அத்தியாயம் 14
சாரதாவுக்கு இனித் தங்கள் உறவு பழையபடி இருக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. இல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் மருமகன் இவ்வளவு நேரத்திற்கு வெளியில் வராமல் இருந்திருக்க மாட்டான். அன்பாக உபசரித்து இரண்டு வார்த்தை பேசாமலும் இருக்க மாட்டான்.
அது நினைவில் வந்ததும் முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போலாயிற்று அவருக்கு.
மன்னிப்பை வேண்டுகிறவர் போன்று பிரேமாவின் கரம் பற்றி, “ஒரு துரோகத்தில கிடைச்ச வாழ்க்கை எண்டுறதாலயோ என்னவோ என்ர பிள்ளைக்கு அந்த வாழ்க்கையக் கடைசிவரை வாழக் குடுத்து வைக்கேல்ல அக்கா. பாதிலயே போய்ட்டாள். அவளை நினைச்சாவது எங்களை மன்னிச்சுக்கொள்ளுங்கோ.” என்றதும், “சாரதா!” என்றார் பிரேமா கலங்கிப்போய்.
அங்கே அறைக்குள் இருந்தவனின் உயிரும் துடித்துப் போயிற்று. தன் மேசையில் சட்டத்துக்குள் இருந்தவளைப் பார்த்தான். ‘ஏதோ ஒரு வகைல நானும் பாவம் செய்தவன்தானே. அதான் நீ இவ்வளவு அவசரமாப் போனியா?’ உள்ளம் அழ அவளோடு உரையாடினான்.
“மருமகனையும் மன்னிச்சுக்கொள்ளட்டாம் எண்டு சொல்லிவிடுங்கோ அக்கா. வாறன் போயிற்று!” என்றுவிட்டுப் புறப்பட்டார் சாரதா.
கேசிகனால் உறங்கவே முடியவில்லை. நாவினியோடு கதைக்க வேண்டும்போல் ஒரு துடிப்பு. அதே நேரத்தில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளோடு கதைப்பாய் என்கிற கேள்வி அவனைப் பின்னால் இழுத்துப் பிடித்தது.
அவள் பரிசாகத் தந்த அந்த வீடு, அதில் எழுதியிருந்த கவிதை, அவள் அனுப்பியிருந்த குறுந்தகவல்கள் எல்லாம் அவள் நேசத்தின் ஆழத்தையும், அவனை எந்தளவுக்கு நம்பியிருந்திருக்கிறாள் என்றும் சொல்லி, அவன் நெஞ்சைக் கீறின. அவற்றிலிருந்து வெளிவர முடியாமல் அல்லாடினான். கண்ணை மூடினாளே நான் வேண்டாமா, என்னைப் பிடிக்கவில்லையா என்று கண்ணீருடன் கேட்டாள் நாவினி.
அடுத்த நாள் எழுந்து கடைக்குப் புறப்பட்டு வந்தவனிடம், “அவாவோட கதைக்கட்டா தம்பி?” என்று கேட்டார் பிரேமா.
சில கணங்கள் அமைதியிலேயே கழித்துவிட்டு, “வேணாம் அம்மா.” என்றான் அவன்.
“ஏனப்பு?”
“எப்ப மொழியைக் கட்ட ரெடியானேனோ அப்பவே அவளைக் கட்டுற தகுதியை நான் இழந்திட்டன் அம்மா. உண்மையாவே எனக்கு இன்னொரு கலியாணம் கட்டுற ஐடியா கொஞ்சமும் இல்லை. இனி எனக்குத் தம்பி மட்டும் போதும்.”
“அப்ப உன்னையே நினைச்சுக்கொண்டு இன்னும் தனியா நிக்கிற அந்தப் பிள்ளைக்கு என்னப்பு சொல்லப்போறாய்?”
ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, “என்னையே நினைச்சுக்கொண்டு இருக்கேல்ல அவள். நான் குடுத்த காயத்தக் கடந்து போகேலாம நிக்கிறாள். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.” என்றான்.
“சரி, அந்தக் காயத்தை ஆத்தவேண்டிய பொறுப்பு உனக்குத்தானே இருக்கு?”
உண்மைதான். அவள் காயங்களை ஆற்றவேண்டியவன் அவன்தான். ஆனால், இன்றைய நிலையில் அவள் முகம் பார்ப்பதற்குக் கூட அருகதையற்றவன் அவன். “விடுங்கம்மா. அவள் இனியாவது சந்தோசமா இருக்கட்டும்.” என்றான் களைப்புற்ற குரலில்.
“உன்னைக் கட்டினா மட்டும்தானப்பு அவா சந்தோசமா இருப்பா.”
“என்னம்மா கதைக்கிறீங்க? எந்த முகத்தை வச்சுக்கொண்டு அவளைக் கட்டுவன்? முதல் என்னை மாதிரி ஒருத்தனைக் கட்டி வாழோணும் எண்டு அவளுக்குத் தலையெழுத்தா என்ன? அவளுக்குப் பொருத்தமான நல்லவன் ஒருத்தன் வருவான், விடுங்க.” என்றான் சினம் தெறிக்க.
அவரால் அப்படி இருக்க முடியவில்லை. அவளை வேண்டாம் என்று அவன் சொல்லவில்லை. அவளைக் கட்டும் தகுதி தனக்கு இல்லை என்கிறான். அவளைச் சம்மதிக்க வைத்துவிட்டால் இவனை வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பினார்.
அவரிடம் வைதேகியின் இலக்கம் உண்டு. நாவினி இங்கிருந்த காலத்தில் அவளைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லி, ஏதும் என்றால் உடனடியாகத் தனக்கு அழைக்கச் சொல்லி அவராகவே தந்திருந்தார்.
அவருக்கு அழைத்து மேனகாவின் இலக்கம் வாங்கி அவரோடு பேசினார். நடந்த எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பை வேண்டினார். என்னவோ இன்று நாகரத்தினம் அபிராமியின் இடத்தில் மேனகா குடும்பம் இருப்பது போலொரு எண்ணம் பிரேமாவிற்கு.
மேனகாவிற்கு நாவினி மனத்தில் ஒருவன் இருந்திருக்கிறான் என்பதே நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. இதில் அடுத்தடுத்து பிரேமா சொன்னவற்றை யோசிக்க முடியாமல் நின்றார். அதே நேரத்தில் திருமணம் என்றாலே ஏதோ ஒன்றைச் சொல்லித் தள்ளிப்போட்டுக்கொண்டு இருப்பதன் பின்னால் இருப்பது இதுதானோ என்றும் ஓடிற்று.
“தப்பித்தவறி அவாக்கு இப்பவும் விருப்பம் இருந்து, சொல்லுறதுக்கு ஒருத்தரும் இல்லையே எண்டு சொல்லாம இருக்கிற நிலை கறுமம் எல்லா? அந்த ஆசையோடயே இன்னொரு வாழ்க்கைக்க போறா எண்டு வைங்கோ, அது தாய் தகப்பன் இல்லாத பிள்ளைக்கு நாங்க எல்லாருமாச் சேந்து செய்த பெரும் பாவமா போயிடும். அதாலதான் இதையெல்லாம் உங்களிட்டச் சொல்லுறன். நீங்க ஒருக்கா கேட்டுப் பாருங்கோ. நானும் அவாவோட கதைக்கிறன்.” என்று சொன்னார் பிரேமா.
அன்று மாலையே சிவதாசனோடு அவள் வீட்டுக்கு வந்து இதைப் பற்றிப் பேசினார் மேனகா. கூடவே மயூரன் செய்தவை, கேசிகனின் கைப்பேசியை எடுத்து ஒளித்து வைத்தது என்று அனைத்தையும் சொன்னார்.
கொஞ்ச நேரம் மௌனமாகக் கண்ணீர் உகுத்தாள் நாவினி. அன்றைய நாள்கள், அப்போது அவள் தவித்த தவிப்புகள் எல்லாம் நினைவில் வந்து அவள் உள்ளத்தைப் பிரட்டிப் போட்டன. அவன் கைப்பேசி இலக்கம் இவளுக்கோ, இவளது அவனுக்கோ கிடைத்திருந்தால் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
நியாயமான சிறு காரணம் கூட இல்லாது தன் வாழ்க்கையைத் தொலைத்தவள் அவள். எத்தனை வருடங்களானால் என்ன? அந்த வலி போவதாக இல்லை.
“என்னம்மா, இப்பிடி அழுதா என்ன அர்த்தம்? அந்தத் தம்பியப் பேசுவமா?”
தன்னை ஒரு வழியாகத் தேற்றிக்கொண்டு “அதெல்லாம் வேண்டாமே அன்ட்ரி.” என்றாள் கண்ணீருடன்.
“ஏனம்மா?”
ஏன் என்று அவளுக்கும் தெளிவில்லை. ஆசைப்பட்டு ஏங்கிய காலத்தில் கிடைத்த பெரும் ஏமாற்றம் காரணமா, இல்லை, என்ன நடந்திருந்தாலும் தான் மாறாமல் இருக்க, அவனால் இன்னொரு வாழ்க்கைக்குள் போக முடிந்திருக்கிறதே என்கிற விடயம் தருகிற அந்த வலி அவளுக்குள் இன்னுமே இருப்பது காரணமா தெரியாது.
அந்த வாழ்க்கை இனிக் கிடைத்தாலும் முன்னர் ஆசைப்பட்டது போன்று அதை அனுபவித்து வாழ முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை. இந்த வலி, விரக்தி, தனிமையோடு ஏதோ ஒரு வகையில் வாழப்பழகிக்கொண்டு இருக்கிறவளுக்குத் தன் வாழ்வில் மாற்றங்கள் வருவதில் உடன்பாடில்லை. திருமணமே வேண்டாம் என்பதுதான் அவள் முடிவு. அதைச் சொன்னால் மேனகா நிச்சயம் கோபப்படுவார்.
அதில், “அதெல்லாம் சின்ன வயசில வந்த ஆசை. இப்ப அப்பிடி எல்லாம் இல்ல. அவருக்கும் அவரின்ர வைஃப எந்தளவுக்குப் பிடிக்கும் எண்டு நேர்லயே பாத்திருக்கிறன் அன்ட்ரி.” என்று சொன்னாள்.
“அப்ப இஞ்ச பாத்திருக்கிற பெடியனைப் பேசவா?”
அவருக்குத் தேவையானது அவளுக்கு ஒரு திருமணத்தைச் செய்து வைத்து, அவள் நன்றாக வாழ்வதைப் பார்ப்பது மட்டுமே. கேசிகனை விரும்பியிருக்கிறாள் என்று தெரிய வரவும்தான் அவனைப் பற்றிப் பேசினார்.
மற்றும்படி ஏற்கனவே மணமாகி, ஒரு குழந்தையோடு இருக்கிறவனை அவளுக்குக் கட்டி வைப்பதில் அவருக்கு முழுமையான உடன்பாடு இல்லை.
“இன்னும் கொஞ்சக் காலம் போகட்டுமே அன்ட்ரி.” கெஞ்சும் குரலில் சொன்னவளை முறைத்தார் மேனகா.
கலங்களாகத் தெரிந்த பார்வையைத் தன் விரல்கள் மீது பதித்து, “நானும் எல்லாத்தில இருந்தும் வெளில வரத்தான் நினைக்கிறன் அன்ட்ரி. ஏலுதே(இயலுதே) இல்ல. எனக்குள்ள போராடி போராடிக் களைப்பா இருக்கு.” என்றவளை மிகுந்த வேதனையுடன் பார்த்தார் மேனகா.
வாழ்க்கை நெடுகிலும் கொஞ்சம் கூட நியாயமே இல்லாமல் பலமுறை தண்டிக்கப்பட்டவள் அவள். இன்று இன்னொரு உறவை ஏற்க முடியாமல் நிற்கிறாள். கொஞ்சமாக அழுத்திப் பிடித்தால் கூட நொறுங்கிவிடும் மெல்லிய கண்ணாடிப் பாத்திரம் போன்று, கண்ணில் நீருடன் அமர்ந்திருந்தவளைப் பார்க்கையில் அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
வீட்டுக்கு வந்து பிரேமாவிற்கு அழைத்தார். இரண்டு முறை முயன்றும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
புலனத்திற்குச் சென்று, “அவாவோட கதைச்சனான். வேண்டாம் எண்டு சொல்லுறா. அதெல்லாம் சின்ன வயசு ஆசைகளாம். வீம்புக்கு எண்டு நிக்கிற பிள்ளை இல்ல அவா. அதால எனக்கும் எதையும் தெண்டிக்க(வற்புறுத்த) விருப்பம் இல்ல. ரெண்டு நாள் போகட்டும். இன்னொருக்கா கதைச்சுப் பாக்கிறன். அப்பவும் வேண்டாம் எண்டு சொன்னா இத அதோட விட்டுடுவம்.” என்று பேசி முதலில் அனுப்பிவிட்டார்.
“எப்பிடியும் அவாக்கு ஒரு கலியாணம் செய்து வைக்காம நானும் விடமாட்டன். எல்லா பக்கத்தாலயும் காயப்பட்ட பிள்ளைய, ஒரேடியா கட்டாயப்படுத்திக் கஷ்டப்படுத்த விருப்பம் இல்லாம விட்டுப் பிடிக்கிறனே தவிர, கடைசி வந்தாலும் அவாவை இப்பிடியே இருக்க விடமாட்டன். இஞ்சையும் ஒரு நல்ல பெடியன் இருக்கிறான். உங்கட மகனுக்கு ஓம் எண்டு சொல்லாட்டி அந்தப் பெடியனைக் கட்டி வைப்பன்.” என்று திரும்பவும் பேசி அனுப்பிவிட்டார்.
பிரேமா குளித்துக்கொண்டிருந்தார். அவர் கைப்பேசி இரண்டு தடவைகள் அழைத்து ஓயவும் யார் என்று பார்க்க வந்த கேசிகன், வந்து விழுந்த குறுந்தகவல்களைக் கண்டான். மேனகாவிடமிருந்து என்றதும் எடுத்துக் கேட்டான்.
ஒரு கணம் யோசித்துவிட்டு அன்னையின் கைப்பேசியில் இருந்தே மேனகாவுக்கு அழைத்தான். பிரேமா என்று எண்ணி ஏற்றவரிடம், “அன்ட்ரி நான் கேசிகன்.” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.
“ஓ! சொல்லுங்கோ தம்பி.”
“அம்மா குளிக்கிறா. நீங்க அனுப்பின வொயிஸ் கேட்டனான். குறை நினைக்காம அவான்ர நம்பர் ஒருக்காத் தாறீங்களா?”
“தம்பி அது…”
“அம்மாட்ட நவின்ர நம்பர் இருக்கு. நான் நினைச்சா எடுக்கலாம். ஆனா, சொந்தப் பிள்ளை மாதிரிப் பாக்கிற உங்களுக்குத் தெரியாம எதையும் செய்ய எனக்கு விருப்பம் இல்ல. தொந்தரவு ஏதும் குடுக்கிறதுக்காகக் கேக்கேல்லை. நானும் ஒருக்கா அவாவோட கதைக்கோணும்.”
“அவாவை ஒருக்கா கேட்டுப்போட்டுத் தரட்டா?” முதலில் நாவினி மாதிரி ஒரு பெண்ணைத் தவிக்க விட்டானா என்று அவன் மீது மெல்லிய பிடித்தமின்மை அவருக்கு இருந்தது. ஆனால் இப்போது, அவன் பேசும் பாங்கைப் பார்க்கையில் நல்லெண்ணம் எழுந்தது. ஆனாலும் தயங்கினார்.
“ஓகே கேளுங்கோ. அவா மாட்டன் எண்டு சொன்னாலும் நான் எடுப்பேனாம் எண்டு சொல்லுங்க. இஞ்ச பக்கத்தில இருந்து, அவாக்கு விருப்பமே இல்லாட்டியும் நான் நேரா வந்து கதைச்சா கதைப்பாதானே? அப்பிடி நினச்சு ஒரேயொருக்கா மட்டும் கதைக்கட்டாம் எண்டு சொல்லுங்கோ.” என்றுவிட்டு வைத்தான் அவன்.
எப்படியும் கதைப்பானாம் என்கையில் அவர் எதற்குக் கேட்க என்றுதான் மேனகாவிற்குத் தோன்றியது. ஆனாலும் நாவினிக்கு அழைத்துக் கேட்டார்.
இத்தனையும் தெரியவந்த பிறகு அவன் முகம் பார்த்து எதுவுமே நடவாததுபோல் தன்னால் பேச முடியுமா என்று யோசித்தாள். அதே நேரத்தில் எப்படியாவது கதைப்பேன் என்றவனை எத்தனை முறை அவளால் தவிர்க்க முடியும்? அது அவள் இயல்பும் இல்லை என்பதில் சம்மதித்தாள்.