• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா வித் லவ் சீதா - 21

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 21

ஒருவரை மறந்து ஒருவர் இதழ் முத்தத்தில் இணைந்திருக்க.. இந்தரும் சீதாவும் மெய் மறந்து அமர்ந்திருந்தார்கள்..!!

அவர்களின் மோன நிலையை கலைப்பது போல கார் ஹாரன் ஒலி சத்தமாக ஒலிக்கவும், இருவரும் திடுக்கிட்டுப் போய் விலகி அமர்ந்து கொண்டார்கள் பிறகு..!!

" மேடம் நீங்க சொன்ன இடம் வந்துடுச்சு", என்று டிரைவர் சொல்லவும் தான் அவள் ஜன்னல் பக்கம் திரும்பி பார்த்தாள்.

அங்கே..

"மீனாட்சிபுரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", என்கிற பெயர் பலகை கம்பீரமாக நின்று கொண்டிருந்தது..!!

'வெப்சைட்ல பார்த்த மாதிரியே மீனாட்சிபுரம் வந்தாச்சு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் சிவன் கோவில் வந்துவிடும் அதன் பிறகு நம்மளுடைய தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க வேண்டியதுதான்', என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அவள்..

பதினைந்து நிமிட பயணத்திற்கு பிறகு கார் அந்த சிவன் கோவில் முன்பாக வந்து நின்றது..

அடுத்த நிமிடம் அவனும் அவளும் காரை விட்டு கீழே இறங்கினார்கள்..

டாக்ஸி ஓட்டுனரிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு ராவணனை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றாள் சீதா..

அவர்கள் கோவிலுக்கு வரும் பொழுது கிட்டத்தட்ட நேரம் 11:30 ஆகியிருந்தது..

இன்னும் அரை மணி நேரத்திற்குள்ளாக நடையை சாற்றி விடுவார்களே என்ற பதட்டத்தோடு அவள் உள்ளே வந்தாள்..

" இந்த கோவில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறதே பெரிய பெரிய கற்களால் கட்டப்பட்ட கோவில் போலிருக்கிறது மிகவும் அழகாக இருக்கிறது அல்லவா சீதா??", என்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அவள் பின்னாடியே ஓடிவந்தான் அவன்.

" கொஞ்ச நேரம் பேசாமல் வா..", என்று சொல்லிக் கொண்டே அவள் முன்னேறினாள்.

பக்தர்கள் அனைவரும் அங்கே தெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தார்கள்..

12 மணி நெருங்கிய காரணத்தினால் அத்தனை கூட்டம் இல்லை எல்லோரும் காலையிலேயே தரிசனத்திற்காக வந்து விட்டு போய்விட்டார்களோ என்னவோ சொச்ச நபர்கள் மட்டுமே இருந்தார்கள்..

கர்ப்ப கிரகத்தில் இருக்கும் தெய்வத்தின் முன்பாக நின்ற வண்ணம் அங்கே காத்திருந்தாள் சீதா.

" ஆரத்திய தொட்டு கும்பிட்டுக்கோங்க", என்று சொல்லி கொண்டு அவள் முன்னாடி வந்து நின்றார் ஐயர்.

" சாமி.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நடையை சாத்திடுவீங்களா??"

" ஆமாம்மா ஏன் உங்களுக்கு தெரியாதா நீங்க வெளியூரா?? இன்னும் கொஞ்ச நேரத்தில் நடையை சாற்றி விடுவோம்.."

" எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் இங்கே இருக்கலாமா??".

" அச்சச்சோ அப்படியெல்லாம் நீங்க இங்க தங்க முடியாதுமா.. நடை சாற்றிய பிறகு யாரும் இங்கே உள்ளே கோவிலுக்குள் இருக்கக்கூடாது அனுமதி கிடையாது அதே மாதிரி நீங்கள் இங்கே இருந்தால் எங்களுக்கு தான் பிரச்சனை வரும்.. என்ன காரணத்திற்காக இங்கே இருக்க வேண்டும் என்று சொல்றீங்க?? நீங்க யாரு முதல்ல அதை சொல்லுங்க??"

" நான் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இந்த கோவிலை பற்றி நான் ஒரு ப்ராஜெக்ட் பண்றேன் அதுக்கு நான் இங்கே கொஞ்ச நேரம் இருக்கணும் இந்த கோவிலை பற்றியும் இங்கே இருக்கும் சிலைகளைப் பற்றியும் நான் எழுத போறேன்.. அதை ப்ராஜெக்ட்டாக நான் கல்லூரியில் சப்மிட் பண்ணனும்.. அதுக்கு நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.. நான் மட்டும் தான் இங்கே இருக்கணும்னு சொல்ல வரல உதவிக்கு உங்களில் யாராவது ஒருத்தர் என் கூட இருந்தாலும் எனக்கு ஓகே தான் இந்த கோவிலை பற்றிய தகவல்கள் எனக்கு நீங்க சொன்னால் போதும் அதை நான் குறித்துக் கொள்வேன்.. ரொம்ப நேரம் எல்லாம் இங்கே இருக்க மாட்டேன் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு மணி நேரம் அவ்வளவுதான் அதற்கு நீங்கள் எனக்கு அனுமதி தரணும்..", என்று கெஞ்சுதலாக அவள் கேட்டுக் கொண்டாள்.

" இல்லம்மா நீங்க என்ன சொன்னாலும் சரி என்னால் இதற்கு சம்மதிக்கவே முடியாது அதையும் மீறி நான் சம்மதம் சொன்னாலும் அப்புறம் கோயில் நிர்வாகத்திற்கு நான் தான் பதில் சொல்ற மாதிரி ஆகிவிடும்"

" நீங்க கவலைப்பட வேண்டாம் நான் கொஞ்ச நேரம் தான் இங்கே இருப்பேன் அப்படி என் மேல் சந்தேகம் இருந்தால் நீங்களும் என் கூடவே இருங்க.. ஆனால் முடியாது அப்படின்னு மட்டும் சொல்லிடாதீங்க.."

" அப்படி நீங்க ப்ராஜெக்ட் பண்ணியே ஆகணும் என்றால் சாயங்காலம் வரலாமே நாலு மணியிலிருந்து நடை திறந்து தான் இருக்கும்"

" அப்படி இல்லை எனக்கு இப்பவே ஊருக்கு போயாகணும் ஒரு அவசர வேலை இருக்கு.. அதனால்தான் கேட்கிறேன் என்னால் சாயங்காலம் வரைக்கும் இங்கே இருக்க முடியாது என்னுடைய சூழ்நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க எனக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ்"

" அதுதான் சீதா இத்தனை முறை கேட்கிறாளே எதற்காக நீங்கள் தயங்குகிறீர்கள்.. ஒரு நாட்டு மன்னனான நானே கூறுகிறேன் அவளுக்கு அனுமதி தாருங்கள் இந்த கோவிலில் இருப்பதற்கு..", என்று உரைத்தான் இந்தர்.

" இது யாரு மா மன்னன் அப்படி இப்படின்னு என்னென்னமோ பேசிட்டு இருக்கான் இந்த பையன்"

" அவர் இப்போ கொஞ்சம் டிப்ரஷன்ல இருக்காரு அப்படி இப்படி ஏதாவது பேசுவார் நீங்க எதுவும் பெருசா எடுத்துக்காதீங்க.. நீங்க எனக்கு கொஞ்சம் உதவி மட்டும் பண்ணுங்க அது போதும்", என்றாள் அவள்.

சிறிது நேர யோசனைக்கு பிறகு அவர் அவளை நிமிர்ந்து பார்த்தார்.

" சரிமா அரை மணி நேரம் தான் உங்களுக்கு டைம்.. அதுக்குள்ள நீங்க என்னென்ன குறிப்புகள் எழுத முடியுமோ எழுதிக்கோங்க உங்களுக்கு உதவிக்கு என்னுடைய ஆள் ஒருத்தரை இங்கே விட்டுட்டு போறேன் அவர் கிட்ட சாவி இருக்கும்.. நீங்க வேலை முடிஞ்ச பிறகு இங்கிருந்து கிளம்பிடுங்க அவர் கோவில் நடையை பூட்டிவிட்டு கிளம்பிடுவார் சரியா??"

" ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி சாமி .. இந்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்", என்று கூறி கைகூப்பி வணங்கினாள் சீதா.

" சரிமா சீக்கிரம் உங்களுடைய வேலைகளை முடித்துவிட்டு கிளம்புங்க.. யாராவது பார்த்தால் எனக்கு தான் பிரச்சனையாகும் எல்லாரும் கிளம்பிய பிறகு நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிங்க.. ஏதோ இந்த கோவிலை பற்றி எழுதப் போறதா சொல்றீங்க அதுக்காக தான் அனுமதி தரேன்.. அதுவும் இல்லாமல் படிக்கிற பிள்ளை வேறு, எதற்காக உங்கள் படிப்பை நான் கெடுக்கணும்?? அரை மணி நேரம் தானே அதுவும் துணைக்கு எங்கள் ஆள் ஒருவர் உங்க கூடவே இருக்கும் பொழுது எனக்கு பயமில்லை.. சீக்கிரமா அதனால் உங்களுடைய வேலையை முடித்துக் கொண்டு கிளம்புங்க", என்றுவிட்டு அவர் கிளம்பினார்.

ஐயர் சொன்னது போலவே சற்று நேரத்தில் கூட்டம் எல்லாம் கலைந்து போய்விட அங்கே கோவில் பிரகாரத்தில் ஒருவரும் இல்லை சீதா ராவணனைத் தவிர..!!

அங்கு இருந்த ஐயர் கிளம்பி சென்ற ஐந்து நிமிடத்தில் அவருடைய உதவியாள் ஒருவன் வந்தான்..

" ஐயா சொல்லி அனுப்பிவிட்டார் என்ன உதவி வேணும் உங்களுக்கு?? என்ன தகவல் வேணும்னு சொல்லுங்க"

" இந்த கோவில் பற்றிய ஹிஸ்டரி எனக்கு வேணும் இந்த வரலாறை நீங்கள் ஒவ்வொன்னா சொல்லிட்டே வாங்க நான் அதை என்னோட போன்ல ரெக்கார்ட் பண்ணிக்கிறேன்", என்று அவள் சொல்லவும் அந்த பையன் அந்த கோவில் பற்றிய விசேஷங்களை எடுத்துக் கூற தொடங்கினான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஃபோனை ஆன் பண்ணி ரெகார்ட் செய்து ஒரு கட்டத்தில் அந்த ஃபோனை இராவணன் கையில் கொடுத்து , "இதை நீ கவனமாக இப்படியே பிடித்துக்கொள் சற்று நேரத்தில் நான் வந்து விடுகிறேன்", என்று சொல்லி விட்டு அவள் விலகிச் சென்றாள்.

" ஒரு நிமிஷம் நில்லுங்கம்மா நீங்க பாட்டுக்கு எங்கேயோ போறீங்களே எங்கே போறதா இருந்தாலும் என்னையும் கூடவே கூட்டிட்டு போங்க உங்களை எங்கேயும் தனியா அனுமதிக்க கூடாது அப்படின்னு எனக்கு உத்தரவு வந்திருக்கு அதனால் தனியா போகாதீங்க", என்றான் அந்த பையன்.

அடடா இது என்ன தொல்லை மேல் தொல்லையாக வருகிறதே??, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வேறு வழியில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் சற்று நேரம்..

கோவில் வரலாறு பற்றி கவனமாக அந்த பையன் சொல்ல சொல்ல ராவணன் கையில் இருந்த ஃபோனில் அது ரெக்கார்ட் ஆக தொடங்கியது..

இன்னொரு பக்கம் சிவன் சிலைக்கு முன்பாக இருந்த நந்தி சிலையை பார்த்தாள் சீதா..

அந்தப் புத்தகத்தில் இருந்தது போலவே இந்த நந்தி சிலைக்கு கீழே தான் அந்த ஏடுகள் இருக்குமோ??

ஆனால் இந்த சிலையை எப்படி திருப்புவது என்று தெரியலையே?? என்ன பண்ணலாம் இப்போ?? என்று யோசித்துக் கொண்டே இருந்தவள், ஏதோ ஒரு பொருளை கீழே போடுவது போல் போட்டுவிட்டு குனிந்து நிமிரும் பொழுது தான் அந்த நந்தி சிலையின் அடியில் ஏதாவது இருக்கிறதா என்று உற்றுப் பார்த்தாள்..

அப்போது அந்த சிலைக்கு கீழே வட்ட வடிவத்தில் கற்களால் ஆன ஒரு பொருள் இருந்தது..!!

நேரடியாக பார்த்தால் அது அத்தனை சீக்கிரத்தில் கண்களுக்கு புலப்படாது நன்றாக குனிந்து நந்தி சிலையின் கீழே உற்று கவனித்தால் மட்டுமே அந்த பொருள் கண்ணில் அகப்படும்..

குனிந்து அதை பார்த்துவிட்ட சீதா அது என்னவாக இருக்கும் என்று யோசித்தாள்..

எதற்காக யோசிக்க வேண்டும் பேசாமல் கை வைத்து அது என்னவென்று பார்த்து விடலாம் என்று மெதுவாக கைகளை சிலைக்கு கீழே கொண்டு போனாள்..

ஒரு பார்வை எதற்கும் அந்த பையன் மீது இருக்கட்டும் என்று அவள் நிமிர்ந்து பார்க்க.. அவனோ மிகவும் சுவாரசியத்துடன் சுற்றிலும் உள்ள சிலைகளைப் பற்றி விவரித்து கொண்டிருந்தான்..

எப்படியோ இந்த பக்கம் திரும்பாமல் இருந்தால் சரி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு மெதுவாக அந்த கல்லை அவள் மெல்ல தொட்டு பார்க்கவும்.. அது லேசாக அசைந்து கொடுத்தது..

என்ன இது அசைகிறது??!!

ஒரு வேளை இதை திருகினால் சிலை திரும்பும் போல என்று யோசித்துக் கொண்டே அவள் மெதுவாக கற்களாலான அந்த வட்ட வடிவ கல்லை திருப்பினாள் ..

அதுவும் திரும்பியது..!!

ஆச்சரியத்துடன் அவள் அதை கண்கள் விரிய பார்த்தாள்..

அந்தக் கல் நகர நகர மெதுவாக அந்த நந்தி சிலையும் நகர்ந்தது..!!

- தொடரும்..

 
Top Bottom