம்மா பேசாமல் இருக்கிறாய்?|
~ஒ...ஒண்டும் இல்லை அம்மா...|
~அம்மாச்சி...நான் சொல்லுறதைக்கேட்டு நீ, யோசிக்காதையம்மா...என்ர மகன் ஒரு பிள்ளையை விரும்பிறானாம்..அதனாலை உனக்கு வேற இடத்திலை பாத்து கலியாணம் செய்துவைக்கச் சொல்லிப்போட்டான்..|
தான் கேட்டது கனவா, நனவா என்ற நிலையில் விழிகளைக் கூர்ந்து நோக்கி, ~என்னம்மா..சொன்னீங்கள்..?| என்றாள்.
~பரிபூரணனுக்கு வேற ஒரு பிள்ளையைப் பிடிச்சிருக்காம்..அதனாலை..|
சடாரென்று திரும்பி பருதியைப் பார்த்தாள்..
பருதியின் முகம் கூம்பியிருந்தது.
அப்போதுதான் பூவிழிக்கு ஒரு விசயம் புரிந்தது, பருதியும் பூரணனைக் காதலிக்கிறாளோ...
எனக்காகச் சம்மதிப்பதென்றால் இப்போது அவளுடைய முகம் வாடுவானேன், சட்டென்று மூளைக்குள் மின்னல் போல, கடந்த சில நிகழ்வுகள் வந்து போனது.
பரிபூரணனுக்காக புத்தகங்கள் வாங்குவது பருதி,
அவனுக்கு சாப்பிடுவதற்காக பார்த்துப்பார்த்து வாங்குவதும் பருதி,
இங்கே வருகிற நாளில் மிகச் சந்தோசமாக ஆரவாரத்தோடு பயணப்படுவதும் பருதிதான்..
அப்படியென்றால்..
கடவுளே...
இவள் சட்டென்று பத்மினியம்மாவிடம் திரும்பி,
~அம்மா....ஆர்..அந்தப் பெண்?| என்றாள் பதற்றத்துடன்.
பரிபூரணனோ எதைப்பற்றிய சிந்தனையும் இன்றி பருதியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
~இப்பவா..அப்பவா| என்று அவளுடைய கண்ணில் கோர்த்து நின்ற கண்ணீர், அவனுக்கு ஆயிரம் விசயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது.
~வேற ஆரம்மா..உன்ரை சினேகிதி, பருதிதான்...| என்றார் சிரித்தபடி.
இவளால் சந்தோசத்தைத் தாங்க முடியவில்லை.
மடாரென்று திரும்பி பருதியைப் பார்க்க, சந்தோசத்தில் கண்களிலி;ருந்து வழிந்த நீரைக்கூட கவனிக்காது சிரித்தாள் பருதி.
சட்டென ஒரு ஒளிப்பூச்சு மின்னலாய் வந்து மறைந்தது.
பரிபூரணன் தான் தாயின் அலைபேசியில் பருதியைப் படம் பிடித்தான்.
பருதியைக் கட்டி அணைத்துக்கொண்டாள் பூவிழி.
கண்களில் வழிந்த கண்ணீர் கோடாகக் கிடக்க, விழிகளை விரித்தபடி, பூவிழியின் தோள் வளைவினால், தன் முன்னால் இருந்த பரிபூரணனையே பார்த்தாள்.
அவனுடைய கண்களிலும் கண்ணீர் நிறைந்திருந்தது.
சிறு புன்னகையோடு அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
வெட்கம்.... காதல் உணர்வுக்குச் சுவைகூட்டுகிற ஒன்று, அது பருதியிலும் படர்ந்து வழிந்துகொண்டிருந்தது. சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டார் பத்மினியம்மா.
அந்த நெகிழ்சியான தருணத்தைதைக் கடந்து சற்று ஆசுவாசப்பட்டபடி, எல்லோரும் சகஜ நிலைக்குத் திரும்பிய பின்னர்,
~அம்மா..பூவிழி, எங்களுக்காக நீ இன்னும் என்னவெல்லாம் செய்வாய், நானும் உன்ரை அப்பாவும் கேட்டம் எண்டதுக்காக மறுக்கமுடியாமலும்...
எப்பிடியாவது என்ரை பிள்ளைக்கு ஒரு நல்ல பிள்ளையைக் கலியாணம் செய்துவைக்கவேணும் எண்டும்தானே, பருதியம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்தனி, உனக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப்போறம்...|
~நீங்கள் எல்லாரும் சந்தோசமா இருந்தால் அதுபோதும் எனக்கு|
~இது நல்ல கதையாக்கிடக்கு, உனக்கும் ஒரு நல்ல பெடியனாப் பாத்து கலியாணம் செய்துவைச்சால்தான் எங்களுக்குச் சந்தோசம்...| என்றார்.
பூவிழி எதுவும் பேசவில்லை..பருதியைப் பார்க்க, பருதி கீழே குனிந்துவிட்டாள்.
இவர்களின் பார்வைப் பகிர்வில,; பூவிழியின் மறுப்பிற்கு ஆழமான காரணம் ஏதோ இருக்கிறது என்பது பரிபூரணனுக்குப் புரிந்தது.
சில மணித்துளிகள் கடந்து நகர்ந்திட,
அதுசரி, பரிபூரணன், வாற கிழமை, எல்லா அலுவலும் முடிஞ்சிடும், வீட்ட வாறீங்கள் தானே?| என்று கேட்டாள் பூவிழி.
தாயை நிமிர்ந்து பார்த்த பரிபூரணன்,
~அம்மா..நான் அந்த வீட்டுக்கு வரமாட்டன், என்னாலை அங்க எல்லாம் வந்து அவமானப்பட ஏலாது, அதோடை அவரை நான் பாக்கவும் விரும்பேல்லை..| என்றான்.
அவனது அந்த வார்த்தைகளைக் கேட்டு, அடிபட்ட வலியோடு நிமிர்ந்தனர், பத்மினியம்மாவும் பூவிழியும்...
பருதியும் கூட வேதனை கவிந்த முகத்துடன் பரிபூரணைனையே பார்த்தாள்.

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.