MPK 03
மறுநாள் விடியலில் வழக்கம் போல்
வீசப்பட்டிருந்த வெறும் பைக்கட்டைப் பார்த்து, புன்னகை பூசிக் கொண்டது அவள் முகம்.
“கள்ளன், எப்ப எழும்பி சாப்பிடுறான் எண்டு தெரியுதில்லை. ஒருநேரம் பசி தாங்கமாட்டார், இதில வீம்பு சேருக்கு.” என்று உறங்கும் அவனிடம் செல்லம் கொஞ்சினாள். உறக்கத்தில் மட்டும் தான் இந்த செல்லம் எல்லாம். அவன் விழித்து விட்டால் இவளுள் இருக்கும் கறார் வோர்டனும் விழித்து விடுவார்.
ஆசையாக அவன் தலைமுடியைக் கோதி கன்னத்தில் முத்தம் வைத்தவள், அவன் உடலை ஆராய்ந்தாள். தழும்புகள் முழுதாக குறையவில்லை. ஆனால் வீக்கம் குறைந்திருந்தது.
பெருமூச்சோடே அதைத் தடவிக்
கொடுத்தவளுக்கு அதன் பின் தான் தாயின் நினைவு வந்தது. மகனின் வலியை உணர்த்திய சிறு முனகலில் தாயின் பெரும் ஒப்பாரியை மறந்தே போயிருந்தாள்.
அடித்துப் பிடித்து எழுந்தவள், “அம்மா! அம்மா!” என்று கத்திக் கொண்டே வீடு முழுவதும் தேடி, அவரைக் காணவில்லை என்றதும் வியர்த்துப் போனவள் வெளியே வர, பின் கோடியில் மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார்.
நிச்சயம் இவள் அழைத்தது கேட்டிருக்கும். கோபத்தில் தான் பதிலுக்குக் குரல் கொடுக்கவில்லை என்று புரிய,
“நான் பதறியடிச்சு கூப்பிடுறன், கேட்டும் கேட்காத மாதிரி இருக்கிறீங்கள் என்ன? ஒருக்கா ஓம் எண்டு சொன்னா என்னவாம்?”
என்றாள் எரிச்சல் மிக.
“நீ ஏன் பதறியடிச்சு என்னைத் தேடினீ? உன்ர பெடியன்ர கதையைக் கேட்டு வீட்டை விட்டுப் போயிருப்பன் எண்டோ? நான் ஏன் போகோணும்? இது என்ர மனுஷன் கட்டின வீடு. நான் இங்க தான் இருக்கோணும்.” என்று வேலையோடு வேலையாகப் பதில் சொன்னார்.
“இப்பிடி ஒரு உறுதியோட இருக்கிறது எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, இது உங்களுக்காத் தோணினதா? இல்லா…” என்று கேள்வியாக இழுத்தவளுக்குப் பதில் சொன்னது தமையனின் ஆட்டோ சத்தம்.
ஆக தான் நினைத்தது சரிதான். தாயின் பேச்சு, தமையனின் நச்சு நாவில் இருந்து வந்தவை தான்.
அவன் விடிகாலையில் விரைந்து வந்திருப்பது கூட, தாய் மேலான அக்கறையில் இல்லை. அமைந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தூண்டி விடுவதற்காக என்றும் புரிந்தது.
எனவே அவன் என்ன பேசினாலும் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று தனக்குள் உறுதி பூண்டவள், அவனை எதிர்கொள்ளத் தயாராகவே நின்றாள்.
அதற்குள் சுதர்சன் வட்டிக்காரன் மாதிரி வாசலில் நின்று கத்த ஆரம்பித்திருந்தான். துரை ரோஷபட்டு அவள் வீட்டுக்குள் வராது போய் ஒன்றரை வருடங்கள் மேலாகிறது. தந்தையின் ஒருவருடத் திவசத்திற்குக் கூட வெளியில் பந்தலோடு தன் கடமையை முடித்துக்
கொண்டு போயிருந்தான்.
அன்று சுதா சொல்லி சொல்லி அழுதிருந்தார், இவள் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று.
சாதனா அதற்கெல்லாம் கவலைப்படவே இல்லை. வாசல் மட்டும் ஏன் வருகிறான் என்ற எரிச்சல் தான் மேலோங்கும் அவனில்.
மகனின் குரலில் சுதா பதறி, கறந்தவரை போதும் என்று பால் பாத்திரத்தோடு ஓட, இவள் சாவதானமாக நடந்து வந்தாள்.
“என்ன தம்பி இஞ்ச வந்திருக்கிறாய்? ஓட்டம் ஒண்டும் இல்லையோ?” சுதா நிலைமையை சுமூகமாக்கப் பேச்சுக் கொடுத்தார்.
சாதனா தாயை நினைத்து மனதுக்குள் அசூயை கொண்டாள். பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவிக்கும் குணம். ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒவ்வொரு நடிப்பு.
சுதர்சனின் மனைவி துளசி ஜெகஜால கில்லாடி. அவளின் பிடிக்குள் சுதர்சன் சென்று காலங்கள் ஆகிவிட்டிருந்தது. அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சுதா, சுதர்சன் விரோதியாய் பார்க்கும் சாதனாவைப் பற்றி அவனோடு புறம் பேசி, அவனுக்குத்தான் தன் முதன்மை ஆதரவு என்று காட்டி, அது போல் அவனும் தன்னை முதன்மையாய் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஆனால் சுதர்சன் இன்றுவரை அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததே இல்லை.
தாயின் இத்தகைய செயல், சாதனாவுக்குக் கோபத்தைத் தரும் அதே நேரம் அவர் மேல் பரிதாபத்தையும் தோற்றுவிக்கும்.
தன் பிள்ளைகளைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளவென்று ஒன்றை செய்து விடுகிறார். அதனால் பிள்ளைகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்துகிறோம் என்று அறியாது போய் விடுகிறார்.
தாயின் கேள்வியை எல்லாம் ஒதுக்கிய சுதர்சன், “எங்க அவள்?” என்று ஆவேசமாகக் கேட்டவன், பின்னே வந்தவளைக் கண்டு விட்டு ஏகமாய் எகிறினான்.
“என்ன உன்ர பெடியன் அம்மாவை கைதடில சேர சொன்னவனாம்? என்னவோ இந்த வீட்டை அவன்ர
அப்பன் உழைச்சுக் கட்டின மாதிரியும் அம்மா அதில வந்து உரிமையில்லாம இருக்கிற மாதிரியுமெல்லோ கிடக்கு உங்கட கதை. வீடு எங்கட அப்பா கட்டினதெண்ட நினைவு இருக்கட்டும் எல்லாருக்கும்.” என்றவன் தாயிடம் திரும்பி,
“எல்லாம் உங்களை சொல்லோணும், சீதனம் எண்டு அவசரப்பட்டு வீட்டை இவளுக்கு எழுதிக் குடுத்துப் போட்டு… இப்ப ஒழுங்கா பல்லுக் கூட முளைக்காத பெடியனுட்ட எல்லாம் சொல்லுக் கேளுங்கோ! இவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு சீதனம் ஒண்டு தான் குறச்சல்” என்று கத்தினான்.
“அண்ணா! நீங்க கதைக்கிறதா இருந்தா, அம்மா சொன்ன இப்பத்த கதையை மட்டும் கதையுங்கோ. என்ர
வாழ்க்கைக் கதை எல்லாம் உங்களுக்குத் தேவை இல்லாதது. பிறகு வீட்டை ஆர் கட்டினதெண்டு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அதேமாதிரி வீட்டைக் கட்டின அதே அப்பாதான் தன்ர முழு சுயநினைவோட அதை என்ர பேருக்கு எழுதி வச்சவரெண்டதும் ஞாபகம் இருக்கு, நான் வாழ்ந்த வாழ்க்கை லட்சணம் தெரிஞ்சும் சாகிற வரைக்கும் திருப்பி வீட்டை மாத்தி எழுதித் தா எண்டு அவர் கேட்காததும் எனக்கு நல்லா ஞாபகத்தில இருக்கு. உங்களுக்கு இல்லாட்டி நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்கோ.” என்றாள் அமைதியான அழுத்தமான குரலில்.
“உனக்கு இப்பிடிக் கதைக்க வெக்கமாயில்லையோ? கல்யாணத்துக்குத் தானே சீதனம் தந்தவை. அந்தக் கல்யாணம்
வேண்டாம், மனுஷன் வேண்டாம் எண்டுட்டு வீட்டை மட்டும் வேணுமெண்டு நிக்கிறாய். நாங்கள் என்ன உன்னை ஒண்டும் இல்லாம விடவே வீட்டை அம்மான்ர பேருக்கு எழுதெண்டு சொல்லி நிக்கிறம்? இதை அம்மான்ர பேரில எழுதினா உனக்கெண்டு நான் வேண்டி வச்சிருக்கிற ஒரு காணியைத் தருவன். மனுஷன் விட்டுட்டு இருக்கு, வீடில்லை எண்டு உனக்கு ஈசியா வீட்டுத்திட்டம் கிடைச்சிடும். அதோட நானும் கொஞ்சம் காசு உதவி செய்வன். இவ்வளவும் ஒண்டும் நான் எனக்காகக் கேட்கேல. இப்ப எனக்கு நானிருக்கிற துளசின்ர வீடு கிடக்கு. உனக்குப் புதுசாக் கட்டுற வீடு வந்தா அம்மா பிறகு தன்ர பேரில இருக்கிற இந்த வீட்டை நகுலனுக்குக் குடுப்பா தானே? மூண்டு பேருக்கும் நல்லது நினைச்சு நான் சொன்னா, நீ கேட்டால் தானே?
அண்ணா எண்ட மதிப்பு மண்ணுக்கும் இல்லை. ச்சீ.. காசுப் பேய் பிடிச்சு ஆடுற.”
இவனைத் தெரியாதவர்கள் யார் கேட்டாலும் இவனின் பேச்சில் மயங்கி, ‘சகோதரங்களுக்கு நல்லது செய்யிறதுல இப்படி ஒரு அண்ணனா?’ என்று மூக்கின் மேல் விரல் வைப்பர்.
ஏன், அவனைப் பத்துமாதம் சுமந்து பெற்ற தாய் கூட ஒன்றரை வருடங்களுக்கு முன், அதாவது தந்தை இறந்து ஆறாவது மாசியம் குடுத்த அன்று இவன் முன்வைத்த இந்த திட்டத்தை அப்படியே நம்பி, ‘நீ அண்ணா சொல்லுற மாதிரி செய்யேன் பிள்ளை!’ என்றிருந்தாரே!
ஆனால் சாதனாவிடம் இந்த ஜாலங்கள் பலிக்காது. கணவனின்
துரோகத்தின் பின் எந்த மனிதரையும் ஆராயாது நம்புவதில்லை அவள்.
ஆராய்ந்து முடிவு நல்லவிதமாகவே வந்தாலும் அவர்கள் மேல் அவள் வைக்கும் நம்பிக்கையின் எல்லை, அவளுக்கு எந்தப் பாதகமும் வரவிடாத அளவு தான் இருக்கும்.
அதனால் தான் அண்ணனை அன்றே எதிர்த்திருந்தாள். இது என் வீடு. நீங்கள் தங்கத்தில் மாளிகை கட்டித் தருவதாக இருந்தாலும் இதை யார் பெயருக்கும் மாற்றிக் கொடுக்கமாட்டேன் என்று விட்டாள்.
கூடப் பிறந்த தமையன் பேச்சுக்கு மரியாதையில்லை. இனி உன் வீட்டு வாசல் படியை மிதிக்க மாட்டேன் என்று அன்று போனவன் தான். அதன் பின் இப்படி எதுவும்
பிரச்சனை என்றால் மட்டும் வந்து வாசல்படியில் கால் படாமல் சண்டை இழுத்துவிட்டு செல்வான்.
“ஓம். எனக்கு வெக்கம் இல்லை. காசு, பணம், இந்த வீடு தான் முக்கியம். இதைத் தான் நான் அண்டைக்கே சொல்லிப்போட்டனே பிறகேன் அடிக்கடி வந்து கேக்கிறீங்கள்?”
“வாய்.. வாய்.. இந்த வாயால தான் உன்ர வாழ்க்கை இப்பிடி அந்தரத்தில நிக்குது. அப்பிடி இருந்தும் நீ அடங்கேல என்ன?”
“ஹூம்..” ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்த சாதனாவின் பார்வை தாயிடம் திரும்பியது.
“தங்கச்சி கெட்டு நொந்து நிண்டா, ஒரு அண்ணன் எவ்வளவு வேதனைப்படுவான்? ஆனா இஞ்ச உங்கட பிள்ளையே என்னைப்
பழிக்குது. இப்பிடிப்பட்ட சகோதரத்தை நம்பியோ என்னை வீட்டை எழுதிக் குடுக்க சொன்னிங்கள்?” என்றவள் தாய் எதுவோ பேச எடுக்கும் முன்,
“நீங்க ஆர் என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்லை. எனக்கெண்டு இருக்கிறது இந்த வீடொண்டு தான். நான் இப்ப உழைக்கிறது அண்டை அண்டை செலவுக்கே சரியாப் போகுது. நாளைக்கு எனக்கு ஏதேன் பெருசா நோயோ துன்பமோ ஒண்டு வந்தா அதுக்கு செலவழிக்கவோ, என்னை வச்சுப் பார்க்கவோ நீங்க ஒருத்தரும் முன்னுக்கு வர மாட்டிங்கள். வைத்தியம் பார்க்காம நான் செத்தா, என்ர பிள்ளை அநாதையா போயிடும்.
உங்கட பார்வையில அவன் கழிவுப்
பிள்ளையாவே இருந்தாலும், அவன் என்னை நம்பிப் பிறந்திட்டான். அவன் தன்னைப் பார்க்கிற அளவு வளருற வரைக்கும் அவனை வளர்த்து விட வேண்டியது என்ர பொறுப்பு. அதுக்கு நான் இருக்கோணும். நாளைக்கு எனக்கு ஒண்டெண்டா வித்துப்போட்டோ ஈடு வச்சுப்போட்டோ செலவழிக்க, எனக்கு இந்த வீடு முக்கியம். ஆர் சாகப் போறேன் எண்டு நிண்டாலும் இதை நான் தரமாட்டேன்.” என்றாள் உறுதியும் இறுதியுமாக.
“என்னடி கதைக்கிறாய் நீ? அப்பிடி உன்னை விட்டுடுவமோ நாங்கள்? அப்பிடியே எண்டாலும் அவன் உனக்கு வேற காணி தாரன் எண்டு தானே சொல்லுறான்? கதை விளங்காம கண்டபாட்டுக்குக் கதைக்காத!”
“நீங்க தானம்மா கதை விளங்காமக் கதைக்கிறீங்கள். வீட்டை வேண்டிப் போட்டு காணி தாறாராம். சரியெண்டு நான் மாத்திக் குடுத்து வேண்டினாலும் எனக்கு வீட்டுத்திட்டம் வரும் எண்டு என்ன நிச்சயம்? ஏற்கனவே வந்தவையின்ர வீடே கூரை வேலைக்குக் காசு போடாம குறையில நிக்குது. அப்பிடி ஏதேன் நடந்தா நியாயம் தர்மம் எண்டு திரும்ப இந்த வீட்டை எனக்கு எழுதி விடுறாக்களோ இவை? இப்ப வீடு அம்மான்ர பேர்ல தானே கிடக்கு, மூண்டு பிள்ளைகளுக்கும் சமமா பிரிப்போம் எண்டு தான் நிப்பினம். நீங்களும் என்னைப் பற்றி யோசிக்காம, ஆம்பிளை பிள்ளையள் எண்டு அவேன்ர பக்கம் தான் நிப்பீங்கள்!” என்று தன்னை சுற்றி உள்ளவர்களைப்
பற்றி நன்கு அறிந்து சொன்னவள் தொடர்ந்து,
“இண்டையோட இந்தக் கதையை விட்டுடுங்கோ. அப்பிடி ஒருவேளை நான் தான் அடாத்தா கதைக்கிறன் எண்டா, என்னில கேஸ போடச் சொல்லுங்கோ உங்கட பிள்ளையள் ரெண்டு பேரையும்! சீதனத்துக்குக் குடுத்த வீட்டைத் திருப்பிக் கேட்கிறது தெரிஞ்சா ஜட்ஜே காறித் துப்புவர்.” என்று கேவலமாகத் தமையனை ஒரு பார்வை பார்த்துவிட்டு விட்டு, உள்ளே சென்றாள், மகனை எழுப்பவென.
“என்ன கதை கதைக்கிறாள் எண்டு பாருங்கோவேன் அம்மா. இவளுக்கு… இருக்கட்டும் இந்தமுறை லீவுக்க நகுலன் வரட்டும். அவனோடயும் கதைச்சு, இவளுக்கு ஒரு முடிவெடுக்காட்டி நான் ஆரெண்டு பாருங்கோ.” என்று அவனும் விசைத்துக் கொண்டு
வெளியேற, சுதா தலையில் கை வைக்காத குறையாக நின்றார்.