பாகம் 8.
வண்ணமதி முன்னால் செல்ல, இவர்கள் இருவரும் அருகருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது நெருங்கி வந்த பொற்செழியன், 'வீட்டுக்கு வாங்கோ.......அது.....நான் நிக்கிற வரைக்கும் ....... அது உங்களுக்கு கஸ்ரமா இருக்கும் எண்டு எனக்கு தெரியும், ஆனாலும், வீட்டில பக்கத்தில இருந்தா எனக்கு கொஞ்சம் ....குற்றஉணர்ச்சி இல்லாமல் இருக்கும்...'கோர்வையாகச் சொல்லமுடியாது வார்த்தைகளை விழுங்கினான்.
அவன் மீது, ஒரு தாயின் பரிவு தோன்றியது அவளுக்குள். அவனும் நிறையவே தவிக்கிறான் என்பது புரிந்தபோது, மறுக்கமுடியவில்லை. தலையை ஆட்டிவிட்டு முன்னால் நடந்து சென்றுவிட்டாள்.
மனம் முழுக்க போராட்டமாக இருந்தது அவளுக்கு. ~இத்தனை நாள் நினைக்காமல் இருந்தவர், இப்ப அவள் இருக்கவேண்டும் என்கிறாரே.....,| எனச் சண்டையிட்ட மனதோடு, ~வீட்டில் இருப்பதில் என்ன தவறு| என முரண்டுபிடித்தது அதே மனம். அவனைப் பார்க்க பாவமாக இருக்கிறதே, தாயைத் தேடும் குழந்தை போல பரிதவிக்கிறானே......உள்ளம் அவனுக்காய் வேதனைகொண்டது.
மாலையில் அவள் வீடு வந்தபோது, ~என்ன பூவிழி, ரெண்டு நாளா ஒளிந்துபிடி விளையாட்டா?| என்றான் இளஞ்செழியன்.
இவள் பேசாமல் புன்னகைக்க, 'பூவிழி; மனதில் ஏதோ இருக்கிறது, என்ன கஷ்ரமோ, சொன்னால்தானே தெரியும்?| என எண்ணியபடியே யோசனையோடு சென்றான்.
பூவிழி இயல்பாக இருக்க நினைத்தாள், ஆனால் முடியவில்லை, பொற்செழியனைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என எண்ணத்தோன்றியது அவளுக்கு, அவளது கனவு, கற்பனை என அனைத்திற்கும் உரிமைக்காரனாய் இருந்தவன், இன்று யாரோவாக, பக்கத்தில் நிற்கிறான், அவளால் எப்படி தாங்கிக்கொள்ளமுடியும்?
அறைக்குள் சென்றதும், துவாயும் ஆடைகளுமாய், குளியலறைக்குள் புகுந்தாள் பூவிழி. அவள் மனம் கிடந்து ஏதேதோ சொன்னாலும் அதையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, எந்தப் பாதிப்பும் இல்லாதவள் போல இயல்பாக இருக்கத்தொடங்கினாள். ஆனால் முடியவில்லை, எந்த மனிதசஞ்சாரமும் அற்ற அந்த தனிமை மனக்குமுறல்களைக் கொட்ட இடமளித்தது.
நீரைரைத் திறந்துவிட்டு, தண்ணீருக்கடியில் நின்றாள், அவளது நீண்ட கூந்தல் நனைந்து வழிந்தது, கண்கள் கலங்கித் தவித்தது, அவள், உயிரென நேசித்தவன், அவள் உலகமாகிப்போனவன், ஆனால் இன்று அவன் அந்நியன், அவளுக்கு எந்த உரிமையும் உறவும் இல்லாதவன், உடைந்து அழுதாள், அவளை காக்க வந்தவனென அவள் நேசித்த பொற்செழியன்...அவளுக்கு எந்த உரிமையும் அவன் மீது இல்லை..|
எவ்வளவு நேரம் அழுதாளோ, வண்ணமதி வந்து கூப்பிட்ட பின்னர்தான் அவசரமாய் எழுந்துகொண்டாள். "இதோ ...வர்றன்....." சட்டென்று தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டவள், ~சீ.....இதென்ன, அழுதால் காலம் முழுவதும் தான் அழவேண்டும், என்னில் நானே பரிதாபப்பட்டால், வாழ்க்கையை நகர்த்துவது எங்கே? எப்படி வாழ்ந்து காட்டுவது? தனக்குத் தானே சொல்லிக்கொண்டவள், எண்ணங்களை உதறிவிட்டு உடைமாற்றி வெளியே வந்தாள்,
அந்தக்கணத்தில் இருந்து பொற்செழியனை மட்டுமல்லாது அவன் அவனுடைய மனைவியையும் சந்திக்கும் தைரியத்தை மனதிலே வரவைத்துக் கொண்டாள்.
அதே மனநிலைதான் பொற்செழியனுக்கும். அவளைவிட பல மடங்கு துயரில் கரைந்தான் இவன். அவளைக் கண்ட நொடிமுதல் மனமும் உடலும் ஓய்ந்துகிடந்தது, அவனது, முதல் காதல், அவனது வாலிபத்தின் வனப்பு, அவனது உயிர், அவனது மொத்த நேசத்தினதும் சொந்தக்காரி, அவள், இன்று வேறொருத்தியாய் நிற்கிறாள், அவன் மௌனமாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், தன் மீதே கோபம் வந்தது அவனுக்கு, என்னதான் நடந்தாலும் அவன் அவளை விட்டிருக்ககூடாது, வேறொரு திருமணத்திற்கு சம்மதித்திருக்கவே கூடாது. அம்மாவுக்காக,
அப்பாவுக்காக, தம்பி தங்கைக்காக என அவன் என்னதான் சமாதானம் சொன்னாலும் அவன் வாழ்வில் சுரபி இல்லாமல் போய்விட்டாளே, அற்புதமான பொக்கிசத்தை அவன் தொலைத்துவிட்டானே, மனம் ஊமையாய் அழுது தொலைத்தது, அவளை இனிமேல் அவனால் அடையவே முடியாதா, அவளைத் தொட்டு, அவளோடு உறவாடி, அவளது மடியில் தலைவைத்துப்படுத்து, கணவன் மனைவியாய் அவர்கள் வாழவேண்டும் என அவன் செய்த கற்பனையை அவனால் எப்படி மறக்கமுடியும்? மனம் தாவிக்குதித்து அந்த நாள் நினைவிற்கு பாயத்துடித்தது, வேண்டாம்.....வேண்டாம்......எண்ணங்களை கட்டுக்குள் கொண்டுவந்தான் பொற்செழியன்.
அன்று இரவு உணவின் போது பொற்செழியன், யாரிடமும் எதுவும் பேசவில்லை,
~என்னப்பா....செழியா, உடம்புக்கு ஏதாவது சரியில்லையா, ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்,| என்ற தந்தையிடம்
~ஒண்டுமில்லையப்பா, ஒரே தலையிடி, எனக்கு பசி இல்லை, நீங்கள் எல்லாரும் சாப்பிடுங்கோ, பிளீஸ்| என்றுவிட்டு வெளியே போய்விட்டான்.
இருளில் கலந்த அவனுடைய உருவம் இறுகியிருக்கிறது என்பது பூவிழிக்கு நன்றாகவே தெரிந்தது.
பூவிழிக்கும் சாப்பாடு இறங்க மறுத்தது. அவன் பட்டினியாய் இருக்கையில் அவள் மட்டும் எப்படித்தான் சாப்பிடுவாள், ~கடவுளே, பசிதாங்க மாட்டானே,| மனம் அங்கலாய்த்தது. அவர்கள் பழகிய அந்தச் சில நாள் பழக்கத்தில் அவள் தெரிந்துகொண்ட விடயங்களில் இதுவும் ஒன்று.
இவளும் ‘சாப்பிடுகிறேன்‘ என பெயர் பண்ணிக்கொண்டு சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தாள். எல்லோரும் எழுந்து சென்றதும், தானும் எழுந்துகொண்டாள். சமையல் கூடத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, பிறிட்ஜில் இருந்து பாலை எடுத்து சூடாக்கினாள். பாதாம் கொஞ்சத்தையும் இடித்து அதற்குள் போட்டவள், அவன் தோட்டப்பக்கம் சென்றதை நினைத்து பாலோடு, தோட்டத்திற்குச் சென்றாள்.
மல்லிகை செடியின் பின்புறமிருந்து சிகரெட் மணம் வருவதை உணர்ந்தவள், வேகமாக அருகில் சென்றாள். அங்கேதான் இருந்தான். மல்லிகையின் கீழே, கல்லால் ஆன மேசையும், மரத்தில் அரிவு பலகையாக போடப்பட்ட கதிரையும் இருந்தது, பூவிழி பல நேரங்களில் ஆறுதலுக்காக அந்த இடத்தில்தான் இருந்திருக்கிறாள். மல்லிகையின் மணமும் அந்தச் சூழலும் அவளுக்கு அவ்வளவு ஆறுதலாக இருக்கும்.
'அவனோடு பேசவேண்டுமே' என சங்கடமாக இருந்தாலும், 'அவன் சாப்பிடவில்லையே,' என்ற உண்மை அவளை உந்தித்தள்ளியது, அவனருகில் சென்றவள் " என்ன இது, புதுப்பழக்கமெல்லாம்?" என்றாள் சாதாரணமாய்.
அவளது குரல் கேட்டு அவசரமாய் எழுந்துகொண்டவன், கையிலிருந்த சிகரெட்டை தூர எறிந்தான். அவனது பதற்றத்தில், அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட, "நான் என்ன பேயா, பிசாசா? ஏன் இப்பிடி பதற்றப்படுறீங்கள், அப்பிடி எந்த பதற்றமும் தேவையில்லை, நான் உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும், அதுக்கு முதல்ல, இந்தப் பாலைக்குடியுங்கள்," என்றபடி கப்பை நீட்டினாள்.
"பேய் ....பிசாசா...நீ...நீங்களா ......அதுக்கில்லை, ஏதோ மனசு சரியில்லையேன்னு, இதை வாயில வைச்சிட்டன், நீங்கள் வந்ததும் என்ன செய்யிறது எண்டு தெரியாமத்தான்," என்றான.; குரல் கரகரப்போடு வெளிவந்தது.
பூவிழிக்கு சங்கடமாக இருந்தது, 'அழுகிறானா, நடந்ததை நினைத்து அழுகிறானா, அவளில்லாத வாழ்க்கையை நினைத்து அழுகிறானா' மனம் கொஞ்சம் இனித்தது.
பெருமூச்சோடு நிமிர்ந்தவள், பால் கப்பை நீட்டினாள்,
"வேண்டாம், எனக்கு பசி இல்லை, உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?" என்றான்.
"எனக்கு இதில எந்தச் சிரம்மும் இல்லை, பாலைச் சூடாக்கிறது சிரமமா," எனக்கேட்டபடி சிரித்தாள். அவனுக்குத் தெரியும், அந்தச் சிரிப்பில் உயிர்ப்பில்லை என்பது, அவனுக்காகச் சிரிக்கிறாள் என்பது.
அதைக் கையில் வாங்கியவன், "நீங்கள் சாப்பிட்டீங்களா?" என்றான்.
தலையை ஆட்டினாள்.
பாலை மூடியிருந்த மற்ற கப்பில் அரைவாசியை வார்த்தவன், அவளிடம் நீட்டியபடியே, "நீங்கள் குடிச்சாதான், நானும் குடிப்னே;" என்றான்.
பேசாமல் பாலை வாங்கி பருகத் தொடங்கினாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தான், நிலவொளியில் அவளது முகம் வரைந்து வைத்த ஓவியம் போல இருந்தது. அவன் தனக்குள் அந்த முகத்தை தாங்கிவைத்திருந்த நாட்கள் சொற்பம் என்றாலும் அத்தனை நாட்களும் சொர்க்கம் தானே, மீண்டும் எண்ணங்கள் ஓடநினைக்க, அவளது செருமல் சத்தம் நடப்பிற்கு இழுத்து வந்தது.
~கடந்ததை நினைச்சு எதுவுமே ஆகப்போறதில்லை, எனக்கு உங்களில கோபமோ, வருத்தமோ கிடையாது. என் வரையில இந்த வாழ்க்கை எனக்கு பிடிச்சதுதான், உங்களைக் கலியாணம் செய்திருந்தால், உங்களோட கூட இருந்திருப்பன், எங்களுக்கெண்டு ரெண்டோ, மூண்டோ குழந்தைகள் இருந்திருக்கும், மற்றபடி இந்த வீட்டில, அப்பா, இளா, வண்ணமதி இவையள் எல்லாரோடையும் நான் இப்ப மாதிரி அன்போட தானே இருந்திருப்பன், எனக்கு இந்த பாக்கியம் போதும், நீங்கள் பிறந்து வளர்ந்த இந்த வீட்டில, உங்கட அப்பாவை, சகோதரர்களை பாத்துக்கொண்டு, அவையளைக் கவனிச்சுக்கொண்டு வாழுறது எனக்கு முழுச் சந்தோசம்| என்றாள்.
ஆற்றாமையோடும் ஆழமாகவும் பார்த்தான் பொற்செழியன்.
நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டவள் தொடர்ந்தாள்.
~சில விசயங்களை அந்த விதிதான் தீர்மானம் பண்ணுது, அதை உடைக்கிற சக்தி மனுசனுக்கு கிடையவே கிடையாது, உங்கட கல்யாணம், என்னுடைய இந்த வாழ்க்கை, இது ரெண்டும் விதி போட்ட கணக்குத்தான், நீங்கள் அதைப்பற்றி இனி எதுவும் யோசிக்க வேண்டாம், உங்களுக்கு கிடைச்சிருக்கிற வாழ்க்கையை சந்தோசமா வாழுங்கோ, கணவன் மனைவி உறவு என்றது, புரிதலிலையும் விட்டுக் குடுப்பிலையும்தான் இருக்கிறது. மனைவி கொஞ்சம் அப்பிடி இப்பிடி கோபக்காரியா இருந்தால், புருசன் விட்டுக்கொடுத்து போறதில தப்பில்லை, கணவனும் மனைவியும், சூரியனும் நிலவுமா இருக்கவேணுமாம், அதனால...." அவள் சொல்ல,
'என்னுடைய வாழ்க்கை நீ நினைக்கிறமாதிரி இல்லை, அது முடிஞ்சுபோன ஒண்டு, அர்த்தமற்ற கலியாணம், அபத்தமான வாழ்க்கை' சொல்ல நினைத்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டான் பொற்செழியன். இப்போது சொன்னால் அவளை அடைவதற்காக சொல்வதாக நினைத்துவிடுவாள் என்பதால் அவன் மௌனமாகவே இருந்துவிட்டான்.
"நீங்கள் சொல்ல வர்றது புரியுது," என்றான்.
எனக்காக நீங்கள் ஒரே ஒரு உதவி செய்யவேணும், எந்தச் சந்தர்ப்பத்திலையும் இங்க வீட்டில இருக்கிற யாருக்கும், நானும் நீங்களும் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதைச் சொல்லவேண்டாம், அதைச்சொல்லி, என்னை இந்த வீட்டில இருந்து அந்நியப்படுத்திப்போடாதேங்கோ," என்றாள் கண்ணீருடன்.
காதலித்தோம் என்ற வார்த்தைகளைக் கூட அவள் கவனமாகத் தவிர்த்துவிட்ட விதம் அவனுக்கு வலியைத் தந்தது, பேசாமல் தலையை மட்டும் ஆட்டினான். அவன் கண்ணிலும் கோடுபோட்டது கண்ணீர்.
சற்றுநேரம் பேசாமல் இருந்தவன், மெல்ல, அவளைப் பார்த்தான். "எனக்காகவும் ஒண்டு செய்யமுடியுமா சுரபி" என்றான்.
"என்..ன?"
~நான் இங்க இருந்து போற வரைக்கும் வீட்டுக்கு வந்து போங்கோ, நான் வர்றதுக்கு முதல் எப்படி இருந்தீங்களோ, அப்பிடியே இந்த வீட்டில இருங்கோ| என்றான்.
அவளும் தலையை ஆட்டிச் சம்மதித்தாள்.
"சரி, போகலாமா" என்றபடி அவள் எழுந்துகொள்ள, அவளையே பார்த்தபடி தானும் எழுந்துகொண்டான் பொற்செழியன்.
சட்டென்று திரும்பி, ~உங்கட மனைவி, வரவில்லையே? ரெண்டுபெரும் சேர்ந்தே வந்திருக்கலாம்| என்றாள். மனைவி என்ற பந்தமே முடிந்து விட்டபின்னர், அவளை மனைவி என்பதே இந்தக் குடும்பத்திற்காக, குறிப்பாக அப்பாவிற்காக என அவனால் சொல்லமுடியவில்லை அவளிடம்.
"ம்ம்..." தலையை மட்டும் ஆட்டினான்.
உள்ளே வந்து அப்படியே கட்டிலில் சரிந்து விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான் பொற்செழியன். 'இந்த பூவிழிதான் எவ்வளவு தெளிவாக யோசிக்கிறாள், கொடுப்பது தான் காதல் என்ற அவளுடைய அன்றைய நினைப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது, காதல் என்றால் என்ன என்பதை பூவிழியிடம்தான் கற்றுக்கொள்ளவேணும்| அவளுடைய நிதானம், அவளுடைய அமைதி, எல்லாமே விசித்திரமாய் இருந்தது அவனுக்கு.
வார்த்தைக்கு வார்த்தை அவனோடு மல்லுக்கட்டிய சுரபி எங்கே, அவனே உலகமென்று அன்பினால் குளிப்பாட்டிய அவள் எங்கே, அவனது கண்களில் காதலைத் தரிசித்தவள் எங்கே? அத்தனைக்கும் ஒரே விடை, தானே அவளைத் தொலைத்துவிட்டேன் என்பதே என எண்ணியபடி அவளது படத்தை உற்றுப் பார்த்தான். சாப்பிட்டுவிட்டு கைகழுவச் சென்று திரும்பிய போது அவளுக்கே தெரியாமல், அவளைப் படம் எடுத்துவிட்டிருந்தான். இயல்பான அவளது தோற்றம் உலக அழகிகளை விடவும் அழகாய் ஜொலித்தது. அவனுக்கு கொடுத்து வைக்கவில்லையே, இந்த அழகியைக் கொண்டாட, இந்த அழகியை ஆராதிக்க, இந்த அழகியை சொந்தமாக்க......
நினைவுகளும் அந்த நிஜங்களும் தந்த வலியில் இரவு முழுவதும் நித்திரையின்றித் தவித்தான் பொற்செழியன்.
அதே நிலையில்தான் தவித்துக்கொண்டிருந்தாள், பூவிழியும், அவனை இழந்ததை எண்ணி அவள் எத்தனையோ தடவைகள் அழுதுவிட்டாள் எனினும், அவனைக் கண்ட நொடிமுதல் அந்த துயரம் மலைபோல அவளை வாட்டிக்கொண்டிருந்தது. அவனது கையைப் பற்றிக்கொண்டு குழந்தைபோல அழவேண்டும் போல இருந்தாலும் அதனைச் செய்யமுடியாது அவளுக்கும் அவனுக்கும் இடையில் தடுப்பு ஒன்று இருப்பது உண்மைதானே. அவன் அவளுடையவன் இல்லையே, நினைக்க நினைக்க வலி பெருகியது, தடுப்பாரின்றி அழுது கொண்டிருந்தாள். நேரம் கடந்துகொண்டிருந்தது.
தண்ணீர் தாகம் எடுக்கவே, அருகில் இருந்த, போத்தலை எடுத்துப் பார்த்தாள். வெற்றுப் போத்தலாய் இருக்கவும் அதனைக் கையில் எடுத்துக்கொண்டு கதவு திறந்து வெளியே வந்தாள். சமையலறையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு திரும்பியவள், மாடியில், அங்கும் இங்கும் ஒரு உருவம் நடந்து திரிவதைக் கண்டு, உற்றுப் பார்த்தாள். அவனேதான், தூக்கம் இன்றி தவிக்கிறானே, இப்படியே போனால் அவனுக்கு உடம்புக்கு ஏதாவது ஆகிவிடுமே என எண்ணியபடி, படிகளில் ஏறினாள்.
காலடிகளின் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தான் பொற்செழியன். சட்டென்று பிரகாசமானது அவனது முகம், அவனருகில் வந்தவள், "இப்பிடியே விடிய விடிய உலாத்திக் கொண்டிருந்தீங்கள் என்றால் வைத்தியருக்கு வைத்தியம் பாக்கவேண்டி வந்திடும்" என்றாள்.
மெல்லச் சிரித்தவன், "அங்க மட்டும் என்னவாம்?" என்றான். அவளும் பேசாமல் நின்றாள்.
சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை, முதலில் பூவிழிதான், பேசத் தொடங்கினாள், "அது சரி, நான் தான் எல்லாத்தையும் தெளிவா சொன்னனே, பிறகும் என்னத்தை யோசிச்சு மனதைக் குழப்பிறீங்கள்? நீங்கள் இங்க நிக்கிற வரைக்கும் எந்தச் சங்கடமும் இல்லாமல் மகிழ்ச்சியா நிக்கவேணும், அப்பதான், அப்பாவும் சந்தோசமா இருப்பார், இவ்வளவு காலத்துக்குப் பிறகு வந்திருக்கிறீங்கள், வந்தும் இப்பிடி இருக்கிறது நல்லதில்லை, தயவுசெய்து, இப்பிடி இருக்காதேங்கோ, என்னாலயே தாங்கமுடியேல்ல, பெத்த அப்பா, கூடப்பிறந்த சகோதரர்கள், அவையளுக்கு எப்பிடி இருக்கும்? கஷ்ரம் இல்லாத மனுசன் யார் இருக்கிறார்;கள், எல்லாருக்கும் ஒவ்வொருவித கஷ்ரம் இருக்கத்தான் செய்யும், அதுக்காக உலகமே இடிஞ்சுபோன மாதிரி இருக்கிறது நியாயமே இல்லை, நீங்கள் படிச்சவர், என்னைவிட அதிகமான அனுபவம் இருக்கு, புரிஞ்சுகொள்ளுவீங்கள் எண்டு நினைக்கிறன்" என்றபடி திரும்பி நடந்தவள், சற்று திரும்பி, "நான் நாளையில இருந்து, பத்து நாளைக்கு வேலைக்கு லீவு போட்டிருக்கிறன், எனக்காக இங்க நிக்கிறவரைக்கும் சந்தோசமா நிண்டிட்டுப் போங்கோ" என்றுவிட்டு மடமடவென நடந்துவிட்டாள்.
கண்களில் நிறைந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, அவளுக்காக ஒரு முடிவை எடுத்துக்கொண்டான் பொற்செழியன்.