அத்தியாயம் 24
அடுத்து வந்த நாள்களில் கூட அவன் மனம் சமாதானம் ஆகவில்லை. அவளில் பார்த்த வடுக்கள் அந்தளவில் உலுக்கியிருந்தன. இதுபோலெல்லாம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் யுத்தத்தில் சிக்குண்டு, படு மோசமாகக் காயப்பட்டுத் தப்பியவர்களில்தான் இதுவரைக்கும் பார்த்திருக்கிறான்.
அதே போன்ற வலியை அவளும் அனுபவித்திருக்கிறாள் என்று நினைக்கையிலேயே அவனுக்கு நெஞ்சுத் தண்ணீர் வற்றிப்போயிற்று. முடிகிற பொழுதுகளில் எல்லாம் எதிலிருந்தோ காக்கிறவன் போல் அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தான்.
உதவிக்கோ, ஆறுதலுக்கோ, தைரியம் கொடுக்கவோ யாரும் இல்லாமல் இத்தனை காயங்களையும் கடந்து வந்திருக்கிறாள் என்றால்… மேலே யோசிக்க முடியாமல் தலையை ஒருமுறை உலுக்கிக்கொண்டான்.
சஜிதனே பலமுறை வந்து என்னப்பா என்று கேட்டுவிட்டான். அப்படி, சின்னவன் முன் அவன் அணைப்பினுள் அடங்கியிருக்கக் கூச்சப்பட்டாள் நாவினி. அவள் விலக முயன்றபோது, “நாங்க எந்த போடரையும் க்ரொஸ் பண்ணேல்ல நவி. பேசாம இரு.” என்றுவிட்டான் அவன்.
அந்தப் பொழுதுகளில் பெரிதாகப் பேச்சுகள் எதுவும் இராது. தன் நெஞ்சுக்குள்ளேயே பொத்தி வைத்துக்கொள்கிறவன் போல் வைத்துக்கொண்டு, அடிக்கடி அவள் உச்சியில் முத்தங்கள் பதித்துக்கொண்டே இருப்பான். அதுவே நடந்தவற்றைப் பற்றியே யோசித்துத் தனக்குள் உழல்கிறான் என்று சொல்லும்.
“எனக்கு ஒண்டும் இல்ல. அதெல்லாம் எப்பவோ நடந்தது.” என்று அவள் சொன்னாலும் அந்தப் பாதிப்பிலிருந்து வெளி வருவது அவனுக்கு இலகுவாக இல்லை.
இரவுகளில் மகன் உறங்கிய பிற்பாடு வந்து இவளோடு உறங்குவது வாடிக்கையாயிற்று. ஆரம்பத்தில் அவளும் பழைய காயங்களுக்கு ஆறுதலும் மருந்தும் தேடுகிறவளாக அவன் கைகளுக்குள் அடங்கியிருந்தாலும் இப்போதெல்லாம் அவன் முத்தங்களும் அணைப்பும் அவளுள் வேறு சில இரசாயன மாற்றங்களை நிகழ்த்த ஆரம்பித்தன.
அடுத்த கட்டத்தை நோக்கி நகரமாட்டானா என்கிற ஆவலை அவளுள் தூண்டிற்று. தனக்கு மட்டும்தான் இப்படியோ என்றெண்ணி வெட்கம் கொண்டாள். அப்படி இல்லை என்று அன்றிரவு தெரிந்தது.
அவளைத் தன் அணைப்பினுள் வைத்திருந்தவனின் வருடல்களும் அணைப்புமே நாவினியைச் சுக மயக்கத்தில் ஆழ்த்தப் போதுமாயிற்று. பூனைக் குட்டியாய் அவனுள் சுருண்டு கிடந்தவள் மீது ஆழ்ந்த முத்தங்கள் பதித்துக்கொண்டிருந்தவனின் உடல் மொழி, கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கு நெருக்கமாக மாற ஆரம்பித்தது.
இனம் புரியா இனிய படபடப்பொன்று தொற்றிக்கொள்ள அவனை நோக்கியவளைக் கண்டு, “சொறி!” என்று விலக முயன்றான் அவன். அவள் விழிகளில் காரணம் புரியாத் தவிப்பும் குழப்பமும். “நவிம்மா!” என்றான் அவனும் தன் நிலையைச் சொல்ல இயலாத் தவிப்புடன்.
தான் இதற்குத் தயார் இல்லையோ என்றெண்ணி அவன் தயங்குவது புரிந்தது. சின்ன முறுவலோடு பார்வையைத் தழைத்தாள் நாவினி.
கேசிகனுக்கு ஆச்சரியம். நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் அவனோடு ஒன்றிக்கொண்டு முகத்தை மறைத்தாள் நாவினி. அவன் உள்ளம் துள்ளிற்று. மறுபடியும் அவள் உள்ளத்தை வெற்றிகொண்ட உற்சாகம் கரைபுரண்டு ஓடிற்று.
ஆசையாக அவள் முகம் பார்க்க முயன்றான். அதற்கு மறுத்து இன்னும் அவனுக்குள் புதைய முயன்றாள் அவள். அவன் உதட்டில் முறுவல். பெரும் ஆவலுடன் அவளை அள்ளிக்கொண்டு எழுந்தான்.
அன்று அவனுக்கும் மகனுக்கும் அவள் கொடுக்க எண்ணிய அறை, இன்று அவர்களுக்குப் புகலிடமாயிற்று. சின்னவன் அறியாமல் அவர்கள் செய்யப்போகிற அந்த அழகான களவு இன்னுமின்னும் அவள் முகத்தை இரத்தமெனச் சிவக்க வைத்தது.
அப்படி அவள் சிவந்து முகம் மறைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவனிடத்தில் சிரிப்பு மலர்ந்தது. இன்னுமின்னும் அவளுக்கு வெட்கமூட்டிப் பார்க்கும் ஆசை உண்டாயிற்று. ஆரத்தழுவி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். பட்டுப் போன்ற மேனியும், அவளிடமிருந்து வந்த பூ வாசமும் அவனைப் பித்தம் கொள்ளச் செய்தன. கணமும் பிரிய விரும்பாதவனாக ஆரத்தழுவி அவளைத் தன் ஆதிக்கத்தினுள் கொண்டுவந்தான்.
அவனுக்கும் அவளுக்குமான முதல் உறவு. மலையிலிருந்து நழுவும் அருவி ஆற்றோடு கலப்பதுபோல், எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாது இயல்பாய் நிகழ்ந்துபோயிற்று.
“நீ ஓகேயா, எங்கயும் வலி?” தன் கை வளைவில் தலை வைத்துப் படுத்திருந்தவளின் கன்னம் வருடிக் கேட்டான் அவன்.
என்ன இவன் இப்படிக் கேட்கிறான் என்று வெட்கினாள் அவள்.
“வெக்கபடுற விசயம் இல்ல நவி. ஏதும் எண்டா சொல்லோணும்.”
சரி என்று தலையை அசைத்தாள் அவள். திரும்பி அவளைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்தபடி படுத்திருந்தாள். என்ன என்றான் புருவங்கள் இரண்டையும் உயர்த்தி. சின்ன முறுவல் ஒன்றுடன் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள் அவள்.
இத்தனை நாள்களும் அவன் நிம்மதியைப் பறித்த அவளின் அந்தச் செய்கை, இன்று அவளை நோக்கி அவனை இழுத்தது. திரும்பவும் அவளைத் தன் அணைப்பினுள் கொண்டுவந்தான். ஒற்றைப் போர்வை மறைத்திருந்த அவர்களின் நெருக்கமும், அவனின் அணைப்பும், விசமச் சிரிப்பில் மின்னிய விழிகளும் இப்போதும் அவனை எதிர்கொள்ள இயலாமல் செய்ய, பார்வையைத் தழைத்தாள் நாவினி.
உதட்டில் அரும்பிய முறுவலோடு அணைப்பை இன்னும் இறுக்கி அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டுத் தன் நிறைவைச் சொன்னான் அவன்.
விழிகளை மூடி அவன் தந்த அணைப்பையும் முத்தத்தையும் வாங்கியவள் உள்ளமும் எவ்வளவோ காலத்திற்குப் பிறகு ஆழ்கடலின் அமைதியில் நிறைந்து திளைத்தது. இவ்வளவு காலமும் இல்லாத பிடிப்பொன்று வாழ்வின் மீது உண்டாயிற்று.
அடுத்து வந்த நாள்கள் எல்லாம் நீ ஆசைப்பட்ட வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நாவினிக்குச் சொல்லிச் சென்றன. அங்கே புகைப்படங்களாக இருந்த அன்னை தந்தையிடம் தன் மன நிறைவைக் கண்ணில் ஈரத்துடன் சொல்லி மகிழ்ந்தாள்.
அவர்களும் இருந்திருக்கலாம். அது மட்டும்தான் அவள் உள்ளத்தில் இருந்த குறை. அதுவே பிரேமாவை இங்கே அழைத்துக்கொள்வதற்கான வேலைகளை இன்னும் விரைவாகப் பார்க்க வைத்தது.
கணவனை நினைத்தாலே அவள் கன்னங்கள் கதகதக்கும். மகனுக்குத் தெரியாமல், அவளும் எதிர்பாரா நொடி ஒன்றில் அவன் தந்துவிட்டுப் போகிற இறுகிய அணைப்புகளும் ஆழ்ந்த முத்தங்களும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தியே வைத்திருந்தன. அவள் அறிந்த கேசி இப்படியெல்லாம் நடப்பானா என்று வியந்தாள்.
அவள் வியப்பும் மகிழ்ச்சியுமாக அவனைப் பார்க்கும் பார்வையிலேயே அதைப் புரிந்துகொண்டு, “அவன் வெறும் லவ்வர் மட்டும்தான். பார்வையால மட்டும்தான் கதைப்பான். அவனுக்கு அதுக்கு மட்டும்தான் அனுமதி. இந்தக் கேசி உன்ர மனுசன். இவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு. வித்தியாசம் விளங்குதா?” என்று அவன் அவளைப் பின்னிருந்து அணைத்துக் கழுத்து வளைவில் முத்தமிட்டபோது, அவள் கண்களில் பழைய நேசம் மின்னிற்று.
மலர்ந்து விகசித்திருந்த அவர்கள் முகங்களைப் பார்த்தே அனைத்தையும் கண்டுகொண்டார் மேனகா. எதையும் கேட்டு அவளைச் சங்கடப்படுத்தவில்லை.
அவர் மூலம் செய்தி பிரேமாவுக்கும் போனது. உள்ளே ஆனந்தப் பரபரப்புத் தொற்றிக்கொண்ட போதிலும் எப்போதும் அழைப்பதுபோல் அழைத்து, பூரித்து விகசித்திருந்த கணவன் மனைவி முகங்களை ஆசை தீரப் பார்த்தவரின் விழிகள் பனித்துப்போயின. பேரனிடமும் ஏக்கம் தீரப் பேசிவிட்டு வைத்தவர் அடுத்து ஓடியது அவரின் பிள்ளையாரிடம்.
கேசிகனும் சஜிதனும் ஜெர்மன் வந்து மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் சஜிதனுக்கு கிண்டர் கார்டனில் இடம் கிடைத்தது. அவன் அங்கே போக ஆரம்பித்ததும் கேசிகனும் டொச் வகுப்பில் சேர்ந்துகொண்டான். நாவினி முழு நேர வேலையில் இருப்பதும், கேசிகன் ஜெர்மன் மொழி படிக்க ஆரம்பித்துவிட்டதாலும் அவன் வேலைக்குச் சென்றேயாகவேண்டிய கட்டாயம் இருக்கவில்லை.
ஆனாலும் நாவினிக்கு அவனை ஏதோ ஒரு வேலையில் புகுத்த மனமில்லை. அவன் மிகச் சிறந்த வியாபாரி. சின்ன வயதிலிருந்தே அவன் ஆசையும் அதுதான். அப்படியிருக்கத் தன்னை மணந்து இங்கு வந்ததாலேயே அவன் கனவுகளைத் தகர்ப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.
ஏதாவது கடை இருந்தால் பார்க்கச் சொல்லிச் சிவதாசனிடம் சொன்னாள். தமிழர்களும் தமிழர் கடைகளும் அதிகமாக இருக்கும் பகுதி டோர்ட்மண்ட் என்பதில் கட்டாயம் கிடைக்கும் என்று அவரும் சொல்லியிருந்தார்.
கேசிகனுக்குமே அதுதான் பிடித்திருந்தது. கூடவே, மொழி சுப்பர் மார்க்கெட்டை இங்கிருந்து நடத்துவது நீண்ட காலத் திட்டத்துக்குச் சரியாக வராது என்று, இந்த மூன்று மாதங்களிலேயே உணர ஆரம்பித்திருந்தான்.
அதைவிட இன்னுமே மயூரன் என்றால் ஒருவித ஒட்டாத தன்மை வந்துவிடுவதை அவனால் தவிர்க்க முடிவதில்லை. கூடவே, இன்றைய நிலையில் மொழியிலிருந்து முற்றிலுமாக வெளிவரவே விரும்பினான்.
அதில் இரண்டு சுப்பர் மார்க்கெட்டுகளுக்குமான நியாயமான விலையை நிர்ணயித்து, அதைத் தந்துவிட்டு அவற்றை மயூரனையே எடுத்துக்கொள்ளச் சொன்னான்.
நாவினிக்கு அதில் உடன்பாடில்லை. விருப்பமானால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவனை இலங்கை சென்று கடையைப் பார்த்துவரச் சொன்னாள்.
அப்படிச் சொன்ன மனைவியைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்து, “என்ர மனுசிக்கு அவளின்ர மனுசன் முழுசா அவளுக்கு வேணுமாம். எனக்கும் என்ர மனுசி மட்டுமே எல்லாமா வேணுமா இருக்கு.” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.
“எனக்காகவா?” நெகிழ்ந்த குரலில் வினவினாள்.
“இல்ல. எங்களுக்காக. எனக்கும் இந்த நவிக்குச் சகலதுமா இருக்கத்தான் ஆசையா இருக்கு.”
கண்ணீருடன் மகிழ்வாகப் புன்னகைத்த நாவினி, எம்பி அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். “என்னடி இது?” என்று கிறங்கியவனின் அணைப்பு இறுகிப்போயிற்று.
அரும்பிய முறுவலோடு திரும்பவும் எம்பி மறுபக்கத் தாடையிலும் அழுத்தி முத்தமிட்டாள். அவ்வளவுதான். அவளை அள்ளிக்கொண்டு அவர்களுக்கான அறைக்கு அவன் நடக்க, “அப்பா!” என்ற மகன் குரல் இடையிட்டது.
மிட்டாயைப் பறிகொடுத்த குழந்தையாக அவளை இறக்கி விட்டுவிட்டுப் பார்த்தான் கேசிகன். நாவினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கலகலத்துச் சிரித்தாள். “உன்னை!” அவன் முகத்திலும் அந்த முறுவல் அரும்பினாலும் இன்னும் அந்த மயக்கம் தீராமல் அவளையே பார்த்தான்.
சின்ன புன்னகையோடு கணவனை நெருங்கி அவன் கேசம் கோதிக்கொடுத்தாள் நாவினி. அவளிடம் தன்னைக் கொடுத்துவிட்டு, அந்தப் பிஞ்சு விரல்களின் சுகத்தை விழிகளை மூடி அனுபவித்தான் கேசிகன். அவன் கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டு, “தம்பி நித்திரையாகட்டும்.” என்றுவிட்டுக் கீழிறங்கிச் சென்றாள்.