மகுடம் சூட்டும் காதல்
New member
அத்தியாயம் - 10
தொலைக்காட்சியில் செய்தியை ஓ பார்த்து விட்டு, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற விருசாலி நேராக எஸ்பி ஆபீஸுக்குப் புயலெனக் கிளம்பினாள். இப்படியொரு முடிவை கர்ணன் எடுப்பான் என்று இவள் கனவிலும் நினைக்கவில்லை. வேறு ஏதோ பிரச்சனை தான் செய்வான் என்று நினைத்தாள்.
காவல் அறையின் இரும்பு கம்பிகளுக்குப் பின்னால் கர்ணன் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனது சட்டை கசங்கியிருந்தது. அவனது நிமிர்ந்த தோரணை அப்படியே இருந்தது.
தன் அண்ணன் விஸ்வநாதனின் கௌரவத்தைக் காப்பாற்றிவிட்டோம் என்ற ஒரு வித அமைதி அவனது முகத்தில் தெரிந்தது.
அப்போது அந்தப் பூட்டப்பட்ட அறையின் கனமான இரும்புக் கதவை அதிரடியாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் விருசாலி.
இவளைக் கண்டதும் எஸ்பி எழுந்து நிற்க, அவரை கண்டு கொள்ளாமல் கர்ணனை நோக்கி சென்றாள். அவளது கண்கள் கோவத்திலும் ஆத்திரத்திலும் சிவந்திருந்தன.
புயலென நடந்து வந்தவள் கர்ணன் அமர்ந்திருந்த இரும்பு கம்பிகளைத் தன் இரண்டு கைகளாலும் ஓங்கி தட்டினாள். அந்தச் சத்தம் அந்த லாக்அப் அறை முழுக்க
எதிரொலித்தது.
அதை விட "கர்ணா.. அறிவு கெட்டுப் போச்சா உனக்கு.?" என்ற விருசாலியின் குரல் தான் அங்கு எதிரொலித்து அடங்கியது.
அவளது குரல் அந்த அறையின் நாலு சுவர்களையும் தாண்டி எதிரொலித்தது. கோவத்தின் உச்சியில் இருந்தவள், கையில் இருந்த பொருட்களை மேஜை மீது தூக்கி எறிந்தாள்.
"நேத்து நைட்டு உங்ககிட்ட நான் என்ன சொன்னேன்.? தொண்டை தண்ணி வத்த வத்த உங்ககிட்ட கத்துனேனே அதெல்லாம் உங்க காதுல விழலயா.? உங்க அண்ணன் விஸ்வநாதன் ஒரு நரி.. அவன் சுயநலத்துக்காக யாரை வேணாலும் பலிகடா ஆக்குவான்..
அவனுக்காக உங்க வாழ்க்கையையும் கௌரவத்தையும் அடகு வைக்காதீங்கனு கத்தினேன்ல.? அப்பவும் நான் சொன்ன பேச்சை கொஞ்சமாவது மதிச்சீங்களா.? என் வார்த்தைக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்லாம இப்பவும் கேட்காம இப்படி வந்து அசால்ட்டா உட்காந்துருக்கீங்க.?" என்று ஆவேசமாக எகிறினாள்.
அவன் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்க்கப் பார்க்க அவளுக்குள் இருந்த கோபம் இன்னும் பல மடங்கு பெருகியது. அவனது முகத்திற்கு நேரே தன் விரலை நீட்டி, வார்த்தைகளைச் சாட்டையாக வீசினாள்.
"ஓஓஓ... பெரிய மனுஷன் உங்க அண்ணன் சொன்னானு அவன் பேச்சுக்கு கட்டுப்பட்டு, ஒரு தப்பும் செய்யாம இங்க வந்து குற்றவாளி மாதிரி உட்கார்ந்துட்டியா.? அவன் உன்னைத் தன் கைப்பாவையா ஆட்டி வைக்கிறான்ங்கிற உண்மை இன்னும் உனக்கு புரியலையா.? படிச்ச படிப்புக்கும், வளர்ந்த வயசுக்கும் சுயபுத்தினு ஒன்னு உனக்கு இல்லையா.?
அடுத்தவன் சொல்ற ஆட்டத்துக்கெல்லாம் ஆடுறதுக்கு நீங்க என்ன சின்ன குழந்தையா.?" என்று தன் ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் கொட்டித் தீர்த்தாள்.
கர்ணன் மெதுவாக எழுந்து வந்து, கம்பிகளுக்கு மிக அருகில் நின்று அவளது கோபமான கண்களை நேராக ஊடுருவி "விருசா சத்தம் போடாத.. இது போலீஸ் ஸ்டேஷன்.. இது எங்க அண்ணன் தம்பி விஷயம்..
எங்க அண்ணன் கௌரவத்தையும், ஆகாஷையும் காப்பாத்த நான் இங்க வர்றது எனக்கு அவமானம் இல்லை.. இது என் கடமை.. இது எப்பவும் நடக்கறது தான்.. நான் இங்க வந்து உட்கார்ந்ததுல உனக்கு என்ன பிரச்சனை.?" என்று எப்போதும் போல் பேசியவனை கொன்று விடலாம் என்ற ஆத்திரமே எழுந்தது.
"கடமையா.? இதுக்கு பேரா கடமை.?" என்று விருசாலி ஏளனமாகச் சிரித்தாலும் அவளது கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
"தன் மகனை காப்பாத்த, உங்களை ஒரு அநாதைப் பையனு நினைச்சுப் பலிகடா ஆக்கியிருக்காரு உங்க அண்ணன் விஸ்வநாதன்.. நீங்க செய்யாத தப்புக்காகக் கஞ்சா கடத்துன குற்றவாளினு உங்க தலைமேல பழியை ஏத்திக்கிட்டு இங்க வந்து நிற்க உங்களுக்கு வெட்கமா இல்லையா.?
இப்போ ஒட்டுமொத்தத் தமிழ்நாடே உங்களை ஒரு போதைப்பொருள் கடத்தற திருடன்னு டிவியில காட்டிட்டு இருக்கு.. உங்களோட இந்த கண்மூடித்தனமான விசுவாசமே இப்போ உங்க கழுத்தை நெரிச்சு உங்களை நடுத்தெருவுல நிறுத்தி இருக்கு.." என்று வார்த்தைகளால் அவனது நெஞ்சில் அடித்தாள்.
"விருசா.. என் அண்ணனைப் பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. என் அண்ணன் எல்லாம் எதுவும் சொல்லல .. நான் தான் வந்தேன்.. ஏன்னா என் அண்ணன் வருத்தப்படறதை என்னால பார்க்க முடியல..
நான் அநாதையா நின்னப்போ தூக்கி வளர்த்த தெய்வம் அவரு.. அவருக்காக நான் ஜெயில் கம்பியை எண்ணுறது எனக்குப் பெருமை தான்.." என்று கர்ணன் கோவத்திலீ கம்பிகளைப் பிடித்துக் கத்தினான்.
"தெய்வமா.? அது சரி.. அந்த தெய்வத்தோட அசல் முகத்தை நான் சீக்கிரமே உங்க கண் முன்னாடி கொண்டு வர்றேன் கர்ணா.. அப்ப நீ ரொம்ப வருத்தப்படுவ.." என்ற விருசாலி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"உங்க அண்ணனோட அந்தப் பாச நாடகத்தை உடைச்சு உங்களை இந்த ஜெயில்ல இருந்து நிரபராதியா வெளிய கொண்டு வர்ற வரைக்கும் இந்த விருசாலி ஓய மாட்டா.. இது உங்க மனைவி உங்களுக்கு விடற சவால்.. இதுல நீங்க ஜெயிக்கறீங்களா.? இல்ல நான் ஜெயிக்கறனானு பார்க்கலாம்.." என்றாள் சவாலுடன்.
பின்பு "இது உங்களுக்காக செய்யறேனு கனவுல கூட நினைக்காதீங்க.. இது என் குழந்தையோட அப்பாக்காக மட்டும் தான் பண்றேன்.. பின்னாளுல என் குழந்தைக்கு கெட்ட பேரு வரக்கூடாதுனு ஒரே காரணத்துக்காக.." என்று இலைமறை காயாக கூறினாள்.
அவள் கூற்றை புரிந்து கொள்ளவே கர்ணனுக்கு நேரங்கள் பிடிப்பட்டது. விசயம் என்னவென்று புரிந்ததும் ஆனந்த அதிர்ச்சியில் பெண்ணவளை காண, அவளோ விரக்தி புன்னகையை அவன் மீது வீசியவள் வேகமாக அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
இன்று காலை தான் அவளின் கர்ப்பத்தை உறுதி செய்திருந்தாள். இந்த மகிழ்ச்சியான செய்தியை எப்படியெல்லாம் கணவனிடம் கூற வேண்டும் என்று நினைத்திருந்தாள். இறுதியாக இப்படி காவல் நிலையத்திற்கு நின்று தான் கூற முடியும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.
அவள் அங்கிருந்து வேகமாகச் சென்ற பிறகும், கர்ணன் அதே இடத்திலேயே சிலையாக உறைந்து போய் நின்றிருந்தான். காவல் நிலையத்தின் இரைச்சலும், லாக்-அப் கம்பிகளின் குளுமையும் அவனுக்கு முற்றிலும் மறந்து போயின.
அவளது கடைசி வார்த்தைகள் அவனது காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் பேரிரைச்சலாய் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
'என் குழந்தையோட அப்பாக்காக..' என்ற
அந்த ஒரு வார்த்தை அவனது நெஞ்சுக்குள் ஏற்படுத்திய தாக்கம் விவரிக்க முடியாதது.
அவளுக்குள் ஒரு உயிர் வளர்கிறது, அது அவனுடைய வாரிசு, தான் ஒரு தகப்பனாகப் போகிறான் என்ற நிஜம் உறைத்த கணத்தில் அவனது கண்கள் தானாகவே கசிந்தன.
உலகிலேயே ஆகச்சிறந்த மகிழ்ச்சியான செய்தி அது.. ஆனால் அதை அவன் எதிர்கொண்ட விதம் தான் அவனது இதயத்தை சுக்குநூறாக உடைத்தது.
நெஞ்சில் பொங்கிய பேரானந்தமும், சூழ்நில தந்த பெருவலியும் ஒன்றாகச் சேர்ந்து அவனைக் குடைந்தது.
அவளது முகத்தில் இருந்த அந்த விரக்திப் புன்னகை அவனது கௌரவத்தைச் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது.
தன் அண்ணனின் வார்த்தைக்காகத் தன் வாழ்க்கையையே அடகு வைக்கத் துணிந்த தன்னை நினைத்து அவனுக்கே அருவருப்பாக இருந்தது.
விருசாலி இதை முதலிலே கூறி இருந்தால் நிச்சயம் வந்துருக்க மாட்டான்.. இனி எதையும் மாற்ற முடியாது.. நடப்பது நடக்கட்டும்.. என்ற எண்ணத்தில் அப்படியே அமர்ந்து விட்டான்.
கர்ணன் கஞ்சா வழக்கில் சரணடைந்த அதிர்ச்சித் தகவல் தொலைக்காட்சியில் விடாமல் பரவியதைக் கண்டு அர்ஜுன் பதற்றத்தின் உச்சத்துக்கே சென்றான்.
'எப்போதடா தன் அக்காவிடம் பேசுவோம்.?' என்ற தவிப்பில் கிடந்தான். பள்ளி விட்டதும் வேகமாக வீட்டிற்கு சென்றான்.
விருசாலி தனியாக நின்று இந்த அரசியல் சூறாவளியை எதிர் கொண்டு இருப்பாள் என்பதை உணர்ந்தவன், உடனே அவளுக்குப் போன் செய்தான்.
அவனது கைகளில் இருந்த போன் டயல் ஆகிக் கொண்டிருந்தது. மறுமுனையில் விருசாலி போனை எடுத்தாள்.
எஸ்பி ஆபீஸிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அவளது மூச்சுக்காற்றின் வேகம் போன் வழியே அர்ஜுனுக்குக் கேட்டது.
"ஹலோ விசு அக்கா.. என்னக்கா நடக்குது அங்க.? டிவியில பிரேக்கிங் நியூஸ் பார்த்தேன்.. கர்ணன் நிஜமாவே கஞ்சா கேஸ்ல எஸ்பி ஆபீஸ் போய் சரணடைஞ்சுட்டாரா? எனக்கு ஒண்ணுமே புரியலக்கா.. அவருக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா.?" என்று அர்ஜுன் பதற்றத்துடன் கத்தினான்.
மறுமுனையில் விருசாலி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ஆத்திரமும் வேதனையும் கலந்த குரலில் "ஆமாடா அர்ஜுன்.. எல்லாம் நீ நினைச்ச மாதிரியே நடந்துருச்சு.. நான் ஆகாஷை சிக்க வெச்சு விஸ்வநாதனை கதற விடலாம்னு நினைச்சா இந்த கர்ணன் இடைல புகுந்து எல்லாத்தையும் சொதப்பி விட்டுட்டான்டா..
அந்த விஸ்வநாதன் எவ்வளவு பெரிய கொடூரமான நரினு இப்போ என் கண் முன்னாடியே நிரூபணமாகிருச்சு.. உண்மையா கஞ்சா கடத்துனது அவனோட சொந்தப் பையன்.. அவனைக் காப்பாத்த இந்த விஸ்வநாதன் பாச நாடகம் ஆடி, கர்ணனோட கண்மூடித்தனமான அண்ணன் விசுவாசத்தைப் பயன்படுத்தி, செய்யாத தப்பை அவர் தலைமேல ஏத்திக்கச் சொல்லியிருக்கான்..
இவனும் அந்த நரியோட வார்த்தையை நம்பி இங்க வந்து உட்கார்ந்துருக்கான்டா.. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. இவனுக்கு எப்படி புரி வைக்கறதுனும் தெரியல.." என்று எரிச்சலுடன் சீறினாள்.
"அடப்பாவி விஸ்வநாதன்.. தன் மகனுக்காக இவ்வளவு கேவலமான கேஸ்ல இவனை பலிகடா ஆக்கியிருக்கானா.? அன்னைக்கு நான் உன்கிட்ட போன்ல பேசும் போது அதை கர்ணன் அரைகுறையாகக் கேட்டுட்டுத் தான் என்கிட்ட வந்து விஸ்வநாதனுக்கு ஆதரவா சண்டைக்கு வந்தான்..
இப்போ அவன் என்ன பண்ணிருக்கான் பாரு.. எதையும் யோசிக்க மாட்டானா.? சொந்த புத்தி இல்லையா அவனுக்கு.?" என்று இவனும் சீறினான்.
"அதை நினைச்சு தான் என் நெஞ்சு வெடிச்சுரும் போல இருக்குடா அர்ஜுன்.. இப்ப தான் கர்ணன்கிட்ட போய் பேசிட்டு வந்தேன்.. அவரோட முகத்துக்கு நேரே கேட்க வேண்டியதை எல்லாம் உடைச்சுப் பேசிட்டு வந்துருக்கேன்.. ஆனா அவன் திருந்த மாட்டான்டா.. திருந்த மாட்டான்.." என்று விருசாலி புலம்பினாள்.
"அக்கா... கர்ணனை திருத்தணும்னா வார்த்தைகளால பேசுனா மட்டும் போதாது.. விஸ்வநாதனோட அசல் கறுப்பு முகத்தை அறிவியல் பூர்வமான ஆதாரத்தோட நாம அவர் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தணும்.." என்றிட, விருசாலிக்கும் புரிந்தது.
"நீ என்ன சொல்ல வர்ற அர்ஜுன்.?" என்று விருசாலி ஆவலோடு கேட்க, "இந்த நெல்வயல் கிராமத்துல நிலத்தடி நீர்ல ஏதோ கெமிக்கல் கலக்குதுன்னு எனக்கு முன்னாடியே சந்தேகம் இருந்ததுல.? இப்போ இந்த ஊர்ல இருக்கற புதுமணத் தம்பதிகளுக்குத் தீவிரமான மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படுது..
இங்க இருக்கற என்னோட சக ஆசிரியை சுபத்ராவோட குடும்பமும் இதனால பாதிக்கப்பட்டு இருக்கு.. ஆனா விஸ்வநாதனோட ஃபேக்டரி கழிவு நீர் தான் இதுக்குக் காரணம்னு இப்போதைக்கு இந்த ஊர்ல யாருக்குமே தெரியாது..
அன்னைக்கு சொன்ன மாதிரி இந்த ஊர் கிணத்துத் தண்ணியையும் மண்ணையும் இப்போவே ரகசியமாச் சேகரிச்சு சென்னை லேப்புக்கு அனுப்பறேன்.. அந்த லேப் ரிப்போர்ட் ஆதாரத்தோட நீ நிரூபிக்கணும்.. இது மட்டும் தான் பண்ணுவேன்.. மத்ததை நீயே உனக்கு சாதகமா மாத்திக்கணும்.. என்ன புரியுதா.?" என்று தன் யோசனையை விவரித்தான்.
விருசாலியின் முகத்தில் ஒரு புதிய நிம்பதி மின்னிட, "நீ உடனே அந்த ஆதாரத்தைத் திரட்டற வேலையில இறங்கு.. நான் இங்க பெரியப்பாவோட அரசியல் பலத்தை வெச்சு கர்ணனை வெளில கொண்டு வர முடியுமானு பார்க்கறேன்.. விஸ்வநாதன் கிட்ட நான் தோற்க கூடாதுடா.. தோற்கவும் மாட்டான்.." என்று அழுத்தமாக கூறினாள்.
"கவலைப்படாம அடுத்து என்ன பண்ணலாம்னு மட்டும் யோசிக்கா.. முக்கியமா விஸ்வநாதன் முன்னாடி மட்டும் உன் வருத்தத்தை காட்டிக்காத.." என்ற அர்ஜூனின் வார்த்தைகளை அவளும் ஏற்றுக் கொண்டு போனை வைத்தாள்.
இப்போது அவளின் மனதில் ஒரு தெளிவு பிறந்திருந்தது. கர்ணனை நினைத்து கோவம் எழுந்தாலும் அவனை அப்படியே விட்டு விட இவளின் மனது ஒத்துழைக்கவில்லை.
கர்ணன் கஞ்சா வழக்கில் சரணடைந்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் முடங்கிய செய்தி காட்டுத்தீ போலப் பரவியிருந்த வேளையில், விஸ்வநாதன் பங்களாவுக்குள் ஒரு அசுரத்தனமான கொண்டாட்டம் நிலவியது.
ஜாமீனே கிடைக்காது என்று வக்கீல்கள் கைவிரித்த கஞ்சா கடத்தல் வழக்கில் இருந்து தன் ஒரே வாரிசான ஆகாஷ் எந்தவொரு காயமும் இல்லாமல் சொகுசாக வெளியே வந்து விட்டான் என்ற நிம்மதி விஸ்வநாதனின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
இதற்காகவே தன்னை ஆதரிக்கும் நிர்வாகிகளுக்கு விருந்தே வைத்திருந்தார். கர்ணனை பற்றிய நினைப்பு கூட அவருக்கு இல்லை.. மங்களம் தான் கர்ணனை நினைத்து வருந்தினார். அவரால் இது மட்டும் தான் செய்ய முடியும்..
பெரியப்பாவிடம் செல்ல மனது வராததால் தன்னை தேற்றிக் கொள்ள அப்படியே சுற்றி கொண்டிருந்த விருசாலி மாலையில் தான் வீட்டிற்கு வந்தாள்.
வரவேற்பறையில் விஸ்வநாதன் சோபாவில் கால்களை நீட்டி, கையில் ஒரு விலை உயர்ந்த மதுக்கோப்பையுடன் மிகத் திமிராக அமர்ந்திருந்தார்.
அவருக்கு எதிரே ஆகாஷூக்கும் போதையில் மிதந்திருக்க, இன்னும் இரண்டு அமைச்சர்களும் இருந்தார்கள்.. கறுப்பு நிற காட்டன் புடவையில் கண்களில் தீர்க்கமான கோவத்தோடு உள்ள வந்த விருசாலியைக் கண்டதும் அந்த அமைச்சர்கள் பயந்து விட்டனர்.
என்ன தான் அவர்கள் விஸ்வநாதனுக்கு ஆதரவளித்தாலும் தலைவரின் மேல் பயம் இருக்கத் தான் செய்தது. இவள் வந்ததும் அவர்கள் சென்று விட்டனர்.
அவளைப் பார்த்ததும் விஸ்வநாதன் சத்தமாக அதே சமயம் வக்கிரமாகச் சிரித்தார். அவளது சாணக்கியத்தனமான யோசனையை தன் பாச நாடகத்தால் முறியடித்து விட்டோம் என்ற மகா திமிரில் அவளை ஏளனமாக ஏறிட்டுப் பார்த்தார்.
"என்ன விருசாலி.. நேத்து இதே ஹால்ல நின்னு என்கிட்ட ரொம்ப ஆவேசமா சவால் விட்ட.? அதுவும் என்ன என் கர்ணனை அநாதைனு சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் வாரிசு ஜெயில்ல நரகத்தை அனுபவிப்பானு.. அதுவும் விரல் நீட்டி ஆவேசமா பேசுன.. ப்ச் இப்போ என்னாச்சு.? அந்த அனாதை பய பாவம்ல.?" என்று விஸ்வநாதன் அசாத்தியமான திமிரோடு வினவினார்.
"இப்போ ஜெயில் கம்பியை எண்ணிட்டு இருக்கறது என் வாரிசு இல்லை.. நீ தலைமேல வச்சு கொண்டாடறீயே.. உன்னோட அந்த உத்தம புருஷன் கர்ணன் தான் இப்போ கஞ்சா கேஸ் கைதியா உட்கார்ந்துருக்கான்.. நீ எட்டடி பாய்ஞ்ச நான் பதினாறு அடி பாய்வேன்.. இன்னும் என்ன பண்ணனுமோ பண்ணு.. நானும் இதே மாதிரி பதிலடி குடுக்க ரெடியா இருக்கேன்.." என்றவரின் பேச்சை கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக எதிர் கொண்டாள் பெண்ணவள்.
பின்பு "விஸ்வநாதன்.. உங்க நரித்தந்திரத்தால என் புருஷனோட கண்மூடித்தனமான விசுவாசத்தைப் பயன்படுத்தி அவரைப் பலிகடா ஆக்கிட்டீங்கனு ரொம்பத் துள்ளாதீங்க.." என்றவள் "அவரு செய்யாத தப்பை.தன் தலை மேல ஏத்துக்கிட்டது அவரோட ஏமாளித்தனம் இல்லை.. உங்களை இன்னும் மனுஷனா நினைச்சு அவரு காட்டுன நன்றிக்கடன்.. ஆனா நீங்க... பெத்த மகனைக் காப்பாத்த. உங்களையே தெய்வமா கும்பிட்ட என் கர்ணனோட வாழ்க்கையையே நடுத்தெருவுல நிறுத்திருக்கீங்க..
இந்த அக்கிரமத்தை அந்தச் சட்டம் வேணா இப்போதைக்குக் கண்டுக்காம இருக்கலாம்.. ஆனா இந்த விருசாலி சும்மா விட மாட்டேன்.. இதுக்கும் பதிலடி தருவேன்.. நீங்க என் புருசனை உள்ள தள்ளிட்டா நான் பயந்துருவேனா என்ன.? இன்னும் ரெண்டே நாளுல அவனை வெளில எடுத்து காட்டறேன்.. எத்தனையோ தில்லாலங்கடி வேலை பண்றேன்.. அதோட இதையும் பண்ணி இன்னும் ரெண்டு நாளுல உங்க முன்னாடி என் புருசனை நிறுத்தறேன்.." என்றாள்.
"ஏய்.. என்ன மிரட்டறீயா.?" என்ற விஸ்வநாதன் ஆவேசமாக சோபாவை விட்டு எழுந்து வந்து "உன்னால என்ன பண்ண முடியும்.? இந்த தமிழ்நாட்டுக்கே அடுத்த முதலமைச்சராகப் போற விஸ்வநாதன் தான்.. உன்னோட பெரியப்பாவை எப்படி சாய்க்கணும்னு எனக்கு தெரியும்.. இந்த அரசியல் பலத்தை வச்சு என்னைத் தூக்கப் பார்த்தேல்ல.?
இப்போ என்னாச்சு.? கஞ்சா கடத்துன கிரிமினலோட பொண்டாட்டினு சென்னை முழுக்க உன்னைய பத்திதான் குசுகுசுனு பேசிட்டு இருக்காங்க.. இப்போ உன்னோட பெரியப்பாவால கூட உன் புருஷனை இந்த கேஸ்ல இருந்து வெளிய கொண்டு வர முடியாதுடி..
அவனோட ஆயுசு முழுக்க அவன் ஜெயில்ல தான் கிடக்கணும்.. உனக்கு அந்த கர்ணன் மேல அவ்வளவு பாசம் இருந்தா நீயும் வேணா அவனோட போய் ஜெயில்ல குடும்பம் நடத்து.. உங்களுக்கு அது தான் சரிப்பட்டு வரும்.." என்று கேவலமான திமிருடன் பேசினார்.
தன் முன்னே நீண்ட அவரது விரலை சட்டெனத் தட்டிவிட்ட விருசாலி "விஸ்வநாதன்.. அதிகாரம் கண்ணை மறைக்குதுனு ரொம்ப ஆடாதங்க.. என் கர்ணனோட இந்தக் கண்மூடித்தனமான விசுவாசமே அவரோட கண்களை மறைச்சு இங்க நிறுத்தியிருக்கு..
ஆனா நீங்க செஞ்சுருக்கற அக்கிரமங்களுக்கு பின்னால இருக்கற அசல் கறுப்பு முகத்தை நான் இன்னும் சில நாட்கள்ல அவரோட கண் முன்னாடியே கொண்டு வந்து நிறுத்துவேன்.. அன்னைக்கு எல்லாம் மாறும்.. உங்க மகனும், நீங்க ஆசைப்படற அந்த முதலமைச்சர் நாற்காலியும் எப்படிச் சுக்குநூறாகப் போகுதுனு நீங்களே பார்ப்பீங்க..
அந்த நாற்காலில என் கர்ணனையும் உட்கார வெப்பேன்.. அது என் முடிவா இருக்காது.. மக்களோட முடிவா இருக்கும்.." என்று அவரது முகத்திற்கு நேரே சம்மட்டி அடி அடித்து விட்டு தன் அறை நோக்கி சென்றாள்.
விஸ்வநாதன் அவளது அந்தத் தீர்க்கமான பேச்சைக் கேட்டு கையில் இருந்த மதுக்கோப்பையைத் தரையில் அடித்து உடைத்தார். அவளது சாணக்கியத்தனமான சவால் அவருக்குள் ஒரு விசித்திரமான நடுக்கத்தை ஏற்படுத்தி இருந்ததும் உண்மை.
மீண்டும் திரும்பிய அவள் "விஸ்வநாதன்.. அதிகாரம் உங்க கண்ணை மறைக்கலாம்..
ஆனா தர்மம் இன்னும் சாகல.." என்றாள் விருசாலி தீர்க்கமான குரலில்.
"இதோ... இப்போ என் வயித்துல ஒரு உயிர் வளர்ந்துட்டு இருக்கு.. என் வயித்துல இருக்கிற குழந்தையோட சாட்சியாக நான் உங்களுக்குச் சொல்றேன்...செய்யாத தப்புக்காக கஞ்சா கேஸ்ல உள்ள இருக்கற என் கர்ணனை இதே பங்களாவுக்கு நான் நிரபராதியா கம்பீரமா கூட்டிட்டு வருவேன்..
உங்க நரித்தனத்தை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் முன்னாடி அம்பலப்படுத்தி, என் கணவரை இந்தச் சிறையில இருந்து மீட்கறது தான் என் முதல் வேலை.. இது என் வயித்துல வளர்ற குழந்தையோட ஆணை.." என்ற விருசாலியின் இந்தத் திடீர் கர்ப்ப விபரத்தைக் கேட்டதும் விஸ்வநாதன் ஒரு நொடி அதிர்ச்சியடைந்தார்.
ஆனால் அடுத்த வினாடியே அவனது முகத்தில் ஒரு கொடூரமான புன்னகை முளைத்தது. அவரது நாற்காலி வெறியும், அகங்காரமும் ஒரு பெண்ணின் கருவறையையும், பிறக்கப்போகும் ஒரு பச்சைக் குழந்தையையும் கூடக் கேவலப்படுத்தத் துணிந்தது.
விஸ்வநாதன் அவளது அருகே நெருங்கி வந்து "ஏய் விருசாலி.. உன் வயித்துல இருக்குற குழந்தையோட சாட்சினு ரொம்ப பேசாத.. உன் புருஷனோட பலவீனம் என்னனு உனக்கு தெரியும்ல.? நீ என்னதான் ஆதாரத்தைத் திரட்டி அவனைக் காப்பாத்தினாலும் வேஸ்ட் தான்..
நான் நினைச்சா விருசாலி வயித்துல வளர்றது என் குழந்தையே இல்லைனு உன்னோட உத்தம புருஷன் வாயாலயே நான் கோர்ட்டுக்கும் போலீசுக்கும் முன்னாடி சாட்சி சொல்ல வைக்க முடியும்..
என் வார்த்தைக்காகத் தன் கௌரவத்தையே அடகு வச்சவன் அவன்.. என் ஒரு சொம்பு கண்ணீருக்காக உன்னையும் உன் குழந்தையையும் கூடத் தூக்கி எறியத் துணிவான்.. அவனோட விசுவாச வெறிக்கு முன்னாடி உன்னோட இந்தக் கருவறை சாட்சியெல்லாம் ஒண்ணுமே இல்லை.." என்றாரே பாருங்கள்.
பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி விஸ்வநாதன் இவ்வளவு வக்கிரமாகவும், கேவலமாகவும் பேசியதைக் கேட்ட விருசாலியின் மொத்த உடம்பும் ஆத்திரத்தில் நடுங்கியது. ஒரு தாயாக அவளது இதயம் துடித்தது.
ஆனால் கர்ணன் இப்படி செய்ய மாட்டான் என்று நம்பிக்கை கொண்டாள்.
அந்த நம்பிக்கையில் "பார்க்கலாம் விஸ்வநாதன்.. விசுவாசம் பெருசா இல்ல ஒரு தாயோட ஆதங்கம் பெருசானு.. என் புருஷனோட கண்ணை மறைக்கற அந்த விசுவாசத்தை உடைச்சு, உங்க அசல் கறுப்பு முகத்தை நான் அவர் முன்னாடி கொண்டு வர்ற நாள் உங்க மொத்தக் கூட்டத்தோட அழிவு நாளா இருக்கும்.." என்று தன் வயிற்றை இறுக்கமாக பற்றி கூறியவள் விஸ்வநாதனைத் தன் பார்வையாலயே சுட்டெரித்து விட்டுத் தன் அறை நோக்கிப் புயலென நடந்து சென்றாள்.
நெல்வயல் கிராமம் இருளின் போர்வையால் மூடப்பட்டிருந்தது. நள்ளிரவு பன்னிரண்டு மணியைத் தாண்டிய அந்த நிசப்தமான சூழலில், கிராமத்து வீடுகளின் விளக்குகள் அனைத்தும் அணைந்திருந்தன.
வெளியில் எட்டி பார்ப்பதும் மீண்டும் மணியை பார்ப்பதுமாக இருந்தான் அர்ஜூன். இங்கு வந்த இடைப்பட்ட நாட்களில் கிராமத்தில் இருக்கும் பலரின் குடும்பம் பன்னிரண்டு மணிக்கு மேல் தான் உறங்க செல்வதையே கண்டிருந்தான்.
வீடுகளில் விளக்கு அணைக்கப்பட்டதா.? என்று தான் விடாமல் நோட்டமிட்டு கொண்டிருந்தான். அவனது காதுகளுக்குள் அவனின் அக்கா போனில் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன.
'கர்ணனை விஸ்வநாதன் பலிகடா ஆக்கிட்டான்டா அர்ஜுன்.. கர்ணனை வெளில கொண்டு வந்தே ஆகணும்.. விஸ்வநாதன் கிட்ட நான் தோற்க கூடாதுடா..' என்ற அவளது தவிப்பு அவனுக்குள் ஒரு பெரிய வெறியை தூண்டி இருந்தது.
வார்த்தைகளாலோ அல்லது சண்டையாலோ கர்ணனின் மனதை மாற்ற முடியாது என்பது அர்ஜுனுக்கு நன்றாகவே தெரியும்.
விஸ்வநாதனின் அசல் கறுப்பு முகத்தை அறிவியல் பூர்வமான ஆதாரத்தோடு கொண்டு வந்து நிறுத்தினால் மட்டுமே கர்ணனின் கண்கள் திறக்கும்.
அர்ஜுன் மெதுவாக எழுந்து, தன் மேஜை மீது இருந்த இரண்டு வெற்றுப் பிளாஸ்டிக் பாட்டில்களையும், சில ஆய்வகக் கருவிகளையும் எடுத்துத் தன் தோள் பைக்குள் வைத்துக் கொண்டான்.
காலணிகளின் சத்தம் கூடக் கேட்காதவாறு மிக நிதானமாக வீட்டை விட்டு வெளியேறினான். அவனது நோக்கம் ரசாயன கழிவுகள் கலக்கும் நீர்நிலைகளின் தண்ணீரை சேகரிக்க வேண்டும்.. பின்பு ஆலையில் இருந்து எதன் மூலம் நிலத்தடி நீரில் கழிவுகளை கலந்து விட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்..
இவன் பகலில் தண்ணீரை சேகரிக்க முயன்ற போது எதுக்கு தம்பி பாட்டில்ல கொண்டு போறீங்க.? நீங்க பள்ளிக்கூட டீச்சர் தானே.? என்று யாராவது ஒருத்தர் கேட்டு விடுகின்றனர். அப்படி கேட்கும் போது சட்டென்று அர்ஜூனால் பொய் கூற முடியவில்லை.
அவன் அந்த இருண்ட ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தபோது, தூரத்தில் இருந்து லேசான டார்ச் லைட் வெளிச்சம் தெரிந்தது. யாரோ தன் பின்னால் வருகிறார்கள் என்பதை உணர்ந்த அர்ஜுன், சட்டென ஒரு பெரிய புளிய மரத்தின் மறைவில் சென்று ஒளிந்து கொண்டான்.
அவனது இதயம் வேகமாகத் துடித்தது. இந்த நச்சுத் தண்ணீர் மர்மம் பற்றி இப்போதைக்கு இந்த ஊர்ல யாருக்குமே தெரியாது.. விஸ்வநாதனின் ஆட்கள் யாராவது தன்னைக் கண்காணிக்கும் கண்காணிப்பில் இருக்கிறார்களோ.? என்ற பயம் அவனுக்குள் இருந்தது.
இவனுக்கு இந்த வேலை எல்லாம் ஆகாது என்றதில் தான் அவன் அரசியலை விட்டே ஒதுங்கி இருந்தான். ஆனால் இப்போது அக்காவிற்காக செய்து தான் ஆக வேண்டும்.
அந்த வெளிச்சம் இவனை நெருங்கி வர, அர்ஜூனின் இதயத்துடிப்பு எகிறி
யது. கையில் இருப்பதை எல்லாம் கீழே போட்டு விட்டு நன்றாக ஒளிந்து கொண்டான்.
"ஏய் யாருடா நீ.?" என்று வந்த சத்தத்தில் கண்களை மூடிக் கொண்டு தள்ளி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான் அவன்.
தொடரும்..