அத்தியாயம் 19
நாவினி ஜெர்மன் சென்று இரண்டு மாதங்களாகியிருந்தன. கேசிகன் ஜெர்மன் மொழி கற்க ஆரம்பித்திருந்தான். நிறைமொழியோடு வாழ்ந்த ஊரில், அவளோடு வாழ்ந்த வீட்டில் இருந்தாலுமே கொஞ்சம் கொஞ்சமாகக் கேசிகனின் சிந்தனைகளை நாவினி ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாள்.
எப்படி நடந்தது என்று அவனுக்கே தெரியாது. பள்ளம் பார்த்துப் பாயும் நீரோடை, தானாகச் சென்று ஆற்றோடு கலப்பதுபோல் அது அவனறியாமலேயே நிகழ்ந்திருந்தது.
இங்கிருந்து அவள் புறப்பட்ட அன்று அவன் அவனாகவே இல்லை. ‘நவி அன்ட்ரி எப்பப்பா வருவா’, ‘அவான்ர வேல எப்ப முடியும்’ போன்ற மகனின் இடையறாத கேள்விகளுமாகச் சேர்ந்து அவனை அவள் நினைவுகளிலேயே பிடித்து வைத்திருந்தன.
ஆரம்பத்தில் வீட்டுக்குள் உள்ளிடுகையில் நிறைமொழியின் புகைப்படங்கள் இல்லாத வீடும், புதிதாக அவர்களின் புகைப்படங்கள் அந்த இடங்களைப் பிடித்திருந்ததையும் பார்த்ததும் சுரீர் என்று ஒரு வலி அவனை ஊடுருவிற்று.
யாரோ அவன் நெஞ்சுக்குள் இருந்தே நிறைமொழியைத் தூக்கி எறிந்ததுபோல் இருந்தது. ஆனால், அவன் இப்போது நாவினியின் கணவன். நிறைமொழி அவன் முதல் மனைவி. இனி இது இப்படித்தான் ஆகும்.
கசப்பான மருந்தைக் கண்ணை மூடிக்கொண்டு விழுங்குவது போன்று அந்த நிதர்சனத்தை உள்வாங்கிக்கொண்டான். ஏதோ ஒரு பொருளோ, மகனின் தலை சாய்த்த ஒற்றைச் சிரிப்போ, கொஞ்சல் மொழியோ நிறைமொழியை நினைவூட்டாமல் இல்லை.
அவனுடைய அலமாரிக்குள் இன்னுமே இருக்கும் அவள் உடைகள், பாவித்த பொருள்கள் என்று எத்தனை எத்தனையோ!
அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி வைக்கிறோம் என்பதும் வலித்தது. இவளை இன்னும் தள்ளியே வைத்திருக்கிறோம் என்பதும் வலித்தது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாவினியை நெருங்குவது என்றும் தெரியவில்லை. அவளைப் பார்க்கையிலே ஒரு குற்றவுணர்ச்சி தாக்கிற்று.
ஒரு நாள் அவன் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, அவன் அறையில் இருந்த நிறைமொழியின் அடையாளங்களை மொத்தமாக வழித்துத் துடைத்து எடுத்திருந்தார் பிரேமா. “என்னம்மா?” என்றான் உடைந்துபோய்.
“மொழியக் கட்டேக்க இனி அவா மட்டும்தான் எண்டு நினைச்சுத்தானே தம்பி கட்டினனீங்க. அதே மாதிரி இனி நாவினிதானே உங்களுக்கு. இப்பிடி அங்கயும் இங்கயுமா இருக்கிறது அந்தப் பிள்ளைக்குச் செய்ற துரோகம் இல்லையாப்பு?”
“அம்மா என்னம்மா, ரெட்டை வாழ்க்கை வாழுறன் எண்டு சொல்லுறீங்களா?” என்றான் துடித்துப்போய்.
“அண்டைக்கு நாவினி என்ன சொன்னவா எண்டு கேட்டனீங்கதானே? மொழிக்காவது எல்லாச் சொந்தமும் இருந்தது. வாழுற வரைக்கும் நல்ல அம்மா அப்பா, அவாக்காக உயிர் நண்பனுக்குத் துரோகமே செய்யக்கூடிய ஒரு அண்ணா, கண்ணுக்க வச்சுப் பாத்த மனுசன், வடிவான ஒரு ஆம்பிளைப் பிள்ளை எண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திட்டுத்தான் போயிருக்கிறா. ஆனா நாவினி… பாவமய்யா. வாழவே இல்ல. வாயத் திறந்து எனக்கு இன்னதுதான் வேணுமெண்டு சொல்லுற பிள்ளையும் இல்ல. அவா இந்தச் சின்ன வயசுக்க அனுபவிச்சதுகளும் நிறைய. அவாவுக்காகவாவது நீங்க மாறோணும். அப்பதான் நீங்களும் சந்தோசமா இருப்பீங்க.” என்று சொன்னார் பிரேமா.
அன்று எப்படி அந்த வீட்டிலிருந்து அவள் புகைப்படங்களை அகற்றுகையில் அழுதாரோ அப்படித்தான் இன்றும். அவருக்கும் அது இலகுவாக இல்லை. பல்லைக் கடித்து வேதனையைப் பொறுத்தபடிதான் அத்தனையையும் செய்தார்.
அதை அவர் செய்தால்தான் மகன் முற்றிலுமாக மாறுவான். அவன் மாறினால்தான் இன்னுமே நவி அன்ட்ரி என்று சொல்லிக்கொண்டிருக்கிற சஜிதனை மாற்ற முடியும். அவன் மனத்தில் நாவினியை அன்னைக்கு ஒப்பான இடத்தில் இருத்த முடியும்.
அதனால்தான் தானாகக் கனியட்டும் என்று காத்திராமல் தடி கொண்டு கனியவைப்பது போல் இந்தக் காரியத்தைச் செய்தார்.
இப்படி, பிரேமாவும் தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, தள்ள வேண்டிய நேரத்தில் தள்ளி, நெருக்க வேண்டிய நேரத்தில் நெருக்கி என்று அவனை நேர்ப்படுத்தியதில் நாவினியின் நினைவுகள் அவனுக்குள் அதிகரித்துப்போயின.
ஆரம்பத்தில் வலியோடும், பிறகு பிறகு இதுதான் வாழ்க்கை என்கிற நிதர்சனத்தோடும் அவனே உணர்ந்த உண்மை இது.
தினமும் பிரேமாவுக்கு அவளிடமிருந்து அழைப்பு வந்துவிடும். சில நேரங்களில் இவரிடம் கேட்டு கேட்டு அங்கே அவள் சமைப்பதையும் கவனித்திருக்கிறான். இந்த வீட்டின் பெரிய மனிதன் உள்ளி உடைப்பது எப்படி என்று அவளுக்கு வகுப்பெடுப்பதைக் கண்டு கடுப்பும் சிரிப்புமாகக் கடந்திருக்கிறான்.
இவனுக்கு மட்டும் அழைக்கவே மாட்டாள். ஏதாவது என்றால் குறுந்தகவல் வரும். அது எழுதியோ வாயால் சொல்லியோ இருக்கும்.
நாளாக நாளாக, அதுவும் இவன் மகன் பிரேமாவின் கைப்பேசியை வீடு முழுக்கக் கொண்டு திரிந்து பேசுகையில்தான் இவனுக்கு அது புரியவே ஆரம்பித்தது.
சில நேரங்களில் இவனோடு உறங்க வரும் மகன் அவளோடு பேசியபடிதான் வந்து படுப்பான். பார்த்துக்கொண்டு இருப்பானே தவிர்த்து நடுவில் போகமாட்டான்.
மகனுக்கு இணையாகப் பேசியபடி அங்கே தன் வேலைகளைப் பார்க்கிறவளை இப்படிப் பார்த்துக்கொண்டு இருப்பதே அவன் மனத்தினுள் இதம் பரப்ப ஆரம்பித்திருந்தது.
இடையில் வந்துபோவாள் என்று எதிர்பார்த்தான். வரவில்லை. இடைப்பட்ட காலத்தில் அடிப்படை ஜெர்மன் மொழி படித்துச் சித்தியடைந்திருந்தான் கேசிகன். இதற்குள் அவனுடைய பெரிய கடை அத்தனை வேலைகளும் முடிந்து திறப்புவிழா காண நின்றது.
நாவினியோடான திருமணம் நடக்கிற வரையில் ‘மொழி சுப்பர் மார்க்கெட்’ என்கிற பெயரிலேயே அதையும் திறக்க நினைத்திருந்தான். பெயர்ப் பலகையும் அப்படித்தான் சொல்லியிருந்தான்.
இப்போது அது நாவினிக்கு நியாயமாக நடப்பதாக ஆகாதோ என்று தோன்றவும் அவளோடு அதைப் பற்றிப் பேசினான்.
“இண்டைக்கு அவா இந்த உலகத்தில இல்லை எண்டாலும் ஒரு காலத்தில இருந்தவா எண்டுறது உண்மைதானே? அப்பிடித்தானே உங்கட வாழ்க்கைலையும். அந்தப் பெயரையே வைங்க.” என்றாள் அவள்.
“பெயர் மாத்துறது எண்டாலும் மாத்தலாம் நவி.” இதைச் சொல்ல மனமே வரவில்லை. ஆனாலும் சொன்னான்.
“சரி, என்ன பெயர் வைக்கப்போறீங்க?”
ஒரு பேச்சுக்குத்தான் சொன்னான். அதை அப்படியே ஏற்று இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. “உன்ர பெயரை?” என்று திணறினான்.
ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தாள் நாவினி. அவன் அங்கிருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து மும்முரமாக இடம் மாற்றி வைத்தான்.
அவளுக்கும் நிறைமொழிக்கும் நடுவில் நின்று அல்லாடுகிறான். அவன் மீது உண்டான பரிவுடன், “என்ர மனுசன்ர மனதில நான் இருக்கோணும் எண்டுறது மட்டும்தான் என்ர எதிர்பார்ப்பு.” என்றாள் அவனையே பார்த்து.
சரக்கென்று திரும்பி அவளைப் பார்த்தவனின் விழிகள் அவள் பார்வையைக் கவ்வி நின்றது. நாவினியும் விலக்கிக்கொள்ளப் போகவில்லை. “நீங்க மனதில எந்தச் சங்கடமும் இல்லாம அவான்ர பெயரையே வைங்க. அத மயூரன் அண்ணாட்டயே குடுத்திட்டு வாங்க.” என்று சொல்லிவிட்டு வைத்தாள்.
அவள் சொன்னபடியே கடையைத் திறந்து மயூரனின் பொறுப்பிலேயே விட்டான். “மச்சான்!” என்று அணைக்க வந்தவனிடம், “இன்னுமே என்னால உன்னை மன்னிக்கேலாம இருக்கு மயூரன். காலப்போக்கில எல்லாத்தையும் நான் மறக்கலாம். அப்ப கதைப்பம்.” என்று முடித்துக்கொண்டான் கேசிகன்.
கிட்டத்தட்ட ஒரு வருட முடிவில் விசா கிடைத்து மகனோடு ஜெர்மனுக்குப் புறப்பட்டான் கேசிகன்.
பிரேமாவால் என்ன முயன்றும் கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை. பேரனைப் பிரிவதை நினைக்கவே உயிர் போனது. அவனைக் கொஞ்சிக் கொஞ்சியே ஓய்ந்தார். அவனுக்கும் என்ன புரிந்ததோ, “அப்பும்மா!” என்று அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
அடுத்த நாள் புறப்பட வேண்டும். அதுவரையில் பல்லைக் கடித்துக்கொண்டு நடமாடிய கேசிகன், அன்றிரவு பேசாமல் வந்து அன்னையின் மடியில் படுத்துக்கொண்டான்.
“ஐயா ராசா!” பிரேமாவிற்கு அதற்கே கண்கள் நிறைந்துபோயிற்று.
அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு மடியில் முகம் புதைத்து, “என்ன வாழ்க்கை இது எண்டு கிடக்கம்மா.” என்றான் எல்லாம் வெறுத்தவனாக.
துடித்துப்போனார் அன்னை. “என்ர குஞ்சனெல்லே. அப்பிடி எல்லாம் சொல்லாதயப்பு. எத்தினையோ பிள்ளைகள இந்த மண்ணுக்காகக் குடுத்த தாய் தகப்பன் வாழுற தேசம் ஐயா எங்கட தேசம். இது என்ர மகன் தன்ர வாழ்க்கையச் சந்தோசமா வாழுறதுக்குப் போறான். அம்மாக்கு ஒரு கவலையும் இல்லையப்பு.” என்று அவனைத் தேற்ற முயன்றார்.
“என்ன, இந்தக் குட்டியனுக்குச் சமைச்சுக் குடுக்காம, அவரைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போகாம, அவரின்ர செல்லக் கதையக் கேக்காம எப்பிடி இருக்கப்போறன் எண்டு நினைக்கத்தான்…” என்றவரும் அதற்குமேல் முடியாமல் தேம்பி தேம்பி அழுதார்.
பிரேமாவின் அன்னை, தமையன் குடும்பத்தினர், சாரதா குடும்பம், மயூரன் என்று யார் தேற்றியும் பிரேமாவல் தன்னைத் தேற்றிக்கொள்ளவே முடியவில்லை. அழும் உள்ளத்தோடும் கசியும் விழிகளோடும் விமானநிலையம் சென்று, தன் உயிர்களைப் பயணம் அனுப்பிவிட்டு வந்தார்.
அவருக்கு அழைத்துப் பேசிய நாவினியிடம், “அம்மாச்சி, என்ர செல்லக் குஞ்சனை மட்டும் கண்ணுக்க வச்சு வளத்துப்போடுங்கோம்மா. தாயில்லாப் பிள்ளையாச்சி. தாயின்ர பாசத்தை அவன் உங்களிட்டத்தான் அனுபவிக்கோணும்.” என்று அழுதார்.
“கவலைப்படாதீங்க மாமி. அவர்தான் என்ர மூத்த பிள்ளை. ஒரு நாலஞ்சு மாசம்தான். பிறகு நீங்களும் இஞ்ச வந்திடுவீங்க.” என்று தன்னால் முடிந்தவரையில் அவரைத் தேற்றிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் நாவினி.
விசா கிடைத்துவிட்டது, வரப்போகிறார்கள் என்று தெரிந்த நாளிலிருந்தே அவளுக்குள் ஒரு வகையான பரபரப்பு. புகைப்படங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த அன்னை தந்தையிடம் கூட மனமாரப் பேசினாள்.
சிரித்துக்கொண்டிருந்த தம்பிகளைப் பார்க்கையில் கண்ணீர் கொட்டிற்று. அவர்களுக்கு ஒரு அத்தான் வருகிறான். கூடவே குட்டி மருமகனும். பார்க்கவோ, சேர்ந்து விளையாடவோ அவர்கள் இல்லை.