• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 18

STN-116

Active member
MTN 18

இலங்கையின் இதயப்பகுதியான மத்திய மாகாணத்தில், மேகக் கூட்டங்கள் முத்தமிடும் மலைகளுக்கு இடையே எழில் கொஞ்சும் பசுமை அழகுடன் வீற்றிருந்தது கண்டி மாநகரம். அந்த இடத்தின் குளுமையும் அமைதியும் மேகலாவின் மனதிற்குப் பெரும் புத்துணர்வைத் தந்திருந்தது.

விடியற்காலையின் இளஞ்சூரியன் மெல்ல எட்டிப்பார்க்க, அந்த அதிகாலை அழகை ரசித்தவாறு பெல்கனியில் நின்றிருந்தாள் மேகலா. அவளது கையில் ஆவி பறக்கும் ஒரு கோப்பைத் தேநீர். அதன் மிதமான சூடு, அதிகாலைக் காற்றின் சிலிர்ப்பிற்கு இதமாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருந்த பச்சைப்பசேல் என்ற தேயிலைத் தோட்டங்களும், பனிப்போர்வை போர்த்திய மலைச் சரிவுகளும் அவளது கண்களுக்குப் பெரும் விருந்தளித்தன.

இரண்டு நாள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக, மேகலா மற்றும் அவளது தோழிகள் அனைவரும் பாத்திமாவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

அவர்கள் பணியில் அமர்ந்து வெற்றிகரமாக ஆறு மாதங்களைக் கடந்திருந்தனர். இத்தனை மாதங்களில் பல நாடுகள், பல வான்வழிப் பயணங்கள் என விதவிதமான அனுபவங்கள் அவர்களுக்குக் கிடைத்திருந்தன.

அனைவருக்கும் ஒரே நேரத்தில் விடுமுறை கிடைப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒன்று. அப்படி எப்போதாவது அரிதாகக் கிடைக்கும் அந்த விடுமுறை நாட்களை, ஒவ்வொரு தோழியின் சொந்த ஊருக்கும் சென்று அங்கிருக்கும் எழிலை ரசித்து மகிழ்வதில் செலவிடுவதை அவர்கள் தங்களுக்குள் ஒரு எழுதப்படாத விதியாகவே வைத்திருந்தனர்.

அந்த வரிசையில், கடந்த முறை மேகலாவின் ஊரான யாழ்ப்பாணத்திற்குச் சென்று திரும்பியிருந்தனர். இந்த முறை பாத்திமாவின் அழைப்பை ஏற்று, கண்டியின் குளிர்ச்சியை அனுபவிக்கத் தயாராகியிருந்தனர்.

"என்ன மேகி... பகல் கனவா...?" என்று கேட்டபடி பாத்திமா ஆவி பறக்கும் தேநீர்க் கோப்பையுடன் பின்னால் வந்து நிற்க, மேகலா ஒரு மெல்லிய புன்னகையுடன் அந்தப் பசுமை அழகில் மீண்டும் தன்னைத் தொலைத்தாள்.

பயணக் களைப்பில் சுபாவும் நிம்மியும் இன்னும் அறையில் விடிந்ததே தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

"முதல்முறையா இப்படி ஒரு இடத்துக்குத் தனியா வந்திருக்கிறன்... இது கூட நல்லாதான் இருக்கு..." என்று மேகலா நிதானமாகச் சொல்ல,

"இருக்கும்... இருக்கும்... இது எண்ட ஊர் மட்டுமில்லையே... ஏடிட ஊரும் இது தானே... அப்ப நல்லா இல்லாமலா இருக்கும்..." என்று குறும்புடன் கண் சிமிட்டினாள் பாத்திமா.

"சும்மா இரடி... இஞ்ச வாறம் எண்டு சொன்னதுல இருந்தே என்னை வச்சு செஞ்சுட்டு இருக்கிறனீங்க..." என்று தன் இதழ்களில் வழிந்த புன்னகையுடன் அழகாக வெட்கப்பட்டாள் மேகலா.

கண்டியின் அந்த நறுமணம் மிக்க தேநீரும், தூரத்தே கேட்கும் பறவைகளின் ரீங்காரமும், தரிந்துவின் நினைவுகளும் ஒன்று சேர்ந்து மேகலாவை வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்றன.

காலை உணவிற்குப் பிறகு, கண்டியின் இதமான குளுமையை ரசித்தபடி அனைவரும் ஊர் சுற்றக் கிளம்பினார்கள். பாத்திமா உற்சாகமாகத் தனது காரை ஓட்ட, மற்றவர்கள் அரட்டையடித்தபடி பின் இருக்கைகளில் ஏறிக்கொண்டார்கள்.

முதலில் கண்டி ரயில் நிலையத்திற்குச் சென்றவர்கள், அங்கே ஒரு வார விடுமுறையை முடித்துவிட்டு மட்டக்களப்பிலிருந்து புகையிரதத்தில் வந்திறங்கிய சிவாவையும் தங்களோடு ஏற்றிக்கொண்டார்கள். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவாவைக் கண்ட மகிழ்ச்சியில் கார் முழுவதுமே கலகலப்பான பேச்சுகளாலும் சிரிப்பொலிகளாலும் நிறைந்திருந்தது.

"ஒரு வழியா உண்ட அத்தை மகள் ரத்தினத்துக்கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டியா...??? நீ இல்லாம ஊரே வெறிச்சோடி இருக்காமே..."
என்று நிம்மி சிவாவை வாரிவிட, கார் சிரிப்பொலியால் நிறைந்தது.

"அகல்யாவையும் சேர்த்து அழைச்சு வந்திருக்கலாமே டா.." என்று மேகலா கேட்டாள்.

"அதுக்கு அவன்ர மாமா விடோணுமே...”
என்று சுபா வழக்கம் போலத் தனது நக்கலான பாணியில் நகைத்தாள்.

"ஏன் நீ உன்ர பொடிகார்டை கூட்டி வரல...??" என்று சுபாவைத் திருப்பி வாரினான் சிவா.

பாத்திமா வண்டியை கிளப்பியபடி,
"சிவா... நீ டிரைவ் பண்ணுறியா...? என்று கேட்க,

"ஆஹ்... அஸ்கு புஸ்கு... அதெல்லாம் ஏலாது... நீயே ஓட்டு... நான் ஹாயா முன் சீட்ல இருந்து கண்டியை ரசிச்சிட்டே வரப்போறன்... " என்று மறுத்தான் சிவா.

ஆட்டம், பாட்டம் என கார் ஒரு குட்டித் திருவிழா போலவே கண்டியின் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் முன்னேறியது. ஒவ்வொரு திருப்பத்திலும் கண்டியின் இயற்கை எழில் அவர்களைப் பரவசப்படுத்தியது.

திடீரென ஒரு குறுகிய திருப்பத்தில், பாத்திமா சட்டெனப் பலமாகப் பிரேக் போட, டயர்கள் தார்ச் சாலையில் உரசுவது போன்ற பெரும் சத்தத்துடன் கார் நின்றது.

“என்னடி நடந்தது...?” என்று காரிலிருந்த அனைவரும் பதறிப்போய் நிமிர்ந்து பார்க்க, அங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்தப் பளபளப்பான கருப்பு நிறக் காரில் சாய்ந்தபடி, மிக ஸ்டைலாக இரு கைகளையும் குறுக்கே கட்டியபடி நின்றிருந்தான் தரிந்து.

“அது… ஏடி மாதிரி இருக்கே..”
என்று சுபா ஆச்சரியத்தில் கண்கள் விரியச் சொன்னாள்.

“மாதிரி இல்லடி… அவரே தான்..” என்று நிம்மி உறுதியாகச் சொன்னவுடன், அங்கே இருந்த அனைவரின் கவனமும் அந்த திசை நோக்கி திரும்பியது.

பாத்திமா உடனே பின்னால் திரும்பி, “மேகி.. நீயாடி வரச் சொன்ன...?” என்று குறுக்கு விசாரணை செய்ய,

“அச்சோ... சத்தியமா நான் சொல்லேல்லடி... ” என்று பதற்றத்துடன் மறுதலித்தாள் மேகலா. அவளுக்கே இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.

அனைவரது பார்வையும் இப்போது சந்தேகமாக சிவாவை நோக்கித் திரும்ப, அவன் திருதிருவென விழித்தான்.

“ஹிஹி... அது வந்து... நான் தான் லைவ் லொகேஷன் அனுப்பினன்... அவர் மேகலாவ மீட் பண்ணோனும் எண்டு சொன்னவர்... அதுதான்...” என்று அவன் உண்மையை உடைக்க, மேகலாவிற்கு ‘ஐயோடா!’ என்று சங்கடமாக இருந்தது.

அதற்குள் தரிந்து மெல்ல நடந்து இவர்களது காரின் அருகே வந்து நின்றான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த மேகலாவை குறும்பாகப் பார்த்தவன்,

'இறங்கு...' என்பது போல ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கண்களில் சிரிப்புடன் சாடை காட்டினான்.

என்ன செய்வதென்று தெரியாமல் மேகலா நண்பர்களைப் பார்த்தாள்.

'போ…' என்றபடி அவர்களும் குறும்புடன் சைகை காட்டினர்.

மேகலா தயக்கத்துடன் காரிலிருந்து இறங்கினாள்.

தரிந்து நண்பர்களை நோக்கி மரியாதையுடன் புன்னகைத்துவிட்டு,

“நீங்க போங்க… நான் இவவைக் கூட்டிப் போறன்... இண்டைக்கு டின்னர் எங்கட வீட்ல எரேன்ஜ் பண்ணியிருக்கிறன்... நீங்க பார்க்க வேண்டிய இடமெல்லாம் போய் பார்த்துப்போட்டு வாங்க... வீட்டு லொகேஷனை சிவாவுக்கு அனுப்பியிருக்கிறன்…” என்று அன்பு கலந்த கட்டளைத் தொனியில் சொன்னான்.

"திரும்பவும் என்ர செல்லத்தை கடத்திக்கொண்டு போறனீங்க என... என்று சுபா அவனை வேண்டுமென்றே சீண்டினாள்.

அதற்குப் பதில் பேசாமல், ஒரு வசீகரமான புன்னகையை மட்டும் பரிசாகத் தந்துவிட்டு, மேகலாவின் கையை மென்மையாகப் பற்றிக்கொண்டான்.

நண்பர்களுக்கு ஒரு சிறு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு, மேகலாவுடன் கரம் கோர்த்தபடி தனது காரை நோக்கி அவன் நடக்கத் தொடங்கினான்.

அவன் கரத்தின் அந்த இதமான பிடியில், அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே தயக்கத்துடன் நடக்க, அதை ரசித்த நண்பர்களின் வெடித்த சிரிப்புச் சத்தம் கார் முழுவதும் எதிரொலித்து, பின்னால் தேய்ந்து மறைந்தது.

காரைச் மெல்லக் கிளப்பியபடி, “என்ன மெடம்... டல்லா இருக்குறீங்க... பிரெண்ட்ஸோட ஜொல்லியா ஊர் சுத்திப் பாக்கலாம் எண்டு நினைச்சனே... ஆனால் இவன் இப்படி இடையில வந்து அவங்களிட்ட இருந்து என்னைப் பிரிச்சு கூட்டிக்கொண்டு போறானே எண்டு என்ர மேல கோவமா இருக்கிறீங்களோ...?”
என்று அவளது முகம் பார்த்துக் கேட்டான் தரிந்து.

மேகலா அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். “அப்படியொண்டும் இல்ல... நாங்க கண்டி ட்ரிப் பிளேன் பண்ணேக்கயே நினைச்சனான்... எப்படியும் நீங்க எங்களைப் பார்க்க வருவீங்க எண்டு... ஆனால், இப்படி சினிமா ரேஞ்சில காரை இடைமறிச்சு என்னைக் கடத்திக்கொண்டு போவீங்க எண்டு நான் எதிர்பார்க்கேல்ல...” என்று சிரித்தாள்.

அவன் ஒரு நிமிடம் காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, அவளது கைகளைப் பற்றி கெஞ்சலாகப் பேசத் தொடங்கினான்.

“சொறி சுது வலாகுழு... நீ கோவிச்சாலும் தப்பில்ல... ஆனால், எனக்கு வேற வழி தெரியேல்லடி... நாளைக்கு நான் டியூட்டில ஜொயின் ஆகோணும்... இண்டைக்கு இந்தச் சந்தர்ப்பத்தை விட்டா, இனி எப்ப இப்படி ஒரு நேரம் அமையும் எண்டு தெரியாது.... நாளைக்கு முழுக்க நீ உன்ர பிரெண்ட்ஸ்சோட தாராளமா என்ஜோய் பண்ணு... இண்டைக்கு மட்டும் எனக்கே எனக்காக... எங்களுக்காக... என்னோடயே இரன்... அண்டைக்கு காலி ட்ரிப்புக்குப் பிறகு நாங்க பெருசா எங்கயும் நிம்மதியா வெளிய போகவே இல்லை... நீயும் உன்ர அண்ணனுக்கு பயந்து என்னோட வெளியே வாராய் இல்ல...” என்றான் ஒரு சிறு குழந்தையின் ஏக்கத்துடன்.

அவனது பேச்சில் இருந்த அந்தத் தவிப்பும் காதலும் மேகலாவின் உள்ளத்தை உருக்கியது. அவளது முகம் ஒரு தாமரைப் பூவைப் போல மெல்ல மலர,

“இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை தரிந்து... உங்கள எனக்குப் விளங்குது... ஐ கேன் பீல் யூ... எனக்கும் விருப்பமா தான் இருக்கு... இப்படி உங்கட கையப் பிடிச்சுக்கொண்டு மிச்சம் தூரம் போகோணும் எண்டு... ஆனால் எனக்கு பயமாகவும் இருக்கு...” என்றாள், கண்கள் லேசாகக் கலங்க மிக மென்மையான குரலில்.

அவளது புரிதலில் நெகிழ்ந்த தரிந்து, அவளது பயத்தைப் போக்கும் விதமாக அவளது கைகளில் அழுத்தத்தைக் கூட்டி, அவளைப் பார்த்து அழகாகக் கண் சிமிட்டி ஒரு ஆறுதல் புன்னகையை உதிர்த்தான்.

பின் வண்டியை அமைதி தவழும் ‘உடவத்தேகலை சரணாலயத்தை’ நோக்கித் திருப்பினான்.

************************

நகரத்தின் இரைச்சலுக்கு நடுவே, ஒரு பச்சை நிற அமைதிப் பள்ளத்தாக்காய் விரிந்திருந்தது 'உடவத்தேகலை சரணாலயம்'.

அடர்ந்த மரங்கள் போர்த்திய அந்தச் சிறு காட்டிற்குள், பறவைகளின் இனிய ரீங்காரத்தைத் தவிர வேறெந்தச் சத்தமும் இல்லை.

ஒரு மரத்தடியில் அமர்ந்து, மேகலா அங்கிருந்த பறவைகளின் சுதந்திரமான சிறகடிப்பை ரசித்துக் கொண்டிருக்க, தரிந்துவோ அவளது முகத்தில் பரவியிருந்த அந்த அமைதியை, மௌனமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து, காதலர்களுக்கே உரித்தான பேராதனைப் பூங்காவை நோக்கிச் சென்றனர்.

பிரம்மாண்டமான மரங்களின் நீண்ட நிழல்கள் தரை எங்கும் ஓவியம் தீட்டியிருக்க, கைகோர்த்தபடி அவர்கள் நடந்த அந்த நடைப்பயணம் ஒரு கவிதையைப் போல இருந்தது. அங்கிருந்த நிழல் தரும் பெருமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து, கடந்த கால நினைவுகளையும் வருங்காலக் கனவுகளையும் கதைகளாகப் பேசிக் கலைத்தனர். சில நேரங்களில் சொற்கள் மௌனமாக, இன்னும் பல உணர்வுகளைத் தங்களின் ஆழமான பார்வைகளாலேயே பகிர்ந்து கொண்டனர்.

அந்த அமைதியான உரையாடல்களுக்கு இடையே நிகழ்ந்த, எல்லை மீறாத அவனது சிறு சிறு தொடுகைகள் மேகலாவின் உடலில் மெல்லிய சிலிர்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

ஒரு தருணத்தில், அவளை மெதுவாகத் தன் கைவளைவுக்குள் இழுத்து அணைத்துக் கொண்டான் தரிந்து. அவளது காதோரம் குறும்பு செய்த முடிகளை மெல்ல ஒதுக்கிவிட்டு, அவளது முகத்தில் இதமாகத் தன் சுவாசக் காற்றை ஊதினான். அவன் நெருங்காமலேயே அவளுக்குள் காதல் தீயைப் பற்றவைக்க, அந்த லயிப்பில் மேகலாவின் இமைகள் மெதுவாகச் சரிந்து மூடின.

அந்தத் தருணத்தின் மென்மையைச் சிதைக்க விரும்பாதவன், அதற்குமேல் தன் காதலை அடக்க முடியாமல், அவளது நெற்றியில் தனது காதலின் இரண்டாம் அச்சாரத்தை மிக மென்மையாகப் பதித்தான்.

அவன் அதரங்கள் தன் நெற்றியைத் தீண்டிய அந்த நொடி, சிலிர்ப்புடன் விழி விரித்தாள் மேகலா. அவனது காந்தப் பார்வையில் சிக்கியவள், நாணத்தில் செங்கொழுந்தாகித் தலை குனிந்தாள்.

அவளை மேலும் சோதித்துச் சங்கடப்படுத்த விரும்பாதவன், மீண்டும் அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தான்.

இயற்கையின் மடியில் அமர்ந்து தங்களுக்குள் மதிய உணவைப் பகிர்ந்து கொண்ட போது, அந்த இடமே அவர்களின் தூய காதலால் நிறைந்திருந்தது.

மாலை நேரத்தில், புனிதமான தலதா மாளிகைக்குச் சென்று இருவரும் வழிபட்டனர். அங்கிருந்து வெளியே வந்தவர்கள், மாளிகைக்கு அருகிலேயே அமைந்துள்ள கண்டி ஏரியைச் சுற்றி நடைப்பயணம் மேற்கொண்டனர். அந்தி சாயும் வேளையில், ஏரி நீரில் பிரதிபலிக்கும் விளக்குகளின் வெளிச்சமும், குளிர்ந்த காற்றும் அந்த நேரத்தை இன்னும் ரம்மியமாக்கியது.

இறுதியாக, மலை உச்சியில் கம்பீரமாக வீற்றிருக்கும் பஹிரவகந்த புத்தர் சிலைக்கு அருகே அவர்கள் நின்றனர். அங்கிருந்து பார்க்கையில், முழு கண்டி நகரமும் ஒரு அழகிய ஓவியத்தைப் போல விரிந்திருந்தது. மறையும் சூரியனின் செந்நிறக் கதிர்கள் நகரத்தின் மீது படர, அந்த அழகிய சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் மேகலா.

குடும்பத்துடன் ஒரு சுற்றுலாவாக வந்து பார்த்த அதே இடங்கள் தான் இவை. ஆனால் இன்று, தன் காதலனின் கரங்களைப் பற்றியபடி, அவனது தோளில் சாய்ந்து கொண்டு அதே இடங்களை ரசிப்பது, மேகலாவுக்குள் முற்றிலும் புதிய ஒரு உணர்வையும், பரவசத்தையும் தந்தது.

இருள் மெல்லக் கவியத் தொடங்க, ஒரு அழகான நினைவுகளின் பாரத்துடன் இருவரும் தரிந்துவின் வீட்டை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர்.




 

STN-116

Active member
உடவத்தேகலை சரணாலயலம்
IMG_0701.jpegIMG_0702.jpegIMG_0703.jpegIMG_0704.jpeg


பேராதனைப் பூங்கா
IMG_0705.jpegIMG_0706.jpegIMG_0707.jpegIMG_0708.jpeg

தலதா மாளிகை
IMG_0709.jpegIMG_0710.jpeg
 
நீங்கள் கண்டியில் வசிப்பவரோ, அந்த மாதிரி இடங்களை வரைபடம் போட்டு படம் போட்டு காட்டி இருக்கிறீர்கள் ஆனால், கதை நன்றாக போகிறது
 

STN-116

Active member
நீங்கள் கண்டியில் வசிப்பவரோ, அந்த மாதிரி இடங்களை வரைபடம் போட்டு படம் போட்டு காட்டி இருக்கிறீர்கள் ஆனால், கதை நன்றாக போகிறது
இல்லை சிஸ்... ஆனால் போய் இருக்கிறேன்... நன்றி
 

Gowri Karthikeyan

Well-known member
வாவ் எவளோ அழகா இருக்கு பா உங்க ஊர்🤩🤩🤩🤩🤩
அச்சோ அவளோ கண்ணிய காதலனா இருக்கான் தரு❤❤❤❤
 

STN-116

Active member
வாவ் எவளோ அழகா இருக்கு பா உங்க ஊர்🤩🤩🤩🤩🤩
அச்சோ அவளோ கண்ணிய காதலனா இருக்கான் தரு❤❤❤❤
அவன் ரொம்ப கண்ணியமானவன்... நன்றி சிஸ் 😊
 
Top Bottom