மகுடம் சூட்டும் காதல்
New member
அத்தியாயம் - 8
வரவேற்பறையில் விஸ்வநாதன் ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருக்க, அவருக்கு எதிரே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான சென்னை அதிரடிப் போலீஸ் படை நின்றிருந்தது.
இரண்டு தடிமனான காவலர்கள் ஆகாஷின் கைகளைப் பலவந்தமாகப் பின்னுக்கு இழுத்துப் பூட்டிக் கொண்டிருந்தனர்.
அவன் இப்போது போதையில் இருப்பான் போலும் "டேய் யார்ரா நீங்க.? தமிழ்நாட்டோட அடுத்த முதலமைச்சராகப் போற விஸ்வநாதனோட பையன்டா நான்.. என் மேலயே கையை வைக்கிறீங்களா.? உங்க எல்லாரையும் யூனிஃபார்மை கழட்ட வச்சு நடுத்தெருவுல நிக்க வைப்பேன்.." என்று ஆகாஷ்.அதிகாரத் திமிரில் கத்தி திமிறினான்.
அவனது தலைமுடி கலைந்து, ஆடம்பர சட்டை கசங்கிப் போய் அசிங்கமாகக் காட்சியளித்தான்.
விஸ்வநாதன் பற்களை நறநறவெனக் கடித்து எஸ்பியின் முன்னால் வந்து நின்று "எஸ்பி என்ன தைரியம் இருந்தா என் பங்களாக்குள்ள புகுந்து என் பையனுக்கு விலங்கு மாட்டுவ.? உனக்கு யாரு இந்த ஆர்டரைக் கொடுத்தது.? அந்தப் பார்ட்டி தலைவர் கொடுத்தாரா.? இதோ இப்போவே ஹோம் செக்ரட்டரிக்கு போன் போடுறேன்.." என்று விஸ்வநாதனும் எகிறினார்.
"மிஸ்டர் விஸ்வநாதன்.. உங்க போன் கால்களால இப்போ எங்களைய ஒன்னும் பண்ண முடியாது.. உங்க பையன் ஆகாஷ் அவனோட ஃபிரண்ட்ஸ் கூடச் சேர்ந்து காலேஜ் பசங்களுக்கும், சென்னை முழுக்க இருக்கற பெரிய நெட்வொர்க்குக்கும் பல நூறு கிலோ கஞ்சா கடத்தல் பண்ணியிருக்கான்..
சர்வதேச அளவுல போதைப்பொருள் கடத்துற கும்பலோட இவனுக்கு நேரடித் தொடர்பு இருக்கு.. ஆந்திரா பார்டர்ல பிடிபட்ட கஞ்சா லாரியில இருந்த டிரைவர், ஆகாஷ் பேரைத் தான் வாக்குமூலமா கொடுத்திருக்கான்.. அதுக்கான பக்கா ஆதாரங்களும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வாரண்ட்டும் இப்போ எங்க கைக்கு வந்துருச்சு..
மேலிடத்து உத்தரவுப்படிதான் நாங்க இங்க வந்திருக்கோம். உங்க பையனை நாங்க கைது செய்து அழைச்சுட்டு போக தான் போறோம்.." என்று முடிவாக கூறினார்.
"கஞ்சா கேஸா.? என் பையன் மேல போதைப்பொருள் கேஸ் போடுறீங்களா.? யாருடா இதைப் பண்ணுனது.?" என்று விஸ்வநாதன் அதிர்ச்சியில் கத்தினான்.
கறுப்புப் பணம் அல்லது அரசியல் வழக்குகளாக இருந்தால் கூடத் தன் அதிகாரத்தை வைத்து தப்பித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் ஜாமீனே கிடைக்காத இந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தன் மகன் சிக்கியிருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை.
ஏதோ ஒரு ரகசியப் புள்ளி தங்களுக்குள் இருந்து கொண்டே தங்களின் அத்தனை கறுப்புப் பக்கங்களையும் போலீசுக்கு அனுப்பியிருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார்.
வாசலில் நின்று இந்த நாடகத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் விருசாலி. அவளது உதடுகளில் ஒரு மர்மமான புன்னகை முளைத்திருந்தது.
ஆம் இது அத்தனையும் விருசாலி போட்ட பக்காவான பிளான் தான்.. விஸ்வநாதனும் ஆகாஷும் சேர்ந்து தன் பெரியப்பாவைத் கொலை செய்யப் திட்டம் போட்டார்கள் என்ற போது கூட அவளுக்கு இப்படியொரு யோசனை எழுவில்லை.
கர்ணனை விஸ்வநாதன் விடாமல் அவமானப்படுத்தி கொண்டிருப்பதைக் கண்டு தான் இப்படியொரு யோசனையே அவளுள் எழுந்தது.
முதலில் விஸ்வநாதன் அடங்க வேண்டும் என்றால் ஆகாஷை தான் முடக்க வேண்டும் என்று அவளுக்கு புரிந்தது. அதனால் தான் ஆகாஷ் ரகசியமாகச் செய்து வந்த கஞ்சா கடத்தல் பிசினஸ் விபரங்களை சேகரித்து அத்தனை ஒரிஜினல் ஆதாரங்களையும் திரட்டி சென்னையில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்குப் பின்னணியில் இருந்து அனுப்பி ஆகாஷை விஸ்வநாதனின் கண் முன்னாடியே தூக்க காய் நகர்த்தி இருந்தாள் விருசாலி.
இத்தனை நாட்கள் அனாதை பயலே அனாதை பயலே என்றழைத்த கர்ணனை இப்போது மட்டும் "அண்ணா.. கர்ணா அண்ணா! இங்க வாங்க அண்ணா.. இந்த போலீஸ்காரங்க என்னை கஞ்சா கேஸ்ல அரெஸ்ட் பண்றாங்க.. நான் எதுவும் பண்ணல அண்ணா.. இவங்களை வெட்டி போடுங்க அண்ணா.." என்றழைத்தான்.
ஆகாஷ் கைகளில் விலங்குடன் நிற்பதைக் கண்டதும் கர் "எஸ்பி என் தம்பி கையை விடுங்க.. விஸ்வநாதன் குடும்பத்து மேல கையை வைக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்.?" என்று கர்ணனை கர்ஜித்தபடி எஸ்பியின் சட்டையைப் பிடிக்க முன்னால் வந்தான்.
எஸ்பி கர்ணனைப் பார்த்துத் தன் குரலை நிதானப்படுத்தி "மிஸ்டர் கர்ணன்.. நீங்க நேர்மையானவர்னு எங்களுக்குத் தெரியும்.. ஆனா ஒரு கஞ்சா கடத்தற குற்றவாளிக்கு ஆதரவா நீங்க சட்டம் பேசாதீங்க.. உங்க தம்பி செஞ்சுருக்கற இந்த தப்புக்குச் சட்டம் கண்டிப்பா தண்டிக்கும்.. இதையும் மீறி நீங்க எங்களைத் தடுத்தா அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்த வழக்கு உங்க மேல பாயும்.." என்று விட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைக் காட்டினார்.
அதை பார்த்த பின்பு கர்ணனும் அமைதியாகி விஸ்வநாதனைப் பார்த்தான். விஸ்வநாதன் செய்வதறியாது தன் குடும்பப் கௌரவமே இந்த கஞ்சா கேஸால் சென்னை முழுக்க நாரப்போகிறதே என்ற அவமானத்தில் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.
"இன்ஸ்பெக்டர் இவனை வண்டியில ஏத்துங்க.." என்று எஸ்பி உத்தரவிட, ஆகாஷ் கஞ்சா கடத்திய குற்றவாளியாகப் பலவந்தமாக பங்களாவுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டான்.
விஸ்வநாதனின் அடியாட்கள் மற்றும் ரவுடி பலம் அந்த ஒரு நொடியில் சிதறியது. போலீஸ் ஜீப்பின் பின் இருக்கையில் ஆகாஷ் தள்ளப்பட, சைரன் சத்தத்துடன் கார் பங்களாவை விட்டு வெளியேறியது.
பங்களாவுக்குள் ஒரு பயங்கரமான மௌனம் நிலவியது. விஸ்வநாதன் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடி மேஜையை எட்டி உதைத்து உடைத்தார்.
விருசாலி மெதுவாகக் கர்ணனின் அருகே வந்து நிற்க, அவளது கண்கள் விஸ்வநாதனை உற்று நோக்கியபடி இருந்தன.
"பார்த்தீங்களா கர்ணா.. தப்பு செஞ்சா சட்டம் யாரையும் சும்மா விடாது.. அது கஞ்சா கடத்தற விஸ்வநாதனோட மகனாகவே இருந்தாலும் சரி.." என்று கர்ணனின் காதுகளில் மட்டும் கூறியவள் அவன் முறைப்பதைக் கண்டு சமாளிப்பாக சிரித்து விட்டு சென்றாள்.
போலீஸ் வண்டி ஆகாஷை ஏற்றிக் கொண்டு பங்களா வாசலை விட்டு நகர்ந்த அடுத்த நொடி, விஸ்வநாதன் ஒரு பைத்தியக்காரனைப் போலக் கத்தத் தொடங்கினார். மங்களம் அழுதபடி நின்றார். அவருக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது.
"என் பையன்.. என் ஒரே பையன் ஆகாஷை கஞ்சா கேஸ்ல உள்ள தள்ளிட்டாங்களே.. இதோ இப்போவே பெரிய வக்கீல்களை வச்சு அவனை ஜாமீன்ல எடுக்க ஏற்பாடு பண்ணனும்டா" என்று கத்தியபடி கர்ணனைப் பார்த்தான்.
கர்ணன் தன் அண்ணனின் தவிப்பைத் தாங்க முடியாமல் "அண்ணே.. நீங்க பதறாதீங்க.. நான் இப்போவே சிட்டி எஸ்பியைப் பார்க்கக் கிளம்புறேன்.. ஆகாஷுக்கு ஒன்னும் ஆகாம நான் பார்த்துக்கிறேன்.." என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறியவன் வெளியில் ஓடினான் .
வரவேற்பறையில் இப்போது விஸ்வநாதனும் விருசாலியும் மட்டும் தான் தனியாக நின்றிருந்தனர். அவள் எதையும் கண்டு கொள்ளாமல் சோபாவில் அமர்ந்தாள்.
விஸ்வநாதன் ஆத்திரத்தில் மற்றொரு சோபாவை எட்டி உதைத்து "யாரோ ஒரு துரோகி நமக்குள்ளயே இருந்துக்கிட்டு என் பையனோட கஞ்சா நெட்வொர்க் விபரங்களை போலீசுக்குக் கொடுத்திருக்கான்.. அவன் யாருன்னு மட்டும் தெரியட்டும்.. துண்டு துண்டா வெட்டி ஏரில வீசறேன்.." என்று பற்களை நறநறவெனக் கடித்து கூறினார்.
விருசாலியோ சாவகாசமாக "அந்த துரோகியைத் தேடி நீங்க எங்கேயும் போக வேண்டாம் விஸ்வநாதன்.. அது நான் தான்.." என்றாளே பாருங்கள்..
விஸ்வநாதன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அவளது உதடுகளில் ஒரு வக்கிரமான சாணக்கியப் புன்னகை மின்னியது.
"என்ன உளறுற.? நீயா இதைய பண்ணுன.?" என்று விஸ்வநாதன் அதிர்ச்சியில் கத்த,
"நான் உளறல.. உண்மையைச் சொல்றேன்.. நான் தான் பண்ணுனேன்.. இனி பண்ண வேண்டியதையும் பண்ணுவேன்.." என்று அவளும் குரலை உயர்த்தி கூறினாள்.
பின்பு "உங்க மகன் ஆந்திரா பார்டர்ல இருந்து சென்னைக்குக் கஞ்சா கடத்தற அத்தனை ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸையும், அவனோட லாரி நம்பரையும் எஸ்பிக்கு ரகசியமா அனுப்பி உங்க கண் முன்னாடியே அவனுக்கு இரும்பு விலங்கு மாட்ட வச்சது இந்த விருசாலி தான்.. அது நானே தான்.." என்றாள் தீர்க்கமாக.
"ஏய் என்ன துணிச்சல் இருந்தா என் பையனை நீ ஜெயிலுக்கு அனுப்புவ.? எதுக்கு என் குடும்பத்தை அழிக்கப் பார்க்கற.? என் பையன் உன்னைய என்ன பண்ணுனான்.? எவ்ளோ தைரியம் இருந்தா என் பையன் மேல நீ கை வெச்சுருப்ப.?" என்ற விஸ்வநாதன் ஆவேசமாக அவளை அடிக்க முன்னால் வர,
"அப்படியே நில்லுங்க.. என் மேல கை வச்சா அடுத்த நிமிஷம் உங்க பையன் மேல போய்ருவான்.." என்று கர்ஜித்தாள் விருசாலி.
"எதுக்கு உங்க பையனை உள்ள போட்டேன்னு கேக்குறீங்களா? இத்தனை காலமா இந்த பங்களாவுல என் புருஷனை அனாதைப் பயலே... அநாதைப் பயலேனு சொல்லி, அவரோட உழைப்பையும் விசுவாசத்தையும் சுரண்டுனீங்களே..
அந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்க அனுபவிக்கப் போற தண்டனை தான் இது.. என் கர்ணனை அநாதைனு சொல்ல இந்த உலகத்துல யாருக்கும் தகுதியில்லை.. நீங்க அவரை அநாதைனு சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்க வாரிசு இனி மேல் அணுஅணுவா ஜெயில்ல நரகத்தை அனுபவிப்பான்.. இது விருசாலியோட சவால்.." என்று விஸ்வநாதனின் முகத்திற்கு நேரே சம்மட்டி அடி அடித்தாள்.
விஸ்வநாதன் வாயடைத்துப் போய் நின்றார்.
அதே சமயம் அண்ணனிடம் ஏதோ கேட்க வந்த கர்ணன் பெண்ணவள் கூறியதைக் கேட்டு அப்படியே உறைந்து போய் நின்றான். அவனது கால்கள் மேற்கொண்டு நகர மறுத்தன.
இது அத்தனையும் தனக்காகவா.? என்று கர்ணனால் நம்ப முடியவில்லை.. ஆகாஷ் செய்ததும் தவறு தான்.. பள்ளி படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கெடுப்பது எந்த வகையில் நியாயம்.? இப்போது என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. வந்த வழியிலே அப்படியே கிளம்பியும் விட்டான்.
விஸ்வநாதனால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அவளை முறைத்து விட்டு செல்ல, கண்ணில் வழிந்த கண்ணீருடன் நின்றிருந்த மங்களத்திடம் "நான் செஞ்சதுல எந்த தப்பும் இல்லம்மா.. உண்மையாவே ஆகாஷ் இந்த வேலையை பண்ணிட்டு தான் இருக்கான்.. சொல்லபோனா அந்த பணத்துல தான் நீங்க சாப்பிடவே செய்யறீங்க.." என்று விட்டு சென்றாள்.
வகுப்பறைக்குள் நிலவிய அந்த எழில் கொஞ்சும் நிசப்தம் அடுத்த சில நிமிடங்களில் சுபத்ராவின் போன் சத்தத்தால் கலைந்தது.
ஓய்வறையில் சுபாவும் அர்ஜூனும் தான் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் இன்னொரு ஆசிரியை அமர்ந்திருக்க, அவரும் இப்போது தான் வெளியேறினார்.
போனை எடுத்துப் பேசிய சுபத்ராவின் முகம், வினாடிப் பொழுதில் வெளிறிப் போனது. அவளது கைகள் லேசாக நடுங்கின. அப்படியே போனை போட்டவள் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
அவளின் செயலில் ஏதோ சரியில்லை என்றுணர்ந்த அர்ஜூன் வேகமாக அவளிடம் ஓடி வந்து "என்னாச்சு சுபா.? யார் போன்ல.? என்னனு சொல்லும்மா.." என்று பதற்றத்துடன் வினவினான்.
தன் கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைக்கக் கூட தோன்றாமல் அப்படியே இருந்தவள் "அர்ஜுன் சார்... எங்க வீட்ல இருந்து எங்க அண்ணன் தான் கூப்பிட்டான்.. என் அண்ணிக்கு உடம்பு சரியில்லாம திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க..
இப்போ தான் அவங்களை டவுன் ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்களாம்.. எனக்குப் பயமா இருக்கு சார்.. அவங்க குழந்தை இல்லைனு நினைச்சு நினைச்சு தன்னை வருத்திக்குவாங்க.." என்று விம்மினாள்.
தன் குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் கொண்டவள்.. அவளது அண்ணனுக்கும் அண்ணிக்கும் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.. சுபாவின் அண்ணன் வெளியூரில் வேலைக்கு சென்றவன் காதலித்து திருமணமும் செய்து கொண்டு வந்து விட்டான்.. இன்னும் இவளின் அண்ணியின் வீட்டில் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவளுக்கும் சுபாவின் வயது தான் என்பதால் இருவரும் நன்றாகவே ஒட்டிக் கொண்டனர். இவளின் அண்ணியும் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்படுவதும், அதற்காக இவர்களும் நகைகளையும், பணத்தையும் வாரி இறைப்பதும் வாடிக்கையாயிற்று.
'இப்போது என்னவோ.?' என்று நினைத்து தான் பதறி நிற்கிறாள்.
"சுபத்ரா முதல்ல பதறாதீங்க.. நான் இருக்கேன்.. நாம இப்போவே ஹாஸ்பிடலுக்குக் கிளம்பலாம்.. அவங்க எந்த ஹாஸ்பிட்டல் போய்ருக்காங்கனு தெரியுமா.?" என்று விபரம் கேட்டான் அர்ஜுன்.
அடுத்த அரை மணி நேரத்தில் சுபத்ராவை அழைத்துக் கொண்டு டவுன் அரசு மருத்துவமனைக்கு ஓடினான்.
மருத்துவமனையின் வராந்தாவில் சுபத்ராவின் அண்ணன் தலையில் கையை வைத்து அமர்ந்திருந்தான். அவளது தந்தையும் சுவரோரம் சாய்ந்து நின்றிருந்தார். அவரின் பயத்தை அவரின் முகமே காட்டி குடுத்தது.
சுபத்ரா ஓடிப்போய் தன் அண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு "அண்ணா... அண்ணிக்கு என்னாச்சு.? டாக்டர் என்ன சொன்னாங்க.?" என்று அழுகையுடன் கேட்டாள்.
அவனும் கண்களைத் துடைத்துக் கொண்டு "தெரியல சுபா.. வழக்கம் போல அந்த அடிவயிற்று வலிதான்.. இந்தத் தடவை ரொம்ப கடுமையான வலியாம்.. டாக்டர் உள்ள பரிசோதனை பண்ணிட்டு இருக்காங்க..
கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு.. புள்ள பாக்கியமும் இல்லை.. இப்போ இவ உடம்பும் இப்படிப் போகுதேனு நெஞ்சு வெடிச்சுரும் போல இருக்கு.. புள்ள இல்லைனாலும் இவ நல்லா இருந்தா போதும்னு தான் இப்ப எல்லாம் நான் நினைக்கறேன்.." என்றான் தேம்பலுடன்.
அர்ஜூனுக்கு என்ன பேசுவது என்று தெரியாததால் ஓரமாக நின்றான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த பெண் மருத்துவர் சுபத்ராவின் குடும்பத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார்.
"இங்க பாருங்க இவங்களோட கர்பப்பை ரொம்பவே பலவீனமாகிட்டு வருது.. நீர்நிலைகள்ல ஏதாச்சும் அலர்ஜி இருக்கானு தெரியல.. ஆனா அவங்களோட உடம்பு இன்னும் மோசமாகியிருக்கு.. உடம்பை ரொம்ப பத்திரமா பார்த்துக்கணும்.. மாத்திரையை விடாம சாப்பிடணும்.. அதே சமயம் சத்தான காய்கறிகளும் குடுக்கணும்.." என்று விட்டு நகர்ந்தார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
"எல்லாம் என்னால தான் சார்.. நான் கவர்மெண்டு டீச்சரா இருந்தும் என்ன பிரயோஜனம்.? என் அண்ணியோட உடல்நிலையை தேத்த கூட முடியல.. என் அண்ணனுக்கு ஒரு வாரிசைக் கொடுக்க முடியாம என் அண்ணி தவிக்கறதை என்னால சகிச்சுக்கவே முடியல சார்..
கடவுள் ஏன் எங்க குடும்பத்தை இப்படிச் சோதிக்கிறாருனு புரியவும் இல்லை.. இந்த நிலைமை மாறுமா.? மாறாதானு தெரியல சார்.." என்று அர்ஜுனிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
அர்ஜுன் அவளது நிலை கண்டு நெஞ்சு உருகினான். சுபத்ராவின் அருகில் வந்தவன் அவளது தோள்களை தொட முற்பட்டு பின் நாகரிகமாக தன் கைகளைத் தடுத்து
"சுபத்ரா தயவுசெஞ்சு உங்களை நீங்களே வருத்திக்காதீங்க.. இதுல உங்க தப்பு எதுவுமே இல்லை.." என்று கூறினான்.
"உங்க அண்ணியோட இந்த நிலமைக்கு நீங்களோ நானோ காரணம் கிடையாது.. யாருக்கு என்ன என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது.. நீங்க இப்படி உடைஞ்சு போனா, உங்க அப்பாவையும் அண்ணனையும் யாரு தேற்றுவாங்க.? உங்க அண்ணிக்குத் தேவையான அத்தனை சிறந்த மருத்துவச் செலவுகளையும் நான் பார்த்துக்கிறேன்.. இந்த அர்ஜுன் உங்க குடும்பத்துல ஒருத்தனா எப்பவும் உங்க கூடவே நிற்பேன் சுபத்ரா.." என்று ஆதரவாகப் பேசினான்.
இதைப் பற்றி அக்காவிடம் பேசி தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நினைத்தும் கொண்டான்.
அர்ஜுனின் இந்த வார்த்தைகளில் இருந்த உண்மையான பாசமும், அவனது உறுதியும் அவளுக்கு ஆறுதலாக அமைந்திட, கண்ணீரின் ஊடே அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கஷ்ட காலத்தில் ஒரு அரணாகத் தன் முன்னால் வந்து நிற்கும் மனிதர்களை எப்போதும் மனது மறக்காது.. அப்படி தான் சுபாவின் மனதிலும் அர்ஜூன் வேரூன்றி போனான்.
மருத்துவமனையில் சுபாவின் அண்ணிக்குத் தேவையான முதலுதவிகள் செய்யப்பட்டு மாத்திரைகள் கொடுத்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு அர்ஜுன் காரை வரவழைத்து இவர்களை அழைத்து சென்றான்.
அவர்களின் எளிய ஓட்டு வீட்டிற்கு கண்டதும் அர்ஜூனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. சென்னையின் பிரம்மாண்ட பங்களாக்களையும், பளிங்குத் தரைகளையும் பார்த்துப் பழகிய அர்ஜுனுக்கு சுபத்ராவின் இந்த எளிய கிராமத்து வீடு ஒரு புதிய உலகமாகத் தெரிந்தது.
வீட்டின் முகப்பில் ஒரு பெரிய திண்ணை இருந்தது. வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்களும், ஒரு சிறிய மாட்டுத் தொழுவமும் இருந்தன.
சுபா அவளின் அண்ணியை மெதுவாக அறைக்குள் கூட்டிச் சென்று படுக்க வைத்திட, அவளின் கணவன் அவளருகிலே அமர்ந்து விட்டான்.
திண்ணையில் லேசான கவலையோடு அமர்ந்திருந்தார் சுபத்ராவின் தந்தை பெரியசாமி. அவர் முகம் முழுவதும் விவசாயக் கஷ்டங்களின் ரேகைகளும், தன் குடும்பத்தின் மீதான கவலையும் அப்பட்டமாகத் தெரிந்தன.
அவரிடம் சென்ற அர்ஜூன் எதார்த்தமாக திண்ணையில் கால்களை மடித்து அமர்ந்தான்.
"பெரியசாமி ஐயா.. இப்போ அவங்களுக்கு ஒன்னும் பயமில்லை.. நல்லா ஓய்வெடுத்தா சரியாகிடும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க.. நீங்க எதையும் நினைச்சு மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க.." என்றான் அர்ஜுன் கனிவான குரலில்.
பெரியசாமி அர்ஜுனை ஏறிட்டுப் பார்த்து "தம்பி அர்ஜுன்.. நீங்க எங்க சுபா வேலை பார்க்கிற ஸ்கூல்ல அறிவியல் ஆசிரியரா இருக்கீங்க.. உங்களைப் பத்தி சுபா நிறையப் பெருமையா சொல்லியிருக்கா..
எங்க ஊர்ல நிலைமை சரியில்ல தம்பி.. இந்த ஊர்ல விவசாயம் பண்ணித் தான் நாங்க பொழைச்சுட்டு இருக்கோம்.. முன்னெல்லாம் எங்க நிலத்துல கிணத்துத் தண்ணியை வச்சு நல்லா விவசாயம் நடக்கும்.. ஆனா இப்போ கொஞ்ச நாளா கிணத்துத் தண்ணி ஒரு மாதிரி வாசனை அடிக்குது தம்பி..
பயிர்களெல்லாம் கருகிப் போகுது.. நிலமே பாழாகிட்டு வருது.. விவசாயத்தை நம்பி இருக்கற எங்களைய மாதிரி ஆளுக எல்லாம் அடுத்து என்ன பண்றதுனு தெரியாம நிலத்தை கேட்கறவன் கிட்ட நல்ல விலைல வித்துட்டு இருக்காங்க.. என் உயிர் மூச்சா இருக்கற இந்த வயல்கள் எல்லாம் அழிஞ்சுட்டு போறதை பார்க்கவே முடியல தம்பி.. இதுக்கு முடிவே இல்லையானு ஏக்கமா இருக்கு.." என்று தன் ஆதங்கத்தை யாரிடம் கொட்டுவது என்று தெரியாமல் இவனிடம் கொட்டினார்.
விஸ்வநாதனின் கெமிக்கல் ஃபேக்டரி கழிவுகள் நிலத்தடி நீர்ல கலந்து, அந்த நச்சுத் தண்ணியைக் குடிச்சுதான் இங்க இருக்கறவங்களுக்கூ மலட்டுத்தன்மை ஏற்படுதுன்ற அதிர்ச்சியான உண்மை அவனுக்கு மட்டும் தான் இப்போதைக்குத் தெரியும்.. ஆனா இப்போ விவசாயமும் அழிஞ்சுட்டு வர்றதை கேள்விப்பட்டு அவனுக்கு வருத்தமாக இருந்தது.
விவசாயம் இல்லையென்றால் இந்த உலகமும் மக்களும் எப்படி இயங்குவார்கள்.? இந்த ஒரு கேள்விக்கான விடை, மனித குலத்தின் மொத்த அழிவையும் கண்முன்னே நிறுத்துகிறது.
உழைக்கும் வர்க்கத்தின் முதுகெலும்பான விவசாயம் மட்டும் ஒரு நாள் முடங்கிப்போனால், உலகத்தின் அத்தனை ஆடம்பரங்களும், பண பலங்களும் ஒரு நொடியில் அர்த்தமற்றதாகிவிடும்.
விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல; அது இந்த பூமியின் சுவாசம்.. கோடிகளில் பணம் சம்பாதிக்கும் ஐடி நிறுவன ஊழியராக இருந்தாலும் சரி, அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் விஸ்வநாதன் போன்ற அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பசி என்று வரும்போது பணத்தையோ அல்லது அதிகாரத்தையோ யாரும் தின்ன முடியாது.
ஒரு விவசாயி தன் வியர்வையை மண்ணில் சிந்தி, சேற்றில் கால் வைத்தால் மட்டும் தான் உலகத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களும் சோற்றில் கை வைக்க முடியும்.. அது தான் உண்மையும் கூட.
"தம்பி அர்ஜுன்..விவசாயம் இல்லேன்னா இந்த உலகமும் மக்களும் எப்படித் தம்பி இயங்குவாங்க.?" என்று பெரியசாமி தன் காய்ந்துபோன கைகளால் தலையைத் தாங்கியபடி கேட்டார்.
"நாங்க பசி பட்டினியோடு கிடந்தாலும் பரவாயில்லை ஆனா இந்த மண்ணை நம்பி வர்றவங்களுக்கு எங்களால ஒரு பிடி சோறு போட முடியலயே.. என்னாச்சுன்னு தெரியல தம்பி.. கொஞ்ச நாளா இந்த ஊர் கிணத்துத் தண்ணி எல்லாம் ஒரு மாதிரி விசித்திரமான வாசனை அடிக்குது.. விதைக்கற விதை முளைக்க மாட்டேங்குது..
முளைச்ச பயிரும் பாதியிலேயே கருகிப் போகுது தம்பி. நிலமே மலடாகிப் போச்சு.. சாமிக்கு எங்க மேல என்ன கோபமோ தெரியல.." என்று அவர் கண்ணீர் வடித்தார்.
பெரியசாமியின் இந்த வார்த்தைகள் அர்ஜுனின் நெஞ்சை உலுக்கியது. ஒருபுறம் விஸ்வநாதனின் நச்சுத் தொழிற்சாலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் விஷமாகி, அதைத் குடிக்கும் அந்த ஊர்ப் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
மறுபுறம் அதே நச்சுத் தண்ணீரால் இந்த நெல்வயல் மண்ணின் விவசாயமும் மலடாகிப் போகிறது.. மண்ணும் மனிதனும் ஒரே கொடூரமான நச்சு வியூகத்தால் அணு அணுவாக அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான உண்மை இப்போது அர்ஜுனுக்கு மட்டும் தான் முழுமையாகத் தெரியும்.
ஆறுதலாக அர்ஜூனும் "பெரியசாமி ஐயா.. விவசாயத்தை அழிக்கற எந்த ஒரு சக்தியும் இந்த மண்ணுல ரொம்ப நாளைக்கு வாழ முடியாது.. இந்த உலகமே விவசாயிங்க போடற பிச்சைல தான் இயங்குது..
அப்படிப்பட்ட உன்னதமான விவசாயத்தையும், இந்த நெல்வயல் மண்ணையும் விஷமாக்கற நினைக்கறவங்களுக்கு கடவுளே தண்டனை தரும்.. நீங்க கவலைப்படாம இருங்க.. என்னால முடிஞ்சதை கண்டிப்பா நான் பண்றேன்.." என்று ஆறுதலளித்தான்.
பெரியசாமியும் "ஏதோ சொல்றப்பா.. பார்க்கலாம்" என்று விட்டு செல்ல, "உங்க கிட்ட பேசுனாலே எனக்கு ஒரு பெரிய நிம்மதி கிடைக்குது அர்ஜுன்.." என்று முதன்முறையாக 'சார்'
என்ற வார்த்தையை விடுத்து அவனது பெயரை சொல்லி அழைத்தாள்.
அந்த அழைப்பில் அர்ஜூனின் இதழ்கள் தானாக விரிந்தன. அவனின் இதயத்திலும் அர்ஜூனின் சுபத்ராவாக அமர்ந்து விட்டாள் அவள்.
தொடரும்..