• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 33

Vishakini

Moderator
Staff member
பாகம் 33

பரமானந்தரை வீட்டுக்கு அனுப்பலாம் என்று சொல்லிவிட்டதால் மகன்மார் தகப்பனாரையும் அழைத்துக்கொண்டு தாம் வருவதாகவும் பெண்கள் மூவரையும் வீட்டுக்குச் செல்லுமாறும் கூறிவிட, இனிமையான மனநிலையுடன் பத்மினியம்மாவையும் வண்ணமதியையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்த பூவிழி,
உள்ளே வந்ததுமே ~அப்பாடா....|என்ற ஆசுவாசப் பெருமூச்சுடன் முன் விறாந்தையில் இருந்த கதிரையில் அமர்ந்துவிட்டாள்.
வண்ணமதி நேரே அறைக்குச் சென்றுவிட, பூவிழியின் அருகில் வந்தமர்ந்து அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிய பத்மினியம்மா,
~அம்மாடி...உனக்கு நான் எப்பிடி நன்றிக்கடன் தீர்க்கப்போறனோ தெரியேல்லையம்மா..நான் என்னென்னவோ நினைச்சுப் பயந்துபோனன்...எல்லாத்தையும் நீதானம்மா சமாளிச்சு தீர்த்து வைச்சிருக்கிறாய்...இருந்தாலும் இந்தப்பிள்ளைகள் என்னைப்பற்றி என்ன நினைக்கினமோ தெரியேல்லை எண்டுதான்...| என்றார்.
~பத்மினியம்மா...ஏன் அப்பிடிச் சொல்லுறியள், ஆர் என்ன நினைக்கிறது..நீங்கள் ஒண்டும் யோசிக்காதேங்கோ...| என்றாள்.
பத்மினியம்மாவின் பார்வை, மேலே சென்றுவிட்ட வண்ணமதியைத் தான் தொடர்ந்து திரும்பியது.
தானும் அப்படிச் சொல்லிவிட்டாளே தவிர, வரும் போதும் சரி, உள்ளே வந்தபிறகும் சரி, வண்ணமதி, பத்மினியம்மாவிடம் பேசவே இல்லை என்பதை பூவிழியும் கவனிக்கவே செய்தாள்.
மெல்லத் திரும்பி, பத்மினியம்மாவின் கைகளைப்பற்றிய பூவிழி, ~பத்மினியம்மா...வண்ணமதி சின்னப்பிள்ளை, அவள் கொஞ்சம் அப்பிடி கோபமா ஏதும் நடந்தாலும் நீங்கள் பெரிசுபடுத்தாதேங்கோ..அவ கொஞ்ச நாளிலை புரிஞ்சுகொள்ளுவா...நீங்கள் கோபப்பட்டிடாதேங்கோ...|
~ஐயோ..என்னம்மா..இப்பிடிச் சொல்லுறாய்...பிள்ளை கோபமா இருந்தால், அல்லது அவவுக்குப் பிடிக்கேல்லை எண்டால்..நானும் பூர்ணாவும் ரெண்டு நாள் அவரோடை இருந்திட்டு ஊருக்குப் போறம்.... பிறகு, பூர்ணா, இடைக்கிடை வந்து வந்து தகப்பனைப் பாத்திட்டு வரட்டுமடா...| என்றதும் பூவிழிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இது ஒரு சிக்கலான உறவு நிலை, உரிமை இருந்தும் பத்மினியம்மாவால் அதை முழுமனதாக ஏற்கமுடியவில்லை என்பது பூவிழிக்குப் புரிந்தது.
உறவும் உணர்வும் இரட்டைக் குழந்தைகளைப் போன்றது என எப்போதோ வாசித்தது நினைவில் வந்து நின்றது.
இவள் ஏதோ சொல்ல முனைவதற்குள் சட்டென்று பத்மினியம்மா எழுந்துகொண்டதைக் கண்டவள் நிமிர்ந்து பார்த்தாள், மாடிப்படிகளில் வண்ணமதி நின்றுகொண்டிருப்பதைக் காணவும் தானும் மெல்ல எழவும் மெதுவாகவே படியிறங்கி கீழே வந்து நின்ற வண்ணமதி,
~பத்மினியம்மா...நீங்கள் சொன்னதை நானும் கேட்டன், எனக்கு சரியான மனக்கவலையிலைதான் நான் உள்ள போயிட்டன், நீங்கள் இந்த வீட்டின்ரை உரிமையான ஆள், எனக்கு உங்களை எப்பவுமே நிறையப்பிடிக்கும், அதை நான் காட்டிக்கொள்ளேல்லையே தவிர, பிடிக்கும், உங்களை அம்மா எண்டு சொல்லத்தான் ஆசை....அதுவும் அண்ணான்ரை அம்மா எண்டதும்...நீங்கள் எல்லாரும் உரிமையானவர்கள்...இந்த வீட்டைதான் நீங்கள் இருக்கவேணும்...அதுதான் அப்பாவுக்குச் சந்தோசம்...நானும் சின்னண்ணாவும்தான்...|
பத்மினியம்மாவுக்கு அப்படி ஒரு கோபம் எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை...
பளார் என வண்ணமதியின் கன்னத்தில் ஓர் அறை வைத்தவர், ~அவருடைய பார்வையில நீங்கள் எல்லாருமே ஒன்றுதான்...அவர் ஒருநாளும் யாரையும் பிரிச்சுப் பார்த்ததே கிடையாது, இனிமேலும் அப்படி நடக்காது, உரிமை அதுஇதென்று இனிமேல் கதைச்சால்...| என ஆவேசமாகச் சொன்னவருக்கு அப்போதுதான் தான் வண்ணமதியை அடித்துவிட்டோம் என்பது புரிய,
~அம்மாச்சி.....;என்றார் தயக்கத்துடன்.
சட்டென பத்மினியம்மாவின் கைகளைப்பற்றிய வண்ணமதி, ~நான் இனி உங்களை அம்மா எண்டுதான் சொல்லுவன்.....எனக்கு இந்த உரிமையான அன்புதான் வேணும்....| என்று பத்மினியம்மாவைக் கட்டி அணைத்துக்கொள்ள,
வண்ணமதியைத் தன் மார்போடு அணைத்துக்கொண்ட பத்மினியம்மா, கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டார்.
அப்போது, உள்ளே நுழைந்த அந்த வீட்டின் ஆண்கள் நால்வரும் இந்த அழுகைக் கோலத்தைக் கண்டதும் குழம்பிவிட்டனர்.
பரிபூரணனுக்கு தாய் அழுவதைக் கண்டதும் சட்டென்று ஏதும் புரியாத மாதிரி இருந்தது. அவனை வளர்க்கிற காலத்திலும் சரி, பின்னர் அவன் இப்படியெல்லாம் உதவாதவனாக நடந்துகொண்ட காலத்திலும் சரி..அவனுடைய அன்னை அழுது அவன் கண்டதே இல்லை..அப்படி ஒரு இரும்பு மனுஷி அவர்.
ஏதோ சிக்கலான நிலைமை என ஊகித்தவன் ஓடிவந்து தாயின் அருகில் நின்றபடி,
~அம்மா...என்னம்மா..| என்றான்.
கண்களைத் துடைத்துக்கொண்டு பத்மினியம்மா நிமிரவும் அவரையே இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்த வண்ணமதி, விடாமல் அப்படியே நிற்பதைக் கண்டதும் இவனுக்கும் நிலைமை ஓரளவு புரிந்துவிட்டது.
பொற்செழியன் தான் சற்று யோசனையுடன் அருகில் வந்து, விழிகளால் பூவிழியிடம் வினா தொடுத்தான்.
உடனே பூவிழி,
~பயப்பிடாதேங்கோ...இது அன்புச்சண்டை...| என்றுவிட்டு, நடந்ததை விபரமாகக் கூற,
இருவருக்கும் அருகில் வந்தபரிபூரணன்;;, தாயையும் தங்கையையும் அழைத்துச் சென்று கதிரைகளில் அமரவைத்துவிட்டு, நிமிர்ந்தான். அப்போது மற்றவர்களும் வந்து அமர்ந்துகொண்டனர்.
தாயின் அருகில் அமர்ந்த பரிபூரணன்,
~அம்மா....உங்களுக்கு பொம்;பிளைப்பிள்ளை என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்...இசையை நீங்கள் எவ்வளவு கவனமாக வளர்த்தனீங்கள்...அதே மாதிரி பூனைக்குட்டிக்கும் அம்மா என்றால் அப்பிடி ஒரு பாசம்...அவளுக்கு அது பெரிய ஏக்கம் என்றே சொல்லலாம்...
உறவைத் தேடின உங்கள் ரெண்டு பேருக்கும் இயற்கை பரிசளித்திருக்கிறது. இனிமேல் ரெண்டுபேரும் அடிச்சுப்பிடிச்சு சண்டை போட்டு சந்தோசமாக இருங்கோ..சரியா| என்றுவிட்டு நிமிர,
ஒருவரை ஒருவர் அன்பு ததும்ப பார்த்துக்கொண்டனர்.
பெரிய நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டார் பரமானந்தர்.
~பத்மினியம்மா...இவள் உங்களை ஒரு வழி பண்ணிப்போடுவாள்..பாத்து...ஆக செல்லம் குடுக்காதேங்கோ..அந்தச் செல்லத்தை எல்லாம் எனக்குத்தாங்கோ| என்ற இளஞ்செழியனிடம் திரும்பிய பொற்செழியன்,
~இளா...ஏன் பத்மினியம்மா என்று சொல்லுறாய்...அம்மா என்றே சொல்லு..... எங்கள் மூவருக்கும் இருந்த ஏக்கத்தை தீர்க்கிறதுக்காகவே கடவுள் அம்மாவை எங்களுக்காகத் தந்திருக்கிறார்| என்றான்.
இதையெல்லாம் வேடிக்கை போல பார்த்துக்கொண்டிருந்த பூவிழியால் அவர்களைப் போல அந்தக் குடும்பத்தில் ஒட்டிக்கொள்ள முடியவில்லை.
அவளைப் பொறுத்தவரை எப்போதுமே, அவள் தனிதான்..அவர்களுக்கான அன்பை, அவர்களுக்கான, அவளால் முடிந்ததைச் செய்கிறாளே தவிர அவள் அந்தக் குடும்பத்தின் அங்கமாக ஒருபோதும் ஆகிவிட முடியாதென்பது அவளுடைய ஆழமான எண்ணம்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்த பொற்செழியன் அவளுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டான் எனினும் அப்போது அவனால் எதுவும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை...
ஆனாலும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஏதோ உந்துதலில் திரும்பிய பூவிழி, பொற்செழியனின் பார்வையில் தடுமாறியவளாக, பார்வையைத்திருப்பிக்கொண்டாள்.
~என்ன இவர்..இதென்ன பார்வை...யாராவது கவனித்தால் என்ன நிலைமை... கடவுளே..வரவர இவரது பார்வையும் செயல்களும் நல்லா இல்லை...அவருடைய மனைவிக்குத் தெரிந்தால் என்ன நிலைமையோ...| நினைக்கும் போதே நெஞ்சுக்குள் படபடத்தது பூவிழிக்கு.
~சரிசரி...எனக்கு பசிக்கிது...அன்பு மழையில நனையிற சந்தோசத்தில சாப்பாடு செய்ய மறந்திட்டீங்கள் போல...| இளஞ்செழியன் சொல்லவும்
~ஓமோம்...உண்மையாவே மறந்திட்டம் தான்...நான் சாப்பாட்டு அலுவலைப்பாக்கிறன்..நீங்கள் இருங்கோ பத்மினியம்மா...| என்றுவிட்டு எழுந்த பூவிழியை இடைமறித்த பொற்செழியன்,
~இண்டைக்கு ஒரு நாளைக்கு கடையில வாங்குவம்...அண்ணாவும் வந்திருக்கிற சந்தோசத்தை வடிவா சாப்பிட்டு கொண்டாடுவம்....| என்றதும்
~அப்பாவுக்கு...கடைச்சாப்பாடு கூடாது...| பூவிழி சொல்லவும்
~அவருக்கு நான் ஓட்ஸ் கஞ்சி செய்யிறன்..| மடாரென்று எழுந்து கொண்ட பத்மினியம்மாவை ஆச்சரியமாகப் பார்த்த பரிபூரணனுக்கு ஒரு விசயம் புரிந்தது.
~அம்மாவுக்கு அவர் மீது சரியான பாசம்..|
~இஞ்ச பாரன்..இவையின்ர கதையை..எனக்கு உந்தக் கஞ்சி ஒண்டும் வேண்டாம்...எடேய்...இளா சொல்லடா..| என்ற பரமானந்தரை பூவிழியும் பத்மினியம்மாவும் செல்லமாக முறைக்க,
~ஒரு நாள் தானே..அப்பா எங்களோட சாப்பிடட்டும்..மென்மையா சாப்பிட்டால் சரி..நான் மருந்து குடுக்கிறன்..;என்றான் பொற்செழியன்.

பத்மினியம்மா..பொற்செழியனைப்பார்த்து, ~சரி தம்பி..| என்றுவிட்டு, பரிபூரணனையே பார்த்தபடி
~இண்டைக்கு பூரணாவின்ரை பிறந்தநாள|; என்றார்...மெல்ல.
பத்மினியம்மாவை முறைத்த பரிபூரணனை, கையால் தட்டிய வண்ணமதி,
~என்ன அம்மாவை முறைச்சால் சரியோ..எத்தினை தரம் கேட்டனான்; எப்ப பிறந்தநாள்..என்று..சரியான அமுக்குணி...| என்றாள்.
~என்ன..அமுக்குணியோ..அம்மா..பாருங்கோ..பூனைக்குட்டி என்ன மாதிரி என்னை நக்கலடிக்கிறாள் எண்டு...| என்றான் தாயாரிடம்.
இவர்களைப் பார்த்துச் சிரித்தனர் மற்றவர்கள்,
அப்போது, பரிபூரணனை அழைத்த பூவிழி,
~நீங்கள் இதுவரைக்கும் இப்பிடி சிரிச்சு கதைச்சு நான் கண்டதே இல்லை| என்றாள்.
அவளை நன்றாகப் பார்த்த பரிபூரணன்,
~அதுசரிதான்...பூவிழி, நான் பொதுவா அப்பிடி இருக்கிறேல்லைத் தான்...ஆனால் நான், பூனைக்குட்டியிடம் அப்பிடித்தான் கதைக்கிறனான்...அவளிடம் மட்டும் எப்பவும் இனிமையாக இதமாகத்தான் கதைப்பன்...| என்றான்.
முகம் முழவதும் பெருமிதம் மிளிர பரிபூரணனைப்பார்த்த வண்ணமதி,
~சரிசரி....எல்லாரும் வெளியில போவமே....அண்ணாவின்ரை பிறந்தநாளைக் கொண்டாட...|என்றாள்.
~சீச்சீ..அதெல்லாம் வேண்டாம்...நான் என்ன சின்னப்பிள்ளையே..| என்ற பரிபூரணனிடம்,
~சின்னப்பிள்ளை இல்லைத்தான்..ஆனால், இண்டைக்கு விசேசமான நாள்தானே...அதைக்கொண்டாடுவம்| என்றான் பொற்செழியன்.
ஓமோம்...அண்ணா இவ்வளவு நாளும் இல்லாத ஒரு புதுவித மகிழ்ச்சி இண்டைக்கு எங்கள் எல்லாருக்கும் இருக்கு..நீங்கள் வந்த நாள் உண்மையாவே எங்களுக்கு அதுவும் அப்பாவுக்கு இன்பமயமான நாள், அதைக்கொண்;hடியே ஆகவேண்டும்...முதல்ல வாங்கோ..உடுப்பு எடுப்பம்;; என்றான் இளஞ்செழியன்.
~என்னட்ட புது உடுப்புகள் இருக்கு...அண்ணா போடட்டும்...~பொற்செழியன் சொல்லவும் அனைவருமே ஆச்சரியமாகப் பார்த்தனர்.
உருவத்திலும் அளவிலும் இருவருமே ஒரே மாதிரித்தான் இருந்தனர்.
அப்போது கதவு திறக்கும் ஒலி கேட்டு நிமிர்ந்து பார்த்தனர், பருதிதான் கையில் சாப்பாட்டுப் பைகளுடன் வந்துகொண்டிருந்தாள்.

 
Top Bottom