அத்தியாயம் 27
மண்டபம் முழுக்க சொந்தக்காரர்கள் நிறைந்து கிடக்க வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளைகள் ஒரு பக்கம்... தாவணி கட்டிக் கொண்டு இளம் பெண்கள் அழகாய் வலம் வந்து கொண்டிருந்தார்கள் இன்னொரு பக்கம்.
மணமேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க... நாதஸ்வரம் முழங்கி கொண்டிருந்தது மங்களகரமாக...
மணப்பெண் கோலத்தில் சீதா கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள் அங்கே...!
கனவில் ராவணன் கண்ட அதே காட்சிகள் இப்போது அவன் கண் முன்னால் நடந்து கொண்டிருந்தது.
'கனவில் கண்ட அதே காட்சி மீண்டும் என் கண் முன்னாடி நடக்கிறது... ஆனால் இதை என்னால் தடுக்க முடியவில்லையே.
இதோ என்னுடைய சீதா கண்ணீர் மல்க அமர்ந்திருக்கிறாள் திருமண கோலத்தில்.
இன்னும் சற்று நேரத்தில் மாப்பிள்ளை கோலத்தில் அர்ஜுன் வந்து விடுவான் அதன் பிறகு அர்ஜுனுக்கு மொத்தமாக சொந்தமாகி விடுவாள் என்னுடைய சீதா...', என்று கவலை கொண்டான் அவன்.
அர்ஜுன் சீதாவை கட்டியணைப்பது போலவும் முத்தமிடுவது போலவும் அவன் கண் முன்னாடி சில காட்சிகள் வந்து வந்து போய் அவனை இம்சை செய்தது.
'என் சீதாவை அவன் கட்டி அணைப்பான் அல்லவா? அவளுடைய அன்பிற்கும் காதலுக்கும் அக்கறைக்கும் முழுதுமாக அவன் தான் சொந்தமாவான் இல்லையா?
இனி சீதாவின் அன்பும் அக்கறையும் எனக்கு சொந்தம் இல்லையா? அவளுடைய கடைக்கண் பார்வை கூட என் மீது படாதா?'
முதல் நாள் நடுரோட்டில் அவளை சந்தித்த காட்சி , அதன் பிறகு அவன் கை பிடித்து அவள் அழைத்துச் சென்றது, அவனுக்காக உணவு தயாரித்தது, வெளியே அழைத்துச் சென்று அவனுக்கு பிடித்ததை வாங்கி தந்தது , திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை என்று கூட பாராமல் தனக்காக அவள் அர்ஜுனிடம் சண்டை போட்டது, இவ்வளவு ஏன்? பெற்ற தாயிடம் கூட தனக்காக அவள் வம்பு செய்தது... இப்படி ஆவனுக்காக அவள் தன்னுடைய மொத்த உலகத்தையும் எதிர்த்து நின்ற காட்சிகள் எல்லாம் அவன் கண் முன்னாடி வந்து போனது...
கடைசியாக கண்களில் காதலை தேக்கி வைத்துக்கொண்டு விரல்கள் நடுங்க அவன் கைகளைப் பற்றி கொண்டு நீ என்னை விரும்புகிறாயா? என்று அவள் கேட்ட கேள்வி மீண்டும் அவன் கண் முன்னாடி வந்து போனது...
கண்களை இறுக்கமாக மூடி அனைத்துக் காட்சிகளையும் ஒரு முறை உணர்ந்தவன் விழிகளிலிருந்து வழிந்தாள் கங்கை பெருக்கெடுத்து...!
ஒரு ஆண்மகன் அத்தனை சீக்கிரத்திலேயே அழ கூடாது மனம் உடைந்து போகக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் அவன் ஆனால் இன்று சீதாவை இழக்கப் போகிறோமே என்கிற எண்ணமே அவனை மொத்தமாக உடைத்திருந்தது...
இவனால் திருமணத்தில் எந்தவித பிரச்சனையும் வராது என்கிற நம்பிக்கையில் ராவணனை முதல் வரிசையில் அமர வைத்திருந்தார் சீதாவின் அம்மா.
அதுவும் கூட சீதாவின் கட்டாயத்தினால் தான்.
யாக குண்டத்தின் முன்பு அமர்ந்திருந்த சீதாவின் விழிகள் கண்ணிமைக்காமல் எதிரில் அமர்ந்திருந்த ராவணனையே பார்த்துக் கொண்டிருந்தது.
இப்போது அவள் விழிகளில் கண்ணீர் இல்லை சோகம் இல்லை மாறாக உணர்ச்சிகளற்ற வெற்று பார்வை தான் இருந்தது...
அதை பார்க்கும் போது அவனுக்கு புரிந்தது அவள் மனதில் ஏகப்பட்ட வேதனை உண்டாகியிருக்கிறது என்று.
தன் பின்னாடியே சுற்றி வந்த எந்த ஆண்மகனையும் திரும்பி பார்க்காமல் இருந்த சீதா முதல் முறையாக தன்னுடைய இதயத்தை இந்த ராவணனிடம் தான் இழந்தாள் மொத்தமாக.
அவனும் தன்னை விரும்புகிறான் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்து விட்டாள் மெத்தனமாக...
அதன் விளைவு தான் இன்று அர்ஜுன் பக்கத்தில் மணமகளாக அமர்ந்திருக்கிறாள்.
'இனி நான் இல்லாமல் என்ன செய்யப் போகிறாய் ராவணா? உன்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? எல்லாரும் உன்னை கிண்டல் பண்ணுவாங்களே பைத்தியம்னு சொல்லி ஒதுங்கி நிற்பார்களே... என்ன செய்வேன்? ஆனால் நீ ஒரு நாட்டின் மன்னன் என்று யாருக்கும் தெரியாது... தெரியவும் கூடாது... அதுதான் விதி...!', என்றெண்ணி வருந்தினாள்.
"இந்த தாலியை எல்லார்கிட்டயும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோ", என்று ஐயர் சொல்லவும் அருகில் நின்று கொண்டிருந்த இளம் பெண் தாலி வைத்திருந்த தாம்பூல தட்டை எடுத்துக்கொண்டு அனைவரிடமும் அட்சதையை கொடுத்து கொண்டே வந்தாள்.
'இன்னும் சற்று நேரத்தில் அர்ஜுன் என் கழுத்தில் தாலி கட்டி விடுவான் அதன் பிறகு மொத்தமாக என் வாழ்க்கையே முடிந்துவிடும் என் காதலும் முற்றுப்பெற்றுவிடும். இனி நான் செய்வதற்கு என்ன இருக்கிறது?
ஏன் என்னை உனக்குப் பிடிக்கவில்லை இந்தர்? அவ்வப்போது உன்னிடம் கண்டிப்பாக நடந்து கொண்டேனே அதனால் பிடிக்கவில்லையா? இல்லை மனதிற்குள் தேக்கி வைத்திருந்த காதலை உன்னிடம் வெளி காட்டாமல் விட்டு விட்டேனே அதனால் உன்னால் என் காதலை உணர முடியவில்லையா?',என்று மனதிற்குள் எழும்பிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் கற்சிலையாக அமர்ந்திருந்தாள் சீதா.
ஒரு நொடி கூட தவறாமல் அவளுடைய கண்கள் ராவணனை படம் பிடித்துக் கொண்டிருந்தது விழிகளால்...!
கண்ணிமைத்தால் எங்கே அவன் மறைந்து விடுவானோ என்பது போல் அச்சத்துடன் கண்ணிமைக்காமல் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...!
ஒவ்வொருவரிடமாக கொடுத்து தாலியை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு எல்லோர் கையிலும் அட்சதை கொடுத்துக் கொண்டே வந்த இளம் பெண் இப்பொழுது ராவணனை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தாள்.
அந்த காட்சியை கண்டதும் அவனுக்கு இதய வீணை அறுப்பட்டது போல் துடிதுடித்து போனான்...!
எதிரில் அமர்ந்திருக்கும் சீதாவையும் தன்னை நெருங்கி வந்து கொண்டிருக்கும் தாலியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் ராவணன் பதட்டத்தோடு.
கண்களை மூடினால் சீதாவின் குரல் தான் கேட்டது அவன் காதுகளுக்கு.
'நீ என்னை விரும்புகிறாயா?', எத்தனை சுலபமாக அவள் பாட்டுக்கு கேள்வி கேட்டு விட்டாள்? நான் பதில் சொல்ல முடியாமல் திணறி போனதால் கடைசியில் இந்த நிலைமையில் வந்து நிற்கிறதே.
நான் உன்னைத்தான் விரும்புகிறேன் சீதா என்று என்னால் இப்பொழுது கூட கூற முடியும் ஆனால் அந்த தைரியம் தான் வரமாட்டேன் என்கிறது', என்று தன்னை தானே நொந்து கொண்டான் அவன்.
'இப்படியே சொல்லாமல் விட்டு விட்டால் உன்னுடைய சீதா பிறகு அர்ஜுனுக்கு சொந்தமாகி விடுவாள் அதைக் கண்கொண்டு பார்க்க போகிறாயா? அட்சதை தூவி வாழ்த்தி விட்டு கனவில் வந்தது போல் அழுது கொண்டே மண்டபத்தை விட்டு வெளியேற போகிறாயா? நாட்டின் குறுநில மன்னனாக வாழ்ந்தால் மட்டும் போதாது ஒரு மன்னனுக்குரிய வீரம் வேண்டும் தைரியம் வேண்டும்... இது எதுவும் இல்லாத நீ எல்லாம் ஒரு மன்னனா? முதலில் ஒரு ஆண்மகனா?', என்று கேள்வி கேட்டு அவனுடைய மனசாட்சி அவனைக் கடிந்து கொண்டது கடுமையாக...!
தாலியை தொட்டு ஆசீர்வாதம் செய்து அட்சதை எடுத்துக் கொள்ளும் முறை இப்பொழுது அவனுடையதாக மாறியது.
விரல்கள் நடுங்க அந்த தாலியை தொட்டு கும்பிட்டவன் கடவுளை வேண்டிக் கொண்டான்.
இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு மூடிய அவன் விழிகளுக்குள், இதழில் புன்னகை மலர கன்னக்குழி அழகோடு சிரித்துக்கொண்டிருந்தாள் சீதா...!
'நிஜமாகவே உனக்கு நான் வேண்டாமா? என்னை இழக்க போகிறாயா இந்தர்? இந்த கணத்தை நீ தவற விட்டு விட்டால் பிறகு எந்த ஜென்மத்தில் நீ என்னை அடையப் போகிறாய்?
உன் மனதில் நடந்து கொண்டிருக்கும் காதல் போரை வென்று வெற்றிவாகை சூட போகிறாயா? அல்லது போர் வேண்டாம் என்று கோழைத்தனமாக விட்டுக் கொடுத்து விட்டு விலகி செல்ல போகிறாயா? சொல் இந்தர்... பதில் கூறு...',என்று அவன் மனக்கண் முன்பாக வந்த சீதா கேள்வி மேல் கேள்வி கேட்டு வாய்விட்டு கிண்டலாக சிரிக்க தொடங்கினாள்.
அதைப் பார்த்ததும் பதட்டமடைந்தான் ராவணன்...!
'இல்லை... இல்லை... இல்லை... நிச்சயமாக சீதாவை நான் இழக்க மாட்டேன். உன்னை என்னால் இழக்க முடியாது சீதா. இந்த ஜென்மம் மட்டும் இல்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் என் மனைவி நான் தான் உன் கணவன். இதை அந்த ஆண்டவனால் கூட மாற்ற முடியாது... என்னால் உன்னை அர்ஜுனுக்கு விட்டுத்தர இயலாது அந்தளவிற்கு தாராள குணம் எனக்கு கிடையாது. உனக்காக எதை வேண்டுமானாலும் விட்டுத் தருவேன் ஆனால் என்னால் எதற்காகவும் உன்னை விட்டு தர முடியாது. நிச்சயமாக என்னால் முடியாது. நான் உன்னைத் தான் விரும்புகிறேன் சீதா உன்னை மட்டும் தான் விரும்புகிறேன்...', என்று தன்னை மறந்து வாய் வார்த்தையாக அவன் முனகி கொண்டிருந்தான் கண்களை இன்னும் திறக்காமல்.
"சார் என்ன இன்னும் பார்த்துட்டே இருக்கீங்க சீக்கிரம் தொட்டு கும்பிட்டு அட்சதை எடுத்துக்கோங்க நேரமாகுது", என்று அந்த இளம் பெண் இவனை அழைக்கவும் சட்டென்று கண்களை திறந்து பார்த்தான் ராவணன்...
அந்த பெண்ணின் கையில் இருந்த தாம்பூலத்தில் மின்னிக் கொண்டிருந்த தாலியையும், எதிரில் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த சீதாவையும் மாறி மாறி பார்த்தவன்...
ஒரு நொடியில் கையில் அந்த தாலியை வெடுக்கென்று புடுங்கிக் கொண்டு நேராக மணமேடையை நோக்கி ஓடினான்...
"சார் நில்லுங்க நில்லுங்க... என்ன பண்றீங்க? தாலியை எடுத்துட்டு ஏன் போறீங்க? யாராவது அவரை பிடிங்க", என்று அந்த இளம் பெண் கத்தவும் அனைவரும் ராவணன் பக்கம் திரும்பினார்கள்.
ஆனால் அதற்குள் அவன் மணமேடையை நெருங்கி சீதாவை கை பிடித்து எழுப்பியிருந்தான்.
"ஹேய் வாட் ஆர் யூ டூயிங்? கல்யாணம் நடக்க போகுது இந்த சமயத்தில் இங்கே நீ என்ன பண்ணிட்டிருக்க மிஸ்டர்?", என்று கேள்வி கேட்டுக் கொண்டே அர்ஜுன் எழுந்து நின்றான் கோபமாக.
என்ன செய்து கொண்டிருக்கிறான் இவன் என்பது போல் புரியாமல் குழப்பமாக ராவணனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா.
"என்னை மன்னித்துவிடு சீதா... நான் அன்றே உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும் தவறு செய்து விட்டேன். ஆனால் இப்பொழுது கால தாமதம் ஒன்றும் ஆகவில்லை நான் உன்னை தான் விரும்புகிறேன்... உன்னை மட்டும் தான் விரும்புகிறேன்... என்னால் உன்னை இழக்க முடியாது என் மனம் முழுக்க நீ மட்டும் தான் நிறைந்திருக்கிறாய் உனக்காக எதை வேண்டுமானாலும் விட்டுத் தருவேன் ஆனால் எதற்காகவும் உன்னை விட்டு தர என்னால் முடியாது என்பதை நானே இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டேன்... மன்னித்துவிடு சீதா உன்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன்... நான் உன்னை விரும்புகிறேன் சீதா... எல்லையில்லாத காதலை மனதில் சுமந்து கொண்டு உனக்காக காத்திருக்கிறேன் என்னை ஏற்றுக் கொள்", என்று சொன்னவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சீதாவின் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தை கட்டினான் இந்தரராவணன்...!!
கண் முன்னாடி நடந்து கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் நிஜமா அல்லது கனவா என்று புரியாமல் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து போய் நின்று கொண்டிருந்தாள் சீதா...!!
'அப்படி என்றால் இவனும் என்னை காதலித்திருக்கிறானா?? அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து விட்டானா?
முன்னாடியே என்னிடம் கூறியிருக்கலாம் இவன் எதற்காக இத்தனை போராட்டம்?
எப்படியோ இப்போதாவது மனம் வந்து காதலை வெளிப்படுத்தினானே அதுவரைக்கும் சந்தோஷம்', என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளாக ஆனந்த கண்ணீர் வடித்தாள் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே சீதா...!
"இப்பிறவியில்
இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம்
சாயா பிரியம் காப்பேன்...
கண்ணீா்
கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே...
உன் கனவுகள்
நிஜமாக என்னையே
தருவேன் உன் வாழ்வு
மண்ணில் நீள என் உயிர்
தருவேன்
கெட்டி மேளம்
கெட்டி மேளம்
காதல் கனவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே..."
அங்கே, அந்த நேரம் பார்த்து யாருடைய கைப்பேசியிலோ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது சூழ்நிலைக்கு ஏற்ப...!
- தொடரும்...