மகுடம் சூட்டும் காதல்
New member
அத்தியாயம் - 13
சென்னையின் பரபரப்பான அரசியல் சதுரங்க ஆட்டங்களுக்கும், விஸ்வநாதனின் வஞ்சகமான சூழ்ச்சிகளுக்கும் அப்பால், கர்ணன் கார் விறுவிறுப்பாக நகர்ந்து அவனது சொந்த ஊரான நெல்வயல் கிராமத்தின் எல்லையை வந்தடைந்தது.
கார் கிராமத்தின் பெரிய அரசமரத்தடி நிழலில் வந்து நின்றதும், கர்ணன் மெதுவாகக் காரை விட்டு வெளியே இறங்கினான்.
அவனது கால்கள் தன் சொந்த மண்ணை மிதித்த அந்த வினாடி, அவனது நெஞ்சுக்குள் ஒரு விசித்திரமான நிம்மதியும், அதே நேரத்தில் ஒரு பெரிய ரணமும் ஒன்றாகக் கசிந்தது.
'அது என் குழந்தை இல்லை' என்று தன் வாரிசையே அசிங்கப்படுத்திய குற்ற உணர்வு அவனது முகத்தில் லேசான இறுக்கத்தைக் கொடுத்திருந்தது.
கர்ணன் சென்னைக்குச் சென்று பல வருடங்கள் ஆகியிருந்தாலும், இந்த மண்ணின் மைந்தனை அந்த ஊர் ஜனங்கள் துளியும் மறக்கவில்லை. இவனைப் பற்றி செய்திகள் வரும்போதெல்லாம் ஆர்வமாக அதை பார்ப்பார்கள்.
அதனால் அவனைக் கண்டதும் அவன் யாரென்று தெரிந்து விட்டது. வேட்டி-சட்டையில் கம்பீரமாக இறங்கிய கர்ணனைக் கண்டதும், அரசமரத்தடித் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் அனைவரும் "அட நம்ம கர்ணன்பா.." என்று ஆச்சரியத்துடன் அவனை சூழ்ந்து நின்றனர்.
வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளும், தெருக்களில் இருந்த பெண்களும் ஓடிவந்து கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.
தங்களின் சொந்த ஊர் பையன் சென்னையில் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து, இன்று தங்களைத் தேடி வந்திருப்பதைக் கண்ட நெல்வயல் மக்கள், தங்களின் அத்தனை கவலைகளையும் மறந்து அசாத்தியமான சந்தோஷத்தோடு மலர்ந்த முகத்துடன் அவனை வரவேற்றனர்.
"வாப்பா கர்ணா.. நல்லா இருக்கீயாப்பா.? சென்னைக்கு போனவன் எங்களைய எல்லாம் மறந்துட்டேனு நினைச்சோம்.. இப்போ உன்னைப் பார்க்கவே அவ்வளவு கம்பீரமா இருக்குப்பா.." என்று ஒரு வயதான பெரியவர் அவனது தோள்களைப் பற்றிப் பாசத்தோடு உருகினார்.
"தம்பி கர்ணா.. நீ சின்ன வயசுல இந்த ஊர் ஏரிக்கரையில ஓடி விளையாடுனதெல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்குப்பா.. நீ இவ்வளவு பெரிய கார்ல வந்து இறங்கறதைப் பார்க்க எங்களுக்கே பெருமையா இருக்கு.. இதைய பார்க்க உன் அப்பன் தான் இல்லை.." என்று ஒரு பாட்டி அவனுக்குத் திருஷ்டி கழித்தார்.
அங்கே நிலவிய அந்தத் தூய்மையான, எதார்த்தமான கிராமத்து மக்களின் பாசத்தைக் கண்ட போது, கர்ணனின் கண்கள் லேசாகக் கலங்கின.
விஸ்வநாதன் பங்களாவின் சொகுசுச் சுவர்களுக்குள் இல்லாத ஒரு நிஜமான நிம்மதியும், ஆத்மார்த்தமான அன்பும் அவனது சொந்த ஊர் மக்களின் பேச்சில் அவனுக்குக் கிடைத்தது. இந்த எளிய சாமானிய மனிதர்கள் தான் தன் உண்மையான பலம் என்பதை அவன் உணர்ந்தான்.
கர்ணன் மக்களைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பிப் புன்னகைத்தான். "நான் நல்லா இருக்கேன் பெரியவங்களே.. உங்களை எல்லாம் பார்க்கத் தான் வந்தேன். ஊர்ல விவசாயம் எல்லாம் எப்படி நடக்குது.?" என்று மிகவும் எதார்த்தமாகக் கேட்டுக் கொண்டே கிராமத்துத் தெருக்களில் நடந்தான்.
நல்லவேளை அர்ஜூன் அங்கு இல்லை.. இல்லையென்றால் இவனை கிழித்து தொங்க விட்டிருப்பான்..
அர்ஜுன் அந்தச் சமயம் வேறு ஒரு வேலையாக டவுனுக்குச் சென்றிருந்ததால், அங்கே அவனது பற்றாக்குறை இருந்தது.
ஆனால், தன் சொந்த ஊர் மக்களின் இந்த மாறாத பாசத்திற்கு நடுவிலும், கர்ணனின் உள்மனதில் தன் அண்ணன் விஸ்வநாதனின் வக்கிரமான முகமும், இந்த நெல்வயல் மண்ணிற்குள் மறைந்திருக்கும் ஏதோ ஒரு ரசாயன மர்மமும் அவனது புதிய மனமாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தன.
அதே நள்ளிரவு நேரத்தில் நெல்வயல் கிராமத்தின் எல்லையில் இருந்த விஸ்வநாதனின் கெமிக்கல் தொழிற்சாலைக்கு மிக அருகில் இரண்டு நிழல்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அது அர்ஜுனும் சுபத்ராவும் தான்.. அக்கா விருசாலி துரோகிகளை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்க, அர்ஜுன் இங்கே தன் கடமையைச் செய்யக் களமிறங்கினான்.
சுபத்ரா தன் கையில் இருந்த டார்ச் லைட்டை மிகவும் எளிய முறையில், தரையை நோக்கி மட்டுமே அடித்துப் பாதையைக் காட்டினாள்.
"அர்ஜுன் சார்.. அவங்க எங்கிருந்து கெமிக்கல் கழிவை பூமிக்குள்ள இறக்குறாங்கனு நமக்கு எப்படித் தெரியும்.?" என்று சுபத்ரா எதார்த்தமாகக் கேட்டாள்.
"சுபா நான் ஒரு சயின்ஸ் டீச்சரா சொல்றேன்.. ஃபேக்டரியோட பின்பக்கப் புல்வெளிகள் எல்லாம் கருகிப் போயிருக்கு.. கண்டிப்பா அந்தப் பகுதியில தான் அவங்களோட ரகசிய ஆழ்குழாய் இருக்கணும்.. வா போவோம்" என்று அர்ஜுன் அவளது கைகளைப் பற்றி வேலியின் இருண்ட பகுதிக்குள் கூட்டிச் சென்றான்.
இருவரும் தேடிய அந்தப் புள்ளி ஃபேக்டரியின் பின்பக்கத் தோட்டத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.. அங்கே ஒரு பெரிய இரும்பு மதகின் வழியாக, கருகிய நிறத்தில் அமில வாசனையுடன் நச்சுக் கழிவு நீர் பூமிக்குள்ளே பீய்ச்சியடித்துப் பாய்ந்து கொண்டிருந்தது.
அந்த ரசாயனக் கழிவு நீர் தான் ஒட்டுமொத்த நெல்வயல் கிராமத்தின் நிலத்தடி நீரையும் விஷமாக்கி, மக்களுக்குத் தீவிரமான மலட்டுத்தன்மை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கொடூரமான உண்மையை அர்ஜுன் தன் மொபைல் கேமராவில் பக்காவாக வீடியோ ஆதாரமாகப் பதிவு செய்தான்.
"ஆதாரம் சிக்கிருச்சு சுபா.. எங்கிருந்து கழிவு நீரை கலக்க விடறாங்கனு கண்டுபிடிச்சுட்டேன்.. முதல்லயே தண்ணீரை எல்லாம் லேப்புக்கு அனுப்பிட்டேன்.. லேப் ரிப்போர்ட்டும் வந்துரும்.. இதையும் கண்டுபிடிச்சுட்டோம்.. சீக்கிரம் இதுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டிரலாம்.." என்று மகிழ்ச்சியில் அர்ஜுன் கத்தினான்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வினாடி ஃபேக்டரியின் உயரமான கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து டார்ச் லைட் வெளிச்சம் நேராக இவர்களின் முகத்தில் வந்து விழுந்தது.
"டேய்.. அங்கே யாருடா அது.? திருட்டுத்தனமா என்னமோ பண்றாங்க.. பிடிங்கடா அவங்களை.." என்று விஸ்வநாதனின் ஆட்கள் இவர்களை துரத்தினர்.
"அர்ஜுன் சார்.. அவங்க கிட்ட கத்தி எல்லாம் இருக்கு சார்.. நம்மளைய குத்திட்டா என்ன பண்றது சார்.. ஓடுங்க சார்.." என்று சுபத்ரா பயத்தில் கத்தினாள்.
அர்ஜுன் அவளது கையையும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, அந்த நள்ளிரவு இருட்டில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பியோடத் தொடங்கினான்.
ரவுடிகளுக்கு பயந்து கொண்டு அங்கிருந்த பம்ப்செட்டின் உள்ளே நுழைந்த இருவரும் மூட்டைகளுக்கு பின்னால் மறைந்து கொண்டனர்.
ரவுடிகளும் அங்கயே சுற்றிக் கொண்டிருக்க, இருவரும் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். நேரமாக நேரமாக தானாக இருவரும் கண்ணயர்ந்து விட்டனர். விடிந்தது கூட தெரியாமல் அப்படியே இருந்தனர்.
அது பம்ப்செட் சுபாவின் தந்தையின் உடையது தான். விடிந்ததும் நெல் மூட்டைகளை எடுக்க லாரி வந்திருக்க, வேலையாட்களுடன் கதவை திறந்த அவர் திகைத்து நின்று விட்டார்.
வேலைகளுக்கு வந்த ஆட்களும் தனக்குள் பேசி கொள்ள, பம்ப்செட் அறையின் முன்னால் கூடி நின்ற ஒட்டுமொத்த நெல்வயல் கிராமத்து ஜனங்களின் கூச்சலும் குழப்பமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
சுபத்ராவின் அண்ணன் ரமேஷ் ஆத்திரத்தில் அர்ஜுனின் சட்டையைப் பிடிக்க கையை ஓங்கிய அந்த வினாடி "ஏய்.. கையை எடுடா.." என்ற குரல் அந்த இடத்தையே அதிர வைத்தது.
ஒட்டுமொத்தக் கூட்டமும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, கம்பீரமாக உள்ளே நுழைந்தான் கர்ணன்.
நேற்று தான் தன் சொந்த ஊரான நெல்வயலுக்கு வந்திருந்தவன், அதிகாலையிலேயே ஊர் ஜனங்கள் கூட்டமாகக் கூடிப் பேசுவதைக் கேட்டு இங்குக் களமிறங்கியிருந்தான்.
கர்ணன் நேராக வந்து அர்ஜுனுக்கும் சுபத்ராவுக்கும் முன்னால் நின்றான். அவனது தோற்றத்தில் இருந்த அந்த அசாத்தியமான கம்பீரத்தைக் கண்டதும், அர்ஜுனை அடிக்க வந்த ரமேஷ் லேசான நடுக்கத்துடன் தன் கையைத் தாழ்த்திக் கொண்டான்.
"யாருடா இங்க தப்பானவங்க.? யாருடா இவங்களை வச்சுத் தப்பா பேசுறது.?" என்று கர்ணன் தன் கணீரென்ற குரலில் கூட்டத்தைப் பார்த்து வலம் வந்தான்.
அவனது பார்வை பட்ட இடமெல்லாம் ஊர் ஜனங்கள் தலை குனிந்தனர்.
"இல்ல தம்பி கர்ணா.. நீங்க சென்னைல பெரிய ஆளா இருக்கலாம்.. ஆனா, இந்த விடிஞ்சும் விடியாத நேரத்துல இந்த அர்ஜுனும் நம்ம ஊர் பொண்ணும் இந்த இருட்டு அறைக்குள்ள இருந்து ஒன்னா வர்றாங்கப்பா.. நாங்க கண்ணால பார்த்ததைத் தானே பேசுறோம்..." என்று ஊர்ப் பெரியவர் ஒருவர் நடுக்கத்துடன் நியாயம் பேச முற்பட்டார்.
"நிறுத்துங்க பெரியவரே.." என்று கர்ணன் கையை உயர்த்தித் தடுத்து "கண்ணால பார்க்கறது எல்லாமே உண்மை கிடையாது.. இந்த நெல்வயல் மண்ணுல பிறந்து வளர்ந்தவன் இந்தக் கர்ணன்...உங்களோட இந்த எளிய குணமும், அவசரப்பட்டுப் பழி போடற புத்தியும் எனக்கு நல்லாவே தெரியும்..
ஆனா நான் சாட்சியா நிற்கறேன்.. இந்த அர்ஜுன் அப்படிப்பட்டவன் இல்லை.. அவன் ஒரு நேர்மையான ஆளு.. இந்த ஊர் ஜனங்களோட நல்லதுக்காக மட்டும் தான் அவனோட மூளை வேலை செய்யுமே தவிர, ஒரு பெண்ணோட கௌரவத்தைக் கேவலப்படுத்தற இழிவான புத்தி இவனுக்கு எப்பவுமே வராது" என்று கூறினான்.
அர்ஜுன் வியப்போடு கர்ணனையே ஏறிட்டுப் பார்த்தான். தன் அக்காவைப் பற்றிக் கேவலமாகப் பேசி விட்டு வந்த இந்த மனிதனா.? இன்று தன் சொந்த ஊர் மக்கள் முன்னால் தனக்காகவும் சுபத்ராவிற்காகவும் ஒரு தெய்வமாக வந்து ஆதரவாகப் பேசுகிறான் என்ற வியப்பு அவனுக்குள் வெடித்தது.
கர்ணன் கூட்டத்தைப் பார்த்துத் தன் குரலை இன்னும் உயர்த்தினான். "இந்த பொண்ணு நம்ம ஊர் தானே.? அதோட ஒழுக்கம் உங்களுக்கு தெரியாதா.? ஆனா இந்த அர்ஜுனோட ஒழுக்கம் எனக்கு நல்லாவே தெரியும்..
இவங்க ரெண்டு பேரும் இந்த நள்ளிரவுல இங்க இருந்திருக்காங்கன்னா... அதுக்கு ஏதோ ஒரு நியாயமான காரணம் இருக்கும்.. அதை இந்த ஊர் ஜனங்ககிட்ட இப்போதைக்குச் சொல்ல வேண்டிய அவசியம் அவங்களுக்குககிடையாது..
தப்பு செய்யாத இவங்களை வச்சு யாராச்சும் ஒரு வார்த்தை தப்பா பேசினா...அப்பறம் இந்தக் கர்ணனோட இன்னொரு முகத்தை நீங்க பார்ப்பீங்க.." என்று எச்சரிக்கும் தொனியில் கறாராகக் கூறினான்.
இந்த அர்ஜுன் யாருனு இப்போ உங்க எல்லார்கிட்டயும் நான் சொல்றேன்.. கேட்டுக்கோங்கடா.." என்று இடிமுழக்கமாகப் கத்தினான்.
ஒட்டுமொத்தக் கூட்டமும் ஒரு நொடியில் நிசப்தமானது. சுபத்ராவும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அதிர்ச்சியோடு கர்ணனைப் பார்த்தாள்.
"இவன் ஒன்னும் இந்த ஊர் அரசுப் பள்ளியில சாதாரணச் சம்பளத்துக்கு வேலை பார்க்க வந்த ஏழை டீச்சர் கிடையாது.. தலைவர் அன்புமணி தெரியும்ல.? அவரோட ஒரே வாரிசு இவன் தான்.. அந்த மாபெரும் அரசியல் இயக்கத்தோட உச்சக்கட்டத் தலைவரோட பையன்" என்று கர்ணன் உண்மையை உடைத்தான்.
அந்தப் பம்ப்செட் அறையின் முன்னால் நின்றிருந்த அத்தனை விவசாயிகளின் கைகளில் இருந்த மண்வெட்டிகளும் அதிர்ச்சியில் கீழே விழுந்தன.
ரமேஷ் அப்படியே வாயடைத்துப் போய் நின்றான்.
"இவ்வளவு பெரிய தலைவரோட மகனா பிறந்திருந்தும், இவன் நினைச்சிருந்தா சென்னை ஏசி ரூம்ல சொகுசா வாழ்ந்திருக்கலாம்., கார்ல சுத்தியிருக்கலாம். ஆனா, அவனுக்கு அந்த ஆடம்பரம் பிடிக்காம... தன் அப்பாவோட அசல் அடையாளத்தை மறைச்சுக்கிட்டு, இந்த நெல்வயல் கிராமத்து ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கற அந்தப் புனிதமான டீச்சர் வேலைக்காகத் தான் இங்க வந்து சாதாரண சைக்கிள்ல சுத்திட்டு இருக்கான்..
அப்படிப்பட்ட ஒரு நேர்மையானவன் இந்த நள்ளிரவுல இங்க இருந்திருக்கான்னா... அதுக்கு ஏதோ ஒரு உன்னதமான காரணம் இருக்கும். ஒரு பெண்ணோட கௌரவத்தைக் கேவலப்படுத்துற இழிவான புத்தி இந்தத் தலைவரோட வாரிசுக்கு எப்பவுமே வராது.. இப்போ சொல்லுங்கடா... இந்த நேர்மையானவனையா நீங்க தப்பா பேசுறீங்க.?" என்று கர்ணன் தன் கம்பீரமான குரலில் மக்களுக்குச் சாட்டையடி கொடுத்தான்.
மண்ணின் மைந்தனான கர்ணனின் அந்த அசைக்க முடியாத வார்த்தைகளிலும், அர்ஜுனின் இந்த அதிர்ச்சியூட்டும் அசல் அடையாளத்திற்கு முன்னாலும் ஊர் ஜனங்களால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.
அவனது பேச்சைக் கேட்டு ஒட்டுமொத்த மக்களும் அப்படியே அமைதியாகிப் பின்வாங்கினர். அவதூறு பேசிக் கொண்டிருந்த வாய்கள் அனைத்தும் அடங்கின.
சுபத்ரா வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் அர்ஜுனையே உற்றுப் பார்த்தாள். தன் காதலன் இவ்வளவு பெரிய அரசியல் மாளிகையின் நிஜமான வாரிசு என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.

பெரியசாமி ஐயா தன் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு கவலையோடு வீட்டிற்குள் அழைத்து செல்ல, அர்ஜுனும் கர்ணனும் மட்டும் அந்தப் பழைய பம்ப்செட் அறையின் முன்னால் தனியாக நேருக்கு நேர் நின்றனர்.
அர்ஜூன் நகர முற்பட, "அர்ஜூன்.." என்றழைத்த கர்ணன் நீ சொன்னது எல்லாம் உண்மையா.? உன்னைய நம்பாம இருக்க முடியல.. அதே சமயம் நீ சொல்றதையம் நம்ப முடியல.." என்று கேட்டான் அமைதியாக.
அர்ஜுன் சட்டென தன் நடையை நிறுத்தினான். அவனது முதுகிற்குப் பின்னால் நின்றிருந்த கர்ணனின் குரலில் எப்போதும் இருக்கும் அந்தத் திமிரோ அகங்காரமோ இப்போது துளிகூட இல்லை.
மாறாக தன் சொந்த ஊர் மக்களின் நிலையை நினைத்து ஒரு மண்ணின் மைந்தனாக அவனது குரலில் இருந்த அந்த அதிபயங்கரமான தவிப்பும், உண்மையை ஏற்கும் பக்குவமும் அர்ஜுனின் தார்மீகக் கோபத்தை மெல்லத் தணித்தது.
அர்ஜுன் மெதுவாகத் திரும்பி, கர்ணனின் கண்களை நேராக நோக்கினான். அவனது கண்களுக்குள் இப்போது ஒரு புதிய தெளிவு பிறந்திருப்பதை அர்ஜுன் உணர்ந்தான். அவன் ஆத்திரப்பட்டுப் பேசாமல், மிகவும் பொறுமையாக உண்மையை விளக்கத் தொடங்கினான்.
அர்ஜுன் தன் தோள் பையிலிருந்து, நள்ளிரவில் தான் ரகசியமாகச் சேகரித்து வைத்திருந்த அந்த நீர் மாதிரியையும் மண்ணையும் வெளியே எடுத்து அவனது கைகளில் கொடுத்தான்.
"கர்ணா.. நான் இப்போ உன்கிட்ட ஒரு அக்காவோட தம்பியா பேசல.. இந்த நெல்வயல் மண்ணோட அறிவியல் ஆசிரியரா பேசறேன்.. நீ பிறந்து வளர்ந்த இந்த நெல்வயல் கிராமத்துல இப்போ கொஞ்ச நாளா என்ன நடக்குதுனு உனக்கு முழுசாத் தெரியாது..
விஸ்வநாதனோட அந்தப் புது கெமிக்கல் ஃபேக்டரி வந்ததுல இருந்து, அவங்க தங்களோட ஆபத்தான ரசாயனக் கழிவுகளை யாருக்கும் தெரியாம பூமிக்குள்ள ரகசியமா இறக்குறாங்க.. அது இந்த ஊரோட நிலத்தடி நீர்லயும், கிணத்துத் தண்ணிலயும் முழுசா விஷமாகிக் கலந்துருக்கு.." என்றான்.
"இந்த நச்சுத் தண்ணியைக் குடிச்சு தான் இந்த ஊர்ல இருக்கற எத்தனையோ புதுமணத் தம்பதிகளுக்கும், இளைஞர்களுக்கும் தீவிரமான மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கு.." என்று அர்ஜுன் பொறுமையாகவும் அழுத்தமாகவும் உண்மையை உடைத்தான்.
"இன்னைக்கு நீ காப்பாத்துன இந்தச் சுபத்ராவோட குடும்பமும் இதே கொடுமையால தான் அழுதுட்டு இருக்கு.. அவங்களோட விவசாய நிலமும் இப்போ மலடாகிப் போச்சு.. இந்த அதிர்ச்சியான உண்மை இந்த ஊர்ல இப்போதைக்கு யாருக்குமே தெரியாது..
இதைய கேள்விப்பட்டு தான் இந்த ஊருக்கு சயின்ஸ் டீச்சரா வந்து இந்த ஆதாரங்களை இப்போ ரகசியமாச் சேகரிச்சுருக்கேன்.. இதை இப்போவே சென்னை லேப்புக்கு அனுப்பி, அசைக்க முடியாத ரிப்போர்ட்டைக் கொண்டு வரப் போறேன்" என்றான் தீர்க்கமாக.
கர்ணனின் நெஞ்சுக்குள் ஒரு பெரிய இடி விழுந்தது போல இருந்தது...இத்தனை காலம் தான் தெய்வமாக மதித்த அண்ணன் விஸ்வநாதன், தன் சொந்த ஊர் மக்களின் வாரிசுகளையே அழிக்கும் ஒரு கொடூரமான துரோகி என்பதை அவனது மனம் இப்போது அப்பட்டமாக உணர்ந்தது.
அர்ஜுன் சொன்ன அந்தப் பொறுமையான மருத்துவ உண்மைகள், அவனது அந்த அதிபயங்கரமான கண்மூடித்தனமான விசுவாசத்தை அடியோடு சுக்கு நூறாக உடைத்துப் போட்டது.. அவனது கண்கள் இப்போது தர்மத்தின் பக்கமாகத் திரும்பத் தொடங்கின.
அதிகாலை நேரத்து அவமானமும், பம்ப்செட் அறையின் முன்னால் ஊர் ஜனங்கள் வளைத்துப் பிடித்துப் பேசிய அந்த அவதூறு வார்த்தைகளும் சுபத்ராவின் நெஞ்சில் ஒரு ஆறாத வடுவாக மாறியிருந்தன.
கர்ணன் வந்து பிரச்சனைகளை பெரிதாகாமல் தடுத்து நிறுத்தி, ஜனங்களை அமைதியாக்கிப் பின்வாங்க வைத்திருந்தாலும்... ஒரு பெண்ணாக, இந்த நெல்வயல் மண்ணின் மகளாக அவளுக்கு ஏற்பட்ட அந்த மன உளைச்சல் அவளை அணு அணுவாகச் சிதைத்திருந்தது.
நெல்வயல் அரசுப் பள்ளிக்கூடம் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது. மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்க, வகுப்பறை வராந்தாவின் நீளமான பாதையில் கையில் சில ஆங்கிலப் புத்தகங்களுடன் மிகவும் சோகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் சுபத்ரா.
அவளது தலைமுடி கலைந்து, முகத்தில் எப்போதும் இருக்கும் அந்தப் பசுமையான மழலைச் புன்னகை மறைந்து, கண்கள் அழுது அழுது வீங்கிப் போயிருந்தன.
அதே நேரத்தில், அவளுக்கு எதிரே தன் தோள் பையுடன் வராந்தாவில் விறுவிறுப்பாக நடந்து வந்தான் அர்ஜுன்.
காலையில் கர்ணனிடம் பொறுமையாக அத்தனை மலட்டுத்தன்மை மற்றும் நச்சு நீர் உண்மைகளையும் விவரித்து விட்டு, பள்ளிக்கு வந்திருந்தான்.
வராந்தாவில் சுபத்ராவைக் கண்டதும் அவனது முகம் லேசாக மலர்ந்தது. அவளது மனபாரத்தைக் குறைக்க வேண்டும் என்ற தவிப்புடன் அவளது அருகே நெருங்கி வந்தான்.
"சுபா..." என்று அர்ஜுன் தன் கனிவான குரலில் அவளது பெயரைச் கூறி அழைத்தான்.
அவளது கைகளைப் பற்றி "இன்னைக்குக் காலைல நடந்ததை நினைச்சு நீங்க இன்னும் வருத்தப்பட்டுட்டு இருக்கீங்களா.? கர்ணன் தான் இப்போ எல்லா உண்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டாரே...நாம தப்பானவங்க இல்லைனு இந்த ஊருக்கே சீக்கிரம் தெரிஞ்சுரும் சுபத்ரா" என்று ஆறுதலாகப் பேச முற்பட்டான்.
ஆனால் சுபத்ரா அவனது முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.. அந்த கர்ணன் யாரென்றும் கேட்கவில்லை.
அவளது கண்களில் இருந்து மீண்டும் ஒருமுறை கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. அர்ஜுன் தன் அருகில் வந்த அடுத்த நொடி அவளது ஆசிரியை கௌரவமும், காலையில் ஊர் மக்கள் முன்னால் தன் தந்தை பெரியசாமி ஐயா தலை குனிந்து நின்ற அந்த அவமானமும் அவளது நெஞ்சை அடைத்தது.
அவள் அர்ஜுனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், அவனது முகத்தைக் கூடப் பார்க்காமல், தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு விறுவிறுப்பாக அவனைக் கடந்து பேசாமல் போனாள்.
அவளது அந்தப் பாரா முகமும், கசப்பான மௌனமும் அர்ஜுனின் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்தது. அவனது நீட்டப்பட்ட கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றன.
"சுபா ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளுங்க..." என்று அர்ஜுன் பின்னாலிருந்து கத்தினான். சுபத்ரா தன் நடையின் வேகத்தை குறைத்து "சார் நீங்க பெரிய இடம்.. வேணாம் விட்டுருங்க சார்.." என்று விட்டு வகுப்பறைக்குள் சென்று விட்டாள்.
விஸ்வநாதனின் அந்த நச்சுத் தொழிற்சாலையின் ஃபேக்டரி கழிவு மர்மங்களை உடைக்க நள்ளிரவில் ஆபத்தில் இறங்கியதால், தங்களின் தூய்மையான, எதார்த்தமான காதல் மெல்ல அரும்பத் தொடங்கியிருந்த அதே வேளையில்... இந்தச் சாமானிய சமூகத்தின் அவதூறுப் பேச்சுகள் அவர்களின் காதலுக்கு நடுவே ஒரு பெரிய மௌனச் சுவரை எழுப்பியிருந்தது.
சுபத்ராவின் இந்த மாறாத கோபமும் தவிப்பும், அர்ஜுனை இன்னும் வீரியமாக விஸ்வநாதனின் அக்கிரமங்களை உலகிற்கு முன்னால் அம்பலப்படுத்தத் தூண்டியது.
சென்னையில் விருசாலி கட்சியின் புதிய மாநிலத் தலைவியாகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் மகுடம் சூடி விஸ்வநாதனைக் கட்சியை விட்டு அதிரடியாகத் தூக்கியடித்த அந்தப் பேரடியின் அதிர்வுகள் ஓய்வதற்குள், தமிழக அரசியலில் அடுத்த பிரம்மாண்ட திருப்பம் அரங்கேறியது.
இந்தியத் தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தத் தமிழகமே ஆவலோடு காத்துக் கொண்டிருந்த அந்தப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அடுத்த வினாடியே தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கின. கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஆத்திரத்தில், விஸ்வநாதன் தன் பண பலத்தையும், எஞ்சியிருந்த ரவுடி பலத்தையும் வச்சு, சுயேச்சையாகவோ அல்லது மாற்று அணியிலோ நின்று எப்படியாவது இந்தத் தேர்தலில் வென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற வெறியோடு சதித் திட்டங்களைத் தீட்டத் தொடங்கினார்.
அவரது அத்தனை பண பலத்திற்கும், சதிவலைகளுக்கும் சவாலாக இப்போது தேர்தல் களத்தில் ஒரு புதிய வரலாற்று எழுச்சி தொடங்கவிருந்தது.
கட்சியின் புதிய தலைவியான விருசாலியே நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்கி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் அதிர வைக்கும் பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளத் தொடங்கினாள்!
விருசாலியின் இந்தத் தேர்தல் பரப்புரை என்பது சாதாரண அரசியல்வாதிகளைப் போலப் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசும் மேடைப் பேச்சாக இருக்கவில்லை.
அவளது கார்ப்பரேட் பாணி சாணக்கிய வியூகமும், ஏழை எளிய மக்களின் மீதான அவளது நிஜமான மனிதநேயமும் கலந்த ஒரு புதிய புயலாக அது மாறியிருந்தது.
கறுப்பு நிறப் புடவையில், நெற்றி வகுட்டில் திலகமிட்டு, கைகளில் கட்சியின் சின்னத்தை ஏந்தியபடி, அவளது பிரம்மாண்ட திறந்தவெளிப் பரப்புரை வாகனம் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் கிராமத்துக் வீதிகளிலும் விறுவிறுப்பாக நகர்ந்தது.
"என் அன்பிற்குரிய தமிழக மக்களே.. உழைக்கும் வர்க்கத்தின் சாமானிய ஏழைத் தாய்மார்களே.." என்று விருசாலி பரப்புரை வாகனத்தின் மைக்ரோபோன் முன்னால் நின்று தன் கம்பீரமான கனிவான குரலில் பேசத் தொடங்கிய போது, அவளது பேச்சைக் கேட்க லட்சக்கணக்கில் கூடியிருந்த தொண்டர்களின் ஆரவாரமும், பெண்களின் கோஷங்களும் இடிமுழக்கமாக வானைப் பிளந்தன.
"அரசியல்ங்கறது இங்க சில பேருக்குப் பணத்தைச் சுருட்டவும், தங்களோட வாரிசுகளைச் சொகுசா வாழ வைக்கவும் பயன்படுற ஒரு வியாபார நாற்காலியா மாறிடுச்சு.. தொழில் வளர்ச்சி என்ற பெயரால... பேராசைப் பிடித்த மனிதர்கள் தங்களோட சுயநலத்துக்காக ஏழை ஜனங்களோட நிலத்தையும், தண்ணியையும் விஷமாக்கிட்டு வர்றாங்க..
ஒரு தலைமுறையையே அழிக்கத் துணியற போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தோடவும், நச்சுத் தொழிற்சாலை அதிபர்களோடவும் இந்தத் தேர்தல் களம் இப்போ தர்ம யுத்தம் நடத்தப் போகுது.. உங்களோ மகள் விருசாலி...எந்தப் பண பலத்துக்கும் அஞ்ச மாட்டாள்! உங்க வீட்டுப் பிள்ளையா வந்து நிறகிறேன்..
இந்தத் தமிழ்நாட்டோட ஒவ்வொரு ஏழைக் குழந்தையின் கல்விக்காகவும், உழவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் என்னோட இந்த உயிர் உள்ளவரை நான் போராடுவேன்.. அநீதியை நசுக்க, தர்மத்தின் பக்கமாக உங்கள் வாக்குகள் அமையட்டும்.." என்று சிங்கப் பெண்ணாக வீறுகொண்டு, அசாத்தியமான உறுதியோடும் திமிரோடும் தேர்தல் பரப்புரையை ஆவேசமாக மேற்கொண்டாள்.
அவளது அந்தத் தீர்க்கமான, அவளது பெரியப்பாவின் நேர்மையான பேச்சில் இருந்த காந்த ஈர்ப்பு, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்த அத்தனை ஏழை எளிய மக்களையும், பெண்களையும் அடியோடு கவர்ந்தது.
விஸ்வநாதன் கோடிகளை வாரி இறைத்துக் கூட்டத்தைக் கூட்ட நினைத்த இடங்களில் எல்லாம், விருசாலியின் ஒரே ஒரு சாணக்கியப் புன்னகைக்கும், கம்பீரமான பேச்சுக்கும் மக்கள் பேராதரவோடு, தங்களின் சொந்த வீட்டுத் திருவிழா போலத் தாங்களாகவே லட்சக்கணக்கில் திரண்டு வந்து அவளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
விருசாலி நடத்திய அந்தப் பிரம்மாண்டமான சாணக்கியத் தேர்தல் பரப்புரைப் புயல், விஸ்வநாதனின் முதலமைச்சர் நாற்காலி கனவின் அஸ்திவாரத்தையே அடியோடு உலுக்கி, அவனது ஒட்டுமொத்தப் பண பலத்திற்கும் ஒரு மரண அடியாக மாறியது.
தமிழகம் முழுவதும் புதிய தலைவி விருசாலியின் சாணக்
கியத் தேர்தல் பரப்புரைப் புயல் விஸ்வநாதனின் பண பலத்தை அடியோடு உலுக்கிக் கொண்டிருந்த வேளையில், நெல்வயல் கிராமத்தின் அரசுப் பள்ளிக்கூடத்தின் அறிவியல் ஆய்வகத்தில் ஒரு திருப்பம் அரங்கேறியது.
தொடரும்...

Last edited: