கண்கள் சிவந்து வீங்கும் அளவிற்கு தீர்த்தி அழுது கொண்டிருக்க, அவளை சமன் செய்யும் வழி அறியாமல் அவளை அணைத்தபடியே இருந்தாள் பிரயுக்தா. அவளின் இன்னல்கள் தீர்க்கும் வழி அறியாமல் மவுனமாய் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“தீர்த்தி போதும் டி.. நம்ம போலீஸ் கிட்ட போகலாம்.. மத்தவங்களை நம்பி நிறைய நேரத்தை வீனாக்கிட்டோம் நீ அழாத.. பசங்களை நம்ம எப்படியாவது கண்டு புடிச்சிரலாம்” என்றுரைக்க மேலும் விம்மி அழுதாள் தீர்த்தி.
மற்றவர்கள் முன்னே எவ்வளவு கம்பீரமாய் இருந்தாலும் அவள் ஒருவளிடம் மட்டுமே உடைந்திடுவாள். இருவருக்கும் அப்படி ஒரு நெருக்கம். தீர்த்தி அழுது கொண்டிருக்க, அவளின் போன் மீண்டும் அடித்தது. உடனே பதறி போய் அவள் போனை பார்க்க புது எண்ணாக இருந்தது.
“ஸ்பீக்கர்ல போடு தீர்த்தி” என பிரயுக்தா கூற உடனே கண்களை துடைத்துக் கொண்டு அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள்.
“ஹலோ” என தயக்கத்துடன் கூற, எதிர்பக்கத்தில் இருந்து கேட்ட குரலில் உறைந்தாள்.
“ஹலோ பொண்டாட்டி” அழுத்தம் கூடிய காதல் நிறைந்த குரலில் அழைக்கவும் தீர்த்திக்கு சர்வமும் சிலிர்த்தது.
தீர்த்தியை போலவே பிரயுக்தாவும் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.
“என்ன தீரா சந்தோசத்துல உறைஞ்சி போய் இருக்க போல” என்றவனின் குரலில் நக்கல் தூக்கலாக இருக்க, பல்லை கடித்தாள்.
“டேய்.. இது எல்லாம் பண்ணது நீ தான்னு தெரியும்.. ஒழுங்கு மரியாதையா எங்க வாழ்க்கையில இருந்து வெளிய போய்டு.. திரும்ப வர நினைக்காத.. நேர்ல பேச துப்பு இல்லாம இப்போ என் பசங்களை கடத்தி வச்சி இருக்க.. ” என எரிந்து விழுந்தாள் தீர்த்தி.
“என்ன செல்லம் பண்றது? முன்னவே லட்டு மாதிரி ரெண்டு பசங்க இருக்குறது தெரிஞ்சி இருந்தா எப்போவோ வந்திருப்பேன்.. ஆனா அதுக்கான சூழ்நிலையில நான் இல்ல.. இப்போ உண்மை தெரிஞ்ச அப்பறமும் எப்படி நான் அமைதியா இருப்பேன்? காலையில நேர்ல வந்தப்போவே உன்ன அப்படியே தூக்கிட்டு வந்து இருப்பேன்.. ஆனா நீயாவே திரும்ப உன் வீட்டுக்கு வரணும் நினைச்சி தான் சும்மா வந்தேன்..” கால் மேல் கால் போட்டுக் கொண்டு திமிராக கூறினான் ருத்ரன்.
அவன் கூற்றில் கண்ணீரை அழுந்த துடைத்தவள், “இங்க பாரு.. நீயும் வேணாம் உன் கூட வாழ்ந்த வாழ்க்கையும் வேணாம்ன்னு தூக்கி எறிஞ்சிட்டு தானே வந்தேன்.. உன்ன மாதிரியான ஒரு துரோகி கூட இருக்க புடிக்காம தானே தாலிய விட்டெறிஞ்சேன்.. இப்ப இத்தனை வருசத்துக்கு அப்பறம் எதுக்கு என் நிம்மதிய கெடுக்க வந்த?” என ஆத்திரத்தில் கேட்டவளின் குரலில் வலியும் அதிகமாய் குடியிருந்தது.
நொடி பொழுதில் தீர்த்தி அவன் முகத்திலே தாலியை கழட்டி எரியும் காட்சி வந்து போக கண்களை அழுந்த மூடியவனுக்கு பொறுமை போய் கோவம் அதிகரித்தது.
போனை இறுக்கி பிடித்தவன், “அத்தோட எல்லாம் முடிஞ்சிதுன்னு நினைக்காத.. நான் வேணாம்ன்னு சொன்னவ எதுக்கு டி என் புள்ளைய மட்டும் சுமந்த? என் புள்ளைங்க மேல உனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு எனக்கும் இருக்கு.. புருஷன் பொண்டாட்டி சண்டையை பேசி தீக்கனும்.. இப்படி புருசனுக்கு என்ன ஆனா என்னன்னு கவலையே இல்லாம ஓடி ஒழிய கூடாது” வலியை மறைத்துக் கொண்டு வார்த்தைகளை கடித்து துப்பினான்.
அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அழ துடித்த இதயத்தை மேலும் இரும்பாக்கி கொண்டிருந்தாள். என்ன சொன்னால் அவள் மனம் இலகும் என நன்கறிந்து இருந்தவன், அவளை உணர்ச்சிகளால் தாக்க நினைத்தான்.
அதற்கு அவளும் சளைத்தவள் இல்லையே, “என்ன புருஷன் பொண்டாட்டியா? என்ன காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்தினனு சொல்லு” என அவள் கூறியதும் தான் தாமதம் எதிர்பக்கத்தில் எதோ ஒரு கண்ணாடி உடையும் சத்தம் அவளுக்கு தெளிவாய் கேட்டது.
அவளுக்கும் தெரியுமே எங்கு அடித்தாள் எப்படி வலிக்கும் என்று. ஜாடிக்கு ஏற்ற மூடி. அவள் வார்த்தையில் கண்கள் சிவப்பேற கோவத்தில் பல்லை நரநரவென்று கடித்தான் ருத்ரன். இந்நேரம் அவன் எதிரில் அவள் சொல்லி இருந்தாள் நடப்பதே வேறாகி இருக்கும். அது அவளுக்கும் தெரியும். அந்த தையிரியத்தில் தான் அவளும் சொன்னாள்.
“மவளே இங்க எப்படியும் வர தானே போற அப்போ இருக்கு டி உனக்கு.. உன் திமிருக்கு உன்ன இன்னும் அலைய விடனும் டி.. அஞ்சு வருஷம் என் பசங்களை என் கிட்ட இருந்து பிரிச்சல.. நீயும் அதை அனுபவி.. இன்னும் கொஞ்ச நாள் தேடி அல.. நான் நம்ம பசங்க கூட சந்தோசமா இருக்கேன்” என்று கூறியவன் அழைப்பை துண்டிக்க, தீர்த்தி அதிர்ச்சியில் சிலையானாள். கோவத்தில் பிள்ளைகளை அவனிடம் விட்டோமே என வருந்தியவள் தலையிலே அடித்துக் கொண்டாள்.
“ஐயோ.. ஐயோ..” என அவள் அழுக, பிரயு அவளின் கையை பிடித்து தடுத்தாள்.
“ஹே இரு டி.. பசங்க அவரு கிட்ட தானே இருக்காங்க” என்க, “எனக்கு புத்தியே இல்ல.. என் கோவத்தையும் வீம்பையும் இப்போ போய் அவன் கிட்ட காட்டி தொலஞ்சிட்டேனே.. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. ஐயோ என் பசங்க யார் கிட்ட போக கூடாதுன்னு நினைச்சேனோ அவன் கிட்டவே இருக்காங்களே.. இப்போ நான் என்ன பண்ணுவேன்” என்று அழுதவள், மீண்டும் அதே எண்ணுக்கு அழைத்தாள். மனதில் பிள்ளைகளுக்காக பொறுத்து போக வேண்டும் என நினைத்தாள்.
அவள் அழைப்பாள் என்று அறிந்தவன் போனையே பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர அதனை எடுக்கவே இல்லை.
அந்நேரம் ருத்ரன் இருக்கும் பக்கம் வந்த இளங்கோ, “பசங்களை சாப்பிட வச்சிட்டேன்.. அவங்க இன்னும் அண்ணிய கேக்கல.. ஆனா எவ்ளோ நேரம் இப்படியே சமாளிக்குறதுன்னு தெரியலை” என யோசனையாக கூறினான்.
“இன்னும் கொஞ்ச நேரம் சமாளி.. அவ நம்ம வழிக்கு வந்துட்டா பிரச்சனை இல்லை. கால் பேசிட்டு வரேன்.. பசங்களை ஒரு ரவுண்டு ஹெலிகாப்டர்ல கூட்டிட்டு போவோம்” சற்று தணிந்த குரலில் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் போன் அடித்தது.
அதனை எட்டி பார்த்த இளங்கோ, “அண்ணி தானே? எடுத்து பேசுங்க” என்க ருத்ரன் அதனை கண்டுக் கொள்ளாமல் தீவிர யோசனையில் இருந்தான்.
அவன் எண்ணம் எல்லாம் எப்படி அவனின் மகன்களை திசைதிருப்புவது என்றே இருந்தது. அம்மாவை கேட்டு அவர்கள் அழுதாள் அவனுக்கு சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை. அதனால் அவர்கள் அழுகாமல் இருக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
“அண்ணி திரும்ப திரும்ப அடிச்சிட்டே இருக்காங்க, போனை எடுங்க.. பயப்புட போறாங்க” என அவனின் அண்ணிக்கு சாதகமாய் பேசினான் இளங்கோ.
அவனை சற்று கடுப்பாக பார்த்தவன், “அவ பயப்புடட்டும் டா.. அதுக்கு தானே இதலாம் பண்றது” என அசட்டையாக கூறியவன், போனில் தெரியும் தீர்த்தி புகைபடத்தை ரசித்து பார்த்தான்.
“இதுக்கு நீங்க அண்ணியையும் தூக்கிட்டு வந்து இருக்கலாம்..” என மெல்ல முணுமுணுக்க, “எல்லாத்தையும் விட்டு போனால.. அவளே வரட்டும்.. அவ என்ன விட்டு போய் அங்க அனாதையா தான் இருக்கா.. அங்க மட்டும் அவ சந்தோசமாவா இருக்கா? அவ இழந்த உறவுகள் அவளுக்கு திரும்ப கிடைக்க போறது இல்ல.. அதுக்கு அவ இருக்குற என்னைய ஏத்துகிட்டா பரவாயில்லல..” என கேட்டவன் போனை எடுத்தான்.
“நீங்க பண்றது பெரிய தப்பு..” என மேலும் கூற வந்தவன் ருத்ரனின் பார்வையில் அப்படியே அமைதியானான்.
அதற்கு மேலும் சொன்னால் நன்றாக வாங்கிகட்டிப்போம் என அமைதிகாத்தான். நீண்ட நேரம் அவளை தவிக்க விட்ட பின் அழைப்பை ஏற்றவன், “ஹான் சொல்லு” என மிக சாதாரணமாய் கூறினான்.
ஆனால் அவளோ தொண்டை வற்றி போகும் ஆவிற்கு அழுது ஓய்ந்து போய் இருந்தாள். அவனிடம் சண்டை போடும் தெம்பு அவளுக்கு இல்லை.
“ஏன்.. ஏன்.. இப்படி பண்ற? ப்ளீஸ் என் பசங்களை கொடுத்துடு.. நான் உன்ன திட்டுனது தப்பு தான்” என அழுது கொண்டே கூறிட, அவனுக்கும் அவளின் அழுகை நெஞ்சை குத்தியது.
ஆனால் கொஞ்சம் இடம் கொடுத்தாள் மீண்டும் முருங்கைமரம் எரிடுவாள் என அறிந்தவன், “என் பசங்களை நான் ஏன் உனக்கு கொடுக்கணும்?” என வீம்பாக கூறினான்.
அவன் கூற்றில் பல்லை கடித்தவள், “அவங்க என் பசங்க” என அவனை போலவே வீம்புடன் கூறிட எதிர் பக்கம் ருத்ரன் நக்கலாக சிரித்தான்.
“அது எப்படி அவங்க உன் பசங்க மட்டும் ஆவாங்க.. லாஜிக் இடிக்கிதே.. நான் இல்லாம அவங்க எப்படி வந்தாங்க?” என எள்ளலாக கேட்டவனின் மீது அவளுக்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது.
இத்தனை வருடம் அவள் தனியாளாக அவர்களை வளர்த்தாள். இப்பொழுது புதிதாய் அவன் உரிமை கொண்டாட வருவது அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. “இங்க பாரு.. என் பசங்களை நான் மட்டும் தான் இத்தனை வருசமா வளர்த்தேன்.. அவங்க வாழ்க்கையில அப்பாவா நீ இல்லவே இல்ல..” என மேலும் கூற வந்தவளை அவனின் அடுத்த கேள்வி இடை வெட்டியது.
“அப்பாவா இல்லையா இல்ல இருக்க விடலையா?”. அவ்வளவு தான் அவள் வாயை அப்படியே மூடிக் கொண்டாள். என்ன சொன்னாலும் பழியை தன் மீது திருப்புவான் என்று அறிந்து இருந்தவள் முதலில் பிள்ளைகளை மீட்க வேண்டும் என்று யோசித்தாள்.
“இங்க பாரு.. நான் உண்டு என் பசங்க உண்டுன்னு நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கோம்.. தயவு செஞ்சி என் பசங்களை குடுத்துடு.. ஒட்டு மொத்தமா எதுவும் வேணாம்ன்னு தானே இங்க வந்தேன் திரும்ப ஏன் என் வாழ்க்கையில தொல்லை கொடுக்க நினைக்கிற?” என கேட்டவளின் குரலில் அத்தனை வலி நிரம்பி இருந்தது.
அவள் வேண்டும் என்றால் அவன் வேண்டவே வேண்டாம் என விட்டெறிந்து பேசிடலாம், காதல் கணவன் சும்மா விடுவானா? இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவள் மீது குறையாத காதலுடன் இருக்கிறான். அதுவும் அவனின் உதிரங்களை கண்ட பிறகு விட்டுவிடுவானா?
“நீ அங்க நிம்மதியா இருக்க அப்போ நான்? நான் மட்டும் எதுக்கு டி என் பிள்ளையில விட்டுட்டு தவிக்கணும்? இத்தனை வருஷம் பிள்ளைங்களை நீ பாத்துகிட்ட.. இனி நான் வளர்த்துக்குறேன்.. அப்பனே இல்லாத மாதிரி வளர்த்தல்ல.. இனி அம்மாவே வேணாம்ன்னு அவங்களே சொல்ற அளவு நான் பாத்துக்குறேன்” என்றுரைக்க, தீர்த்தி தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
நடந்த அத்தனை துயரத்தையும் தாண்டி இன்னும் இந்த புவியில் அவள் வாழ்கிறாள் என்றால் அதற்கு முழுமுதற் காரணமே அருளும், சூர்யாவும் தான். அவர்கள் இல்லா வாழ்க்கையை அவளால் ஒரு நொடி கூட வாழ முடியாது. வாழ்வின் பிடித்தமே அவர்கள் தான். அவர்களை அவன் நெருங்க விட மாட்டேன் என்றால் நிச்சயம் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அந்த பொல்லாதவன் நிச்சயம் சொன்னதை செய்வான். ஏற்கனவே சொன்னதை செய்தவன் ஆயிற்றே அதனால் பயத்தில் அவளின் கைகள் நடுங்கியது.
“என்..என்ன சொல்ற நீ? நீ.. நீ சும்மா தானே சொல்ற? என்ன மிரட்ட தானே அப்படி சொல்ற?” என கண்ணீரோடு திக்கி திணற, ருத்ரன் அமைதியாய் இருந்தான். அவன் அமைதியிலே அவன் எவ்வளவு ஊர்ஜிதமாய் இருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.
“ஹே… வேலா.. ப்ளீஸ்.. அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லு.. அவங்களை மட்டும் என் கிட்ட இருந்து பிரிச்சிராத.. நீ என்ன சொன்னாலும் நான் பண்றேன்.. என்ன வேணுமோ கேளு நான் தரேன்..ஆனா என் பசங்களை மட்டும் என்கிட்டே இருந்து பிரிச்சிராத.. ப்ளீஸ்” என கெஞ்ச துவங்கினாள். அவளின் திமிர், கம்பீரம் என அனைத்தையும் சுக்கு நூறாய் நொறுக்கி விட்டான். அவனை தவிர வேறு யாராலையும் அவளை கையறு நிலைக்கு கொண்டு வர முடியாது. வேறு யாரையும் செய்திட விட மாட்டான்.
“முடியாது.. நம்ம பசங்களை நானே நல்லா பாத்துப்பேன்.. நீ இந்த உலகத்துல எந்த மூலையில தேடுனாலும் அவங்களை உன்னால கண்டு புடிக்க முடியாது.. என் பசங்க கூட இனி மிச்சம் இருக்குற வாழ்க்கைய நான் சந்தோசமா வாழுவேன்.. உன்னால ஆனத பாத்துக்கோ டி” என்றவன் அழைப்பை துண்டிக்க போக,
“வேலா.. வேலா.. ப்ளீஸ் அப்படி பண்ணாத.. என் பசங்களை என்கிட்டே இருந்து பிரிச்சிராத.. ப்ளீஸ் நான் உன்ன கெஞ்சி கேக்குறேன்,.. நீ என்ன சொன்னாலும் நான் செய்யுறேன்.. சத்தியமா..” விசும்பியபடியே அவள் மன்றாடினாள்.
“நம்ம புள்ளைங்க மேல சத்தியமா?” என வேண்டும் என்றே கேக்க, ஒரு நொடி யோசித்தவள், “சத்தியமா.. நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்.. ப்ளீஸ் பசங்களை மட்டும் என் கிட்ட இருந்து பிரிச்சிடாத” என ஒரு முடிவோடு கூறினாள்.
அதில் மர்மமாய் புன்னகைத்தவன், “சரி அப்படின்னா உன் கம்பெனி பில்டிங் கீழ ஒரு கார் வெயிட்டிங்ல இருக்கு.. சீக்கிரம் போய் அதுல ஏறு.. உன்ன சேர்க்க வேண்டிய இடத்துல அது சேக்கும்” என்று கூறி அடுத்த நிமிடமே அழைப்பை துண்டித்தான். அவன் சொன்னதை கேட்டவளுக்கு திக்கென்று இருந்தது. காரணம் அதில் ஏறினால் மீண்டும் அவள் வாழ்க்கை ஆரம்பித்த இடத்திற்கே செல்ல நேரிடும். பிள்ளைகளை காப்பாற்ற வழியறியாமல் தவித்தாள்.