பாகம் 9.
அதிகாலையின் புலர்வில் வீசிய காற்று முகத்தில் மேனி தடவி ஆசுவாசப்படுத்தியது. அமைதியின் ஆலாபனை அந்த இடத்தை நிறைத்துக்கிடந்தது. சுவரில் மோதித்திரும்பியது சுதந்திரம் பெற்ற சுவாசக்காற்று. ககனம் கருமை பூசிக்கொண்டிருந்தது.
ஊதல்காற்றின் உரசல் உடம்பைத் தொட்டுச் சென்றதால் தோலைத் தழுவிக்கிடந்த கறுப்பு முடிகள் குத்திட்டு நின்றன. இப்பவோ அப்பவோ என்று நிறைமாத கர்ப்பிணியைப்போல கருமை பூசிக்கொண்டிருந்த மேகங்கள் திரை மறைத்து விம்பம் வரைந்துகொண்டிருந்தன.
நீண்டு கிடந்த நெடுந்தரையில் மரத்தின் ஓரமாக அமர்ந்திருந்தான் பரிபூரணன். கருங்குகை ஒன்றினுள் அடைபட்டது போன்ற பிரமிப்பு அவனிடம். கனவுகளைக் காவு கொடுத்துவிட்டு, ஒன்றுக்கும் உதவாதவனாக அவனுடைய வாழ்க்கை கோலம் மாறிப்போய் ஐந்து ஆண்டுகள் ஓடிப்போயிற்று. தன் கோணல் வாழ்க்கையை திருத்திக்கொள்வதற்காக அவன் இங்கு சிறைப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றது.
வாழ்க்கை ஒரு கட்டத்தில் மாறிவிட்டபோதும் வெளிஉலகத்தைப் பார்ப்பதற்கு ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை. தாய்க்கு பாரமாக இருக்கிறோம் என்பது தெரியாமல், அங்கேயே தங்கிவிட்டான். தன்னையோ தன் எண்ணங்களையோ இடம்மாற்றிக்கொள்ள அவன் விரும்பவில்லை. இந்த உலகத்தின் பரிகசிப்பை எதிர்கொள்கிற தைரியம் அவனுக்கு இருக்கவில்லை.
அதிகாலைப்பொழுது கரைந்துபோய், வெய்யோன் வெளிச்சம் காட்டத்தொடங்கியிருந்தான்.
மணி ஒலி ஒலித்ததும் எழுந்து உள்ளே சென்றவன், தனது குவளையையும் பீங்கானையும் எடுத்துக்கொண்டு வரிசைக்கு நடையைக் கட்டினான்.
ஆரம்பத்தில் இவை எல்லாம் அவனுக்கு எவ்வளவோ சிரமமாகத்தான் இருந்தது அவனுக்கு. பல தடவை இங்கிருந்து ஓடிவிடலாம் என்றுதான் நினைத்திருக்கிறான்,
கருவில் சுமந்தவளின் கருணை முகம், கடைசியாக அன்னை சொல்லிச் சென்ற வார்த்தைகள் அவனைப் போகவிடாமல் செய்துவிட்டது. அவனுக்காக, அவனை வளர்ப்பதற்காக, அந்த மெலிந்த மேனி பட்ட கஸ்டங்கள்தான் எவ்வளவு, காதல் என்ற பெயரில் ஏமாந்துபோன காரிகை அவனுடைய அம்மா.
தன் காதலுக்கு நியாயம் செய்வதற்காக காலமெல்லாம், சிலுவை சுமந்து அவனைக் கரையேற்றத்துடித்த அந்த தாய் மனதிற்கு அவன் கொடுத்த வலிகள்தான் எத்தனை...
அத்தனை வலிகளையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு, அவனால், தாய் அடைந்த அவமானங்களும் அவலங்களும் அவனுக்கு தெரியவில்லை, அதாவது தெரிந்துகொள்ளும் நிலையில் அவன் இருக்கவில்லை. தெரிந்தபோது, அவனே அவனுக்கு கொடுத்த தண்டனைதான் இந்தச் சிறைவாசம்.
படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கி, நல்ல பெறுபேறுகள் பெற்று, பல்கலைக்கழகத்தில் உயர்ந்த கௌரவம் பெற்று, நல்லதொரு பணியிலும் அமர்ந்தவனை, எதேச்சையாகப் பற்றிக்கொண்ட போதைப் பேய், தனக்கு அடிமையாக்கி, பைத்தியக்காரனாக மாறுமளவிற்கு மாற்றியிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் இருந்த பெரும் சகடுகளும் அவனுடைய எண்ணத்திற்கு வலுச்சேர்த்துவிட, அவனை, அடக்குவது அன்னைக்கே பெரும்பாடாயிற்று. அவன் அடங்கினால்தானே.
அவனுடைய அவமானம் ஒருபுறம் என்றாலும் தாயின் மீதிருந்த கோபம்தான் அவனை, இன்னும் இன்னும் வெறிகொள்ளவைத்தது.
நான்கு வருடங்கள், அவன் ஆடிய கொடிய ஆட்டத்தை தாங்கி, தன்னை உருக்கிக்கொண்ட தாய், இந்த உலகத்தைவிட்டே போகும் நிலை ஏற்பட்டபோதுதான், அவனுடைய புத்திக்கு தன் தவறு புரிந்தது.
பாவம், காதலித்து வாக்கு கொடுத்தவர், வாரக்கணக்கில் வாழ்ந்துவிட்டுப்போக, அந்த வாழ்க்கையின் பலனாக உதித்த அவனோடு, திரும்பி வராத தன் கணவனுக்காக, வாழ் நாளெல்லாம் காத்திருந்தவள் அவனுடைய தாய்.
~அவருக்கு ஏதோ நிலைமை சரியில்லை, இல்லையென்றால் வந்திருப்பார்...|இதைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்னார் அவனுடைய அன்னை.
தாயின் மௌனம்தான், தன்னுடைய அவமானங்களுக்கு காரணம் என்ற அவனுடைய எண்ணம் சிறிது சிறிதாக இருந்து, அவனுடைய மனதை ஒரு கரும் பந்துபோல ஆக்கிரமித்து, அவனுடைய வாழ்க்கையையும் சேர்த்தே புரட்டிப்போட்டுவிட்டிருந்தது. இதையே சாக்காக வைத்து அவன் அதிகம் போதைக்குள் புரளத் தொடங்கினான். வழிதவறிவிட்ட தன் மகவை, வழிப்படுத்த தெரியாது துடித்து தவித்தது அந்த பேதை தாயுள்ளம்.
பெருமூச்சு ஒன்றுடன் வரிசையில், தன்னுடைய முறை வந்ததும் பாணும் பருப்பு கறியும், தேநீரும் வாங்கிக்கொண்டவன், அப்படியே தன்னுடைய அறைக்குள் நுழைந்து சாப்பாட்டை மூடி வைத்துவிட்டு, தேநீரை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, அதே மரத்தடியில் அமர்ந்துகொண்டான்.
திடீரென அறிவிப்பு வழங்கப்பட்டது. ~அரைமணித்தியாலத்தில் உணவு வேலைகளை முடித்துக்கொண்டு அனைவரும் ஒன்றுகூடல் முற்றத்திற்கு வரவேண்டும்| என.
யாரோ, தங்களைச் சந்திக்க வரப்போகிறார்கள் என்பது புரிய, கப்பை கழுவி வைத்துவிட்டு, பாணை எடுத்தான். ஏனோ சாப்பிடப்பிடிக்கவில்லை. அப்படியே மூடி வைத்துவிட்டு மிண்டும் மரத்தடிக்கு வந்துவிட்டான்.
இந்த மாதம், அன்னை இன்னும் அவனைப்பார்க்க வரவில்லை, தாயைக்காணவேண்டும் என்ற தவிப்பு அவனுள்ளே மெல்ல வியாபி;த்தது. அலுவலகத்தில் தாயின் இலக்கத்தை கொடுத்து, கதைக்கலாம்தான், அதுவும் ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை.
~பாவம் அம்மா...வரும்போதே வரட்டும|; என நினைத்தான்.
மனம் ஒருவித படபடப்பை உணர்த்தியது. இங்கு வந்து, அவன் கற்றுக்கொண்டவற்றில், முக்கியமானது யோகாசம். அடுத்தது, இறைதியானம்.
இவற்றின் மகிமையோ என்னவோ சில விடயங்களை அவனுடைய உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்திவிடுவதுண்டு.
அனைவரையும் ஒன்றுகூடுமாறு வந்த அடுத்த அழைப்பிற்கு செவிகொடுத்து, மற்றவர்களுடன் தானும் புறப்பட்டான்.
அந்த போதை ஒழிப்பு மறுவாழ்வு மையமானது, தனியார் ஒருவரின் நல்லெண்ணத்தில் உதயமாகி நடைபெற்று வருவதால், அங்கிருக்கும் அனைவரும் சற்று வசதியான, அல்லது படித்தவர்கள்தான்.
அதனால், பெரிய அளவில், கொடுமைகள் இல்லை, மாதாந்தம் கட்டணம் செலுத்தவேண்டும் என்கிற விபரம் அவனுக்கு தெரியாததினால் அதைப்பற்றி அவன் அலட்டிக்கொள்வதுமில்லை.
அவனுடைய தாயும் எதைப்பற்றியும் அவனிடம் சொல்வதுமில்லை.
வாழ்க்கை போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்தான், பரிபூரணன்.
வரிசையாக அந்த மண்டபத்தில் அமர்ந்திருக்க, வழமைபோல கன்னியாஸ்திரிகள் தான் வருகின்றனர் போல என இவர்கள் எதிர்பார்த்திருக்க, மென் வெண்மை நிறத்தில் சேலை அணிந்த தேவதைகள் நான்குபேர் அங்கு தரிசனம் கொடுத்தனர்.
இளம் வயதுதான் இருக்கும் அவர்கள் நால்வருக்கும். அவர்களைப் பார்த்தபோது பரிபூரணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கையை தாங்கள் பார்த்த விதமும் அவர்கள் பார்த்த விதமும் எதிரெதிர் துருவங்களாக இருப்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்த நான்கு முகங்களிலும் அவனுக்கு அன்னை தெரசாதான் தெரிந்தார். இளமை வாழ்வின் பிரமிப்புகளை தள்ளிவைத்துவிட்டு, இவர்கள், எடுத்துக்கொண்ட சேவை, அவர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்த, அங்கிருந்த அனைவரும் அமைதியாகவே இருந்தனர்.
சிற்றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்ட பின்னர், தனித்தனியேதான் ஒவ்வொருவருடனும் கதைக்கவேண்டும் என்கிற அவர்களின் வேண்டுகோளின்படி, அனைவரும் கலைந்து தத்தமது அறைகளை அடைந்தனர்.
நீண்ட விறாந்தையில் கடைசி அறை அவனுடையது, பணி முடியும் நேரத்தில் அவனுடைய அறைவாயிலில், வந்தமர்ந்த அந்தப் பெண்ணின் அமைதியான தோற்றம் பார்த்த உடனே இவனுக்குள் ஏதோ ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியிருந்தது. தாய்மை உணர்வு ததும்பிய அவள், இவனுடைய அகத்தில் இடம்பிடித்தாள்.
இவனுடைய பெயர், ஊர், பெற்றோர் பெயர் என ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டிருக்க, தந்தை பற்றிய கேள்வியின் போது, முகத்தில் ஏற்பட்ட கடுமையை மறைக்க, மறுபுறம் திரும்பி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ஆரம்ப நாட்களின் பரிபூரணனாக இருந்தால், இன்று கதையே வேறுமாதிரி இருந்திருக்கும். இப்போது இருப்பவன் பக்குவப்பட்ட பரிபூரணன். அதனால் அமைதி காத்தான்.
~சொல்ல விருப்பம் இல்லை என்றால் சொல்லவேண்டாம்| அருகிருந்த நங்கை சொல்லவும் இவனும் சிறிதுநேரம் பேசாமல் இருந்தான். அந்தப் பெண்ணின் வாயிலிருந்து வெளிப்பட்ட அக்கறை இவனை வாய்திறக்க வைத்தது.
சொல்லத்தொடங்கினான். எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டான். அவள் விழிவிரித்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
அப்போது பக்கத்து தளத்தின் உரையாடலை முடித்துக்கொண்டு, வந்து இவனுடைய தளத்தைக்கடந்த அநதப் பெண்ணின் பார்வை சற்றே திரும்பி, இவனை ஒருமுறை பார்த்துவிட்டு, நகர்ந்தது. மின்னலாய் தொட்டு மறைந்த அந்தப் பார்வையில் ஒருகணம் ஈர்க்கப்பட்டான் பரிபூரணன்.
இளமைக் காலங்களை போதைக்குள் தொலைத்துவிட்டு, வாழ்வின் ருசி தெரியாமல் வாழ்ந்தவனுக்குள், அழகான பூக்கோலம் ஒன்று கண்சிமிட்டியது.
தன்னை மறைத்து, பக்கத்தில் இருந்த பெண்ணோடு உரையாடிக் கொண்டிருந்தான்.
பல விடயங்களை அவனோடு பகிர்ந்துகொண்டு, தாயாய், தோழியாய், உரையாடி முடித்துவிட்டு நிமிர்ந்தவள்,
~என் பெயரை நீங்கள் கேட்கவே இல்லையே| என்றாள்.
~நீங்கள் சொல்லவில்லை,....|அவன் பதில் உரைக்க,
இவள் சிரித்துவிட்டு, ~பூவிழி| என்றாள்.
~நல்ல பெயர்,..| அவளுடைய விழி பார்த்துச் சொன்னவனின் விழிகளில் தெளிந்த அன்பு பரவிக்கிடந்ததை அவளும் கண்டுகொண்டாள்.
அவளைவிட சில வருடங்கள் மூத்தவனாக இருக்கலாம்....எண்ணமிட்டது மனது. அவளுக்குள் பல்வேறு சிந்தனைகள் மாறிமாறி இடம்பெயர்ந்தன. இப்படி ஒரு சூழலில் இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று அவள் நினைக்கவே இல்லை,
பரிபூரணனோடு கதைத்ததில் இருந்து அவன், சிறந்த அறிவாளி என்பது பூவிழிக்குப் புரிந்தது. அவனுடைய வாழ்க்கை, தனக்கு மிகப்பெரிய கடமை என்பதை எண்ணியவளுக்கு, மனம் இருப்பு கொள்ளவில்லை.
~உங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி, வெளியிலை உங்களுக்கு அழகான ஒரு வாழ்க்கை காத்திருக்கிறது, இந்த தயக்கத்திலை இருந்து நீங்கள் வெளியே வரவேண்டும்| என்றவள், ~திரும்பவும் வருவேன்,| என்றுவிட்டு, எழுந்துகொள்ள,
இருகரம் கூப்பி விடைகொடுத்ததான்.
அப்போது தன் பணி முடித்து அவ்விடம் வந்தாள் அவனை வெட்டிச்சென்ற மின்னல் புறா.
~பருதி..எல்லாம் சரியா, போகலாமா?| என்ற பூவிழியிடம் அவள் உரைத்த பதில் இவனுக்கு மனதில் பதியவில்லை...
~பெயர் பருதியா.... | இது மட்டும் தான் சிந்தனையில் நின்றது.
~டேய் ... தராதரம் தெரியாமல்...| மனச்சாட்டி மல்லுகட்டியது.
அவள் நேசிக்கவேண்டும் என்றெல்லாம் இல்லை..நான் நேசிக்கிறேன்...என்னுடைய முதல் நேசம்...அவ்வளவுதான் மனச்சாட்சிக்கு மறுமொழி கூறிவிட்டு, பருதியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் கவனிக்கவே இல்லை. பூவிழியும் விடைபெற்றுவிட, இருவரும் நடந்தனர்.
என்ன நினைத்தாளோ, சடாரென்று திரும்பிய பருதி, இவனை நோக்கி வேக நடையுடன் வர, இவனுக்குள் வியர்த்து வடிந்தது.
~கண்டபடி திட்டப்போகிறாளா?| இதயம், இரும்புத்தாளம் போட, அருகில் வந்தவள்,
கையிலிருந்த புத்தகத்தை அவனிடம் நீட்டி, ~இந்தாங்கோ..இதை வாசியுங்கோ...அடுத்த தடவை வருகிற போது வாங்கிக்கொள்கிறேன|; என்றுவிட்டு திரும்பி நடந்துவிட்டாள்.
மித்ராபரணி எழுதிய ~பார்த்திபன் கனா| அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது அவனுடைய கைகளில் இருந்து.
ஓடிச்சென்று தோழியோடு இணைந்துகொண்ட இவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பரிபூரணன்.