பாகம் 28
பொன்னிற எழுத்துகளைத் தாங்கிய அந்த ஆடை வடிவமைப்புக் கட்டடம் நிமிர்ந்து உயர்ந்து நின்றது. நேரம் ஐந்தைக் கடந்து பல நிமிடங்கள் கடந்துவிட்டிருந்தது.
பணியாளர்கள் ஒவ்வொருவராகப் போய்க்கொண்டிருந்தனர். முகாமையாளர், சிவபாதம், தனது அறையில் இருந்தபடி அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு வேலை செய்யும் பணியாளர்களில், அவருக்கு அதிக ஆச்சரியம் தருவது, இசைநிலாதான். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும் இசைநிலாவின் வேலை அத்தனையிலும் ஒரு நேர்த்தி இருக்கும்.
குழந்தைகளுக்காக புதுவித ஆடை வடிவமைப்பு ஒன்றில் மூழ்கிப்போயிருந்தாள் இசைநிலா, நேரம் பற்றிய அக்கறையின்றியே அவள் எப்போதும் வேலை செய்வாள். அன்றும் அப்படி வேலை செய்துகொண்டிருந்தவள், அந்தச் சட்டையை முடித்துவிட்டுத்தான் நிமிர்ந்து பார்த்தாள்.
எதிரில் சிவபாதம் ஐயா நின்றுகொண்டிருந்தார். அவரும் போவதற்கு ஆயத்தமாக தனது பை சகிதம் நிற்பதைக் கண்டவள், தான் வேலையை முடித்துவிட்டு வெளிக்கிடுவதாக சைகையில் சொன்னாள்.
அவசரமாகச் செல்ல வேண்டிய தேவையிருந்ததால், தான் சிவபாதத்தாரும் வீட்டுக்குசெ செல்ல ஆயத்தமாக வந்தார், இன்னும் ஓரிரு வேலைகள் தான் என்பதை, சட்டையை எடுத்து விரித்துக்காட்டி, இசைநிலா சொன்னபோது, அவராலும் மறுக்க முடியவில்லை,
ஏனென்றால், அவள் தனது பணியுடன் எந்த அளவுக்கு ஒன்றிப்போய் வேலை செய்வாள் என்பது அவருக்குத் தெரியுமே...
தனியே நிற்பதை அவர் சைகையால் கேட்க, காவலாளியைக் கை காட்டினாள் இசைநிலா.
வெளி வாசலில் காவலாளி நின்றுகொண்டிருந்தார். அவருக்கு வயது அறுபது இருக்கும்.
சட்டையை வாங்கி நன்றாகப் பார்த்தார்.
கொழுக்கி, பொத்தான் தைப்பது என இன்னும் சில வேலைகள் மட்டுமே இருந்தன.
மிக அழகான அந்தச் சட்டையை இடையில் நிறுத்தவும் அவளால் முடியாது என்பது அவருக்கும் புரிந்துவிடவே, தலையை ஆட்டிவிட்டு, வெளியே போக ஆயத்தமாக, இளஞ்செழியன் உள்ளே வந்தான்.
அவனைக் கண்டதும் தலையைக் கவிழ்ந்துகொண்ட இசைநிலா, தன் வேலையில் மூழ்கிவிட்டாள்.
சிவபாதம் ஐயா, விசயத்தை இளஞ்செழியனிடம் சொல்லிவிட்;டு, திரும்பி, இவளிடமும் தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட,
இளஞ்செழியன், அவளையே பார்த்தபடி நடந்து தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
அறைக்குச் சென்றவன், அறைக்குள் இருந்துகொண்டே அவள் வேலை செய்வதைப் பார்த்தான்.
மணிகளை ஒவ்வொன்றாக அவள் எடுத்த விதமும் கோர்த்த நளினமும் அழகாய் இருந்தது.
அவள் வேலை செய்துகொண்டிருக்க, இவனுக்கு கை துறுதுறுவென்றது.
எழுதுகோல் ஒன்றையும் வெள்ளைக் கடதாசி ஒன்றையும் எடுத்தவன், அவளை அப்படியே வரைய ஆரம்பித்தான்.
அவனுக்குச் சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவது பிடிக்கும். அவன் கடதாசியை எடுத்தாலே அன்னைக்கு அப்படி ஒரு கோபம் வரும்..ஏனென்றால் பரமானந்தர் ஓவிய பாட ஆசிரியர் தானே...
~சனியனே..நீயும் படத்தைக்கீறி என்னத்தைக் கிழிக்கப்போறாய், கண்டவளையும் கவிழ்க்கத்தான்..படியடா..|என்று எல்லாவற்றையும் பறித்து எறிந்துவிடுவார்.
அவன் அழுதுகொண்டே தந்தையிடம் சென்றுவிடுவான்.
தந்தைதான், மாலை நேரங்களில் பூங்காவிற்குக் கூட்டிச்சென்று, அவனை ஓவியம் வரைய வைத்து அழகு பார்ப்பார்.
அவனும் விதவிதமாக ஓவியங்களை வரைந்து தந்தையிடம் காண்பிப்பான்..
ஒரு வயதிற்குப்பிறகு அவன் ஓவியம் வரைவதை விட்டுவிட்டான்.
ஆனால் அவன் ஒரு, கட்டடக்கலைஞன். அது அவனுடைய ஓவியத்திறமையின் வெளிப்பாடுதான். அவனுடைய கட்டட படவடிவமைப்பு மிகவும் கச்சிதமாக இருக்கும் என்பது அனைவரும் சொல்வதுதான்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்று அவளை வரைய வேண்டும் என்று ஆசை தோன்றவும் அவனது விரல்கள் நர்த்தனம் ஆட ஆரம்பித்தது.
தலையைச் சரித்தபடி, மணிகளை ஒவ்வொன்றாக ஒட்டிய அவளுடைய பொறுமையும் நிதானமும் அவனை இன்னும் வியக்கவைத்தது. கதிரையில் வேரோடிவிட்டவள் போல அமர்ந்திருந்து தனது கடமையே கண்ணாக எண்ணிச் செய்துகொண்டிருந்தாள்.
இடைக்கிடை தனது கடதாசியைத் தூக்கிப் பார்ப்பதும் சிறு முறுவல் பூப்பதுமாக அவனும் தன் காரியத்தில் மூழ்கியிருந்தான்.
சிறிது நேரத்தில் ~அவள் நீண்ட நேரமாக அப்படியே இருக்கிறாளே..| என நினைத்தவன்,
எழுந்து பின்வழியாகச் சென்று, காவலாளியை அனுப்பி, தேநீரும் வடையும் வாங்கிவரச் செய்து, இரண்டையும் எடுத்துக்கொண்டு அவள் இருந்த இடத்திற்குச் சென்றான்.
இவளை நிமிர்ந்து பார்த்தவள், எழுந்து நின்றாள்.
இவன், தலையை ஆட்டி, இருக்கும்படி சொல்ல, தலையை மீண்டும் பழையபடி கவிழ்த்துக்கொண்டு, வேலையைத் தொடங்க ஆயத்தமானாள்.
இவன், தேநீரையும் வடையையும் அருகில் கொண்டு சென்று வைத்துவிட்டு,
~களைப்பாக இருக்கும்..சாப்பிட்டுவிட்டு வேலை செய்யுங்கோ| என்றான்.
அதற்கும் ஒரு சிறு தலையாட்டல் தான் பதிலாக வந்தது.
அறைக்கு வந்தவன், தன்னுடைய ஓவியத்தில் மூழ்கிவிட்டு, அதை முடித்துவிட்டு நிமிரவும் இசைநிலா, அங்கு வந்த காவலாளி ஐயாவிடம் தேநீரையும் வடையையும் கொடுப்பது தெரிந்தது.
இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
பேசாமல் நின்றான்.
நேரம் ஓடியது, மெல்லிய இருள் அடர்ந்த மாலை வேளை,
சின்ன முள் ஆறையும் பெரிய முள், பன்னிரண்டையும் எதிரெதிரே தொட்டுக்கொண்டு நிற்க, தான் வடிவமைத்த சட்டையையும் எடுத்துக்கொண்டு, இளஞ்செழியனின் அறைக்குச் சென்றாள் இசைநிலா.
கதிரையில் இருந்தபடி, கணினியில் வேலை செய்துகொண்டிருந்தான்.
இவள் கதவில், இரண்டு முறை தட்டிவிட்டு, காத்திருந்தாள்.
~வரலாம் ....| கம்பீரமாக ஒலித்தது அவனுடைய குரல்.
உள்ளே சென்றவள், வழமையாக வடிவமைத்த ஆடைகளைக் கொழுவுகின்ற தாங்கியில் சட்டையைக் கொழுவி விட்டு, இவனைப் பார்க்காமலே வெளியே செல்ல எத்தனித்தாள்.
கதிரையை விட்டு எழுந்தவன், இசைநிலாவின் எதிரில் வந்து நின்றான்.
தான் நடந்த பாதையில் எதிரில் நின்ற பாதங்களைப் பார்த்து, இளஞ்செழியன் நிற்பதை உணர்ந்தவள், தலையை நிமிர்த்தாமலே நின்றாள்.
அவன் எவ்வளவுதான் அவளிடம் வலிய வலியப் போனாலும் அவள் கண்டுகொள்வதே இல்லை.
வரவர அவள் தன்னைப் பார்ப்பதையே தவிர்ப்பதைப் புரிந்துகொண்ட இளஞ்செழியனுக்குள் கோபம் பொங்கியது அந்தக் கணத்தில்.
சட்டென்று, தன் கைகளால் அவளுடைய நாடியை நிமிர்த்தி, தன்னைப் பார்க்க வைத்தான். பதறிப்போய் நிமிர்ந்தவள், அவனுடைய கையைத் தட்டிவிட்டாள்.
இவனுக்குச் சுள்ளென்று கோபம் ஏறியது.
~என்ன..உன் கையைப்பிடிக்க நான் யாரென்று நினைக்கிறியா?| என்றான்.
அப்படித்தான் என்பது போல மௌனமாகவே இருந்தாள் இசைநிலா.
~எனக்கு உரிமை இருக்கு, அதுதான் கையைப்பிடிச்சிருக்கிறன்..நீ எனக்கானவள், எனக்குச் சொந்தமானவள்|
அவள் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள்.
சைகையிலேயே ~நான் உன்னைக் காதலிக்கிறேன்..| என்றான்.
உடனே, அவளுடைய கண்களில் ஒருவித வலியும் இயலாமையும் தோன்றி மறைந்தததை அவன் கண்டான், இவ்வளவு நிராசை ஏற்படுமளவிற்கு அவளுக்கு என்ன துயரம்,
இளஞ்செழியன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே,
அவளோ, கோபமாக அவனை முறைத்துவிட்டு, கதவைத்திறந்துகொண்டு போக முற்பட,
சட்டென, அவளுடைய கையைப்பற்றித் திருப்பியவன், சுழன்று திரும்பியவளிடம்,
~பதிலைச்சொல்லிவிட்டுப் போ...| என்றான் மீண்டும் சைகையில்.
இன்னும் அதிகமாகவே முறைத்தவள், கையை உருவிக்கொள்ள படாதபாடுபட்டாள். இளஞ்செழியனோ விடவே இல்லை.
கை வலித்திருக்க வேண்டும்...கண்களில் நீர் முத்துகள் கோர்க்கத் தொடங்கவும் இவன் கையை விட்டுவிட்டான்.
கையை விட்டவன், மீண்டும் கையைப்பற்றி, மறுகையால் தடவியபடியே,
~வலிக்கிறதா..| என்றான்.
அவன் தவித்தபடி கேட்ட விதத்திலோ என்னவோ, அவளால் முரண்டு பிடிக்கமுடியவில்லை.
~சொல்லு..வலிக்கிறதா....|என்று கேட்டான்.
அவள் பேசாமலே நிற்கவும்
~சரியான அழுத்தம்..தான்...| என்றான்.
இவர்கள் இப்படி கதைத்துக்கொண்டிருக்கும் போதே,
வெளியில் யாரோ வரும் அரவம் கேட்கவும் ஓடிச்சென்று, தான் வடிவமைத்து சட்டையை எடுத்துவந்து அவனுக்கு முன்னால் காட்டியபடி நின்றாள் இசைநிலா.
இளஞ்செழியனுக்கு ஹஎன்ன பெண்ணடா இவள்..| என்று தோன்றியது.
இவ்வளவு நேரம் இரண்டு பேருக்கும் சண்டை, ஆனால் அவனை யாரும் எதுவும் நினைத்துவிடக்கூடாது என்று, ஓடிச்சென்று அலுவல் பார்க்கிறாள்..
இவனும் காட்டிக் கொடுக்காமல் நிற்க,
வண்ணமதியும் பூவிழியும் தான் வந்திருந்தனர்.
~என்ன...அண்ணா..இசைநிலாவுக்கு இன்னும் வேலை முடியேல்லையே...?| என்ற தங்கையிடம்
~அது...| இளஞ்செழியன் சொல்ல ஆரம்பிக்கும் போதே, சட்டெனத் திரும்பிய இசைநிலா,
தான் வடிவமைத்த சட்டையை பூவிழியிடம் திருப்பித்திருப்பிக் காண்பித்து, தான்தான் அதை முடித்துவிட்டுச் செல்வதற்காக நின்றதாக தனது மொழியில் உரைத்தாள்.
இளஞ்செழியனும் தலையை ஆட்டிவிட்டு மெல்லச் சிரித்தான்.
~சரி..இப்ப முடிஞ்சுதுதானே...?| பூவிழி கேட்க,
இருவரும் தலையை ஆட்டினர்.
~சரி..வாங்கோ...வண்ணமதி நிறைய நாளைக்குப்பிறகு வெளிய போவம் என்று கேட்டா, அதுதான் கூட்டிக்கொண்டு வந்தன், அப்பிடியே உங்கள் ரெண்டுபேரையும் கூட்டிக்கொண்டு போவம் என்று சொன்னா, சரியெண்டு வந்திட்டம்...| என்ற பூவிழிக்கு,
~தான் வரவில்லை| என்பதைச் சைகையில் சொன்னாள் இசைநிலா.
உடனே, இசைநிலாவைப் பார்த்த வண்ணமதி, | தன்னோடு வருமாறு கேட்டதும், வண்ணமதியிடம் மறுக்கமுடியாது அவர்களுடன் சென்றாள்.
கடலலை ஆர்ப்பரித்து உருண்டு வந்தது.
சிறுவர்களும் பெரியவர்களுமாக அலையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். வண்ணமதிக்கு கடல் என்றால் போதும்..
நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பாள்.
பூவிழியையும் இழுத்தபடி, சென்றவள், திரும்பி வந்து பின்னால் வந்த இசைநிலாவின் கையையும் பற்றிக்கொண்டாள்.
தலையை ஆட்டி மறுத்த இசைநிலாவிடம் தலையைச் சரித்து விழிகளால் கெஞ்சினாள்.
அவளுடைய வேண்டுகோளைத் தட்டமுடியாத இசைநிலா தானும் சென்றுவிட்டாள்.
எதிலும் ஒதுங்கி நடக்கும் இசைநிலாவின் குணம்தான் இளஞ்செழியனை அவளிடம் இன்னும் இன்னும் ஈர்த்தது.
தங்கையின் குறும்புத்தனங்களில் மகிழ்ச்சி அடைந்தவன், இசைநிலாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆனாலும் மனதில் பெரிய ஏமாற்றம் சூழ்ந்திருந்தது அவனுக்கு. இசைநிலா தன்னைவிட்டுத் தள்ளிப்போக என்ன காரணம் என்பது அவனுக்குப் புரியவில்லை,
சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு பயப்படுகிறாளா, அல்லது தனக்கு வாய்பேச வராது என்பதால் இப்படி விலகிப்போகிறாளா?
இதைப்பற்றியெல்லாம் யோசிக்காது, தான் இன்று மாலை அவசரப்பட்டு விட்டது புரிந்தது அவனுக்கு.
இனிமேல் அவளிடம் எதுவும் கேட்பதில்லை எனவும் இதுபற்றி பத்மினி அம்மாவிடமே கதைக்கவேண்டும் எனவும் அதன் பிறகு வீட்டாரின் மூலமே இசைநிலாவின் விருப்பத்தை அறியவேண்டும் எனவும் நினைத்தான்.
ஒரு ஓரமாக இவன் அமர்ந்து இருந்ததைக் கண்ட பூவிழி அவர்கள் இருவரையும் விளையாட விட்டுவிட்டு இளஞ்செழியனிடம் வந்தாள்.
~என்ன இளா, ஒரே யோசனையாக இருக்கிறீங்கள் போல?| என்றாள்.
~ஓமோம்..பூவிழியம்மா..கொஞ்சம் வேலை யோசனைதான்....| என்றான்.
~சரி..சரி..கொஞ்சம்...இயல்பாக இருங்கோ...வேலை நேரத்திலை வேலையைப்பற்றி யோசியுங்கோ| என்றாள்.
~அது சரிதான் பூவிழியம்மா...|
எல்லா நேரமும் வேலையைப்பற்றியே நினைச்சுக்கொண்டு இருந்தால் மனதிலை சுமையாகத்தான் இருக்கும், வாங்கோ..கொஞ்சம் நடந்து பாருங்கோ, நான் போய் குளிர்களி வாங்கிக்கொண்டு வாறன்| என்றாள்.
~இல்லை..இல்லை... நீங்கள், இருங்கோ, நான் போய் வாங்கிவாறன்..|என்றபடி நடந்தவன் கடல் ஓரமாகப் பார்வையைத் திருப்பினான்,
வண்ணமதியோடு சேர்ந்து இசைநிலாவும் குதூகலமாக விளையாடிக்கொண்டிருந்தாள்.
இவனுக்கு மனதிற்குள் ஆறதலாக இருந்தது.
திரும்பிப் பார்த்தான், பூவிழி ஒரு புத்தகத்தோடு அமர்ந்துவிட்டது தெரிந்தது.
~இந்தப் பூவிழியம்மாவிற்கு எங்க போனாலும் புத்தகம்தான்... எனச்சிரித்தபடி தலையை ஆட்டிக்கொண்டே நடந்தான்.
இவனைத்திரும்பிப் பார்த்த வண்ணமதி, ~சின்னண்ணா...என்றாள் சத்தமாக...
~தான் கடைக்குச் சென்று வருவதாக| கைiயால் காட்டிக் கூறிவிட்டு
நடந்து சென்ற இளஞ்செழியனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் இசைநிலா.
கடையில் இருந்து வந்து பூவிழியின் அருகில் அமரவும் அண்ணினின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
"இளா அந்த நிறுவன விபரங்களை அனுப்பு" என்றுவிட்டு அதுபற்றி கதைத்து முடித்த அண்ணனிடம்.
~சரி அண்ணா..நான் அனுப்புறன்...என்றுவிட்டு ~அண்ணா..பூவிழியம்மா..நிக்கிறா, கதையுங்கோவன்| என்றான்.
~குடு...| அவன் சொல்ல,
மறுக்க முடியாமல், அலைபேசியைக் கையில் வாங்கிய பூவிழி சங்கடத்துடன் காதில் வைத்து
~ஹலோ..| என்றாள்.
~சுரபி..| ஆழந்து ஒரு வித ஏக்கத்துடன் ஒலித்தது அவனுடைய குரல்.
~சொல்லுங்கோ....
~நன்றி....
உனக்கு நன்றி எண்டு ஒற்றை வார்த்தை சொல்லி காணாது, அது உனக்குப் பொருத்தமும் இல்லை...நான் என்ன சொல்லுறது எண்டே தெரியாமல் நிக்கிறன்...|என்றான்.
~அதுதான் வண்ணமதிக்கு ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு வைத்தியர்மார் சொல்லிப்போட்டினமே..பிறகென்ன.. நீங்களும் எதுக்கும் றிப்போட்டுகளை சமாளிப்பு அவனுக்கு விளையாட்டாக இருந்தது போல...
~ஓ..வைத்தியசாலையிலை என்ன சொன்னது சுரபி, நீங்கள் கூட நல்லா பயந்திட்டீங்களாம் சுரபி...சுரபி அஞ்சாத நெஞசம் கொண்ட பெண் என்றுதானே நானும் நினைச்சனான்....அப்பிடி இல்லையா சுரபி.. என்று வேண்டுமென்றே சுரபி..சுரபி என்று சொல்லிக்கொண்டிருந்தான்..
இவளுக்கு கோபம் வந்தாலும் இங்கே இருந்தவர்களுக்காக முகத்தைச் சிரித்தபடி வைத்துக்கொண்டு பேசாமல் நின்றாள்.
~என்ன ..அம்மணி.. சமாளிக்க முடியாமல் நிக்கிறீங்கள் போல.. நேரிலை பாக்க முடியாமல் போச்சே இந்தக் கண்கொள்ளாக் காட்சியை.. இப்ப என்னிலை சரியான கோபம் வருமே உங்களுக்கு...சரி..சரி... அலைபேசியை இளாவிடம் குடுங்கோ..பாவமாக இருக்கிறது..| என்றான் சின்னதாகச் சிரித்தபடி.
அவனுடைய சிரிப்பொலி இவளது இதயத்தின் ஓரங்களில் ஓடி விளையாடியது. அதன் நளினங்கள் விழிக்குள் புதுவித உணர்வுகளைத் தோற்றுவித்தது. அது முகத்தில் ஒருவித பாவனையைக் கொடுத்தது.
இவள் அலைபேசியை இளாவிடம் கொடுத்துவிட்டு, வண்ணமதியின் அருகில் வந்து அமர்ந்துகொள்ள,
~என்ன பூவிழியம்மா..அண்ணாவோடை ஏதோ சண்டை போல| என்றாள் மெதுவாக மற்ற இருவருக்கும் கேட்காதபடி.
~இல்லை..இல்லை...மதிக்குட்டி..சும்மாதான்..| என்றாள் சிரிப்புடன்.
சொல்லிவிட்டாளே தவிர, அவனுடைய ஆழ்ந்த குரலும் அந்தச் சின்னச்சிரிப்பும் மனதின் ஓரத்தில் உலாவிக்கொண்டே இருந்தது.