பாகம் 32.
வீட்டுக்கு வந்த பூவிழி குளித்து உடைமாற்றிக்கொண்டு கீழே வந்தாள். மதிய உணவைக் கடையில் வாங்கி வந்திருந்ததால், எல்லோருக்கும் பரிமாறுவதற்கு ஏற்ற வகையில் கிண்ணங்களில் எடுத்துவைத்துக்கொண்டிருந்த போது, பொற்செழியன் சாப்பாட்டு மேசைக்கு வந்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்த பூவிழியிடம்,
~சுரபி, எதாவது சொல்லவேணுமோ?| என்றான்.
சிறிது நேரம் யோசித்தவள், எப்படியென்றாலும் சொல்லவேண்டிய விசயம்தானே, என்று நினைத்தபடி,
சொல்லவேணும்தான், ஆனால், இப்ப எல்லாரும் சாப்பிடுவம், எனக்கும் சரியான பசி, சாப்பிட்டு முடிய எல்லாரோடையும் கதைக்கவேணும், அப்ப கதைக்கிறன்,| என்றாள்.
தலையை ஆட்டியவன், ~ஏதாவது பெரிய பாரதூரமான விசயமோ?| என்றான் பொறுமையின்றி.
அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள், தலையை இடம்வலமாக ஆட்டினாள்.
~சுரபிக்கு அப்பா திருமண ஒழுங்கு ஏதும் செய்துவிட்டாரோ....| நினைக்கவே, இதயத்தில் அமிலத்தை ஊற்றியது போல உணர்வு ஏற்பட்டது பொற்செழியனுக்கு.
சாப்பிட்ட பிறகு கதைக்கலாம் என்று சொன்ன பிறகு அவனால் எதையும் கேட்கவும் முடியவில்லை.
இதுவரை இப்படி எல்லாம் அவன் ஆனதில்லையே...
இதுவரை ஆனதில்லை சரி..இது சுரபி விசயமாச்சே.. ஆகாமல் விட்டால்தான் ஆச்சரியம் என நினைத்தான்.
அதுவும் இல்லவே இல்லை என்று நினைத்து ஒரு வெறுமையோடு வாழ்ந்து, எதிர்பாராத தருணத்தில் அவனுடைய சுரபி அவனுடைய வாழ்க்கையில் திரும்பவும் வந்து சேர்ந்ததை என்னவென்று சொல்ல....
மரித்துக்கிடந்த காதல் நினைவுகளை அவன் தட்டி எழுப்பி, அதற்கு உயிர்கொடுத்து உல்லாசமான ஒரு பூஞ்சோலையில், தினம் கனவுகளோடு உலாவருகிற போது, அவனுடைய காதல் கனவு தகர்ந்துபோகுமென்றால்...
இல்லை...இல்லலே இல்லை...ஒரு முறை அவனுடைய சுரபியைத் தவறவிட்டது போதும், இன்னொரு முறை அவளை விட்டுவிட மாட்டான், என்ன செய்தாவது அவளை அடையவேண்டும்,
ஒரே ஒரு நிச்சயம் அவனுக்கு இருந்தது, அவனைத் தவிர, சுரபியால் முழு மனதோடு எந்த ஆணையும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஒரு வேளை அப்பாவிற்காக மனதை மாற்றிக்கொண்டிருந்தால்....
கசந்த எண்ணத்துடன், அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பேசாமல் இருந்தான்.
அந்தக் கறுத்த நூல், அவளுடைய கழுத்தில்தான் உருண்டுகொண்டிருந்தது.
வேலையால் வந்த இசைநிலா, பூவிழியின் புன்னகைக்கு பதில் புன்னகையை உதிர்த்துவிட்டு,
~அப்பா நல்லா இருக்கிறாரா?| என்பதைச் சைகையில் கேட்டாள்.
பூவிழியும் அவளுக்குப் புரியும்படியாக சைகையிலேயே அவர் நல்ல சுகமாக இருக்கிறார் என்பதைச் சொல்லவும் மென்சிரிப்பொன்று இசைநிலாவின் உதட்டில் உதித்தது.
இருவரினதும் உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்த பொற்செழியனுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஒன்றாகவே தோன்றியது.
அவனுடைய சுரபிதான் எப்பேற்பட்ட தேவதை, எல்லோருடனும் அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் தன்னை மாற்றிக்கொண்டு அன்பின் விம்பமாகிவிடுகிறா...
பார்க்காதது போல மெல்ல நிமிர்ந்து பூவிழியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
கையிருந்த அலைபேசியில் அவளது செய்கைகள் காட்சிப் பதிவாகிக்கொண்டிருந்தது என்பது பூவிழிக்குத் தெரியாது,
~தனக்கு தலைவலி என்றும் மறுநாள் சின்னத்தம்பியின் பிறந்த நாள் என்பதால் ஊருக்குப் போகிறேன்| என்றும் இசைநிலா சொல்லிக்கொண்டிருக்க, வண்ணமதியும் இளஞ்செழியனும் தங்களது அறைகளில் இருந்து வெளிப்பட்டு, சாப்பாட்டு மேசைக்கு வந்துகொண்டிருந்தனர்.
சின்னவர்களைக் கண்டதும், காணொளி எடுப்பதை நிறுத்திய பொற்செழியன் சாதாரணமாக நிமிர்ந்து அமர்ந்தான்.
சாப்பாட்டு மேசை, உணவுத்தட்டுகளால் நிரம்பியிருந்ததைக் கண்ட, இருவரும், விழிகளை விரித்தனர்.
~என்ன பூவிழியம்மா....இவ்வளவு சாப்பாடு இருக்கு?| ஆச்சரியமாகக் கேட்ட வண்ணமதி, இசை நிலாவிடம் சைகையிலேயே என்ன என வினவ,
தலையைத் தொட்டுக்காட்டிய இசைநிலா, விரியாத ஒரு புன்னகையை வெளிவிட,
சடாரெனத் திரும்பிச் சென்ற இளஞ்செழியன், சிறு போத்தல் ஒன்றுடன் வந்தான்.
கையில் வைத்திருந்த குப்பியை பூவிழியிடம் கொடுத்தவன்,
~இது நல்ல மருந்து, தலைஇடி உடனே நிக்கும், பூசச்சொல்லுங்கோ பூவிழியம்மா...|என்றான்.
அதைக் கையில் வாங்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றுவிட்டு கையில் பையுடன் வந்து நின்ற இசைநிலா அனைவருக்கும் பொதுவாகத் தலையை ஆட்டி விடைபெற,
பயண ஒழுங்குகளை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்ட பூவிழி, வெளியே வாகனம் வந்துவிட்டதாக, அழைப்பு வரவும் மற்றவர்களைச் சாப்பிடச்சொல்லிவிட்டு தானே அழைத்துச் சென்று வழி அனுப்பிவிட்டு வந்தாள்.
----------------------------------------------------------------------------------------------------
நேரம் மூன்று மணியைக் கடந்துவிட்டது. தடுப்புகள் ஏதுமின்றி இருந்த விரிந்த மேல் தளத்தில், பொற்செழியன், பூவிழி, இளஞ்செழியன், வண்ணமதி நால்வரும் நின்றுகொண்டிருந்தனர்.
பஞ்சுப் பொதிபோன்ற கதிரைகள் அழகாக போடப்பட்டிருந்தன. ஒன்றில் அமர்ந்துவிட்ட வண்ணமதி,
~எல்லாரும் முதல்ல இருங்கோ| என்றதும் மற்றவர்களும் அமர்ந்துவிட்டனர்.
மற்ற மூவருமே பூவிழியின் முகத்தைப் பார்க்க, சங்கடமாக மூவரையும் பார்த்தவள், மனதை நிலைப்படுத்திக்கொண்டு சொல்லத் தொடங்கினாள்.
அவளுடைய முகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் பொற்செழியனுக்கு என்ன உணர்த்தியதோ, பூவிழியிடம் இப்படிச் சொன்னான்.
~என்ன விசயம் எண்டாலும் பதற்றப்படாமல் சொல்லுங்கோ, வாழ்க்கையிலை ஒவ்வொருத்தர் என்னென்ன துயரங்களை எல்லாம் அனுபவிக்கிறாங்கள், நாங்களும் ஓரளவு துயரங்களைப் பாத்திட்டம் தானே, பெரிய பாதிப்பு ஒண்டும் வரப்போறதில்லை, நீங்கள் பதற்றப்படாதேங்கோ...|
பொற்செழியனை நன்றியோடு பார்த்தாள்.
உண்மையில் அவளுக்கு அந்த வார்த்தைகள் மிகவும் தேவையாகவே இருந்தது.
தான் முதல் முதலாக பரமானந்தரை சந்தித்தது, அவர் தன்னிடம் மனம்விட்டுப் பேசியது முதல், அவருடைய மனதில் ஆறாத துயரமாக இருந்த அவருடைய நண்பன் சொன்ன விசயம் அதாவது பத்மினியம்மா உயிருடன் இருப்பது பற்றிய தகவல், என அவர் கூறிய அத்தனையையும் சொன்னாள்.
பத்மினியம்மாவை அவர் காதலித்திருந்தது, காலச்சூழ்நிலையால் அவர்களின் காதல் பிரிவைச் சந்தித்தது, அதன் வலிகளை பரமானந்தம் அப்பா தன்னிடம் கூறியது, தானே நேரில் சென்று பத்மினியம்மாவைச் சந்தித்தது, அவரை தனக்குத் தெரிந்தவராக வீட்டுக்கு கூட்டிவந்தது, அவர்கள் இருவருக்குமாக பிறந்த மகன் பரிபூரணன், தந்தை இல்லாத வாழ்வில் அவன் பட்ட அவமானங்கள், மறுவாழ்வு மையத்தில் கழிகின்ற அவனுடைய வாழ்க்கை என அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
விக்கித்து அமர்ந்திருந்தனர் பொற்செழியனும் இளஞ்செழியனும் வண்ணமதியும்.
எப்போதும் அமைதியாகவே இருக்கும் தமது தகப்பனாரிடமிருந்து இப்படி ஒரு விசயத்தை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
இத்தனை வருடங்களாக தன் மனதை அரித்த ஒரு விசயத்தை அவர் தங்களிடம் சொல்லவில்லை என்பதும் அதை, பூவிழியிடம் பகிர்ந்திருக்கிறார் என்பது ஒருபுறமாகவும் அவருடைய மனதிற்கு இனிய பத்மினியம்மாவை இந்த வீட்டில் வேலையாளைப்போல இருக்கவைத்திருக்கிறோமே என்ற துயரம் ஒருபுறமாகவும் மனதைப் பிசைந்தது.
பொற்செழியனுக்கு இதயமே நின்றுவிடும்போல இருந்தது. அவனுடைய தந்தையைப்போலவே அவனுக்கும் வாழ்க்கை அமைந்திருக்கிறதே, அப்பாவின் காதலியான பத்மினியம்மாவுக்கு அப்பா தெரியாமல் கொடுத்த வலியைப்போலவே அவனுடைய சுரபிக்கும் அவன் தெரிந்தே வலியைக் கொடுத்திருக்கிறானே...அவனுக்காகவே வாழ்கின்ற அவலத்தை அவளும் அனுபவிக்கிறாளே...
இவன் இப்படி யோசித்துக்கொண்டிருக்க,
சடாரென எழுந்துகொண்ட இளஞ்செழியன், ~அண்ணா...உங்களைத்தவிர வேற யாரையும் எங்களாலை அண்ணனாக ஏற்கமுடியாது, பத்மினியம்மா வேணுமெண்டால் அப்பாவுக்காக எங்களோடையே இருக்கட்டும்..ஆனால் அவன்....வேண்டாம்..| என்றதும்
விலுக்கென்று நிமிர்ந்து பார்த்த பூவிழி, எதுவும் சொல்ல முடியாது மௌனம் காத்தாள்.
~பூவிழியம்மா...நீங்கள் அவரை...அந்த அண்ணாவைப் பாத்தனீங்களே?| என்று வண்ணமதி மெல்லக் கேட்கவும்
~அது இப்ப உனக்கு ரொம்ப முக்கியமே?| என்று படாரெனக் கேட்ட இளஞ்செழியனின் கோபத்தால் வண்ணமதி அமைதியாகிவிட்டாள்.
~இளா..நான் சொல்லுறதை....| பூவிழி சொல்லிக்கொண்டிருக்கும் போதே இளஞ்செழியன் எழுந்து சென்றுவிட, யாரும் எதுவும் பேசவில்லை. இப்படி ஒரு பூகம்பத்தை பூவிழி எதிர்பார்த்தாள் எனினும் பொற்செழியன் தம்பி தங்கையை அமைதியாக்கி, புரியவைத்துவிடுவார் என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாள்.
தன் நம்பிக்கை பொய்யாகிப் போனதில் அவளுக்குமே என்ன செய்வதெனத் தெரியவில்லை.
அமைதியாக இருந்த பொற்செழியனை நிமிர்ந்து பார்த்தாள்.
இவளைப் பார்த்து தேறுதலான ஒரு புன்னகையை வெளிப்படுத்தியவன், தந்தையைப் பற்றித்தான் யோசித்தான்.
பாவம்....எவ்வளவு துயரத்தை மனதில் சுமந்து இவ்வளவு காலமாக வாழ்ந்திருக்கிறார், இனிமையற்ற ஒரு இல்லற வாழ்க்கையை.
வெளியே தோட்டவெளியைக் கடந்து இளஞ்செழியன் தனது உந்துருளியில் செல்வது தெரிந்தது.
அப்போது திடீரென நினைத்தவனாக,
~இளா..இளா...எங்க போறான்..அப்பாட்டை எதுவும் கதைச்சிடுவான்...| பரபரப்போடு சொல்ல,
எழுந்துநின்று பார்த்த பூவிழியும் அதையே ஆமோதிக்க,
~அண்ணா...வாங்கோ..உடனே அப்பாட்டைப்போவம்...| வண்ணமதி சொன்னதும் மூவரும் அவசரமாகப் புறப்பட்டனர்.
விரைவாகவே விரைந்தது இவர்களின் மகிழுந்து.
இளஞ்செழியன் உந்துருளியை விட்டுவிட்டு உள்ளே விரைந்து செல்லவும் பின்னாலேயே வந்துவிட்ட, இவர்கள் மூவரும் அவனைத் தொடர்ந்து நடந்தனர்.
பரமானந்தரின் அறைக்கு வந்துவிட்ட இளஞ்செழியன், விரைந்து கதவைத் திறப்பதற்காக கைப்பிடியில் கைவைத்தவன், ஏதோ மின்னல் தாக்கியவனாக திடீரெனத் திரும்பினான்.
தந்தையின் அறைக்கு நேரே வெளியில், இருக்கையில் இருந்தபடி, தலையை ஒரு புறம் சாய்த்த வண்ணமாக அமர்ந்திருந்த அந்த இளைஞன், பொற்செழியனைப் போலவே இருக்கவும் திகைத்துப்போய் திரும்பினான்.
சுடுநீர் எடுப்பதற்காக வெளியே சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த பத்மினியம்மாவும் இவர்களைக் கண்டுவிட்டு விரைந்து நடந்து வந்தார்.
இரண்டு அடி திரும்பிய இளஞ்செழியன், தன்னைப் பார்ப்பதைக்கூட உணராமல், ஏதோ யோசனையில் ஆழந்திருந்த மகனின் அருகில் வந்து நின்ற பத்மினியம்மா...
~பூரணா....| என்றார் மெலிந்த குரலில்.
தாயின் குரலில் நடப்பிற்கு வந்தவன்,
~அம்மா...| என்றபடி எழவும் இளஞ்செழியன் அருகில் வரவும் சரியாக இருந்தது.
பயந்துபோன பத்மினியம்மா,
~இளாத்தம்பி..நீங்கள் மூண்டுபேரும் சம்மதிக்காட்டி தான் உள்ள வரேல்ல எண்டுதான் இருந்தவன், உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி தம்பி..போடுவான்..பிரச்சினையில்லை...| நடுங்கும் குரலில் கூற,
அப்போது அங்கே வந்துசேர்ந்துவிட்ட பூவிழிக்கு ஏதோ மாதிரி இருந்தது.
முன்னால் வந்துவிட்ட பொற்செழியன்...
~இளா..என்ன இது...| என தம்பிக்கு முன்னால் வந்த அண்ணன் பொற்செழியனை சற்றே விலக்கியபடி இரண்டு எட்டுகளில் பரிபூரணனை அடைந்துவிட்ட இளஞ்செழியன்,
~அண்ணா.....| என்றான் பரிபூரணனை இறுக்கி அணைத்தபடி.
யாரும் இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்க்கவில்லை...
பத்மினியம்மா...நெஞ்சை நீவியபடி பெரிய மூச்சை வெளிவிடவும் பூவிழியும் வண்ணமதியும் கூட ஆசுவாசமாக மூச்சுவிட்டனர்.
திடீரென வந்த இளஞ்செழியனையோ அவனது அசைவுகளையோ எதிர்பாராத பரிபூரணன், அவன், ~அண்ணா...| என அழைத்ததும்..
ஒரு நிமிடம் விக்கித்துப்போய், அவனையே பார்த்தான்.
அருகில் வந்த பொற்செழியனும், ~அண்ணா...| என்றான், கண்ணில் பூத்த பனிப்பூக்களுடன்.
சிறிது நேரத்தில் தான், அந்த நிஜம், உள்ளத்தில் பதிந்தது பரிபூரணனுக்கு.
எதுவுமே பேசாமல், சட்டென்று கதிரையில் தொப்பென அமர்ந்தான்.
இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டவன், விம்மி அழத்தொடங்கிவிட, அங்கங்கே நின்றவர்கள் இவர்களை வேடிக்கை பார்ப்பதை உணர்ந்து,
பரிபூரணனை தன் இரு கைகளாலும் அணைத்துக்கொண்ட பொற்செழியன், கதவைத்திறக்குமாறு இளஞ்செழியனுக்கு சைகை காட்டிவிட்டு தந்தையின் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
தன் பிள்ளைகள், இருவரும் பரிபூரணனை கையில் பற்றியபடி வந்ததைக்கண்ட பரமானந்தர்..தான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு அவசரமாக கட்டிலைவிட்டு இறங்கவும்...
முன்னால் ஓடிச்சென்ற பத்மினியம்மா,
~ஒண்டும் இல்லை...நீங்கள் பதற்றப்படாதேங்கோ....| என்றதும் நின்று நிதானமாகப் பார்த்தவர்,
அப்போதுதான் தன் மூத்தமகனை மேலிருந்து கீழாக நன்றாகப் பார்த்தார்.
சிறுவயதில் தான் இருந்ததைப்போலவே இருந்த அவன் மீது அவருக்கு வெள்ளமாகச் சுரந்தோடியது அன்பு.
உடம்பு நடுங்கத் தொடங்கவும்...கட்டிலின் ஓரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.
முன்னால் விரைந்துவந்த பூவிழி, அவரது கைகளைப்பிடித்து அமரவைத்துவிட்டு, தலையை ஆட்டி, எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்பதைக் குறிப்பில் உணர்த்தவும்,
தானும் தலையை ஆட்டிவிட்டு, அமர்ந்துகொண்டார்.
நிமிர்ந்து தகப்பனாரைப் பார்த்த, பரிபூரணன்,
வைத்தகண் வாங்காமல் அவரையே பார்த்தான்.
இரண்டு பக்கமும் இளஞ்செழியனும் பொற்செழியனும் நிற்க, நடுவில் நின்ற பரிபூரணனிடம் ஒரு அன்பு நிறைந்த கம்பீரம் தெரிந்தது.
மகனின் மனநிலை புரியாமல் அவனிடம் எதுவும் பேசமுடியாத நிலையில் மௌனமாக இருந்த தகப்பனாரை உற்று நோக்கியவன்,
~ஏன் எங்களை இவ்வளவு நாளும் தேடாமல் விட்டீங்கள்?| என்றான்.
~பூரணா....| பத்மினியம்மாதான் அவசரமாக மகனைத் தடுத்தார்.
பத்மினியம்மாவைப் பார்த்து தலையை ஆட்டிய பரமானந்தர், சங்கடமாக மகனையே பார்க்கவும,
ஒரு சிறுவனைப்போல ஓடிவந்து அவரது நெஞ்சில் சாய்ந்தபடி அவரைக் கட்டிஅணைத்துக்கொண்டான்.
மற்றவர்களும் கண்ணீருடனே அக்காட்சியைக் கண்டனர்.
இவ்வளவு வரைக்கும் கிட்டவே வராத வண்ணமதி, பரிபூரணனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தப் பார்வையின் இருந்த பொருளை மற்றவர்களால் கணிக்க முடியவில்லை.
மனதில் ஏதோ ஒரு உணர்வு உந்தவும்தான், சட்டென நிமிர்ந்து கட்டிலுக்கு அப்பால் நின்ற வண்ணமதியைப் பார்த்தான் பரிபூரணன். ~பி;றந்த சில நிமிடங்களிலேயே விமானக் குண்டுவீச்சுக்கு தாயைப் பறிகொடுத்துவிட்டு, வீரிட்டு அழுத குழந்தையையும் அவளுடைய அண்ணனையும் உன் அப்பா எடுத்து வளர்த்தவர்| என்று தாயாரால் கூறப்பட்ட, அந்தப் பெண் குழந்தை.
தாயின் வாசம் அறியாமலே, தனது தகப்பனாரின் மனைவியிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி வளர்ந்த குழந்தை...
தந்தையிடம் இருந்து நிமிர்ந்தவன்,
தனது இரண்டு கைகளையும் விரித்து நீட்டினான்.
ஓடிவந்து அண்ணன் பொற்செழியனின் கரங்களைப் பற்றியபடி, பரிபூரணனின் ஒற்றைத்தோளில் சாய்ந்துகொண்டு அழுத வண்ணமதியை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தனது கல்விச் செயற்றிட்டம் ஒன்றுக்காக, வைத்தியசாலையில் இருந்த நோயாளர்களைச் சந்தித்து, தரவுகள் எடுத்த அவள், அப்போது பரிபூரணனைக் கண்டதும் அவனோடு அன்பாகப் பழகியதும் அவனை ~அண்ணா| என அழைத்ததும் அவன் இவளை ~தங்கச்சி| என்றதும் அதன் பிறகும் வைத்தியசாலையில் அவன் இருந்த நாட்கள் வரை வண்ணமதி வந்துவந்து பார்த்துவிட்டுச் சென்றதும், அவனுக்கு சிறு கைபேசி ஒன்றை அவளே வாங்கிக் கொடுத்ததும்
~மறுவாழ்வு இல்லத்தில் இருப்பவருடன் என்ன பேச்சு| என வீட்டில் உள்ளவர்கள் பேசுவார்கள் என நினைத்து யாரிடமும் அதைச் சொல்லாததும் என அவளுக்கும் பரிபூரணனுக்கும் மட்டுமே தெரிந்த சில சங்கதிகளை இருவருமே நினைத்துக்கொண்டனர்.
தம்பியின் கைகளைப் பற்றியிருந்த வண்ணமதியின் கரங்களைப் பிரித்தெடுத்தவன், அவளுடைய கரங்களை இறுகப்பற்றி,
~ஏய்..பூனைக்குட்டி....நீ உண்மையாவே என்ர தங்கச்சியடா....ஏன் அழுறாய்...அழாதை?| என்றான்.
~அண்ணா..நான் எத்தினையோ தரம்...உங்களைப்பற்றிச் சொல்லுங்கோ என்று கேட்டிருப்பன்...நீங்கள் சொல்லவேயில்லை...சொல்லியிருந்தால்...அப்பவே தெரிஞ்சிருக்கும்...| என்றாள் குழந்தை நேசத்துடன்.
~சரி..விடு....அதனாலை என்ன...என்ரை பூனைக்குட்டி என்ரை தங்கச்சி என்றது சரிதானே..அப்ப சொன்னது தான், இப்பவும்..ஆயுள் வரைக்கும் நீ என்ரை தங்கச்சிதான்...அடுத்த ஜென்மத்திலையும் நீதான் என்ரை தங்கச்சி....சரியோ....|என்றான்.
~சரியான பாசம் போல...அண்ணாவும் தங்கச்சியும்...இளஞ்செழியன் வேண்டுமென்றே கேட்க,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.
~அம்மா....நான் நெடுகச் சொல்லற குழப்படி வால்...என்றான் பரிபூரணன் வண்ணமதியைக் காட்டி.
ஓங்கி அவனை ஒரு அடி அடித்த வண்ணமதியிடம், ~ஏய்..வலிக்கிதடி..| என்றான் உரிமையுடன் பரிபூரணன்.
இதுவரை தன்னை ஒருமையில் அழைக்காத பரிபூரணன், அன்று தங்கை என்னும் உரிமையோடு அழைத்ததைக் கண்ட வண்ணமதி, கண்கள் மின்ன புன்னகையோடு அண்ணனைப் பார்த்தாள்.
"அண்ணா...." சற்றே உரத்து அவள் அழைக்கவும் தான்,
"என்னடாம்மா...?" என்றான் திடுக்கிட்டு.
"பருதி அண்ணியை எப்பதான் வீட்டுக்கு கூட்டிட்டு வாறது?" என்றாள் மறுமுறையும்.
பருதி, வெட்கத்தில் தலை கவிழ்ந்து கொள்ள, பருதியை நன்றாகப் பார்த்த பரிபூரணன்,
"அது, அப்பா, அம்மா, செழியன் எல்லாரும் தீர்மானிக்கிற விசயம், " என்றான்.
உடனே, பரமானந்தத்தாரிடம் திரும்பிய வண்ணமதி,
" அப்பா... அப்பா... பருதி அண்ணியும் வீட்டுக்கு வந்திட்டா, நல்லா இருக்கும், கெதியில அண்ணாக்கு கலியாணம் செய்யுங்கோ " என்றாள்.
பரமானந்தத்தார் மகிழ்ச்சி யோடு தலையை ஆட்ட,
" அவருக்கு கீழ நாங்களும் காத்திட்டிருக்கிறமாக்கும்..." இளஞ்செழியன் சொல்ல, பெரிதான ஒரு சிரிப்பலை அந்த இடத்தை நிறைத்தது.
ஊருக்குச் சென்றுவிட்ட இசைநிலாவிற்கு இங்கு நடந்த எதுவும் தெரியாது...