• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா வித் லவ் சீதா -- 15

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 15

இந்திரராவணன் உண்மையிலேயே ஒரு மன்னன் என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவளுக்கு உறக்கமே வரவில்லை..

விடிய விடிய முழிச்சுட்டிருந்து விடிஞ்ச பிறகு தான் கண்ணுறங்கினாள்..

காலை ஆறு மணி..

விடிந்த பிறகும் இப்படி அடித்து போட்டது போல் உறங்குகிறாள் இந்த பெண்ணிற்கு என்னாயிற்று என்பது போல் கண்களை கசக்கி கொண்டே எழுந்தமர்ந்தான் ராவணன்..

வெளியே சென்று கை கால் முகம் கழுவி விட்டு வேடிக்கை பார்த்துவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டும் அறைக்குள் வந்து பார்த்தான் அவன்..

அப்போதும் அவள் எழாமல் இருக்கவும் அவனுக்கு சந்தேகம் வந்து அவள் அருகில் சென்றான்..

" சீதா சீதா.. விடிந்து விட்டது பார் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே??", என்று கூறி எழுப்ப முயற்சி செய்தான்..

ஆனால் அவனுடைய குரலை கேட்டு அவள் எழுந்தால் தானே ??

குட்டி கும்பக்கரணி போல உறங்கிக் கொண்டிருந்தாள்..

வாய் வழியாக கூப்பிட்டு பார்த்தால் வேலைக்காகாது என்று கடைசியில் அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்தான்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளின் கன்னத்தை அவன் தட்டவும் திடுக்கிட்டு போய் கண் விழித்தாள் சீதா..

கண் விழித்த அடுத்த நொடி அவளுடைய முகத்தின் அருகே க்ளோஸப்பில் தெரிந்த ராவணனின் முகத்தை பார்த்ததும் அரண்டு போய்விட்டாள்..!!

" ஐயோ மன்னா... என்னை மன்னித்துவிடு நான் எந்த தப்பும் பண்ணல.. தயவுசெஞ்சு எனக்கு எந்த தண்டனையும் கொடுத்துடாத.. எங்க அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு.. என்னை விட்டுடு..", என்று கத்திக் கொண்டே கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

" சீதா.. இங்கே பார்.. எதற்காக என்னைப் பார்த்து பயப்படுகிறாய்?? நான் தான்.. நான் தான் உன்னுடைய இந்தர்.. என்னை நீ இப்படித்தானே அழைப்பாய் ?? என்னை பார்த்து எதற்காக இப்போது பயப்படுகிறாய்?? என்னாயிற்று உனக்கு கெட்ட சொப்பனம் எதுவும் கண்டாயா??"

" என்னது?? சொப்னா வா?? என் பேரு சொப்னா இல்ல.. என் பேரு சீதா..", என்றவளின் மண்டைக்குள் இன்னொரு யோசனை தோன்றியது..

ஒருவேளை இந்த சொப்னா தான் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருந்த இவனுடைய மனைவியோ?? என்று அவளுடைய மூளை ஏடாகூடமாக யோசிக்க தொடங்கியது..

" சொப்னா அல்ல சொப்பனம்.. அதாவது கனவை தான் அப்படி சொன்னேன்.."

" ஓஹோ அப்படியா?? சரி எதுக்கு காலங்காத்தால உன் மூஞ்சிய கொண்டு வந்து குளோசப்ல காட்டுற ??"

" அப்படி என்றால்??"

" அது சரி நீ ஒரு மன்னனா ?? அது வேற அப்பப்போ மறந்து தொலைஞ்சுடுறேன்", என்று கூறி தலையில் கை வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்தவள்..

" சரி முகத்தை கழுவிட்டு வா நாம வெளியே போவோம்"

" ஏற்கனவே நான் முகம் கழுவியாயிற்று.. நீதான் இன்னும் முகம் கூட கழுவாமல் அப்படியே இருக்கிறாய்"

" போதும் போதும் உன் புராணம்.. நான் போய் பார்த்துக்கிறேன் ரொம்ப கிண்டல் பண்ணாத", என்று சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூமுக்கு சென்றாள்.

பல் துலக்கும் போதும் சரி குளிக்கும் போதும் சரி அவளுடைய நினைவெல்லாம் முந்தின இரவு வலைதளங்களில் அவனைப் பற்றிய தகவல்களை சேகரித்த நினைவு தான் வந்து வந்து போனது..

அப்படின்னா இம்புட்டு நாளாக நான் ஒரு ராஜா கூட தான் இருந்தேனா?? அதுவும் அழகான கம்பீரமான ராஜா?? என்று யோசித்து மெய் சிலிர்த்துப் போனாள் அவள்.

ஆமாம் ஆமாம்.. அதுவும் திருமணமான ராஜா என்று சொல்லி கிண்டல் செய்து சிரித்தது அவளின் மனசாட்சி இன்னொரு புறம்..!!

அதான பார்த்தேன்.. என்னடா இன்னும் ஆளே காணோமேன்னு பார்த்தேன் என்னை கிண்டல் செய்யனும்னா முதல் ஆளாக வந்துடுவியே.. போய் வேலையை பாரு எனக்கும் நிறைய வேலை இருக்கு என்று அதட்டி விட்டு வேகமாக ஒரு காக்கா குளியல் போட்டுக் உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்..

" என்னாச்சு இந்தர் நீ டிரஸ் மாத்தலையா உனக்கு நிறைய டிரஸ் வாங்கி கொடுத்தேனே.. அதாவது உடை மாற்றவில்லையா??", என்று ஜாடை காட்டி கேட்டாள் அவனை.

" நான் குளித்து விட்டேன் சீதா.. ஆனால் எந்த உடை அணிவது என்று தான் எனக்கு தெரியவில்லை"

" அது சரி நாம என்ன பொண்ணா பாக்க போறோம் டிரஸ் எல்லாம் செலக்ட் பண்றதுக்கு எதையாவது எடுத்து போட்டுட்டு வருவானா.. கேள்வி கேட்டுட்டு நிற்கிறானே", என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவன் கைப்பிடித்து தரதரவென்று அழைத்துச் சென்றாள் அறைக்குள்..

அதன் பிறகு அவள் வாங்கி தந்திருந்த இரண்டு மூன்று செட் உடைகளில் ஒன்றை தேர்வு செய்து அவனை அணியச் சொன்னாள்.

கருப்பு நிற ஜீன்ஸ் பாண்ட் வெள்ளை நிற டீ ஷர்ட் அது..

அவனுடைய கம்பீரத்திற்கு ஏற்ற உயரத்திற்கும் பொருத்தமான உடை அது..

உடைமாற்றிக் கொண்டு வெளியே நடந்து வந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் மூளை இன்னொரு பக்கம் அவளை எச்சரித்தது..

எதுக்கும் பார்த்து பத்திரமா இவன வெளியே கூட்டிட்டு போ இல்லன்னா பாதுகாப்பு கொடுக்க உன்னால் முடியாது ரோட்ல போறவ வர்றவ எல்லாம் அவனை சைட் அடிக்க ஆரம்பிச்சுருவாளுங்க.. நீயே அவன முழுங்கற மாதிரி பாக்குற இதுல மத்தவங்களை எப்படி குறை சொல்றது?? என்று காரி துப்பியது அவளுடைய உள்மனம்.

உடனே அவனுடைய கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு வெளிய வந்து கதவை பூட்டியவள் ஸ்கூட்டரை ஆன் செய்து அவனை அமரச் சொன்னாள்.

இருவரும் நேராக பிரபல ஹோட்டலுக்கு சென்றார்கள்..

அதில் யாரும் வந்து தொந்தரவு செய்யாத வண்ணம் தனியாக இருந்த கேபினில் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

" இப்படி தினமும் வெளியே வந்து உணவு உண்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல சீதா.. எந்த உணவாக இருந்தாலும் வீட்டில் தயாரித்து உண்பது தான் நல்லது", என்று அவன் அறிவுரை கூறவும் இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

" உனக்கென்ன நீ சொல்லிட்டு போயிருவ சமைக்கிற எனக்கு தானே தெரியும்.. எனக்கு ஒரு பிரட் ஆம்லெட் கூட செய்ய வராது ஆனா உன்னால நான் இந்த ரெண்டு நாட்களாக அடுப்படியில் சமைச்சுட்டிருக்கேன் சில நேரங்களில்.. சமையலை எல்லாம் அப்புறமா கத்துக்குறேன் இப்போ அதுக்கு நேரமில்ல எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு", என்றாள் அவள் சிடுசிடுப்புடன்.

அதற்கு மேல் அவனும் எதுவும் பேசவில்லை அதன் பிறகு அவள் ஆர்டர் செய்திருந்த உணவுகள் வரவும் இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பினார்கள்..

அவனை அழைத்துக்கொண்டு அவள் அடுத்ததாக சென்ற இடம்தான் லைப்ரரி..

வலைத்தளங்களில் அவள் சேகரித்த விஷயம் நிஜமாகவே உண்மைதானா அல்லது பொய்யான தகவலா என்பதை அறிந்து கொள்வதற்காக லைப்ரரி நோக்கி பயணம் செய்தாள்..

அந்த லைப்ரரியில் பழங்காலத்து புத்தகங்கள் முக்கியமாக மன்னர்கள் ஆட்சி செய்த போது நடந்த சம்பவங்கள் என்று அனைத்தையும் போட்டு புட்டு புட்டு வைத்திருப்பார்கள் சில புத்தகங்களில்..

அதுவும் பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த பல சம்பவங்கள் குறித்து அங்கு பல புத்தகங்கள் இருப்பதை அவள் ஏற்கனவே பார்த்திருக்கிறாள் அதனால் இவனைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்குமா என்பதற்காக அங்கே ஆராய வந்திருந்தாள்..

நூலகத்திற்கு அவனை அழைத்து வந்தவள் அவனை ஒரு இடத்தில் அமர வைத்தாள்..

அங்கிருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு புத்தகத்தை தேடிக் கொண்டும் அல்லது ஏதோ ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருந்தார்கள்..

இங்கே இத்தனை அமைதியாக இருக்கிறதே கோயில் போல இது எந்த இடம் எல்லோரும் கையில் ஏதோ ஒரு புத்தகத்தை ஏந்தி கொண்டு படித்துக் கொண்டிருக்கிறார்களே இது என்ன பாடசாலையா?? ஒன்றும் புரியவில்லையே என்ற குழப்பத்துடன் அங்கும் இங்கும் திருதிருவென்று விழித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

நேரமாக ஆக இன்னும் சீதா வரவில்லையே என்று அவனுக்கு கவலையாக இருந்தது ஆனால் அவளை தேடப் போனால் அதற்கும் சேர்த்து திட்டு விழும் அல்லவா அதனால் மனதிற்குள் பதட்டத்தோடு எப்போது அவள் வருவாள் என்று காத்திருந்தபடி அதே இடத்தில் அமர்ந்திருந்தான் அவன்.

இன்னொரு பக்கம் அங்கே இருந்த ஸ்டோரில் ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டிருந்தாள் அவளுக்கு தேவையான புத்தகங்களை..

பழங்காலத்து நூல்கள் அதுவும் வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைந்த புத்தகங்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்..

அங்கே பதினெட்டாம் நூற்றாண்டில் ஆண்டு கொண்டிருந்த மன்னர்களின் பட்டியல் ஒன்று இருந்தது..

அதில் ஒவ்வொரு அரசரின் பெயராக பார்த்துக் கொண்டே வந்தால் அந்தந்த அரசரின் பெயருக்கு கீழே நான்கைந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..

அவர்களை பற்றிய விவரங்கள் வரலாறு அவர்கள் போரிட்ட இடத்தின் விவரங்கள் என்று அனைத்தும் இருந்தது..

அப்படி வரிசையாக பதினெட்டாம் நூற்றாண்டில் ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள் பற்றிய விவரம் எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்த போது தான்..

அவளுக்கு சில பெயர்கள் கண்ணில் பட்டது..

வஜ்ரதேவன், மாவீரன் விஷ்வ புத்திரன், இந்திரஜித் அரசன் இப்படி வரிசையாக ஒவ்வொரு அரசரின் பெயரையும் வாசித்துக் கொண்டே வரும் பொழுது மங்களாபுரத்து குறுநில மன்னன் இந்திர ராவணன் என்ற பெயரை சுமந்து கொண்டு ஒரு பெரிய புத்தகம் அங்கே இருப்பதை கண்டாள்..!!

தேடி போன தெய்வம் குறுக்கே வந்தது போல்.. அவளுக்கு ஆச்சரியம் அதிசயம் எல்லாம் ஒரே நேரத்தில் உண்டானது..

உடனே, கண்கள் பளிச்சிட அந்த புத்தகத்தை தூக்கிக்கொண்டு தனியே போய் அமர்ந்து கொண்டாள் ராவணனின் கண்ணில் படாமல்..

மிக வேகமாக அந்த புத்தகத்தை புரட்டத் தொடங்கினாள்..

கடவுளே அவன் வர்றதுக்குள்ள இதை வாசிச்சு முடிக்கணுமே இல்லன்னா பார்த்துட்டு இது என்ன அது என்ன ஏன் இப்படி இருக்கு எதுக்காக இதை படிக்கிற யாரைப்பற்றி வாசிக்கிறாய் எனக்கும் காட்டு நானும் படிக்கிறேன் இப்படி ஏதாவது சொல்லிட்டு பக்கத்தில் வந்து நின்னுட்டு தொல்லை பண்ணுவான் அவன்.. அதனால் அவன் வரதுக்குள்ள எல்லா தகவல்களையும் படிச்சிடனும் முடிஞ்சளவு மொபைலிலாவது போட்டோ எடுத்து வச்சுக்கணும் என்று நினைத்துக் கொண்டாள் சீதா..

ஆரம்பத்தில் அவனுடைய பெயர் ஊர் அவன் வளர்ந்த விதம் அவனுடைய பராக்கிரமங்கள் என்று அனைத்தும் அங்கே விவரிக்கப்பட்டிருந்தது..

இதெல்லாம் ஏற்கனவே நாம பார்த்துட்டோம்.. இந்த விஷயம் நமக்கு தேவையில்லை நமக்கு தேவையான தகவல் வேற.. அதை முதலில் தேடணும் என்று வேக வேகமாக அந்த புத்தகத்தை புரட்டினாள்..

அப்போது அவள் தேடிய விவரம் கண்ணில் பட்டது..

எல்லாம் சமூகமாக சென்று கொண்டிருந்த மன்னனின் வாழ்வில் அந்த ஒரு நாள் மட்டும் வராமல் போயிருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ என்கிற வாசகத்தை படித்தவுடன்..

அப்படியே வாசிப்பதை நிப்பாட்டி விட்டு கண்களை அடுத்த வரிகளில் ஓடவிட்டாள் படபடப்புடன்..!!

மன்னனாக இருந்தாலும் அவனுடைய கடமையை அவன் சரியாக செய்வான் இந்திர ராவணன்..

அதேபோல் அன்று வயல்வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மக்களை காண்பதற்காக அவன் உலா வந்தான்..

எப்பொழுதும் மாறுவேடத்தில் தான் அவன் வெளியே வருவான் பகல் நேரத்தில்..

அதேபோல் அன்றும் மாறுவேடத்தில் அவன் உலா வரும் பொழுது..

வயக்காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணிகள் சோகமாக இருந்தார்கள்..

குரலை மாற்றிக் கொண்டு பேசத் தொடங்கினான் ராவணன்..

" என்னாயிற்று பெண்களே இப்படி சோகமயமாக அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்படி வேலை பார்த்தால் பிறகு உலகம் என்னாவது?? அவரவர்களின் இனிமையான குரலில் பாடல் ஒன்றை பாடிக் கொண்டே வேலை செய்தால் வேலை பளு தெரியாமல் இருக்குமல்லவா?? இந்த நாட்டின் மன்னரும் சந்தோஷப்படுவார் அரசவையில் இருந்து கொண்டே", என்றான் அவன்.

" அதுசரி நாங்கள் இங்கிருந்து பாடினால் அங்கு அரசவையில் இருக்கும் மன்னனுக்கு எப்படி கேட்குமய்யா?? முதலில் நீர் யார் ?? அதை கூறும்"

" நான் ஒரு நாடோடி.. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மரத்தடி நிழலை தேடி வந்தேன் வந்த இடத்தில் உங்களை பார்த்தேன் அதனால் தான் கூறினேன். உங்களுடைய குரலில் இனிமையான பாடலைக் கேட்டால் அப்படியே நான் உறங்கி விடுவேன்"

" நீர் உறங்குவதற்காக நாங்கள் பாட வேண்டுமா போய் வேலையை பாருய்யா", என்று விட்டு அவரவர்கள் வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள்..

இப்படி எல்லாம் சொன்னால் பாட மாட்டார்கள் என்ன செய்யலாம் என்று யோசிக்க திடீரென்று அந்த மன்னனுக்கு குறுக்கு புத்தி வேலை செய்தது..

கம்பீரமான மன்னனாக இருந்து போர் புரிந்து நாட்டு மக்களையும் நாட்டையும் காப்பாற்றி வந்தாலும் இயல்பாகவே இந்திரா ராவணனுக்கு குறும்புத்தனம் அதிகம்..

அதனால் அங்கே மரத்தடி நிழலில் சேலையில் கட்டி தொங்கவிட்டபடி தொட்டிலில் குழந்தைகள் அதில் உறங்கி கொண்டிருக்க..

அதைப் பார்த்ததும் மன்னனுக்கு ஒரு யோசனை வந்தது உடனே யாரும் கவனிக்காத நேரமாக பார்த்து தொட்டிலின் அருகே சென்று குழந்தையை நறுக்கென்று கிள்ளிவிட்டான் இடுப்பில்..

அடுத்த நொடி "வீல் வீல்", என்று குழந்தை அலற தொடங்கியது..

அந்த குழந்தைக்கு சொந்தக்காரி ஓடோடி வந்தாள் வேலையை போட்டுவிட்டு..

" அச்சச்சோ அழாதீங்க தங்கமே ஆராரோ ஆரிராரோ", என்று பாடலை பாடத் தொடங்கினாள்.

"எப்படி வழிக்கு வந்தீர்கள் பார்த்தீர்களா?? இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது உங்கள் பாட்டு??", என்று கேட்டு அவன் சிரிக்கத் தொடங்கினான் சப்தமாக அந்த மங்களாபுரமே அதிரும் வண்ணம் ..!!

அந்த நேரம்..

" நிறுத்து இந்திர ராவணா..", என்று கர்ஜனையாக ஒலித்தது ஒரு கம்பீரக் குரல் அவன் பின்னிருந்து......!!

- தொடரும்..

 
Top Bottom