• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா வித் லவ் சீதா - 28 ( இறுதி அத்தியாயம் )

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 28 (நிறைவு பகுதி)

வீசி கொண்டிருந்த காற்றும் நின்றது, பறந்து கொண்டிருந்த பறவைகளும் உறைந்தன, நடனம் ஆடிக்கொண்டிருந்த தென்னை மரங்களும் அசைய மறுத்தது, கடல் அலைகளும் ஓய்ந்து போனது... இந்தர் சீதாவின் கழுத்தில் தாலியைக் கட்டியவுடன்...!!

ஆசை ஆசையாக பணக்கார மாப்பிள்ளை பார்த்து மகளுக்கு திருமணம் செய்யலாம் என்று காத்திருந்தால் கடைசி நேரத்தில் வந்து காரியத்தை கெடுத்து விட்டானே இவன் என்று ராவணன் மீது அளவுகடந்த கோபம் பொங்கியது சீதாவின் பெற்றோர்களுக்கு.

"என்ன நடக்குது இங்க? டேய் நான் ஒருத்தன் இங்க நின்னுட்டிருக்கேன்டா...நீங்க பாட்டுக்கு டூயட் பாடிட்டிருக்கீங்க? என்ன சொன்ன?? காலதாமதம் ஆகவில்லை அதனால் உன்னை இழக்க மாட்டேன்னு டயலாக் பேசுறியா? கடைசியில் என்னுடைய வாழ்க்கையை காலாவதியாக்கிட்டியேடா படுபாவி. பைத்தியம் மாதிரி இருந்தியேடா இப்போ என்னை பைத்தியம் ஆக்கிட்டியே... உன்னால் எந்த பிரச்சனையும் வராது நீ ஒரு டம்மி பீஸ் அப்படின்னு தானே நினைச்சிட்டிருந்தேன் கடைசியில் இந்த கதைக்கு வில்லனே நீதானா? உன்னை சும்மா விட மாட்டேன் டா டேய்", என்று கத்திக்கொண்டே ராவணனின் கழுத்தைப் பிடித்து நெறிக்க தொடங்கினான் அர்ஜுன்.

"சொன்னா கேளுங்க அர்ஜுன் அவரை விட்ருங்க சொன்னா கேளுங்க ப்ளீஸ்", என்று கெஞ்சிக் கொண்டே அவனுடைய கையை விலக்க முயன்றாள் சீதா.

ஒரு கட்டத்தில் அனைவரும் அவனை விலக்கி விட கோபத்தோடு நகர்ந்து நின்றான் அர்ஜுன்...!

" என்னை மன்னித்துவிடு அர்ஜுனா... நீ என்னை விரும்புகிறாயா என்று சீதா என்னிடம் அன்று கேட்டபோதே என் மனதில் இருந்த காதலை நான் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் அன்று நான் தயக்கத்துடன் தாமதித்த காரணத்தினால் தான் இப்பொழுது இத்தனை பிரச்சனையும் வந்திருக்கிறது"

"பைத்தியக்காரா பைத்தியக்காரா இன்னமும் சினிமால வர மாதிரி டயலாக் பேசிட்டு நிக்கிற நீ? உன்னை சும்மா விட மாட்டேன் டா எப்படிடா என்னுடைய வாழ்க்கையை நீ அழிக்கலாம்...? ஜோக்கர் மாதிரி இருந்துட்டு கடைசியில் என்னை டம்மி ஜோக்கர் ஆக்கிட்டியேடா", என்று மீண்டும் அவன் மீது கோபம் கொண்டு பாய்ந்து சென்றான் அடிப்பதற்காக.

"மாப்பிள்ளை சொன்னால் கேளுங்க தயவு செஞ்சு கோபப்படாதீங்க இப்படி நடக்கும்னு நாங்க கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல எங்களுக்கே இது அதிர்ச்சியாக தான் இருக்கு"

"அதான் உங்க மகளுக்கு இந்த பைத்தியக்காரன் கூட கல்யாணம் ஆயிடுச்சே அப்புறம் எதுக்கு இன்னும் என் மகனை மாப்பிள்ளைன்னு சொல்றீங்க? டேய் இந்த உலகத்தில் பொண்ணே இல்லையா ? இவ இல்லனா இன்னொரு பொண்ணு... உனக்கு சூப்பரா ஒரு பொண்ணு பார்த்து இந்த அம்மா நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் நீ வா", என்று சொல்லி அங்கிருந்து அர்ஜுனை இழுத்து கொண்டு அவனுடைய தாயார் சென்றார்.

" அடப்பாவி கடைசியில் என் மகளோட வாழ்க்கையை அழிச்சிட்டியேடா நீ எல்லாம் நல்லா இருப்பியா?", என்று அழுது கொண்டே சீதாவின் அன்னை அவனை திட்டவும்.

"என்ன பேச்சு பேசுறீங்க மா? எதுக்காக இப்போ அவரை திட்டுறீங்க? உங்களுக்கு அவரை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் இப்போ அவர் என்னுடைய கணவர் அவரை திட்டுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது உங்களுக்கு பிடிக்கலன்னா ஒதுங்கி போங்க அதை விட்டுட்டு இப்படி எல்லாம் பேசாதீங்க. வா இந்தர் நாம போகலாம்", என்று சொல்லி அவனுடைய கைகளை பற்றி கொண்டு அங்கிருந்து வெளியே சென்றாள் சீதா.

அங்கிருந்து நேராக அவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு தான் வந்தாள்.

உள்ளே வந்ததும் கதவை அடைத்து விட்டு அவனை இறுக்கமாக தழுவிக் கொண்டாள் அவள்.

"கொஞ்ச நேரத்தில் என்னை ரொம்பவே பயமுறுத்துடியே... இன்னைக்கு சொன்ன வார்த்தையை அன்னைக்கே சொல்றதுக்கு உனக்கு என்னடா ஆச்சு? இத்தனை நாட்களாக எனக்கு நரக வேதனையாக இருந்தது தெரியுமா? கடைசி நிமிஷம் வரைக்கும் எனக்கு நம்பிக்கையே இல்லை என் வாழ்க்கையே முடிஞ்சு போயிடுச்சு அப்படின்னு தான் நான் நினைச்சேன்... எப்படிடா மனசு மாறின ராஸ்கல்?", என்று கண்ணீரோடு அவன் நெஞ்சில் ஒரு அடி அடித்து விட்டு கேள்வி கேட்டாள்.

" கடைசி நிமிடம் வரைக்கும் எனக்கும் நம்பிக்கையே இல்லை தான் சீதா என்னுடைய வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய கடந்த காலத்தை நான் மறந்துவிட்டேன் தான், நாளை நான் எந்த உலகத்தில் இருப்பேன் என்று எனக்கு தெரியாது தான்... ஆனால் இந்த நிமிஷம் இந்த நொடி உன்னை இழக்க நான் தயாராக இல்லை... எனக்கு நீ வேண்டும் உன்னுடைய அன்பு காதல் அக்கறை கோபம் சந்தோஷம் மகிழ்ச்சி இதோ இப்பொழுது உன் கண்களிலிருந்து வழிகிறதே இந்த கண்ணீர்... இவை எல்லாம் எனக்காக மட்டுமே வர வேண்டும். எனக்காக மட்டுமே உன் இதயம் துடிக்க வேண்டும் என்று எண்ணினேன் அதனால்தான் கடைசி நொடியில் என் மனம் மாறி உன்னை இழக்க முடியாது என்று முடிவெடுத்து உன் கழுத்தில் நான் மாங்கல்யத்தை கட்டினேன்... நான் செய்தது தவறாக இருந்தால் என்னை மன்னித்துவிடு சீதா ஆனால் என்னால் உன்னை விட்டு இருக்க இயலாது. வாழ்வோ சாவோ அது இனி உன்னோடுதான் என்று நான் முடிவெடுத்து விட்டேன்",என்று சொல்லி அவளை ஆரத் தழுவிக் கொண்டு நெற்றியில் முத்தம் பதித்தான்.

கண் மூடி அதை உள்வாங்கிக் கொண்டவள் கண் திறந்து அவனை ஆற அமர ரசிக்கத் தொடங்கினாள் அவள்...

"நீ செய்தது மாபெரும் பிழை தான்"

"அப்படியா சீதா? அப்படி என்றால் உனக்கு என்னை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லையா?", என்று பதட்டத்துடன் கேள்வி கேட்டான் அவன்.

"நீ செய்தது மாபெரும் பிழை தான்... என்னை விரும்புகிறாய் என்கிற விஷயத்தை முதலிலேயே நீ என்னிடம் கூறியிருக்க வேண்டும் இத்தனை நாட்கள் காக்க வைத்து என்னை அழ வைத்தாய் அல்லவா அதனால் அது மாபெரும் பிழை தான். அந்த பிழைக்கு தண்டனை கொடுக்க வேண்டும் தானே?", என்று கேட்டு கண்ணடித்து அவள் சிரிக்கவும் அவனுக்கும் புன்னகை பூத்தது இதழ்களில்...!

"அவ்வளவு தானே சீதா? நீ என்ன தண்டனை கொடுத்தாலும் இந்த இந்திர ராவணன் மனதார ஏற்பான்", என்று கைகளை குறுக்கே வைத்துக்கொண்டு தலை குனிந்து அவன் வணங்கவும் அவள் குபீரென்று சிரித்து விட்டாள்.

"அப்படின்னா தண்டனை கொடுக்க ஆரம்பிக்கலாமா?"

"ஆரம்பியுங்கள் தேவியே"

அவன் சொன்ன அடுத்த கணம் அவன் இடையில் கை பதித்து தன்னோடு இழுத்தணைத்துக் கொண்டவள் அவன் இதழில் எக்கி அழுத்தமாக முத்தமிட்டாள் !

இதுவரை அனுபவித்த பரிதவிப்பிற்கும் கவலைக்கும் மருந்தாக அவனுடைய இதழ்கள் வழியாக காதலை உறிஞ்சி கொண்டிருந்தாள் கொஞ்சம் கொஞ்சமாக !

அவளுடன் அவனும் இதழ் முத்தத்தில் இணைந்து விட அவள் இடையை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

உச்ச பச்ச உணர்ச்சிவசத்தால் கிடந்தவள் அவனுடைய பின்னந்தலையை தன் விரல்களை கொண்டு வருடி கொடுத்தாள்...

அதற்கு மேல் தாங்க மாட்டாதவனாக அவளை அள்ளிக் கொண்டு படுக்கையறைக்கு சென்றான் அவளின் இந்தர்...❤❤

ஆழமான மூச்சுக்காற்றும், கட்டில் அதிர்வும், அவளின் சினுங்கலுமே அந்த அறையை அலங்கரித்தது...!!

நாட்களும் மாதங்களும் வருடங்களும் உருண்டோடியது அவர்களின் காதல் பந்தத்தால்...

பெரிய பெரிய நிறுவனத்திற்கு போய் வேலை பார்க்க அவனால் முடியாது என்பதால் இந்த உலகத்தில் பிழைக்க வேண்டுமென்றால் கையில் நிச்சயம் அவனுக்கு ஒரு உத்யோகம் தேவை என்பதை உணர்ந்து கொண்டவள் வீட்டை சுற்றி தோட்டம் அமைத்தாள்...

விவசாயம் செய்ய கற்றுக் கொடுத்தாள்.

அவனும் வெகு விரைவில் அதை கற்றுக் கொண்டு விவசாயத்தில் கைதேர்ந்தவனாக மாறினான்...

எந்தவித ரசாயனமும் கலக்காத தூய்மையான காய்கறிகள் பழங்கள் எல்லாவற்றையும் விநியோகம் செய்து தங்கள் வாழ்வை வாழ்ந்து கொண்டு வீட்டையும் அழகாக்கி கொண்டிருந்தார்கள் அந்த காதல் ஜோடிகள்...!

அவர்களின் அன்புக்கு அடையாளமாக ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன் என்று பெற்றெடுத்து பேரப்பிள்ளைகளையும் பார்த்தார்கள்.

எல்லா பெண்களும் தெய்வத்திடம் முறையிடுவது போல் தான் சீதாவும் முறையிட்டாள் ஒவ்வொரு முறையும்.

'என் கணவனுக்கு முன்பாக நான் இந்த உலகத்தை விட்டு நீங்கி சென்று விட வேண்டும் சுமங்கலியாக, எப்பொழுதும் என் கணவன் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்', என்று மனமார ஒவ்வொரு நாளும் அவள் வேண்டிய வேண்டுதல் சரியாக 60 வருடங்கள் கழித்து கடவுள் காதில் விழுந்ததோ என்னவோ...

ராவணனுக்கு முன்பாக சீதா பூலோகத்தை விட்டு நீங்கி சென்றாள் !!

அன்னையாக, தோழியாக, மனைவியாக, காதலியாக, பிள்ளையாக அவனுக்கு எல்லாமுமாக இருந்த சீதா ஒரு நொடியில் அவனை விட்டுவிட்டு இயற்கை எய்தி விடவும் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை ராவணனால் !

பேச்சு வராமல், கண்ணிமைக்க மறந்து, எதிரில் இருக்கும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சொந்தங்கள் என்று யாரையும் அடையாளம் தெரியாத வண்ணம் அவனுடைய எண்ணம் முழுக்க வியாபத்திருந்தாள் அவனுடைய சீதா !

"சீதா... சீதா...", என்று புலம்பிக்கொண்டே இருந்த ராவணன் சீதா இறந்த மறு தினமே அவளுடைய பிரிவை தாங்க முடியாமல் அவனும் இயற்கை எய்தினான் !!

பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கையெல்லாம் பிள்ளைகள் பார்த்துக்கொள்ள...

சீதாவை தகனம் செய்ய காத்திருந்த பிள்ளைகள் ராவணனின் உடலையும் தகனம் செய்ய சென்றார்கள்.

ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் அவனுடைய உடல் அனைவரின் கண் முன்பாகவே மறைந்து போனது காற்றோடு காற்றாக !

அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள் !!

காலம் மாறினாலும் நம் காதல் என்றும் மாறாது என்பது போல் சீதா போன மறுகணமே ராவணன் இவ்வுலகை விட்டு நீங்கி விட..

ஏடுகளில் குறிப்பிட்டிருந்தது போல அவனுடைய பூத உடல் இப்பொழுது பழைய நினைவுகளோடு 18 ஆம் நூற்றாண்டிற்கு திரும்பியது !!

18ம் நூற்றாண்டு...

இந்திர ராவணனனின் பிரம்மாண்ட அரண்மனை.

கஷ்டப்பட்டு மெதுவாக கண்விழித்து பார்த்தான் இந்திர ராவணன் !

அதிர்ச்சியோடு சுற்றிலும் அவன் பார்த்துக் கொண்டே மெதுவாக எழ முயல...

"அச்சோ எதற்காக இப்பொழுது எழ முயற்சி செய்கிறீர்கள்? நன்றாக நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என் கண்ணாளனே", என்று சொல்லி கொண்டே அவனை கட்டிலில் படுக்க வைத்தாள் அந்த குணவதி.

ஆம், அது அவன் மனைவி தேன்மலர் தான்...!

குழப்பத்தோடு எதிரில் அமர்ந்திருந்த அந்த அழகிய பாவையை ஏறிட்டான் ராவணன்.

"தேன்மலர்... நான் எங்கே இங்கே வந்தேன்? நான் காட்டுப்பாதையில் தானே பயணித்துக் கொண்டிருந்தேன் கோவிலுக்கு செல்வதற்காக?"

"நீங்கள் சென்ற ரதம் தான் பாதியில் உங்களை கவிழ்த்து விட்டது... அதனால் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து விட்டீர்கள் நீங்கள்... பிறகு உங்கள் நண்பர் தான் இங்கே உங்களை அழைத்து வந்தார்... கிட்டத்தட்ட ஒரு நாள் பொழுதே போய்விட்டது... இப்பொழுது தான் நீங்கள் கண் விழிக்கிறீர்கள் அதுவே எனக்கு மகிழ்ச்சி முதலில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்", என்று சொல்லிக் கொண்டு அவன் தலையை வருடி கொடுத்தாள், அச்சு அசலாக சீதா உருவத்தில் தேன் மலர் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுடைய மனைவி...!

💓💓💓💓💓💓 சுபம்💓💓💓💓💓💓

 

ஷமீம்

Well-known member
வித்தியாசமான கதை, வித்தியாசமான முயற்சி.. காதலும் காமெடியும் கலந்து நன்றாக இருந்தது.. சீதாவின் உண்மை காதல் ஜெயித்து விட்டது...❤❤

வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
வித்தியாசமான கதை, வித்தியாசமான முயற்சி.. காதலும் காமெடியும் கலந்து நன்றாக இருந்தது.. சீதாவின் உண்மை காதல் ஜெயித்து விட்டது...❤❤

வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
தொடர்ந்து வாசித்து ஆதரவு தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா ❤ ❤ ❤ 🥰 🥰 🥰
 
அருமையான பதிவு
Thanks ma ❤ ❤.. தொடர்ந்து வாசித்து ஆதரவு தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
அருமையான பதிவு
தொடர்ந்து வாசித்து ஆதரவு தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா ❤ ❤ 🥰 🥰
 
வித்தியாசமான கதை களம் கொண்டு, அதற்கு ஏற்றது போல் கதையின் தலைப்பை வடிவமைத்தது பாராட்டுதலுக்குரியது...

டைம் டிராவல் என்பதை முன்னிறுத்தி சாபத்தின் நிமித்தமாக அங்குள்ள ராஜா ராவணன் நிகழ்காலத்தில் பிரவேசித்து அங்கு வாழும் சீதா என்ற பெண்ணை பார்க்கிறான்.

முதல் முறை அவனைப் பார்த்த அவள் பைத்தியமோ என்று நினைக்க பின்னால் அவனின் வெகுளித்தனமும் அவளை ஈர்த்துவிடுகிறது.

அதன் பின் அவன் எப்படி இங்கு வந்தான். அவன் இந்த உலகத்தில் இருந்து தன்னுடைய கடந்த கால வாழ்க்கைக்கு அனுப்புவதற்காக சீதா மெனக்கிடல் செய்வது அருமை. கடைசியில் இருவரும் இந்த பூமியில் 60 ஆண்டு காலம் வாழ்ந்து அவன் அவன் உலகத்திற்கு மீண்டும் செல்வது போல் சொல்லியது படிக்கும்போது சுவாரஸ்யமாகவே இருந்தது .....

காதலின் ஓட்டமும், காமெடியும் சேர்ந்து கதையின் சுவாரசியத்தை அழகாய் கூட்டிருந்தது.

வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே 💐💐
 
வித்தியாசமான கதை களம் கொண்டு, அதற்கு ஏற்றது போல் கதையின் தலைப்பை வடிவமைத்தது பாராட்டுதலுக்குரியது...

டைம் டிராவல் என்பதை முன்னிறுத்தி சாபத்தின் நிமித்தமாக அங்குள்ள ராஜா ராவணன் நிகழ்காலத்தில் பிரவேசித்து அங்கு வாழும் சீதா என்ற பெண்ணை பார்க்கிறான்.

முதல் முறை அவனைப் பார்த்த அவள் பைத்தியமோ என்று நினைக்க பின்னால் அவனின் வெகுளித்தனமும் அவளை ஈர்த்துவிடுகிறது.

அதன் பின் அவன் எப்படி இங்கு வந்தான். அவன் இந்த உலகத்தில் இருந்து தன்னுடைய கடந்த கால வாழ்க்கைக்கு அனுப்புவதற்காக சீதா மெனக்கிடல் செய்வது அருமை. கடைசியில் இருவரும் இந்த பூமியில் 60 ஆண்டு காலம் வாழ்ந்து அவன் அவன் உலகத்திற்கு மீண்டும் செல்வது போல் சொல்லியது படிக்கும்போது சுவாரஸ்யமாகவே இருந்தது .....

காதலின் ஓட்டமும், காமெடியும் சேர்ந்து கதையின் சுவாரசியத்தை அழகாய் கூட்டிருந்தது.

வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே 💐💐
தொடர்ந்து வாசித்து அழகிய விமர்சனம் தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் மா ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 

Gowri Karthikeyan

Well-known member
Super super......no words to describe how I feel❤❤❤❤❤
ராவன் - சீதா ஓட காதல், அவங்க வாழ்க்கை ரொம்ப ரொம்ப பிடிச்சது.....
இனி அவங்க இல்லைன்னு இல்லாம.....அங்க ஹேப்பியா இருப்பாங்க❤❤❤❤❤......

செம்ம ending writer......lots of 💕 💕 💕 💕 💕 you sis
 
Top Bottom