MPK 02
“ஹலோ! நித்திலன்ர அம்மாவா கதைக்கிறது?” என்றபடி ஆரம்பித்த தொலைபேசி உரையாடலைக் கேட்ட மாத்திரம் சாதனாவின் நெஞ்சம் திக் திக்கென அதிர ஆரம்பித்தது.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
வள்ளுவன் எழுத்தாணி தன் திறமையைக் காட்டி விட்டு எங்கு சென்று ஒளிந்து கொண்டதோ!
அந்தக் குறளின் பொருளை வாழ்நாள் லட்சியமாக ஆக்கிக்கொண்ட சாதனா தான், ‘அப்படியெந்த வாய்ப்பையும் நான் உனக்குத் தரப்போவதில்லை!’ என்ற
கொள்கையோடு பிறந்த மகனை வைத்துக் கொண்டு அனுதினமும் நெருப்புக்குழிக்குள் தலையை விட்டு விட்டு எடுப்பது போல் வெந்து சாகிறாள்.
“உங்கட மகன் கிரவுண்ட்ஸ்ல தன்னோட போட்டிக்கு ஓடின ஆதவனைத் தள்ளி விழுத்தீட்டான். அந்தப் பிள்ளைக்கு தலையில ரெண்டு தையல் போடுற அளவுக்குக் காயம். அவேன்ர அப்பா இஞ்ச ஸ்கூலுக்கு வந்து பிரச்சனைப்படுறார். நீங்க இங்க வரேலுமோ இப்ப?”
ஆசிரியர் குரலில் வெறுப்புணர்வை மறைத்துக் கொண்டு பேசுகிறார் என்று தெளிவாகப் புரிந்தது அவளுக்கு.
இத்தனை நாட்களும் பக்கத்தில்
இருந்த பிள்ளையின் பென்சிலை உடைத்து விட்டான், இரேசரை பிய்த்து எறிந்து விட்டான், இதற்கும் கொஞ்சம் மேலென்றால் அடித்து விட்டான், கிள்ளி விட்டான் என்றுதான் புகார்கள் வந்திருக்கிறது.
ஆனால் இன்று? நினைக்கவே பதறியது. அந்தப் பிள்ளையின் பெற்றோர் இடத்தில் இருந்து யோசித்தவள், யார் பிள்ளை, பிள்ளைக்கு இப்போது சுகம் எப்படி என்று அவள் பதறி விசாரிக்க…
வகுப்பாசிரியரோ ‘எதுவென்றாலும் பள்ளிக்கு வந்து பேசிக்கொள்ளுங்கள்’ என்று விட்டு வைத்து விட்டார்.
வேறு வழியின்றி டொக்டரின் மனைவியிடம் தன் நிலைமையை எடுத்து சொல்லி, இரண்டுமணி நேர
விடுப்புக் கேட்டவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.
அவரிடம் இருந்து பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்ளக் கண்ணீரை ஆயுதமாக்கவில்லை. பரிதாபமான அவள் நிலை கொடுத்த அழுத்தத்தில் அவள் நெஞ்சம் விம்மி வெடிக்காமல் இருக்கக் கண்ணீர் துணை செய்தது.
அவளைப்பற்றி நன்கு தெரிந்த ராணியம்மாவும், “எதுக்குப் பிள்ளை இப்ப இந்த அழுகை? உன்னைத் தைரியமான பிள்ளை எண்டு நான் எல்லாருக்கும் சொல்லுறனான். நீ என்னடாவெண்டா? கண்ணைத் துடைச்சுப்போட்டுப் போய் அடுத்த வேலையைப் பார், போ.” என்று மனிதியாய் அவளைத் தட்டிக் கொடுத்தவர், மருத்துவமனை ஓனரின் மனைவியாக,
“உனக்குப் பதிலா சௌமிய நிக்க விடுறேன். அவாவால கனநேரம் சமாளிக்க ஏலாது. அதால நீ ரெண்டு மணித்தியாலத்துக்குள்ள இங்க வந்திருக்கோணும்.” என்றும் சொல்லி அனுப்பினார். சௌமி அவரின் தங்கையின் மகள்.
சரியென்று அவருக்குத் தலையாட்டி விட்டுத் தன் வெகோ ஸ்கூட்டரில் பறந்தாள் அவள்.
*************************
“இந்த வீட்டில எல்லாத்துக்கும் நான் தான் சாகோணும். லைட்டு போடக் கூட ஒருத்தரும் கை வளைக்காயினம்.”
இருள் விழுங்கியிருந்த வீட்டைக் கண்டு சலித்தபடி சுவரில் இருந்த
மின் ஆளிகளில் தன் கோபத்தைக் காட்டினார் சுதா.
வெளிச்சம் வீட்டை நிரப்பியதும் மகளைக் கத்தி அழைக்கப் போனவர், விறாந்தையின் மூலையில் முகம் இறுகி தலை சிதம்பி, ஒற்றைக் கையால் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த மகளைக் கண்டு துணுக்குற்றார். அடுத்து அவர் கண்கள் தேடியது பேரனைத்தான்.
அவள் இருந்ததற்கு எதிர் மூலையில் கைகால்கள் முழுதும் இரத்தநிற தழும்புகள் சுமந்தபடி விறைத்துப் போய் அமர்ந்திருந்தான். அவன் முன்னே குச்சி குச்சியாய் சிதறிய நிலையில் கொய்யாத்தடி.
ஏழு வயது சிறுவன்… தாய் அடித்தால் எப்படிக் கத்தி அழுதிருக்க
வேண்டும்? ஆனால் நித்திலன் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. இந்த வயதில் இவ்வளவு அழுத்தம் அவனுக்கு எங்கிருந்து வந்தது என்றுதான் தெரியவில்லை.
இருவரையும் பார்த்த சுதா, தான் எதையுமே பார்க்காதது போல் அடுப்படிக்கு நகர, அவரின் செயல் ஏற்கனவே வேதனையில் இருந்த சாதனாவை இன்னும் வேதனைப்படுத்தியது.
உறவுகள் இருந்தும் இல்லை என்ற நிலை. இதற்கு எதற்கு இவர்களோடு இருக்கவேண்டும் நான்? தனியாக ஒரு குடிசை போதாதா?
‘தனியான குடிசை உனக்கு மட்டுமல்ல, உன்னைத் தவறாக அணுக முயல்பவருக்கும் கூட நல்ல வசதி தான்.’
மனசாட்சியின் குரலுக்கு அடங்கியவள்,
மனது கேளாமல் தாயிடம் கேட்டேவிட்டாள்.
“ஏன் அம்மா, இவனும் உங்களுக்குப் பேரன் தானே? இப்பிடி காயப்பட்டுப் போய் இருக்கிறான், என்னண்டு கேட்டு அவனிட்ட கதைச்சா என்ன?”
“ஏன், நான் கதைக்கப் போக, உன்ர பெடியன் மட்டு மரியாதை இல்லாம எனக்குக் கை நீட்டவோ? இதுல இப்ப புதுப்பழக்கம், ஆரேன் எதேன் கதைச்சா, காறி மூஞ்சைல துப்புது.” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கினார்.
‘இது எப்ப?’ என்று அயர்ந்து போனவள், கோபமாக மகனிடம் திரும்பி,
“அம்மம்மா சொல்லுறது உண்மையே? ஆருக்குத் துப்பினனீ?” அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாவது போல் அவள் அதட்டிக் கேட்க,
அவனோ துளியும் பயம் என்பதே இன்றி,
“நான் யதுவை விளையாடக் கூப்பிட்டனான். அவனும் விளையாட வந்தவன். ஆனா துளசி அத்தேன்ர தங்கச்சி, நான் ஊத்தைப் பெடியன், என்னோட விளையாடக் கூடாதாம் எண்டு சொல்லித் துப்பிக் காட்ட, அவனும் என்னைப் பார்த்துத் துப்பிட்டு போட்டான். அதான் நான் ரெண்டு பேருக்கு மேலயும் துப்பினான்.”
‘இந்தா… அடிக்கப் போறியோ, அடி!’ என்ற தோரணையில் சொன்னான்.
சாதனா மகனின் திமிரில் கடுமையாய் முறைத்து விட்டு அதே முறைப்புடன் தாயைத் திரும்பிப் பார்த்தாள்.
“இப்ப விளங்குதோ, ஆருல முதல் பிழை எண்டு? சின்ன பிள்ளையளுக்கு முன்னால பெரியவை பெரியவை மாதிரி நடக்கோணும்.” என்றவள்,
“அதுக்கெண்டு நீ செஞ்சது சரி எண்டு சொல்ல வரேல நான். இந்தப் பழக்கம் இதோட நிண்டுடோனும். இல்லையெண்டு வை, நாக்கை இழுத்து வச்சு சூடு வைப்பன் உனக்கு!” என்று மகனையும் கடுமையாக எச்சரித்தாள்.
“ஓம்.. ஓம்.. உன்ர வெருட்டைக் கேட்டுத் திருந்திற பிள்ளை தான், உன்ர பிள்ளை. உன்னட்ட அடிவாங்கி
அடிவாங்கி அவனுக்கு மரத்துப் போச்சுது. நல்ல போர்டிங்கா கொண்டு போய் சேர்த்து விட்டாத்தான் சரி வருவான்.”
சுதாவின் சொற்கள் மதியம் பள்ளியில் நடந்தவைகளை நினைவுக்குக் கொண்டு வந்த சாதனா,
“இனி அதுதான் செய்யோணும் போல.” என்றாள் பெருமூச்சும், பெருங்கவலையும் சேர.
“நான் ஒரு போர்டிங்குக்கும் போமாட்டேன்.” என்றான் தாயையும் அம்மம்மாவையும் முறைத்து.
“அப்ப, இஞ்ச இருந்து எல்லார்ட உயிரையும் எடுக்கப் போறியோ? உன்னால அக்கம் பக்கத்துல ஒருதரோடயும் ஒற்றுமை இல்லை. நீ
நிக்கிற இடத்துல சின்னனுகளை நிக்க விட யோசிக்குதுகள். பெரியவைக்கும் உன்னைக் கண்ணுல காட்டக் கூடாது. பிள்ளையள் எண்டா குழப்படி இருக்கத் தான் செய்யிறது. அதுக்கெண்டு இந்த வயசுல இப்பிடி ஒரு கேடுகெட்ட தனத்தோட ஒருத்தனையும் நான் காணேல. இவனை இப்பிடியே விட்டியெண்டா, இன்னும் ரெண்டு வருஷத்துல பொட்டலம் கை மாத்த வெளிக்கிட்டுடுவான். பிறகு பொலிஸுக்கும் கோர்ட்டுக்கும் தான் அலைவ நீ”
“அம்மா! என்ன கதை அம்மா கதைக்கிறீங்க? அதுவும் அவனை வச்சுக்கொண்டு? இவனைப் பற்றி வெளில ஆர் என்ன கதைச்சாலும் நீங்க இப்பிடிக் கதைக்கலாமோ?” அதட்டல் பாதியும் ஆதங்கம்
பாதியுமாகக் கேட்டாள்.
“ஏன், நான் சொல்லாட்டி உன்ர பெடியனுக்கு ஒண்டும் தெரியாதோ? இந்த வயசுல எங்களுக்குத் தெரியாததெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். நீ தான் உன்ர பிள்ளையை உத்தமன் எண்டு நம்புறாய். ஒண்டு சொல்லுறன், கேட்டா பிழைப்பாய், இல்லாட்டி என்னண்டாலும் செய், உங்களோட தொடர்ந்து கத்த என்னால ஏலாது. எவ்வளவு வேளைக்கு இவனைக் கொண்டு போய் போர்டிங்ல போடுறியோ, அவ்வளவுக்கு உன்ர பிழைப்பு வெளிக்கும். எங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.”
“உங்களுக்கு நிம்மதி இல்லாட்டி, பிரணவன்ர ஆச்சி மாதிரி நீங்க போய் கைதடில சேருங்கோ. என்னை ஏன் போர்டிங் போகச்
சொல்லுறீங்கள்? இது என்ர அம்மான்ர வீடு. நான் இங்க தான் இருப்பன்!” என்றவனின் பேச்சில் தாய் மகள் இருவரும் ஸ்தம்பித்துப் போயினர்.
சாதனா திரும்பித் தாயைப் பார்த்தாள். அவர் முகத்தில் அழுகையும் ஆத்திரமும் போட்டி போட்டு நின்றது.
“பார்! பார்!! எப்பிடிக் கதைக்குது உன்ர பிள்ளை? அம்மம்மா எண்டு கொஞ்சமெண்டாலும் மரியாதை இருக்கே? என்னை முதியோர் இல்லத்துல சேர்க்கட்டாம். என்ர கடவுளே! இதையெல்லாம் நான் கேக்கவோ அப்பா, என்னை விட்டுட்டு நீ முன்னுக்கு போனனீ? என்னையும் கூட்டிக் கொண்டு போய் இருக்கலாமே!” என்று சாதனாவிடம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முன்பு சிறுநீரகக் கோளாறால்
இறந்து போன கணவனிடம் முடித்தார் சுதா.
தாயின் இந்த அழுகை, நடந்ததை தமையன் மற்றும் தம்பியிடம் சொல்லும் வரை ஓயாது என்று சாதனாவுக்குத் தெரியும். அதனால் அவரை சமாதானம் செய்ய வீணாக எந்த முயற்சியும் எடுக்காத சாதனா, மகனைத் திருத்தும் முயற்சியில் அவன் முதுகை இலக்காக்கினாள்.
“உனக்கு எவ்வளவு அடிச்சாலும் திருந்த மாட்ட என்ன? ஆரோட என்ன கதை கதைக்கிறாய்? உன்ர அம்மம்மா அவா. இனி உன்னைத் திருத்த என்னாலயும் ஏலாது, நான் சாகப் போறேன். உன்னை விட்டுட்டு செத்தா, இஞ்ச நீ எல்லாரின்ர கையிலையும் இடி படுவ! அதைப் பார்த்தா செத்தும் எனக்கு நிம்மதி இருக்காது. நான் போனா
உன்னையும் சேர்த்துக் கொண்டுதான் போவன்.” என்று சரமாரியாக அடிக்க, வலியில் வாயை வெம்பியபடி அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டிருந்தவன், முடியாது என்ற நிலையில், “ம்மாஆ!” என்று தீனமாய் முனக, சாதனாவின் கையோடு உயிரும் சேர்ந்து ஓய்ந்து போனது.
தாய் அறியாத சூலா? அவ்வளவு விரைவில் வலியை வெளிக்காட்டி விடுபவன் அல்லவே மகன்? தன் அழுத்தங்கள், அவன் மேலான அடுத்தடுத்த முறைப்பாடுகள் ஒன்று சேர, இன்று அளவுக்கு அதிகமாக அவனை நையப்புடைத்து விட்டோம் என்று புரிந்து மனம் கனத்துப் போனாள்.
அவனை அணைத்து, ‘அப்பு செல்லம் அம்மாவை மன்னிச்சுக் கொள்
தங்கம்’ என்று கதற மனம் உந்தியும் அதைச் செய்யாது கைகளை உடலோடு இறுகக் கட்டிக் கொண்டு அமைதியாக அவனை வெறித்தாள்.
அடித்தே திருந்தாத மகனுக்கு தண்டனை கொடுத்த அடுத்த நிமிடமே தயவைக் காட்டினால் அவனுக்கு இன்னுமே சுதியாகிப் போகும் என்று மனதைக் கல்லாக்கி அமர்ந்திருந்தாள்.
நித்திலனும் அவளிடமிருந்து அப்படி ஒன்றை எதிர்பாராதவனாக, வெற்றுத் தரையிலேயே உடலை சுருட்டிப் படுத்துக் கொண்டவன் அடிவாங்கிய அசதியில் உறங்கியும் போயிருந்தான்.
அவன் நன்றாக உறங்கியது தெரிந்ததும் அவனை நெருங்கிய சாதனா, தானும் அவனருகிலேயே
சரிந்து கொண்டவள், மகனைக் கட்டிக் கொண்டு சத்தம் வராமல் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
நாடியைத் தாண்டிக் கழுத்துக்குள் வழிந்த கண்ணீரோடே எழுந்து சென்று மருந்தை எடுத்து வந்தாள். அவன் உறக்கம் கலையாதவாறு மெல்ல அவனை எடுத்து மடிக்குள் போட்டுக் கொண்டவள், அழுகையோடே அவன் தழும்புகளுக்குக் களிம்பு பூசிவிட்டாள்.
‘ஏன் தம்பு, இப்பிடி என்னையும் உன்னையும் சேர்த்து வதைக்கிறாய்? அம்மாக்கு உன்னை விட்டா ஆர் தங்கம் இருக்கினம்? நானே உன்னை எப்பிடி அடிச்சிருக்கன் எண்டு பார். உன்ர ஆக்கினை தாங்காம உன்னை அடிச்சுப் போட்டு, நான் கலங்குற கலக்கமெல்லாம் உனக்கு எங்க
தெரியப் போகுது? ஆனா உனக்கு அம்மா எண்டா கொடுமைக்காரியா மட்டும்தான் பதிஞ்சிருக்கும் என்ன?
உன்ர அப்பன் அந்தக் கேவலங்கெட்டவனிட்ட இருந்து விவாகரத்து வாங்க நான் எவ்வளவு கரைச்சல் பட்டனான் தெரியுமோ உனக்கு? எல்லாம் என்னத்துக்கு, அவன்ர நிழல்ல உன்னை வச்சு அவனை மாதிரி நீ வளரக்கூடாது எண்டு தானே? ஆனா நீ எங்க இருந்தாலும் அவன்ர பிள்ளை தான் நான் எண்டு காட்டுற மாதிரி தான் ஒவ்வொண்டும் செய்யிறாய்! எனக்குப் பயமாக் கிடக்கு தம்பு. வளர வளர நீ எப்பிடி வரப் போறாய் எண்டு! டைவர்ஸ் எண்டு கேட்டு நிண்ட அண்டைக்குத் தான் உன்ர அப்பன்ர முழு சுயரூபத்தையும் கண்டன் நான். அப்பிடி நீயும் வளர்ந்து நிண்டா என்ன செய்வன் நான்?’
கரம் பாட்டுக்கு மகனின் காயங்களுக்கு மருந்து போட, மனம் அதுபாட்டுக்கு தனக்குள் ஆற்றவே முடியாது சீழ்ப் பிடித்துக் கிடக்கும் காயங்களை, மருந்தோடு மருந்தாக மகனுக்குள் புகுத்தி விடும் தவிப்போடு புலம்பிக் கொண்டிருந்தது.
என்ன பிரயோஜனம்? விழித்திருக்கும் போது சொன்னாலே செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இதில் உறக்கத்தில் இருக்கும் போது… ம்ஹூம்…
மருந்து பூசி முடித்தாயிற்று. அடுத்த கவலை அவன் இன்னும் சாப்பிடவில்லை என்றதில் வந்து நின்றது. இப்போது எழுப்பிக் கொடுத்தாலும் உண்ண மாட்டான். பசி இருந்தாலும் பிடிவாதமாக மறுப்பான். பிறகு அதற்கும் தனக்குக்
கோபம் வரும். இரண்டு சாத்த சொல்லிதான் மனம் வரும் என்று அவனை எழுப்பும் யோசனையைக் கைவிட்டு விட்டு, விறாந்தையிலேயே மெத்தையை எடுத்து வந்து போட்டு, அவனைத் தூக்கிப் படுக்க வைத்தவள், வழக்கம் போல் பிரிக்காத சொக்லேட் கிரீம் பிஸ்கட் பைக்கட் ஒன்றை அவன் தலைமாட்டில் வைத்தாள்.
பின் என்ன, தன் வயிற்றுக்கும் உணவு வேண்டும் என்பதை மறந்தவளாக, மகனருகில் படுத்தவள், அதீத மன அழுத்தம் காரணமாக விரைவில் உறங்கியும் போனாள்.