MMI 7
ராஜசிங்காபுரியின் மன்னராக அவன் அரியணையில் அமர்ந்திருப்பதைக் கனவில் கண்ட தீரனிற்கு அதை நம்பவே முடியவில்லை..!
ஒருவேளை அதற்கு பின்னர் நடந்தவைகளும் தனக்குக் கனவில் தோன்றலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் படுக்கையில் விழுந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது...
கனவு வராமல் போனதோடு அவன் வழக்கமாக எழும் நேரத்தைத் தாண்டி எழுந்ததில் அவசர அவசரமாகக் கிளம்பி அலுவலகம் வந்திருந்தான்...
உடனே மதிவதனியின் முகத்தைப் பார்க்க வேண்டும் போல் அவன் மனம் அடித்துக்கொண்டது..!
ஆனால் இவன் அவசரத்திற்கு அவளால் எட்டரை மணிக்கு அலுவலகம் வர முடியாதல்லவா..! அவள் வழக்கமாக வரும் நேரத்திற்கு இன்னும் முக்கால் மணி நேரம் மீதமிருந்தது...
அவனுக்கு அவள் மீது எழும் உணர்வின் பெயர் காதல் தானா என்பதே இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.. அதற்குள் இத்தனை பரபரப்பு..!
"ப்ச் காட்..! ஐ அம் லூசிங் மை கண்ட்ரோல்..." என்று சலித்தபடி ஜன்னலின் அருகே வந்து நின்றவன் வீதியில் விரைந்துக் கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கைப் பார்த்தான்...
சற்று நேரத்தில் மகேனின் ஆடி உள்ளே நுழைவதைக் கண்டு, "இவன் நேத்து நைட்டு எதோ காதல் தானானு கேட்டானே..! ஒ..ஒருவேள என் வது மேல கா..காதல் வந்திருக்குமோ..! நோ..." என்று முணுமுணுத்தவனின் அறிவு,
'ஓ வது..! இது எப்போல இருந்து? இதுல உனக்கு அவ மேல காதல் வேறயா..!' என பரிகாசம் செய்ததில் காதலுக்கும் கனவிற்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தவன் தன் அறைக்குள் நுழைந்த நண்பனை கூட கவனிக்கவில்லை..!
தங்களுக்குள் ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்து வரும் நிகழ்வுகளைப் பற்றி முழுமையாக அறிந்திருந்த மகேனிற்கு நண்பனின் குழம்பிய வதனம் சுவாரசியமூட்டியது போல..!
அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து உள்ளங்கையில் முகம் தாங்கியபடி அவனின் தவிப்பை ரசித்துக் கொண்டிருந்தான்...
வழக்கமாக யாருக்கும் மரியாதை தராமல் எடுத்தெறிந்து பேசும் தீரனின் இந்த அமைதியையும் பரிதவிப்பையும் பார்க்கும்போது இவன் முகத்தில் தன்னை அறியாமலேயே ஒரு நக்கல் சிரிப்பு உதயமானது...
அவனிடம் காதல் சொன்ன பல பெண்களின் மனதை எப்படி உடைத்திருப்பான்?
காதலை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவன் விருப்பமாக இருக்கலாம்..! அதற்காக அவர்களை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
இதில் அவன் மட்டும் ஆஞ்சிநேயராக சுற்றியதுப் போதாமல் இவனையும் அல்லவா சுற்ற வைத்தான்..!
அதை நினைத்து பெருமூச்சு விட்டபடி, "க்ம்ம்.." என தொண்டையை செரும, எந்த சத்தமும் அவன் செவியை எட்டவில்லை...
எப்படி எட்டும்? அவன் தான் கொக்காக தவம் செய்யும் முடிவில் இருந்தானே..!
பலமுறை முயன்றும் தன்னை திரும்பிப் பார்க்காத நண்பனின் தவத்தைக் கண்டு வியந்தபடி அவனை நெருங்கி,
"டேய் மச்சான்... என்னடா பண்ற?.." அவன் தோளைப் பற்றி உலுக்கியதில் திடுக்கிட்டு,
"மகேன்..! நீ எப்..எப்படா வந்த?.." என்றவன் வினவ,
"க்ஹூம் நாசமாப்போச்சு போ..! நான் வந்து அரை மணி நேரமாச்சு ராசா..! அதுவே தெரியாம அப்படி யாருக்காக இங்க நிக்கிற?.." என்றதற்கு பதில் சொல்லாமல்,
"வாட்.. அவ்ளோ நேரமாச்சா?.." என்றபடியே தன் கைக்கடிகாரத்தில் மணிப் பார்த்துவிட்டு, 'என்ன இவளக் காணோம்? எப்போதும் இந்த டைம்க்கு வந்துருப்பாளே..' என மனதில் நினைத்தவாறே தன் இருக்கையில் அமர்ந்தான்...
"ம்ம் ஆமாடா மணி ஒன்பது இருபதாச்சு... இதோ இதுல நீ ஒரு சைன் போடணும்.. அத வாங்க தான் வந்தேன்.." என்று ஒரு கோப்பை அவனுக்கு முன்பாக விரித்து வைத்த மகேன் அவனை விழிகளால் அளந்துவிட்டு, "அப்புறம் இன்னைக்கு நான் ஆஃப்டே லீவ்டா.." என்றான் விரிந்த புன்னகையுடன்...
"ஓ தட்ஸ் ஃபைன்..! எனிதிங் இம்பார்ட்டன்ட்?..." எனக் கேட்டபடியே அவன் முன்பாக இருந்த கோப்பைப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட்டவன்,
"ம்ம் யெஸ் தீரா..! வர்ற வெள்ளிக்கிழம எங்க எங்கேஜ்மெண்ட் வருதுல... இன்னைக்கு அதுக்காக டிரஸ் பர்ச்சேஸிங் பண்ணனும்டா... அதான் வதனியும் லீவ் போட்ருக்கா..." என்றதில் திகைத்து,
"வாட் வதனியா?.." என்று கடுப்புடன் வினவ,
அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவன், "ஆமாடா வதனி..! வ..த..னி... வதுனு கூப்பிடப் போறேன் நல்லா இருக்கா? மகி..! வது..! கேட்கவே சங்கீதமா இருக்குல..!" என்றவனின் குரல் பாசமாய் வருடியது...
அவன் முகத்தில் இன்னதென இனங்காண முடியாத ஒரு உணர்வைக் கண்ட தீரனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன..!
"இனாஃப் மகேன்... ஐ திங்க் உனக்கு எல்லாமே ஞாபகம் வந்துடுச்சு, ரைட்..! ஆனா எனக்கு முழுசா எதுவும் தெரியலையேடா..! இப்போ நீ சொல்லு மதி... ஐ மீன் வதனி யாருக்கு சொந்தம்?" என்றான் நண்பனைப் பற்றி நன்கு அறிந்தவனாக...
"ஹாஹாஹா..! யூ ஆர் ப்ரில்லியண்ட் மேன்..! ஆனா எல்லாத்தையும் நானே சொல்லிட்டா நல்லா இருக்காது தம்பி... நீயே கண்டுபிடி..!" என்றுவிட்டு நகர்ந்தவனின் கைப்பற்றி நிறுத்திய தீரன்,
"டேய் டோண்ட் டூ திஸ் டூ மீ... நம்ம முன்ஜென்ம வாழ்க்கைல என்ன நடந்துச்சுனு எனக்கு சொல்லப் போறியா இல்லயா?.." என்று பொறுமையின்றி கத்தியதில் ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தவன்,
"உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்றதுக்கு எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..! ஆ..ஆனாலும் பெஸ்ட் ஃப்ரெண்டா போயிட்ட..! உன்னப் பார்த்தாலும் பாவமா தான் இருக்கு..!
ஓகே ஐ வில் கிவ் எ க்ளூ... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நம்ம லேன்ட் பார்க்கப் போயிருந்தப்போ காட்டுல ஒரு சாமியார் வந்தாரே ஞாபகம் இருக்கா? நீ கூட அவர் பைத்தியம் மாதிரி ஏதோ பேசுறாருனு கண்டுக்காமப் போனியே.. அவரத் தேடிப்பிடி..! உனக்கும் எல்லாமே தெரிய வரும்..." என்றதில் அவன் சொல்லிய அந்த நிகழ்வை நினைவுப்படுத்த முயன்று அதில் வெற்றியும் கண்டிருந்தான்...
"ஓ.. யெஸ்..! பட் யூ க்னோ... எனக்கு அவ்ளோ பொறுமைலாம் இல்ல... நானா அவரத் தேடிப் பார்த்துத் தெரியுறதுக்கு நீயே சொல்லிடு மகேன்.." என சாதாரணமாக சொன்னதில் பல்லைக் கடித்தவன்,
"நோ..! அது முடியாது தீரா... ஆனா உனக்காக வேணும்னா ஒன்னு சொல்றேன்... மதிவதனி அவளோட மகேந்திரனுக்கு தான்.." என்றான் அழுத்தம் திருத்தமாக..
அதில் கடும்கோபத்தில் முகம் சிவக்க, "டேய்..." என்று ஆக்ரோஷமாக அவன் சட்டை காலரைப் பிடித்து உலுக்கியதில் மேலும் பொங்கி சிரித்த மகேன்,
"ச்சு சும்மா தெலுங்குப் படத்துல வர்ற வில்லன் மாதிரி கத்திக் கூப்பாடுப் போடாம, உனக்கு கொடுத்திருக்க க்ளூவ வச்சு உண்மைய கண்டுபிடிச்சிட்டு வந்து பேசு..." என்றிருந்தான்..
"ஏய் லூசு மாதிரி பேசாத மகேன்..! நான் கண்டுபிடிச்சு வர்றதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் என்கேஜ்மெண்ட்டே முடிஞ்சுடும்டா..." என்றவன் அலுத்துக் கொள்ளவே,
"இதுல என்னோட தப்பு எதுவும் இல்லயே தீரா..! நானா உனக்கு சொந்தமானத அபகரிக்கல... நீயா வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் அத ஏத்துக்கிட்டேன்... தட்ஸ் இட்...
அண்ட் நீயா சரியான நேரத்துக்கு தேடி வந்தீனா வதனி உனக்கு..! இல்லைன்னா மதி எனக்கு..! இந்த ஜென்மத்துலயாவது உன்னோட காதல் ஜெயிக்குதா? இல்ல போன ஜென்மத்துல மாதிரியே ஆகுதானுப் பார்ப்போம்... வெல் மேக் இட் ஃபாஸ்ட் மேன்... ஐம் வெயிட்டிங்..!" என்றதில் அவனை நம்பமுடியாதத் திகைப்போடு நோக்கியவன்,
"ச்சீ நீயெல்லாம் ஒரு நண்பனா..! துரோகி..." என்றான் கசப்பை விழுங்க முயன்றபடி..
அவனை சலிப்பாகப் பார்த்துத் தலையாட்டி மறுத்தவன், "அட நீ இப்படியெல்லாம் உருக்கமாப் பேசுனா நான் சொல்லிடுவேனா..! உனக்குத் தேவையானத நீ தான்டா தேடணும்..." என்றதோடு அவனது காதருகில் நெருங்கி,
"அப்புறம் நானும் மதியும் நம்ம அஜய்யோட பட்டு மாளிகைக்கு தான் போறோம்... அங்கயும் வந்து எங்களத் தொல்ல பண்ணாம உன்னைய நீயே தேடிக் கண்டுபிடிக்கிற வழியப் பாரு தம்பி... வரட்டா..!" என்றுவிட்டு சமீபத்தில் வந்த காதல் பாடலை சீட்டி அடித்தபடி வெளியேறினான்...
மகேன் சென்றதும் கூண்டுக்குள் அடைபட்ட புலியை போல் சில நிமிடங்கள் அங்குமிங்கும் அறையை அளந்தவன் தன் பிஎம்டபிள்யூவின் சாவியை எடுத்துக்கொண்டு அவன் குறிப்பிட்ட அந்த சாமியாரைக் கண்டுபிடிக்கக் கிளம்பியிருந்தான்...
இரண்டு மாதத்திற்கு முன்பு அவனும் மகேனும் வனப்பகுதியை ஒட்டியிருந்த ஒரு இடம் விற்பனைக்கு வருவதை அறிந்து அதைப் பார்வையிடச் சென்றிருந்தனர்..!
இந்த நகைத்தொழில் அவர்கள் குடும்பத்தில் வழிவழியாக செய்துவந்தது என்பதால் நண்பர்கள் இருவரும் குடும்பத்தில் மூத்த மகனாக இதில் இணைந்து கொண்டாலும், மகேனின் தம்பி நரேந்திரனோடு சேர்ந்துக் கூட்டாக தனியார் தங்கும் விடுதிகளையும் நடத்தி வருகின்றனர்...
அதற்காக தான் அந்தப் பயணமும்..!
இயற்கையின் சாயல் மாறாமல் சிறு நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஐம்பது ஏக்கரில் பரந்து விரிந்திருந்த அந்த இடத்தைப் பார்த்ததும் பிடித்துவிடவே அதை வாங்கிக் கொள்வதாகப் பேசி முன்பணம் வழங்கிவிட்டு, தீரன் ஆசைப்பட்டதற்காக வனத்துறையினரிடம் அனுமதிப் பெற்று அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் நீண்டதூரப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்...
ஒரு மணிநேரம் எந்த கவலையுமின்றி நண்பர்கள் இருவரும் பழங்கதைகள் பேசியபடி வந்துகொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கரும்பாறை குன்றுகள் நிறைந்த ஓரிடத்தில் அவர்களின் கார் பழுதாகி நின்றுவிட்டது...
தனக்குத் தெரிந்த வகையில் அதைப் பழுதுபார்க்க முயன்று அதில் தோல்வியைத் தழுவியவன், "ப்ச் இந்த காட்டுல எங்கடா மெக்கானிக்கத் தேடுறது.." என்று மகேனிடம் புலம்பிக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்ததைப் போல் ஒரு பெரியவர் இவர்கள் இருவருக்கும் முன்பாக வந்து நின்றதில் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..!
காவி நிறத்தில் வேட்டி அணிந்து நெற்றியிலும் மேல் உடலிலும் திருநீறு பூசியிருந்த அப்பெரியவர் இவனை நெருங்கி வந்துப் பேச முயற்சித்தார்...
அன்று அவரை புத்தி சுவாதீனம் இல்லாதவராக நினைத்து ஒவ்வாமையாகப் பார்த்துவிட்டு மெக்கானிக்கை அழைக்க அலைபேசியை கையில் எடுத்தபடி சற்று தள்ளியிருந்த ஒரு பாறையில் மீது ஏறி நின்றது ஞாபகம் வரவே, இன்றும் அதே இடத்தில் காரை நிறுத்தியவன் அங்கே அமர்ந்து அவரின் வருகைக்காகக் காத்திருந்தான்...
ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் அவர் வராததில், "ஒருவேள நான் தான் தேடிப் பார்க்கணுமா? ஆனா இந்த காட்டுல தேடுனா எத்தன மாசமாகுமோ..!" என்று யோசித்தபடியே அந்த சுற்றத்தில் தேடிப் பார்த்தவன் மணி மூன்றானதில் அங்கிருந்துக் கிளம்பியிருந்தான்..
இப்போது அவரைத் தேடுவதைக் காட்டிலும் அவனுக்கு அதிமுக்கியமான வேலை ஒன்று இருந்ததே அதற்கு காரணம்..!
மதிவதனியை அழைத்துக் கொண்டு 'ஏஏஏ' என்று தங்கநிற எழுத்துக்களில் மின்னிய அந்த பாரம்பரியமிக்க ஆடையகத்திற்கு வந்த மகேன் அங்கு அவனுக்கு முன்பே வாகன நிறுத்துமிடத்தில் நின்ற தீரனின் காரைக் கவனிக்காமல் உள்ளே நுழைந்தான்...
தயங்கித் தயங்கி தன்னைவிட்டு சில அடிகள் விலகி நடந்து வந்த மதிவதனியைப் பார்த்து மென்மையாக சிரித்தவாறே அங்கு திருமணப் பட்டுப்புடவைகளுக்குப் பிரத்யேகமாக அமைத்திருந்த பிரிவிற்குள் காலடி வைத்தவன் அங்கு அமர்ந்திருந்த நண்பனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தான்...
இவனுக்கே இப்படியென்றால் மதியைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ..!
ஏற்கனவே தந்தையின் வற்புறுத்தலின் பேரில் மகேனோடு வந்தவளுக்கு இதென்னடா புது பிரச்சினை என்றிருந்தது..!
அதில் விரிந்த விழிகளில் கேள்வியைத் தேக்கி, "அச்சோ இங்கேயுமா..! இந்த முனீஸ் இங்க என்னப் பண்றான்?.." என்ற முணுமுணுப்புடன் தன்னருகே நின்ற மகேனை ஏறிட்டாள்...
"ஹான் அது வந்து வேற யாருக்காவது பட்டு வாங்க வந்திருப்பான்டா.. நீ வா நாமளும் போவோம்.." என்றவாறு தீரனிற்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து அவனைக் கொலைவெறியாக முறைக்க,
"வாடா மகேன்..! நீ சொன்னபடியே கரெக்ட் டைம்க்கு வந்துட்டேனா?.." என சத்தமாக நக்கலடித்ததில் திகைத்து மதியைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்,
"டேய் உன்கிட்ட இங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டு தானே வந்தேன்... அப்படியும் இங்க வந்தா என்ன அர்த்தம்? திமிர் பிடிச்ச இடியட்..!" என்றான் அவனுக்கு மட்டும் கேட்கும்படி..
"ஹாஹா நீ சொன்னா நான் கேட்கணுமா? நெவர்..!" என்றதோடு தனக்கு முன்பாக அடுக்கியிருந்த பட்டுப்புடவைகளை ஆராயத் தொடங்கினான் அவன்...
அப்போது மட்டுமின்றி கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அவர்களுக்கு இடையே நுழைந்து மகேனின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தான்..!
அது போதாதென்று மகேன் தேர்ந்தெடுத்தப் பட்டுப்புடவையைக் கட்டிப் பார்ப்பதற்காக உடைமாற்றும் அறையில் மதிவதனி நிற்கும்போதே உள்ளே நுழைந்தவன், "உனக்கு இந்த ஜென்மத்தில கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என்னோட மட்டும் தான் டி நடக்கணும்..!நடக்கும்..!" என்று மிரட்டியதில் அவள் அதிர்ந்து நிற்க,
அவளின் தாடையைப் பற்றி அருகிழுத்து கன்னத்தில் மீசைமுடி உரச அழுத்தமாக முத்தம் வைத்தவன், அதிர்ச்சி விலகாததால் தன்னை மறைக்க மறந்த பெண்ணவளின் பேரழகைக் கூர்விழிகளால் அளந்தபடியே வெளியே சென்றிருந்தான்..!
தொடரும்......

Last edited:
Author: நிதனிபிரபு
Article Title: மகேந்திரனின் மதிவதனியிவள் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.