மகுடம் சூட்டும் காதல்
New member
அத்தியாயம் - 6
கர்ணனின் இவ்வார்த்தைகள் மறுமுனையில் இருந்த அர்ஜுனனுக்கு கோவத்தை உண்டு பண்ணியது.
இவனை தூக்கி வளர்த்ததற்காக நம்பலாம்.. இப்படி கண்மூடித்தனமாக நம்பிக்கை தேவையா.? என்ற எரிச்சல் அவனுள் தோன்றியது.
இதைப் பற்றி விருசாலியிடம் ரகசியமாகப் பேச நினைத்தது அம்பலமாகி விட்டாலும், அவன் சற்றும் அஞ்சவில்லை.
"கர்ணன் நீங்க உங்க அண்ணன் மேல வெச்சுருக்கற விசுவாசம் என் அக்கா கழுத்துல நீங்க கட்டியிருக்க தாலியை விட ரொம்பப் பெருசுனு எனக்கும் நல்லாவே தெரியும்.." என்றான் எள்ளலுடன்.
"ஆனா கண்மூடித்தனமான பாசம் கண்ணை மறைக்கும்னு சொல்லுவாங்க.. அது உங்க விஷயத்துல நூறு சதவீதம் நிஜம்.. நான் சொல்றது பழிச் சொல் இல்லை கர்ணா..
இந்த நெல்வயல் கிராமத்து மண்ணோட சாபம்.. உங்க அண்ணனோட கள்ளப்பண ஆசையால இங்க இருக்கற ஒட்டு மொத்தக் கிராமத்தோட வம்சமே அழிஞ்சுட்டு இருக்கு.. இதை உங்க கிட்ட சொன்னா உங்களால ஜீரணிக்க முடியாது.. இந்த பாவத்துக்கு எல்லாம் உங்க அண்ணனே ரோட்டுல ஓட விட்டு சாவடிக்கணும்.. மனுசனா அவன்.. அவன் மேல நான் வெச்சுருந்த மரியாதையே போய்ருச்சு.." என்றவனின் வார்த்தையில் சலிப்பு தான்.
நெல்வயல் என்ற கிராமத்தின் பெயரை நன்றாக கேட்க தவறி இருந்தான். இப்போதே கேட்டிருந்தால் இந்த கர்ணனே அந்த கிராமத்தை காப்பாற்ற நினைத்திருப்பான்.
"ஏய் அர்ஜுன்.. வார்த்தையை அளந்து பேசுடா.. எங்க அண்ணன் அநாதையா நின்ன எனக்குப் சோறு போட்டு வாழ வச்ச தெய்வம்டா.. அவரைப் பத்தி இன்னும் ஒரு வார்த்தை தப்பா பேசின நீ சென்னை எல்லையைத் தாண்டி போனாலும், அங்கயே வந்து உன்னை ஒழிச்சுக் கட்டுவேன்
. ஜாக்கிரதை.." என்று ஆக்ரோஷமாக எச்சரித்தான்.
அலட்சியமாகச் சிரித்த அர்ஜூன் "என்னைய மிரட்டுறதை வச்சு உங்க அண்ணனோட குற்றத்தை உங்களால மூடி மறைக்க முடியாது.. நீங்க யாருக்கும் பயப்படாத வீரனா இருக்கலாம்.. ஆனா உங்க அண்ணன் ஒரு கொடூரமான துரோகிங்கறது தான் நிஜம்..
இப்போ நான் உங்களுக்கு ஒரு சவால் விடறேன்.. மகாபாரதத்துல அர்ஜுனன் விட்ட அம்பு கர்ணனோட தேர்க்காலைப் பூமில மாட்ட வெச்சுது..
நான் சும்மா பழிச்சொல் சொல்லல.. இந்த நெல்வயல் கிராமத்து மக்களோட கண்ணீரை நான் கண்ணாரப் பார்க்கறேன்.. இப்போதைக்கு என்கிட்ட வெறும் பேச்சு தான் இருக்கு.. ஆனா நான் ஊர் மக்கள்கிட்ட இன்னும் பேசப் போறேன்.. இன்னும் விபரங்களைச் சேகரிக்கப் போறேன். நான் சொல்றது உண்மைதான்னு இன்னும் சில நாட்கள்ல அறிவியல் ஆதாரத்தோட உங்க முன்னாடி வந்து நிரூபிச்சுக் காட்டுறேன்!
அன்னைக்கு உங்க அண்ணனோட சேர்த்து நீங்களும் சட்டம் முன்னாடி தலை குனிஞ்சு நிற்பீங்க.. என் சவாலை ஏத்துக்குறீங்களா.? ஒருவேளை உங்க அண்ணன் குற்றவாளினு தெரிஞ்சுட்டா என்ன பண்ணுவீங்க.? உங்க அண்ணனை நீங்களே வெட்டி சாய்ப்பீங்களா என்ன.?" என்று அவனிடம் வினவினான்.
கர்ணனும் யோசிக்காமல் அண்ணன் மீது தவறு இருக்காது என்ற நம்பிக்கையில் "உன் சவாலை ஏத்துக்குறேன்டா.. என் அண்ணன் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டாருனு தெரிஞ்சுட்டா உன்னோட வாழ்நாளும் அதோட முடிஞ்சுரும்.. உனக்கம் இதுல சம்மதம் தானே.?" என்று கர்ணனும் கேட்டான்.
அர்ஜூனாவது அவனின் அண்ணனை தான் கொல்ல வேண்டும் என்று கேட்கிறான்.. ஆனால் கர்ணனோ அர்ஜூனைத் தான் கொல்வேன் என்கிறான்..
மேலும் "நீ என்ன அறிவியல் ஆதாரம் வேணா திரட்டு.. என் அண்ணன் நேர்மையானவர்னு நிரூபிக்க இந்தக் கர்ணனோட விசுவாசக் கவசமே போதும்டா.. நீ சொல்றது பொய்னு மட்டும் உறுதியானா அடுத்த நிமிஷம் நீ இந்த உலகத்துலேயே இருக்க மாட்ட.." என்றதில் விருசாலி தான் அதிர்ந்தாள்.
"கர்ணன் யோசிச்சு பேசு.." என்று விருசாலி கூறிய சமயம் அர்ஜூனனே"எனக்கு சம்மதம்.." என்றிருக்க, "உன்னோட வாழ்நாளை எண்ணிக்கோ.." என்று விட்டு போனை தூக்கி எறிந்தான்.
சிவந்த கண்களோடு விருசாலியிடம் திரும்பிய கர்ணன் "பார்த்தீயா விருசா... உன் தம்பியோட திமிரைப் பார்த்தீயா.?" என்று கேட்டு அவளருகே நெருங்கி வந்து அவளது தோள்களைப் பலமாகப் பற்றி உலுக்கி "எங்க அண்ணனைப் பத்தி எவ்வளவு கேவலமா பேசுறான்.? நீ இந்த வீடியோவை வச்சு என்னை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டது பத்தாதுனு, இப்போ உன் தம்பியை வச்சு என் அண்ணன் மேல பழி போடப் பார்க்கறீயா.?
உங்க குடும்பத்தோட இந்த அரசியல் சதிக்கு நான் பலியாக மாட்டேன்.. என்னைய ஏமாத்தி என் அண்ணனை சாவடிக்க நினைக்கறீங்களா.? உங்க புத்தி ஏன் இப்படி போகுது.? அதான் தில்லாலங்கடி வேலை பார்த்து என்னைய கல்யாணம் பண்ணியாச்சுல.? அப்பறமும ஏன் என் அண்ணனை பத்தி இப்படி பேசிட்டு இருக்கீங்க.?" என்று கத்தினான்.
அவனது பிடியில் இருந்த வலியை விட, அவனின் கண்மூடித்தனமாக நம்பிக்கையை நினைத்து மனதிற்குள் தவித்தாள்.
அவனது கைகளை மெதுவாக விலக்கி விட்டு அவனின் கண்களை நேராகப் பார்த்தவள்
"என் தம்பி அர்ஜுன் சும்மா சவால் விடறவன் இல்லை கர்ணா.. அவன் ஒரு சயின்ஸ் கிராஜுவேட்.. ஆதாரமில்லாம அவன் பேச மாட்டான்.. அவனுக்கு அரசியலே பிடிக்காது.. இப்ப வரைக்கும் அவன் ஏதாவது பேசி இருக்கானா.? இப்ப பேசறனா நிலைமை ரொம்ப மோசம்னு உனக்கு புரியலயா.?
நீ உன் அண்ணனைத் தெய்வமா கும்பிடு.. எனக்குக் கவலையில்லை.. ஆனா அந்தத் தெய்வம் ஒரு மாபெரும் துரோகினு நிரூபிக்கப்படற அன்னைக்கு உன்னோட இந்த விசுவாசம் சுக்குநூறா உடையும்..
அன்னைக்கு தான் நீ இந்த விருசாலியோட அருமையை உணர்வ.. அது வரைக்கும் உன் கோவத்தை நீயே பத்திரமா வச்சுக்கோ.." என்று அவனுக்கு இணையாக விருசாலியும் பதிலடி கொடுத்தாள்.
அறையில் விஸ்வநாதன் மற்றும் ஆகாஷ் இருவரும் இருந்தனர். விஸ்வநாதனின் முகம் கோவத்தில் இருண்டு போயிருந்தது. நேற்று இரவும் ஆகாஷ் குடித்து விட்டு வந்து விருசாலியிடமும் தவறாக பேசி இருக்கிறான்.. அதில் கடுப்பான விருசாலி இவனை அடித்திருக்கிறாள்..
இதைப் பற்றி விஸ்வநாதன் அறிந்தும் விருசாலியிடம் சண்டையிடாமல் தன் மகனை தான் காய்ச்சி எடுக்கிறார். காரணம் அந்த ரகசிய வீடியோவை எங்கே மீடியாவிற்கு அனுப்பி விடுவாளோ.? என்ற பயம் அவருக்குள் இருந்தது.
"ஆகாஷ் உனக்கு எத்தனை தடவை சொல்றது.? அந்த விருசாலி கைல இப்போதைக்கு ஆதாரம் இருக்கு.. அவகிட்ட வம்பு வச்சுக்காதனு சொன்னா கேக்குறீயா.? குடிச்சுட்டு வந்து அவ ரூம் வாசல்ல நின்னுக் கத்தறீயே அறிவு இருக்காடா உனக்கு.?" என்று தன் மகனை தான் கோபமாக திட்டினார்.
ஆகாஷூம் அலட்சியமாக "நான் என்ன தப்பு பண்ணிட்டேன்.? எனக்குக் கிடைக்க வேண்டிய விருசாலியையும், அந்த அரசியல் அந்தஸ்தையும் அந்த வளர்ப்பு நாய் கர்ணன் தட்டிப் பறிச்சிட்டான்.. அதை நான் கேட்கக் கூடாதா.? இவனை ஏன் இன்னும் இந்த வீட்டுக்குள்ள வச்சிருக்கீங்க.? அவனால தான் நமக்கு எல்லா நஷ்டமும்.." என்று கர்ணனைத் திட்டினான்.
இவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே கர்ணனை பிடிக்கவில்லை. இவன் திமிரில் அனைவரையும் மிரட்டி உருட்டினால் அவன் அன்பால் அனைவரையும் அதட்டி வேலைகள் வாங்குவான். அவனைக் கண்டால் எழுந்து நிற்கும் அனைவரும் ஆகாஷைக் கண்டு விட்டால் முகத்தை திருப்பிக் கொண்டு தான் எழுந்து நிற்பார்கள்.
இப்படி பல செயல்களின் மூலம் கர்ணனின் மேல் ஆகாஷூக்கு பொறாமை தான் ஏற்பட்டது. இறுதியாக விருசாலியின் விசயத்தில் அவனை கொன்று விடும் அளவிற்கு அவனின் மேல் வஞ்சமும் தோன்றியது.
அந்நேரம் கர்ணனும் உள்ளே வர, அவனுக்கு ஆகாஷின் வார்த்தைகளும் கேட்க தான் செய்தது. கர்ணன் அமைதியாக ஒரு இடத்தில் நின்று விட்டான்.
ஆகாஷ் தன்னை வளர்ப்பு நாய் என்று சொன்னதை கேட்ட போதும் அவனது முகம் மாறவில்லை. அண்ணன் விஸ்வநாதனின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.
இந்த முறை விஸ்வநாதனின் கோவம் ஆகாஷின் மேல் திரும்பாமல் விருசாலியின் மிரட்டலிலும் தன் மகனின் வார்த்தைகளால் தூண்டப்பட்டதில் நேராகக் கர்ணனின் மீது திரும்பியது.
தன் மகனுக்குக் கிடைக்க வேண்டிய சொத்தும் அந்தஸ்தும் கர்ணனுக்குப் போய்விட்டதே என்ற பொறாமை அவருக்குள்ளும் ஏற்கனவே இருந்தது அல்லவா.?
"எல்லாம் உன்னால தான்டா கர்ணா.." என்று அவனிடம் எகிறியவர் "அன்னைக்குத் தலைவர் உன்னை மாப்பிள்ளையா கேட்டப்போவே நீ ஒழுங்கா அந்தப் பேச்சை மறுத்துருக்கணும்.. என் அண்ணன் பையன் ஆகாஷுக்குத் தான் விருசாலியைக் கட்டிக் கொடுக்கணும்.. அவன் தான் சரியா இருப்பானு நீ பிடிவாதம் பிடிச்சுருக்கணும்..
அதை விட்டுட்டு அமைதியா இருந்தது தானே இவ்ளோ பெரிய பிரச்சனைல வந்து நிற்குது.. அந்த பெரிய மனுஷனுக்கு தான் அறிவில்லனா உனக்கும் இல்லையா.? அவன் அந்த வீடியோவை வெச்சு மிரட்டறா.. நீயும் அமைதியா இருக்க.? இது தான் சமயம்னு பொட்டச்சி மேல மயங்கிட்டியா.?
உனக்கு இப்போ தலைவர் வீட்டு மாப்பிள்ளைங்கிற கௌரவம் வேணுமாடா.? உன்னை அநாதையா நின்னப்போ தூக்கி வளர்த்தேனே அதுக்கு நீ செய்யற நன்றிக் கடன் இதுதானா.? டேய் இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நீ அனாதை பய தான்.. நீ அனாதை பையன் தான்டா.. ச்சீ என் மூஞ்சி முன்னாடி நிற்கா.. போய் தொலை.." என்று காய்ந்தார்.
அவரிடம் இருந்த ஒட்டு மொத்த ஆத்திரமும் பொறாமையும் வெளிப்பட்டிருந்தது. இவ்வார்த்தைகளை கேட்டதும் கர்ணனின் மனநிலையை என்னவென்று சொல்ல.? கலங்கி விட கூடாது என்பதில் மட்டும் இவன் தீர்மானமாக இருந்ததும் நன்றாக போயிற்று.
அவன் அமைதியாக நின்றது விஸ்வநாதனின் கோவத்தை அதிகப்படுத்திட, கர்ணனின் சட்டையைப் பற்றி "பேச மாட்டியாடா.? வாய் மூடி போச்சா.? நாய் நன்றியுள்ளதா இருக்கும்னு நினைச்சேன்.. ஆனா நீ என் பையனோட வாழ்க்கையையே காலி பண்ண பார்க்கற.?
அநாதைப் பயலே உனக்கு என் வீட்டுல சோறு போட்டதுக்கு என் குடும்பத்தையே நடுத்தெருவுல நிறுத்தப் பார்க்குறியாடா.?" என்று மீண்டும் மீண்டும் இப்படியே பேசி அவனைக் காயப்படுத்தினார்.
யாருக்கும் அஞ்சாத அவனது பலமான கைகள் ஆத்திரத்தில் சுருண்டன. நினைத்திருந்தால் அங்கிருக்கும் அனைவரையும் ஒரே நொடியில் துவம்சம் செய்யும் வலிமை அவனுக்கு இருக்கிறது.
ஆனால் தனக்கு பதினைந்து வயதில் சோறு போட்டு வளர்த்த அண்ணனின் மேல் வைத்திருக்கும் நன்றிக்கடனும், விசுவாசமும் அவனது கோபத்தைக் கட்டிப் போட்டன.
கர்ணன் தன் கைகளை மெதுவாகத் தளர்த்தினான். அவனது கண்கள் கலங்கினாலும் உதடுகள் நடுங்கினாலும், தன் அண்ணனை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.
தலையைத் தாழ்த்திக் கொண்டு, சிலையைப் போல அமைதியாக, குற்றவாளியைப் போல அங்கேயே நின்று கொண்டிருந்தான். ஏதேச்சையாக அவ்வழியில் வந்த விருசாலி இதைக் கேட்டிருக்க, அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
பேச வேண்டியவன் பேசாமல் நிற்கும் போது இவள் என்ன பேசுவாள்.?
'உனக்காக உயிரையே கொடுக்கத் துணியற இந்த நல்லவனைப் போய் இவ்வளவு கேவலமா பேசறான் இந்த விஸ்வநாதன்.. இவ்வளவு நடந்தும் அவனுக்காக நீ இன்னும் அமைதியா நிற்கறீயே.? உன் விசுவாசம் உடையற அன்னைக்கு இந்த விஸ்வநாதனோட கோட்டை எப்படிச் சரியுதுனு அவருக்கு நான் காட்டறேன்..
என் கர்ணனை நீ அவமானப்படுத்தற ஒவ்வொரு நொடியும் உனக்கு நரகமா தான் போகும்.. உன்னைய நிம்மதியா இருக்க விட மாட்டேன்..' என்று மனதிற்குள் சபதம் எடுத்த விருசாலி அதை செயல்படுத்தவும் முடிவானாள்.
அன்று தான் மணமக்கள் முறைப்படி பெண் வீட்டிற்குச் செல்லும் மறுவீடு விருந்து.
இதில் விஸ்வநாதனுக்கு விருப்பமில்லை என்றாலும் தலைவர் கேட்டதற்காக மட்டுமே சம்மதித்திருந்தார்.
அவரிடம் காட்ட முடியாத கோவத்தை கர்ணனிடம் 'இதுக்கு தானே நீ ஆசைப்பட்ட.. போ.. போய் ஆடிட்டு வா..' என்று கத்தி விட்டிருந்தார்.
"கர்ணா கார் ரெடியா இருக்கு.. இன்னும் எவ்வளவு நேரம் ஜன்னலையே வெறிச்சுப் பார்த்துட்டு இருப்பீங்க.? கிளம்பலாமா.?" என்று கேட்டாள் விருசாலி.
பளபளக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில், நெற்றி வகுட்டில் குங்குமமிட்டு ஆளை மயக்கும் அழகில் நின்றிருந்தாள். இவர்களின் சண்டை அனைத்தும் பகலில் மட்டும் தான்..
கர்ணன் அவளை ஒரு கசப்பான பார்வையோடு பார்த்தான். பட்டு வேட்டி சட்டையில் அவனும் கம்பீரமாகத் தான் இருந்தான். ஆனால் அவனது மனதுக்குள் ஒரு பெரிய போர்க்களமே ஓடிக் கொண்டிருந்தது.
அவனருகில் வந்து "என்னடா.?" என்று சட்டை பட்டனை திருகியபடி கேட்க, "ஒன்னுமில்ல.. போகலாமா.?" என்று வலுக்கட்டாயமாக அவளை தன்னில் இருந்து பிரித்தான்.
இருவரும் பங்களாவின் போர்டிகோவில் நின்றிருந்த கறுப்பு நிறச் சொகுசு காரில் ஏறினர். கார் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கடந்து, அடையாறு பகுதியில் இருக்கும் விருசாலியின் சொந்த மாளிகையை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்தது.
காரின் பின் இருக்கையில் இருவருக்கும் இடையே ஒரு அடி தூரம் இடைவெளி இருந்தது. அந்தப் பயணத்தின் போது நிலவிய நிசப்தத்தை உடைத்தாள் விருசாலி.
"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.? எங்க வீட்டுக்கு வர்றதுல உங்களுக்கு இஷ்டம் இல்லையா.?" என்று எதார்த்தமான குரலில் கேட்டாள்.
கர்ணன் அவளைத் திரும்பிப் பார்த்தான். "இஷ்டம், கஷ்டம்னு யோசிச்சு நான் எதையும் பண்றதில்லை விருசா.
அண்ணன் சொன்னாரு.. அதுக்காக தான் வர்றேன்.. மத்தபடி உங்க குடும்பத்தோட ஆடம்பரமும், இந்த அரசியல் பின்னணியும் எனக்கு எப்பவுமே செட் ஆகாது.. அண்ணன் சொன்னா எதுவும் செய்வேன்.." என்றான் கறாரான குரலில்.
விருசாலி லேசாகப் புன்னகைத்தே "ஆடம்பரத்தை வச்சு மனுஷங்களை எடை போடாதீங்க கர்ணா.. எங்க பெரியப்பாவும் பெரியம்மாவும் உங்களை எப்படி நடத்துறாங்கனு உள்ள வந்து பார்த்துட்டு அப்பறமா முடிவு பண்ணுங்க" என்றாள் நிதானமாக.
"சதி பண்ணி என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க குடும்பத்துக்கு அடிமையாகிருன்னு நினைச்சீயா விருசா.?" என்று பல்லை கடித்தபடி கேட்டவன் "என் அண்ணன் விஸ்வநாதனைத் தாண்டி இந்த உலகத்துல வேற யாரும் எனக்கு முக்கியமில்லை.. அது நீயா இருந்தாலும் சரி.." என்றவனிடம் இவள் எதுவு
ம் பேசவில்லை. பேசுவது வீண் என்றும் அவளுக்கு தெரியும்..
அதன் பின்பு இருவரின் பயணமும் அமைதியாகவே தொடர்ந்தது.
தொடரும்..