MPK - 04
“சாம்பசிவம் ஐயா! உங்கட கொப்பியைக் கொண்டு வாங்கோ.”
மருத்துவர் மனோரஞ்சன் இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடக் கூடும் என்பதால் அவருக்காக முன் பதிவு செய்திருந்த நோயாளிகளின் பெயர்களை தன் முன் இருந்த கணினியில் பதிவேற்றிக் கொண்டிருந்தாள், சாதனா.
சாவகச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து அரைக் கிலோமீட்டர் தள்ளி இருக்கும் தனியார் மருத்துவமனை அது. மனோரஞ்சனுடன் இன்னும் ஆறு மருத்துவர்கள் பகுதி நேரமாக
இங்கே பார்வைக்கு வருவதுண்டு.
அதை விட ஸ்கேனிங், லேப், ஃபார்மசி வசதிகளும் இருப்பதால் அதற்குரிய ஊழியர்களும் என்று கிட்டத்தட்ட இருபது பேரின் வேலைத்தளமாக இருந்து வருகின்றது அந்த மருத்துவமனை வளாகம்.
மருத்துவர் மனோரஞ்சன் தான் இதன் ஸ்தாபகர். அவருக்கு வயது ஐம்பத்திரண்டு. அவரின் மனைவி ராணிக்கு ஐம்பது வயது. இருவருக்கும் குழந்தை இல்லை. ஆனால் அதையே நினைத்து அழுத்திக் கொண்டு இருக்காமல், தக்க சந்தர்ப்பத்தில் ஒரு பெண் பிள்ளையைத் தத்தெடுத்து, இன்று அந்தப் பிள்ளை மருத்துவராகும் குறிக்கோளோடு உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவைத்
தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கே வேலை செய்யும் அனைவருக்கும் அவர்களின் கதை அரசல் புரசலாகத் தெரியும். தெரிந்தவர்கள் எல்லோரும், இப்படி சொத்துப் பத்து இருந்தும் என்ன பயன் அனுபவிக்க சொந்த ரத்தத்தில் பிள்ளை இல்லையே என அவர்கள் மேல் பரிதாபம் கொள்ள, சாதனா மட்டும் அவர்களை வானளவு உயர்வாகக் கண்டாள்.
நல்ல குணம் கொண்ட மனிதரை சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைப்பதற்கு அரிதான இந்தக் காலத்தில் தன் கண்ணெதிரே அப்படிப்பட்ட இரு ஜீவன்கள் என்று அவர்களை எண்ணிப் பூரித்துப் போவாள்.
கணவன் வினோதன் மூலம் இந்த வேலைக்கு வந்திருந்ததால், அவனை விவாகரத்து செய்வது என்று முடிவெடுத்த பின், எங்கே வினோதன் முந்திக் கொண்டு தன் மேல் இல்லாத பழிகளைப் போட்டு விடுவானோ, நல்ல மனிதர்களின் மனதில் தன் பிம்பம் பழுதுபட்டு விடுமோ என்றுதானே முந்தி, இவர்களிடம் விஷயத்தை சொல்லி விட்டு, இனி என்னை வேலைக்கு வைத்திருப்பதும் வைத்திருக்காததும் உங்கள் இஷ்டம் என்று விட்டிருந்தாள்.
அவர்களுக்கு வினோதனை அதிக காலம் தெரியும் என்றாலும் சாதனாவைப் பற்றி அதிகமாகத் தெரியும். ஆதலால், உன் சொந்தப் பிரச்சனையால் உன் வேலைக்கு எந்தப் பாதகமும் வராது என்று ஆறுதல் கூறி அவளைத் தொடர்ந்து வேலையில் இருக்கச் செய்தனர்.
அதன் பின் அவள் எண்ணியது போலவே, வினோதன் வக்கிர புத்தியில் இவள் நடத்தை கெட்டவள், வேலையில் இருந்து துரத்தி விடுங்கள் என்று அவர்களை அணுகிக் கூறிய போதும், “எங்களுக்குத் தேவை வேலையில அவா ஒழுங்கா இருக்கிறாவோ இல்லையோ எண்டுறது தான். உங்கட வீட்டுப் பிரச்சனையெல்லாம் இஞ்ச கொண்டராதயும் வினோதன்” என்று அவனுக்குத் தக்க பதில் கூறி அனுப்பியிருந்தனர்.
உண்மையில் அவர்களின் கருணையில் தான் இன்று எந்தப் பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் அவளும் மகனும் உண்டு கொண்டிருக்கின்றனர்.
இல்லையென்றால், இருக்கும்
பிரச்சனையோடு அடுத்து எங்கு வேலை தேடுவது என்பதும் அப்படித் தேடி வேலை கிடைத்தாலும் அந்த வேலைத்தளம் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் அமைந்திருக்குமா என்பதும் பெரும் கேள்வியாக பயமுறுத்தியிருக்கும் அவளை.
சாதனா மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, ராணியம்மா அவளை நோக்கி வந்தார்.
“என்ன பிள்ளை, நேற்று போனது போன மாதிரியே நிண்டுட்ட? நீ இல்லாம சமாளிக்கேலாது சொல்லித்தானே விட்டனான் உனக்கு?”
சாதனா சங்கடமாக அவரைப் பார்த்தவள், “சொறி மெடம். நேற்று ஸ்கூல்ல கொஞ்சம் பெரிய
பிரச்சனையா போயிட்டு.” என்று மேலோட்டமாக நடந்ததை சொன்னவள், தொடர்ந்து…
“பாதிக்கப்பட்ட பிள்ளையின்ர அப்பா பிரச்சனையை முடிக்க விடுறேல்லயெண்டு நிண்டார். அதான் நிறைய நேரம் ஆயிட்டு. அதான் சௌமியை நிக்கேலுமோ எண்டு கேட்டு நிக்கச் சொன்னான்.” என்றாள் பார்வையிலும் மன்னிப்பை யாசித்து.
“ஹ்ம்ம்… என்ன சொல்லுறதெண்டு தெரியேல்ல. நீ உன்ர வாழ்க்கையைப் பாதில துலைச்சுப்போட்டு பெடியனுக்காகக் கிடந்து கஷ்டப்படுறாய். பிள்ளைக்கு அது விளங்கேல. கடவுளின்ர புண்ணியத்துல உன்ர நிம்மதிக்கும் பிள்ளையின்ர எதிர்காலத்துக்கும் கெதியெண்டு ஒரு நல்ல வழி
கிடைக்கோணும்.”
தங்களிடம் வேலை பார்க்கும் பெண்ணுக்காக நல்ல மனதுடன் அவர் வேண்டியது இறைவன் காதுகளில் விழுந்து விட்டது போல. உடனே அதற்கான எதிர்வினையைப் புரிந்திருந்தார்.
நித்திலன் படிக்கும் பாடசாலைக்கும் சாதனா வீட்டுக்கும் இடையில் பத்து நிமிட நடை தூரம் தான். காலையில் சாதனா, தான் வேலைக்கு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் மகனைப் பள்ளியில் கொண்டு போய் விடுபவள், மதியம் பள்ளி முடிந்து, அழைத்துச் செல்லத் தான் வராவிட்டால், இவர்கள் வீட்டருகில் வசிக்கும் மற்றப் பிள்ளைகளுடன் நடந்து வீடு வரப் பழக்கியும் இருந்தாள்.
அப்படி அவன் நடந்து வரும் நாட்களில் சரியாக இரண்டு மணிக்குத் தாய்க்கு அழைத்து அவன் வந்து விட்டானா என்று கேட்டுக் கொள்ளவும் செய்வாள்.
அதன் பின் அம்மம்மா கொடுக்கும் உணவை உண்டு விட்டுத் தாய் வரும் வரை, இல்லாத குழப்படிகளை எல்லாம் செய்து, சாதனா வந்த பின் அவளின் கையில் நையப்புடைக்கப்பட்டு என்று இப்படித்தான் நித்திலனின் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இன்றும் அதேபோல் இரண்டு மணிக்குத் தாய்க்குப் ஃபோன் செய்தவள், மகன் வந்துவிட்டானா என்று கேட்க, அவர் இல்லை என்றதும் கொஞ்சம் பயந்தாலும் ஒரு பத்து நிமிடம் பொறுத்துக் கேட்போம் என்று அழைப்பைத் துண்டித்தவள்,
மனம் கேளாமல், ஐந்து நிமிடத்தில் மீண்டும் அழைத்துக் கேட்டாள்.
மகன் வீட்டுக்கு வந்து விட்டான் என்ற செய்தி கிடைத்த பின் தான் லஞ்ச் டைம் என்ற ஒன்றை அவள் நாள் காணும்.
இன்று மணி இரண்டரையைத் தாண்டியும் அவள் வயிற்றுக்குள் அமிலத்தைத் தவிர எதுவும் இல்லை.
பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் தாய்மாருக்கு எல்லாம் அழைத்துக் கேட்டாயிற்று. அவர்கள் பிள்ளைகள் எல்லாம் வந்து விட்டிருந்தனராம்.
சரியென்று ஆசிரியருக்கு அழைத்துக் கேட்டால், அவரும் எல்லாப் பிள்ளைகளுடனும் தான் அவன் வெளியேறினான் என்று சொன்னார்.
இவளுக்கு வேலையும் ஓடவில்லை. கை காலும் அசைய மாட்டேன் என்றது. ஒரு மாதிரி வியர்த்துக் கொண்டு மயக்கம் வரும் நிலைக்கே சென்று விட்டிருந்தாள்.
‘நேற்று சரியா அடிச்சிட்டேன் எண்டு என்னை வேண்டாம் எண்டு ஓடிப் போயிட்டானோ? இல்லாட்டி… என்னவேன் செய்து… ஐயோ! கடவுளே!! அப்பிடி எதுவுமெண்டா என்னைக் கொண்டு போட்டு அவனை விட்டுடு ஆண்டவா! இல்லையே… அப்பிடி விட்டாலும் அவன் கதியில்லாமத் தானே நிப்பான்! வேண்டாம்… வேண்டாம்… உன்னால எங்கள் ரெண்டு பேருக்கும் படியளக்கேலும் எண்டா ரெண்டு பேரையும் இந்த உலகத்தில வச்சிரு. இல்லாட்டி, ரெண்டு பேரையும் உன்னட்ட கூப்பிட்டிடு.’
மனப் பிறழ்வு வந்தவள் போல் மனதுக்குள் ஒப்பாரி வைத்துக் கொண்டு வெளியே வெளிறி நின்றிருந்தவளைக் கண்ட செவிலிப் பெண் ஒருத்தி தான், அவளில் வித்தியாசம் உணர்ந்து, அணுகி என்னவெனக் கேட்க, பீறிட்ட அழுகையுடன், மகனைக் காணவில்லை என்று சொல்லி மடிந்து அமர்ந்து விட்டாள்.
மூடிய காபினாக அமைந்திருந்த ரிசப்ஷன் செட்டப், ஹொரிடோரில் இருந்த நோயாளர்களுக்கு அவளைத் தெரியவிடவில்லை என்றாலும் அழுகை சத்தம் அவர்கள் காதுகளை எட்டி விட்டது. நிலைமையைக் கிரகித்துக் கொண்ட அந்த செவிலி நிதர்சனா,
“அக்கா! எல்லாரும் இஞ்ச தான் பார்க்கினம்! எழும்பி என்னோட
வாங்கோ..” என்று அவளைத் தோள் பற்றி, ராணி இருக்கும் அறைக்கு அழைத்து சென்று விட, அவரும் பதறிப் போய் விஷயத்தைக் கேட்டறிந்தவர், தன் தங்கை மகள் வரும் வரை நிதர்சனாவை ரிஷப்சனைப் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, சாதனாவை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
டிரைவர் காரை ஓட்ட, பின் சீட்டில் ராணியம்மாவின் அருகில் அமர்ந்து புலம்பிக் கொண்டே வந்தாள், சாதனா!
“எனக்குப் பயமாக் கிடக்கு மெடம்! நேற்று என்ர பிள்ளையை வகை தொகை இல்லாம அடிச்சுப்போட்டன். எவ்வளவு அடிச்சாலும் அழாம விறைச்சுக் கொண்டு நிப்பான். ஆனா நேற்று அழுற மாதிரி
வந்துட்டான். விடிய என்ர மூஞ்சையை நிமிர்ந்தும் பார்க்கேல. சரியான கோவம் போல. இந்த அம்மா எப்ப பார்த்தாலும் அடிச்சுக் கொண்டே இருக்கிறா எண்டு தான் என்னை விட்டுட்டுப் போட்டானோ? என்ர பிள்ளை காவாலியா வளரக் கூடாதெண்டு திருத்தத்தானே அடிச்சனான்?” சொல்லி சொல்லி அழுதாள்.
அவரிடம் எப்போதும் இவள் இவ்வளவு அதிகமாக எல்லாம் பேசியதே இல்லை. முதலாளி என்ற மரியாதையான தூரத்தைப் பேணுவாள். ஆனால் இன்று அவள் இருக்கும் நிலையில் யாரெவர் அருகில் இருப்பதென்றெல்லாம் மறந்து கத்தி அழ வைத்திருந்தது.
ராணியம்மாவுக்கும் அவள் வேதனை விளங்க,
“அழுது அழுது உனக்கு எதுவும் வந்திடப் போகுது பிள்ளை. கொஞ்சம் நிதானமா இரம்மா. பள்ளிக்கூடம் போய் என்னண்டு விசாரிச்சிட்டு அடுத்து என்னண்டு பார்ப்பம்.” என்றவர் கணவனிடமும் எடுத்து ஆலோசனை கேட்டுக் கொண்டார்.
அவர் சொன்னதன் படி சாதனா அழ அழ அவளைப் பொலிஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று முறைப்பாடு கொடுத்துவிட்டு, அவள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடைப்பட்ட இடங்கள் எல்லாவற்றிலும் இவர்கள் ஒருபுறம் தேடித் திரிய, மனோரஞ்சன் பேர்ஸ்னலாக கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஒருபுறம் தேடுதல் வேட்டையில் இறங்க, என்று மாலை மங்கி ஒரு ஆறரை மணி அளவில் ஒரு பற்றைக்குள் இருந்து
நித்திலனை மீட்டிருந்தனர்.