மரகத மாமன் 10
'லட்சுமி டிரேடர்ஸ்' என்ற பெயர்ப் பலகையுடன் இருந்த அந்தக் கடையினுள் முதலாளி போன்று பெரிய நாற்காலியில் அமர்ந்தவளாய் மடிகணினியில் பார்வையைப் பதித்திருந்தாள் மரகதம்.
அக்கடையின் உள்ளறையை நோக்கிக் குரல் கொடுத்தவளாய், "ராஜிக்கா அந்த ஃபாரீன் ஆர்டருக்கு அஞ்சு கிலோ இட்லி பொடி, அஞ்சு கிலோ சாம்பார் பொடி ரெடி பண்ணிடுங்கக்கா! இன்னிக்கு ஈவ்னிங் அனுப்பனும்" என்றவள்,
மறுபுறம், "சரிம்மா" என்று பதில் வந்ததும் அக்கடையின் பொதுக் கைப்பேசியிலிருந்து ஒருவனுக்கு அழைத்து, "ராஜாண்ணா, இன்னிக்கு கொரியர் பார்சல் இருக்கு. சாயங்காலமா வந்து வாங்கிட்டுப் போங்க" என்றாள்.
இவள் அழைப்பை வைத்த மறுநொடி அக்கைப்பேசிக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றவள் மரியாதை கலந்த பவ்யத்துடன், "சொல்லுங்க அண்ணாச்சி" என்றாள்.
அவர் அங்கு நடக்கும் பணியினைக் குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலிறுத்தவள், "சரி அண்ணாச்சி. செஞ்சிடுறேன் அண்ணாச்சி" என்றவளாய் அழைப்பைத் துண்டித்து விட்டு அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் பணிகளைக் குறித்துத் திட்டமிட்டிருந்தாள்.
மரகதம் கல்லூரியில் தமிழில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த கையோடு இந்தக் கடையில் பத்தாயிரம் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தாள். அப்போது சமையலுக்கெனத் தயாரிக்கப்படும் பொடிகளைப் பொட்டலம் செய்து கடைகளுக்கு அனுப்பும் வேலையைத் தான் செய்தாள் மரகதம்.
சில மாதங்களிலேயே அவளின் திறமையைப் பார்த்து கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் பணியை அளித்தார் கடையின் முதலாளியான செல்வராசு. மரகதத்தைத் தனது மகள் போல் பாவித்து அவளுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வேலைச் செய்ய வைத்தார்.
பத்தாயிரம் சம்பளம் இருபதாயிரமாகி மாதம் இருபத்தைந்தாயிரம் ஆன போது அக்கடையின் மேலாளராய் மாறியிருந்தாள் மரகதம். இங்குச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தான் இரண்டு அக்காள்களுக்கும் நகைச் சேர்த்து கடன் வாங்கி மணமுடித்து வைத்தாள்.
அவர்களுக்காக இந்த முதலாளியிடம் வாங்கியிருந்த கடனுக்காகவே தனது திருமணத்தைப் பற்றி எண்ணாது இருந்தாள். அவளின் பெற்றோரும் இவளுக்கு மணம் முடித்து வைக்க எண்ணவில்லை. இந்தக் கடனை அடைத்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டிருந்தனர் ஆனால் அதற்குள் மகனுக்குப் பெண் பார்க்கத் தொடங்கியிருந்தனர்.
இவளது தம்பியான முத்துராமனும் இரண்டு அக்காக்களைக் கரை சேர்த்த கடனுக்காக உழைத்திருந்தான். அதற்கு மேல் மரகதத்தின் திருமணத்திற்கெனப் பணம் சேர்க்க எண்ணாமல் தனக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தான். அவ்வீட்டில் இவளின் திருமணத்தைக் குறித்து யாருக்குமே அக்கறை இல்லாதிருந்த போது மணிவாசகம் தான் அவ்வீட்டாருடன் சண்டையிட்டு இவளுக்கு மாப்பிள்ளைப் பார்த்து மணமுடித்து வைத்தான்.
இவளுக்குத் திருமணம் நிச்சயமான போது இந்த முதலாளியிடம் வாங்கியிருந்த கடன் மீதமிருந்தது. அக்கடனை அந்த முதலாளி இவளின் திருமணப் பரிசாய் தள்ளுபடிச் செய்திருந்தார்.
திருமணத்திற்காக இந்த வேலையை விட்டவள் திருமணம் முடிந்ததும் இந்த ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த கணவனது ஊருக்குக் குடிபெயர்ந்தாள்.
மூன்று மாதத்திலேயே திருமணத்தை முறித்துக் கொண்டு வந்தவளுக்குத் தனது கடையில் மீண்டும் வேலைக் கொடுத்தவர் அடுத்த வருடத்திலேயே அவளிடம் அனைத்துப் பொறுப்புகளையும் கொடுத்து முதலாளிக்கு அடுத்த நிலையில் அவளை வைத்து முப்பதாயிரம் சம்பளம் கொடுத்தார்.
உள்ளூரிலேயே இவள் சம்பாதிக்கும் இந்தப் பணம் அவளின் குடும்பத்தினருக்குப் பெருமளவு உதவி புரிந்தது. அதனாலேயே இவளின் வாழ்வைப் பற்றி எண்ணாது அவர்கள் சுகமாய் வாழந்து கொண்டிருக்கின்றனர்.
மரகதத்தின் வாழ்வின் நிகழ்வுகளை எல்லாம் சிந்தித்தவாறு அந்தக் கடைக்குள் நுழைந்த மணிவாசகம், மரகதத்தின் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அவனைக் கண்டும் காணாதவளாய் மடிக்கணினியில் பதித்த பார்வையை மாற்றாது வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி, "நேத்து நான் சொன்ன சேதியைப் பத்தி யோசிச்சியலா தாயி?" எனக் கேட்டான்.
"அதைப் பத்தி யோசிக்க என்ன மாமா இருக்குது? அதான் முடியாதுனு நேத்தே சொல்லிப்புட்டேனே" என்றாள்.
"உனக்குக் கண்ணாலம் கட்டிக்கிட்டு குழந்தை குட்டினு வாழனும்னு ஆசையா இல்லையா தாயி?" எனக் கேட்டான்.
"நான் ஆசைப்பட்டு என்ன மாமா பண்றது? அதுக்கான கொடுப்பினை தான் எனக்கு இல்லாம போச்சே" விரக்தியான குரலில் உரைத்தாள்.
"உமக்கு ஒன்னும் இல்லாமலாம் போவல. குடும்பத்தாளுக உமக்கு நல்ல வாழ்க்கை அமைய விடாம தடுத்துக்கிட்டு கெடக்காய்ங்க. அவிங்களை எல்லாம் வுட்டுப்புட்டு வெளிய வானு தான் சொல்லுதேன்" என்றான்.
மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மரகதம்.
"ரெண்டாந்தாரம்னு நாளைக்கு என்னை அவர் இளக்காரமா தரக்குறைவா பேசினாருனா என் உசுரு இருக்காது மாமா. ஏற்கனவே மனசு வாங்கின காயமே ஆறாம தான் கிடக்கு. திரும்பவும் ஒருத்தரை நம்பி போய் ஏமாறத் திராணியில்ல மாமா" என்றாள்.
"நீ ஏன் ஏமாறுவனு நெனைக்க! மாமா உன் கூடவே தான் இருப்பேன். அப்படி எதுவும் உனக்கு ஆவாது! என்னிய நம்பு தாயி" என்றான்.
"அந்தக் கல்யாணத்துக்கும் நீரு அப்படித் தான் சொன்னீரு மாமா. உம்ம நம்பி தான் அவியளுக்குக் கழுத்தை நீட்டினேன்" என்றவளின் குரல் கமற ஈரவிழிகளுடன் அவன் கண்களை ஏறிட்டவள்,
"பயமா இருக்கு மாமா! எனக்கொரு சந்தோஷமா வாழ்க்கை வேணும்னு மனசு எந்தளவுக்கு ஆசைப்படுதோ அந்தளவுக்குப் பயமாவும் இருக்கு மாமா" என்றாள்.
"உனக்குத் தவறா அமைஞ்ச வாழ்க்கைக்கு நானும் காரணமா போய்ட்டேனேனு எம் மனசு கிடந்து அல்லாடுது. நான் மட்டும் அந்த மாப்ளைய பத்தி ஒழுங்கா விசாரிச்சி இருந்தா ஒமக்கு இன்னிக்கு இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்காதுல தாயி" மனத்தின் பாரத்தை வார்த்தைகளாய் உரைத்தவன்,
"நான் செஞ்ச தப்பை திருத்திக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு தாயி. இந்த ஒரு தரம் என்னை நம்பி வா தாயி. நிச்சயமா நீ சந்தோஷமா இருப்ப!" என்றான்.
அவள் அசைந்து கொடுக்காமல் போகவும்,
"சரி உனக்காக வர வேணாம். எனக்காக வா! நான் கண்ணாலம் கட்டி பிள்ளைக் குட்டியோட வாழறதை நீ காண்க வேணாமா?" எனக் கேட்டான்.
இவள் புரியாது அவனைப் பார்க்க, "நான் அவிய தங்கச்சி மரகதத்தை விரும்புதேன். அவிய என்னைக் கட்டிக்கனும்னா நீ அவிய அண்ணனைக் கட்டிக்கிடனும்னு கண்டிஷன் போட்டிருக்காவ! உமக்காக வேணாம். எமக்காக அவிய அண்ணனை நீ கட்டிக்கிடலாம்ல தாயி" எனக் கேட்டான்.
அவன் இவ்வாறு கூறவும் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தவள், "நெசமாவா சொல்றீய மாமா? அவிய உங்களைக் கட்டிக்கிடுதா சொன்னாவலா? இல்ல என்னை ஒத்துக்கிட வைக்கப் பொய் சொல்லுதியலா?" எனக் கேட்டாள்.
தனது கைப்பேசியை எடுத்தவன் அதிலிருந்த குரல் வழிச் செய்தியை ஒலிக்க விட்டான்.
"மரகதத்தை மலேசியாவுக்குக் கூட்டிட்டு வந்து எங்க அண்ணனுக்குக் கட்டி வச்சீங்கனா நான் உங்களைக் கட்டிகிறேன்" என்று மேகி என்கின்ற மரகதம் தனது குரலில் அனுப்பியிருந்த அச்செய்தியைக் கேட்டு மரகதத்தின் முகம் மின்னலாய் மின்னியது.
"ஆத்தி நெசமா தான் சொல்லிருக்காவ" என்று அத்தனை ஆச்சரியத்துடன் உரைத்தாள்.
"என்னால உம்ம வாழ்க்கை பாழாப் போச்சுனு இருந்துடக் கூடாது மாமா. அதனால ஒத்துக்கிடுதேன். இந்தக் கல்யாணத்துனால எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் உங்களுக்காகத் தாங்கிக்கிடுதேன்" என்றவள் சொன்னதும்,
"இந்த மனசுனால தான் மரகதம் உன்னை அம்பிட்டு பேரும் ஏமாத்திப்புடுதாக" என்று சிரித்தான் மணிவாசகம்.
"ஏன் மாமா அப்படிச் சொல்லுதிய" என்று புரியாது அவள் கேட்க,
"உனக்காகக் கட்டிக்கோனு சொன்னா கேட்காம, நான் வாழுறதுக்காக நீ எம்பிட்டு கஷ்டம்னாலும் பட்டுக்கிடுறதா சொல்லுதியே! அதைச் சொன்னேன்! இப்பிடி மத்தவியலுக்காக உன்னோட வாழ்க்கையைப் பணயம் வச்சித் தான் கஷ்டப்பட்டுட்டுக் கெடக்கத் தாயி! ஆனா இந்த மாமனுக்காக நீ செய்யப் போற கண்ணாலத்துனால நீ சந்தோஷமா மட்டும் தான் இருப்ப தாயி" என்றான்.
"ஆனா நம்ம வூட்டாளுங்க இதுக்கு ஒத்துக்கிட மாட்டாவலே மாமா" எனக் கவலையாய் அவள் உரைக்க,
"நீ கண்ணாலத்துக்குச் சம்மதிச்சிட்டாலா! அவிங்களை ஒத்துக்க வைக்கிறது எம் பொறுப்பு. அதை நான் பார்த்துக்கிடுதேன்" என்று மகிழ்வுடன் உரைத்தவனாய் அங்கிருந்து கிளம்பினான் மணிவாசகம்.
மரகதத்தின் வீட்டில் சுசீலாம்மா வரவேற்பறையில் அமர்ந்து யாரிடமோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள் அவர்களின் மகள் செல்வி.
கைப்பேசியில் பேசி முடித்ததும் புன்னகை முகமாய் மகளிடம் சென்றவராய், "ஏட்டீ செல்வி! உம் தம்பிக்கு நல்ல பொண்ணு வீடா வந்திருக்குடி! பொண்ணு சென்னைல ஐடி வேலை பார்க்குதாம். பார்க்கவும் ராணி கணக்கா இருக்குது. அடுத்த வாரம் பொண்ணு வீட்டுக்காரவிய பையன் வீட்டைப் பத்தி விசாரிக்க நம்ம வூட்டுக்கு வாராங்களாம். இப்ப தான் புரோக்கர் போன் செஞ்சி சொன்னாருட்டீ. நாம கொடுத்த பழைய போட்டோவைப் பார்த்து தான் மாப்ளையைப் பார்க்க வாறாவ! அதனால இந்த மொறை இந்தப் பொண்ணு வீட்டாளுவலை கோழி அமுக்கிற மாதிரி அமுக்கி சம்மந்தம் பேசி தட்டை மாத்திட்டு தான் அனுப்பி வைக்கனும்டி" என்றார்.
"யம்மோ உம்ம திட்டம்லாம் சரி தான். ஆனா அதுக்கு உம்ம கடைசிப் பொண்ணு வாயை அடக்கனும்ல மொதல்ல. நாம அநியாயம் பண்ணுதோம் அராஜகம் பண்ணுதோம்னு இவளேலா போய்ப் பொண்ணு வீட்டாளுவியக்கிட்ட நம்மளைப் போட்டுக் கொடுத்துப்புடுவா" என்றாள் செல்வி.
"போன முறை கிராப்பு தலக்காரி வந்தப்ப மரகதம் கடைல தானே இருந்தா. இந்தத் மொறையும் அப்படி அனுப்பிச்சு விட வேண்டியது தான்" என்று சுசீலாம்மா கூறவும்,
"அந்தான்னிக்குத் தான் இவ திடுதிப்புனு வந்து நின்னாளே! இவளை நம்ப முடியாதுமா. பொண்ணு வீட்டுக்காரவிய வாற அன்னிக்கு இவளை எங்கனயாவது வெளியூருக்கு அனுப்பிச்சி விடுறது தான் சரியா இருக்கும். விவாகரத்து வாங்கிட்டு வூட்டுல இருக்க உடன்பொறந்தவனால நம்ம பொண்ணுக்கு எதுவும் பிரச்சனை வருமோனு பொண்ணு வீட்டுக்காரவிய நெனைப்பாவமா. அதனால இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதையே சொல்லாம வுட்டுருவோம். கல்யாணத்தன்னைக்குத் தெரிஞ்சிக்கிடட்டும்" என்றாள் செல்வி.
இருவரும் சமையலறையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது வீட்டின் அழைப்பொலி ஒலித்தது.
"கதவு தொறந்து தானே கெடக்கு. யாரது மணி அடிக்கிறது?" என்றவராய் வெளியே வந்து பார்த்தார் சுசீலாம்மா.
அங்கு வாசலில் நின்றிருந்த மணிவாசகத்தைப் பார்த்ததும் அவரின் நெஞ்சம் நெகிழ்ந்து போக, "ஏலேய் தம்பி" மகிழ்வும் நெகிழ்வுமாய் அவனருகில் சென்றார்.
அவன் கையைப் பற்றியவராய், "எம்பூட்டு வருஷம் கழிச்சி இந்த வூட்டுக்கு வந்திருக்கா! உள்ளாற வா" என்று அவனின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.
சுசீலாம்மாவுடன் மணிவாசகம் உள்ளே வருவதைப் பார்த்த செல்வி, "மாமா சொகமா இருக்கியலா?" என்று அன்புடன் கேட்டவளாய் அவனருகில் வந்தவள்,
"அந்தச் சிறுக்கிக்காக உங்க அக்காவை தவிக்க விட்டுப்புட்டு போய்ட்டியலே! நீங்க வீட்டை விட்டுப் போனதும் அம்ம அன்னம் தண்ணி உங்காம உங்க நெனைப்பாவே கெடந்துச்சு தெரியுமா?" என்றாள்.
அவளை முறைத்தவனாய், "இப்பவும் மரகதத்துக்காகத் தான் இங்கன வந்திருக்கேன்" என்றான்.
"அப்படி என்ன அவ ஒமக்கு உசத்தியா போய்ட்டா? நானும் தானே உமக்கு அக்கா மவ மாமா? அவட்ட காமிச்ச பாசத்துல கொஞ்சமாச்சும் என்கிட்ட காமிச்சிருப்பியலா" என்று கோபத்துடன் கேட்டாள் செல்வி.
"சாமி சிலைக்கும் வெறும் கல்லுக்கும் வித்தியாசம் இருக்குலா" என்றான் மணிவாசகம்.
"எல்லாரும் அந்தச் சிறுக்கி அழகுல மயங்கிப் போய்த் தானே கெடக்கிய" என்று வெடுக்கென அவள் கூறிவிட,
"அழகுன்றது முகத்துல இல்ல மனசுல இருக்கு அப்படினா தனக்காக வாழாம உங்க எல்லாத்துக்காகவும் இன்னிய வர உழைக்கிற அவ பேரழகி தாம்ல! தங்கச்சி உழைச்ச காசுல கண்ணாலம் கட்டிக்கிட்டு அவியலுக்கு நல்லது செய்யனும்ன்ற நெனைப்பு இல்லாம மாசாமான இங்கன வந்து உட்கார்ந்து திங்கிற நீயெல்லாம் அவ கால் தூசிக்கு வர மாட்ட" என்றான் மணிவாசகம்.
"அவளோட அம்ம வூட்டுக்கு வாரதக் குத்தம் சொல்லுவியா நீயி" என்று சுசீலாம்மா எகிறிக் கொண்டு வர,
"இவ இங்கன வூட்டுக்கு வந்தா உமக்குச் சமைக்கிற வேலை மிச்சமுனு தானே நீ இவாளுக்கு ஒத்து ஊதிட்டு கெடுக்க அக்கா" என்றான் மணிவாசகம்.
"யம்மா பார்த்துக்க! இப்படி நம்மளை அசிங்கப்படுத்துற இந்தாளு தான் வூட்டை வுட்டு போய்ட்டான்னு நீ மூக்காலச் சீந்திக்கிட்டு கெடந்த" என்று கோபமாய் உரைத்தாள் செல்வி.
"அக்கா உம்மகிட்ட பேச்சுக் கொடுக்க எனக்கு நேரமில்ல. நான் வந்த சோலியச் சொல்லுதேன்" என்ற மணிவாசகம்,
"மரகதத்துக்கு மலேசியால நல்ல வேலை கிடைச்சிருக்கு. அவாளுக்கு இங்கன இருந்து மனசு நோவு தான் வருது. அதான் அவளை வெளியூருக்குப் போய் வேலை செய்யச் சொல்லி நான் தான் அந்த வேலைக்குப் பதியச் சொன்னேன். இப்ப அங்கன மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்துல வேலை கிடைச்சிருக்கு" என்றான்.
அவன் சொன்ன அணுகுண்டு செய்தியில், "என்னது மாசம் ஒரு லட்சம் சம்பளமா?" எனத் தாயும் மகளும் வாயைப் பிளந்தனர்.
"ஆமா இன்னும் நாலு நாள்ல அவ மலேசியா போவோனும்" என்றான்.
"ஆனாலும் பொட்ட பிள்ளைய எப்படியா தெரியாத ஊருக்குத் தனியா அனுப்புறது" என்றார் சுசீலாம்மா.
"நீ இப்படிச் சொல்லுவனு தெரிஞ்சி தான் நானும் அவளோட போவலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்க்கா. அங்கன போய் அவளுக்கேத்த மாதிரி வூடுலாம் ஏற்பாடு செஞ்சிக் கொடுத்துட்டு வரலாம்னு இருக்கேன்" என்றவன்,
இரு பெண்களும் அமைதியாக இருப்பதைப் பார்த்து, "அவ சம்பாதிச்சு என்ன அவளுக்கா சேர்த்து வைக்கப் போறா! அவளுக்கென்ன குழந்தையா குட்டியா? உங்களுக்குத் தானே கொடுக்கப் போறா! அதுக்கு அவ ஆசைப்பட்ட மாதிரி சம்பாதிக்கிற இடத்துக்கு அனுப்பித் தான் விடுங்களேன்" என்றான் மணிவாசகம்.
"சரிப்பா அவ சந்தோசத்துக்காகவும், நீ கூடப் போறன்ற ஒரே காரணத்துக்காகவும் தான் ஒத்துக்கிடுதேன். நாளப்பின்ன நாங்க என்னமோ அவளோட பணத்துக்கு ஆசைப்பட்டு அனுப்புசதா பேச்சு வரக் கூடாது சொல்லிப்புட்டேன்" என்ற சுசீலாம்மா,
"ஏன்யா எத்தனை நாளைக்குத் தான் நீ இப்படி ஒத்தையா கெடக்கப் போற! நல்ல பொண்ணாப் பார்த்துக் கட்டிக்கிட வேண்டியது தானே. எங்க ஒட்டும் வேணாம் ஒறவும் வேணாம்னு போனவன் கண்ணாலம் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழ வேண்டியது தானே" என்றார்.
பெருமூச்சோடு எழுந்தவனாய், "நேரங்காலம் வரும் போது நடக்கும்க்கா! உம்ம புருசன் வாறதுக்குள்ள கிளம்புதேன் நானு. இல்லனா இங்கன அருவா வெட்டுச் சண்டைத் தான் நடக்கும். அவியக்கிட்டயும் இதைப் பத்தி ஒரு வார்த்தைச் சொல்லிப்புடு! நான் ஊருக்குக் கிளம்புற ஏற்பாட்டைச் செய்யுதேன்" என்றவனாய் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
"யம்மோ கேட்டியா மாசம் ஒரு லட்சமா! கண்டதையும் நெனைக்காம அவளை அனுப்பி வுடுமா. இங்கனயே அம்பது செண்ட் இடத்தை வாங்கிக் கடையைக் கட்டிப்போட்டோம்னா நானும் அக்கா எல்லாரும் எங்க புருஷன் புள்ள குட்டிங்களோட இங்க வந்து செட்டில் ஆகிடுவோம். அப்படியே இவளை மறைச்சி வச்சி தம்பிக்கும் கண்ணாலத்தை முடிச்சிபுடலாம்" என்றாள்.
"ஹ்ம்ம் நல்ல யோசனை தான்ட்டீ. மொதல்ல உம்ம அப்பாருகிட்ட பேசி இதுக்கு ஒத்துக்கிட வெக்குதேன்" என்றவராய் வேலையைக் கவனிக்கச் சென்றார் சுசீலாம்மா.