• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மறுத்தாலும் உன்னை மறப்பேனா - 6

ரோசி கஜன்

Administrator
Staff member

அந்தமானில் இருக்கும் ஸ்வரஜ் த்வீப் என்கிற ஹேவ்லாக் தீவு பகுதியில் மூன்று கார்கள் ஒன்று போல் செல்ல, அதில் முதலில் செல்லும் காரில் தீர்த்தி அமர்ந்திருந்தாள். அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த தீவில் தான் அதிகம் தங்குவார்கள்.

இங்கு ஏராளமான நீர் பொழுதுபோக்கு அம்சங்கள் உண்டு. அது அனைத்திற்கும் தலைமை தாங்குவது ருத்ரன். அவனின் தொழிலை இங்கு தான் கட்டி ஆண்டுக் கொண்டு இருக்கிறான். இந்த தீவில் இருக்கும் அனைவருக்கும் அவனை தெரியும். அவனை சார்ந்த தீர்த்தியையும் தெரியும். இப்பொழுது அவளை அவனிடம் அழைத்து செல்வதே வேந்தன் தான்.

இளங்கோ ருத்ரனுக்கு வலது கை என்றால், வேந்தன் அவனுக்கு இடது கை. ருத்ரனுடன் வேலை பார்த்த பழைய ஆட்களை தீர்த்திக்கு நன்றாய் தெரியும். அதனாலே ஆட்களை பற்றிய பயம் இல்லாமல் பயணித்தாள். அவளின் எண்ணம் எல்லாம் மீண்டும் அவளின் பிள்ளைகள் மீதே திரும்பி இருந்தது. இந்நேரம் தன்னை தேடி அழுவார்களா என்று யோசித்தபடியே அவள் சென்றாள்.

இரவு நேரம் தொடங்கி இருக்க, பத்தே நிமிடத்தில் மாளிகை போன்று இருக்கும் தனி வில்லா முன்பு கார் நிறுத்தப்பட்டது. எந்த வாழ்க்கை வேண்டாம் என அவள் தூக்கி எரிந்து விட்டு வந்தாளோ மீண்டும் அதே வாழ்க்கைக்கு அவள் வந்திருப்பதை நினைத்து அவள் முகம் இறுகியது. ஒன்று மட்டும் அவளுக்கு நிச்சயமாய் தெரிந்தது. அவனிடத்தில் காலடி எடுத்து வைத்து விட்டாள் அவ்வளவு எளிதில் அங்கிருந்து தப்பிக்க முடியாதென்று. ஆனால், இதே இடத்தில் இருந்து தானே அவள் வெளியேறினாள். மீண்டும் அவளால் தப்பிக்க முடியாதா என்ன? அந்த எண்ணத்தில் தான் வீட்டை நோக்கி நடந்தாள்.

வழி எங்கிலும் நிற்கும் ஆட்கள் அவளை மகிழ்ச்சியுடன் பார்க்க அவளுக்கோ ருத்ரன் கொடுக்கும் பில்டப்பில் கடுப்பாக இருந்தது. வீட்டின் உள்ளே நுழைந்ததும் அவளுக்கு மூச்சே முட்டுவது போல் இருந்தது. ஹாலில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் ருத்ரன் காரணம் அல்ல. வீடு முழுவதும் அவளும் ருத்ரனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவன் மாட்டி இருக்க அவளுக்கு நெஞ்சம் பதபதைத்தது. வேண்டும் என்றே பழைய நினைவுகளை கொண்டு வர பார்க்கிறான் என்று நினைத்தவள் கொஞ்சமும் காதலே இல்லாதது போல் எரிந்து விழ ஆரம்பித்தாள்.

“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? இதலாம் பண்ணா நான் திரும்ப உன் கூட வந்து ஒட்டிப்பேன்னு நினைச்சிட்டியா? ஒழுங்கு மரியாதையா என் பசங்களை கொடுத்துடு” சீற்றத்துடன் அவனை முறைக்க அவனோ எள்ளலாக நகைத்தான்.

சோபாவில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டவன், “பாரு டா.. என்ன சவுண்டு.. போன்ல யாரோ என் பசங்களை விட்டுடுன்னு கெஞ்சுன மாதிரி இருந்துச்சே.. இப்போ சவுண்டு அதிகமா இருக்கே.. என்ன உன் புருஷன் வீட்டுக்கு வந்ததும் அதிகாரம் தானா வந்துடுச்சா?” என்றவனின் குரலில் நக்கல் சற்று தூக்கலாகவே இருந்தது.

இவனிடம் பேசி பிரோஜனம் இல்லை என்று நினைத்தவள் ஒரு ஒரு அறையாக அருளையும் சூரியாவையும் தேட ஆரம்பித்தாள். பிள்ளைகளுடன் தான் இருப்பான், அவர்களை அழைத்துக் கொண்டு அவனிடம் சண்டை போட்டு விட்டு கிளம்பிவிடலாம் என்று நினைத்தாள். அவன் மிரட்டுவான் என்று தெரியும் தான்.. இருந்தும் அதற்கு எல்லாம் அவள் அடங்கி போய் விட மாட்டாளே.. பிள்ளைகள் மட்டும் கைக்கு கிடைத்து விட்டாள் இவனை உண்டு இல்லை என செய்து விட்டு தப்பிக்க நினைத்தாள். முன்னவே பிரயுக்தாவிடம் உதவிக்கு ஆட்களை அழைத்து வருமாறு கூறி இருந்தாள். அவள் கணக்குப்படி இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள் என மன கணக்கு போட்டாள். ஆனால் அவளுக்கு எங்கே தெரிய போகிறது, இவள் உதவி அவளுக்கு வேண்டும் என்று.

உடனே பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று தேடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவளை நன்கு அறிந்தவன் ஆயிற்றே! எத்தனையோ தொழில் எதிரிகளை எதிர்கொண்டவனுக்கு அவனின் ஆசை காதல் மனைவியின் சிறு மூலையில் ஓடும் திட்டம் தெரியாதா என்ன?. இவள் எட்டடி பாய்வாள் என அறிந்திருந்தவன் அதற்கான வேலையையும் செவ்வனே செய்து விட்டான். அகத்தில் குடியிருப்பவளை இம்முறை கரத்தை விட்டு போக விடமாட்டான். அந்த நினைப்பில் தான் அவள் தேடட்டும் என மிகவும் சாதாரணமாய் அமர்ந்து இருந்தான். தீர்த்தி ஒவ்வொரு அறைக்காய் சென்று தேடி விட்டு கடைசியாக ருத்ரனின், அதாவது அவர்களின் அறை வாசலில் நின்றவள் உள்ளே சென்று பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் தயக்கத்தை கண்டு நக்கலாக புன்னகைத்தவன், “என்ன பொண்டாட்டி அதுக்குள்ளே பெட்ரூம் போக ஆசை படுரியா? இதோ வந்துட்டேன்.. நம்ம வேணும்னா உள்ள போய் பெட்ல தேடுவோமா?” என்றபடியே அவளை பின்னே இருந்து அனைத்துக் கொள்ள, கடுப்புடன் அவன் கைகளை தள்ளி விட்டு விலகி நின்றாள்.

“மரியாதை கெட்டுடும்.. ஒழுங்கா பசங்க எங்கன்னு சொல்லு.. வீட்டுல இல்ல.. நான்தான் நீ சொன்ன மாதிரி இங்க வந்துட்டேன்ல இப்போ பசங்களை என் கண்ணுல காட்டு” என்றவளின் குரலில் கோவமும் தவிப்பும் நிறைந்திருந்தது.

ஆனால் அவள் தவிக்கட்டும் என்றிருந்தவன், அவளை தலை முதல் கால் வரை ரசனையுடன் பார்த்தான். தீர்த்தி புடவை கட்டினால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். சும்மாவே அவளை நாள் முழுவதும் ரசிக்க சொன்னால் ரசிப்பான், இப்பொழுது சொல்லவா வேண்டும்? இந்நேரம் இருவருக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்து இருந்தாள் அவன் நடந்திருப்பதே வேறு. மிகவும் கடினப்பட்டு அவனை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் பார்வை போகும் திசையை உணர்ந்த தீர்த்திக்கு அவனை அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு கோவம் வந்தது. கீழ் முதல் அவள் முகத்தை பார்த்தவன் முகம் அப்படியே மாறியது.

அவள் விழியில் சற்று தடுமாறியவன் லேசாய் இரும்பியவன், “பசங்க இங்க இல்ல” என்று சொல்லியபடியே மீண்டும் கீழே இறங்கினான்.

அவன் கூற்றில் புருவம் சுருக்கிய தீர்த்திக்கு பயம் நெஞ்சம் கவ்வியது. “என்ன சொல்றான் இவன் பசங்க இங்க இல்லையா? அப்போ சென்னையிலே இருக்காங்களா? நம்மளை இங்க வர வைக்குறதுக்காக பொய் சொன்னானா? ஐயோ பதட்டத்துல நிஜமாவே பசங்க அவன்கிட்ட தான் இருக்காங்களான்னு கேக்கவே இல்லையே” என்று யோசித்தவளுக்கு மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என்று அப்பொழுது தான் புரிந்தது.

தடுமாற்றத்துடன் கீழே இறங்கியவள், “நீ என்ன சொல்ற? பசங்க எங்க இருக்காங்க?” மிகவும் அமைதியான குரலில் கேட்டாள். அவளுக்கு இப்பொழுது உறைத்தது. இனி அவனிடம் விதண்டாவாதம் செய்தாள் வேலைக்கு ஆகாது என்று. அவள் முக பாவனையில் ருத்ரன் அர்த்தமாய் சிரித்துக் கொண்டான்.

“அவங்க எங்க இருந்தா உனக்கு என்ன? இனிமேல் அவங்க என் பொறுப்பு..” என்று சர்வசாதாரணமாய் கூறிட தீர்த்தி மேலும் பதறினாள். “நீ என்ன சொல்ற? அவங்க என் பசங்க” என கூறியவள் குரலில் பதட்டம் இன்னும் அதிகரித்தது.

“ஆமா உன் பசங்க தான் இல்லன்னு சொல்லலையே.. ஆனா அப்பா நான் தானே? என் பசங்க வாழ்க்கையில எனக்கும் உரிமை இருக்குள்ள.. அதை இல்லன்னு உன்னால தடுக்க முடியுமா?” என அவன் கேக்க, தீர்த்தி வாயடைத்து போனாள். ருத்ரன் லாஜிக்காக பேசினாள் நிச்சயம் பெரிதாய் எதோ செய்ய போகிறான் என்று அவள் மனம் அரித்தது.

அவனிடம் இறங்கி போக நினைத்தவள், “இங்க பாரு ருத்ரன்.. நான் இல்லன்னு சொல்லல.. ஆனா இப்போ என் பசங்களை என் கிட்ட குடுத்துடு..” என கெஞ்சாத குறையாக கேட்டாள்.

அவளை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாதவன், “நான் ஏன் என் பசங்களை உன்கிட்ட கொடுக்கணும்? ஒரு அம்மாவா பசங்களை உன்னால பார்த்துக்க முடியும்போது என்னாலையும் ஒரு அப்பாவா என் பசங்களை பார்த்துக்க முடியும்.. அதனால நான் தர மாட்டேன்” என பிடிவாதமாய் கூறினான்.

சில நிமிடம் தீர்த்தியிடம் அமைதியே நிலவி இருந்தது. அவனுக்கு தெரியும் அவள் உடைந்து கொண்டு இருக்கிறாள் என்று. அவளை முழுதாய் உடைய வைக்க வேண்டும் என்பது தானே அவனின் எண்ணமே. பேச்சற்று நின்றவளின் கண்ணீர் வழிய துவங்கியது. பிள்ளைகள் இல்லாத வாழ்க்கையை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டவள், “ருத்ரா.. விளையாடாத.. பசங்களை என்கிட்ட குடு.. அதான் நான் இங்க வந்துட்டேன்ல.. உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி பண்ற? அதான் இப்போ உன் ஊருல உன் இடத்துல தானே நானும் என் பசங்களும் இருக்கோம்.. இப்போ ஏன் இப்படி பேசுற?” என நடுங்கிய குரலோடு கேட்டாள்.

அவள் பக்கம் திரும்பி அவள் கண்ணை பார்த்தவன், “எனக்கு எதுவும் வேணாம்.. லட்டு மாதிரி ரெண்டு பசங்க இருக்காங்க.. இனி நான் அவங்க கூட சந்தோசமா இருப்பேன்.. நம்ம பசங்களை உன்ன விட நான் நல்லா பாத்துப்பேன்” என்று கூறிட அவன் கண்ணில் தெரிந்த உறுதியில் நிலைகுலைந்து போனாள். என்றுமே அவள் கண்ணீரை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிபட்டவன் இன்று அவளை அழ விட்டு வேடிக்கை பார்க்கிறான் என்றால் அவன் வார்த்தையில் இருக்கும் நிதர்சனம் உரைக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்று யோசித்தாள்.

“இப்போ என்ன.. என் வாயால நான் இங்கயே இருக்கேன்னு சொல்லணும் அதானே? நான் இங்கயே இருக்கேன் போதுமா? இப்போ என் பசங்களை என் கிட்ட குடு” என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே கேக்க, ருத்ரன் மனம் மாறவே இல்லை.

அவளை அமைதியாய் பார்த்தவன், “நான் உன்ன இங்க இருக்கனும்ன்னு கேக்கவே இல்லையே.. என் பிள்ளைங்களோட அம்மாவா நீ இங்க இருந்தாலும் இரு.. இல்லனாலும் போ.. எனக்கு எதுவும் இல்ல” என விட்டெறிந்து பேச தீர்த்தி அவனா இது என நம்ப முடியாமல் பார்த்தாள். இத்தனை நேரம் அவள் வீம்பு பிடித்தது அனைத்தும் சுக்குநூறாய் உடைந்தது.

கைகள் நடுங்க அவனை பார்க்க அவனோ, “எத்தன நாள் வேணும்னாலும் இங்கயே இரு.. எனக்கு கவலையே இல்ல.. என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல” என கூறிவிட்டு ருத்ரன் அவன் போனை நோண்ட ஆரம்பிக்க தீர்த்திக்கு மேலும் அழுகை வந்தது.

அருளையும் சூர்யாவையும் பார்க்க விடமாட்டானா என்ற அச்சம் அதிகரிக்க, “ருத்ரா என்ன இப்படி சொல்ற? அதான் நான் இங்கயே இருக்கேன்னு சொல்றேன்ல.. பசங்களை பாக்க விடு.. என்ன காணாம அவங்க அழுவாங்க” என்று அழுகையுடன் கெஞ்சினாள்.

தாயுள்ளம் பதற, அவனோ அவளை கண்டுக் கொள்ளாமலே இருந்தான். “என் பசங்களை எப்படி சமாளிக்கனும்ன்னு எனக்கு தெரியும்.. அத பத்தி நீ கவலைபடாத” என்றான்.

“அப்போ எதுக்கு என்ன அங்க இருந்து இங்க வர வச்ச? ப்ளீஸ் உன் கோவத்தை என் மேல காட்டு.. பசங்களோட விளையாடாத உன்ன கெஞ்சி கேக்குறேன்” என கெஞ்சி அழுதாள்.

அவளை பார்த்து பெரு மூச்சு விட்டவன், “உன்ன இங்க இருக்க வைக்கணும்ன்னு நோக்கத்துல வர வைக்கல.. வலின்னா என்ன? வேதனைன்னா என்னன்னு அனுபவிக்க வர வச்சேன்.. இனி வாழ்க்கை முழுக்க உன் பசங்களை பாக்கவே முடியாதுன்ற வேதனையோடவே வாழு.” என கூறிட தீர்த்தி சிலைபோல் நின்றாள்.

அவன் கூற்றை ஜீரணிக்கவே சில நிமிடங்கள் பிடித்தது. “ப்ளீஸ் ருத்ரா நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்.. தயவுசெஞ்சி என் பசங்களை என் கிட்ட குடுத்துடு.. என் என்கிட்டே இருந்து அவங்களை பிரிச்சிடாத.. அவங்களுக்காக தான் நான் என் வாழ்க்கையே ஓட்டிட்டு இருக்கேன்.. அவங்க இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சி கூட பாக்க முடியாது.. நீ என்ன சொன்னாலும் கேப்பேன்.. சத்தியமா.. இப்போ என்ன உன் கிட்ட மன்னிப்பு கேக்கணுமா கேக்குறேன்.. என்ன மன்னிச்சிடு.. ப்ளீஸ் என் பசங்களை குடுத்துடு ருத்ரா..” என அழுதவள் கெஞ்சலுடனே அவன் காலடியில் விழுந்தாள்.

ருத்ரன் பதில் பேசுவதற்கு முன்பே வாசலில் “அண்ணா” என்று ஒரு குரல் கர்ஜனையாக கேட்டது. தீர்த்தி நீர்படிந்த விழிகளுடன் பார்க்க, இளங்கோ ருத்ரனை அழுத்தமாய் பார்த்துக் கொண்டு நின்றான். எதற்காக கத்துகிறான் என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் ருத்ரனுக்கு புரிந்தது. இளங்கோவை அழுத்தமாய் ருத்ரன் பார்க்க, அவனோ அதிருப்த்தியுடன் மறுப்பாக தலையசைத்தான். ருத்ரன் செய்யும் செயல் அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ருத்ரன் அமைதியாய் அவனுக்கு கண்ணை காட்ட, இளங்கோ வேறு வழி இல்லாமல் வெளியே சென்றான்.

அவன் சென்றதும், “இங்க பாரு தீர்த்தி.. நீ எனக்காக எதுவும் பண்ணனும்ன்னு இல்ல.. நான் எதையும் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல.. நீ இங்க இருக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா பசங்க உன் கண் முன்ன இனி வர மாட்டாங்க” என அழுத்தமாய் கூறிட தீர்த்தி வெடித்து அழுதாள். ருத்ரனுக்கு தன்னிடமிருந்து என்ன வேண்டும் என்று தெரியாமல் தவித்தாள். அவள் வெடித்து அழுக ருத்ரன் மர்ம புன்னகையுடனே அவளை பார்த்தான்.

உணர்ச்சிகளுடன் விளையாடுவது அவனுக்கு கைவந்த கலை. ஒருவரை அவ்வளவு எளிதாய் கட்டுக்குள் கொண்டு வந்திட முடியாது. அப்படி செய்ய வேண்டும் என்றால், பயத்தை காட்ட வேண்டும்… பயம் தான் மற்றவர்களை ஆட்டிபடைக்க மூலாதாரம் என்று நன்கு அறிந்து இருந்தான். அது தான் அவனின் யுக்தி.

தொழிலில் காட்டியதை இப்பொழுது அவளிடம் காட்டிக் கொண்டு இருக்கிறான். அவளின் உணர்ச்சிகளுடன் விளையாண்டு அச்சத்தை அவளுக்கு கொடுத்து இனி மொத்தமாய் அவளை சொந்தமாக்கிக் கொள்ளவது தான் அவனின் திட்டமே.. சாதாரணமாய் மிரட்டி அவளை ஒப்புக்கொள்ள வைத்தாள் நிச்சயம் தப்பிக்க பார்ப்பாள் என்று அறிந்தவன், இனி அவள் வாழ்க்கையில் அவனை விட்டு அவள் விலகவே நினைக்க கூடாது. அந்த அளவிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என திட்டம் தீட்டி இருந்தான்.

தீர்த்தி அழுதுக் கொண்டே இருக்க, “நீ என்ன அழுதாலும் மனசு மாற நான் பழைய ருத்ரன் இல்ல.. கொஞ்ச நேரத்துல இளங்கோ வருவான்.. அவன் கூட கிளம்பி போய்டு.. என் முகத்தை தான் உனக்கு பாக்கவே புடிக்காதே.. சோ நீ சகச்சிட்டு இங்க இருக்கனும்ன்னு எந்த அவசியமும் இல்ல” என அவள் கொட்டிய வார்த்தைகளே அவன் மீண்டும் கொட்ட தீர்த்தி மேலும் வெடித்து அழுதாள்.

“ருத்ரா ப்ளீஸ்.. என் பசங்களை என்கிட்டே இருந்து பிரிச்சிடாத.. உன்ன கெஞ்சி கேக்குறேன்.. தயவுசெஞ்சி என் பசங்கள பாக்க விடு” என கெஞ்ச,

அவள் முகத்தருகே குனிந்தவன், “நான் ஏன் உன்ன பாக்க விடனும்? அஞ்சு வருசமா என் பசங்களை என்கிட்டே இருந்து மறைக்கல? பசங்ககிட்ட நான்தான் அப்பான்னு சொல்லாதவ இப்போ என்ன இதுக்கு என்கிட்டே கெஞ்சிட்டு இருக்க? பசங்க வாழ்க்கையில நான் இருக்கவே கூடாதுன்னு எந்த அளவு நினைச்சியோ இனி அதே பசங்க வாழ்க்கையில நீ இருக்க மாட்ட” என அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

உதடு கடித்து அழுகையை கட்டுப்படுத்த பார்த்தவள், “தப்பு தான்.. நான் அப்படி யோசிச்சி இருக்க கூடாது.. ப்ளீஸ் அதுக்காக என்ன இப்படி தண்டிக்காத.. நான் உன்ன கெஞ்சி கேக்குறேன்.. பசங்களுக்காக தான் நான் வாழுறேன்” என அவள் கெஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே இளங்கோவும் உடன் வேறு ஒரு நபரும் வந்தார்கள். இளங்கோவை கண்டதுமே ருத்ரன் அவளை அங்கிருந்து துரத்திவிடுவானோ என்ற அச்சத்தில் அவனை பார்த்தாள்.

அவளின் முகத்தாடையை இறுக பற்றியவன், “எந்த தப்புமே பண்ணாத நான் தண்டனைய இத்தன வருசமா அனுபவிக்கும்போது நீ அனுபவிக்குரதுல என்ன இருக்கு சொல்லு” என வார்த்தைகளால் அவளை வதைக்க மேலும் அழுதாள்.

“எந்த கோவமா இருந்தாலும் என்கிட்ட காட்டு.. ஆனா பசங்களை வச்சி விளையாடாத..” என கெஞ்ச, “அப்போ நான் சொல்றத செய்வியா?” என கேக்க உடனே வேக வேகமாய் சம்மதம் தெரிவித்தாள் தீர்த்தி. இது தான் அவன் விரித்த வலை. எப்படியெல்லாம் சிக்க போகிறாளோ..
 
Top Bottom