மகுடம் சூட்டும் காதல்
New member
அத்தியாயம் - 1
விடியற்காலை ஐந்து மணி.. திருச்சி மாவட்டக் கழக அலுவலகத்தின் போர்டிகோவில் கருப்பு நிற கார் வந்து நின்றது.
காரில் இருந்து இறங்கினான் கர்ணன். ஆறடி உயரம், மாநிறம், முறுக்கிய மீசை, கைகளில் அண்ணன் கட்சியின் கொடி பச்சை குத்தப்பட்ட தழும்பு.
அண்ணன் விஸ்வநாதனின் வலது கை இவன் தான்.
போனில் இருந்த அவனின் அண்ணன் "டேய் கர்ணா.. அந்த மந்திரி காசு விஷயத்தை இன்னைக்குள்ள முடிச்சாகணும்.. இல்லைன்னா என் தலை உருளும்.." என்று கத்தி விட்டு வைத்தார்.
கர்ணனுக்கு அண்ணன் தான் உலகம். அவர் சொன்னால் உயிரையும் கொடுப்பான்.. எதையும் யோசிக்காமல் அடுத்தவனின் உயிரையும் எடுப்பான்.
அலுவலகத்தின் உள்ளே நுழைந்த கர்ணனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே கட்சியின் மாநிலத் தலைவரும், கர்ணனின் அண்ணனான விஸ்வநாதனின் அரசியல் தலைவரின் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் விருசாலி.
புடவை அவளின் உடலை தழுவி இருக்க, நெற்றியில் சிறிய பொட்டு, கையில் ஒரு லேப்டாப்.
அமைதியாக இருந்தாலும் அவளது கண்களில் ஒரு ராட்சசத்தனம் தெரிந்தது.
"ஏய் நீ எதுக்கு இங்க வந்துருக்க.? வந்ததும் இல்லாம தலைவரோட சீட்ல உக்காந்துருக்க.? முதல்ல எந்திரி.." என்று கர்ணன் கத்த, சாவகாசமாக மடிக்கணினியை மூடி எழுந்தவள் அவனிடம் வந்தாள்.
"இந்த சீட் எனக்கானது தான் மிஸ்டர்.கர்ணன்.. உன் அண்ணன் நினைக்கற எதுவும் நடக்காதுனு சொல்லிரு.. என் பெரியப்பாவை ஏமாத்தி என் பெரியப்பாவோட கட்சியையே விலைக்கு வாங்க நினைக்கற உன் அண்ணனை நான் சும்மா விடுவேனு நினைக்கறீயா.?" என்று கேட்டு அவனை கூர்பார்வை பார்த்தாள்.
அவனும் அசரவில்லை. அண்ணன் செய்யும் தவறுகள் தெரிந்தாலும் அவரை விட்டு குடுக்க மாட்டான். அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தான் செய்வான் அதுவும் அண்ணனுக்கு தெரியாமல்.
இவன் நல்லவன் தான்.. ஆனால் என்ன ஒன்று சேர்ந்த இடம் சரியில்லை. இருந்தும் அவனின் குணமும் அவர்களுடன் இணையவில்லை.
"என்ன மிஸ்டர் பேச்சை காணோம்.? இருங்க உங்களுக்கு ஒரு வீடியோ காட்டறேன்.." என்ற விருசாலி லேப்டாப்பை ஆன் செய்து ஏதோ செய்தாள்.
பின்பு லேப்டப்பை திருப்பி அவனிடம் முன்பு வைத்தாள். அதில் ஒரு வீடியோ ஓடியது. விஸ்வநாதன் எதிர்கட்சியினருடன் சேர்ந்து விருசாலியின் பெரியப்பாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டும் ஆடியோவும், வீடியோவும் மிகத் தெளிவாக இருந்தது.
இதை கர்ணன் எதிர்பார்க்கவில்லை. அவனின் முகம் சற்று அதிர்ச்சியைக் காட்டியது. சொந்தக் கட்சி தலைவரையே அண்ணன் ஏன் கொலை செய்ய நினைக்க வேண்டும்.? என்ற கேள்வி தான் அவனின் மண்டையை குடைந்தது.
சற்றும் அதிராமல் "இது எப்படி உனக்கு கிடைச்சுச்சு.?" என்று கேட்க, "அதைய நான் ஏன் மிஸ்டர் உங்ககிட்ட சொல்லணும்.?" என்று திமிராகவே மறுமொழி உரைத்தாள்.
"இது பொய்யா இருந்தா..?"
"இது உண்மைனு உனக்கே தெரியும் மிஸ்டர்.. உன் அண்ணனோட அசல் முகமே இது தானு உனக்கு தெரியாதா என்ன.? இந்த பென்டிரைவ் இப்போ என் பெரியப்பா கைக்கு போச்சு உன் அண்ணன் ஜெயிலுக்கு போவான்.. அதுமட்டுமில்ல என் பெரியப்பாவுக்கு தெரியாம நீயும் உன் அண்ணனுக்காக செஞ்ச வேலை எல்லாம் தெரிய வரும்.."
அவள் கூறுவதை தாடையை நீவியபடி கேட்டு நின்றவன் "இந்த பென்டிரைவ் என்கிட்ட குடு.." என்றிட, "ஓஓஓ தாராளமா எடுத்துக்கோ" என்றாள் இவளும் உடனே.
அவளை நம்ப முடியாமல் "உனக்கு என்ன வேணும்.?" என்று கேட்டவனின் அருகில் நெருங்கி அவனின் நெஞ்சில் கையை வைத்து "நீ" என்று கூற, அவளின் கையை இறுக்கி பிடித்த ஆடவன் "நீ நினைக்கறது எப்பவும் நடக்காது.." என்றான் கோவத்துடன்.
"ஓஓஓ நடக்காததை நடத்தி காட்டறதுல தான் எனக்கு த்ரிலு.." என்றவளிடம் "ஒரு நாள் ரூம் போட்டா போதுமா.?" என்று கேட்டான் பாருங்களேன்..
அவளின் முகம் சிவந்தாலும் சாதாரணமாக அவளும்"பத்தாதே.. ஒரு ஆறு மாசம் போட்டுக்கலாமா.?" என்று கேட்க, "ஏய்ய்ய்ய்ய்" என்று சீறினான் அவன்.
நீட்டிய அவனின் விரல்களை பற்றியவள் "ரொம்ப நடிக்காதடா.. என்னமோ பெரிய உத்தமன் மாதிரி.." என்றவளுக்கு தான் தெரியுமே அவனைப் பற்றி.
"அரக்கி அந்த பென்டிரைவ் குடு.. இல்லைனா சாவடிச்சுருவேன்.." என்று அவன் மிரட்ட, "முடியாது.. நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லு.. அப்ப தான் அந்த பென்டிரைவ் குடுப்பேன்.. இல்லைனா அதைய என் பெரியப்பாகிட்ட தரவும் ரெடியா இருக்கேன்.." என்றாள் இவளும் பதிலடியாக.
"இப்படி மிரட்டுனா நான் பயந்துருவேனா என்ன?" என்று கர்ணன் பல்லைக் கடித்து மேஜையை ஓங்கி அடித்தான்.
அவன் கண்கள் சிவந்து, நரம்புகள் புடைத்தன. தன் அண்ணனை ஒருத்தி கொலைகாரன் என்று சொல்வதையும், அதை வைத்துத் தன்னை மிரட்டுவதையும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
விருசாலி பயந்து பின்வாங்கவில்லை. அவளுடைய விழிகளில் தீர்க்கமும், அசைக்க முடியாத தைரியமும் இருந்தது. அவள் லேப்டாப்பை லேசாக மூடிவிட்டு, நேராக அவனுடைய கண்களைப் பார்த்தாள்.
"நீ பயப்படுவீயா மாட்டியாங்கறது எல்லாம் எனக்கு முக்கியமில்லை கர்ணா.. இந்த வீடியோ நிஜம்.. உங்க அண்ணனோட நிஜ முகம் இது தான்.. உனக்கு அவன் தெய்வமா இருக்கலாம்.. ஆனா இந்த நாட்டுக்கும் என் குடும்பத்துக்கும் அவன் ஒரு துரோகி.. கொலைகாரன்.. இந்த வீடியோ மட்டும் என் பெரியப்பாகிட்ட போச்சுனா அடுத்த அஞ்சு நிமிஷத்துல உங்க அண்ணன் அரசியல் வாழ்க்கை காலி.. போலீஸ் என்கவுண்டர் பண்ணினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை.." என்றாள் சற்றும் குரல் நடுக்கம் இல்லாமல்.
கர்ணன் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்றான். அவளது கழுத்தைப் பிடித்து நெரிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவளுக்குப் பின்னால் இருக்கும் அந்த வீடியோ ஆதாரம் அவனைக் கட்டிப்போட்டது.
அண்ணனின் உயிர், அவனது விசுவாசம், கௌரவம் எல்லாமே இப்போது இந்த ஒற்றை வீடியோவில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தன் அண்ணன் அப்படி இப்படி என்று அவனுக்குத் தெரியும்.. ஆனாலும் இந்தளவிற்கு இறங்குவார் என்று அவனும் எதிர்பார்த்து இருக்கவில்லை தான்..
இருந்தும் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அப்படி காட்டிக் கொண்டால் இதையும் வைத்து அவள் காய் நகர்த்துவாள் என்பதை இவன் அறியாததா என்ன.?
"விருசா நீ என்னைக் காதலிக்கறேனு நினைச்சேன்டி.. ஆனா இவ்வளவு பெரிய தலைவலியா இருப்பேனு நான் நினைக்கல.. அண்ணன் உன்னைற வேணாம்னு சொன்னதுல எந்தத் தப்பும் இல்லை..
உன்னோட இந்த புத்தியை அவர் அப்பவே கணிச்சுருக்காரு.. பதவி ஆசைக்காகவும், பழிவாங்கவும் என் காதலை வச்சு விளையாடுறீயா.? இந்த சீட்டுல உங்க குடும்பம் மட்டும் உட்கார இது என் உங்க குடும்ப அரசியலா.?" என்று கர்ணன் கோபமும் வேதனையும் கலந்த குரலில் கத்தினான்.
தன் உயிரானவனிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகள் அவளது இதயத்தை ஈட்டியாய் குத்தியது. ஆனால் தன் பெரியப்பாவின் உயிரைக் காப்பாற்றவும், விஸ்வநாதனின் பிடியில் இருந்து தன்னவனை மீட்கவும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. இவன் அண்ணனின் கையில் ஆட்சியை குடுத்து விட்டால் அவ்வளவுதான். இப்போது அதிகாரம் இல்லாமலே அவரின் ஆட்டம் அதிகம். இதில் ஆட்சியில் அமர்ந்து விட்டால் இந்த நாட்டு மக்கள் தான் பாவம்.
அவள் தன் முகத்தில் ஒரு கடினமான முக மூடியைப் பொருத்திக் கொண்டு "ஆமாடா.. நான் பதவி ஆசை புடிச்சவளாவே இருந்துட்டுப் போறேன்.. இப்போ உனக்கு ஒரே வழி தான்.. என்னைய கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லைனா நாளைக்குக் காலையில உங்க அண்ணனோட சடலத்துக்கு மாலை போடத் ரெடியா இருக்கணும்.. முடிவு உன் கைல தான்.." என்று சவால் விட்டாள்.
கர்ணன் செய்வதறியாது திகைத்தான். அண்ணன் சொன்ன கட்டளையை மீறி இவளைத் திருமணம் செய்தால், அண்ணனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஆனால் திருமணம் செய்ய மறுத்தால் அண்ணனின் உயிரே போய்விடும். வேறு வழியின்றி தன் சுயமரியாதையையும் அண்ணன் மீதான விசுவாசத்தையும் அடகு வைக்கத் துணிந்தான்.
"சரிடி.. கல்யாணம் தானே.. பண்ணிக்கறேன்.. ஆனா ஒன்னு நினைப்பு வச்சுக்கோ என் உடம்பு மட்டும் தான் உனக்குக் கிடைக்கும்.. என் மனசுல உன் மீதான வெறுப்பைத் தவிர வேற எதுவுமே இருக்காது..
இந்த நிமிஷத்துல இருந்து நீ என் பொண்டாட்டி இல்லை.. என் அண்ணனை அழிக்க வந்த எதிரி.. உன்னைய நிம்மதியா இருக்க விட மாட்டேன்.." என்று ஆக்ரோஷமாகக் கூறியவன் "வா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்" என்று அவளது கையைப் பற்றி இழுத்தான்.
"ரிஜிஸ்டர் ஆபீஸா.? அங்க எதுக்கு போகணும்.?" என்று கேட்டு விருசாலி உதட்டோரம் ஒரு ஏளனப் புன்னகையை
உதிர்த்தாள்.
"பின்ன என்னடி பண்ணச் சொல்ற.?" என்று கர்ணனும் பல்லைக் கடிக்க, "உன்னையும் என்னையும் பத்தி ஊருக்கே தெரியும்.. நாம ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க அண்ணன் விஸ்வநாதன் என்னைய ஏதோ ஒரு வழில பொய் கேஸ் போட்டு உள்ள தள்ள வைப்பாங்க.. இதைய வெச்சே உன்னையும் என்னையும் பிரிப்பாங்க.. நீயும் உன் அண்ணன் சொல்லே மந்திரம்னு உன் அண்ணன் சொல்ற எல்லாத்துக்கும் தலையாடிட்டு இருப்ப..
அதனால இந்த கல்யாணம் ரகசியமா நடக்காது.. ஊரைக் கூட்டி, பத்திரிகையாளர்களைக் கூட்டி, எல்லாரும் முன்னாடியும் பிரம்மாண்டமா தான் நடக்கும்.." என்றாள் விருசாலி தீர்க்கமாக.
கர்ணன் அதிர்ச்சியில் உறைந்து "ஏய் என்ன விளையாடுறீயா.? எங்க அண்ணன் என்னைய கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொல்லியிருக்காரு.
நான் எப்படி அவரை மீறி ஊரைக் கூட்டி மேடை ஏறுவேன்.? அதுவும் உங்க பெரியப்பா கட்சித் தலைவர்.. இவ்வளவு பெரிய அரசியல் கல்யாணத்தை அண்ணன் சம்மதம் இல்லாம நான் எப்படி..?" என்று கேட்டு நிறுத்தினான்.
அவன் நினைத்தது இப்போதைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து அதை யாரும் அறியாமல் வைத்துக் கொண்டு இந்த பிரச்சனையை முடித்து விடலாம் என்று.. ஆனால் விருசாலியோ வேறொரு யோசனையில் இருக்கிறாளே.? அவளின் அதிரடி முடிவு அனைத்தும் இவனை அதிர தான் வைக்கிறது.
"அதைய நான் பார்த்துக்கறேன் கர்ணா.. நீயா போய் உங்க அண்ணன் கிட்ட சம்மதம் வாங்கப் போறதில்லை.. உங்க அண்ணனே முன்னாடி நின்னு, சிரிச்ச முகத்தோட நம்ம கல்யாணத்தை நடத்தி வைக்கப் போறாங்க.." என்ற விருசாலி தன் மொபைலை எடுத்து விஸ்வநாதனின் எண்களை அழுத்தினாள்.
மறுமுனையில் விஸ்வநாதன் போனை எடுக்க, "ஹலோ" என்ற குரலிலே அவள் தான் என்பதை உணர்ந்து "நீ எதுக்கு எனக்குப் போன் பண்ற.? என் தம்பி உன்னைய கல்யாணம் பண்ணிக்க மாட்டான்.. அதுக்கு நான் சம்மதிக்கவும் மாட்டேன்.." என்றார் முடிவாக.
"கொஞ்சம் மெதுவா பேசுங்க அண்ணே.. உங்க தம்பி கர்ணன் இப்போ என்கூடத் தான் இருக்கான்.."
"ஏய் என்ன சொல்ற.? அவன் அப்படி பண்ண மாட்டான்.. என் பேச்சையும் மீற மாட்டான்.."
"உண்மை தான்.. அவனை என் வழிக்கு கொண்டு வர எனக்கு தெரியாதா என்ன.?"
"ஏய்ய்ய்ய்ய்"
"அவன்கிட்ட ஒரு வீடியோ காமிச்சேன்.. அதோட அவன் அடங்கி கல்யாணத்துக்கும் சம்மதம் சொல்லிட்டான்.."
"இந்த மிரட்டலுக்கு எல்லாம் அவன் பயப்பட மாட்டான்.."
"அட இருங்க.. உங்களுக்கும் அந்த வீடியோவை அனுப்பறேன்.." என்று எள்ளல் குரலில் கூறியவள் அந்த வீடியோவை அவருக்கும் அனுப்பி வைத்தாள்.
அந்தப் பக்கம் எந்த பதிலும் வராமல் இருந்ததில் "நேரா உங்க தலைவர் கிட்ட இந்த வீடியோவை குடுத்து இன்னைக்கு சாயங்காலமே டிவில ப்ளாஷ் நியூஸ் ஓட விடவா.? எதிர்கட்சியோட சேர்ந்து நீங்க தீட்டுன அந்த கொலைத் திட்டம்'ரொம்ப தெளிவா இருக்குண்ணே.." என்றதில் மறுமுனையில் விஸ்வநாதனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தொண்டை வறண்டது.
"ஏய் என்ன மிரட்டுறீயா.? என்ன வேணும் உனக்கு.?" என்று பதறினார்.
"எனக்கு உங்க தம்பி கர்ணன் தான் வேணும்.. வேற என்ன உங்ககிட்ட கேட்க போறேன்.? வர்ற சுபமுகூர்த்த நாள்ல, நீங்க முன்னாடி நின்னு ஊரைக் கூட்டி எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும்..
பத்திரிகை அடிச்சு எல்லா அரசியல் தலைவர்களையும் நீங்களே கூப்பிடணும்.. அப்போதான் இந்த வீடியோ பென்டிரைவ் பத்திரமா உங்க கைக்கு வரும்.. இல்லைனா நீங்க ஜெயிலுக்குப் போக ரெடியா இருந்துக்கங்க.." என்று கூறி அதோடு போனை கட் செய்தாள் விருசாலி.
போனை வைத்ததும் விஸ்வநாதரின் கைகள் நடுங்கத் தொடங்கின. ஏசி அறையிலும் அவருக்கு உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது. நாற்காலியில் அப்படியே சரிந்தார்.
தன் வாழ்நாள் அரசியல் வாழ்க்கையும் அதிகாரக் கனவும் ஒரு நொடியில் சரிந்து விழுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வீடியோ மட்டும் வெளியே தெரிந்தால் அடுத்த நிமிடம் கட்சியின் தலைவர் அவனைக் கதறக் கதற ஒழித்துக் கட்டி விடுவார். அதன் பிறகு அவருக்கு அரசியல் வாழ்வே இல்லாமல் போய் விடும்.
'சிறுக்கி என்னைய வச்சே எனக்கு ஆப்பு வச்சுட்டாளே..' என்று பற்களை நறநறவெனக் கடித்தார் விஸ்வநாதன். அவளுக்குப் பதிலடி கொடுக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், இப்போது அவளது கையில் இருக்கும் ஆதாரம் அவரது கைகளைக் கட்டிப் போட்டிருந்தது.
மறு யோசனைக்கு இடமின்றி, உடனே தன் தம்பி கர்ணனின் எண்ணிற்கு அழைத்தார். விருசாலியின் மிரட்டலைக் கண்டு கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்த கர்ணனின் மொபைல் அதிர்ந்தது.
திரையில் 'அண்ணன்' என்று வந்ததும், அவசரமாக எடுத்து காதில் வைத்தான்.
"அண்ணே.. இந்த விருசாலி ஏதோ பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டு இருக்காண்ணே.. ஏதோ மார்பிங் பண்ணுன பொய்யான வீடியோவை வச்சுகிட்டு உங்களை மிரட்டுறா.. நீங்க பயப்படாதீங்கண்ணே.. நான் இப்போவே இவளை..." என்று கர்ணன் ஆவேசமாக பேச,
"கர்ணா நிறுத்து" என்ற விஸ்வநாதனின் குரல் வழக்கத்திற்கு மாறாகக் கரகரப்பாகவும், பதற்றமாகவும் ஒலித்தது.
அண்ணனின் குரலில் இருந்த நடுக்கத்தைக் கேட்டு கர்ணன் அப்படியே பேச்சிழந்து நின்றான். அவன் வாழ்க்கையில் அண்ணன் இப்படிப் பதறிப் பேசி அவன் கேட்டதே இல்லை.
"அண்ணே என்னாச்சுண்ணே.?" என்று பதறினான் கர்ணன்.
"அவ சொல்றபடி கேட்டுடு கர்ணா.. சூழ்நிலை இப்போ நமக்குச் சாதகமா இல்லை.. அந்த வீடியோ அது இப்போதைக்கு வெளிய வரக்கூடாது.. அதனால விருசாலி சொன்ன படியே இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிச்சு தான் ஆகணும்" என்றார் விஸ்வநாதன் அடிவயிற்றிலிருந்து வந்த பலவீனமான குரலில்.
'அண்ணனே தன்னை கல்யாணம் செய்து கொள்ள சொல்கிறாரா.?' என்ற அதிர்ச்சியில் "அண்ணே என்ன பேசுறீங்க.? நீங்கதானே அவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுனு இன்னைக்குக் காலையில கூட எனக்குக் கட்டளையிட்டீங்க.? இப்போ மட்டும் ஏன்.?" என்று திணறினான்.
"அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்டா கர்ணா.. நான் சொல்றதைக் கேளு.. நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலன்னா என் அரசியல் வாழ்க்கை மட்டுமில்ல என் உயிரே போயிடும்..
நீ என் தம்பியா இருந்தா... எனக்கு விசுவாசமா இருந்தா... மறுவார்த்தை பேசாம அவ கழுத்துல தாலி கட்டச் சம்மதம்னு அவகிட்டயே சொல்லு.. மத்ததை நான் பார்த்துக்கறேன்.." என்று விஸ்வநாதன் அதிகாரமும் ஆத்திரமும் கலந்த குரலில் கூறி விட்டு போனை சட்டென துண்டித்தார்.
கர்ணன் கையில் இருந்த மொபைலை மெதுவாகக் கீழே இறக்கினான். அவனது கண்கள் முழுக்க அதிர்ச்சியும் ஏமாற்றமும் அப்பட்டமாகத் தெரிந்தன.
தன் அண்ணன் தவறு செய்திருப்பாரோ.? என்ற லேசான சந்தேகம் அவனது இதயத்தின் மூலையில் முதன் முறையாக முளைத்ததும் உண்மையென்று நிரூபணமாகிட, ஆனாலும் அவனது அண்ணன் மீதான பாசம் 'விருசாலி என் அண்ணனைப் பகடைக்காயா வச்சு, என்னைய மிரட்டி, எங்க குடும்ப மானத்தை ஏலம் போடப் பார்க்குறா..' என்ற எண்ணம் எழுந்து அவளைத் தீவிரமாக வெறுக்கத் தொடங்கியது.
"சதி பண்ணி ஜெயிச்சிட்டதா நினைச்சு சந்தோஷப்படாத விருசா.. என் அண்ணன் சொல்றாருனு தான் நான் உனக்கு தாலி கட்ட சம்மதிக்கறேன்.. ஆனா ஒன்னு இந்த நிமிஷத்துல இருந்து நீ என் விருசா இல்ல.. என் அண்ணனை அழிக்க வந்த பரம எதிரி..
ஊரைக் கூட்டி உன் கழுத்துல நான் தாலி கட்டுவேன் தான்.. ஆனா அந்தத் தாலி உனக்குக் கொடுக்கற பாதுகாப்பு வெறும் வெளி உலகத்துக்கு மட்டும் தான்.. வீட்டுக்குள்ள நீ அனுபவிக்க போற நரகத்துக்கு நீ மட்டும் தான் பொறுப்பு!" என்று கத்தினான் கர்ணன்.
விருசாலியின் இதயம் இந்த வார்த்தைகளால் சுக்குநூறாக உடைந்தது. ஆனாலும் தன் பெரியப்பாவின் உயிரைக் காப்பாற்றி ஆ
ட்சியை நல்லவனின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததில் வலியைத் தாங்கிக் கொண்டு அவளது உதடுகளும் மெலிதாக புன்னகையை மலர விட்டது.
தொடரும்..