MMI 24
மகேந்திரன் அவனுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து இப்படி செய்வதறியாதுக் குழம்பி நின்றதே இல்லை...
மனைவியிடம் உண்மையைக் கூறும் வேளை வந்துவிட்டதாக நினைத்திருந்தவன், அவள் திருமணம் நடப்பதற்கு முன்பாக நடந்ததை அறிந்து கோபித்துக் கொண்டு வெளியேறுவாள் என கனவா கண்டான்?
ஒரேயடியாக வேலை நிறுத்தம் செய்திருந்த மூளையை தட்டியெழுப்பி அவன் யோசிப்பதற்குள் மதிவதனி வீட்டின் பிரதான வாயிலை விட்டே வெளியேறியிருக்க, தன் பிஎம்டபிள்யூவின் சாவியை எடுத்துக்கொண்டு விரைவாக மாடிப்படிகளில் இறங்கியவன், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கி வெளியே வரும்போது அவ்வீதியில் அவளைக் காணவில்லை...
"ப்ச் இவ்ளோ வேகமா எங்கப் போயிருப்பா?" எனப் புலம்பிக் கொண்டே சாலையில் விரைந்தவன் மனைவிக்கு அழைப்பு விடுக்க, அது அணைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தது...
"அறிவாளி..! நான் கால் பண்ணுவேன்னு தெரிஞ்சு ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டா..!" என்று அதியனுக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்காமல் அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தான்...
அன்று அவள் சந்தித்த அவமானங்களுக்கு கணவனும் ஒரு காரணமானதை நினைத்து விடாமல் கண்ணீர் வழிய, அதைத் துடைத்துக்கொண்டே ஒரு வாடகைக்காரில் வீடு வந்து சேர்ந்தவள் அங்கு அண்ணன் மட்டும் இருப்பதைக் கண்டு, "அதிண்ணா..! அவங்களால எப்படி முடிஞ்சது?" என்றவாறே கலங்கிய முகத்துடன் அவனை அணைத்துக்கொள்ள,
"ஒன்னுல்லடா பாப்பா..! நாம மெதுவா பேசுவோம்... இப்போ நீ சாப்ட்டுப் போய் ரெஸ்ட் எடு..!" தங்கையை சமாதானப்படுத்தி மதிய உணவை உண்ண வைத்தவன், அவளை அறைக்கு அழைத்துச் சென்று உறங்க வைத்துவிட்டு கீழிறங்கும்போது தன்னவளைத் தேடி அலைந்த களைப்பில் தளர்வாக உள்ளே நுழைந்தான் மகேந்திரன்...
அவனை சற்றுக் கோபமாகப் பார்த்தபடி, "வாங்க மாமா..!" என்றழைக்க, ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் சரிந்தான் அவன்...
அதற்கு மேல் வீட்டு மாப்பிள்ளையைக் கோபிக்க முடியாமல் வேகமாக உள்ளே சென்றவன் கையில் உணவுத் தட்டுடன் திரும்பி வந்து அதை அவனிடம் கொடுக்க, மறுக்காமல் வாங்கி உண்டு முடித்தவன்,
"நான் சாப்டலைனு என் பொண்டாட்டி சொன்னாளாக்கும்?" மச்சானை முறைத்தபடி அவன் கொடுத்த தண்ணீரையும் அருந்தினான்...
"ம்ம்..! ஆனா உங்ககிட்ட நான் இத எதிர்ப்பார்க்கல மாமா..!" என பதிலுக்கு கோவிலில் வைத்து தான் அறிந்த உண்மைகளை சொல்லிவிட்டு மாமனை முறைக்க,
"ப்ச் நடந்தது என்னன்னு தெரியாம நீயும் உன் தங்கச்சி மாதிரியே பண்ணாத மச்சான்..!" என சலித்தவன் அன்று நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்ததோடு மகேனும் பாமாவும் சொதப்பியதையும் ஒரே மூச்சாக சொல்லி முடித்தான்...
"க்ஹூம் அ..அது..! என்ன தான் உங்க லவ் உண்மையா இருந்தாலும் நீங்க அப்படி செஞ்சது தப்பில்லயா மாமா?"
"கண்டிப்பா தப்பு தான் அதியா..! நான் இந்தளவுக்கு பெருசாகும்னு நினைக்கல..! ஆனா அ..அவ நான் சொல்றத காதுலயே வாங்கமாட்டேன்னு இங்க வந்தா என்ன பண்றது?
இதுல நீயும் கால் பிக் பண்ணல..! ப்ச் அவ எங்க இருக்கானுத் தெரியாம ரெண்டு மணிநேரமா அவ எப்பவும் போற கோவில், ஃப்ரெண்ட் வீடுனு சுத்திட்டு வர்றேன்..." என்றதில் தன் தலையில் தட்டிக்கொண்ட அதியன்,
"இந்நேரத்துல எந்த கோவில் திறந்திருக்கும்? நீங்க நேராவே இங்க வந்துருக்கலாம்ல..." என நக்கலடிக்க,
"எல்லாம் நேரம் மச்சான்..! ஏன் நான் கால் பண்ணப்போ எடுத்து வதனி இங்க தான் இருக்கானு சொல்றதுக்கு என்ன?" பசியுடன் மனைவியைத் தேடியலைந்த கடுப்பில் சுள்ளென்று கேட்டவன் அவனை மீண்டும் முறைத்தான்...
"அ..அது வேணும்னே தான் எடுக்கல மாமா..!" என்றவன் அமைதியைத் தத்தெடுக்க, அவனை தன் கூர்விழிகளால் அளந்துவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சுடன் தங்களின் முன்ஜென்ம பந்தத்தை விளக்கமாக சொல்லி முடித்தான் மகேந்திரன்...
மாமன்காரன் முடித்ததும் அடக்க முடியாமல் நகைத்த அதியன், "வாவ் நீங்க சினிமாக்கு கதையெழுதப் போகலாம் மாமா..! இந்த டிவென்ட்டி ஃபர்ஸ்ட் சென்சூரில இத யாராவது நம்புவாங்களா?" எனக் கேட்டபடி மேலும் பொங்கி சிரிக்க, மச்சினனை முறுவலுடன் பார்த்தவனுக்கு அவன் மீது கோபம் வரவில்லை...
முதலில் அவனுமே இவ்வாறு நம்பிக்கையின்றி தானே இருந்தான்..!
"வதனி தூங்குறா தானே? சரி நீ என்னோட கிளம்பி வா... உனக்கு ப்ரூவ் பண்றேன்..!" என்றவன் அதியனை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து பெட்டியில் இருந்து எடுத்தப் பொருட்களை அவனிடம் காட்டினான்...
அவற்றை அசுவாரசியமாக வாங்கிப்பார்த்தவன் தனக்குள் ஓடி மறைந்த சிலிர்ப்பில் அதிர்ந்து அங்கிருந்த இருக்கையில் அமர, "உம் ராஜ்ஜியத்தை உம்மிடமே ஒப்படைத்துவிட்டேன் அதியனே..!" என்ற மகேந்திரன் இளந்தீரனின் கம்பீரக்குரல் அவன் செவிகளில் வந்து மோதியது...
அதன்பிறகு சில நிமிடங்களிலேயே அவர்களின் முன்ஜென்ம நினைவுகள் அலையலையாய் மூளையை வந்து ஆக்கிரமிக்க, அதன் கனம் தாங்காமல் பொத்தென்று மயங்கி சரிந்திருந்தான்...
"அடப்பாவி..! போன ஜென்மத்துல மன்னனா இருந்தவன் இப்போ என்ன இப்படி வீக் பாடியா இருக்கான்?" என்றபடி மச்சானின் முகத்தில் நீர்த்தெளித்து எழுப்ப, சுயநினைவு மீண்டவன் மாமனை இறுக்கிக் கட்டிக்கொண்டான்...
"மா..மாமா..! நீ..நீங்க? க..கடவுளே இதெல்லாம் உ..உண்மையா? உங்களோட இந்த திங்க்ஸ் எல்லாத்தையும் இப்படி வச்சதே நா..நான் தான் மாமா..!" என்றபடி கண்ணீர் சிந்தியவனைத் தேற்றுவதற்குள் மன்னவனுக்கு போதும் போதுமென்றானது...
அப்போதும் தோளில் சாய்ந்தவாறு அவன் புலம்பிக் கொண்டிருக்க, "அடேய் மச்சான்..! என்னடா உன் தங்கச்சி செய்ய வேண்டிய வேலைய நீ செஞ்சுட்டு இருக்க?" என்று கேலி செய்ய,
அப்போது தான் தங்கையைப் பற்றிய ஞாபகம் வந்து, "வா..வாங்க மாமா..! நாம மதிட்ட எல்லாத்தையும் சொல்லுவோம்..." எனப் பரபரத்தான்...
மச்சானின் ஆர்வத்தில் வாய்விட்டு சிரித்தவன் மீண்டும் அவனோடு அவர்களின் வீடு திரும்புவதற்குள் எழுந்திருந்த மதிவதனி, அறையில் மாட்டியிருந்த தங்களின் வரவேற்புப் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்...
கணவனின் காதலை அவள் சந்தேகிக்கவில்லை..!
அப்படியானால் அவள் தன்னைத் தானே சந்தேகப்படுவதற்கு சமானம்..!
ஆனால் தன்னை அடைய அவன் கையாண்ட வழி? அது தான் அவளை வதைத்தது..!
மனம் கலங்கிய இவ்வேளையில் சில நாட்கள் அவனிடமிருந்து விலகியிருக்கும் முடிவில் அவளிருக்க, அதையறியாத அதியன் மாமனை அழைத்துக்கொண்டு தங்கையின் அறைக்குள் நுழைந்தான்...
அண்ணனை அதிருப்தியாகப் பார்த்த மதிவதனி கணவனையும் முறைத்து வைக்க,
"பா..பாப்பா..! நாங்க சொல்றதக் கொஞ்சம் கேளுடா..!" என்றவன் தொடங்க, இருவரும் முடிவெடுத்தபடி மகேன் செய்த குளறுபடிகளையும், அவர்களின் முன்ஜென்ம காதல் கதையின் இறுதியில் நடந்ததை மறைத்துவிட்டு மற்றதை மட்டும் அவளிடம் பகிர்ந்தனர்...
தன் விரல் நகங்களை ஆராய்ந்தபடி அனைத்தையும் கேட்டவள் சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு இருவரையும் நேர்ப்பார்வைப் பார்த்து,
"மாமனும் மச்சானும் ரெடி பண்ண ஸ்க்ரிப்ட் சூப்பரா இருக்குண்ணா..! ஆனா இத நம்புற அளவுக்கு நான் இன்னும் பைத்தியமாகலனு உன் மாமாகிட்ட சொல்லு..!" என்று வேண்டுமென்றே கணவனைக் காயப்படுத்தும் நோக்கில் நக்கலடித்தாள்...
"வ..வதும்மா..!" எனத் தவித்தவனுக்கு பேசும் மொழி மறந்துபோனது...
இரண்டு மாதங்களாக கணவனின் கரங்களுக்குள் அவள் உருகிக் கரையும் இரவுகளில் தனக்கு வந்த கனவுகளை நினைத்து முதலில் அவளும் பயந்தாள் தான்...
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த பெண் பூசாரியின் மறுப்பிறவியாக சொல்லப்பட்ட டோரதி ஈடி என்ற பெண்மணியின் டாக்குமெண்டரியைப் பார்த்ததில் இருந்து தங்கள் இருவருக்கும் அப்படி எதுவும் பூர்வஜென்ம பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்திருக்க, அவற்றை மனநல மருத்துவரின் உதவியுடன் மீட்டெடுக்க நினைத்தவள், கணவனும் தமையனும் சொன்னதை நம்பாதவளாக நடித்தாள்...
மனைவியின் மனம் அறியாதவனுக்கு தன் மீதிருக்கும் கோபத்தில் தங்கள் காதலையே கதையென்று விட்டாளே..! என்ற வருத்தத்தில் முகம் வாடிப்போனது..!
கணவனைப் பார்க்கப் பாவமாக இருப்பதற்காக உடனே மன்னிக்க முடியுமா என்ன?
அவளின் பாராமுகத்தில் தன் கைவிரல்களை முஷ்டியாக இறுக்கி வலியை மறைத்த மகேந்திரன், "எல்லாமே உண்மை தான் வதும்மா..! என்னைய நம்பு டி..!" என்று மன்றாட,
"அதப்பத்தி இப்போ பேச வேணாம்... இந்த மூனு மாசத்துல நீங்க எனக்கு கரண்ட் ஷாக் கொடுத்த உண்மைய ஏன் என்கிட்ட சொல்லல?"
"அ..அது ஹார்ம்லெஸ்னு மகேன் சொன்னதுக்கு அப்புறம் வேற வழியே இல்லாம தான் நான் ஒத்துக்கிட்டேன் வது..!
நீயே சொல்லு..! உனக்கு என்னையப் பிடிச்சிருந்தும் உங்கப்பாவ மீற முடியாம தவிக்கல? உன்கிட்ட என் லவ்வ சொல்லி புரிய வச்சு மேரேஜ் பண்றதுக்கு என்கிட்ட டைம் இல்லயே..! புரிஞ்சுக்க டி..!" அவன் பேசியதில் இருந்த உண்மையை மறுக்க முடியாமல்,
"ப்ச் கொஞ்ச நாள் தனியா இருக்கணும்னு உங்ககிட்ட சொல்லிட்டு வந்தேன்ல... இப்போ இப்படி வந்து பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்?" எரிந்து விழுந்தாள் அவள்...
"பாப்பா..! மாமாவே இறங்கி வந்து நடந்த எல்லாத்தையும் சொன்னதுக்கப்புறம் நீ இப்படி பேசுறது நல்லதில்ல..!" சட்டென்று எரிச்சலில் அதியன் அவளைத் திட்டிவிட,
"ஓ..! கத அப்படிப்போகுதா? ரொம்ப சந்தோஷம்..! நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்... ரெண்டு பேரும் வெளிய போங்க..." என்றபடி வாசலை நோக்கிக் கைக்காட்டியதில் திடுக்கிட்ட ஆண்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்...
"என்..என்னையவா டி போக சொல்ற?" என மகேந்திரனும், "நானுமா பாப்பா?" என அதியனும் ஒரே நேரத்தில் கேட்டுவைக்க,
"ஆமாடா..! உங்க ரெண்டு பேரையும் தான் போக சொன்னேன்... ஒழுங்கா எந்திரிச்சு வெளிய போங்கடா ஃப்ராடுங்களா..!" பெண்ணவள் தன்னை மறந்து மரியாதையைக் கைவிட்டு கத்தியிருந்தாள்...
தங்கையின் ஆக்ரோஷத்தில் மிரண்ட அதியன் திருவிழாவில் தொலைந்த குழந்தையாக முழித்துக் கொண்டிருந்த மாமனின் கரம்பிடித்து வெளியே அழைத்து வந்து, "மா..மாமா..! பாப்பா செம கோபத்துல இருக்கா போல..! நாம நாளைக்குப் பே..பேசுவோம்..!" என்க,
"போதும் ராசா..! நீ கொஞ்சம் சும்மா இரு... நானா போய் பேசியிருந்தா கூட என் பொண்டாட்டி என்னைய மன்னிச்சுருப்பா..! நீ தான் அவள ட்ரிகர் பண்ணிவிட்டுட்ட..." என்றபடி மச்சானை முறைத்தான் அவன்...
"மா..மாமா?" என்றிவன் பாவமாகப் பார்க்க,
"சரி விடு, அடுத்தென்னனு மெதுவா யோசிப்போம்... அதுவரைக்கும் அவ கொஞ்சம் ரிலாக்ஸாகட்டும்... அவகிட்ட தேவையில்லாம எதுவும் கேட்க வேணாம்னு அத்த மாமாட்டயும் சொல்லிடு அதியா..!
தென் நம்ம முன்ஜென்ம கதைய அவங்கட்ட சொல்லி அவங்கள ஸ்ட்ரெஸ்ல தள்ளிடாத... நான் நாளைக்கு வர்றேன்..." என்றதோடு வீட்டிற்கு வந்தவனுக்கு மனைவியில்லாத வெறுமை முகத்தில் அறைய அப்படியே தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான்...
தனக்குள் நிறைந்திருந்த தன்னகங்காரம் மறைந்து முழுமையாக மதிவதனியின் கணவனாக மாறியிருந்தவனுக்கு அவளின்றி ஓர் அணுவும் அசையவில்லை...
மனைவியுடன் வாழ்ந்த இம்மூன்று மாதங்களும் மூன்று யுகம் வாழ்ந்த நிறைவினை தந்திருக்க, அந்த அறை முழுவதும் ஏதோ சூனியம் வைத்த இடம் போல் தெரிந்ததில், மனைவி திட்டினாலும் பரவாயில்லை என நினைத்து அவளுக்கு அழைப்பு விடுக்க, அது எடுக்கப்படவில்லை...
அதைப் பொருட்படுத்தாமல் அவன் விடாமல் முயன்றதில் அழைப்பை ஏற்றவள், "ஹலோ..!" என்றதும் வேகமாக,
"ஹ..ஹலோ வதும்மா..! நான் வேணும்னே எதுவும் பண்ணல டி..!அப்போ நீ எனக்குக் கிடைக்கணும்ன்ற வேகத்துல ஏதோதோ நடந்துருச்சு... சா..சாரி பேபி..!" நடந்ததற்கு மன்னிப்பு வேண்ட,
"ஏங்க உங்ககிட்ட டைம் தானே கேட்டேன்... அதுக்குக் கூட எனக்கு உரிமையில்லயா?" அவள் கடுப்புடன் வினவ,
"எ..என்னால தனியா இருக்க முடியலடா..! நான் தான் சாரி சொல்றேன்ல, இங்க வந்துடு வது..! உன் மகி பாவம்..!" என்றுக் கெஞ்சலாக மனைவியை மயக்கப் பார்த்தான்...
ஏற்கனவே அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் தளர்ந்திருந்தப் பெண்ணவளுக்கு கணவன் கெஞ்சுவதையும் தாங்க முடியவில்லை...
"ப்ச் ஒரு வாரம் மட்டும் என்னைய ஃப்ரீயா விடுங்க மகி ப்ளீஸ்..!" என்றவள் அவன் அடுத்து பேசுவதற்குள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்...
மனைவியின் வருத்தம் புரிந்து ஒதுங்கியிருக்க தான் அவனும் முயன்றான்... ஆனால் முடிய வேண்டுமே?
காதலின் இனிமையை மட்டுமே அனுபவித்த உயிருக்குத் தனிமை கொடுமையாக வருத்த, அதற்கடுத்து வந்த இருபது நாட்களும் மனைவியை சமாதானம் செய்வதாக சொல்லிக்கொண்டு மாமியார் வீட்டிலேயே தங்கியவன் உறங்கும் நேரத்திற்கு மட்டும் வீட்டிற்குச் சென்று வந்தான்...
இந்தக் குழப்பத்தில் வனத்திற்கு செல்வதையே மறந்தவன் ஒருவழியாக அனுமதி வாங்கி அங்கு நுழைய, அவனை பல நாட்கள் சந்திக்க வராமல் தாமதித்த அப்பெரியவர் அன்று அவனுக்கு முன்பாகவே அந்த குகையின் வாயிலில் அமர்ந்திருந்தார்...
அவரிடம் சிலதைக் கேட்டுத் தெளிவுற்றதும் மனைவியைத் தேடி வந்தவன் அம்பிகா கொடுத்த தேநீரைப் பருகியபடி பார்வையால் வீட்டை அலச, மாப்பிள்ளையை சிரிப்புடன் பார்த்தவர், "மதி அங்கக் கிளம்பிப் போயிட்டா மாப்ள..!" என்றார்...
அதில் அகமும் புறமும் மகிழ்ச்சியில் நிறைய அங்கிருந்து வீட்டிற்கு விரைந்தவன் ஒன்றிரண்டு படிகளாகத் தாவியேறி தங்கள் அறைக்குள் நுழைய, மெதுவாக கணவனிடம் நடந்து வந்த மதிவதனி,
"என்கிட்ட நம்ம முன்ஜென்ம கதைனு ஒரு கத சொன்னீங்களே மகி, அதுல எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா?" என வினவியபடி அவனைப் பார்வையால் கூறுபோட,
"அ..அது வ..வதும்மா?"
"க்ஹூம் நான் ஒரு பைத்தியக்காரி..! நீங்க அத மட்டுமா மறைச்சீங்க? உங்க தம்பி தான் நமக்கு வில்லன்ற உண்மையையும் சேர்த்து தானே மறைச்சுருக்கீங்க? ஏன் மகி?..." வலி நிறைந்த குரலில் அவள் வெகு நிதானமாகக் கேட்க, சுக்குநூறாய் நொறுங்கிப்போனான் மகேந்திரன்..!
தொடரும்......

Last edited by a moderator:
Author: Vishakini
Article Title: மகேந்திரனின் மதிவதனியவள் - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.