"ஹாய் அண்ணி.." எனக் கை அசைத்த பிரார்த்தனாவைக் கனிவுடன் நோக்கினாள் மேகவி.
பதிலிற்கு, "ஹாய் கல்யாணப் பொண்ணு.." என்றிட,
சட்டென்று சிரித்தவள், "நீங்களும் கல்யாணப் பொண்ணு தான். மறந்துட்டீங்களா என்ன?"
"ஆமா.. திடீர் கல்யாணப் பொண்ணு!" என முணுமுணுத்தவள், எதிரே நிற்பவளிற்காக சிரித்து வைத்தாள்.
மங்கையின் புன்னகை மனதில் இருந்து வராததை உணர்ந்த பிரார்த்தனா, "எல்லாம் ஓகே தான அண்ணி?"
"ஓகே தான். ஆமா எதுக்கு இந்த அண்ணி எல்லாம்? பேரைச் சொல்லியே கூப்பிடலாம்ல?"
"அது தப்பு. நீங்க, என்னோட அண்ணனைக் கல்யாணம் செஞ்சிக்கப் போறீங்க. பேரை சொல்லிக் கூப்பிடுறது மரியாதை இல்ல."
"அடடா! நீயும் தான் எனக்கு முன்னாடி பிறந்தவனைக் கட்டிக்கப் போற. அப்ப, நானும் அண்ணினு கூப்பிடணுமா?"
மெலிதாய் சிரித்த தனா, "அதுக்கு அவசியம் இல்ல அண்ணி. நான், உங்களைக் காட்டிலும் சின்னப் பொண்ணு தான?"
"இது என்ன லாஜிக்கோ? ப்ச்ச்... புரியல." என லேசாய் தனது இரு தோள்களையும் குலுக்கி கொண்டவள், "தனா, ரைட்?"
"ம்ம்.. அப்படித்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க."
"ஓகே! உனக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?" எனத் திருமண மண்டபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமையனை ஒரு பார்வைப் பார்த்தபடி வினவினாள்.
"ஏன் அண்ணி அப்படிக் கேட்கிறீங்க? அவருக்கு என்ன குறைச்சல்?"
"இல்ல, எனக்குப் புரியல. எப்படி அஞ்சு வருஷமா லவ் பண்ணுறீங்க ரெண்டு பேரும்? உங்களுக்கு இடையில பிரச்சனையே வந்தது இல்லையா? பிரியிறதைப் பத்தி பேச்சு வரவே இல்லையா?"
"எப்படிப் பிரச்சனை வராம இருக்கும்? அதெல்லாம் கண்டிப்பா வரும். ஆனா பேசி சமாதானம் ஆகிக்குவோம். பெரும்பாலும் அவருதான் என்னைச் சமாதானம் செய்யிவாரு. இதுவரைக்கும் பிரிவைப் பத்தி நாங்க யோசிச்சதே இல்ல."
தனாவை வியப்புடன் பார்த்த மேகவி, "நிஜமாவே என்னோட அண்ணன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா?"
"ஏன், உங்களை நல்லா பார்த்துக்கிறது இல்லையா?"
"ஹேய்.. அப்படி இல்ல. என்ன இருந்தாலும் நான் அவனோட தங்கச்சி இல்லையா? நல்லா தான் பார்த்துப்பான்."
"நான் அவரோட வொய்ஃப் அண்ணி. பார்த்துக்க மாட்டாரா?"
அவளின் சொற்களில் தொனித்த உறுதி மேகவிக்கு முறுவலைக் கொடுக்க, "தனா, உனக்கு அவனோட ஃபர்ஸ்ட் லவ்வைப் பத்தித் தெரியுமா? சொல்லி இருக்கானா?"
பாவையின் கண்களில் மெலிதான அதிர்ச்சி.
"இல்லையே அண்ணி?"
"ஹேய்.. தப்பா எதுவும் யோசிக்காத. அஞ்சு வருசமா லவ் பண்ணி இருக்கீங்க. இப்ப, கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு. சோ, நிச்சயமா உன்கிட்ட சின்சியரா தான் இருப்பான்."
"அது எனக்கே தெரியும். பட், ஃபர்ஸ்ட் லவ்?"
"சாகரோட காலேஜ் டேஸ்ல நடந்தது அது. ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் தான். அந்தப் பொண்ணை வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கான். எப்பவும் ஒன்னாவே தான் இருப்பாங்க. அவங்களுக்காக அம்மாக்கிட்ட சொல்லி, எக்ஸ்ட்ரா ஒரு டிஃபன் பாக்ஸ் வாங்கிட்டு போவான். என்ன ஆச்சுனு தெரியல. திடீர்னு எல்லாம் நின்னுப் போச்சு. கொஞ்ச நாள்ல அந்தப் பொண்ணுக்கு மேரேஜுனு இன்விடேஷன் வந்துச்சு."
'நேசித்த அப்பெண்ணைத் திருமணம் செய்வதற்கோ அல்லது அவளின் திருமணத்தை நிறுத்துவதற்கோ தனது தமையன் எவ்வித முயற்சியும் செய்யவில்லை!' என்பதை மட்டும் தவிர்த்து, "இவனும் கல்யாணத்துக்குப் போயி விஷ் பண்ணீட்டு வந்தான்!" என தான் அறிந்த வரையில் அனைத்தையும் உரைத்தாள்.
"இவ்வளவு தானா அண்ணி? நான்கூட வேற எதுவும் பெருசா இருக்கும்னு நினைச்சு, கொஞ்சம் பயந்துட்டேன். எல்லாருக்குமே ஃபர்ஸ்ட் லவ்னு ஒன்னு இருக்கும் தான?" என அவள் அதனை இலகுவாக உரைக்க, ஏனோ மேகவிக்குப் பள்ளிக்காலத்தில் தனது உணர்வுகளோடு விளையாடி சென்றவனின் நினைவு வந்தது.
மெலிதான பெருமூச்சை வெளிவிட்டு, "ம்ம்.." என மேலும் கீழுமாய் அவள் தலை அசைத்திட, "அது அவரோட பாஸ்ட். கடந்து போனது அண்ணி. முடிஞ்சும் போச்சு. அதோட எவ்வளவு வருசம் ஆச்சு? பட், நான் பிரசன்ட். என்கிட்ட உண்மையா தான் இருக்காரு. நான் அதை நம்பவும் செய்யிறேன். சோ.." என்று சாகரனின் கடந்த காலத்தை இயல்பாகவே எடுத்துக் கொண்டாள் தனா.
தமையனின் வருங்கால மனைவியை சற்றே வியப்புடன் நோக்கியவள், "உனக்கு ஓகேனா, நீ சந்தோஷமா இருந்தா சரிதான்."
"நான் ஹேப்பி தான் அண்ணி!" எனப் புன்னகை சிந்தியவள், "அப்புறம் அண்ணனைப் பத்தி உங்கக்கிட்ட சொல்லணும்."
"உன்னோட அண்ணனா?"
"ம்ம்.."
பார்வையைச் சுழற்றினாள். சாகருடன் இணைந்து சுற்றிக் கொண்டிருந்தான் சத்யகீர்த்தி. உண்மையில் இருவரும் சேர்ந்துதான் திருமண ஏற்பாடுகளைக் கவனித்தனர்.
தந்தை கதிரவனிற்கு அழுத்தத்தைக் கொடுக்காது, பொறுப்பு முழுமையையும் தானே ஏற்றுக் கொண்டான் ஆடவன்.
தங்கையை மணமுடிக்கப் போகும் மாமனின் வீட்டிலும் இதே நிலைதான் என்பதால், இருவருமாய் இணைந்து கொண்டனர்.
சாகரின் வழிகாட்டுதலில் சத்தி தனது சிறுசிறு தவறுகளை திருத்திக் கொண்டான் என்றால், மச்சினனின் சொல்லில் பணிகளை இலகுவாகச் செய்யும் வழிமுறைகளை அறிந்து கொண்டான் மாமனானவன்.
பந்தக்கால் நடும் வைபவத்தின் பொழுது அவனைப் பக்கவாட்டில் பார்த்திருந்த மேகவி, அதன்பின்னர் தோழி சிந்தாமணியிடம் பேசி மாப்பிள்ளையைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொண்டாள்.
பிரார்த்தனாவின் தமையன் என்று அறிந்த பின்னர், மற்றவற்றைப் பற்றி அவளிற்கு ஆழ்ந்து சிந்திக்கத் தோன்றவில்லை.
'என்ன நடந்திருக்கும்? தன்னிடம் விபரம் எதுவும் உரைக்காது, எதற்காக இந்த அவசர திருமணம்? பெரியவர்களின் எண்ணம் யாது?' என்பதை எல்லாம் மிகச் சரியாகவே கணித்து விட்டாள்.
புஷ்பவதியின் பின்னடையும் உடல்நிலை, அதற்கு ஆதாரமாய் அமைந்து போனது.
இருபத்து ஐந்து வயதை அடைந்த பெண்ணிற்கு நல்முறையில் மணவாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை கதிரவனிற்கு. அவளை மணக்க தயாராக இருக்கும் சாகரனிற்கோ, தங்கையைக் கரையேற்றி விட்டு தனது வாழ்வினைப் பார்க்கும் எண்ணம்.
மேகவியின் பிடிவாதமானது, இரு குடும்பத்தாரின் அமைதியையும் நிம்மதியையும் குலைத்துக் கொண்டிருந்தது என்பதே மெய்.
'அவளின் திருமணம் தான் அனைத்திற்கும் முடிவு!' எனும் பொழுது, பெரியவர்களின் சிந்தனையும் அதுவாகத்தானே இருக்கும்?
'தன்னைப் போலவே சத்தியும் இதில் சிக்கிக் கொண்டான் போலும்!' என நினைத்தாள். அத்தோடு, 'தங்கையின் காதல் கை கூடுவதற்காக தன்னுடனான திருமணத்திற்குச் சம்மதித்து இருக்கக் கூடும்!' என்று அனுமானித்தாள்.
உண்மையில் மங்கையின் எண்ணம் அனைத்தும் சரியே! ஆனால் இவை இரண்டையும் கடந்து வேறொரு முக்கிய காரணமும் இருந்தது. அது, சத்யகீர்த்திக்கு மங்கையின் மீது உண்டான மையல்!
'அது எப்பொழுது? எத்தருணத்தில்? எதனால்?' என்றெல்லாம் பின்னர் அறியலாம்.
பிரார்த்தனாவின் வாய் மூலமாக அவளின் தமையனைப் பற்றி, 'சென்னையில் பணி புரிகிறான். நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி இருக்கிறான். அவனின் அடிப்படைத் தேவை போக, மீத வருமானம் முழுவதையும் தந்தையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுவான். வீட்டிற்காக வாங்கிய கடனானது சத்தியின் ஊதியத்தில் தான் செலுத்தப் படுகிறது. எவரிடமும் இயல்பாய் பழகக் கூடியவன்.
சிறு வயதில் விளையாட்டு தனம் அதிகம் கொண்டவன். அன்னையின் உடல்நிலையாலும் அதிகரித்த பொறுப்புகளாலும், அவனின் அந்த குணம் மாற்றம் கண்டுவிட்டது. பள்ளிக் காலம் முதல் தற்பொழுது வரை, பெண் தோழிகள் என்று எவரும் கிடையாது. காதல் பள்ளியின் முதல் படிக்கட்டில் கூட அடியெடுத்து வைத்திடாதவன்.' என மேலும் சில விசயங்களை அறிந்து கொண்டாள்.
'குறை என்று சொல்வதற்குப் பெரிதாய் எதுவும் இல்லை. தனது தமையனைப் போல்தான் அவனும்!' என்று தான் தோன்றியது மேகவிக்கு.
மங்கைக்கு ஆண் இனத்தின் மீது உண்டான அவநம்பிக்கையால், இத்திருமணத்தை ஏற்பதில் பெரும் தயக்கம் இருந்தது. எனினும் குடும்பத்தாருக்காக அதைச் சகித்து கொள்வது என முடிவெடுத்து இருந்தாள்.
அதற்கு 'சத்யகீர்த்தியிடம் பேசி அவனையும் தன்னோடு ஒத்துழைக்கும் படி கேட்க வேண்டும்!' என்று எண்ணிக் கொண்டாள்.
எண்ணங்கள் யாவும் ஈடேறி விட்டால் வாழ்வில் சுவாரஸ்யம் என்பது ஏது.?
சிந்தித்திடாத அளவிற்கான சுவாரஸ்யங்களையும், வியப்புகளையும் அவளிற்காக வைத்துக் காத்திருந்தது எதிர்காலம். அக்காலத்தோடு இணைந்து அவனுமே காத்திருந்தான்.
இரு ஜோடிகளுக்கும், நிச்சயதார்த்த நிகழ்வைத் துவக்கினர். தாம்பூலம் மாற்றுதல், நிச்சய ஓலை வாசித்தல், அருகருகே அமர வைத்து நலங்கு வைத்தல் போன்ற சடங்குகளுடன் இரண்டரை மணி நேர முடிவில் விழா இனிதே நிறைவடைந்தது.
உறவுகள் எப்பொழுதும் நிழல் போல் சுற்றி இருந்ததால், மணமாகப் போகிறவர்களால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள இயலவில்லை.
சாகரனும் பிரார்த்தனாவும் அந்த இனிய அவஸ்தையை இரகசியமாய் சுகித்தனர் என்றால் மேகவியோ நடக்கும் நிகழ்வோடு ஒவ்வொரு நொடியும் தன்னை பொருத்திக் கொள்ளும் முயற்சியில் இருந்தாள். சத்தி எதுவும் அறியாதவன் போல் அமைதியாய் இருந்து கொண்டான்.
இடையில் இரண்டு முறை மங்கை அவனிடம் பேச முயல, ஆடவனோ அதற்கான வாய்ப்பை அளிக்காது கண்டும் காணாதது போல் இருந்தான்.
அவளிற்கோ.. 'திருமணத்திற்கு முன்னரே தங்களின் உறவைப் பற்றி தெளிவாய் பேசி விட்டால் நல்லது!' என்ற எண்ணம்.
அவனோ, 'மங்கல நாண் பூட்டிய பின்னர் பேசிக் கொள்ளலாம். முன்னரே ஒருவருக்கொருவர் ஏதேனும் சொல்லி வாக்கு வாதம் வந்து விட்டால் குடும்பத்தினரின் மகிழ்வு தொலைந்து போகுமே?' என யோசித்து அதனைத் தவிர்த்தான்.
இவள் கிழக்கே நின்றால், அவன் மேற்கு நோக்கி சென்றான். வடக்குப் பக்கம் போனால், தெற்குத் திசையில் திரும்பினான். இருவரும் எதிரெதிர் துருவத்தில் தன்னிலையிலேயே நின்று கொண்டு, திருமண தினத்தின் விடியலை வரவேற்றனர்.
அதிகாலை நான்கு மணியளவில் ஷீலா மகள் இருந்த அறையின் கதவைத் தட்ட, அடுத்த நொடியே தலையைத் துவட்டிய படி திறந்தாள் மேகவி.
அவளை ஏற இறங்க பார்த்தவருக்கு மயக்கம் வராதது ஒன்றுதான் குறை.
"என்னம்மா?" என்றவளிடம், "என்ன அதுக்குள்ள குளிச்சிட்ட.?" என வியப்பு குறையாது வினவினார்.
"ஏழரைக்கு முகூர்த்தம்னு சொன்னீங்க இல்ல? ரெடியாக வேணாமா? என்னோட தலை காயிறதுக்கே ஒருமணி நேரம் ஆகும். உங்களுக்கு தெரியும் தான?"
"அது சரிதான். ஆனா, நான் எதுவும் சொல்லாம நீயே எழுந்திரிச்சிருக்கியே?"
"அலாரம் வச்சிருந்தேன்."
"என்ன இந்த திடீர் மாற்றம்?"
"மண்டபம் வரைக்கும் வந்தாச்சு, இனிமேல் உங்கக்கிட்ட எல்லாம் பேசியோ, வாதாடியோ, பிடிவாதம் பிடிச்சோ, சண்டை போட்டோ ஒன்னும் ஆகப்போறது இல்ல. அப்புறம் எதுக்கு தேவையில்லாம என்னோட எனர்ஜியை வேஸ்ட் பண்ணனும்? அதான் நானே சுச்சுவேஷனை அடாப்ட் பண்ணிக்கிட்டேன்."
"இது நிஜம் தானா? இதுக்குப் பின்னாடி எதுவும் உள்நோக்கம் இல்லையே.?"
"ம்மா.. நீங்க நம்பலாம்! அப்படி எல்லாம் சொந்தக்காரங்க முன்னாடி உங்களைச் சங்கடப்பட விடமாட்டா, உங்க பொண்ணு!"
"அந்த நம்பிக்கையில தான், நாங்க இந்தக் கல்யாணத்துக்கே ஏற்பாடு செஞ்சோம்!" என மகளைப் பற்றி மனதில் இருந்த எண்ணத்தை ஷீலா வெளிப்படையாய் உரைத்திட, மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
அடுத்தடுத்த பணிகள் துரிதமாய் நடந்தேற, குறித்த நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு திருமணங்களும் நன்முறையில் நடந்தேறின.
இரு புதுமண தம்பதியரும் தம்தமது துணையுடன் இணைந்து, மணமேடையில் நின்று விருந்தினர்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மரியாதை தெரிவிக்கும் விதமாய் கைக்கூப்பி வணங்கிட, குடும்பத்தார் நிறைவான மனதுடன் அவர்களைப் பார்த்திருந்தனர்.
அரங்கில் கூடியிருந்த அனைவரது உணர்வுகளையும், தவறாது நினைவுகளின் நிழலாய் தனது கருவியில் பதிவு செய்து கொண்டார், புகைப்படக் கலைஞர்.