• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 22

Vishakini

Moderator
Staff member


மையல் 22

அமைதியாய் இருந்த மேகவியைக் கண்ட சத்தி, "என்னாச்சு..?"

அவள் மறுத்துத் தலை அசைக்க, "இப்படி ஆட்டுனா என்னமா அர்த்தம்.?"

"எனக்குத் தெரியல."

"தெரியலனா? இல்ல புரியல.?"

"என்ன முடிவெடுக்கிறதுனு தெரியல."

சின்னதாய்ச் சிரித்தவன், "உன்னோட வயசுக்கு நீ எவ்வளவு மெச்சூர்டாவும் கிளியர் மைண்டடாவும் இருக்கணும். இப்பப் போயி, மேரேஜ் லைஃப்ல ஒரு டிசிஷன் எடுக்க முடியலனு சொல்லுற?"

அவளும் சிரித்து, "ஏன்னா மேரேஜ், அந்த ரிலேஷன்ஸிப், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு இதைப் பத்தி எல்லாம் இதுவரை நான் யோசிச்சதே இல்ல."

"அதுசரி! யோசிக்கிறேன்னு என்கிட்ட சொல்லீட்டு, அதை மறந்துட்டியாக்கும்.?"

"மறக்கல கீர்த்தி. எனக்கு இதை எப்படி அப்ரோச் பண்ணுறதுனு தெரியல. வேணாம்னு நினைச்ச ஒரு உறவை வலுக்கட்டாயமா என்னோட லைஃப்ல திணிச்சிட்டாங்க. அதை வெளிய தள்ள முடியல.‌ சோ.."

"ஹோ.." என்றவனின் முகத்தில் வருத்தத்தின் ரேகைகள் தென்பட, "பட், நீ ஓகே தான்!"

புரியாது பார்த்தவன், "ஓகேன்னா.?"

"உன்கூட இருக்கிறது அப்படி ஒன்னும் எனக்குக் கஷ்டமா தெரியல. சொல்லப்போனா, ஐ ஃபீல் குட்!"

"ம்ம்.. உன்னோட கையைக் கொடு!" என்றவன் தனது இடது கரத்தை நீட்டினான்.

"என்ன புதுசா கேட்கிற? எப்பவும் உன்னோட வசதிக்குப் பட்டு பட்டுனு பிடிப்பியே.?" என வினவியவாறே தனது வலது கையை நீட்டினாள்.

"ரிலேஷன்ஸிப்பை அப்ரோச் பண்ணுறது எப்படினு தெரியலனு சொன்ன இல்ல‌‍?" என்று நீட்டிய கரத்தின் ஐந்து விரல்களையும் சேர்த்து ஒன்றாய்ப் பிடித்தான்‌.

அவள் கேள்வியாய் நோக்க, "ஒரு சில விஷயங்களைச் சொல்லி புரிய வைக்க முடியாது. ஜெஸ்ட் ஃபீல் இட், ஓகேவா.?"

மங்கையின் விழிகளில் குழப்பம் உருவெடுக்க, "ஏய், என்ன செய்யப் போற? ஏதாவது ஏடா கூடமா செஞ்ச, அப்புறம் நான்.." என மேலும் பேச இயலாது, அவனின் பிடியில் இருந்த தனது விரல்களை இழுத்தாள்.

சத்தி அழுத்தமாய் பற்றியிருக்க, விலக முடியாது போனது மேகவியால்.

"ரிலாக்ஸ். உன்னோட விருப்பம் இல்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன், சரியா.?" என்றவன் சற்று முன்னர் விழாவின் போது தான் அணிவித்த மோதிரத்தின் அருகே இதழ்களைப் பதித்தான்.

ஆடவனின் மீசை முடியும், அதரங்களின் மென்மை கலந்த அழுத்தமும், அது தந்த 'இச்' என்ற சப்தமும்.. கையோடு சேர்த்து மனதையும் குறுகுறுக்க வைத்தது‌.

"கீர்த்தி என்ன செய்யிற.?" என வினவியவளின் குரல் மெலிந்து லேசான நடுக்கத்துடன் ஒலித்தது.

"நான்தான் சொன்னேனே, ஜெஸ்ட் ஃபீல் இட்னு‌." என்று மொழிந்தவன் அடுத்த முத்தத்தை மனைவியின் நெற்றியில் ஒற்றினான்.

அனிச்சையாய் அவளின் இமைகள் மூடிக்கொள்ள கணவனிடம் இருந்த கையை விடுத்து மற்றொன்றால் மார்பிற்கு கீழேயான அவனின் சட்டையைப் பிடித்தாள்‌.

அதை உணர்ந்து புன்னகைத்தவன், "பொண்டாட்டி, நான் லைன் கிராஸ் பண்ணி நடந்துக்கிறதா எதுவும் தோணுதா?"

விழிகளைத் திறந்து அவனை நோக்கியவளின் இதழ்களில் மெலிதான முறுவல் மலர்ந்திட, "இல்ல."

"ஓகே.. இன்னைக்கு இது போதும். போய் ரெஸ்ட்‌ எடு!" என்றவன் சட்டென்று விலகிட, "என்ன இது?" எனச் சிரித்தாள் மேகவி.

"இனி, உனக்கு நான் வேணுமா வேணாமானு நீ முடிவெடு!"

மேகவி புரியாது விழிக்க, "எட்டி நிக்கிற வரைக்கும் நமக்குள்ள இருக்கிற ஃபீலிங்ஸ் நமக்கே புரியாது! அதான் லைட்டா ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தேன். ஓகே தான். கிஸ் பண்ணதுக்கு, நீ என்னை அடிக்கல இல்ல. அதுவே போதும்!"

"அடிக்கிற அளவுக்கு மோசமா எல்லாம் நீ கிஸ் பண்ணல. ஓகே தான்! குட் நைட்." என்றவள் எழுந்து செல்ல, புன்னகையோடு பார்த்திருந்தான் சத்தி‌.

ஒப்பனையைக் கலைத்து உடை மாற்றி அவள் படுக்கையில் விழும் பொழுது மேலும் அரை மணி நேரம் கடந்திருந்தது. விளக்கை அணைக்கச் சென்றவள் வாயிலில் நிழலாடுவதை உணர்ந்து, திரும்பிப் பார்த்தாள்.

சத்தி நின்று இருந்தான்.

"என்ன கீர்த்தி..?"

"என்கூட ரூமை ஷேர் பண்ணிக்கிறதுல உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லயே.?"

"திடீர்னு ஏன் இந்த கொஸ்டின்?"

"ஊருல இருந்து வந்த அன்னைக்கு நீ நைட் ரியாக்ட் பண்ணதைப் பார்த்துட்டு, உன்னை அன்கம்ஃபர்டா ஃபீல் பண்ண வைக்க வேண்டாம்னு கெஸ்ட் ரூமுக்குப் போனேன். நான் கூடவே இருந்தா, எதுவும் யோசிக்க முடியாதுனு தான் இவ்வளவு நாளும் அப்படியே இருந்தேன். ஆனா இன்னைக்கு நீ பேசுனதை வச்சு பார்க்கும் போது, இனி ரெண்டு பேரும் தனித்தனி ரூமுல இருக்க வேண்டிய அவசியம் இல்லனு நினைக்கிறேன். உள்ள வர அனுமதி உண்டா.?"

"நாளைக்கு வீட்டை கிளீன்‌ செஞ்சுத் தர்றேன்னு சொல்லி இருக்க. சோ, அதுக்காக உன்னை அலௌவ் பண்ணுறேன்."

"அப்ப, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தானா?"

"பேசாம வந்து படுடா!‌" என்றவள் போர்வையை மார்பு வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தலையணையில் சாய்ந்தாள்.

சின்ன சிரிப்போடு உள்ளே சென்ற சத்தி, படுக்கையின்‌ மறுபக்க பாதியைத் தன் வசமாக்கிக் கொண்டான்.

அன்றைய பகல் பொழுதின் சோர்வு காரணமாக இருவரும் சிறிது நேரத்திலேயே உறங்கி விட்டனர்.

மறுநாள் ஆடவனிற்கு வழக்கம் போல் விடிய, பாவைக்கு நேரம் சென்றே புலர்ந்தது.

மேகவி எழுந்து வரும் பொழுது மணி ஒன்பதைக் கடந்துவிட்டது. மனைவியை இரு முறை எழுப்பிப் பார்த்த சத்தியும், அவள் விழிக்காததால் அப்படியே விட்டு விட்டான்.

கொட்டாவி ஒன்றை வெளியிட்ட படி வந்தவளைப் பார்த்தவன், "குட்மார்னிங் பொண்டாட்டி."

"ம்ம்.. குட்மார்னிங்."

"டைம் என்னனு பார்த்தியா? இப்படியா தூங்குவ? இடியே விழுந்தா கூட எழுந்திரிக்க மாட்ட போல.?"

"செம டயர்ட். நைட் தூங்க வேற லேட் ஆகிடுச்சு. அதுவும் இல்லாம, சேரியை வேற கட்டி அதை அஞ்சு மணி நேரம் கேரி பண்ணதுலயே தலைவலி வந்திடுச்சு எனக்கு."

மெலிதாய்ச் சிரித்தவன், "காஃபி.?"

அவள் தலை அசைக்க, தயாரித்துக் கொடுத்தான்.

மேகவி அருந்தத் துவங்கிட, "நைட் மிச்சமான சாப்பாடுல கொஞ்சம் எடுத்து வச்சிருக்கேன். சூடு பண்ணி கொடுத்தா, ஓகேவா? காலையில சாப்பிட்டுக்கிறியா.?"

"ஸுயர். கெட்டுப் போகாத வரைக்கும் எந்த சாப்பாடா இருந்தாலும் ஓகேதான்!"

அவளின் மறுமொழியில் புன்னகைத்தவன், "இப்படி நிதானமா உட்கார்ந்து காஃபியை குடிச்சிட்டு இருக்க? ஆஃபீஸுக்கு கிளம்புற ஐடியா இல்லையா?"

"இல்ல கீர்த்தி. இனி இங்க இருந்து ஒன் ‌ஹவர் டிராவல் பண்ணி போறது எல்லாம் முடியாது. லேட்டும் ஆகிடும். அதோட எனக்குமே லேஸியா இருக்கு. அதுனால நானும் வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டுடலாம்னு இருக்கேன்."

"ஓகே. வேலையைப் பாரு. எனக்கும் வொர்க் இருக்கு!" என்றவன், முந்தைய நாள் உணவை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வைத்துவிட்டு, முதலில் சமையல் அறையைத் தூய்மை செய்யத் துவங்கினான்.

பத்தரை மணியைப் போல் இருவரும் ஒன்றாய் உணவருந்தி விட்டு, அவரவரின் மடிக்கணினியின் முன்பு போய் அமர்ந்தனர்.

மேகவி அமர்ந்த இடத்தை விட்டு நகராது இருக்க, சத்தி அவ்வப்போது பணியின் இடையே எழுந்து வந்து வீட்டு வேலைகளையும் கவனித்தான்.

மணி பன்னிரண்டு‌. அலுவலக வேலையின் இடையே தேநீர் அருந்தி பழகிய உடல், இன்றும் அதையே வேண்டிட வெளியே வந்தாள் பாவை.

வீடு முழுவதும் தூய்மையாகி இருக்க, ஊடலைக் கருவியைச் செவியில் பொருத்தியபடி பணி சம்பந்தமாய் எவருடனோ பேசிக் கொண்டு இருந்தான் சத்தி.

"கீர்த்தி.."

மனைவியின் அழைப்பில், "ஒன் மினிட் ப்ளீஸ்.." என்று அனுமதி பெற்று அவள் பக்கம் திரும்பியவன் என்னவென்று கேள்வியாய் பார்க்க, "டீ.?"

"ஒரு ஃபைவ் மினிட்ஸ், பேசிட்டு வந்து உனக்கு போட்டுத் தர்றேன்."

"ஹேய்.. நானே போட்டுப்பேன். உனக்கு வேணுமானு கேட்டேன்."

ஆடவனின் விழிகள் வியப்பில் விரிய, "பொண்டாட்டி, அவ கையால செஞ்சு தர்றதை வேணாம்னு சொல்லுறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல."

"ரொம்பத்தான்!" என முணுமுணுத்தவள் தேநீர் தயாரிக்கச் செல்ல, பேசி முடித்து விட்டு சத்தியும் வந்து சேர்ந்தான்.

"உனக்கு டீ எல்லாம் போடத் தெரியுமா பொண்டாட்டி?"

"ம்ம்.. இவ்வளவு வருஷம் தனியா இருக்கேன். இதைக்கூட பழகாமலா இருப்பேன்.?"

"ஓ.. அப்ப வேலை செய்யத் தெரியும். ஆனாலும் செய்ய மாட்ட.?"

"காலையில ஒன்பது மணிக்குக் கிளம்பிப் போனா, நைட் வீட்டுக்கு வர சில நேரம் பத்து மணி பதினோரு மணி ஆகிடும். சமையல் எல்லாம் செஞ்சா, ரெஸ்டே கிடைக்காது. அதுனால தான் செய்யிறது இல்ல‌. அப்புறம் எனக்கு அவ்வளவா சமைக்கவும் தெரியாது. கத்துக்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. பச்ச்.. கத்துக்கணும்னு தோணல, விடேன்!"

"தனியா இருக்கிறதுல இது ஒரு பிரச்சனை இல்ல.?"

அவள் புன்னகைத்து, "நான் சோம்பேறித் தனம் படுற‌ ஆள் இல்ல கீர்த்தி. அதுக்காக என்னோட உடம்பை வருத்தி வேலையும் செய்ய மாட்டேன். வீக் டேஸ்ல ஆஃபீஸ் ஒர்க், வீக் எண்டுல வீடு கிளீனிங், துணி துவைக்கிறதுனு பிளான் பண்ணிக்குவேன்.‌ "

அருகே நின்று மனைவியையே பார்த்திருந்தவன் அவளது வலது பக்க கன்னத்தில் மென்மையாய் இதழ்களை ஒற்ற, திகைத்துத் திரும்பினாள் மேகவி.

"ஏய்.. என்ன செய்யிற.?"

"இப்ப தான்‌ ஃபர்ஸ்ட் டைமா, உன்னைப் பத்தி நீயா என்கிட்ட ஷேர் செஞ்சிருக்க. பொதுவா அவாய்ட் பண்ணிடுவ. ஆனா, இன்னைக்கு நான் கேட்கக் கூட இல்ல. பட்..? பொண்டாட்டி, டூ யூ லைக் மீ.?"

'பேசுறதுக்கு உன்கிட்ட தான் பழகணும் போல! எதுனாலும் கொஞ்சம் சொல்லீட்டு செய்யிடா. நீ பாட்டுக்கு பட்டுனு கிஸ் அடிக்கிற?"

"நைட்டே ட்ரை பண்ணிட்டோம்ல, அப்புறம் என்னவாம்? ஒவ்வொரு டைமும் பர்மிஷன் கேட்கணுமா உன்கிட்ட.?"

"பர்மிஷன் வாங்க வேண்டியது இல்ல.‌ நோட்டிஃபிகேஷன் கொடு!"

"அதுல திரில் இருக்காதே பொண்டாட்டி!" என்றவன் சற்றே நகர்ந்து அவளிற்குப் பின்பக்கமாய் சென்று நின்றான்.

இரு கைகளையும் சமையல் மேடையின் மேல் பதித்திட, ஆடவனது கரங்களின் இடைவெளியில் மேகவி இருந்தாள்.

அவளின் பின்பக்க தேகம் கணவனது முன்புற உடலோடு லேசாய் உரசியது. எப்படி நகர்ந்தாலும் சரி, இல்லை திரும்பினாலும் சரி.. இருவருக்குமான உரசல் அதிகரித்து நெருக்கமும் கூடத்தான் செய்யும்.

உண்மையில் சத்தி மனையாள் எப்புறமும் விலக இயலாத படி, தடுப்பு அமைத்திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

"எதுக்கு இப்படி என்னை லாக் பண்ணி வச்சிருக்க.?" என வினவியவளின் குரல் மெலிந்து ஒலிக்க, "உன்னை லாக் எல்லாம் பண்ணல. சும்மா தான் கை வச்சிருக்கேன். நீ தாராளமா மூவ் ஆகலாம்!"

"உன்மேல உரசிக்கிட்டு, என்ன.?"

"தப்பில்லயே.?"

"ஒர்க் இருக்கு கீர்த்தி. உன்கூட விளையாட நேரம் இல்ல எனக்கு."

"இது டீ டைம் தான?" என்றவன் கண்களால் அடுப்பைக் காட்ட, தேநீரை வடிகட்டி இருவருக்கும் டம்ளர்களில் ஊற்றி ஆற்றினாள் மேகவி‌, அவனது கைகளிற்குள் இருந்த படியே!

ஆளிற்கு ஒன்றாய்‌ எடுத்து அருந்தத் துவங்கிட, "ம்ம்.. நைஸ் பொண்டாட்டி."

"தேங்க்யூ ஃபார் யுவர் காம்பிளிமெண்ட். சரி, லஞ்சுக்கு வெளிய ஆர்டர் பண்ணிடவா.?"

"ஏன்.?"

"சமைக்க டைம் இருக்கா உனக்கு.?"

"நேத்து நைட் சாப்பிட்டதே ஒருமாதிரி இருக்கு. இப்ப, எனக்கு வெரைட்டியா சாப்பிடுறதுல பெருசா இண்ட்ரெஸ்ட் இல்ல. தயிர்சாதம் ஓகேவா?"

"ம்ம்.. நோ பிராப்ளம்!"

"அப்புறம் என்ன? சிம்பிள். குக்கர்ல சாதம் வச்சா போதும். ஃப்ரிட்ஜ்ல தயிர் இருக்கு. பூண்டு, மாங்கா ஊறுகாய் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். அதைத் தொட்டுக்கலாம்." என்றவன் தேநீரை அருந்தி முடித்து கையோடு அரிசியையும் கழுவி தேவையான நீர் சேர்த்து பாத்திரத்தில் எடுத்து வைத்தான்.

கணவனது செயலைப் பார்த்திருந்தவள், "ஸ்டவ்வை ஆன் பண்ணலயா.?"

"கொஞ்ச நேரம் ஊறட்டும். ரெண்டு மணிக்கு தான சாப்பிடுவோம். ஒரு மணிக்கு குக்கர்ல வச்சு மூனு விசில் விட்டா போதும்."

"ம்ம்.." எனத் தலை அசைத்தவளின் இடதுபக்கத் தோள், அவர்கள் நின்றிருந்த நெருக்கத்தினால் அவனது மார்பில் உரசியது.

தெரிந்து நடந்ததோ, தெரியாமல் நிகழ்ந்ததோ அவர்கள் மட்டுமே அறிவர்!
 
Top Bottom