• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 14

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 14

சாரதாவுக்கு இனித் தங்கள் உறவு பழையபடி இருக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. இல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் மருமகன் இவ்வளவு நேரத்திற்கு வெளியில் வராமல் இருந்திருக்க மாட்டான். அன்பாக உபசரித்து இரண்டு வார்த்தை பேசாமலும் இருக்க மாட்டான்.

அது நினைவில் வந்ததும் முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போலாயிற்று அவருக்கு.

மன்னிப்பை வேண்டுகிறவர் போன்று பிரேமாவின் கரம் பற்றி, “ஒரு துரோகத்தில கிடைச்ச வாழ்க்கை எண்டுறதாலயோ என்னவோ என்ர பிள்ளைக்கு அந்த வாழ்க்கையக் கடைசிவரை வாழக் குடுத்து வைக்கேல்ல அக்கா. பாதிலயே போய்ட்டாள். அவளை நினைச்சாவது எங்களை மன்னிச்சுக்கொள்ளுங்கோ.” என்றதும், “சாரதா!” என்றார் பிரேமா கலங்கிப்போய்.

அங்கே அறைக்குள் இருந்தவனின் உயிரும் துடித்துப் போயிற்று. தன் மேசையில் சட்டத்துக்குள் இருந்தவளைப் பார்த்தான். ‘ஏதோ ஒரு வகைல நானும் பாவம் செய்தவன்தானே. அதான் நீ இவ்வளவு அவசரமாப் போனியா?’ உள்ளம் அழ அவளோடு உரையாடினான்.

“மருமகனையும் மன்னிச்சுக்கொள்ளட்டாம் எண்டு சொல்லிவிடுங்கோ அக்கா. வாறன் போயிற்று!” என்றுவிட்டுப் புறப்பட்டார் சாரதா.

கேசிகனால் உறங்கவே முடியவில்லை. நாவினியோடு கதைக்க வேண்டும்போல் ஒரு துடிப்பு. அதே நேரத்தில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளோடு கதைப்பாய் என்கிற கேள்வி அவனைப் பின்னால் இழுத்துப் பிடித்தது.

அவள் பரிசாகத் தந்த அந்த வீடு, அதில் எழுதியிருந்த கவிதை, அவள் அனுப்பியிருந்த குறுந்தகவல்கள் எல்லாம் அவள் நேசத்தின் ஆழத்தையும், அவனை எந்தளவுக்கு நம்பியிருந்திருக்கிறாள் என்றும் சொல்லி, அவன் நெஞ்சைக் கீறின. அவற்றிலிருந்து வெளிவர முடியாமல் அல்லாடினான். கண்ணை மூடினாளே நான் வேண்டாமா, என்னைப் பிடிக்கவில்லையா என்று கண்ணீருடன் கேட்டாள் நாவினி.

அடுத்த நாள் எழுந்து கடைக்குப் புறப்பட்டு வந்தவனிடம், “அவாவோட கதைக்கட்டா தம்பி?” என்று கேட்டார் பிரேமா.

சில கணங்கள் அமைதியிலேயே கழித்துவிட்டு, “வேணாம் அம்மா.” என்றான் அவன்.

“ஏனப்பு?”

“எப்ப மொழியைக் கட்ட ரெடியானேனோ அப்பவே அவளைக் கட்டுற தகுதியை நான் இழந்திட்டன் அம்மா. உண்மையாவே எனக்கு இன்னொரு கலியாணம் கட்டுற ஐடியா கொஞ்சமும் இல்லை. இனி எனக்குத் தம்பி மட்டும் போதும்.”

“அப்ப உன்னையே நினைச்சுக்கொண்டு இன்னும் தனியா நிக்கிற அந்தப் பிள்ளைக்கு என்னப்பு சொல்லப்போறாய்?”

ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, “என்னையே நினைச்சுக்கொண்டு இருக்கேல்ல அவள். நான் குடுத்த காயத்தக் கடந்து போகேலாம நிக்கிறாள். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.” என்றான்.

“சரி, அந்தக் காயத்தை ஆத்தவேண்டிய பொறுப்பு உனக்குத்தானே இருக்கு?”

உண்மைதான். அவள் காயங்களை ஆற்றவேண்டியவன் அவன்தான். ஆனால், இன்றைய நிலையில் அவள் முகம் பார்ப்பதற்குக் கூட அருகதையற்றவன் அவன். “விடுங்கம்மா. அவள் இனியாவது சந்தோசமா இருக்கட்டும்.” என்றான் களைப்புற்ற குரலில்.

“உன்னைக் கட்டினா மட்டும்தானப்பு அவா சந்தோசமா இருப்பா.”

“என்னம்மா கதைக்கிறீங்க? எந்த முகத்தை வச்சுக்கொண்டு அவளைக் கட்டுவன்? முதல் என்னை மாதிரி ஒருத்தனைக் கட்டி வாழோணும் எண்டு அவளுக்குத் தலையெழுத்தா என்ன? அவளுக்குப் பொருத்தமான நல்லவன் ஒருத்தன் வருவான், விடுங்க.” என்றான் சினம் தெறிக்க.

அவரால் அப்படி இருக்க முடியவில்லை. அவளை வேண்டாம் என்று அவன் சொல்லவில்லை. அவளைக் கட்டும் தகுதி தனக்கு இல்லை என்கிறான். அவளைச் சம்மதிக்க வைத்துவிட்டால் இவனை வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பினார்.

அவரிடம் வைதேகியின் இலக்கம் உண்டு. நாவினி இங்கிருந்த காலத்தில் அவளைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லி, ஏதும் என்றால் உடனடியாகத் தனக்கு அழைக்கச் சொல்லி அவராகவே தந்திருந்தார்.

அவருக்கு அழைத்து மேனகாவின் இலக்கம் வாங்கி அவரோடு பேசினார். நடந்த எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பை வேண்டினார். என்னவோ இன்று நாகரத்தினம் அபிராமியின் இடத்தில் மேனகா குடும்பம் இருப்பது போலொரு எண்ணம் பிரேமாவிற்கு.

மேனகாவிற்கு நாவினி மனத்தில் ஒருவன் இருந்திருக்கிறான் என்பதே நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. இதில் அடுத்தடுத்து பிரேமா சொன்னவற்றை யோசிக்க முடியாமல் நின்றார். அதே நேரத்தில் திருமணம் என்றாலே ஏதோ ஒன்றைச் சொல்லித் தள்ளிப்போட்டுக்கொண்டு இருப்பதன் பின்னால் இருப்பது இதுதானோ என்றும் ஓடிற்று.

“தப்பித்தவறி அவாக்கு இப்பவும் விருப்பம் இருந்து, சொல்லுறதுக்கு ஒருத்தரும் இல்லையே எண்டு சொல்லாம இருக்கிற நிலை கறுமம் எல்லா? அந்த ஆசையோடயே இன்னொரு வாழ்க்கைக்க போறா எண்டு வைங்கோ, அது தாய் தகப்பன் இல்லாத பிள்ளைக்கு நாங்க எல்லாருமாச் சேந்து செய்த பெரும் பாவமா போயிடும். அதாலதான் இதையெல்லாம் உங்களிட்டச் சொல்லுறன். நீங்க ஒருக்கா கேட்டுப் பாருங்கோ. நானும் அவாவோட கதைக்கிறன்.” என்று சொன்னார் பிரேமா.

அன்று மாலையே சிவதாசனோடு அவள் வீட்டுக்கு வந்து இதைப் பற்றிப் பேசினார் மேனகா. கூடவே மயூரன் செய்தவை, கேசிகனின் கைப்பேசியை எடுத்து ஒளித்து வைத்தது என்று அனைத்தையும் சொன்னார்.

கொஞ்ச நேரம் மௌனமாகக் கண்ணீர் உகுத்தாள் நாவினி. அன்றைய நாள்கள், அப்போது அவள் தவித்த தவிப்புகள் எல்லாம் நினைவில் வந்து அவள் உள்ளத்தைப் பிரட்டிப் போட்டன. அவன் கைப்பேசி இலக்கம் இவளுக்கோ, இவளது அவனுக்கோ கிடைத்திருந்தால் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

நியாயமான சிறு காரணம் கூட இல்லாது தன் வாழ்க்கையைத் தொலைத்தவள் அவள். எத்தனை வருடங்களானால் என்ன? அந்த வலி போவதாக இல்லை.

“என்னம்மா, இப்பிடி அழுதா என்ன அர்த்தம்? அந்தத் தம்பியப் பேசுவமா?”

தன்னை ஒரு வழியாகத் தேற்றிக்கொண்டு “அதெல்லாம் வேண்டாமே அன்ட்ரி.” என்றாள் கண்ணீருடன்.

“ஏனம்மா?”

ஏன் என்று அவளுக்கும் தெளிவில்லை. ஆசைப்பட்டு ஏங்கிய காலத்தில் கிடைத்த பெரும் ஏமாற்றம் காரணமா, இல்லை, என்ன நடந்திருந்தாலும் தான் மாறாமல் இருக்க, அவனால் இன்னொரு வாழ்க்கைக்குள் போக முடிந்திருக்கிறதே என்கிற விடயம் தருகிற அந்த வலி அவளுக்குள் இன்னுமே இருப்பது காரணமா தெரியாது.

அந்த வாழ்க்கை இனிக் கிடைத்தாலும் முன்னர் ஆசைப்பட்டது போன்று அதை அனுபவித்து வாழ முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை. இந்த வலி, விரக்தி, தனிமையோடு ஏதோ ஒரு வகையில் வாழப்பழகிக்கொண்டு இருக்கிறவளுக்குத் தன் வாழ்வில் மாற்றங்கள் வருவதில் உடன்பாடில்லை. திருமணமே வேண்டாம் என்பதுதான் அவள் முடிவு. அதைச் சொன்னால் மேனகா நிச்சயம் கோபப்படுவார்.

அதில், “அதெல்லாம் சின்ன வயசில வந்த ஆசை. இப்ப அப்பிடி எல்லாம் இல்ல. அவருக்கும் அவரின்ர வைஃப எந்தளவுக்குப் பிடிக்கும் எண்டு நேர்லயே பாத்திருக்கிறன் அன்ட்ரி.” என்று சொன்னாள்.

“அப்ப இஞ்ச பாத்திருக்கிற பெடியனைப் பேசவா?”

அவருக்குத் தேவையானது அவளுக்கு ஒரு திருமணத்தைச் செய்து வைத்து, அவள் நன்றாக வாழ்வதைப் பார்ப்பது மட்டுமே. கேசிகனை விரும்பியிருக்கிறாள் என்று தெரிய வரவும்தான் அவனைப் பற்றிப் பேசினார்.

மற்றும்படி ஏற்கனவே மணமாகி, ஒரு குழந்தையோடு இருக்கிறவனை அவளுக்குக் கட்டி வைப்பதில் அவருக்கு முழுமையான உடன்பாடு இல்லை.

“இன்னும் கொஞ்சக் காலம் போகட்டுமே அன்ட்ரி.” கெஞ்சும் குரலில் சொன்னவளை முறைத்தார் மேனகா.

கலங்களாகத் தெரிந்த பார்வையைத் தன் விரல்கள் மீது பதித்து, “நானும் எல்லாத்தில இருந்தும் வெளில வரத்தான் நினைக்கிறன் அன்ட்ரி. ஏலுதே(இயலுதே) இல்ல. எனக்குள்ள போராடி போராடிக் களைப்பா இருக்கு.” என்றவளை மிகுந்த வேதனையுடன் பார்த்தார் மேனகா.

வாழ்க்கை நெடுகிலும் கொஞ்சம் கூட நியாயமே இல்லாமல் பலமுறை தண்டிக்கப்பட்டவள் அவள். இன்று இன்னொரு உறவை ஏற்க முடியாமல் நிற்கிறாள். கொஞ்சமாக அழுத்திப் பிடித்தால் கூட நொறுங்கிவிடும் மெல்லிய கண்ணாடிப் பாத்திரம் போன்று, கண்ணில் நீருடன் அமர்ந்திருந்தவளைப் பார்க்கையில் அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

வீட்டுக்கு வந்து பிரேமாவிற்கு அழைத்தார். இரண்டு முறை முயன்றும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

புலனத்திற்குச் சென்று, “அவாவோட கதைச்சனான். வேண்டாம் எண்டு சொல்லுறா. அதெல்லாம் சின்ன வயசு ஆசைகளாம். வீம்புக்கு எண்டு நிக்கிற பிள்ளை இல்ல அவா. அதால எனக்கும் எதையும் தெண்டிக்க(வற்புறுத்த) விருப்பம் இல்ல. ரெண்டு நாள் போகட்டும். இன்னொருக்கா கதைச்சுப் பாக்கிறன். அப்பவும் வேண்டாம் எண்டு சொன்னா இத அதோட விட்டுடுவம்.” என்று பேசி முதலில் அனுப்பிவிட்டார்.

“எப்பிடியும் அவாக்கு ஒரு கலியாணம் செய்து வைக்காம நானும் விடமாட்டன். எல்லா பக்கத்தாலயும் காயப்பட்ட பிள்ளைய, ஒரேடியா கட்டாயப்படுத்திக் கஷ்டப்படுத்த விருப்பம் இல்லாம விட்டுப் பிடிக்கிறனே தவிர, கடைசி வந்தாலும் அவாவை இப்பிடியே இருக்க விடமாட்டன். இஞ்சையும் ஒரு நல்ல பெடியன் இருக்கிறான். உங்கட மகனுக்கு ஓம் எண்டு சொல்லாட்டி அந்தப் பெடியனைக் கட்டி வைப்பன்.” என்று திரும்பவும் பேசி அனுப்பிவிட்டார்.

பிரேமா குளித்துக்கொண்டிருந்தார். அவர் கைப்பேசி இரண்டு தடவைகள் அழைத்து ஓயவும் யார் என்று பார்க்க வந்த கேசிகன், வந்து விழுந்த குறுந்தகவல்களைக் கண்டான். மேனகாவிடமிருந்து என்றதும் எடுத்துக் கேட்டான்.

ஒரு கணம் யோசித்துவிட்டு அன்னையின் கைப்பேசியில் இருந்தே மேனகாவுக்கு அழைத்தான். பிரேமா என்று எண்ணி ஏற்றவரிடம், “அன்ட்ரி நான் கேசிகன்.” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

“ஓ! சொல்லுங்கோ தம்பி.”

“அம்மா குளிக்கிறா. நீங்க அனுப்பின வொயிஸ் கேட்டனான். குறை நினைக்காம அவான்ர நம்பர் ஒருக்காத் தாறீங்களா?”

“தம்பி அது…”

“அம்மாட்ட நவின்ர நம்பர் இருக்கு. நான் நினைச்சா எடுக்கலாம். ஆனா, சொந்தப் பிள்ளை மாதிரிப் பாக்கிற உங்களுக்குத் தெரியாம எதையும் செய்ய எனக்கு விருப்பம் இல்ல. தொந்தரவு ஏதும் குடுக்கிறதுக்காகக் கேக்கேல்லை. நானும் ஒருக்கா அவாவோட கதைக்கோணும்.”

“அவாவை ஒருக்கா கேட்டுப்போட்டுத் தரட்டா?” முதலில் நாவினி மாதிரி ஒரு பெண்ணைத் தவிக்க விட்டானா என்று அவன் மீது மெல்லிய பிடித்தமின்மை அவருக்கு இருந்தது. ஆனால் இப்போது, அவன் பேசும் பாங்கைப் பார்க்கையில் நல்லெண்ணம் எழுந்தது. ஆனாலும் தயங்கினார்.

“ஓகே கேளுங்கோ. அவா மாட்டன் எண்டு சொன்னாலும் நான் எடுப்பேனாம் எண்டு சொல்லுங்க. இஞ்ச பக்கத்தில இருந்து, அவாக்கு விருப்பமே இல்லாட்டியும் நான் நேரா வந்து கதைச்சா கதைப்பாதானே? அப்பிடி நினச்சு ஒரேயொருக்கா மட்டும் கதைக்கட்டாம் எண்டு சொல்லுங்கோ.” என்றுவிட்டு வைத்தான் அவன்.

எப்படியும் கதைப்பானாம் என்கையில் அவர் எதற்குக் கேட்க என்றுதான் மேனகாவிற்குத் தோன்றியது. ஆனாலும் நாவினிக்கு அழைத்துக் கேட்டார்.

இத்தனையும் தெரியவந்த பிறகு அவன் முகம் பார்த்து எதுவுமே நடவாததுபோல் தன்னால் பேச முடியுமா என்று யோசித்தாள். அதே நேரத்தில் எப்படியாவது கதைப்பேன் என்றவனை எத்தனை முறை அவளால் தவிர்க்க முடியும்? அது அவள் இயல்பும் இல்லை என்பதில் சம்மதித்தாள்.
 
Vishakini

Moderator
Staff member
மேனகாவும் கைப்பேசி இலக்கத்தை அனுப்பாமல் ‘கோல் பண்ணட்டுமாம்.’ என்று பிரேமாவுக்கே எழுதி அனுப்பிவிட்டார்.

அவனும் இதை எதிர்பார்த்து அன்னையின் கைப்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான். அதிலிருந்து அவள் இலக்கத்தை எடுத்துத் தன்னதில் பதிந்துகொண்டான். புலனத்தில் அவளின் குடும்பப் படத்தை முகப்புப்படமாக வைத்திருந்தாள். முழுமையாக எடுத்துப் பார்த்தான்.

சம்மரில் நல்ல வெய்யில் காலத்தில் எங்கோ சென்றபோது எடுத்த புகைப்படம். இவள் நடுவில் நிற்க அவளின் இரு புறமும் பெற்றவர்கள். அவர்கள் இருவர் பக்கத்திலும் ஆண்பிள்ளைகள் இருவரும் என்று நின்றிருந்தார்கள்.

முகம் முழுக்க விரவிக்கிடந்த சிரிப்பும் மகிழ்ச்சியும் மட்டுமில்லை, அப்படி அவளை நடுவில் விட்டு அவர்கள் நால்வரும் நின்றிருந்த விதமும் அவள் தன் குடும்பத்துடன் வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்லிற்று.

அப்போதுதான் வேலை முடிந்து வந்திருந்தாள் நாவினி. அவளுடையது தனிக் காணியில் அமைந்த தனி வீடு. மேலே அறைகள் இருந்தன. கீழே சமையலறை, பெரிய விறாந்தை, அலுவலக அறை என்று அடக்கமாக இருந்தது.

மேலே சென்று உடை மாற்றுகையில்தான், ‘கோல் பண்ணவா, நீ ஃபிரியா?’ என்று கேட்டு அனுப்பியிருந்தான் அவன். ஆம் என்று சுருக்கமாகத் தட்டி விட்டுவிட்டுக் கீழிறங்கி வந்து சமையலறைக்குச் சென்றாள்.

முதல் வேலையாக ‘புல்டாக்’ நூடில்சை எடுத்து அவிய விட்டாள். அது அவிவதற்குள் வீட்டுக்குள் இருக்கும் பூ மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றினாள். குளிர்காலம் ஆரம்பிக்கிறபடியால் வெளியில் நின்றவை கூட வீட்டுக்குள் குடிபெயர்ந்திருந்தன.

அவனிடமிருந்து காணொளி அழைப்பு வந்தது. ஒரு கணம் அதையே பார்த்தபடி நின்றாள். ஒரு காலத்தில் இப்படி ஒரு அழைப்பு வந்துவிடாதா என்று கணம் தவறாது ஏங்கியிருக்கிறாள். தன் மிகுதி வாழ்விற்கான ஆதாரமாகவே அந்த அழைப்பை எண்ணியிருந்திருக்கிறாள். ஆனால் இன்று…

ஒரு நெடிய மூச்சினை இழுத்து விட்டுவிட்டு அழைப்பினை ஏற்றாள்.

கேசிகனுக்கும் அவளுக்கு அழைப்பது இலகுவாக இல்லை. அவனுக்கும் மனத்தில் பல உணர்வுகளின் போராட்டம். அங்கே அவள், அவளைப் போன்ற இருவர் நுழையலாம் போன்ற பெரிய வகையான புல்லோவர் ஒன்றுக்குள் முழுமையாக மறைந்து நின்று, மரப்பலகையில் வைத்து மரக்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தாள்.

முகத்தில் மிகுந்த அமைதி. அந்த அமைதிக்குப் பின்னே அவனால் அவளுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தின் வலி புதைந்து கிடைக்கிறதோ? எதுவும் பேச வராமல் அவளையே பார்த்தான்.

அவள் அனுப்பிய குறுந்தகவல்கள் அனைத்தும் கண் முன்னே வந்து நின்றன. ‘நீங்க இப்பிடி நடப்பீங்க எண்டு எதிர்பாக்கவே இல்ல’ என்பது எத்தனை பெரிய வார்த்தை.

அந்தப் பழைய கைப்பேசி கிடைத்த நாளிலிருந்து தினமும் குறைந்தது ஒரு முறையாவது அவள் அனுப்பியவற்றை வாசிக்காமல் விடமாட்டான். வாசிக்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் அவன் விழிகள் கசிந்துவிடும்.

அவன் பார்வையில் எதை உணர்ந்தாளோ, “என்ன?” என்றாள் கொஞ்சம் திணறி.

“தெரிஞ்சே உன்னை ஏமாத்தி இருப்பன் எண்டு நினைக்கிறியா நவி?” என்றான் ஒருவிதமான பரிதவிப்புடன்.

மரக்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தவளின் கைகள் ஒரு கணம் வேலை நிறுத்தம் செய்தன.

“ஓடிப்போன அப்பான்ர மகன் நான். பெரிய பின்புலம் எதுவும் இல்ல. அதாலயே உன்னை மிஸ் பண்ணிடுவனோ எண்டு ஒரு பயம். அதைச் சொல்லி உன்ர அப்பாவும் அம்மாவும் என்னை வேண்டாம் எண்டு சொல்லிடக் கூடாது எண்டுதான் அவசரம் அவசரமா கடை எல்லாம் திறந்து, மாடா உழைச்சனான்.”

ஒருவிதமான அதிர்ச்சியும் தாங்க முடியா வலியுமாக அவனையே பார்த்து நின்றாள் நாவினி.

“அப்பிடி அவனுக்கு நான் என்ன பாவம் செய்தன் எண்டு தெரியேல்லையே நவி. இப்பிடி ஏமாந்துபோய் நிப்பன் எண்டு நினைக்கவே இல்ல.” என்று தவித்தான்.

நாவினிக்கு கண்கள் கலங்கி உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. “இதையெல்லாம் ஏன் இப்ப கதைக்கிறீங்க?” என்றாள் குரலும் நடுங்க.

“ஓம், இதக் கதைக்கிறதால எந்தப் பிரயோசனமும் இல்லைதான். ஆனா…” என்றவனுக்குத் தன் அலைப்புறுதலை உரியவளிடம் கூடச் சொல்ல முடியவில்லை. நீ அனுப்பிய ஒவ்வொரு குறுந்தகவல்களும் என்னைக் குத்திக் குடைகின்றன என்று சொல்ல முடியாமல் நின்றான்.

“நீ ஒரு எட்டு மாதம் முதல் வந்திருக்கலாம். இல்ல நான் ஒரு எட்டு மாதம் கழிச்சு கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லியிருக்கலாம். உன்ர ஒரு கடிதமாவது என்ர கைல கிடச்சிருக்கலாம். இல்ல என்ர ஒரு கடிதமாவது உனக்குக் கிடச்சிருக்கலாம். இப்பிடி எதுவுமே நடக்காம போயிற்றே நவி.” என்றதும் பட்டென்று கைப்பேசியை அணைத்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் நாவினி.

அவளும் இதையெல்லாம் நினைத்து நினைத்து கண்ணீர் சிந்திய காலம் ஒன்று உண்டு. இப்போது அவன். அங்கே அவன் மறுபடியும் அவளுக்கு அழைத்தான். அவள் ஏற்கவில்லை. அடுப்பை நிறுத்திவிட்டு ஓடிப்போய் முகத்தை நல்ல குளிர் நீரில் அடித்துக் கழுவினாள். கண்ணீர் நிற்கமாட்டேன் என்றது. தனக்கு நடந்தவைகளோடு சேர்த்து அவன் இப்படிக் கலங்கித் தவிப்பதும் சேர்ந்து அவளை வதைத்தன.

அங்கே அவன் திரும்ப திரும்ப அழைப்பதும் ஏதோ குறுந்தகவல் அனுப்புவதும் கேட்டது. முகத்தைத் துடைத்து, தலையையும் கையாலேயே ஒதுக்கிக்கொண்டு வந்து, குளிர் நீர் ஒரு குவளையை மடக்கு மடக்கு என்று அருந்தினாள். மனத்தின் அடைப்பு எடுபட்டு ஓரளவிற்குச் சுவாசிக்கக் கூடிய மாதிரி இருந்தது. அதன் பிறகே வந்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.

‘இது பிரயோசனம் இல்லாத பேச்சு எண்டுறதும் உன்னை இன்னுமின்னும் காயப்படுத்தும் எண்டும் தெரியும். ஆனா எனக்கு ஒருக்கா உன்னோட கதைக்கோணும். எடு நவி ப்ளீஸ்.’ என்று அனுப்பியிருந்தான் அவன்.

ஒரு முறை நன்றாக மூச்சை இழுத்து விட்டுவிட்டு இப்போது அவளே அவனுக்கு அழைத்தாள்.

வேகமாக அழைப்பை ஏற்று, “நவி சொறி!” என்றான் அவன்.

“பரவாயில்ல சொல்லுங்க.” அவன் பார்வை தன்னை ஆராய்வது தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல் வினவினாள்.

கேசிகனுக்கு அவள் அழுதிருப்பது நன்றாகவே தெரிந்தது. வேதனையோடு அவளைப் பார்த்தாலும், “எப்பிடி இருக்கிறாய்?” என்றான் குரலை இலேசாகச் செருமிக்கொண்டு.

“நல்லாருக்கிறன். நீங்க?”

“ம்!”

“சஜுக்குட்டி எங்க?”

“அங்க அம்மாவோட நிக்கிறார்.” என்றவன் மகனை அழைத்து அவளுடன் பேசவிட்டான். சற்று முன் ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல் இருவருமே காட்டிக்கொள்ள முயன்றாலும் இருவராலும் அது முடியவில்லை. இருவருக்குமே சமாளித்துக்கொள்வதற்கு நேரம் கொடுக்கும் முகமாகச் சின்னவனை அவர்களுக்குள் இழுத்துவிட்டான்.

தன் அறையின் மேசையில் இருந்துதான் கதைத்துக்கொண்டிருந்தான் கேசிகன். “நவி அன்ட்ரியா?” அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டு வினவினான் சின்னவன்.

ஆவலாகக் கேட்ட குழந்தையைக் கண்டு அவள் அகமும் முகமும் மலர்ந்து போயிற்று.

“நவி அன்ட்ரிதான். எங்கட சஜுக்குட்டி என்ன செய்றார்?” என்று செல்ல மொழி பேசினாள்.

“சஜுக்குட்டி அப்பும்மாவுக்கு வேலை செய்து குடுத்தனான். நீங்க எங்க போயிட்டீங்க நவி அன்ட்ரி. நீங்க உங்கட வீட்டில இல்லயே.”

அவளைத் தேடியிருக்கிறான் குழந்தை. கண்ணில் நீர் வரப்பார்த்தது அவளுக்கு. சிரித்துச் சமாளித்தபடி, “ஓம் செல்லம். அன்ட்ரிக்கு ஒரு அவசர வேலை வந்திட்டுது. அதால வந்திட்டன்.” என்று அவனுக்கு ஏற்றபடி பதில் சொன்னாள்.

அவன் இலேசில் விடவில்லை. என்ன வேலை, எப்போது திரும்ப வருவாள் என்று பல கேள்விகள். கூடவே அவர்கள் கோயிலுக்குப் போனதை, அவன் வீட்டுக் கோழி குஞ்சு பொரித்ததை, அவள் வீட்டுக்குச் சென்று வாழை இலை வெட்டியதை என்று கதைகதையாகச் சொன்னான்.

கடைசியில் மகன் அவளோடு பேசட்டும் என்று எண்ணி சின்னவனைக் கூட்டிக்கொண்டு பிரேமா வெளியில் செல்லும்படியாயிற்று.

இதற்குள் மரக்கறிகளை வெட்டி முடித்திருந்தாள் நாவினி. அதை ஒரு பேனில் போட்டு வதக்க ஆரம்பித்தாள்.

“என்ன சமைக்கிறாய்?”

“அது புல்டாக் எண்டு ஒரு நூடில்ஸ்.”

“சமைக்கத் தெரியுமா?”

“எனக்குத் தேவையானதைச் செய்யத் தெரியும்.”

அப்படியானால் பெரிதாகச் சமைக்கத் தெரியாது. எது இலகுவாக இருக்கிறதோ அதைச் செய்து சாப்பிடுவாள் போலும்.

“மேனகா அன்ட்ரி கதைச்சவாவா?” வதக்கிய மரக்கறிக்குள் அவிந்த நூடில்ஸை போட்டு, அதனோடு வந்த சோஸ்களையும் அதற்குள் விட்டு அவள் கிளறுவதைப் பார்த்தபடி வினவினான்.

“ஓம் கதைச்சவா.” என்றாள் அடுப்பிலேயே கவனமாக.

“அம்மாக்கும் மெசேஜ் அனுப்பி இருந்தவா.”

“ஓ!”

“அவ்வளவு காலமும் நீதான் என்னை வேணாம் எண்டு நினைச்சு விலகிப் போய்ட்டாய் எண்டு நினைச்சிருந்தனான். அந்தக் கோவமும் உன்னில் இருந்தது. போனமுறை என்னைத் தேடி நீ வந்ததிலேயே அப்பிடி இல்லை எண்டுறது விளங்கினது. அப்பவும் என்ர பக்கமிருந்து எந்தப் பிழையும் இல்லையே எண்டுதான் நினைச்சிருந்தனான். ஆனா இப்பதான்…” என்றுவிட்டு நிறுத்தினான்.

நாவினியின் கைகளிலும் மெல்லிய நடுக்கம். ஆனாலும் ஒரு பிடிவாதத்துடன் கிரீம் பாலினை கொஞ்சமாக நூடுல்ஸோடு சேர்த்துப் பிரட்டிவிட்டு அடுப்பை நிறுத்தினாள். பாவித்த பாத்திரங்களை எல்லாம் கடகடவென்று அதைக் கழுவும் மெஷினுக்குள் தள்ளி மூடினாள்.

“இதையெல்லாம் எந்த உள்நோக்கத்தோடயும் சொல்லேல்ல. என்னில பிழை இல்லை எண்டு சொல்லவும் சொல்லேல்ல. அதே மாதிரி நீ என்னை வேண்டாம் எண்டு சொன்னதுதான் சரி. ஆனா நான் உனக்குச் செய்த பாவத்துக்காக நீ இப்பிடித் தனியாவே நிக்காத. ஒரு கலியாணத்தைக் கட்டு.” என்றான் அவளையே பார்த்து.

அவள் ஒன்றுமே சொல்லாமல் சமையலில் கவனமாக இருந்தாள்.

“நவி ப்ளீஸ்! கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லு. நீ எல்லாம் என்ன மனுசனடா எண்டு என்னைப் பேசு.” என்றான் குமுறும் உள்ளத்துடன்.

“உங்களை ஏன் பேச? இதெல்லாம் உங்களுக்கு இப்பதான் தெரியும். போனமுறை வந்த நேரமே என்ன நடந்திருக்கும் எண்டு என்னால ஓரளவுக்கு ஊகிக்க முடிஞ்சது. அதோட மயூரன் அண்ணா மட்டுமே காரணமும் இல்ல. என்ர அம்மாவும் காரணம்தான். அதால எனக்கு உங்களில எந்தக் கோவமும் இல்ல, குறையும் இல்ல. எல்லாத்தையும் விட உங்களுக்குப் பிடிக்காம அவாவை நீங்க கட்டியிருக்கப்போறேல்ல. அதே மாதிரி எப்பிடி வாழ்ந்து இருக்கிறீங்க எண்டு உங்கட வீட்டில இருக்கிற ஃபோட்டோஸே சொல்லுது. யோசிச்சுப் பாத்தா நீங்க செய்ததுதான் சரி. வாழ்க்கை வாழத்தானே. நான்தான் அந்த இடத்திலயே தேங்கி நிண்டுட்டன். அதுதான் பிழை. அதுக்காக நீங்க உங்களை வருத்த வேண்டாம்.” என்று நிதானமாகச் சொன்னாள் அவள்.

அவன்தான் வார்த்தைகள் அற்றவனாக அவளையே பார்த்திருந்தான்.
 
Chitra ganesan

Active member
ஒருத்திக்கு நம்பிக்கை கொடுத்து அவள் தொடர்பில் இல்லை என்று வந்ததும் இன்னொருத்தியை மணந்து மகிழ்வுடன் வாழ்ந்து,இப்போ அவள் இல்லை என்று ஆனதும் முதல் ஒருத்திக்கு இன்னும். வாய்ப்பு இருக்குன்னு வந்ததும் இத்தனை நாள் பேசாத பேச்சை பேசி,நல்லவன் ஆகி அவள் வாழ்க்கைக்குள் அவளே அழைக்க வைக்க பேசும் கேசி நீ ஒரு கேடு கெட்டவன் என்பதில் துளி அளவு கூட மாற்றம் இல்ல.
 
Kalai Karthi

Active member
நாவினி வாவ் நிரம்ப சரி.

Top Bottom