மகேந்திரனின் மதிவதனியிவள் - 18
மதிவதனியை மனைவியாக அடைந்த உவகையில் மகேந்திரன் கேள்விக் கேட்க, "நீங்க என்னைய எதுக்கு கல்யாணம் பண்ணீங்கனு எனக்கு நல்லா தெரியுமே..! ஆனா நீங்க நினைக்கிறது மட்டும் எப்போவுமே நடக்காது..." என நொடித்துக்கொண்டாள் அவள்...
"என்ன டி சொல்ற? நான் என்ன நினைச்சேன்?" என்று அதிர்ச்சியாகக் கேட்டவன்,
'ஆஹா சில்லுவண்டு ஏதோ பொடி வச்சு பேசுதே..! ஒருவேள உண்மை எதையும் கண்டுபிடிச்சுட்டாளா? க்ம்ஹூம் வாய்ப்பில்லையே..!' மனதில் நினைத்தபடியே குழம்பி நிற்க,
சில நொடிகள் அவனை வெறுமையாகப் பார்த்துவிட்டு, "என்னைய பழிவாங்க தானே கல்யாணம் பண்ணீங்க? அப்படியே கொஞ்ச நாள்ல டிவோர்ஸ்ம் பண்றது தானே உங்க ப்ளான்..! எனக்குத் தெரியும்..!" என்றாள் வேண்டுமென்றே...
உண்மையில் அவளுக்கு அப்படி ஒரு சந்தேகமே எழவில்லை..!
மன்னவன் தன்னை மணந்ததில் இருந்து தனக்குள் ஏதோ உருகிக் கரைவதை அவளால் உணர முடிய, அதற்கு விடைத் தெரியாதக் குழப்பத்தில் இருந்தாள் அவள்..!
அதில் பெற்றோர்கள் தன்னை நம்பாமல் தவிக்கவிட்ட ஏமாற்றம் கூட அவ்வப்போது பின்னால் சென்று, அவள் மனம் முழுவதும் அவனே நீக்கமற நிறைந்திருக்க, தனக்கு என்ன நேர்கிறது என்பதே புரியவில்லை அவளுக்கு..!
மனைவி சொன்னதைக் கேட்டதும் அவனுக்கு சுள்ளென்று கோபம் எழுந்ததில், "ஏய்..!" என்று எகிறினான்...
அதற்கெல்லாம் அசராமல் அவனை மேலும் கீழுமாக அளந்தவள், "ஹலோ சவுண்ட குறைங்க..! நீங்க எவ்ளோ ஆசப்பட்டாலும் இந்த ஜென்மத்துல நான் உங்களுக்கு டிவோர்ஸ் தரவே மாட்டேன்..! கடைசிவரைக்கும் இந்த மதிவதனி தான் உங்க வைஃபா இருப்பா..!" என்றாள் உறுதியாக...
அதில் சட்டென்று கோபம் மறைந்து மகிழ்ச்சியில் விழிகள் மின்ன, "ஓகோ அப்புறம்?" என்றான் சுவாரசியமாக...
"அப்புறமென்ன? இனிமே பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் நீங்க என்னோட தான் வாழ்ந்தாகணும்..."
"நீ இப்போவே வந்தாலும் உன்னோட வாழ ஐ'ம் ரெடி வதும்மா..!" என சட்டென்று ஒப்புக்கொண்டுக் குறும்பாகக் கண்சிமிட்டியதில் திருதிருத்தவள்,
"அ..அது வந்து..! ஹான் காதலே இல்லாம உங்களோட என்னால வாழ முடியாது.." என்று சமாளிக்க,
"யாருக்கு டி காதல் இல்ல? நான் தான் உன்ன லவ் பண்றனே..!" என்றவாறு அவன் விழிகள் தன் இணையை ஆழ்ந்து நோக்கின...
பாவம்..! மன்னவனின் கைத்தாலியை வாங்கியதில் இருந்து, பெண்ணவளின் மனம் நதியில் விழுந்த இலையாக நிலையின்றி தடுமாறும்போது, அவன் இப்படி கண்களால் கைதுசெய்ய முயன்றால் என்ன செய்வாள்?
கணவனின் இடைவிடாதப் பார்வையில் பாவையின் நெஞ்சம் படபடக்க, தன் பார்வையை வேறெங்கோ வைத்தபடி, "ஹ..ஹலோ எம்.டி சார்..! ஒரு வருஷமா இம்சை அரசன் மாதிரி டார்ச்சர் பண்ணிட்டு இப்போ வந்து காதல் கத்தரிக்காய்னு பெரிய லவ் குரு மாதிரி பேசுனா நான் நம்பிடுவேனா?" என்று சிலிர்த்துக்கொள்ள,
இத்தனை நேரம் அழுததில் கன்றிச்சிவந்த முகத்துடன் நின்றவள் தன்னிடம் மட்டும் எகிறி பாய்வதில் அவளை புன்னகையுடன் பார்த்தவன், "ஏன் நம்பமாட்ட?..." என்க,
"க்ஹூம் ஒரு வருஷத்துல வராத உங்க காதல் ஒரே வாரத்துல வந்துட்டதா சொன்னா சின்னப்பாப்பா கூட நம்பாதுங்க..!"
"ஆனா ஒரு நொடியில கூட காதல் வரும் டி..!"
"அ..அது"
"ப்ச் கல்யாணமான முதல் நாளே வாக்குவாதம் பண்ண வேணாம் வதும்மா..! ஆனா நீயாவே ஒரு நாள் நம்ம காதலப் புரிஞ்சுப்ப..! எனக்கு நம்பிக்கை இருக்கு..!" என்றதில்,
'நம்ம காதலா? என் மனசுல இருக்கது இவருக்கு எப்படித் தெரியும்' திகைப்புடன் கணவனைப் பார்த்தவள், "நம்ம காதலா?" எனும்போதே கோகிலா ஆரத்தித்தட்டோடு அவர்களை நெருங்கியதில் அவர்களின் பேச்சு தடைப்பட்டது...
கணவனுக்கும் அவள் முன்புப் பார்த்த தீரனுக்கும் இடையே சிக்கித் தவித்தவள், தன் மனம் அவன் பக்கம் முழுமையாக சாயும் வரையில் இயல்பாக பேசிப் பழகுவோம் என நினைத்துக்கொண்டாள்...
வீட்டிற்கு வந்த மருமகளை முறைப்படி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்த கோகிலா, இருவருக்கும் பால் பழம் கொண்டு வர சம்பிரதாயம் அமைதியாக நடந்தது..!
மனைவியின் சங்குக்கழுத்தின் அசைவில் சிக்கித் தவித்தவன், "அழகா இருக்க டி வதும்மா..!" என்று கிசுகிசுக்க, நடுவீட்டில் வைத்து இப்படி ரகசியம் பேசியவனை முறைக்க முடியாது மெலிதாக சிரித்தபடி,
"ஓ..! அப்படியா?" விழிகளை விரித்தவள், "ஆனா உங்களோட முனீஸ்வரன் முகத்துக்கு இந்த ரொமான்டிக் லுக் செட்டே ஆகல..." எனக் காலை வாரியதில் திடுக்கிட்டுத் திரும்பியவன்,
"என்ன டி சொல்ற? முனீஸ்வரனா? நானா?" என்றபடி மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்தான்...
"அதே அதே..! நீங்களே தான்..! ஏன் உங்களுக்கு நீங்க உன்னி முகுந்தன் மாதிரி அழகா இருக்கதா நினைப்பா?" என்றாள் வெட்டும் பார்வைப் பார்த்தபடி...
"ஏதே..! உன்னிமுகுந்தனா? யாரு டி அவன்?"
"வாட்..! மை ஃபேவரைட் ஹீரோவத் தெரியாதா?" என்றவள் போலியாக வியக்க,
"ஓ..! ஹீரோவா? அவன் என்ன அவ்ளோ அழகா இருப்பானா?" எனக் கேட்டவனுக்கு காதிலிருந்து புகை வெளியேறியது...
ஏற்கனவே அவள் மீது அவனுக்கு உரிமையுணர்வு அதிகம்..! அதில் சினிமா நடிகனாகவே இருந்தாலும் வேறு ஒருவனை ரசிப்பதை அவனால் ஏற்க முடியுமா?
"அழகா? அதுக்கெல்லாம் மேல... செம ஹேண்ட்சமா இருப்பான் தெரியுமா?" என்றவளுக்கு கணவனை எரிச்சலூட்டுவதுப் பிடித்திருந்தது...
அதற்கு மேல் அவனைப் பற்றிக் கேட்க பிடிக்காமல், "க்ம்ஹூம் நான் சினிமா பார்க்க மாட்டேன் டி... சோ லீவ் இட்..!" என்றவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தவள், தன் அலைபேசியை இயக்கி வேண்டுமென்றே உன்னிமுகுந்தனின் புகைப்படத்தைக் காட்டினாள்...
தனக்கிருந்த மனக்கலக்கத்தில் இத்தனை நாட்களாக குணம் பிடிக்காமல் தள்ளி வைத்திருந்த ஒருவன் தாலிக்கட்டியதும் மனதுக்கு நெருக்கமானவாக மாறியிருக்க, அவனிடம் வம்பு வளர்த்து ஆறுதல் தேடியவளுக்கு அவனும் நன்றாக ஈடுகொடுக்க பெண்ணவளின் மன இறுக்கம் சற்று வடிந்தது...
முகத்தை உர்ரென்று மாற்றியபடி அப்புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, "க்ம்ஹூம் நீ சொன்ன அளவுக்கு ஒன்னும் அழகா இல்ல டி..!" அவள் மன்னவன் பொறாமையில் பொங்க,
"ஹாஹா..! அழக ரசிக்கணும் பாஸ்..." எனக் குறும்பாக சிரித்தாள் அவள்...
தன்னவளின் சிரிப்பில் காதல் கொண்ட மனம் நெகிழ்ந்தாலும் மற்றவனின் புராணத்தைக் கேட்கும் பொறுமையின்றி, "ஹேய் போதும் டி..! நீயா வாய மூடிட்டா நல்லது..! இல்லைனா?" கணவனின் பார்வை அவளிதழில் பதிந்ததில் மிரண்டு, மற்றவர்களின் கவனத்தைக் கவராமல் அவனிடமிருந்து சற்று விலகி அமர, அவளின் முன்னெச்சரிக்கையில் மகேந்திரன்அபர்ஜித்திற்கு புன்னகை அரும்பியது..!
அதற்குள் இவர்கள் வந்ததை அறிந்து தன் அறையிலிருந்து வெளியே வந்த யுகேந்திரன், "வெல்கம் அண்ணி..!" என்றபடி தன் கையிலிருந்த பூங்கொத்தைக் கொடுக்க,
"தேங்க் யூ யுகேன்..!" தயக்கமாக வாங்கிக்கொண்டே அவனைப் பார்த்து மெலிதாக முறுவலித்தவள் அவனிடம் சில நிமிடங்கள் பொதுவாக பேசிக் கொண்டிருந்தாள்...
தம்பியுடன் அவள் சகஜமாக உரையாடியதில் வெளியே சிரிப்புடனும் உள்ளே கடுப்புடனும் அவன் அமர்ந்திருக்க, அவனிடமும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டான் யுகேந்திரன்...
அவசரமாக நடந்த திருமணத்தில் இருவரும் எப்படி வாழ்வார்களோ என்ற பயத்திலிருந்த பெரியவர்கள், அங்கு நடப்பதை அறியாமல் கணவனும் மனைவியும் சிரித்து பேசிக்கொள்வதாக நினைத்து மனம் மகிழ்ந்தனர்...
மதிவதனியை பெற்றவர்களுக்கு மகளை இயல்பாக்கும் மருமகனின் முயற்சியில் மனம் நெகிழ, தீரனை பெற்றவர்களுக்கு அவனின் இலகுத்தன்மையும் விரிந்த புன்னகையும் ஆச்சரியமூட்டின..!
மாலையில் நடந்ததை மறந்து அவள் தன்னிடம் இப்படி வாயடிப்பதை ரசித்தாலும், அவளின் கண்ணோரம் அவ்வப்போது துளிர்த்த ஈரத்தைக் கண்டு அவள் வெகுநேரம் தாங்க மாட்டாள் என்பதை உணர்ந்தவன், "ம்மா நாங்க ரூம்க்குப் போகட்டுமா?" என்று கோகிலாவிடம் கேட்டிருந்தான்...
மகனிடம் எப்படி சொல்வதெனப் புரியாமல் அவர் கணவரை சங்கடமாகப் பார்க்க, அதைக் கவனித்தவன் அவரை தனியே அழைத்து, "என்னம்மா என்கிட்ட சொல்றதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம்? வதனி என்ன தான் சிரிச்சு பேசுனாலும் அவ மனசளவுல நல்லா இல்லைனு எனக்குத் தெரியும்மா... அவ ரிலாக்ஸாகுற வரைக்கும் ஐ கேன் வெயிட்..!
நீங்க அவளுக்கு அவசரமா பர்ச்சேஸ் பண்ணீங்களே அத எடுத்துக் கொடுங்க, அவ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரட்டும்..." அவர் மனதில் இருப்பதை சொல்லாமலேயே புரிந்துக் கொண்ட மகனை எண்ணி மனம் பூரிக்க, அவன் சொன்னதை செய்பவராக மருமகளை கீழிருந்த ஒரு அறைக்கு அழைத்துக் சென்றார்...
தங்கை சாதாரண உடைக்கு மாறிவந்ததும் அவளின் கரங்களைப் பற்றிய அதியன், "எதுவா இருந்தாலும் தைரியமா இருக்கணும்டா குட்டிமா..! அண்ணா இருக்கேன் உனக்கு..!" என்று ஆறுதல் அளித்ததோடு மேலும் சில அறிவுரைகள் வழங்க, அண்ணனைப் பிரிவதை நினைத்து அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள் அவள்...
மனைவி அழுவதை வலியுடன் பார்த்துக் கொண்டிருந்த தீரனிடமும், "எங்க பாப்பாவ நீங்க நல்லாப் பார்த்துக்குவீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு மா..மாமா..!" என்றதில் நெகிழ்ச்சியுடன் அதியனின் கரம் பற்றி அழுத்தியவன் அவனை லேசாக அணைத்து விடுவித்தான்...
அப்போதும் பெற்றோரின் பக்கமே திரும்பாமல் பெண்ணவள் அமர்ந்திருக்க, அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் சற்று கலவையான மனநிலையில் இருந்த அவளின் பெற்றோரும் நல்ல குடும்பத்தில் மகளை விட்டுச் செல்லும் மகிழ்ச்சியுடன் விடைபெற்று தங்கள் இல்லம் திரும்பினர்...
அதன் பின்னர் வீட்டுப் பெரியவர்களும் பத்திரம் கூறிவிட்டு உறங்கச் சென்றுவிட, பிடிவாதமாக பெற்றோரிடம் பேச மறுத்துவிட்டு இப்போது கலக்கமாக நின்றிருந்த மனைவியிடம் வந்தான் மகேந்திரன்...
அவளின் கோபமும் பிடிவாதமும் அவனை சற்று மிரட்டினாலும், அவர்களின் காதலை அறிந்தவனுக்கு அவளை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை..!
சற்று நேரத்திற்கு முன்னர் அவன் கட்டிய பொன்தாலி மின்ன அவனுக்கு உரிமையான மனைவியாக அவளைக் காணும்போது எங்கெங்கோ அலைந்துவிட்டு வீடு வந்து சேர்ந்த நிம்மதியில் அவள் கரங்களை அழுத்தமாகப் பற்றியவன்,
"உனக்குள்ள இவ்ளோ பிடிவாதமா டி?" என்று ஆராய்ச்சியாகப் பார்க்க,
"ஹா.. அப்புறம் என்னைய நம்பாதவங்க கிட்ட உடனே பேச சொல்றீங்களா?" கோபத்தில் சீறினாள் அவள்...
"ஹேய் நான் சொல்லி முடிச்சிடுறேன் இரு டி..! அவங்க நம்மள நம்பாததுக்கு நாமளும் ஒரு காரணம் வதும்மா..! இன்னைக்கு ஈவ்னிங் நம்ம ஒருத்தர ஒருத்தர்ப் பார்த்தபடி மாடியில நின்னோம்ல, அத மாமா பார்த்துட்டாங்களாம்... அதான் அந்த வீ..வீடியோ பார்க்கவும் டக்குன்னு சந்தேகப்பட்ருக்காங்க.." என்றவன் ஆற்றுப்படுத்த முயல,
"ஓ..! இருந்துட்டு போகட்டும்..! அதுக்காக உடனே அவங்களோட பேசுற அளவுக்கு நான் நல்லவ இல்ல..! என்றவள் அவன் அடுத்த வார்த்தைப் பேசுவதற்குள் வேகமாக, எனக்கு இப்போ தூங்கணும்..." என்றாள் தன் பிடிவாதத்தை இழுத்துப் பிடித்து...
அதற்கு மேல் மனைவியை மறுத்து பேசாமல் தங்கள் அறைக்கு அழைத்து வந்திருந்தான் அவன்...
அதுவரையில் தைரியமாக வாயாடியவள் அவனின் அறைக்குள் நுழைந்ததும் தயக்கமாக அவனை ஏறிட, "அச்சோ இப்படி மீனத் திருட வந்த பூனையப் பார்க்குற மாதிரி பார்க்காத டி..! நானும் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான்..!
நீ மனசளவுல இந்த கல்யாணத்த ஏத்துக்குற வரைக்கும் நிம்மதியா இதே பெட்ல படுத்துத் தூங்கு..! நானா உன் பக்கத்துல வரவேமாட்டேன்... ஓகேவா?" என்றான் சிரிப்பும் சீண்டலுமாக...
"க்ஹூம்..! வந்துப் பாருங்கத் தெரியும்..." என்று இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கழுத்தை சிலுப்பிக் கொண்டவள் அமைதியாக அவன் காட்டிய இடத்தில் படுத்துக்கொண்டாள்...
தன்னவளின் குறும்பில் சிரித்த முகமாக தன்னை சுத்தப்படுத்தி வேறுடைக்கு மாறி வந்தவனும், மனம் நிறைந்து ததும்பியதில் அவளுக்கு அருகில் படுத்ததும் உறங்கியிருந்தான்...
ஆனால் அவனுக்கு முதுகுக்காட்டி படுத்திருந்த மதிவதனி தன்னை நம்பாமல் போன பெற்றோரை எண்ணி மனம் நோக, மௌனக்கண்ணீரால் தலையணையை நனைத்தபடி படுத்திருந்தாள்...
விழிகள் நெருப்பாய் எரிந்ததில் உறங்க முடியாமல் அவள் புரண்டுப் புரண்டுப் படுக்க, தானும் உறக்கம் கலைந்து எழுந்தவன் கண்களைக் கசிக்கியபடி, "ஓய் தூங்காம என்ன டி சர்க்கஸ் காட்டிட்டு இருக்க?" என கேலி செய்ததில்,
"க்ஹூம் உங்ககிட்ட சர்க்கஸ் காட்டணும்னு வேண்டுதல் எனக்கு..! ஆளப்பாருங்க... என் கண்ணு ரொம்ப எரியுது..! தூக்கம் வரல..!" என்று சலித்தாள் அவள்...
அப்போது தான் அவள் கண்களை நன்றாகக் கவனித்தவனுக்கு அவள் மீண்டும் அழுதிருப்பதுத் தெரிந்துபோக அறையிலிருந்த குளிர்சாதனப்பெட்டியில் இருந்து ஐஸ்கட்டிகளையும், ஒரு காட்டன் துணியையும் எடுத்து வந்து அவளருகில் அமர்ந்தான்...
தன்னருகே நெருக்கமாக அமர்ந்தவனை மிரட்டியாகப் பார்த்தபடி, "எ..என்ன பண்றீங்க?" என்றாள் காற்றாகிப்போன குரலில்...
"ம்ம் ரேப் பண்ணலாம்னு இருக்கேன்... சும்மா சும்மா சந்தேகப்படாதடி... இந்த ஐஸ் க்யூப்ஸ்ல டவல் டிப் பண்ணிட்டு கண்ணுல வச்சா யூ ஃபீல் பெட்டர்... நீ அப்படியே இரு நான் செய்றேன்..." கணவனின் சீண்டலும் அக்கறையும் புண்பட்ட மனதை இதமாக்கினாலும்,
"இ..இல்ல வேணாம் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்..." என்று மறுப்பாக தலையசைத்தாள்...
"எப்படி வதும்மா..! இவ்ளோ நேரமா அழுதுட்டு இருந்தியே, அது மாதிரியா?" அவளை சரியாக கண்டுகொண்டதில் நின்றிருந்த கண்ணீர் சுரப்பிகள் மீண்டும் உயிர்பெற்றன...
"ஹேய் எதுக்கும்மா இப்படி அழற?" என்றபடி அவளின் கண்ணீரைத் துடைக்க,
"அ..அம்மாப்பா என்..என்னைய நம்பவே இல்லைல... ஒரு நிமிஷத்துல என்னைய வேணாம்னு தூக்கிப் போட்டுட்டாங்க" என வெடித்து அழுதாள் அவள்...
இதில் அவனுக்கும் சிறு பங்கு உள்ளதே..!
நண்பனை அப்படியே நம்பிய தன்னை நொந்தபடி அவளுக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத ஆறுதலாக அவளை மார்போடு அணைத்துக்கொண்டவனின் விழிகளில் வலி மட்டுமே..!
அதை மனைவிக்குத் தெரியாமல் மறைத்தபடி அவளை அணைவாகப் பிடித்தவன், ஈரத்துணியால் அவளது முகம் துடைத்து, கண்களில் சில நிமிடங்கள் ஒற்றியெடுக்க தன்னை மறந்து அவன் மீதே உறங்கியிருந்தாள் அவள்...
அவளை மெத்தையில் சரித்தவன், "உன்ன பழிவாங்க கல்யாணம் பண்ணதா நினைச்ச இந்த வில்லன்ட்டயே இப்படி புலம்பிட்டியே வதும்மா..!" என்றுக் கொஞ்சிவிட்டு அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்...
அப்பொழுது சட்டென்று மலைக்குகையில் அவன் மார்பை மெத்தையாக பாவித்து அவள் மகாராணியாக சாய்ந்திருக்கும் நினைவுகள் மீண்டும் எழ,
"உன்கிட்ட மட்டுமே காட்டப்போற உன் மகியோட காதலன் அவதாரம் உனக்குப் பிடிக்குமா டி தங்கமே?" எனக் கேட்டவாறே தன்னருகே நிம்மதியாக உறங்கிய மனைவியை ரசித்தவன், இதற்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் அவளை கண்ணீர் சிந்தாமல் காக்க வேண்டுமென உறுதியாக நினைத்துக் கொண்டான்...
ஹாஹா..! அது என் கைல இருக்கு முருகேசா..! (வேற யாரு நான் தான்)
தொடரும்......