• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 21

Vishakini

Moderator
Staff member


மையல் 21

தன்னருகே நின்று இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்த மேகவி, "ம்கும்ம்.." என்று தொண்டையைச் செருமிட, "என்ன பொண்டாட்டி?" என சத்தி குரல் தாழ்த்தி வினவினான், சற்றே அவள் பக்கம் சரிந்து.

"ரிங் எப்ப ரெடி பண்ண.?"

"நீ, நம்ம ஃப்ரெண்ட்ஸை இன்வைட் பண்ணலாம்னு சொன்னப்ப."

"சொல்லவே இல்ல?"

"சொல்லி இருந்தா, அது எப்படி சர்ப்ரைஸ் ஆகும்?"

"ம்ம்.. பெரிய ஆளுதான்!"

அவன் சிரித்திட, "ஆமா, இந்த சர்ட்டோட கதை என்ன.?"

"சர்ட்டா.?" என தான் அணிந்திருந்த உடையை ஒருமுறை பார்த்துக் கொண்டவன், "இதுக்கு என்ன.?"

"அது எப்படி என்னோட சேரி கலர்லயே இருக்கு? கோஇன்ஸிடெண்ஸா, இல்ல?"

"நோ நோ நோ.. இது, உன் புருஷனோட இன்ஸிடெண்ட். நேத்து சிஸ்டர் உனக்கு சேரி செலக்ட் பண்ணி எடுத்து வைக்கிறப்ப கவனிச்சேன். அப்படியே கையோட போயி, அதே கலர்ல சர்ட் வாங்கிட்டேன்."

"ஹோ.. சிக்கனத்துக்கு கிளாஸ் எடுப்பியே? திடீர்னு இப்படி செலவு செஞ்சிருக்க.?"

"சர்ட் தான? இது ஒன்னும் கெட்டுப் போற பொருள் இல்லையே? இனி, ரெகுலரா யூஸ் பண்ணிக்கலாம்‌. சோ..."

"நல்ல தெளிவு தான்!"

மெலிதாய்ச் சிரித்தவன், "ஹேய் பொண்டாட்டி."

"ம்ம்.."

"உனக்கு, நான் ஓகே தான‌‌?"

"இது என்ன கேள்வி.?"

"நமக்கு மேரேஜ் ஆகி மூனு வாரம் ஆகப் போகுது. நான் வாங்கி தந்த ரிங்கையும் அக்செப்ட் பண்ணிக்கிட்ட. எப்படி இருக்கேன்னு, ஹஸ்பெண்டுக்கு ரிவ்யூ சொல்லு பார்ப்போம்."

அவளின் விழிகள் வியப்பில் விரிய, "என்ன, இப்படிக் கேட்கிற.?"

"சொல்லு, எனக்கு எவ்வளவு மார்க் போடுவ.?"

"ஹேய்.. சும்மா இரு நீ!"

"அதெல்லாம் முடியாது, சொல்லு!"

"கீர்த்தி, உன்னோட விளையாடுற மூடுல நான் இல்ல ப்ளீஸ்‌. எல்லாரும் இருக்கும் போது, இப்படிக் கேட்டு என்னைக் கார்னர் பண்ணாத.!"

அவளின் குரல் மாற்றத்தை உணர்ந்தவன், "என்னாச்சு? நான் சும்மா தான கேட்டேன்?"

"ப்ச்ச்.. விடு!"

"இல்ல, சொல்லு!"

"கெஸ்ட் எல்லாம் இருக்கிற நேரத்துல, என்ன இது.?"

"எனக்கு அவங்களை எல்லாம் விட, நீ நினைக்கிறது தான் முக்கியம். வா‌!" என்றவன் கைப்பற்றி அறைக்கு இழுத்துச் செல்ல, "கீர்த்தி, ஏன் இப்படி செய்யிற?‌ எல்லாரும் என்ன நினைப்பாங்க.?"

"நீ, எப்ப சுத்தி இருக்கிறவங்களைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்ச? உனக்கும், உன்னோட ஃபீலிங்ஸுக்கும் தான ஃபர்ஸ்ட் பிரஃபரன்ஸ் கொடுப்ப.?"

"மேனர்ஸ்னு ஒன்னு இருக்கு இல்ல? நான் இன்வைட் பண்ணி வந்திருக்காங்க‌. அப்ப, அதுக்கான மரியாதையை தரணும் தான.?"

"ஓகே! ஆனா, இது ஒன்னும் கெஸ்டை மரியாதை குறைவா நடத்துறதுல சேராது‌. நியூ கப்பிள்ஸ் அவங்களுக்கு இடையில ஏதோ தனியா பேசிக்கிறாங்கனு தான் நினைப்பாங்க.‌ சோ, டோண்ட் வொர்ரி‌."

"சரி, எதுக்கு இப்படி என்னை இழுத்துட்டு வந்த.?"

"திடீர்னு ஏன் உன்னோட டோன் சேஞ்ச் ஆச்சு.?"

"எப்ப.?"

"என்னைப் பத்திக் கேட்டப்ப..?"

அவள் அமைதியாய் இருக்க, "அப்புறம் பேசலாம்னு கூட நீ சொல்லி இருக்கலாம். ஏன், உன்னை நான் கார்னர் பண்ணுறதா நினைச்ச.? இல்ல, உண்மையிலயே நான் அப்படித்தான் நடந்துக்கிறேனா.?"

மேகவி சற்றே திணறலுடன், "கீர்த்தி‌?"

"பொண்டாட்டி ஒரு விஷயம் தெரியுமா‌? நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணுற மாதிரி இருந்திடக் கூடாது. நீ, நீயா இருக்கணும். அந்த உனக்கு என்னைப் பிடிக்கணும்னு ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்யிறேன். ஆனா நீ‌.? உனக்குப் பிடிக்காத ஒன்னு நடக்கிறப்ப‍, ஜெஸ்ட் ஓபன் அப் வித் தி ரீசன்.‌ சரி, இப்ப சொல்லு. ஏன் அப்படிப் பேசுன.?"

"ஹஸ்பண்டுக்கு என்ன மீனிங்னே எனக்குத் தெரியாதுடா. அதேமாதிரி ஒரு வொய்ஃப் எப்படி நடந்துப்பானும் தெரியாது. அப்புறம் எப்படி நான் உனக்கு மார்க் கொடுக்க முடியும்?"

மெலிதாய்ச் சிரித்தவன், "என்ன இப்படிச் சொல்லுற.?"

கணவனை முறைத்தவள், "போ!" என்று அவனது மார்பில் கரம்பதித்துத் தள்ளிவிட்டு நகர, "ஹேய், பாதியில ஓடாம முழுசா சொல்லிட்டுப் போ!" என மீண்டும் மனைவிக்குத் தடையிட்டான் சத்தி.

"என்ன பாதி? அதான் ரீசன் சொல்லிட்டேனே.?"

"ம்ஹூம்ம்.. மனசுல தோணுறதை முழுசா சொல்லு."

அவள் புரியாது பார்க்க, "ஸ்பீக் அப் பொண்டாட்டி."

மெலிதான பெருமூச்சை வெளிவிட்டவள், "உனக்குத் தான் தெரியுமே, அப்பா என்னோட சின்ன வயசுலயே இறந்துட்டாரு. சோ, அவருக்கும் அம்மாவுக்குமான ரிலேஷன்ஷிப் எப்படி இருந்துச்சுனு தெரியாது.

அதேமாதிரி தான் மத்தவங்க ஃபேமிலியிலயும். என்னோட ஃப்ரெண்ட்ஸோட பேரண்ட்ஸை, தனித்தனியா ஒரு அம்மாவா அப்பாவா தெரியுமே தவிர, அவங்க கணவன் மனைவியா என்னோட பார்வைக்குத் தெரிஞ்சதே இல்ல.‌

ஊர்ல உன்னோட பேரண்ட்ஸைப் பார்க்கிறப்ப, மாமா அத்தையைக் கேர் பண்ணிக்கிறது புரிஞ்சிச்சு. அது, நாம பார்க்கிறது தான். ஆனா ரூமுக்குள்ள அவங்களுக்கான உறவு? நான் டபுள் மீனிங்ல சொல்லல. தனியா இருக்கும் போது பேசிக்கிறது பழகுறது, இதைப்பத்திச் சொல்லுறேன்.

நீயும் மாமாவை மாதிரி, என்னைக் கேர் பண்ணிக்கிற. ஓகேதான். இந்த கேரிங், ஹஸ்பண்ட்கிட்ட தான் கிடைக்கும்னு இல்லயே.? என்னோட அண்ணா, அம்மா, அப்பத்தா, ஏன் ஸ்டார்கிட்ட இருந்து கூட கிடைக்கும் தான? இவங்களோடவும் என்னால வீட்டை சேர் பண்ணிக்க முடியும். அப்ப, ஹஸ்பண்டா என் லைஃப்ல உன்னோட ரோல் என்ன..?"

அவள் சொல்வதைச் செவி கொடுத்து கேட்டவன் மேலும் கீழுமாய் தலையசைத்து, "ம்ம்ம்.. வேலிட் பாய்ண்ட்! அவசரப்பட்டு எனக்கு மார்க் போடச் சொல்லிக் கேட்டுட்டேன். அந்த ஸ்டேஜுக்கு, நாம ரெண்டு பேருமே போறதுக்குக் கொஞ்சம் டைம் ஆகும்."

"ஓகே.‌‌. போதுமா உனக்கு? இப்ப நான் போகட்டுமா.?"

"இன்னும் ஒரு கொஸ்டின் இருக்கு."

"என்ன.?"

"இல்ல இல்ல வேணாம். நாம தனியா இருக்கும் போது அதைப் பத்தி பேசிக்கலாம்."

கணவனை சந்தேகமாய் பார்த்தவள், "ஏதோ விவகாரமா இருக்கும் போலயே.?"

சத்தி சிரித்திட, அவளின் இதழ்களிலுமே ஏனோ காரணம் இன்றி புன்னகை மலர்ந்தது.

"ரெண்டு பேரும் தனியா வந்து ரொமான்ஸ் பண்ணுறீங்களாக்கும்? நாங்க எல்லாம் இருக்கிறது மறந்திடுச்சா.?" என வினவிய படி தாரிகா அங்கு வர, இருவரும் ஒருசேர அவளைப் பொய்யாய் முறைத்தனர்‌.

"புருஷனும் பொண்டாட்டியும் ஒன்னு போல, இப்படிப் பார்த்தா என்ன அர்த்தம்.?"

"எங்க கல்யாணம் எப்படி நடந்துச்சுனு, உன்கிட்ட எல்லாத்தையும் நான் சொல்லி இருக்கேன். இதுல ரொமான்ஸா.? எப்பப் பாரு, கனவுலயே மிதக்குறது‌. கொஞ்சமாவது பிராக்டிகலா பேசுறியா நீ?" என மேகவி தோழியின் முதுகில் வலிக்காதவாறு அடிக்க, "உங்க ஃப்ரெண்டை வச்சிக்கிட்டு ரொமான்ஸா.? அதுக்கு வாய்ப்பே இல்ல, சிஸ்டர்!" என்று சத்தியும் தன் பங்கிற்கு உரைத்தான்‌.

மங்கையவள் கணவனது சொற்களில் அவனை ஆழ்ந்து பார்க்க, "என்ன க்ளௌட், ப்ரோ இப்படிச் சொல்லிட்டாரு? அடடா! அப்புறம் எப்படி குவா குவா சத்தம் வரும்.?" என வினவினாள் தாரிகா.

"முதல்ல‌ உன்னோட வீட்டுல வரட்டும். அப்புறம் இங்க பார்க்கலாம். எங்க, உன்னோட ஹஸ்பெண்ட்?"

"ஹால்ல உட்கார சொல்லிட்டு வந்திருக்கேன். அவரால ரொம்ப நேரம் நிக்க முடியாதுல.?"

"டயர்டா இருந்தா, வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கச் சொல்லலாம்ல.?"

"நானும் அதைத்தான் நினைச்சேன். அதான் உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்."

"சிஸ்டர், நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலயே?" என சத்தி கேட்டிட, "முதல்ல கெஸ்டை கவனிங்க ப்ரோ. நாங்க‌ அப்புறம் வந்து சாப்பிட்டுக்கிறோம்." என்று உரைத்து நடந்தாள்.

இவர்கள் வர ஆகாஷும், "விஷ்ஷிங் யூ போத் எ ஹேப்பி அண்ட் பிராஸ்பெரியஸ் ஃப்யூச்சர்!" என தனது வாழ்த்தைத் தெரிவித்து விடைபெற்றான்.

தாரிகாவும் தலை அசைத்துக் கணவனுடன் செல்ல, விருந்தினர்களைக் கவனிக்க துவங்கினர் சத்தியும் மேகவியும்.

ஒவ்வொருவரிடமும் பேசி அவர்கள் உணவு உட்கொண்டனரா எனக் கேட்டறிந்து, அனைவரையும் வழியனுப்பி வைக்கும் பொழுது மணி இரவு பதினொன்றைக் கடந்து இருந்தது.

சற்று முன்னரே தாரிகா மற்றும் ஆகாஷிற்கான உணவை அவர்களது இல்லத்திற்குச் சென்று கொடுத்துவிட்டு வந்திருந்தான் சத்தி.

வந்திருந்தவர்கள் கிளம்பிச் செல்ல, வீடு அமைதிப் போர்வைப் போர்த்தியது போல் ஆனது.

இடம் மாறி கலைந்த பொருட்களும், சிதறிக் கிடந்த வண்ணக் காகிதங்களும், இல்லம் பழைய நிலைக்குத் திரும்ப சிறிது நேரமாகும் எனக் கட்டியம் சொன்னது. அதுவும் உடனே வேலை செய்தால் மட்டுமே!

சுற்றிலும் ஒருமுறை பார்த்த மேகவி, பெருமூச்சை விட்டுக் கூடத்தில் இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்தாள்.

மனைவியைக் கவனித்த சத்தி, "என்ன பொண்டாட்டி டயர்டா இருக்கா‌?"

"ப்ச்ச்.. இதை எல்லாம் கிளீன் பண்ணவே ரெண்டு நாள் ஆகுமே..?"

"செஞ்சுக்கலாம்.‌ ஃப்ரீயா விடு!"

"அதெப்படி, என்ன நடந்தாலும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க.?"

"அதெல்லாம் பெருசா பெருசா சின்ன வயசுலயே பார்த்தாச்சு.‌ அதுனால, எதுக்குமே இப்ப அலட்டிக்கிறது இல்ல."

அவள் கேள்வியாய் பார்க்க, "அம்மாவோட ஹெல்த் இஸ்யூ தெரியும் தான உனக்கு.?"

"ம்ம்.."

"மோஸ்ட் ஆஃப் தி டைம் அப்பா, அம்மாக்கூட தான் இருப்பாரு. பெரும்பாலும் ஹாஸ்பிடல் ஸ்டே. வீட்டை நானும் தனாவும் பார்த்துக்குவோம். ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் அதுவே பழகிடுச்சு. டிரீட்மெண்டுக்குப் பணம் வேணும்னு, அப்ப இருந்து தான் மேக்ஸிமம் செலவைக் குறைச்சு, வீட்டோட ஃபினான்ஷியலைக் கண்ட்ரோல்ல வச்சிருந்தோம்.

வொய்ட்வாஷ் பண்ண ஆளைக் கூப்பிட்டா‍, அவங்களுக்கு சம்பளம் கொடுக்கணுமேனு நானும் அப்பாவும் அதை செய்யிவோம். கிளீனிங் வேலையை தனாக்கூட சேர்ந்து ஷேர் பண்ணிப்போம். சோ, இதெல்லாம் பெருசு இல்ல.

நாளைக்கு சேட்டர் டே தான? வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டுட்டு, நைட் நல்லா தூங்கி எழுந்திரிச்சிட்டுக் காலையில வீட்டை கிளீன் பண்ணிடலாம்‌. டோண்ட் ஒர்ரி, ஓகே? இப்ப போய், நீ ரெஸ்ட் எடு!"

"ம்ம்.. இம்ப்ரஸ்ஸிவ். தேங்க்ஸ் கீர்த்தி!" என்றவள் இருக்கையில் இருந்து எழ, "தேங்க்ஸுக்குப் பதிலா வேற ஏதாவது செய்யலாமே.?"

"என்ன செய்யணும்.?" என்றவாறே அவனது முகத்தை நோக்கியவள், "ஏய்.. ஏடாகூடமாக ஏதாவது சொன்ன, அடி விழும். பார்த்துக்கோ!"

மறுத்துத் தலை அசைத்து சிரித்தவன், "சேச்சே.. நான் நல்ல பையனாக்கும்."

"யாரு நீ.?‌ நம்பிட்டேன் நம்பிட்டேன். தனியா ரிங் வாங்கிக் கொடுத்தா நோ சொல்லிடுவேனோனு, எல்லார் முன்னாடியும் வச்சு போட்டு விட்டுட்ட!"

"நான் ஒன்னும் உன்னை ஃபோர்ஸ் பண்ணலயே?"

"ம்ம்.. சரி, விஷயத்துக்கு வா. என்ன செய்யணும்.?"

"நாம ரூமுல பேசும் போது, எனக்கு உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு சொல்லி இருந்தேன்ல.?"

"ஆமா.."

"என்னை ஹஸ்பெண்டா யூஸ் பண்ணுறதைப் பத்தி என்ன முடிவெடுத்திருக்க.?"

ஊரில் இருந்து வந்த நான்கு தினங்களில் இதைப் பற்றிப் பேச்சு வந்த போது, சிந்திப்பதாய் உரைத்து இருந்தாள் மேகவி.

இத்தனை நாட்களாய் அதற்கான காலத்தைக் கொடுத்து இன்று ஆடவன் கேட்டிட, என்ன பதில் உரைப்பது என்று புரியாமல் தடதடக்கும் மனதுடன் நோக்கினாள்.
 
Top Bottom