மனதை நிறைக்கும் விமர்சனம்

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,577
113
Germany

உங்களுக்கு என்னைத் தெரியாது. பெரிதாக விமர்சனம் எல்லாம் எழுத மாட்டேன். எனக்கு ரொம்ப பயம்… சரியாக எழுத வருமோ என்றே பயம். ஏனோ இப்போது உங்களிடம் இதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது.அதனால்தான் இந்த மெசேஜ்.

நான் படித்த உங்கள் முதல் நாவல், ஏனோ மனம் தள்ளாடுதே. கிண்டிலில் வந்த நோட்டிபிகேஷனில் பார்த்ததுதான். ஆனால் ரொம்ப பிடித்த ஒரு கதை. அதை நீங்கள் ஆன்டி-ஹீரோவாக நினைத்து எழுதினீர்களா தெரியாது அக்கா. ஆனால் என்னைப் பொருத்தவரை அது ஒரு பர்ஃபெக்ட் ஆன்டி-ஹீரோ கதாபாத்திரம்.

ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படியாவது இருக்கலாம்; அவனை ஹீரோவாகக் காட்டி கடைசியில் திருந்திவிட்டால் அதையே ஆன்டி-ஹீரோ நாவல் என்று சொல்வார்கள். அப்படி வாசித்தபோது எல்லாம் “என்னடா இது?” என்று இருந்தேன்.

அப்போதுதான் இதைப் படித்தேன். ஒரு பர்ஃபெக்ட் ஆன்டி-ஹீரோ என்றால் அது எங்கள் கௌஷிக் தான். தனிமனித ஒழுக்கம் ஒரு ஆணுக்குமே எப்போதும் ரொம்ப முக்கியம். கல்யாணத்தப்ப நீங்கள் எழுதியிருந்த ஒரு டயலாக் — தனபாலசிங்க ஐயா விசாரித்ததில் எந்தப் பழக்கமும் இல்லாதவன்; கேட்ட ஒரே நல்ல விஷயம் அதுதான். மற்றபடி தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, பெற வேண்டியதைப் பெற்றிடுவான் என்று.

ஞாயமின்றி ஆனால் தனி மனித ஒழுக்கத்தோடு இருப்பவனே anti-hero என்னை பொருத்தவரை. உண்மையில் இந்த கதைக்கு பிறகுதான் உங்கள் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன்.

விமர்சனம் எழுதணும் என்று நினைத்தால் ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் நினைப்பதை சரியாக சொல்ல முடியுமா? தவறாக போய்ச் சேர்ந்து விடுமோ என்றெல்லாம் பயம்.

ஆனா உங்கள் “ஆட்ட நாயகன்” 12, 13, 14 எபிசோட்ஸ் படித்த பிறகு நான் எவ்வளவு சர்ப்ரைஸும் ஷாக்கும் ஆனேன் தெரியுமா? ஒரு விஷயத்தை இவ்வளவு தெளிவாக காட்சிப்படுத்த எப்படி முடிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். இந்தத் திறமை எல்லோருக்கும் கடவுள் கொடுக்க மாட்டார் அக்கா; கொடுத்தாலும் எல்லோரும் அதை சரியாக பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் உங்களிடம் இரண்டும் இருக்கிறது.

ஒரு படத்தில்கூட இப்படிப்பட்ட காட்சியை காட்டிவிடலாம்; அது சுலபம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு கதையில் எழுத்து வடிவில் அந்தக் காட்சியை கண்முன்னே கொண்டு வருவது — அது சண்டைக் காட்சி என்றாலோ — அவ்வளவு எளிதல்ல அக்கா.

நீங்கள் ரொம்ப நாள் நன்றாக இருக்க வேண்டும். இதில் கொஞ்சம் என்னுடைய சுயநலமும் இருக்கிறது; அப்போதுதான் நீங்கள் நிறைய எழுதுவீர்கள், நாங்களும் படிக்க முடியும்.

ஆனா ஒரு விஷயம் அக்கா — என் பையன் 7 வயது, பொண்ணு 3 வயது. அவர்கள் 21 அல்லது 22 வயதில், குடும்பம் சார்ந்த ஒரு நாவல் படிக்க ஆசைப்பட்டால், உங்கள் புத்தகத்தையே முதலில் கொடுப்பேன். எழுத்துமுறை, தமிழ் நடை, சிந்தனை விளக்கம், ஒரு ஆண் எப்படி சக மனிதரை மதிக்க வேண்டும், ஒரு பெண் எப்படி சுயசிந்தனையுடன் இருக்க வேண்டும் — இப்படியெல்லாம் அவர்களுக்கு தெரிந்தாக வேண்டும் என்றால் அது உங்கள் நாவலில் இருக்கிறது.

எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அக்கா. நிச்சயம் கடவுளிடம் கேட்டுப் பிரார்த்திப்பேன் — தனது திறமையைச் சிறப்பாக பயன்படுத்துகிறவர்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று.
 
Author: நிதனிபிரபு
Article Title: மனதை நிறைக்கும் விமர்சனம்
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
360
325
63
India
உங்களுக்கு என்னைத் தெரியாது. பெரிதாக விமர்சனம் எல்லாம் எழுத மாட்டேன். எனக்கு ரொம்ப பயம்… சரியாக எழுத வருமோ என்றே பயம். ஏனோ இப்போது உங்களிடம் இதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது.அதனால்தான் இந்த மெசேஜ்.

நான் படித்த உங்கள் முதல் நாவல், ஏனோ மனம் தள்ளாடுதே. கிண்டிலில் வந்த நோட்டிபிகேஷனில் பார்த்ததுதான். ஆனால் ரொம்ப பிடித்த ஒரு கதை. அதை நீங்கள் ஆன்டி-ஹீரோவாக நினைத்து எழுதினீர்களா தெரியாது அக்கா. ஆனால் என்னைப் பொருத்தவரை அது ஒரு பர்ஃபெக்ட் ஆன்டி-ஹீரோ கதாபாத்திரம்.

ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படியாவது இருக்கலாம்; அவனை ஹீரோவாகக் காட்டி கடைசியில் திருந்திவிட்டால் அதையே ஆன்டி-ஹீரோ நாவல் என்று சொல்வார்கள். அப்படி வாசித்தபோது எல்லாம் “என்னடா இது?” என்று இருந்தேன்.

அப்போதுதான் இதைப் படித்தேன். ஒரு பர்ஃபெக்ட் ஆன்டி-ஹீரோ என்றால் அது எங்கள் கௌஷிக் தான். தனிமனித ஒழுக்கம் ஒரு ஆணுக்குமே எப்போதும் ரொம்ப முக்கியம். கல்யாணத்தப்ப நீங்கள் எழுதியிருந்த ஒரு டயலாக் — தனபாலசிங்க ஐயா விசாரித்ததில் எந்தப் பழக்கமும் இல்லாதவன்; கேட்ட ஒரே நல்ல விஷயம் அதுதான். மற்றபடி தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, பெற வேண்டியதைப் பெற்றிடுவான் என்று.

ஞாயமின்றி ஆனால் தனி மனித ஒழுக்கத்தோடு இருப்பவனே anti-hero என்னை பொருத்தவரை. உண்மையில் இந்த கதைக்கு பிறகுதான் உங்கள் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன்.

விமர்சனம் எழுதணும் என்று நினைத்தால் ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் நினைப்பதை சரியாக சொல்ல முடியுமா? தவறாக போய்ச் சேர்ந்து விடுமோ என்றெல்லாம் பயம்.

ஆனா உங்கள் “ஆட்ட நாயகன்” 12, 13, 14 எபிசோட்ஸ் படித்த பிறகு நான் எவ்வளவு சர்ப்ரைஸும் ஷாக்கும் ஆனேன் தெரியுமா? ஒரு விஷயத்தை இவ்வளவு தெளிவாக காட்சிப்படுத்த எப்படி முடிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். இந்தத் திறமை எல்லோருக்கும் கடவுள் கொடுக்க மாட்டார் அக்கா; கொடுத்தாலும் எல்லோரும் அதை சரியாக பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் உங்களிடம் இரண்டும் இருக்கிறது.

ஒரு படத்தில்கூட இப்படிப்பட்ட காட்சியை காட்டிவிடலாம்; அது சுலபம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு கதையில் எழுத்து வடிவில் அந்தக் காட்சியை கண்முன்னே கொண்டு வருவது — அது சண்டைக் காட்சி என்றாலோ — அவ்வளவு எளிதல்ல அக்கா.

நீங்கள் ரொம்ப நாள் நன்றாக இருக்க வேண்டும். இதில் கொஞ்சம் என்னுடைய சுயநலமும் இருக்கிறது; அப்போதுதான் நீங்கள் நிறைய எழுதுவீர்கள், நாங்களும் படிக்க முடியும்.

ஆனா ஒரு விஷயம் அக்கா — என் பையன் 7 வயது, பொண்ணு 3 வயது. அவர்கள் 21 அல்லது 22 வயதில், குடும்பம் சார்ந்த ஒரு நாவல் படிக்க ஆசைப்பட்டால், உங்கள் புத்தகத்தையே முதலில் கொடுப்பேன். எழுத்துமுறை, தமிழ் நடை, சிந்தனை விளக்கம், ஒரு ஆண் எப்படி சக மனிதரை மதிக்க வேண்டும், ஒரு பெண் எப்படி சுயசிந்தனையுடன் இருக்க வேண்டும் — இப்படியெல்லாம் அவர்களுக்கு தெரிந்தாக வேண்டும் என்றால் அது உங்கள் நாவலில் இருக்கிறது.

எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அக்கா. நிச்சயம் கடவுளிடம் கேட்டுப் பிரார்த்திப்பேன் — தனது திறமையைச் சிறப்பாக பயன்படுத்துகிறவர்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று.
இவர்கள் சொன்ன அனைத்தும் உண்மை. ஆனால் எனக்கு இது மாதிரி எல்லாம் கமெ‌ண்ட் போட வரவில்லை. இந்த பதிவை போட்ட சகோ க்கு கோடி நன்றிகள். நிதா அக்கா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.