இடம் வடபழனி முருகன் கோவில்
இன்க் ப்ளூ நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தி கண்களை மூடி மனமுருகி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள் தீர்த்தி. அவளுக்கிருக்கும் பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கடவுளிடம் மன்றாடி வேண்டிக் கொண்டிருந்தாள். அருகே ஆள் அரவம் உணர, கண்களை திறக்க வெள்ளை வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல் ஜம்பமாய் வந்து நின்றான் ருத்ர வேலன். கை நிறைய மல்லிகை பூவுடன் அவளை பார்த்து முறுவலிக்க அவளோ பதட்டத்துடன் லேசாக சிரித்தாள்.
“என்ன ஆச்சு தீரா? ரொம்ப பதட்டமா இருக்க? அவசரப்படுரோம்ன்னு பீல் பண்றியா?” சற்றே வருத்தம் கலந்த குரலில் கேக்க, அவனை கையேடு ஓரமாக அழைத்து சென்றவள், “ஐயோ அதலாம் இல்ல.. நான்தானே இன்னிக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்.. அப்பறம் எப்படி நான் அப்படி யோசிப்பேன்? எல்லாம் கல்யாணம் பதட்டம்.. அதுவும் இல்லாம அண்ணாக்கு தெரியாம இப்படி பண்றோம்.. ஊர் முழுக்க அண்ணாக்கு ஆளு இருக்காங்க.. யாராவது பாத்துட்டா பிரச்சனை ஆகும்.. நீ வேற பூ வாங்க போறேன்னு இவ்வளவு நேரம் ஆக்கிட்ட” என முகத்தை சுருக்கினாள்.
அவள் வாட்டத்தை காண பொறுக்காதவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டு, “சாரி கொஞ்சம் லேட் ஆச்சு.. நீ பயப்புடவே வேணாம்.. என் ஆளுங்க எல்லாரும் கோவிலை சுத்தி தான் இருக்காங்க.. எல்லாமே ரெடி.. இன்னும் ரெண்டு நிமிசத்துல முஹுர்த்தம் நேரம் வந்திடுமாம்.. அய்யர் சொன்னாரு.. அப்பறம் தாலிகட்டி உன்ன பொண்டாட்டி ஆக்கிடுறேன் சரியா?” என கொஞ்சலாக கூற, அவளும் வெட்கப்புன்னகை சிந்தினாள்.
என்ன தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் அவள் அண்ணனுக்கும் அண்ணிக்கும் தெரியாமல் திருமணம் செய்வது அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது.
அவள் கூறும் அனைத்தையும் செய்யும் அவள் தமையன் அவள் காதலை மட்டும் ஏற்க மறுத்து விட்டான்.. அதான் இந்த திடீர் முடிவு.
அவள் அமைதியை பார்த்தவன், “தீரா உனக்கு கில்ட்டா இருந்தா வேணாம்.. எப்போ உன் அண்ணன் சம்மதம் சொல்றானோ அப்போ பண்ணலாம்.. ஆனா உன் அண்ணன் உன்ன வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி குடுப்பேன்னு என்கிட்ட உறுதியா சொன்னான். உனக்கே தெரியும் அன்னிக்கு வீட்டுல என்ன ஆச்சுன்னு.. அவன் கோவத்துல வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டா? வாழ்க்க முழுக்க நீ இல்லையேன்னு வருத்ததுலே வாழ்றது ரொம்ப கொடுமையானது..” வருத்தத்துடன் கூறி முகத்தை சுருக்கினான்.
உண்மையில் தீர்த்தி அண்ணன் அந்த மாதிரி ருத்ரனை மிரட்டவே இல்லை. ஆனால் இனி நடக்கபோகும் பிரச்னையை கருத்தில் கொண்டு தான் அவளை உடனே திருமணம் செய்ய இப்படி ஒரு திட்டம் போட்டான். காதல் மயக்கத்தில் இருப்பவளுக்கு காதலனே பெரிதாய் தெரிந்து விட்டது.
“விடு வேலா.. நம்ம தான் இன்னிக்கு கல்யாணம் பண்ண போறோம்ல.. நான் கொஞ்சம் அண்ணா நினைச்சி வருத்தப்பட்டேன்.. எனக்கு தெரியும் என் அண்ணா எப்படியும் என்ன ஏத்துக்கும்ன்னு..” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கையிலே இளங்கோ ஐயர் அழைத்ததாக கூற இருவரும் அங்கு சென்றார்கள்.
தீர்த்தி தலையில் பூவை வைத்து விட, அய்யர் மாலை கொடுக்க, இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். அந்நேரம் இளங்கோ ருத்ரன் காதில் ஏதோ கூற, அவன் முகம் மாறியது. அவன் முக மாற்றத்தை வைத்தே எதோ சரி இல்லை என்று உணர்ந்த தீர்த்தி என்னவென்று பார்வையாலே கேக்க, மறுப்பாக தலையசைத்த ருத்ரன் அய்யர் மந்திரம் சொல்வதற்கு காத்திருக்காமல் தாலியை பாக்கெட்டில் இருந்து எடுத்து அவள் கழுத்தில் போட்டு விட்டான். தங்க தாலி வாங்கி இருந்ததனால் கட்டும் வேலை இல்லை.
அவன் செயலில் தீர்த்தி திகைத்து போய் பார்க்க, “உன் அண்ணனுக்கு தகவல் தெரிஞ்சிடுச்சாம்.. நம்ம உடனே கிளம்பனும்” என்று கூறி, அய்யர் கத்துவதை கூட காதில் வாங்காமல் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். இருவரின் மாலையை கழட்டியவன் இளங்கோவிடம் கொடுத்துவிட்டு சற்று யோசித்தான்.
“இளங்கோ நானும் அவளும் ஏர்போர்ட் வரோம்.. நீங்க பிளேன்ல வாங்க.. பிரைவேட் பிளேன் ரெடி பண்ணி வைக்க சொல்லு.. கார்ல வந்தா வழியிலே மாட்டிக்க வாய்ப்பு இருக்கு” என்று கூற இளங்கோ மறுப்பு கூறாமல் சம்மதம் தெரிவித்தான்.
தீர்த்தியின் கைகளை பிடித்துக் கொண்டு அங்கிருந்து மெட்ரோ ஸ்டேஷன்க்கு விரைவாக அழைத்து செல்ல அவளும் பதட்டத்துடனே அவனுடன் சென்றாள்.
இருவரும் மெட்ரோவில் பயணித்து ஏர்போர்ட் சென்றார்கள். தீர்த்தி அண்ணனின் ஆட்கள் காரை பின் தொடர்ந்து செல்ல, இவர்கள் இந்த பக்கம் நிம்மதியாய் ருத்ரன் பிரைவேட் பிளேன் இருக்கும் இடத்திற்கு விரைந்தார்கள். பிளேன் உள்ளே வந்து அமர்ந்ததும் தான் இருவருக்கும் ஆசுவாசமாய் இருந்தது.
“உன் அண்ணன் ஊரு முழுக்க தேடிட்டு இருக்கானாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஏர்போர்ட்க்கு வருவான்..” என்று கூற தீர்த்தி கண்கள் அகல விரிந்தது.
“என்ன சொல்ற? நம்ம சீக்கிரம் இங்க இருந்து போகணும்.. அண்ணா பாத்தா அவ்வளவு தான்.. இந்த மாதிரியான நிலமையில என்னால இப்போ அண்ணாவ பாக்க முடியாது” என்க, அவள் தலை முடியை காதருகே நகர்த்தி விட்டு, “ரிலாக்ஸ்.. டேக் ஆஃப் ஆக போகுது.. நீ சீட்ல சாஞ்சி உக்காரு நான் பெல்ட் போட்டு விடுறேன்..” என்று அவளை அமைதிபடுத்தி விட்டு பெல்ட்டை போட்டு விட்டான். அவனும் தயாராகி அமர, பைலட் பிளேனை டேக் ஆஃப் செய்தார்.
ஆரம்பத்தில் லேசான ஆட்டம் காண ருத்ரனின் கைகளை இருக்கமாய் பிடித்துக் கொண்டாள் தீர்த்தி. அவள் செயலில் லேசாய் முறுவளித்தவன், அவளை ரசித்தான். அவன் கட்டிய தாலி வெளியில் தொங்க, அந்த புடவைக்கும் தலை நிறைய மல்லிகை பூவும் அவளிருக்க, அவனை ஒரு மார்க்கமாய் யோசிக்க செய்தது. அதுக்கான நேரம் இது இல்லை என்று தெரிந்தாலும் அவனால் சும்மா இருக்க முடியவில்லை. பிளேன் சீராக செல்ல கண் மூடி அமர்ந்திருந்தவளின் சீட் பெல்ட்டை கழட்டினான்.
அதில் கண்களை திறந்தவள், “என்ன?” என நெற்றி சுருக்க, அவளை இடுப்போடு அனைத்து அவன் மடியில் அமர்த்திக் கொள்ள அதிர்ந்தாள் தீர்த்தி.
“என்ன ருத்ரா பண்ற.. நம்ம பிளேன்ல இருக்கோம்.. விடு” என நெலிய, “பசங்களை எல்லாம் எதுக்கு நான் கழட்டி விட்டு தனியா வந்தேன்? இதுக்கு தான்.. கல்யாணம் ஆகி ரெண்டுமணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள புருசன கண்டுக்காம இருக்க.. கொஞ்சம் கவனிக்குறது” என்று அவள் இடையில் அவன் விரல்களை அழுத்தமாய் பதித்தபடியே கூற, அவன் விழிகள் அவள் இதழை விட்டு நகரவே இல்லை.
அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள், “சும்மா இரு.. உனக்கு எப்போ என்ன பண்றதுன்னு விவஸ்த்தையே இல்ல” என வெட்கத்துடன் சிணுங்கினாள். “இந்த மாதிரி புடவை கட்டி ஆளை மயக்க வேண்டியது அப்பறம் என்ன குத்தம் சொல்ல வேண்டியது.. ராங்கி..” என்றவன் அவள் கன்னத்தை கடித்தான்.
அதில் லேசாய் சிரித்தவள், அவன் நெஞ்சில் தட்டி, “சும்மா இரு டா..” என வெக்கத்தில் சிவக்க, ருத்ரன் அவளை வெகுவாய் ரசித்தான். ஒரு நாள் முழுக்க அவளை பார்க்க சொன்னால் கூட அவன் பார்த்துக் கொண்டே இருப்பான்.
“இப்போ நீ எவ்வளவு அழுகா இருக்க தெரியுமா? இரு” என்றவன் அவள் வெட்க சிரிப்போடு அவன் மடியில் அமர்ந்து இருப்பதை அழகாய் போட்டோ எடுத்துக் கொண்டான்.
“தீரா.. அடிக்கடி இந்த மாதிரி புடவை கட்டு டி.. ரொம்ப அழகா இருக்க.. எனக்கும் வசதியா இருக்கும்” என்க அவன் காதை திருகினாள் தீர்த்தி.
அத்தகைய மகிழ்வான நாட்களை இன்று நினைத்து பார்க்கையில் தீராத வலி மட்டுமே மிஞ்சியது. நினைக்கவே கண்களில் நீர் ஆறாக வழிந்தது. இருவரும் திருமணமான அன்றே அந்தமான் வந்ததும் மாலையும் கழுத்துமாய் இருக்கும் புகைப்படத்தை வீட்டில் அவன் மாட்டி வைத்திருக்க, அதனை பார்த்து வேதனையுடன் அமர்ந்து இருந்தாள். அருகே இருந்த இளங்கோவிற்கு அவள் அழுது கொண்டே இருப்பதை பார்க்க முடியவில்லை.
“அண்ணி” என அவன் மீண்டும் அழைக்க, கண்களை துடைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.
“அண்ணா பேசுறதுக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு குடுங்க அண்ணி..” என இரஞ்சலாக கேக்க, வலி நிறைந்த பார்வையுடன் அவனை ஏறிட்டாள்.
புருவத்தை உயர்த்தியவள், “எப்படி எப்படி.. என் அண்ணன் என் விருப்பம் இல்லாம எனக்கு கல்யாணம் பண்ண ட்ரை பண்ணாரா? எப்பா.. எவ்வளவு பொய்.. பொய்யிலே ஊறி போய் இருக்குறவன் பேச்ச நான் கேக்கனுமா? இன்னும் என்ன எல்லாம் பொய் சொல்லி என்ன கஷ்டப்படுத்த போறானோ.. இன்னும் உங்க அண்ணனுக்கு என்கிட்டே இருந்து என்ன வேணும்? அதான் மொத்தமா எல்லாத்தையும் என்கிட்டே இருந்து எடுத்துட்டானே.. நானும் என் புள்ளைங்களும் இத்தன வருசமா கொஞ்சம் நிம்மதியா இருந்தோம்.. அது அவனுக்கு பொறுக்கலையா? இன்னும் என்ன எல்லாம் திட்டம் போட்டு அவனுக்கு தகுந்த மாதிரி என்ன யூஸ் பண்ண பிளான் பண்றான்? எல்லாமே வேஷம்.. அவன் வார்த்தைய இனி நான் நம்புரதாவே இல்ல” வெறுப்பை உமிழ்ந்தாள்.
இதை எல்லாம் வாசலில் இருந்து ருத்ரன் கேட்டுவிட்டான். இரு கைகளிலும் இரு மகன்களையும் தூக்கிக் கொண்டு வந்தவன், தீர்த்தி பேச்சில் வாசலிலே உறைந்து விட்டான். அருளும், சூர்யாவும் இன்னும் உறங்கவே இல்லை. தீர்த்தியை காணாமல் உறங்க மாட்டோம் என்று அடம் பிடிக்க, வேறுவழி இல்லாமல் அழைத்து வந்து விட்டான். தீர்த்தி பேச்சில் அவனுக்கு கோவம் சுருக்கென்று தலைக்கு ஏற, பல்லை கடித்தபடியே இருவரையும் இறக்கி விட்டான்.
இருவரும் அவள் குரலை கண்டுக் கொண்டு, “அம்மா” என்று கத்தியபடியே அவன் கையை விட்டு இறங்கி உள்ளே ஓடினார்கள். வெறுப்பின் விழும்பில் இருந்தவளின் காதில் அவர்கள் குரல் தேனாய் பாய, உடனே எழுந்து ஓடி வந்த இருவரையும் இறுக்கமாய் கட்டிக் கொண்டாள். இருவரையும் பார்த்த பின்பு தான் அவளுக்கு உயிரே வந்தது போல் இருந்தது. இருவர் முகத்திலும் மாற்றி மாற்றி முத்தங்களை பொழிய, இருவர் சிரிப்பு சத்தமும் வீடே நிறைந்து இருந்தது. ருத்ரன் ஏக்கத்துடன் வாசலில் இருந்தே இதனை பார்த்துக் கொண்டிருந்தான். இவை எல்லாம் எப்பொழுதோ நடந்திருக்க வேண்டியது. பெரும் ஏக்கத்துடன் அவர்கள் மூவரையுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
தீர்த்தி கண்ணீருடன் முத்த மழை பொழிய, சிறுவர்கள் இருவரும் அவளை கட்டிக் கொண்டு மகிழ்ந்தார்கள். “ரெண்டு பேரும் சாப்ட்டிங்களா?” என இருவரையும் அவள் மடியில் அமர்த்திக் கொண்டு கேக்க, “சாப்பிட்டோம் மா.. பிரயு சித்தி தான் ஊட்டி விட்டாங்க” என்று சூரியா கூற புரியாமல் பார்த்தாள் தீர்த்தி.
மூளை ஏதேதோ கணக்கு போட, உடனே பிரயுவை தேடினாள். அந்நேரம் தான் ருத்ரன் வீட்டின் உள்ளே நுழைய, அவனுக்கு பின்னால் பிரயு நடந்து வந்தாள்.
அவளை அதிர்ச்சியுடன் பார்த்த தீர்த்தி, “பிரயு நீ எப்படி இங்க?” என்க, அவளோ இளங்கோவை பார்வையாலே எரித்தாள். தீர்த்தி பார்வை இளங்கோ மீது படிய, அதுவரை பிரயுவை முறைத்து கொண்டிருந்தவன், தீர்த்தி பார்த்ததும் அவளை கண்டு அசடு வழிந்தான்.
“புதுசா இருக்குற எங்ககிட்ட பசங்க ரொம்ப நேரம் இருக்க மாட்டாங்க.. அதான் அவளையும் சேர்த்து தூக்கிட்டேன்.. நான் இல்ல அண்ணன் சொல்லி தான் செஞ்சேன்” என ருத்ரனை போட்டு கொடுக்க, தீர்த்தி முகம் மேலும் இறுகியது. ருத்ரன் பிரயுவிற்கு வழி விட அவளோ ஓடிவந்து தீர்த்தியை அனைத்துக் கொண்டாள்.
“எனக்கு ஒன்னும் இல்ல.. பசங்களும் பயப்புடல.. நீ கவலைபடாத” என ஆறுதல் கூற தீர்த்தி அப்பொழுதிற்கு அதனை ஒதுக்கி வைத்து விட்டு கவனத்தை பிள்ளைகள் மீது திருப்பினாள்.
“ரெண்டு பேரும் ஏன் இன்னும் தூங்கல.. அம்மாவை தேடுனிங்களா?” என இருவரையும் பார்த்து கேக்க, இருவரும் ஒன்று போல் தலை அசைத்தார்கள். “அவன் தான் மா அழுதான்.. நான் பிக் பாய்ல சோ அழல..” என அருள் கூற, பாசமாய் அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.
அதில் லேசாய் பொறாமை கொண்ட சூர்யா, “அம்மா எனக்கு” என அவளை கட்டிக் கொள்ள, அவன் நெற்றியிலும் இதழ் பதித்தாள்.
“அம்மா இந்த ரெண்டு அங்கிளும் பிரயு சித்தி கூட எங்களை ஃப்ளைட்ல கூட்டிட்டு போனாங்க மா.. நாங்க தண்ணில நல்லா விளையாண்டோமே.”
ருத்ரனும் இளங்கோவும் சிறுவர்கள் இருவரையும் திசை திருப்ப செய்த காரியங்களை ஒவ்வொன்றாக சூர்யா கூறிக் கொண்டிருக்க, தீர்த்தி புன்னகை முகத்துடனே கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு கொஞ்சம் கூட ருத்ரன் செய்த காரியங்கள் பிடிக்கவில்லை.
“அம்மா நீங்க சர்ப்ரைஸா டூருக்கு எங்களை கூட்டிட்டு வர சொன்னிங்கன்னு அந்த அங்கிள் சொன்னாரு நம்ம இங்க இருக்க போறோமா மா?” என சூர்யா ருத்ரனை கைகாட்டி கேக்க, தீர்த்தி ருத்ரனையே எரிக்கும் பார்வை பார்த்தாள்.
பிள்ளைகளை ஏமாற்றி அழைத்து வந்த கோவம் அவள் கண்ணிலிருக்க, அவனுக்கு தன் பிள்ளை தன்னை வேற்றாராய் அழைப்பது நெஞ்சை பிழிந்தது. வந்ததிலிருந்து அருளும் சூர்யாவும் அவனை அங்கிள் என்று அழைப்பது அவன் இதயத்தில் முள்ளை குத்துவது போல் இருந்தது. தாம் யார் என்றே பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்காமல் இருந்து இருக்கிறாளே என்ற கோவமும் ஆத்திரமும் அவனுள் போட்டி போட்டுக் கொண்டு வர இது தனக்கு தேவைதான் என்று கட்டுப்படுத்திக் கொண்டான்.
சூர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்க, அவள் வேதனையை புரிந்து கொண்டது போல் அருள், “அம்மா தூக்கம் வருது..” என்றான்.
அப்பொழுது தான் தீர்த்தி ஒன்றை உணர்ந்தாள். வந்ததிலிருந்து அருள் அமைதியாகவே இருக்க அவளுக்கு எதோ ஒன்று சரி இல்லை என்று தோன்றியது. சூர்யா போல் அருள் இல்லை தான். ஆனால் அருளின் இந்த திடீர் அமைதி அவளை யோசிக்க செய்தது.
யோசனையை புறம் தள்ளிவிட்டு, “சரி வாங்க நம்ம தூங்கலாம்” என்று கூறி அவள் ருத்ரனை பார்க்க அவள் கேட்காமலே அவள் பார்வையிலே புரிந்து கொண்டான்.
“கீழ இருக்குற இந்த ரூம்ல பசங்களை தூங்க வை” என புது விதமான அமைதியான குரலில் கூறினான். பிரயு ஆச்சரியமாய் பார்க்க, தீர்த்தி, பசங்க இருப்பதனால் தான் இந்த மென்மை என்று புரிந்து கொண்டாள்.
பிரயுவை பார்த்து தலை அசைத்து விட்டு பிள்ளைகளை உறங்க வைக்க சென்றாள். அடுத்த நொடி ருத்ரன் இளங்கோவிற்கு கண்ணை காட்ட, அவன் பிரயு கையை இருக்கமாய் பிடித்தான்.
“ஏய் என்ன பண்ற? கைய விடு” என கத்த, அவள் வாயை பொத்தினான் இளங்கோ.
“கத்தாத.. அண்ணிக்கு மட்டும் கேட்டுச்சு அப்பறம் கடல்ல தூக்கி போட்டுடுவேன்” என எச்சரித்தவன் அவளை அப்படியே தர தரவென இழுத்து சென்றான். ருத்ரன் தீர்த்தி வருவதற்காய் காத்திருந்தவன், அவன் கண் முன்னே அப்படி ஒன்று நடக்காதது போல் நின்றான்.
பிரயு அங்கு இருந்தாள் தீர்த்தி அவளிடமே ஒட்டிக் கொண்டிருப்பாள் என்று தான் அவளை கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்க ஏற்பாடு செய்து இருந்தான். உள்ளே பிள்ளைகளை உறங்க வைத்த தீர்த்தி, பிரயுவிடம் பேச வெளியே வந்தாள். அவள் காணாது குழம்ப, அவளுக்கு பேச நேரம் கொடுக்காமல் ருத்ரன் அவளை கையேடு அவர்களின் பழைய அறைக்கு இழுத்து சென்றான்.
“கைய விடு என்ன பண்ற நீ” என அவள் திமிர, உள்ளே நுழைந்து கதவை சாற்றியவன் அவளை கதவிலே அணைகட்டினான்.