• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 18

Vishakini

Moderator
Staff member


மையல் 18

"உலகைத் தழுவும் நள்ளிரவைப் போலே
என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே.." எனத் தொலைக்காட்சியில் இருந்து கசிந்த பாடலோடு இணைந்து கீர்த்தியும் பாடிக் கொண்டிருந்தான்.

கைகள், இரவு நேர உணவு தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தன.

அவனது குரலில் மேகவியின் கவனம் குவிய, கண்கள் அத்திசையில் சென்றது.

நான்கு நொடிகள் கடந்திருக்கும். சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தான் ஆடவன்.

ஏதோ தவறு செய்து அகப்பட்டதைப் போல் விழித்தவள் உடனே வேறு பக்கம் தலையைத் திருப்பிட, "பொண்டாட்டி!"

"என்ன?" என்றாள், அவன் புறம் பாராமலேயே.

"பூண்டு சட்னி அரைக்கலாம்னு இருக்கேன். நைட்டுக்கு தோசை ஓகேவா உனக்கு?"

"ம்ம்.."

"என்ன தோசை வேணும்? முட்டை தோசை, ஆனியன் தோசை, பொடி தோசை, மசாலா தோசை..?" என வரிசையாய் கேட்டிட, தவிர்க்க இயலாது அவனை நோக்கினாள்.

"ம்ம்..?" என்று இரு புருவங்களையும் அரை சென்டிமீட்டர் அளவிற்கு மேல் உயர்த்தி, 'என்ன?' என்பது போல் பார்வையாலேயே கேட்டான்.

"வரிசையா ஒப்பிக்கிற? ஹோட்டல் எதுவும் நடத்துறியா என்ன.?"

சின்னதாய் சிரித்தவன், "இது அப்படி ஒன்னும் கஷ்டமான வேலை இல்லையே.? ஆல்ரெடி சட்னிக்காக வெங்காயம், பூண்டு, தக்காளினு எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருக்கேன். முட்டையை உடைச்சு விடுறது, இந்த வெங்காயத்தை மாவுல கலக்கி ஊத்துறது, அப்படியே பொடியை மேல தூவுறதுனு எக்ஸ்ட்ரா கொஞ்சம் மெனக்கெட்டா வெரைட்டியா சாப்பிடலாமே.?"

"அதுசரி! இந்த வெரைட்டி உனக்கா எனக்கா.?"

"நமக்குப் பொண்டாட்டி! பக்கத்து இலைக்குப் பாயசம்னு வச்சுக்கோயேன்? எனக்குத் தோணுச்சு. அதான் உனக்கும் வேணுமானு கேட்டேன்."

"சாப்பாடுல இதுதான் வேணும்னு அடம் பிடிக்கிற ஆள் கிடையாது நான். சோ, எனக்காகனு நீ எதுவும் ஸ்பெஷலா பண்ண வேண்டாம். உனக்குப் பிடிச்சதை செய். ஐ வில் ஈட்."

"பொண்டாட்டி!" என உரைத்தபடி கீர்த்தி அருகே வர, கேள்வியாய் நோக்கினாள்.

"புருஷனைக் கஷ்டப்படுத்தக் கூடாதுனு நினைக்கிற பார்த்தியா? என்னோட மனசை அப்படியே டச் பண்ணிட்ட, போ! யூ ஆர் சோ ஸுவீட்!" என்று இருபக்க கன்னங்களையும் பற்றி அவன் ஆட்டிட, "ஏய்! ச்சீ விடு!" எனத் தட்டி விட்டாள்.

"என்ன பொண்டாட்டி?"

"எதுக்கு இப்ப என்னை டச் பண்ண?"

"அச்சோ! அப்ப நேத்து கட்டிப்பிடிச்சது தப்பில்ல. இன்னைக்குக் கன்னத்தைப் பிடிச்சது தான் தப்பா..?"

அவள் புரியாமல் பார்க்க, "என்ன மறந்துட்டியா.?"

'தன்னை வைத்து ஒப்பந்தம் பேசி இருக்கிறான்!' என அறிந்து சினம் கொண்டவளிற்கு அதன் பின்பான நிகழ்வுகள் எதுவும் கருத்தில் பதியவே இல்லை. அத்தோடு சற்று முன்னர் தோழி தாரிகாவின் வீட்டில் இருந்த பொழுது தோன்றிய இல்லறத்தைப் பற்றிய எண்ணம் வேறு அவளது சிந்தனையை ஆக்கிரமித்து இருந்ததால், ஆடவனின் முதல் அணைப்பு என்ற சொல்லின் பொருளும் பிடிபட மறுத்தது.

"கட்டிப் பிடிச்சியா.?"

"பார்த்தியா? மறந்துட்ட! நம்மளோட ஃபர்ஸ்ட் ஹக் பொண்டாட்டி. எப்படியான ஒரு ஸுவீட் மெமரி! அதைப் போயி.. ப்ச்ச்.." என அவன் வெகுவாய் வருத்தம் கொள்ள, ஏனோ அவளிற்குச் சிரிப்புதான் வந்தது.

"மிஸ்டர் கீர்த்தி."

"ம்ம்.." என முகத்தைப் பார்க்க, "பட், அது ஃபர்ஸ்ட் ஹக் மாதிரி தெரியலயே.?" என்று வினவினாள், அத்தருணத்தை மெல்ல நினைவிற்கு கொண்டு வந்து.

"ஹேய்.. அப்ப உனக்கு ஞாபகம் இருக்கா?"

"நான் என்ன கேட்டேன்? நீ என்ன சொல்லுற?"

"அஃப்கோர்ஸ் அது நம்மளோட ஃபர்ஸ்ட் ஹக் தான். அதேமாதிரி உன்னோட சந்தேகமும் தப்பில்ல. எனக்கு செகண்ட் ஹக்."

கணவனை விழிகள் சுருக்கிப் பார்த்தவள், "ஓ.. காலையில என்னமோ உன்னை நல்லவன்னு சொல்லிக்கிட்ட? இப்ப என்னனா, வேற ஒரு பொண்ணைக் கட்டிப்பிடிச்சதை என்கிட்டயே பெருமையா பேசுற?"

வெளியே எளிதாக அவனிடம் பேசினாலும், ஏனோ மனதில் மெலிதான வலி பரவுவதை தடுக்க இயலவில்லை மேகவியால்.

ஊரில் இருந்த நாட்களைக் காட்டிலும் சென்னைக்கு வந்த பின்னரான இந்த இரு தினங்களும், கணவனது நடவடிக்கைகளால் மங்கையின் உணர்வுகளில் பெரும் தாக்கம் ஏற்பட்டு இருந்தது.

அங்கு உறவுகளும் பெரியவர்களும் இருந்ததால் அவர்களிற்கு ஏற்றது போல் சற்று புரிதலுடனும் அழுத்தத்துடனுமே நடந்து கொண்டான். அதிகப் பேச்சு இருக்காது. பார்வை மட்டுமே. அதுவும் உள்ளர்த்தம் அற்ற எதார்த்த வீச்சுகளைக் கொண்டது. அவர்களின் அறைக்குள்ளே தனிமையான தருணங்களில் மெலிதான சீண்டல்கள் இருக்குமே தவிர, நெருங்கிட முயன்றது இல்லை.

ஆனால் இங்கு வந்த பின்னர், பெரும் மாற்றம் அவனிடம்.

மூச்சு விடுவது போல் 'பொண்டாட்டி!' என்ற அழைப்பை கணக்கின்றி உச்சரித்தான். பேச்சுகள் அதிகமாய் இருந்தன. பார்வை வீச்சில் கேலியும் உரிமையும் கூடி தென்பட்டது. தொடுதலில் சீண்டலை இணைத்து இருவருக்குமான இடைவெளியைக் குறைத்து உடலோடு சேர்த்து மனதளவிலுமே சொல்ல இயலாத ஒருவித நெருக்கத்தை உண்டாக்கி இருந்தான்.

சிறிது நேரத்திற்கு முன்னர் மேகவி தன்னை 'ஒருவருக்கு மனைவி' என்ற உறவிற்குள் பொருத்திப் பார்த்ததே, அவன் வெளிப்படுத்தும் மையலிற்கான சான்று.

அதைத் தற்போதும் தொடர்வது போல்.. சின்னதாய் சிரித்தவன், "யாரு அந்தப் பொண்ணுனு கேட்க மாட்டியா பொண்டாட்டி?" எனச் சீண்டும் விதமாய் வினவினான் சத்தி.

"எனக்கு அது அவசியம் இல்லாதது. ஒரு ஃப்ராடுக்கு என் வீட்டுல இடம் இல்ல. உன்னோட பெட்டிப் படுக்கையைத் தூக்கிட்டு ஒழுங்கு மரியாதையா கிளம்பிடு!" என்றவள் அறை நோக்கிச் சென்றிட, "நான் ஃபர்ஸ்ட் ஹக் பண்ண பொண்ணும், நீதான் பொண்டாட்டி. உனக்குத் தெரியாம, உன்கிட்ட இருந்து நான் ஹக்கை திருடிட்டேன்." என மெலிந்த குரலில் உரைத்து மனைவியின் நடைக்குத் தடையிட்டான்.

சட்டென்று திரும்பியவள், "என்ன சொன்ன.?"

கெஞ்சல் பார்வைப் பார்த்தவன் பின் நோக்கி நடந்தபடியே, "ஸா..ரி.." என்றிட, "எனக்குத் தெரியாம, அது எப்ப நடந்துச்சு?" என முன் பக்கமாய் ஆடவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

மறுத்துத் தலையசைத்து அவன் சிரித்திட, "என்னைப் பார்த்தா எப்படித் தெரியிது உனக்கு.?"

"அழகா தெரியிற! சோ.."

"சோ..?"

"அதான் என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாம!"

"எப்ப செஞ்ச?"

"நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல, நீ தூங்குன பின்னாடி! ரொம்ப எல்லாம் இல்ல. சும்மா லைட்டா டச் பண்ணி மட்டும்.." என அவன் முடிக்காமல் நிறுத்திட, "ஃப்ராடு!"

"தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்பிளிமெண்ட்!"

"வெட்கமா இல்லையா உனக்கு.? ஒரு பொண்ணு தூங்கும் போது ஹக் பண்ணி இருக்க? இது, ஹராஸ்மெண்டுனு தெரியாதா..?" என்றவள் எதிரே வந்து நின்றிருந்தாள். இருவருக்கும் இடையே தோராயமாய் ஒரு இருபது சென்டிமீட்டர் இடைவெளி இருக்கலாம்.

"என்னோட செயல் உன்னை மனசாலயோ, உடம்பாலயோ காயப்படுத்தி இருந்தா தான், அது ஹராஸ்மெண்ட். இப்ப, நீ சொல்லு. இந்த விஷயம் தெரிஞ்ச பின்னாடி அன்கம்ஃபர்ட்டா ஃபீல் பண்ணுறியா.? எதையாவது மிஸ் செஞ்சதா, எங்கேயும் பெயின் இருக்கிறதா தோணுதா..?"

அவள் புரியாமல் பார்க்க, "பொண்டாட்டி, உனக்கே தெரியும். என்னோட இன்டென்ஷன்ல தப்பு இல்லனு. ஒருவேளை அப்படி நீ நினைச்சிருந்தா, இவ்வளவு நிதானமா எல்லாம் பேசிக்கிட்டு இருக்க மாட்ட. முன்னாடி போலீஸ் கம்பிளைன்ட் கொடுப்பேன்னு சொல்லி இருந்தியே? அதை இந்நேரம் செஞ்சிருப்ப. உனக்கு இந்த மேரேஜ் லைஃப் ஓகேவா தான இருக்கு.? ஜெஸ்ட் அக்செப்ட் இட். ஐ ப்ராமிஸ் தட், ஐ வில் நெவர் லெட் யூ டவுன்!"

வலிந்து புன்னகைத்தவள், "நான் பொய் சொல்ல விரும்பல. நீ சொன்னது உண்மை தான். ஓவர் தி பாஸ்ட் டூ டேஸ், ஐ ஹேவ் பிகின் டூ ஃபீல் சம்திங் ஃபார் யூ! பட்.."

"பட்..?" என சத்தி அவளை மேலும் பேச வைத்திட முனைய, "ஆனா, உன்மேல நம்பிக்கை வைக்க முடியாது என்னால!"

முதல் நாளின் இரவிலும் அவள் இதையே உரைத்தது நினைவிற்கு வர, இன்று அதன் பின்னிருக்கும் காரணத்தை அறிந்து கொள்ளும் முனைப்பில் பேச்சைத் தொடர்ந்தான் சத்தி

"ஏன்? நான், உன்கிட்ட பொய்யா நடந்துக்கிறதா நினைக்கிறியா?"

"இல்ல."

"வேற என்ன.?"

"நீயினு இல்ல.." என்று தொடங்கிய அவளது சொற்களின் மிச்சத்தை, "எந்த ஆம்பளையையுமே உன்னால நம்ப முடியாது! இதை தான் நேத்தே சொல்லிட்டியே?" என உரைத்து நிறைவு செய்தான்.

மேகவி அமைதியாய் அவனைப் பார்த்திருக்க, "எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு. இந்த டிரஸ்ட் இஸ்யூவால தான் இவ்வளவு நாளும் மேரேஜ் செஞ்சுக்காம இருந்தியா?"

"ம்ம்.."

"உனக்குள்ள இப்படியான ஒரு எண்ணம் வந்ததுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?"

மறுத்துத் தலையசைத்தாள் அவள்.

"ஓகே, என்னை நீ நம்ப வேண்டாம்! அதுக்கான காரணத்தையும் ஷேர் பண்ண வேண்டாம்!"

அவள் குழப்பத்துடன் ஏறிட, "என்கிட்ட சம்திங் ஃபீல் பண்ணுறதா சொன்ன இல்ல நீ.?"

"யா.."

"அதை டிரைப் பண்ணிப் பாக்கிறியா.?"

சற்றே அதிர்ந்தவள், "வாட்..?"

"பொண்டாட்டி ஒரு விஷயம் சொல்லவா.?"

"என்ன?"

"தேவை இருக்கிற இடத்துல தான், நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியமும் இருக்கும்!"

"என்ன சொல்ல வர்ற.?"

"உனக்கு என்கிட்ட ஏதாவது தேவை இருக்கா.?"

"நோ, நாட் அட் ஆல்!"

"பட், ஃபீலிங்க்ஸ் உண்டு!"

"சோ வாட்.?"

"யூஸ் பண்ணிக்கோ!"

"ஷட் அப் கீர்த்தி.. டோண்ட் டாக் நான்சென்ஸ்!"

"ஹேய் பொண்டாட்டி! நான் சென்ஸோட தான் பேசுறேன்!"

ஏனோ அவன் உரைப்பதை அவளால் ஏற்க இயலவில்லை.

பள்ளிப் பருவத்தின் இறுதி காலம் தொட்டே அவநம்பிக்கையின் காரணமாய் எதிர்பாலினத்தவரிடம் இருந்து விலகியே இருந்து விட்டதால், இதுவரை எந்த ஆணிடமும் எவ்வித உணர்வும் உருவானது இல்லை மேகவிக்கு.

நட்பாய் கூட பழகியது இல்லை. பணி செய்யும் இடத்தினில் இருப்பவர்களிடமும், தொழில் சார்ந்த பேச்சினைக் கடந்து அதிகப்படியாய் ஒரு சொல் இதழ்களில் இருந்து வெளிவராது.

தனக்கென்று ஒரு எல்லை வகுத்திருந்தாள். அதைக் கடந்து அவளும் செல்ல மாட்டாள், மற்றவரிற்கும் அனுமதி இல்லை.

இந்த இரு கொள்கையுமே, கீர்த்தியிடம் உடைபட்டுப் போனது என்றுதான் சொல்ல வேண்டும்.

தமையனிற்கு அடுத்து மேகவி பேசிப் பழகிய முதல் ஆண் அவன்தான் என்றால், அது மிகையற்ற இருநூறு சதவிகித உண்மை.

அவளை நெருங்கி வந்தவனும், அதற்கு அனுமதிக்கப்பட்டவனும் சத்யகீர்த்தி ஒருவன் மட்டுமே. கணவன் என்ற உறவுடனும் உரிமையுடனும் மங்கையின் எல்லைக்குள் அடியெடுத்து வைத்ததால், தவிர்க்க இயலாது போனது.

"என்ன பொண்டாட்டி, அமைதியா இருக்க.?" என அவன் கையைப் பற்றிட, "ஏன் இப்படிப் பேசுற? என்னால நீ சொன்னதை இமேஜின் கூட பண்ண முடியல."

"ஹேய்.. நான் சொன்னது ரொம்பவே நார்மலான விஷயம். நம்ம நாட்டுல இன்னுமே பாதிக்கும் மேல அரேஞ்ச் மேரேஜ் தான் நடக்குது. அந்த சூழ்நிலையில ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் புதுசா தான் அறிமுகம் ஆகுறாங்க. பேசிப் பழகுறாங்க. அவங்களுக்கு இடையில எந்த அளவுக்குப் புரிதல் இருக்கும்னு உறுதியா எதுவும் சொல்ல முடியாது. பட் மேரேஜ் லைஃபை லீட் பண்ணிக் கொண்டு போறாங்க தான.? அதே மாதிரி நாமளும் ஸ்டார்ட் பண்ணுவோம்."

"நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா அவங்களுக்கு இடையில நம்ம துணை நல்லபடியா பார்த்துப்பாங்கனு டிரஸ்ட் இருக்கும் தான.?"

"நீதான் என்னை நம்ப மாட்டிறியே.?"

அவள் அமைதி காக்க, "ஹேய், இங்க பார்றேன். ஹஸ்பெண்ட்ற பேர்ல உனக்கு சர்வீஸ் பண்ண ஃப்ரீயா நான் கிடைக்கும் போது, ஜஸ்ட் யூஸ் பண்ணிக்கோ." என்றவாறு மனைவியினது இடையின் இரு பக்கமும் கைகளை நுழைத்து பின்புறமாய் விரல்களைக் கோர்த்துக் கொண்டான் சத்தி.

முன்புற தேகம் உரசாது பின்பக்கம் மட்டும் ஆடவனது கரங்களில் பதியும் படி நின்று இருந்தாள் மேகவி.

அவனின் உடல்மொழியினை தலை முதல் கால் வரை பார்வையால் ஆராய்ந்தவள், "நீ சொன்ன ஐடியா, ஃப்ரீ சர்வீஸ் மாதிரி தெரியல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பக்கத்து இலைக்கு பாயாசம்.. ப்ச்ச் அதான் தோசை கேட்ட மாதிரி இருக்கு."

"எஸ், உண்மை தான்! நமக்கு நடந்த கல்யாணத்துல, நான் நஷ்டமாக விரும்பல. இது, மியூச்சுவல் பெனிஃபிட் தான். இந்த வழியில மேரேஜ் லைஃபை லீட் பண்ணும் போது, என்மேல நீ நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்ல. அது, ஃபியூச்சர்ல தானா நடக்கும்னு நம்புறேன். இப்போதைக்கு லவ்விங் கப்பிள்ஸா இல்லாம மேரேஜ் கப்பிள்ஸா ரிலேஷன்ஸிப்பை ஸ்டார்ட் பண்ணுவோம். இந்த ரெண்டு நாளா எப்படி இருக்கோமோ, அப்படியே ஃபாலோ பண்ணிக்கலாம். என்ன ஓகேவா.?"

எவ்வித மேற்பூச்சோ பொய்மையோ இல்லாது, 'கணவன் மனைவி உறவை இரவைப் பகிர்வதில் இருந்து துவக்கலாம். மனப்பகிர்தலை எதிர்காலம் தீர்மானிக்கட்டும்‍!' என ஆடவன் வெளிப்படையாகவே உரைத்திட, சிந்தனையில் மூழ்கினாள் மங்கை.

இவ்வுறவில் காதலிற்கும் நம்பிக்கைக்கும் அவசியம் இல்லை‌. பிடித்தமும் ஆசையும் இருந்தால் போதுமானது‌.

மேகவிக்கு கீர்த்தியிடம் சற்றே ஈர்ப்பு இருந்தது‌.

'அது, பிடித்தத்திலோ ஆசையிலோ சேருமா‌?' என்ற சந்தேகம் அவளிற்கு.

"ம்ம்.. நான் யோசிக்கிறேன்! இப்ப, ப்ளீஸ்.." என விலக முயல, தனது பிடியைத் தளர்த்தி கரங்களைப் பிரித்தான் சத்தி.
 
Top Bottom